நிம்மதி பெற்ற ஆவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 4,011 
 

அப்பாவின் ஈமக் காரியங்களை எல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பினான் பாலன்.

கணவன் இறந்து போனதால் சாரதா தனியாய் தவிக்க வேண்டியதாய் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் பாலன் அவன் தங்கை மீனாவுடன் உட்கார்ந்து கொண்டு யோஜனைப் பண்ணீ இருவரும் ஒரு முடிவுக்கு வந்ததார்கள்.

நிதானமாக தனியாய் தவித்து வந்துக் கொண்டு இருக்கும் அம்மாவை கூப்பிட்டு “அம்மா, இனிமே நீ இந்த வூட்லே தனியா இருந்து கிட்டு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்.வூட்டு வாடகை குடுத்துக் கிட்டு வரணும்.வூட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களும் நீயே தனியா வாங்கிப் போட்டு கிட்டுக் வரணும்.தனியே உன் ஒருத்திக்காக சமைச்சு சாப்பிடணும்.அதனாலே உன்னை நாங்க ரெண்டு பேரும் ஒரு முதியோர் இல்லத்தில் சேத்து விடறோம்.அங்கே உன்னைப் போல நிறைய முதியவங்க இருப்பாங்க.அங்கு இருந்து வந்தா உனக்கு தனிமையே தெரியாது.தவிர ‘டயம் பாஸ்’ பண்ணுவதும் கஷ்டமா இருக்காது.என்ன சொல்றேம்மா” என்று கேட்டு விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அம்மா சாரதாவை அழைத்துக் கொண்டு போய் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு இருவரும் நிம்மதியாய் அவர்கள் இருக்கும் வெளி நாட்டுக்குப் போய் விட்டார்கள்.

சாரதாவும்,அவள் கணவன் கோபாலும் தங்கள் இரண்டு பிள்ளைகளையும் நல்ல மேல் படிப்பு படிக்க வைத்து இருந்தார்கள்.பாலன் அமொ¢க்காவில் ஒரு பொ¢ய கம்பனியில் வேலை பார்த்து வந்தான்

வேலையிலெ இருந்து ரிடையர்’ ஆனவுடன் வந்த பணத்தை எல்லாம் செலவழித்து கோபாலும் மணைவி சாரதாவும்,’தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் வாழ வைக்க வேண்டும்’ என்று ஆசை பட்டு, அவளை தூபாயில் வேலை பண்ணும் ஒரு பையனுக்கு வெகு விமா¢சையாக கல்யாணம் பண்ணி வைத்து சந்தோஷப்பட்டார்கள்.
ஒரு மாதம் கூட ஆகி இருக்காது.

திடீரென்று ஒரு நாள் மாரடைப்பால் கோபால் இறந்து விட்டடார்.

சாரதா முதியோர் இல்லத்தில் சேர்க்கபட்டாளே ஒழிய அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்க வில்லை.அவள் மனது மிகவும் வேதனை பட்டது.

முதியோர் இல்லத்தில் சேர்ந்த அன்று சாயந்திரமே சாரதா அங்கு உள்ள முதியோர்கள் கூடும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மற்ற முதியோர்களிடம் “நான் என் புருஷன் கிட்டே ‘நீங்க உத்தியோகம் பண்ணி கிட்டு வந்தப்ப உங்க கிட்டே இருந்த பணத்தை ரெண்டு பிள்ளைங்க படிப்புக்காக செலவு பண்ணி விட்டீங்க.‘ரிடையர்’ ஆகி வந்த பணத்லே ஒரு சின்ன வூடாவது வாங்கிப் போடுங்கன்னு எவ்வளவோ தடவை கதறினேன்.அந்த பணத்தை பொண்ணு கல்யாணத்துக்கு வாரி இறைக்காதீங்க.நமக்குன்னு அந்த பணத்தை வச்சுங்க.இல்லே பாங்கிலேயாவது போட்டு வைங்கன்னு முட்டி கிட்டேன்.ஆனா அவர் நான் சொன்னதே கேக்கவே கேக்கலே.பிடிவாதமா ‘ரிடையர்’ ஆகி வந்த மொத்த பணத்தையும் பொண்ணு கல்யாணத்துக்கு வாரி வாரி இறைச்சார்” என்று சொல்லி தன் கண் களைத் துடைத்துக் கொண்டாள்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டே”நான் அப்படி சொல்லும் போதெல்லாம் அவர் என்னைப் பாத்து “நீ சும்மா இரு சாரதா.பிள்ளை படிச்சு பொ¢ய வேலைக்கு போனா அவன் நம்ப ரெண்டு பேரையும் ராஜா,ராணி,மாதிரி வச்சிக்குவான்.நாம அவனோடு சந்தோஷமா இருந்து வரலாம் முடிஞ்சப்போ பொண்ணு வூட்டுக்கும் போய் பேரன் பேத்திங்களோடு இருந்துட்டு வரலாம்.அந்த சுகமே தனி தெரியுமா.இப்ப நாம ஒரு வூடு வாங்கினா,அப்புறமா அந்த வூட்டை என்ன செய்யப் போறோம் சொல்லு.பாங்குலே இருக்கிற பணத்தை என்ன செய்ய போறோம் சொல்லு.அப்புறமா அந்த வூட்டை அரை விலைக்கும் கால் விலைக்கும் நஷ்டத்துக்கு விக்கணும்.தவிர வயசான காலத்தில் நாம பிள்ளையோடு இல்லாம தனியா இருப்பதும் நல்லது இல்லை சாரதா.நமக்கு இங்கே எந்த பாது காப்பும் இல்லெதெரியுமா’ என்ற ஒரே பாட்டைத் தான் பாடி வந்தார்.அவர் எல்லா வேலைங்களையும் வேக வேகமா செஞ்சது போல் பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த மாசமே என்னை தனியா தவிக்க வூட்டுட்டு மேல் லோகமும் வேக வேகமா போய் சேர்ந்துட்டார்.என் கையிலே காலணா கூட எனக்குன்னு வச்சிட்டு போவலே அந்த புண்ணயவான்” என்று சொல்லி விட்டு ‘ஓ’வென்று அழுதாள் சாரதா.

அங்கு உள்ள மற்ற முதியவர்கள் எல்லாம் சாரதாவுக்கு ஆறுதல் சொல்லி வந்தார்கள்.

மனைவி தன் மறைவுக்கு பிறகு எப்படி இருக்கான்னு பார்க்க கணவர் கோபாலின் ‘ஆவி’ அன்று சாயங்காலம் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து,எல்லா முதியவர்களும் உட்கார்ந்து கிட்டு இருந்த மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது.

தன் மனைவி தன்னை பற்றி புலம்புவதை கேட்டதும்,அந்த ‘ஆவி’க்கு’ கண்களில் கண்ணீர் முட்டியது.

‘தன் மணைவி சொன்னதை நாம கேக்காம பணத்தை ரெண்டு பிள்ளைங்களுக்கும் செலவு பண்ணி விட்டோமே.சாரதாக்குன்னு ஒரு வூடு கூட நாம் வாங்கி வக்கலையே. அவளுக்குன்னு பாங் கிலே பணமும் வச்ச்சிட்டு வரலேயே. இப்போ என்னடான்னா இந்த ரெண்டு பிள்ளைங்களும் சாரதாவை கவனிச்சுக்காம,இப்படி ஒரு முதியோர் இல்லத்தில் சேத்துட்டு போயிருக்காங்களே.நாம இவங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு பணம் செலவு செஞ்சி இருப்போம்.பாவி பசங்க.பெத்த அம்மான்னு கூடப் பாக்கலையே இவங்க ரெண்டு பேரும்.ரொம்ப கல் நெஞ்சம் பிடிச்சவங்க ரெண்டு பேரும்” என்று மனதுக்குள் தன் பிள்ளைங்களை திட்டியது.
வருத்தத்தில் விக்கி விக்கி அழுதது.

கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருத்தம் தாங்காம அந்த ‘ஆவி’ பறந்துப் போய் விட்டது.

தினமும் இந்த மாதிரி வந்து தன் மனைவி படும் வேதனையை கேட்டு விட்டு ‘தானும்’ கொஞ்ச நேரம் அழுது விட்டு போன அந்த அந்த ‘ஆவி’,மனசு ஒடிஞ்சு போய் மறுபடியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வருவதையே நிறுத்திக் கொண்டு விட்டது.

ஆறு மாதம் ஆகி இருக்கும்.

அந்த ‘ஆவிக்கு’த் தன் மனைவியைப் பாக்கவேண்டும் என்கீற ஒரு ஆசை பிறந்தது.

மறுபடியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து அந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்தது.

கீழே அவர் மணைவி ஒரு ஆறு ஏழு முதியவர்களுடன் உட்கார்ந்துக் கொண்டு ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.தன் மணைவி இப்போ முன்னைப் போல் அழாம சிரிச்சு பேசிக் கிட்டு இருந்ததை பாத்த ‘ஆவி’ மிகவும் சந்தோஷப் பட்டிச்சு.

அந்த முதியோர் இல்லத்திற்கு ரெண்டு நாள் முன்னதாக புதிதாக சேர்ந்த ஒர் முதிய பெண் மணி அங்கு உட்கார்ந்துக் கொண்டு சாரதாவிடம் “எனக்கு இங்கே இருந்து வருவது ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க.எனக்கு இந்த முதியோர் இல்லம் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லீங்க” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தாள்.

அந்த முதியவளிடம் சாரதா “அழாதீங்கம்மா. நான் உங்க மனசுக்கு ஆறுதல் வர நம்ப ‘சிரிப்பு நடிகர்’ நாகேஷ் சொன்ன ஒரு கதையை சொல்றேன் கேளுங்க ஒருவன் நாப்பதைந்து வருஷமா ரொம்ப கஷட்டபட்டுக் கிட்டு வந்தானாம்.தன் கஷ்டம் எப்போ விடியும்ன்னு தெரிஞ்சிக்க அவன் ஒரு ஜோஸ்யர் கிட்டே போய் தன் ஜாதகத்தை காட்டி ‘ஜோஸ்யரே,நான் நாப்பதைந்து வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு கிட்டு வரேன்.எனக்கு இந்த கஷடம் எப்போ விடியும்ன்னு கொஞ்ச பாத்து சொல்லுங்க’ ன்னு சொல்லி அவன் ஜாதகத்தை நீட்டினானாம்.உடனே அந்த ஜோஸ்யரும் அவர் குடுத்த ஜாத கத்தை வாங்கி ஒரு அரை மணி நேரம் பாத்துட்டு பல கணக்குகளை எல்லாம் போட்டு, அலசிப் பாத்து விட்டு வந்தவன் கிட்ட ‘நீங்க கவலைப்படாதீங்க.இந்த கஷ்டம் இன்னும் ஒரு வருஷம் தான் உங்களு க்கு இருக்கும்’ என்று சொல்லி தலையை தூக்கினாராம்.
சந்தோஷம் தாங்க வில்லை ஜோஸ்யம் பாக்க வந்தவனுக்கு.

அவன் உடனே ‘அப்பாடா,அப்புறமா என் கஷ்டம் எல்லாம் தீந்துப் போயிடும் இல்லீங்க இல் லையா.நான் சந்தோஷமா இருந்து வருவேன் இல்லையா’ என்று ஆவலோடு ஜோஸ்யர் கிட்டே கேட்டானாம்.அதற்கு அந்த ஜோஸ்யர் ‘இல்லே’ என்று மெல்ல சொல்லி நிறுத்தினாராம்.’என்ன ஜோஸ்யரே என்ன சொல்றீங்க நீங்க’ என்று வேதனையோடு கேட்டானாம் ஜோஸ்யம் கேட்க வந்த வன்.

உடனே அந்த ஜோஸ்யர் ‘இன்னும் ஒரு வருஷம் இந்த மாதிரியே நீங்க கஷ்டப்பட்டு வந்தீங் கன்னா,இந்த கஷ்டம் உங்களுக்கு பழக்கமா போயிடும்.அப்புறம் கஷ்டம் என்பதே என்னன்னு உங்க ளுக்கு தெரியவே தெரியாது’ என்று சொல்லி நிறுத்தினாராம் ஜோஸ்யர்.அந்த மாதிரி இன்னும் கொஞ்ச மாசம் போனா இந்த முதியோர் இல்லமும்,இந்த வாழ்க்கையும் உங்களுக்கு பழக்கமா போயி டும்மா.அப்புறம் கஷ்டம் என்பதே உங்களுக்கு தெரியாதுங்க.நானும் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்தப்ப உங்களை போல தான் அழுதேன்.இப்போ எனக்கு ஆறு மாசம் ஆயிடுச்சி.எனக்கு இந்த முதியோர் இல்ல வாழ்க்கை சகஜமா போயிடுச்சிங்க.உங்களுக்கும் இந்த வாழ்க்கை பிடிச்சு போயி டும்.கவலைப் படாம இருந்து வாங்க” என்று ஆறுதல் சொல்லி நிறுத்தினாள் சாரதா.

புதிதாக சேர்ந்த அந்த அந்த முதிய பெண்மணி ”அப்படியாங்க.இன்னும் ஆறு மாசம் போனா, இந்த வாழ்க்கை எனக்குப் பிடிச்சு போயிடுங்களா” என்று ஒரு குழந்தையைப் போல கேட்டாள்.

அதற்கு சாரதா “ஆமாங்க நிச்சியமாங்க”என்று சொன்னவுடன் அந்த அம்மா தன் கண்களே துடைச்சு கிட்டு சாதாரணமா இருந்து வந்தாள். தன் மனைவி இந்த முதியோர் இல்லத்தில் இருந்து வரும் வாழ்க்கையை சகஜமா எடுத்து கிட்டு சந்தோஷமா வாழ்ந்து வருவதை பாத்த அந்த ’ஆவி’ சந்தோஷப்பட்டு கிட்டு மன நிம்மதி பெற்றது.

நிம்மதி அடைந்த அந்த ‘ஆவி’ சந்தோஷம் அடைந்து பறந்தது,தன் இருப்பிடத்தை நோக்கி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *