அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
கொஞ்ச நேரம் போனதும்”தேவகி நான் உன்னே அடுத்த ஞாயித்துக் கிழமே அவங்க வீட்டுக்கு இட்டுக் கிட்டுப் போய் கேக்கறேன்.அவங்க உன்னே வச்சுக்க முடியாதுன்னு சொல்லிட்டா,அதுக்கு அப்புறமா நாம வேறே ஏதாச்சும் செய்ய யோசிக்கலாம்.நீ என்ன சொல்றே” என்று கேட்டாள் செல்வி. தேவகிக்கு என்ன பதில் சொல்றது என்று புரியவில்லை.அவள் பதில் ஒன்னும் சொல்லவில்லை.
“இன்னும் ஒரு வாரம் இருக்கு,நாம அதேப் பணறதுக்கு.நான் நாளைக்கு காலையிலே வேலை க்குப் போயாகணும்.எனக்கு தூக்கம் வருது” என்று சொல்லி பாயைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள்.படுத்தவுடன் செல்வி தூங்கி விட்டாள்.தேவகிக்கு தூக்கம் வரவில்லை.அவள் எண்ணம் இட்டுக் கொண்டு இருந்தாள்.
’அக்கா,மேஸ்திரி கிட்டே கொஞ்ச கடன் வாங்கி,ஒரு நல்ல பையனாப் பாத்து நமக்கு கல்யாண ம் கட்டி வக்கிறேன்னு சொன்னாங்களே.அதுக்கு முன்னாடி நமக்கு இப்படி ஆயிடுச்சே.இந்த குழந்த யே அந்த டாக்டர் கலைக்க மட்டேன்னு சொல்லிட்டார்.அக்காவும் கம்முன்னு வந்துட்டாங்க.வேறே யாராவது டாக்டர் இதே செய்வாரான்னா அக்காவை விசாரிக்கச் சொல்லாமா. ஆனா அந்த மாதிரி அந்த செய்ய டாக்டர் ஒத்துகிட்டா கிட்டா அதுக்கு அந்த டாக்டர் அதிகமா பணம் கேப்பாரே.அக்கா அவ்வளவு பணத்துக்கு எங்கே போவாங்க.அக்கா கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சு இருந்த பணத் தை அந்த ‘அயோக்கிய மாமா’ எடுத்து கிட்டுப் போய் இருக்காரே.நாம இந்தக் குழந்தை யே பெத்து கிட்டு ஆவணுமா.அப்புறமா நம்ம ஆசை வாழ்க்கை என்ன ஆவறது.கல்யாணம் கட்டிக்காம நாம ஒரு தாய் ஆவப் போறோமா’ என்று நினைக்கும் போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.
அன்று இரவு பூராவும் தேவகி தூங்கவில்லை.
காலையில் முத்தம்மா எழுந்ததும் பல்லைத் தேய்த்து முடித்து விட்டு சமையல் அறைக்குப் போய் ‘டீ’ப் போட்டுக் கொண்டு வந்து தனக்குஒரு ‘கப் டீயை’ வைத்துக் கொண்டு தேவகிக்கும் ஒரு கப் டீயைக் கொடுத்தாள்.டீயைக் குடித்துக் கொண்டே முத்தம்மா “தேவகி,எதுக்கும் நான் என் கூட வேலை செஞ்சுக் கிட்டு வர ஒரு நல்ல அம்ம்மாவே அவங்களுக்கு உன் கர்ப்பத்தை கலைக்க யாராச் சும் தெரியுமா ஒரு நல்ல டாக்டர் தெரியுமான்னு கேட்டுக் கிட்டு வறேன்”என்று சொன்னதும் தேவகி “கேட்டு கிட்டு வாக்கா.கூடவே அவர் எவ்வளவு பணம் கேப்பார்ன்னு கேட்டு கிட்டு வா” என்று சொல்லி அக்காவை வேலைக்கு அனுப்பினாள் தேவகி.
முத்தம்மா வேலைக்கு வந்ததும் ரகசியமாக தனக்கு ரொம்ப தெரிந்த ஒரு அம்மாவிடம் தேவகி க்கு ‘நடந்ததை’ சொல்லி,”அக்கா அவ கர்ப்பத்தை கலைக்க யாராச்சும் டாக்டர் தெரியுமா.அப்படி பண்ண என்ன பணம் கேப்பாங்க” என்று கேட்டாள்.அந்த அம்மா கொஞ்சம் வம்பு பிடிச்ச அம்மா. அவங்க உடனே ”என்ன முத்தம்மா,உன் புருஷன் உனக்கு ஒரு குழந்தே குடுக்காம உன் தங்கைக்கு குடுத்து ஓடிப் போய் இருக்கார்.நீ இத்தனை மருந்துங்க சாப்பிட்டும் உனக்கு குழந்தே பொறக்கலே ன்னா,உன் உடம்ப்லே தான் ஏதாச்சும் கோளாறு இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.எனக்கு கர்பத்தை கலைக்கிற டாக்டர் யாரேயும் தெரியாதே.அந்த மாதிரி செய்ய அந்த டாக்டர் நிறைய பணம் கேப்பாரே முத்தம்மா.நீ அவ்வளவு பணத்துக்கு எங்கே போவே” என்று சொன்னாள்.
அந்த அம்மா சொன்னதைக் கேட்டதும் முத்தம்மாவுக்கு ‘நம்ம உடம்ப்லேத் தான் கோளாறு இருந்து இருக்கு.நாம வீணா நம்ம புருஷனே சரி இல்லேனு நினைச்சுக் கிட்டு இருந்தோமே’என்று நினைக்கும் போது போது அவள் புருஷன் மேல் கொஞ்சம் அனுபாதபம் பிறந்தது.வீட்டுக்கு வந்த முத்தம்மா தேவகி இடம் “தேவகி,கர்பத்தை கலைக்கற டாக்டர் ரொம்ப பணம் கேப்பாருன்னு அந்த அம்மா சொன்னாங்க” என்று சொன்னதும் தேவகிக்கு ‘சப்’ என்று ஆகி விட்டது.அவள் பதில் ஒன் னும் சொல்லாமல் தன் விதியை நொந்துக் கொண்டு இருந்தாள்.
அந்த வார ஞாயித்துக் கிழமை காலையிலேயே முத்தம்மா எழுத்து குளித்தாள்.தேவகியையும் எழுப்பி குளிக்கச் சொன்னாள்.முத்தம்மா வீட்டை பூட்டிக் கொண்டு,தேவகியையும் அழைத்துக் கொண்டு நாயர் கடையிலே ‘டீயும் ‘பன்னும்’சாப்பிட்டு விட்டு ‘பஸ்’ ஏறி காளி இருந்த கிராமத்துக்கு வந்து அவர் வீட்டுக்கு வந்தாள்.
மருமக தன் தங்கையுடன் தனியாக வந்து இருப்பதைப் பார்த்த காளி “வாம்மா முத்தம்மா. மருது உன் கூட வறலையா.நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்து இருக்கீங்க”என்று ஆச்சரி யத்தோடு கேட்டார். உடனே முத்தம்மா அழுதுக் கொண்டே நடந்த எல்லா விஷயங்களையும் சொன் னாள்.முத்தம்மா சொன்ன விஷயத்தைக் கேட்ட காளியும் பார்வதியும் கோவம் வந்து மருதுவை கண்டபடி திட்டினார்கள்.’அந்தக் ‘கழுதயே’ இனிமே நீ வீட்லே சேக்காதே முத்தம்மா” என்று கோவமாகச் சொன்னார் காளி.
கொஞ்ச நேரம் ஆனதும் முத்தம்மா “மாமா,அத்தே நடந்தது நடந்துப் போச்சு.இனிமே ஒன்னும் செய்ய முடியாது.நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு உதவியே பண்ணனும்.நான் தேவகியே மாயவரத் லே பிரசவம் பண்ண முடியாது.அக்கம் பக்கத்லே இருக்கிறவங்களுக்கு எல்லாம் தேவகி கல்யாணம் ஆகாதவன்னு நல்லா தெரியும்.நான் அடுத்த வாரம் ஞாயித்துக் கிழமை தேவகி கழுத்லே ஒரு மஞ்சக் கயிரேக் கட்டிட்டு,அவ துணி மணிகளோட இங்கே கொண்டு வந்து விடறேன்.நீங்க உங்க அக்கம் பக்கத்து காரங்க கிட்டே’ இந்தப் பொண்ணு எங்க மருமக தங்கச்சி. இவளே கட்டிக் கிட்டவன் இவளே விட்டுட்டு ஓடிப் போயிட்டான்’ன்னு ஒரு பொய்யேச் சொல்லி,இவளுக்கு நீங்க பிரசவம் பாத்துட்டு, இவ¨ளையும் இவளுக்கு பொறக்கற குழந்தையையும் என் கிட்டே கொண்டு வந்து விடுங்க.நான் உடனே இவளையும் இவ குழந்தையையும் இட்டுக் கிட்டு வேறே ஊருக்குப் போய் வாழ்ந்து வறோம்” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.
பார்வதி நன்றாக யோஜனைப் பண்ணீனாள்.உடனே அவள் காளியைப் பார்த்து “எனக்கு என்னவோ மருமக சொல்றது சரின்னு படுதுங்க” என்று சொன்னாள்.காளி நன்றாக யோஜனைப் பண்ணி விட்டு “பார்வதி,நீ சொல்றா மாதிரி நம்ம செய்ய முடியாதே.இந்த கிராமத்லே ஒரு சின்ன பஞ்சாயத்து மருத்தவ மணை இருக்கு.அந்த மருத்துவ மணையிலே ஒரு சாதாரண படிப்புப் படிச்ச ஒரு டாக்டர் தானே இருக்கார்.அவரே கொஞ்சம் ‘சீரியஸ்’ஸான கேஸ்களை மாயவத்துக்கு அனுப்பி வைத்தியம் பாக்கச் சொல்றார்.தேவகியே உங்கே வச்சு கிட்டு,அவ பிரசவத்லே ஏதாச்சும் ‘ப்ராப்லெம்’ வந்தா,அந்த டாக்டர் தேவகியே மாயவத்துக்குத் தானே அனுப்பி விடுவார்.இந்த கிராமத்லே வைத்திய வசதி போறாதேம்மா” என்று சொல்லி வருத்தப் பட்டார்.
பார்வதி விடாமல்” ஏங்க நீங்க யோஜனைப் பண்ணீங்களா.தேவகிக்கு பொறக்கப் போற குழந் தே நம்ம பையன் குழந்தே தானேங்க” என்று கேட்டதும் காளி “நான் உன்னே மாதிரி யோஜனையே பண்ணலை பார்வதி.நான் நம்ம கிராமத்லே இருக்கிற மருத்தவ வசதியே பத்தி தான் யோஜனைப் பன்ணி கிட்டு இருந்தேன்” என்று சொல்லி விட்டு “முத்தம்மா.மருது பண்ணத் தப்புக்கு நான் முழு பொறுப்பு ஏத்துக்கறேன்.எனக்கு என்ன தோணுதுன்னா,உனக்கு தேவகி பிரசவத்தை மாயவரத்லே வச்சுக்கறதுக்கு உனக்கு ஒன்னு பணக் கஷ்டம்,ரெண்டவது உன் அக்கம் பக்கத்லே இருக்கிறவங்க தேவகியே பத்திக் கேப்பாங்க என்கிற பயம்.இது ரெண்டுக்கும் நான் ஒரு நல்ல வழி சொல்றேன்.நான் உனக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் பணம் தறேன்.நீ உன் மாயவரம் வீட்டை காலி பண்ணி விட்டு திருச்சி க்குப் போய் ஒரு சின்ன வீடாப் பாத்து கிட்டு,அங்கே தங்கி இருந்து வந்து தேவகி பிரசவத்தைப் பண்ணிக் கிட்டு வா” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொல்லி விட்டு,இரண்டு லக்ஷ ரூபாய் க்கு முத்தம்மா போ¢ல் ஒரு செக்கைக் கொடுத்தார்.
பார்வதி முத்தம்மாவைப் பார்த்து “முத்தம்மா,திருச்சி புது இடம்.நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஜாக்கிறதையா இருந்துக் கிட்டு வாங்க” என்று சொன்னாள்.தன் மாமனார் தனக்கு ரெண்டு லக்ஷம் ரூபாய் தறேன்னு சொன்னது முத்தம்மாவுக்கு சந்தோஷதைக் கொடுத்தது.உடனே அவள் “சரி மாமா,நீங்க சொன்னா மாதிரியே செய்றேன்.அத்தே நீங்க சொன்னா மாதிரி நாங்க ரெண்டு பேரும் ஜாக்கிறதையா இருந்துக் கிட்டு வறோம்.நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்து கிட்டு வாங்க” என்று சொன்னாள்.பிறகு இருவரும் பார்வதி கொடுத்த பலகாரத்தைச் சாப்பிட்டு விட்டு,இருவா¢டமும் சொல்லிக் கொண்டு முத்தம்மா தேவகியை அழைத்துக் கொண்டு மாயவரம் வந்து சேர்ந்தாள்.
முத்தம்மா “நாம,வேறே வழி ஒன்னும் இல்லாம இந்த குழந்தேயே பெத்துக்க முடிவு பண்ணி இருக்கோம்.அதனால் நான் உன் கழுத்லே ஒரு மஞ்சக் கயிறு கட்டிடறேன்.நாம எங்க மாமா சொன் னா மாதிரி திருச்சிக்கு போய் ஒரு சின்ன வீடாப் பாத்துக் கிட்டு,அங்கே தங்கி உன் பிரசவத்தைப் பாத்துக்கலாம்.நான் அங்கேயே ஒரு வேலைத் தேடிக்கறேன்.நீ என்ன சொல்றே தேவகி” என்று கண்ணில் கண்ணீர் மல்கக் கேட்டாள்.
“அக்கா,நான் சொல்றதுக்கு என்ன இருக்கு.நாம இந்த குழந்தேயே கலைக்க ‘ட்ரை’ பண் ணோம்.நம்ம கிட்டே அதுக்கு பணம் இல்லே.நான் இந்த குழந்தேயே பெத்துண்டே ஆகணும்ன்னு ஆயிடுச்சி.நீங்க சொன்னா மாதிரி என் கழுத்லே மஞ்சக் கயித்தே கட்டுங்க.நான் கல்யாணம் கட்டாம ஒரு அம்மா ஆயிட்டேன்.இப்போ நீங்க கட்டற மஞ்சக் கயித்தாலே நான் ‘கல்யாணம் ஆன’வன்னு ஊருக்குத் தெரிய வரும்” என்று சொல்லி விக்கி விக்கி அழுதாள்.முத்தம்மா தேவகியை தன் மடியிலே போட்டுக் கொண்டு தேத்தறவு பண்ணினாள்.
அடுத்த நாளே முத்தம்மா,தேவகியையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் போய் ஒரு பாங்கிலே ஒரு ‘சேவிங்க்ஸ்’அக்கவுண்ட்’ ஆரம்பித்து அதில் தன் மாமனார் கொடுத்த இர்ண்டு லக்ஷ ரூபாய் செக்கைப் போட்டாள்.அந்த ‘பாங்க்’ பக்கத்திலேயே ஒரு சின்ன வீடாகப் பார்த்து,அந்த வீட்டு க்கார அம்மாப் பார்த்து தன்னுடைய ஏழ்மையை சொல்லி வாடகையை கொஞ்சம் குறைக்கச் சொன் னா.அந்த அம்மாவும் முத்தம்மாவுக்கு வாடகையில் எரணூறு ரூபாய் குறைத்துக் கொண்டாள்.
முத்தம்மா அந்த வீட்டுக்கார அம்மாவுக்கு தன் நன்றியைச் சொல்லி பாங்குக்குப் போய் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த அம்மா கேட்ட ‘அடவான்ஸை’க் கொடுத்து விட்டு மாயவத்துக் குத் திரும்பி வந்தாள்.அந்த ஞாயிற்றுக் கிழமை முத்தம்மா அவள் இருந்த வீட்டை காலி பண்ணி விட்டு,தன் சாமான்கள் எல்லாவற்றையும் ஒரு சின்ன ‘டெம்போ வில் எடுத்துக் கொண்டு திருச்சிக்கு வந்து,தேவகியுடன் தான் பார்த்து இருந்த வீட்டில் குடி வந்தாள்.முத்தம்மா அங்கே இருந்த ஒரு ‘பில்டிங்க் கன்ட்ராக்டர் கிட்டே ஒரு சித்தாளா வேலைச் சேர்ந்தாள்.
ஒரு வாரம் ஆனதும் முத்தம்மா ஒரு ‘இன்லாண்ட் லெட்டா¢ல்’ தன் மாமனாருக்கு ‘தான் திருச் சியில் ஒரு சின்ன வீடாகப் பாத்து,தேவகியுடன் குடி வந்து விட்டதாயும்,அந்த வீட்டு விலாசத்தையும் எழுதி தபாலில் போட்டாள்.
முத்தம்மா வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்த நேரங்களில் தேவகி தன் விதியை நொந்துக் கொண்டே சமையல் வேலை செய்துக் கொண்டு,தான் மாயவரத்தில் இருந்த போது வேண் டிக் கொண்டு வந்த அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு ”அம்மா, நான் உன் கிட்டே’ தாயே எனக்கு நல்ல படிப்புக் குடு.என் அம்மா அப்பாவே நீ என் சின்ன வயசிலேயே எடுத்து கிட்டே. எனக் கும் என்னை பாத்து கிட்ட வர அக்காவுக்கும் ஒரு கஷ்டமும் தறாதே.எங்களே சௌக்கியமா வச்சுக் கிட்டு வா’ன்னு வேண்டிக் கிட்டு வந்தேனே.ஆனா என் வாழ்க்கை இப்படி அந்த ‘அயோக்கிய மாமா வால் இப்படி பாழாயிடுச்சே.இனிமே என் வாழ்க்கை என்ன ஆவப் போவுது.எனக்கு ஏன் இந்த கஷ்ட த்தே நீ குடுத்து இருக்கே” என்று தினமும் சொல்லி அழுதுக் கொண்டு இருந்தாள்.அவள் மனது ரொம்ப வேதனைப் பட்டது.விதியை நொந்துக் கொண்டே தேவகி ஒவ்வொரு நாளா நாளாக கழித்துக் கொண்டு வந்தாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை.முத்தம்மா வீட்டில் இருந்தாள்.இரண்டு நாட்களாக தேவகிக்கு இடுப்பு வலி இருந்துக் கொண்டு இருந்தது.அன்று காலையில் தன் இடுப்பு வலி கொஞ்சம் அதிகம் ஆகி விடவே தேவகி முத்தம்மாவைப் பார்த்து “அக்கா,எனக்கு ரெண்டு நாளாவே இடுப்பி வலி இருந் திச்சி.ஆனா இன்னேக்கு அந்த வலி கொஞ்சம் அதிகமாவே இருக்கு”என்று தன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.
“தேவகி,உனக்கு பிரசவ வலி ஆரம்பிச்சு இருக்கு.வா,நாம ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டிக் கிட்டு வரலாம்”என்று சொல்லி விட்டு ஒரு ஆட்டோவில் தேவகியை மெல்ல ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த ‘மதர் தெரஸா நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தாள் முத்தம்மா.அங்கு இருந்த ஒரு லேடி டாக்டர் தேவகியை பா¢சோதனைப் பண்ணி விட்டு “இவங்களுக்கு பிரசவ வலி ஆரம்பிச்சு இருக்கு. நீங்க இவங்களே உடனே அட்மிட் பண்ணுங்க”என்று சொன்னதும் முத்தம்மா தேவகியை அந்த ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ பண்ணினாள்.
ஆறு மணி நேரம் ஆனதும் தேவகிக்கு ஒரு ஆண் குழந்தையும்,ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.தேவகி அந்த ரெண்டு குழந்தைகளையும் பார்த்தாள்.அந்த ரெண்டு குழந்தைகளும் அவள் மாமா ஜாடையுடன் கருப்பாக இருந்தது.தேவகி தன் கண்களை மூடிக் கொண்டு தான் தினமும் வேண்டி வரும் அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தாள்.
ஒரு மணி நேரம் ஆனதும் ‘லேபர் வார்ட்டில்’ இருந்த ‘நர்ஸ்’ வெளியே வந்து முத்தம்மாவைப் பார்த்து “அவங்களுக்கு ரெட்டைக் குழந்தைங்க பொறந்து இருக்கு.ஒன்னு ஆண் குழந்தே,இன்னொ ன்னு பெண் குழந்தே.நீங்க இப்ப போய் அவங்களேயும்,குழந்தேங்களேயும் பாக்கலாம்“ என்று சொன் னவுடன் முத்தம்மா தேவகி படுத்து இருந்த ‘பெட்டுக்குப் போய்,தேகியையும் குழந்தைகளையும் பார்த் தாள்.அந்த ரெண்டு குழந்தைகளும் அவ புருஷன் ஜாடையுடன் கருப்பாக இருந்தது.
கண்னை மூடிக் கொண்டு இருந்த தேவகியைப் பார்த்து “தேவகி உனக்கு ரெண்டு பிள்ளைங்க பொறந்து இருக்காங்க.நீ பாத்தியா”என்று சந்தோஷத்தில் கேட்டாள்.உடனே தேவகி “பாத்தேன்க்கா” என்று சொல்லி விட்டு மறுபடியும் தன் கண்களை மூடிக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் பிரசவம் பார்த்த டாக்டர் “இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.இவங்க இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கேயே இருக்கட்டும்.ரெண்டு நாள் ஆன பிற்பாடு நீங்க இவங்களை யும்,குழந்தைகளையும் வீட்டுக்கு இட்டுக் கிட்டுப் போங்க” என்று சொன்னதும் முத்தம்மா தேவகி இடம் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தாள்.
தேவகி அன்று சாயந்திரம் ‘டியூடி’க்கு வந்த ‘நர்ஸ்’ தேவகி சகஜமாகப் பேசிக் கொண்டு இருந் தாள்.அந்த நர்ஸ் தன் உடம்பு பூராவும் மறையும் படி ஒரு வெள்ளை உடையை அணிந்துக் கொண்டு கழுத்தில் ஒரு வெள்ளிச் சிலுவையைத் தொங்க விட்டுக் கொண்டு இருந்தாள்.அந்த பேச்சின் போது அந்த ‘நர்ஸ்’ தேவகியைப் பார்த்து “உங்களுக்கு ஒரு பிரசவத்லே ரெண்டு குழந்தைங்க பொறந்து இரு க்கு.அதிலே ஒரு குழந்தை ஆண் குழந்தையாகவும்,ஒரு குழந்தை பெண் குழந்தையாகவும் பொறந்து இருக்கே.உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே” என்று கேட்டதும் தேவகி அழுகை முட்டிக் கொண்டு வந்தது.அவள் அழுதுக் கொண்டு இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த ‘நர்ஸை’ப் பார்த்து “’நர்ஸ்’ உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்க ளா” என்று கேட்டதும் அந்த நர்ஸ் சிரித்துக் கொண்டே” மாடம்,இங்கே வேலை செஞ்சு வர டாக்டர் களும்,’நர்ஸ¤’களும்,மற்ற வேலைக்காரங்களும் கல்யாணமே ஆவாத பெண்கள் தான்.நாங்க எல்லாரு ம் ‘டியூட்டி’நேரத்லே நோயாளிகளுக்கு சேவை செஞ்சு வந்து விட்டு,மத்த நேரங்களில் ‘கர்த்தரு’க்கு சேவை வெஞ்சு வருவோம்.நாங்க எல்லாரும் கல்யாணம் கட்டிக்காம ‘கன்னி ஸ்திரி’களா இருந்து வரோம் இந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்குப் பின்னாலே ஒரு பொ¢ய ‘சர்ச்’ இருக்கு.நாங்க எல்லாரும் அந்த ‘சர்ச்’லே இருக்கற ‘ரூம்’கள்ளே இருந்து கிட்டு வறோம்.வாசல்லே இருக்கும் ‘வாச்மென்’னை த் தவிர இங்கே வேறே ஆண்களே கிடையாது” என்று சொன்னாள்.
தேவகி அந்த ‘நர்ஸ்’ சொன்னதைக் கேட்டு ஆச்சரியப் பட்டாள்.நாமும் இந்த குழந்தைகளே அக்கா கிட்டே விட்டுட்டு இந்த ‘சர்ச்’லே ஏன் ஒரு ‘கன்னி ஸ்திரி’யாக வாழ்ந்து வரக் கூடாது என்று எண்ணம் இட்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் தேவகி அந்த நர்ஸைப் பார்த்து “உங்க பேர் என்ன் நர்ஸ்” என்று கேட்டதும் அந்த நர்ஸ் “என் பேர் ஜென்னி” என்று சொன்னாள்.
ரெண்டு நாள் ஆனதும் முத்தம்மா அந்த ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு பணத்தை கட்டி விட்டு தேவ கியையும் குழந்தைக்ளையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.முத்தம்மா தான் போய் வரும் சித்தாள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துக் கொண்டு தேவகிக்குத் துணையா அவள் ரெண்டு குழந்தைகளையும் கவனித்து வந்தாள்.
ஒரு மாசம் ஆனதும் முத்தம்மா தேவகியைப் பார்த்து “தேவகி, உனக்கு ரெண்டு குழந்தைங்க பொறந்து இருக்குன்னு என் மாமாவுக்கு சொல்ல வேணாமா.அவர் தானே உன் பிரசவத்துக்கு நமக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் குடுத்தார்” என்று கேட்டதும் தேவகி “அக்கா, உன் மனசுக்கு எது சரின்னு படுதோ,அதே நீ பண்ணுக்கா.நான் சொல்றதுக்கு என்ன இருக்கு” என்று பட்டும் படாமலும் பதில் சொன்னாள் தேவகி.அடுத்த நாள் முத்தம்மா தன் மாமனார் மாமியாருக்கு ‘தேவகிக்கு சுகப் பிரசவம் ஆகி ஒரு ஆண் குழந்தையும்,ஒரு பெண் குழந்தையும் பொறந்து இருக்கு’ என்று எழுதி ஒரு கடிதம் போட்டாள்.
கடிதம் கிடைத்ததும் காளி பார்வதியை அழைத்து கொண்டு திருச்சிக்கு வந்து முத்தம்மா எழுதி இருந்த விலாசத்தை விசாரித்துக் கொண்டு முத்தம்மா வீட்டுக்கு வந்தாள்.அன்று ஞாயிற்றுக் கிழமை ஆக இருந்ததால் முத்தம்மா வீட்டில் இருந்தாள்.தன் மாமனார் மாமியாரைப் பார்த்ததும் “வாங்க மாமா,வாங்க அத்தே” என்று வரவேற்று சோ¢ல் உட்காரச் சொன்னாள்.தேவகி அவர்களைப் பார்த்து ஒன்னும் சொல்லவில்லை.காளியும் பார்வதியும் தேவகிக்கு பிறந்து இருக்கும் ரெண்டு குழந்தைகளை யும் ஆசையாகப் பார்த்தார்கள்.காளியும் பார்வதியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
பார்வதி காளி இடம்”நாம ஒரு பேரக் குழந்தை கூட நமக்கு இல்லையேன்னு ரொம்ப கவலைப் பட்டோம்.அந்த கடவுள் நமக்கு இப்ப ரெண்டு பேரக் குழந்தேங்களே குடுத்து இருக்கார்.ரெண்டு பேரக் குழந்தேங்களும் நமப மருது ஜாடையாகவே இருக்குங்க” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள். உடனே காளி “ஆமாம் பார்வதி,நீ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்.எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி பார்வதி சொன்னதை ஆமோதித்தார்.
முத்தம்மா செய்த சமையலை சாப்பிட்டு விட்டு காளியும் பார்வதியும் அவர்கள் கிராமத்துக்கு கிளம்புவதற்கு”முத்தம்மா,நீயும் தேவகியும் ரெண்டு குழந்தேகளே ஜாக்கிறதையாக கவனிச்சுக் கிட்டு வாங்க” என்று சொல்லி விட்டுப் போனார்கள்.உடனே முத்தம்மா” நீங்க கவலைப் படாதீங்க.நாங்க ரெண்டு பேரும் ரெண்டு குழந்தைகளையும் ரொம்ப ஜாக்கிறதையா கவனிச்சுக் கிட்டு வறோம்” என்று சொல்லி விட்டு அனுப்பி வைத்தாள்.
இரண்டு மாதம் ஆனது.
திருச்சிக்குப் போன மருது அவன் இடம் இருந்த எல்லா பணத்தையும் செலவு பண்ணி விட்டான்.அவனுக்கு நிரந்தரமான ஒரு வேலையும் கிடைக்கவில்லை.அவன் சாப்பாடுக்கே மிகவும் கஷ்டப் பட்டு வந்தான்.அவன் யோஜனைப் பண்ணீனான்.’இனிமே நாம செல்வி வீட்டுக்குப் போக முடியாது.அவ நம்மே வெட்டிப் போட்டு விடுவா.நாம் பேசாம நம்ம அப்பா அம்மா இருக்கற கிராமத் துக் குப் போய் அவங்க கூட இருந்து வரலாம்’ என்று நினைத்து தம் அப்பா அம்மா இருந்த கிராமத் துக்கு ஒரு ‘பஸ்’ ஏறி வந்தான்.
ஒரு அழுக்கு சட்டையுனும் வேஷ்டியுடனும் தாடியும் மீசையுமாய்,மெலிந்த உடம்போடும் நின்றுக் கொண்டு “அம்மா” என்று குரல் கொடுத்தான் மருது.கண் பார்வை கொஞ்சம் சரி இல்லாத பார்வதி வாசலுக்கு வந்து “யார்ப்பா நீ உனக்கு யார் வேணும்” என்று கேட்டுக் கொண்டு இருந்த போது தன் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு வாசலுக்கு வந்தார் காளி.மதுவுவைப் பார்த்ததும் அவருக்கு சதோஷமாய் இருந்தது. உடனே அவர் “வா மருது,ஏண்டா இப்படி மெலிஞ்சுப் போய் இருக் கே. என்னடா ஒரு அழுக்கு சட்டை வேஷ்டியோட இருக்கே” என்று கத்தினார் காளி.”நம்ப மருதுவா வாசல்லே நிக்கறது” என்று கேட்டு விட்டு ”உள்ளே வாடா மருது.என் கண் பார்வே கொஞ்ச நாளா சரி இல்லே”என்று சொல்லி விட்டு மருதுவை வீட்டுக்கு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள் பார்வதி.
மருது முத்தம்மா கிட்டே இருந்த பணத்தைத் திருடிக் கொண்டுப் போனதையும்,அந்த பணத் திலே கொஞ்ச மாசம் திருச்சியிலே இருந்து வந்ததையும்,அப்புறமா எங்கேயும் வேலைக் கிடைக்காம இப்போ சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப் பட்டு வருவதாயும் சொல்லி அழுதான்.உடனே பார்வதி ஒரு தட்டிலே அவள் பண்ணி இருந்த நாஷ்டாவை மருதுவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள் மருது அந்த நாஷ்டாவை வேக வேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்த காளிக்கும் பார்வதிக்கும் அழுகை வந்தது. இருவரும் ‘பாவம் மருது எத்தினி நாள் பட்டினியா இருந்து வந்துக் கிட்டு இருந்தானோ’ என்று நினைத்து வருத்தப் பட்டார்கள்.
அவன் சாப்பிட்டு முடிந்ததும் காளி “மருது, நீ இனிமே எங்கேயும் போவ வேணாம்.எங்க கூட வே இருந்து வாப்பா.எங்களுக்கும் ரொம்ப வயசு ஆவுது” என்று தன் கண்களைத் துடைத்துக் கொண் டு சொன்னார்.பார்வதியும் ”மருது, நீ பழசே எல்லாம் மறந்துட்டு எங்க கூடவே இருந்து வாப்பா” என்று சொன்னதும் மருது “நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க.ஆனா நான் தான் பாவம் தூங்கிக் கிட்டு இருந்த தேவகியேக் ‘கெடுத்துட்டு’,முத்தம்மா சேத்து வச்சு இருந்த பணத்தே திருடிக் கிட்டு,அந்த வீட்டே விட்டு ஓடிப் போனேன்.அப்படி பண்ண எனக்கு அந்த கடவுள் என்னே நிறைய நாள் பட்டினிப் போட்டு,நிறைய கஷ்டத்தையும் குடுத்தார்” என்று சொல்லி விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தான்.
அவன் அழுது முடிந்ததும் காளி “மருது,அந்த கதை எல்லாத்தியும் முத்தம்மா அவ தங்கை தேவகியை இங்கே இட்டுக் கிட்டு வந்து சொல்லி அழுதா.என்ன இருந்தாலும் நீ அப்படி அந்த அப்பாவிப் பொண்ணேக் ‘கெடுத்து’ இருக்க கூடாது.அவ வாழ்க்கையே பாழாயிடிச்சி பாரு. அவ கர்ப்பம் ஆயி,அவளுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க பொறந்து இருக்கு” என்று கோவமாகச் சொல்லி விட்டு கொஞ்ச நேரம் ஆனதும் “நீ பண்ணத் தப்புக்கு நான் முழு பொருப்பு ஏத்துக் கிட்டு,முத்தம்மா கிட்டே ரெண்டு லக்ஷ ரூபாய்க் குடுத்து,அவங்க ரெண்டு பேரையும் திருச்சிக்குப் போய் இருந்துக்கிட்டு,முத்தம்மாவே திருச்சிலே ஒரு வேலே தேடிக் கிட்டு,அவ தங்கை பிரசவத்தையும் பாத்துக் கிடச் சொன்னேன்” என்று வருத்தத்தோடு சொன்னார்.
உடனே மருது “நான் பண்ணது ரொம்பத் தப்புப்பா.என்னே நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க” என்று சொல்லி ரெண்டு பேர் கால்களிலும் விழுந்து அழுதுக் கொண்டு இருந்தான்.பார்வதி பெற்ற வயிறு சங்கடப் பட்டது.அவ உடனே ”எழுந்திரி மருது.அந்தப் பொண்ணுக்கு இப்போ ஒரு ஆண் குழந்தையும்,ஒரு பொண் குழந்தையும் பொறந்து இருக்கு.முத்தம்மா எங்களுக்கு ஒரு தபால் போட்டு இருந்தா.நானும் அப்பாவும் திருச்சியிலே இருக்கற முத்தம்மா விட்டுக்குப் போய் அந்த குழந்தேகளேப் பாத்துட்டு வந்தோம்.அந்த ரெண்டு குழந்தேகளும் உன் ஜாடையாவே இருந்திச்சி மருது” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.
உடனே மருது தன் அம்மா அப்பாவிடம் “நான் முத்தம்மா கிட்டேயும் தேவகி கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுட்டு,ஒரு நிமிஷம் அந்த ரெண்டு குழந்தைங்களேயும் பாக்க முடியுமா.எனக்கு அந்த குழந்தைங்களே பாக்க ரொம்ப ஆசையா இருக்கு” என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.”நீ முன்னே சலூனுக்குப் போய்,உன் தாடி மீசை எல்லாம் எடுத்துட்டு, பழையபடி இருந்தா மாதிரி ‘கிராப் தலை’ வெட்டிக் கிட்டு வா.வர வழிலே இருக்கிற துணி கடை யிலே உன் ‘சைஸ்’ஸ¤க்கு நாலு ஷர்ட்டும்,நாலு வேஷ்டியும், பனியனும் ‘அண்டர்வேரும்’ வாங்கிட்டு வா” என்று சொல்லி மருது கையிலே ரெண்டாயிரம் ரூபா யைக் கொடுத்து அனுப்பினார்.மருது அப்பா கொடுத்த ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ‘சலூனு’க்குப் போனான்.
அவன் கிளம்பிப் போனதும் காளி பார்வதியைப் பார்த்து “பார்வதி,மருது இப்போ திருந்தி வந்து இருக்கான்.எப்படி நாம மறுபடியும் மருதுவே முத்தம்மா கிட்ட சேத்து விடறது.அந்த ‘அப்பாவிப் பொண்ணு’ தேவகிக்கு என்ன பதில் சொல்றது.ஒரேக் குழப்பமா இருக்கே” என்று சொல்லிக் கேட்டார்.
“நீங்க தான் உங்க தங்கச்சி பொண்ணு முத்தம்மா கிட்டே ‘மருது அவன் பண்ண தப்புக்கு உங்க ரெண்டு பேர் கிட்டேயும் மன்னிப்பு கேக்க ஆசைப் படறான்.நீங்க ரெண்டு பேரும் அவனை மன்னிச்சுடுங்க’ன்னு சொல்லுங்க.மருது முத்தம்மாவோடவும்,குழந்தேங்களோடவும் சந்தோஷமா வாழ்ந்து வரட்டுங்க.நீங்க தேவகிக்கு ஒரு நல்ல பையணாப் பாத்து ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சிடுங்க” என்று சொன்னாள்.காளிக்கு அந்த ஐடியா ரொம்பவும் பிடித்து இருந்தது
காளி பார்வதியையும் அழைத்துக் கொண்டு முத்தம்மா வீட்டுக்கு வந்தார்.அப்போது தேவகி கோவிலுக்குப் போய் இருந்தாள்.மாமாவையும் அத்தேயையும் பார்த்த முத்தம்மா “வாங்க மாமா,வாங்க அத்தே”என்று சொல்லி வரவேற்றாள்.
கோவிலில் இருந்து திரும்பி வந்துக் கொண்டு இருந்த தேவகி தன் அக்காவின் மாமனார்,மாமியார்,ரெண்டு பேரும் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தாள்.வீட்டுக்குள் போகாமல் வெளியே நின்றுக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டாள் தேவகி.”முத்தம்மா,நான் சொல்றதே கொஞ்சம் கவனமா கேளு.மருது வேலே ஒன்னும் கிடைக்காம சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப் பட்டு,மெலிஞ்சுப் போய் ரெண்டு வாரம் முன்னாலே எங்க வீட்டுக்கு வந்தான்.அவன் உன் கிட்டேயும் தேவகி கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுட்டு இந்த குழந்தேகளே பாக்க ரொம்ப ஆசைப் படறான்.நான் உன் தாய் மாமா. நான் சொல்றதே கொஞ்சம் பண்ணுவியாம்மா” என்று கண்ணிர் மல்கக் கேட்டார்.
உடனே முத்தம்மா “நீங்க அழதீங்க மாமா.சொல்லுங்க நான் என்ன பண்ணனும்” என்று கேட்டாள்.உடனே காளி “முத்தம்மா,நடந்தது நடந்துப் போச்சு.இப்போ ஒன்னும் பண்ண முடியாது. இந்த ரெண்டு குழந்தைகளுக்கும் அப்பா வேணும்.உனக்கும் வயசாகி கிட்டு வருது.நீயும் புருஷன் இல்லாம இன்னும் எத்தினி நாளுக்கு தனியா இந்த சித்தாள் வேலே செஞ்சு வரப் போறே.நான் என்ன சொல்றேன்னா,நீயும் தேவகியும் மருதுவை மன்னிச்சு இந்த வீட்டுக்குள்ளே சேத்துக்குங்க.நான் என் செலவிலே தேவகிக்கு ஒரு நல்ல பையனாப் பாத்து ஒரு கல்யாணத்…….”என்று சொல்லிக் கொண்டு இருந்ததைக் கேட்ட தேவகிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.
தேவகி வீட்டுக்குள் போகவில்லை.அந்தத் தெருக் கோடியிலே இருந்த ஒரு ‘ஸ்டேஷனரி’ கடையில் ஒரு வெள்ளைக் காகிததையும்,ஒரு ‘பால் பாயிண்ட்’ பேனாவையும், எழுத ஒரு ‘பேடும்’ வாங்கினாள்.பக்கத்தில் காலியாக இருந்த ஒரு கடைப் படியிலே உட்கார்ந்துக் கொண்டு தன் மனதில் இருப்பதை எல்லாம் அந்த காகிதத்தில் கொட்டித் தீர்த்தாள்.அந்தக் காகிதத்தை நாலாக மடித்தாள். பேனாவையும்,அந்த ‘பேடை’யும் தூர எறிந்தாள்.மெல்ல கிளம்பி தன் வீட்டுக்கு அருகில் வந்தாள். நல்ல வேளையாக பக்கத்து விட்டு ஆறு வயது பையன் சேகர் அவன் வீட்டுக் கிட்டே வந்துக் கொண் டு இருந்தான்.
தேவகி அவனைப் பார்த்து “சேகர்,இந்த கடிதாசியை எங்க அக்கா முத்தம்மா கிட்டே கொஞ்சம் குடேன்.நான் அக்கா சொன்ன வெல்லத்தை வாங்க மறந்துட்டேன்.அக்காத் திட்டுவாங்க.நான் மறுபடியும் கடைக்கு போறேன்” என்று சொன்னதும் சேகர் “குடுங்கக்கா.நான் குடுத்திடறேன்” என்று சொல்லி தேவகி கையிலே இருந்த கடிதத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு உள்ளே போய் முத்தம்மா கையிலே கொடுத்து விட்டு வெளியே வந்தான்.
தேவகி சேகர் தன் வீட்டுக்குள்ளே போனதைப் பார்த்து சந்தோஷப் பட்டு நேராக ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போய் ‘வாச்மேனிடம்’ “நான் கொஞ்சம் ‘நர்ஸ்’ ஜென்னியைப் பாக்கணும்” என்று சொன் னதும் அந்த ‘வாச்மேன்’ தேவகியை உள்ளே போக விட்டான்.உள்ளே போன தேவகி விசாரித்துக் கொண்டு ‘நர்ஸ்’ ஜென்னி இருக்கும் ரூமுக்குப் போனாள்.அன்று ‘நர்ஸ் ஜென்னிக்கு ‘ஆ·ப்’ தினமாக இருந்ததால் அவள் ‘ரூமி’ல் இருந்தாள்.
தேவகியைப் பார்த்ததும் “வாங்க தேவகி எங்கே இவ்வளவு தூரம்”என்று கேட்டாள்.தேவகி தன் கண்களில் கண்ணீர் மல்க “’சிஸ்டர்’,அன்னைக்கு நீங்க கேட்டப்ப நான் பதில் ஒன்னும் சொல்லாம அழுது கிட்டு இருந்ததை நீங்க கவனிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.’சிஸ்டர்’.எனக்கு இன்னும் கல்யாணமே ஆவலே.என் அக்கா வீட்லே இல்லாத போது என் அக்கா புருஷன் என்னேக் ‘கெடுத்துட் டார்” என்று சொல்லும் போது தேவகி விக்கி விக்கி அழுதாள்.
தேவகி சொன்னதைக் கேட்டு ஜென்னி அதிர்ச்சி அடைந்தாள்.தேவகி தொடர்ந்தாள் ”சிஸ்டர், எனக்கு அந்த வீட்லே வாழ்ந்து வரவே இஷ்டம் இல்லே.அந்த குழந்தேகளே என் அக்கா வளத்து வரட்டும்.நான் உங்களே போல ஒரு ‘கன்னி ஸ்திரி’யாக வாழ்ந்து வர ஆசைப் படறேன்.நீங்க எனக்கு கொஞ்சம் உதவி பண்ண முடியுமா” என்று ஜென்னி கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
உடனே ஜென்னி தேவகியை அழைத்துக் கொண்டு ‘மதர் சுபீரிய’ர் இடம் போய் தேவகியின் சோகக் கதையை சொல்லி,அவ ஆசையை சொன்னாள்.’மதர் சுபீரியர்’ தேவகிக்கு ஆறுதல் சொல்லி, ’கர்த்தா¢’டம் பிரார்த்தனைப் பண்ணி விட்டு,தேவகி கழுத்திலே ஒரு சிலுவையை மாட்டி விட்டு, தேவகியை ஒரு ‘கன்னி ஸ்திரி’யாக அந்த ‘சர்சி’ல் சேர்த்துக் கொண்டார்.
முத்தம்மா சேகர் கொடுத்த கடிதத்தைப் பிரித்து உரக்க படித்தாள்.
“அன்புள்ள அக்கா,நீங்க இத்தனை வருஷமா எனக்கு சோறு போட்டு,உங்களுடைய குறைஞ்ச சம்பளத்லே என்னே எட்டாவது வரைக்கும் படிக்க வச்சீங்க.என்னே செல்லமா வளத்து வந்தீங்க.
அதுக்கு கைம்மாறா நான் ஒரு இரவல் தாயா இருந்து, உங்களுக்கு ரெண்டு குழந்தேங்களே பெத்துக் குடுத்துட்டேன்.நான் போன ஜென்மத்லே என்ன பண்ண பாவம் பண்ணேன்னு தெரியலே. நான் கல்யாணம் ஆவாமலே ஒரு ‘அம்மா’ ஆயிட்டேன்.இனிமே அந்த குழந்தைகளுக்கு நீங்க ஒரு அம்மாவா இருந்து வளத்து வாங்க.அந்த குழந்தைகளுக்கும் ஒரு அப்பா வேணும்க்கா.உங்க மாமனார் சொல்றா மாதிரி பண்ணுங்க.உங்களுக்கும் வயசாகி கிட்டு வருது.என்னே தயவு செஞ்சி தேட வேணாம்.நான் என் வழியே பாத்துக்கறேன்” இப்படிக்கு உங்க தங்கை தேவகி.
கடிதத்தைப் படித்து முடித்ததும் முத்தம்மா விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தாள்.