கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,602 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

மாயவரத்தில் முத்தம்மா ‘காரப்பரேஷன் பள்ளி கூடத்தில்’ எட்டவது ‘பாஸ்’ பண்ணின பிறகு, அவளுடைய அம்மா அப்பா அவளை பணம் கட்டி மேலே படிக்க  வசதி இல்லாமல் இருந்ததால் அவளை வீட்டிலேயே இருந்து வரச் சொல்லி விட்டார்கள்.அவளுக்கு நாலு வயதில் தேவகி என்று ஒரு தங்கை இருந்தாள்.செல்வி கருப்பாக பிறந்து  இருந்தாள்.ஆனால் தேவகி நல்ல கலாராப் பிறந்து இருந்தாள்.

முத்தம்மாவை வீட்டிலே சமையல் வேலை செய்து வரச் சொல்லி விட்டு,’சித்தாள்’ ஆள் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள் ராஜ்ஜும் செல்வியும்.செல்வியின் அண்ணன் காளியும் அதே ‘பில்டிங்க் கன்ரா¡க்டர்’ இடம் ஒரு தச்சராக வேலை செய்து வந்துக் கொண்டு இருந்தார்.

செல்வி தன் கணவனை கூட வைத்துக் கொண்டு அண்னன் காளி இடம்”அண்ணே, உறவு விட்டுப் போகாம இருக்க நீ தயவு செஞ்சி மருதுவுக்கு முத்தம்மாவைக் கட்டிக் குடு” என்று சொன்ன வுடன் காளி “நான் நிச்சியமா அதே செய்றேன் தங்கச்சி.எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்கு நீயே இபோ உன் வாயாலே சொல்லிட்டே.நான் செய்யாம இருப்பேனா”  என்று செல்விக்கு வாக்குக் கொடுத்தார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

வீட்டுக்கு வேண்டிய மாதாதாந்திர சாமாங்கள் வாங்க பொ¢ய மார்கெட்டுக்குப் போய்  ஒரு ஆட்டோவில் போய்க் கொண்டு இருந்தார்கள் ராஜ்ஜும் செல்வியும்.அவர்கள் போய்க் கொண்டு இருந்த ஆட்டோ மேலே ஒரு கார் மோதி விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார் கள்.அந்த விபத்தைப் பார்த்த முத்தம்மா பக்கத்து வீட்டு அம்மா,உடனே ஓடி வந்து முத்தம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.அவளுக்கு உலகமே இருண்டு விட்டது.

தேவகி வாசலில் பாண்டி ஆடிக் கொண்டு இருந்தாள்.பககத்து விட்டு அம்மா தன் வீட்டுக்குள் போனதைப் பார்த்த தேவகி வீட்டுக்குள் போனாள்.அந்த அம்மா சொன்னதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள் முத்தம்மா.

அவள் உடனே தன் அக்காவைப் பார்த்து “ஏன்க்கா.என்ன ஆச்சு,நீங்க ஏன் அழறீங்க” என்று கேட்டாள்.உடனே முத்தம்மா “தேவகி, நம்ம அப்பா அம்மா ரெண்டு பேரும் ஒரு ஆட்டோ விபத்லே இறந்துட்டாங்க.இனிமே நாம ரெண்டு பேரும் என்னப் பண்ணப் போறோம்” என்று சொல்லி மறு படியும் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.’அப்பா அம்மா இறந்துட்டாங்க’என்று சொன்னால், அதன் ‘தாக்கமே’ என்ன என்று தொ¢யாத வயசு தேவகிக்கு.

முத்தம்மா தேவகியைப் பார்த்து “தேவகி,நீ வாசல்லே பாண்டி ஆடினது போதும்.வீட்டுக்கு உள்ளேயே கதவே சாத்திக் கிட்டு இரு.நான் போய் நம்ம மாமா கிட்டே இந்த விஷயத்தே சொல்லிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு,கொஞ்சம் தள்ளி இருந்த மாமா மாமி வீட்டுக்குப் போய் முத்தம்மா அப்பா அம்மா இறந்துப் போன விஷயத்தை அழுதுக் கொண்டே சொன்னாள்.

உடனே காளி தன் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு,முத்தம்மாவையும் அழை த்துக் கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு ஓடினார்.அங்கு இருந்தவர்கள் ரெண்டு பேர் ‘பாடியையும்’ அரசாங்க மருத்துவ மணைக்கு எடுத்துப் போய் விட்டார்கள் என்று சொன்னதும் காளி முத்தம்மாவை
அழைத்துக் கொண்டு அரசாங்க மருத்துவ மணைக்கு ஓடிப் போய்  விசாரித்தார்.மருத்துவ மணையில் ‘எமர்ஜென்ஸியில்’ இருந்த டாகடர் காளியைப் பார்த்து “அவங்க ரெண்டு பேரும் இறதுட்டாங்க.நாங்க ரெண்டு பாடியையும் ‘அமரர் கிடங்கு’க்கு அனுப்பி விட்டோம்” என்று சொன்னார்,

உடனே காளி “முத்தம்மா.இனிமே நாம ஒன்னும் பண்ண முடியாது.இந்தா உனக்கு வீட்டுக்குப் போக’ பஸ் சார்ஜ்’.நீ வீட்டுக்குப் போய் தேவகியோடு பத்திரமா இருந்துக் கிட்டு வா.நான் உங்க அம்மா அப்பாவை அடக்கம் பண்ணிட்டு வீட்டு வறேன்” என்று சொல்லி விட்டு ‘அமரர் கிடங்கு’க்குப் போய் இறந்துப் போன ராஜ் பாடியையும், தங்கை செல்வியின் பாடியையும் வாங்கிக் கொண்டுப் போய் அடக்கம் பண்ணி விட்டு வந்தார்.

ஒரு மாசம் ஆனதும் ஒரு நாள் தன் அக்காவுக்கு ‘வாக்கு’ கொடுத்தபடி காளி தன் செலவிலே யே முத்தம்மாவை தன் ஒரே பையன் மருதுவை கல்யாணம் பண்ணி வைத்தார்.
கல்யாணம் ஆனதும் மருது முத்தம்மா இருந்து வீட்டுக்கு குடி வந்தான்.மருது தன் அப்பா விடம் கிட்டே தச்சு வேலையை நன்றாகக் கற்றுக் கொண்டு இருந்ததால், காளி தான் வேலை செய்து வந்த ‘பில்டிங்க் கன்ட்ராக்டா¢’டம் சொல்லி மருதுக்கு தனியாக தச்ச வேலையும்,முத்தம்மாவுக்கு ஒரு ‘சித்தாள்’ வாங்கிக் கொடுத்தார்.மருதுவும் முத்தம்மாவைப் போல கருப்பாகத் தான் இருந்தான்.

முத்தம்மா தனக்கு வேலைக் கிடைத்ததும் தேவகியை ‘கார்பரேஷன் பள்ளிகூடத்தில்’ ஒன்னாம் வகுப்பிலே சேர்த்தாள்.மருதுவிடம் சொல்லி விட்டு முத்தம்மா தனக்கு வந்த சம்பள பணத்தை தங்கை தேவகி கல்யாணத்துக்கு சேர்த்து வைத்துக் கொண்டு வந்தாள்.மருதுவுக்கு வரும் சம்பளத்தை வீட்டு  செலவுக்கு வைத்துக் கொண்டு வந்தாள் முத்தம்மா.
நான்கு வருடங்கள் ஓடி விட்டது.காளியின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயது அதிகம் ஆகி விடவே,அவர்களைக் கவனித்துக் கொள்ள காளி மருதுவிடமும் செல்விடமும் சொல்லிக் கொண்டு மாயவரத்தை விட்டு அவன் அப்பா அம்மா வாழ்ந்து வந்த கிராமத்துக்கு போய் விட்டார்.வருடத்திற்கு ஒரு தடவை காளியும் அவன் மணைவியும் கிராமத்தை விட்டு மாயவத்துக்கு வந்து மருதுவையும் முத்தம்மாவையும் பார்த்து விட்டுப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.

தேவகிக்கு நிறைய தெய்வ பக்தி இருந்தது.அவள் தினமும் சாயங்கால நேரத்தில் அவர்கள் வசித்து வந்த தெருவிலேயே இருந்த அம்மான் கோவிலுக்குப் போய் அந்த அம்மனிடம்    “தாயே எனக்கு நல்ல படிப்புக் குடு.என் அம்மா அப்பாவே நீ என் சின்ன வயசிலேயே எடுத்து கிட்டே. எனக் கும் என்னை பாத்து கிட்ட வர அக்காவுக்கும் ஒரு கஷ்டமும் தறாதே.எங்களே சௌக்கியமா வச்சுக் கிட்டு வா” என்று வேண்டி வந்தாள்.

மூன்று வருடம் போனதும் அந்த ‘பில்டிங்க் கன்ட்ராக்டர்’கட்டி வந்த ;·ப்லாட்டுகள்’ விலை போகாததால்,அவர் மீதி இருக்கும் ‘·ப்லாட்’களில் வேலை ஒன்றும் செய்யாமல்,தன்னிடம் இருந்த ‘மேசன்’,தச்சன்,’டைல்ஸ் புதைப்பவர்’ களுக்கு எல்லாம் வாரத்தில் மூனு நாள் தான் வேலைக் கொடுத்துக் கொண்டு வந்தார்.அதனால் மருதுவும் வாரத்தில் முனு நாளைக்குத் தான் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தான்.

வருடங்கள் ஐந்து ஆகியும் முத்தம்மாவுக்கு குழந்தைகளே பிறக்கவில்லை.முத்தம்மாவுக்கு குழந்தைகள் என்றால் உயிர்.ஞாயிற்றுக் கிழமைகளில் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் நிறைய பேசி வருவாள்.அவளும் அவன் வேலை செய்து வந்த இடைத்தில் மற்ற பெண்மணி களைக் கேட்டு அவர்கள் சொன்ன ‘ஆயுர்வேத’ மருந்தை சாப்பிட்டு வந்தாள்.சிலர் சொன்ன ‘சித்த வைத்திய’ மருந்தையும் சாப்பிட்டு வந்தாள்.மருதுவுக்கும் முத்தம்மாவுக்கும் தங்களுக்கு குழந்தயே பிறக்கவில்லையே என்று மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.அந்த தடவை வந்த போது முத்தம்மா தன் மாமனார் மாமியாரிடம் தான் சாப்பிட்டு வரும் மருந்தை எல்லாம் விவரமாக சொன் னாள்.அவர்களும் ‘தங்களுக்கு ஒரு பேரக் குழந்தைப் பிறக்கவில்லயே’ என்று மிகவும் கவலைப் பட்டார்கள்.

தேவகி ‘வயசு’க்கு வந்ததும் முத்தம்மாவும்,மருதுவும் தேவகிக்கு புது பாவடை தாவணிகள் வாங்கிக் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு,வீட்டு வாசலில் வாழை மரத்தைக் கட்டி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் அழைத்து ஒரு விருந்து வைத்தார்கள்.காளியின் அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் உடம்பு ரொம்ப மோசமாக இருந்தால்,அவர்களைத் தனியாக விட்டு விட்டு,காளியாலும் பார்வதியாலும் வர முடியவில்லை.ஒரு வாரத்துக்கு எல்லாம் காளியின் அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள்.காளி அவன் அப்பா  ரெண்டு பேருக்கும் எல்லா ஈமக் கா¢யங்களையும் செய்தார்.

காளி அவன் அப்பா வைத்து இருந்த ரெண்டு ஏகரா நஞ்சை நிலத்திலேயும், ரெண்டு ஏகரா புஞ்சை நிலத்திலேயும் விவசாயம் பார்த்துக் கொண்டு வந்தார்.

தேவகி எட்டாவது ‘பாஸ்’ பண்ணினதும் வீட்டில் பணக் கஷ்டம் இருந்து வந்ததால் செல்வியும் மருதுவும் தேவகியை மேலே பணம் கட்டி படிக்க வைக்க முடியவில்லை.தேவகி வீட்டிலேயே இருந்து சமையல் வேலையைக் கவனித்து வந்துக் கொண்டு இருந்தாள்.தன் படிப்பு இப்படி பணக் கஷ்டத்தால் தடை பட்டு விட்டதை தேவகி தான் தினமும் போய் வரும் அம்மனிடம் சொல்லி வருத்தப் பட்டாள். ஆனால் அவள் தினமும் அந்த அம்மன் கோவிலுக்குப் போய் வருவதை மட்டும் நிறுத்தவில்லை.

பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் முத்தம்மாவுக்கு குழந்தைகளே பிறக்கவில்லை.இதை நினைத்து மருதுவின் அம்மாவும் அப்பாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.’இந்த ஜென்மத்லே நாம ஒரு பேரக் குழந்தயே பாக்க முடியவில்லையே.இத்தனை வருஷம் ஆயும் மருகளுக்குக் குழந்தையே பொறக்கலே. அவளும் பாவம் நிறைய மருந்துங்க சாப்ட்டா.இனிமே எங்கே பொறக்கக் போவுது’ என்று நினைத்து மனம் உடைந்துப் போனார்கள்.

வேலைக்குப் போகாத நாட்களில் மருது அவன் சகாக்களுடன் பணம் வைத்து சீட்டு விளை யாடிக் கொண்டு வந்தான்.சில நாட்களில் அவன் பணம் ஜெயிப்பான்,சில நாட்களில் அவன் தோற்று விடுவான்.செல்வியும் வேலை செய்து வந்த ராதா மருது பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த்து விட்டு செல்வியிடம் சொன்னாள்.வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் முத்தம்மா மருதுவைப் பார்த்து “ஏன்யா,நீ பணம் வச்சு சீட்டாடிக் கிட்டு இருக்கியா.வேணாய்யா.நீ அப்படி பணம் வச்சு சீட்டாடாதே.சில நாள் தான் நீ ஜெயிப்பே.நிறைய நாள் நீ தோத்து கிட்டு தான் இருப்பே. பணம் வச்சு ஆடாதே” என்று மிரட்டினாள்.உடனே அதற்கு மருது “போடி இவளே,சின்ன பசங்க தான் பணம் வக்காம சீட்டு ஆடுவாங்க.பொ¢யவங்க பணம் வச்சு தான் சீட்டாடுவாங்க.உனக்கு இதேப் பத்தி ஒன்னும் தொ¢யாது” என்று சொல்லி சிரித்தான்.

மூன்று வருஷம் ஓடி விட்டது.வாரத்தில் மூன்று நாட்களுக்கு வேலைக் கொடுத்த வந்த அந்த ‘பில்டிங்க் கன்ட்ராக்டர்’ மருதுவுக்கு வாரத்தில் ஒரு நாள் தான் வேலைக் கொடுத்து வந்தார்.

வேலை இல்லாத நாட்களில் மருது தன் கையிலே இருந்த பணத்தை வைத்து சீட்டாடி வந்தான்  சில நாட்கள் தான் அவன் ஜெயித்து வந்தான்.நிறைய நாட்களி அவன் தன் கையிலே இருந்த மொத்த பணத்தையும் தோற்று விட்டு வருத்தத்தோடு வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தான்.தான் பணம் தோற்றதை முத்தம்மாவிடம் சொல்லாமல் இருந்து வந்தான் மருது.

அன்று மருது தன் கையிலே இருந்த பணத்திலே சீட்டு ஆடினான்.அவன் தன் கையிலே இருந்த மொத்த பணத்தையும் தோற்று விட்டான்.அவனுக்கு ரொம்ப நெருங்கிய  ‘தோஸ்த்’ ஒருவனி டம் கடன் வாங்கி மறுபடியும் சீட்டாடினான்,மருது அந்தப் பணத்தையும் சீட்டாட்டதில் தோற்று விட்டான்.

மருதுவின்  ‘தோஸ்த்’ சீட்டாட்டம் முடிந்ததும் மருதுவைப் பார்த்து “மருது,நீ எல்லா பணத் தையும் தோத்துட்டே.நான் இன்னைக்கு நிறைய ஜெயிச்சு இருக்கேன்.வா நான் உனக்கு ஒரு ‘க்வார்ட்டர்’ வாங்கித் தாறேன்.நீ அதே அடிச்சியான்னா உனக்கு புது தெம்பு வரும் வா என்னோடு” என்று சொல்லி மருதுவை அழைத்துக் கொண்டு ‘டாஸ்மாக்’ கடைக்குப் போய் ரெண்டு பேரும் ஒரு ‘க்வார்ட்டர்’ வாங்கிக் குடித்தார்கள்.அந்த நண்பன் மறுபடியும் ஒரு ‘க்வார்ட்டர்’ வாங்கி தானும் குடித்து க் கொண்டு மருதுவுக்கும் கொடுத்தான்.

குடித்து முடிந்ததும் “வறேன் மருது,இப்போ எப்படி இருக்கு.உனக்கு புது தெம்பு வந்து இருக்குமே” என்று சொல்லி சிரித்து விட்டு வீட்டுக்குப் போனான்.அது வரை குடிக்காத இருந்த மருதுவுக்கு நண்பன் வாங்கிக் கொடுத்த ரெண்டு ‘க்வார்ட்டரை’க் குடித்ததும் தலையை சுற்ற ஆரம்பித்தது.மருது மெல்ல  மெல்ல தள்ளாடிவீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான்.தேவகி கதவைத் திறந்ததும் மருது குடி மயக்கத்தில் அவள் மேலேயே சாய்ந்து விட்டான்.மருது வாயிலே இருந்து குடி வாடை தேவகி வயிற்றைக் கலக்கியது.தேவகி  ‘மாமா குடிச்சி இருக்கார்’ என்று புரிந்துக் கொண்டாள்.

தேவகி மெல்ல மாமாவைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போய் ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு,பக்கத்து வீட்டு அம்மா குடித்து விட்டு வந்த புருஷன் மேலே திட்டிக் கொண்டே ஒரு வாளி தண்ணீரை தலையில் கொட்டுவது போல,அவளும் ஒரு வாளித் தண்ணீரை மாமா தலை மேலே கொட்டினாள்.ஒரு பத்து நிமிஷத்தில் மருது மெல்ல மெல்ல தன் நிலைக்கு வந்தான்.

மருது தேவகியைப் பார்த்து “தேவகி, நான் குடிச்சுட்டு வந்ததே முத்தம்மா கிட்டே மட்டும் சொல்லிடாதே”என்று கெஞ்சினான்.உடனே தேவகி மருதுவைப் பார்த்து “மாமா, நீங்க மறுபடியும் குடிக்கமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க.அப்போ தான் நான் அக்கா கிட்டே சொல்ல மாட்டேன்”என்று சொன்னதும் மருது உடனே “நான் நிச்சியமா குடிக்க மாட்டேன் தேவகி” என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் போனதும் மருது ”தேவகி எனக்கு ரொம்ப பசிக்குது” என்று சொன்னவுடன் தேவகி அவள் பண்ணி வைத்த சமையலில் தனக்கு வைத்துக் கொண்டு மீதி சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டு மாமாவுக்குக் கொடுத்தாள்.மருது தேவகி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அவள் வைத்து இருந்த ‘க்லாஸ்’ தண்ணீரைக் குடித்து விட்டு தட்டை தேய்க்கப் போட்டு விட்டு கட்டிலில் படுக்கப் போய் விட்டான்.தேவகி தான் எடுத்து வைத்து இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தட்டைத் தேய்க்கப் போட்டு விட்டு தான் படித்துக் கொண்டு இருந்த ‘ராணீ வார புஸ்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

மணி ஐந்து இருக்கும்.

மருது கட்டிலில் எழுத்து வந்தான்.’நமக்கோ இந்த ‘கன்ட்ராக்டர்’ கிட்டே வேலே இல்லேன்னு சொல்லிட்டார்.நாம நிறைய கடன்ங்க வேறே வாங்கி இருக்கோம்,நாம திருச்சிக்கு ஓடிப் போய் ஏதா ச்சும் வேலே தேடிக்கலாம்’ என்று நினைத்தான்.செல்வி பணம் வைக்கும் இடம் அவனுக்குத் தொ¢ந்து இருந்ததால் அங்கே இருந்த பணத்தை எல்லாம் எடுத்து தன் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டான்.’ரூமை’ விட்டு வெளியே வந்த மருது தேவகி படுத்துக் தூங்கிக் கொண்டு இருந்த ‘அழகை’ப் பார்த்தான்.அவனுக்கு ‘மிருக ஆசை’ தலைத் தூக்கியது.அவன் செயலில் இறங்கினான்.

மெல்ல போய் வாசல் கதவை ஓசைப் படுத்தாமல் சாற்றி தாழ் போட்டான்.கொடியில் இருந்த தேவகி தாவணி ஒன்றை எடுத்து தேவகி வாயைக் கட்டினான்.தேவகி எழுந்துக் கொண்டாலே ஓழிய அவளால் கத்தவே முடியவில்லை.மருது தேவகி கைகளையும் ஒன்றாகச் சேர்த்து பின்னாலே கட்டினா ன்.அவள் அப்படியே தூக்கிப் போய் கட்டிலில் போட்டு ‘ஆசை தீர’ அவளை அனுபவித்து விட்டு, அவள் உடம்பின் மேல் அவள் பாவாடையைப் போட்டு மூடி விட்டு வாசல் கதவைத் திறந்துக் கொண் டு போய் விட்டான்.

தேவகிக்கு அழுகை அழுகையாக வந்தது.அவளால் அவள் கையையோ வாயையோ அவிழ்க்க முடியவிலை.மிகவும் இறுக்கமாக கட்டி இருந்தான் மருது.அவள் விக்கி விக்கிக் கொண்டு இருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் முத்தம்மா வீட்டு வந்தாள்.’என்ன இந்த தேவகி.அவ வயசுக்கு வந்த பொண்ணு.சாயங்கால நேரத்லே வாசல் கதவே தொறந்து வச்சுக் கிட்டு என்ன பண்ணிக் கிட்டு இருக்கா’ என்று கத்திக் கொண்டே வீட்டுக்கு உள்ளே வந்தாள்.உள்ளே வந்து பார்த்த முத்தம்மாவுக்கு பாம்பைத் தீண்டியது போல இருந்தது.கைகளையும் வாயயையும் கட்டி இருந்ததால் தேவகி கட்டிலில் விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தாள்.

ஓடி வந்து அவள் கைகளையும் வாயையும் அவிழ்த்து விட்டு “என்னடி ஆச்சு.யாருடி உன்னே இப்படி பண்ணவன்,நீ எப்படிடீ சும்மா இருந்தே” என்று அடித் தொண்டையிலே கத்தினாள் செல்வி. அவள் உடம்பு அனலாய் கொதித்துக் கொண்டு இருந்தது.கையையும் வாயயயும் அவிழ்த்ததும் தேவகி வாய் விட்டு ’ஓ’ என்று அழுதுக் கொண்டே கழட்டிப் போட்டு இருந்த உள்ளாடைகளை எல்லாம் போட்டுக் கொண்டு பாவாடை தாவணியை உடம்பில் போட்டுக் கொண்டாள்.

”நீ அழுதது போதும்.யாருடி உன்னே இப்படிப் பண்ணவன்.நீ எப்படிடீ சும்மா இருந்தே” என்று மறுபடியும் கத்தவே தேவகி தன் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு “கத்தாதேக்கா.அக்கம் பக்கத்லே கேக்கப் போவுது” என்று சொல்லி விட்டு மருது வாசல் கதவைத் தட்டினதில் இருந்து நடந்த எல்லா சமாசாரத்தையும் சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.செல்விக்கு தூக்கி வாரிப் போட்டது.”அந்த தண்ட சோறா,உன்னே இப்படிப் பண்ணவன்” என்று சொல்லி விட்டு அவள் பணம் வைத்து இருந்த டப்பாவைப் பார்த்தாள்.

அந்த டப்பா காலியாக இருந்தது.”அடப் பாவி.நான் வச்சு இருந்த பணத்தை எல்லாம் எடுத்து கிட்டு,என் தங்கையையும் ‘கெடுத்துட்டு’ப் போய் இருக்கியே.நீ வீட்டுக்கு வா.உன்னே கண்டம் துண்டமா வெட்டிட்டு,நான் ஜெயிலுக்குப் போறேன்”என்று கத்தினாள் முத்தம்மா.தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு அழுக்காக இருந்த புடவையை மாறிக் கொண்டாள்.

அவளுக்கு பசி வரவே செல்வி எழுந்து சமைக்க ஆரம்பித்தாள்.சமைத்து முடிந்ததும் தேவகியை க் கூப்பீட்டு “நீ அழுதது போதும்.எழுந்திரி.இனிமே என்ன இருக்கு நீ அழறதுக்கு.அதான் எல்லாம் முடிஞ்சுப் போச்சே.வா சாப்பிட வந்து குந்து.சாப்பிடலாம் எனக்கு ரொம்ப பசிக்குது” என்று சொல்லி தேவகியை எழுப்பி இருவருக்கும் தட்டைப் போட்டு அவள் செய்து இருந்த சாப்பாட்டைப் போட்டாள்

சாப்பிட்டுக் கொண்டே முத்தம்மா ‘நம்ம புருஷனே இப்படிப் பண்ணி இருக்கானே.அவனுக்கு ஏன் இப்படி புத்தி மழுங்கிப் போச்சு.அவனே சீட்டு ஆடாதேன்னு படிச்சு படிச்சு சொன்னேனே.என் பேச்சே கேக்காம ஆடி இருக்கான்.தோத்து இருக்கான்.ஜெயிச்சவன் இவருக்கு ‘தண்ணி ‘வாங்கிக் குடுத்து இருப்பான்.இவனும் குடிச்சிட்டு வந்து தேவகியே ‘கெடுத்துட்டு’ நான் சேத்து வச்சு இருந்த பணத்தை எல்லாம் எடுத்து கிட்டு வீட்டே விட்டு ஓடிப் போய் இருக்கான்’ என்று எண்ணம் இட்டாள்.

மணியைப் பார்த்தாள் முத்தம்மா.அது ஒன்பதரை காட்டியது.

சாப்பிட்டு முடிந்ததும் “இதோ பார் தேவகி.அந்த ‘தண்ட சோறு’ இனிமே இந்த வூட்டுக்கு வர மாட்டான்.நான் சேத்து வச்சு இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கிட்டு இருக்கான்.அந்த ‘கழுதே’ ஊரை விட்டு ஓடிப் போய் இருக்கான்.நீ சாமியே நல்லா வேண்டிக் கிட்டு வா.உனக்கு ரெண்டு மாசம் போனா உன் உடம்பு ‘நார்மலா’ இருந்திச்சின்னா,நான் என் மேஸ்திரி கிட்டே கொஞ்சம் கடன் வாங்கி உனக்கு ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் கட்டிக் குடுக்கறேன்.நீயும் இன்னிக்கு ‘நடந்ததை’ ஒரு ‘கெட்ட கனவா’ நினைச்சி மறந்துட்டு வர பழகு” என்று தேவகியை தன் மடியிலே போட்டுக் கொண்டு அழுதுக் கொண்டே சொன்னாள் முத்தம்மா.

அக்கா சொன்னதை நன்றாக யோஜனைப் பண்ணினாள் தேவகி.அவளும் ‘இனிமே நாம நடந்துப் போனதே நினைச்சி அழுது கிட்டு இருக்கிறதிலே ஒரு பிரயோஜனும் இல்லே.  அக்கா சொல்றதே போல செஞ்சி வரலாம்’ என்று முடிவு பண்ணீ “சா¢க்கா.நான் தினமும் குளிச்சிட்டு சாமியே வேண்டிக் கிட்டு வறேன்” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.அக்கா இடம் சொன்னது போல தேவகி தினமும் குளித்து விட்டு சாமியயை வேண்டிக் கொண்டு வந்தாள்.

முத்தம்மா தேவகியை அடிக்கடி அவ ‘உடம்பை’ப் பத்தி கேட்டு வந்தாள்.ரெண்டு மாசம் போனதும் தேவகிக்கு தன் உடம்பில் ஒரு மாற்றம் தொ¢ந்தது.’ஏன் இப்படி இருக்கு’ என்று யோஜனை ப் பண்ணீனாள் தேவகி.’நாம அவசரப் பட்டு அக்கா  கிட்டே இப்ப ஒன்னும் சொல்ல வேணாம்’ என்று நினைத்து ஒன்றும் சொல்லாமல் இருந்து வந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.முத்தம்மா ‘இன்னேக்கு நாம வேலைக்கு போக வேணாமே’ என்று நினைத்து படுத்துக் கொண்டு இருந்தாள்.தேவகி எழுந்து பல்லைத் தேய்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு வாந்தி வருவது போல இருந்தது.அவள் மெல்ல வாந்தி எடுத்தாள்.அந்த வாந்தி அவளு க்கு இன்னும் வரவே அவள் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.தேவகி வாந்தி எடுக்கும் சத்தம் கேடகவே செல்வி விழுந்து அடித்துக் கொண்டு எழுந்து வந்துப் பார்த்தாள் முத்தம்மா.

தேவகி இன்னும் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.

தேவகி வாந்தி எடுத்து முடிந்ததும் அவளை மெல்ல பிடித்துக் கொண்டு ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு தேவகியை அவள் ‘உடம்பை’ப்  பற்றிக் கேட்டாள் முத்தம்மா.

உடனே தேவகி “ஆமாம்க்கா,ரெண்டு மாசமா என் உடம்பு கொஞ்சம் வித்தியாசமாத் தான் இருக்கு” என்று சொல்லி அழுதாள்.முத்தம்மாவுக்கு தேவகி சொன்னது நன்றாக புரிந்து விட்டது. உடனே அவள் பல்லைத் தேய்த்துக் கொண்டு,வீட்டை பூட்டிக் கொண்டு பக்கத்தில் இருந்த நாயர் ‘டீ’க் கடைக்குப் போய் ஆளுக்கு ரெண்டு ‘பன்’ வாங்கி சாப்பிட்டு விட்டு டீயைக் குடித்தார்கள்.

முத்தம்மா தேவகியை அழைத்துக் கொண்டு அவளுக்கு தொ¢ந்த ஒரு ‘க்ளினிக்’குக்குப் போய் தேவகியைக் காட்டினாள்.அந்த லேடி டாக்டர் தேவகியை நன்றாக ‘செக் அப்’ பண்ணி விட்டு “இவங்க முழுகாம இருக்காங்க”என்று சொன்னதும் முத்தம்மாவுக்கும் தேவகிக்கும் தூக்கி வாரிப் போட்டது. டாகடருக்கு ‘·பீஸை’க் கொடுத்து விட்டு முத்தம்மா தேவகியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.முத்தம்மாவுக்கு கோவம் கோவமாக வந்தது.அதை அடக்கிக் கொண்டு இருந்தாள்.

கொஞ்சம் நேரம் ஆனதும் “தேவகி,உனக்கு ‘இப்படி’ ஆயிடுச்சே.அந்த கழுதே உன்னே இப்படி பணறதுக்கு நீ அவனே தடுத்து இருக்க கூடாதா.கல்யாணம் ஆவாத நான் உன்னே வச்சுக் கிட்டு எப்படி இந்த பிள்ளயே பெத்துக்கறது.இன்னும் ரெண்டு மாசம் போனா உனக்கு வயிறு தொ¢ய ஆரம்பி ச்சுடுமே.அக்கம் பக்கத்லே இருக்கிறவங்கக் கேட்டா என்ன பதில் நான் சொல்றது.எனக்கு தலையே சுத்துது” என்று கத்தினாள் செல்வி.

தேவகி வெறுமனே அழுதுக் கிட்டு இருந்தாளே பதில் ஒன்னும் சொல்லலே.செல்வி விடாமல் “நான் உன்னே இத்தனைக் கேக்கறேன்,நீ பேசாம குந்தி கிட்டு அழுதுக் கிட்டு இருக்கே.இப்ப நான் ஒத்தி தானே சம்பாதிக்கப் போறேன்.அந்த கழுதே நான் சேத்து வச்சு இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கிட்டு ஓடிட்டான்.என் சித்தாள் சம்பளமே நம்ம ரெண்டு பேருக்கும் கைக்கும் வாய்க்கும் தானே இருக்கும்.உன் பிரசவ செலவு வேறே எனக்கு இப்ப சேந்து இருக்கே” என்று மறுபடியும் கத்தினாள்.

“அக்கா எனக்கு உன் கஷ்டம் நல்லப் புரிது.நான் படுத்து தூங்கிக் கிட்டு இருந்தேன்.மாமா திடீர்ன்னு,என் வாயயையும் கட்டிட்டு,என் ரெண்டு கையையும் சேத்து இறுக்கமா கட்டிட்டார்.என் னால் கத்தவே முடியலே.நான் அவர் பிடியிலே இருந்து திமிறி வெளியே ஓடலாம்ன்னு பாத்தேன். மாமா வாசல் கதவை நல்லா சாத்தி தாழ் போட்டு இருந்தார்.அதுக்குள்ள்ளாற அவர் என்னை தூக்கிக் கிட்டு கட்டிலுக்கு….” என்று சொல்லும் போது தேவகி அழ ஆரம்பித்தாள்.

முத்தம்மா தேவகி சொன்னததைக் கேட்டு கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

முத்தம்மா தேவகியைப் பார்த்து “அழுவாதே,இந்த மாதிரி செஞ்சா எந்தப் பொண்ணாலேயும் ஒன்னும் செய்ய முடியாது தான்.எனக்குப் புரிது.மாமா வீட்லே இருக்கும் போது நீ தூங்காம இருந்து இருக்கலாம்.சா¢,நடந்தது நடந்துப் போச்சு.இனிமே என்ன செய்யறதுன்னு நாம யோசிக்கணும்” என்று சொல்லி சமையல் செய்யப் போனாள்.தேவகி தன் அழுகையை அடக்கிக் கொண்டு அக்காவுக்கு கூட மாட உதவி பண்ண சமையல் ரூமுக்குப் போனாள்.

சமையல் ஆனதும் இருவரும் சாப்பீட்டார்கள்.இருவரும் படுத்துக் கொண்டார்கள்.முத்தம்மா தூங்கினாளே ஒழிய தேவகி வெறுமனே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

முத்தம்மா கொஞ்ச நேரம் துங்கி எழுத்ததும் தேவகியைப் பார்த்து “தேவகி,நாம இந்த குழந்தே நிச்சியமா பெத்துக்க முடியாது.மறுபடியும் சாயங்காலமா அந்த லேடி டாக்டர் கிட்டே எப்படியாவது கெஞ்சி உன் வயித்லே ‘இருக்கிறதே’ கரைச்சுடச் சொல்லலாமா….என்று சொல்லி முடிக்கவில்லை, தேவகி எழுந்து உட்கார்ந்துக் கொண்டு “அக்கா,அக்கா நீங்க சொல்றது ரொம்ப நல்ல ஐடியா.அப்படி பண்ணிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.அதே கொஞ்சம் உடனே பண்ணுங்கக்கா. எனக்கும் உங்க கிட்டே இந்த ஐடியாவே சொல்லலாம்ன்னு தான் இருந்தேன்” என்று செல்வியின் கைககளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

சாயங்காலம் நாலு மணிக்கு முத்தம்மாவும் தேவகியும் உடைகளை மாற்றிக் கொண்டு அந்த ‘க்ளினிக்’குக்கு போனார்கள்.டாகடர் இன்னும் வர வில்லை.நாலு பிள்ளை தாய்ச்சி பெண்கள் உட்கார்ந்துக் கொண்டு இருந்தர்கள்.ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த லேடி டாக்டர் தன் காரில் வந்து இறங்கி அந்த ‘க்ளினிக்’ குள் போனாள்.காத்துக் கொண்டு இருந்த பெண்கள் போய் விட்டு வெளியே வந்த பிறகு முத்தம்மா தேவகியை  அழைத்துக் கொண்டு டாக்டா¢டம் போனாள்.

செல்வி ¨தா¢யத்தை வரழைத்துக் கொண்டு “டாக்டர்,இவ என் தங்கை.இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே.நான் ஒரு சித்தாளா வேலே செஞ்சுக் கிட்டு வறேன்.நான் வீட்லே இல்லாத போது,வேலே இல்லாத என் வீட்டுக்காரர்,இவளே பலாத்காரம் பண்ணீ….” என்று சொல்லும் போது அழுது விட்டாள்.முத்தம்மா சொன்னதை டாக்டர் கேட்டுக் கொண்டு இருந்தார்.ஒரு நிமிஷம் ஆன வுடனே முத்தம்மா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “டாக்டர்,இவ இந்த குழந்தேயே பெத்துக்க முடியாது.நீங்க தயவு செஞ்சி கொஞ்சம் பொ¢ய மனசு பண்ணீ இவ கர்ப்பத்தை கலைக்க முடியுமா” என்று கெஞ்சினாள்.

தேவகி கண்களில் இருந்தும் கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த டாக்டர் ”அம்மா, உங்க கஷ்டம் எனக்கு நல்லா புரிது.நான் ஒரு MBBS படிச்ச டாக்டர்.வயித்லே இருக்கிற குழந்தையைக் கலைக்கணும்ன்னா சட்டப் படி புருஷனும் பெண்ஜாதியும் ஒன்னா வந்து ஒரு ·பாரத்லே ‘எங்களுக்கு இந்த குழந்தயே கலைக்க ணும்’ எழுதி கை எழுத்து போட்டு குடுக்கணும். அப்படி பண்ணா தான் குழந்தயே கலைக்க முடியும். உங்க ‘கேஸ்’லே அது முடியாத காரியம்.என்னால் இந்த குழந்தயே கலைக்க முடியாது.அதுக்கு மீற நான் இந்த பொண்ணோட கர்ப்பத்தை கலைச்சா,அது போலீஸ் ‘கேஸா’ ஆயிடும்.ரொம்ப சாரி.நீங்க ரெண்டு பேரும் போவலாம்” என்று சொல்லி விட்டு ‘நர்ஸை’க் கூப்ப்ட்டு அடுத்த ‘பேஷண்டை’ அனுப்பச் சொன்னாள்.

முத்தம்மா தேவகியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.டாகடர் சொன்னதை கேட்ட இருவரும் ‘இந்த டாகடர் குழந்தயே கலைக்க முடியாது ‘ரொம்ப சாரி’ன்னு சொல்லிட்டாரே’ என்று நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டே,வரும் வழியிலே ஒரு ‘ஹோட்டலு’க்குள் போய் எட்டு இட்லி ‘பார்ஸல்’ பண்ணி வாங்கிக் கொண்டு வந்தாள் முத்தம்மா.இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மணி ஏழடித்ததும் முத்தம்மாவும் தேவகியும் ஆளுக்கு நாலு இட்லியை சாப்பிட்டார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் படுத்துக் கொண்டே முத்தம்மா “தேவகி,இனிமே நாம ஒன்னும் பண்ண முடியாது.இந்த குழந்தயே பெத்துக் கிட்டு ஆவணும்.ஆனா உன்னே நான் இங்கே வச்சுக் கிட்டு அதே பண்ண முடியாது.எனக்கு வரும் சம்பளம் ரொம்ப கம்மி.அதிலே உன் பிரசவ செலவு பணறது ரொம்ப கஷ்டம்.நாம ஒன்னு செய்யலாமா.இன்னிக்கு லேட்டாயிடுச்சி.நான் உன்னே இட்டுக் கிட்டு என் மாமனார் மாமியார் இருக்கற கிராமத்துக்குப் போய் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டு,அவங்களே கொஞ்சம் உன்னே வச்சு கிட்டு பிரசவம் பாத்து குழந்தைப் பொறந்ததும்,உன்னை யும் குழந்தையையும் இங்கே கொண்டு விடச் சொல்றேன்.அவங்க இந்த உதவியே பண்ணாங்கன்னா,  அப்புறமா நானும்,நீயும்,குழந்தையும் வேறே ஊருக்குப் போய் ஏதாச்சும் வேலை செஞ்சு பிழைச்சிக்க லாம்.நீ என்ன சொல்றே தேவகி.உனக்கு வேறே ஏதாச்சும் ஐடியா தோணுதா.சொல்லு.அதே நாம பண்ணலாம்” என்று கேட்டாள்.

தேவகி யோஜனைப் பண்ணினாள்.

அவள் அக்கா சொன்னது சா¢ என்று படவில்லை அவளுக்கு.கொஞ்ச நேரம் எப்படி சொல்வது என்று யோஜனைப் பண்ணி விட்டு,பிறகு ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன அக்கா, எனக்கு ‘இப்படி’ ஆனப் பிற்பாடு எப்படிக்கா நான் உன்னே விட்டுட்டு,அவங்க வீட்லே அத்தனை மாசம் தனியா இருந்து வறது.அவங்க தான் உனக்கு மாமனார் மாமியார்.எனக்கு அவங்க மாமானர் மாமியார் இல்லையே.அவங்க என்னே அவங்க கூட வச்சுக் கிட்டு,இந்த உதவியே பண்ணுவாங்களா எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு.அவங்க எதுக்கு எனக்கு வீண் செலவு பண்ணணும்.அவங்க பண்ணுவாங்கனு எனக்குத் தோணலே” என்று சொன்னாள் தேவகி.

முத்தம்மா தேவகி சொன்னதை கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு” எனக்குப் புரிது உன் கஷ்டம் தேவகி.நான் உன்னே இன்னும் ரெண்டு மாசம் போன இங்கே வச்சிக் கிட்டு இருக்க முடியாதே தேவகி.உன்னே இப்படி பண்ணவன் அவங்க பெத்த ‘அயோக்கிய’ப் பையன் தானே. அவங்க தான் இந்த உதவியே நமக்கு பண்ணியே ஆவணும்.எனக்கு அவங்களேப் பாத்து கேக்க எல்லா உரிமையும் இருக்கு.நான் அவங்க மருமக.அவங்க எனக்கு இந்த உதவியே பண்ண முடியாது ன்னு சொல்ல முடியாது தேவகி.அவங்க இந்த உதவியே எனக்குப் பண்ணீயே ஆகணும்” என்று அடித்து சொன்னாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *