கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 38,358 
 

‘யெய்யா….அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு …புழச்சு வந்தியே “என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது .

“அப்பத்தா ,சும்மா புலம்பாதே ,,பாவம் அன்பு அவனே மனசொடிஞ்சு வந்திருக்கான் ..அவனை இன்னும் கஷ்டப்படுத்தணுமா .ஆறுதலா பேசுவியா ,புலம்பிகிட்டு “அதட்டினான் அன்புவின் நண்பன் அசோக்

கிராமத்து நிலத்தை ,விற்று வெளிநாடுபோய் சம்பாதிக்க போன அன்பு அங்கு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்து மறு காலும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாய் நாடு வந்துவிட்டான். எண்ணற்ற கனவுகளை சுமந்து சென்றவன் இன்று கால்களே இல்லாமல் வந்து நின்றால்…. பெற்றவர்களை மட்டுமா ,நண்பர்களையும் கதி கலங்க செய்து விட்டான் இறைவன்

அசோக்கை கட்டிக்கொண்டு அழுதான் அன்பு “டேய்,அன்பு …உனக்கு நான் இருக்கேண்டா, கவலையை விடு இந்த விஞ்ஞான உலகத்திலே மனிதனையே பார்ட் ,பார்ட்டாகொத்து அதிசயம் பண்ண வைக்கிறாங்க , நீ என்னடான்னா கால் போனதுக்கு அழறே ..”

“அன்பு ,,அசோக் சொல்றது நிசம்தாம்ல ,என்ன செலவானாலும் உனக்கு வைத்தியம் பண்ணி நடக்க வைக்க மாட்டோமா கவலையை விடுயா “பெற்றவர்களும் சமாதானப்படுத்த -அன்பு ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தான்

அசோக் தன் நண்பனுக்காக அவன் அருகிலேயே இருந்து அவனை கண்ணின் இமை போல காத்தான் .அசோக்கின் இணையற்ற அன்பால் அன்புக்கு மனசு லேசானது காலில்லா குறை கூட தெரியவில்லை

“ஏம்புள்ள இந்த அசோக் தம்பியைபற்றி நீஎன்ன நினைக்கிறே”என்று கேட்டார் நாகராஜ், அன்புவின் தந்தை .

“சும்மாச்சொல்லப்படாதுங்க கூடப்பிறந்தவன்கூடஇப்படி ய்ய மாட்டாங்க ,அந்த புள்ளை நம்ம புள்ளை மேல எம்புட்டு பாசம் வைச்சிருக்குத்தெரியுமா?இது கூட கடவுள் கொடுத்தவரம்க ”

“நீ சொல்றது நிசம்தான் புள்ளே சரி வருகிற எட்டாம் தேதி இன்னொரு காலை எடுக்கணும்ன்னுடாக்டர் சொல்லிட்டாரே ,அன்பு கலங்கிட்டான்புள்ளே .அசோக்கை நீ கவனமா பார்துகிட்டாதான் அந்தபுள்ளே நம்ம புள்ளையைகலங்காம பார்த்துப்பான் ,அந்த புள்ளைக்கு ஒரு குறையும் வைக்காதே புரியுதா ?’

“புரியுதுங்க ”

ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள் அன்புவை இரண்டு ,மூன்று நாள் அப்சர்வேஷன் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஆபரேஷன் என்று கூறி விட்டார் டாக்டர் இந்த இரண்டு மூன்று நாட்களும் அன்புவின் பெற்றோர்களை வீட்டிளிருக்க்ச்சொல்லிவிட்டு அசோக்கே ஆஸ்பத்திரியில் அந்தந்த இந்தண்ட நகராமல் கிட்டவே இருந்து பார்த்துக்கொண்டான் .ஆகாரம் கொடுப்பதிலிருந்து பாத்ரூம் போக உதவுவது வரை பொறுமையாக செய்தான் ஆஸ்பத்திரியே அவன் சேவையை பார்த்து அதிசயித்தது

“சார் நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவர் இல்லேன்னா இப்படியொரு நண்பர் கிடைப்பாரா? உங்களுக்கு நாங்க செய்யரதைவிட உங்க நண்பர் அதிகமா ,அக்கறையா செய்கிறார் “என்று நர்ஸ் லீலா

பாராட்டு மழை பொழிந்தாள்அன்புவிடம் அன்புவும் நெகிழ்ந்து போனான் அடுத்த கட்டமாக எல்லா டெஸ்டும்ஓகே ஆனதால் ஆப்பரேஷனுக்கு ரெடியானார் டாக்டர்

“அன்பு மனசை ரிலாக்ஸா வைச்சுக்க கடவுள் காப்பாற்றுவார் ஆபரேஷன் நல்லபடியா முடியும் ,நான் இந்த தியேட்டர் வாசலிலேதான் நிற்பேன் ,டோன்ட் ஒர்ரி “என்று தைரியப்படுத்தினான் அசோக்

“நீ இருக்க எனக்கு என்னடா கவலை?சரி இந்தா இதிலே அம்பதினாயிரம் இருக்கு இதை வைச்சுக்க ஆஸ்பிடல் செலவுக்கு ,ஆபரேஷனுக்காக இருபத்தையாயிரம் கட்டிடு மீதியை வைச்சுக்க பத்திரமா அம்மாவையும் ,அப்பாவையும் , தைரியமா இருக்கசொல்லு .

“அதையெல்லாம் பற்றி நீ கவலைப்படாதே ,,நான் பார்த்துக்கிறேன் “என்று கூறி ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்தான் அசோக்.

“சார் நீங்கதானே அசோக் ,முன்னாடி பணத்தை கட்டிடுங்க ஆபரேஷனுக்கு ,டாக்டர் வந்துடுவார் “நர்ஸ் ஒருத்தி சொல்லிச்சென்றாள்

‘காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடலே ,ஒரு காபி சாப்பிட்டுட்டு வந்துடறேன் ,பணம் இதோ ரெடியா இருக்கு , டாக்டர் கேட்டா கட்டிட்டேன்னு சொல்ங்க இதோ இரண்டு நிமிஷத்திலே வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு காண்டீனுக்குப்போனான் அசோக்

டாக்டர் நர்சை விசாரிக்க ,பணம் கட்டப்பட்டதாகச்சொல்ல,டாக்டர் அவசரமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார்

மயக்கமருந்து கொடுக்கப்பட்டு ஆபரேஷன் தொடங்கியது சும்மார் ஒரு மணி நேரத்திற்கு பின்னால் டாக்டர் களைப்போடு வெளியே வர -அன்புவின் பெற்றோர்கள் படபடப்பாககேட்டார்கள்

“டாக்டர் என்புள்ளே ….”

“ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சுது ,நல்லாயிருக்கார் மயக்கம் தெளிஞ்சதும் பொய் பாருங்க”, டாக்டர் சொல்லிவிட்டு புறப்பட்டார்

காபினுக்கு ல் நுழைந்த டாக்டர் “என்னப்பா முருகன் பீஸ் கட்டியதிற்கு பில் கொடுத்திட்டில்லேபெட்டிலே ஏன் ஏத்தலே?”

“சார் யாரும் பணம் கட்டலே சார் ….எப்படி சார் ஆபரேஷன் …”

“என்னய்யா சொல்றே? குண்டக்க மண்டக்க பேசாம நல்லாப்பாருயா ,இந்தாம்மா வசந்தி, பீஸ் கட்டிட்டதா சொன்னது யாரு ?”டாக்டர் கோபமாககேட்டார்.

“சார் லீலாதான் சார் டுட்டியில் இருந்தாள்”

“லீலாவை கூப்பிடு நான்சென்ஸ் ”

ஆஸ்பத்திரியே சிறிது நேரத்தில் அலங்கமலங்கலானது .டாக்டர்களும், நர்சுகளும் பரபரப்பானார்கள்

அசோக்கை தேடினர் அன்புவின் பெற்றோர் அவன் அகப்படவில்லை எரிமலை ஆயினர் பெற்றோர்கள் .நர்ஸ் கூட்டம் லீலாவைத்தேடியது அவளும் அகப்படவில்லை ,இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்குப்போட்டனர் மற்றவர்கள் நிலைமையை உணர்ந்த அன்பு

“டாக்டர் டோன்ட் ஒர்ரி உங்க பீசை நான் கட்டிடச்சொல்றேன் நீங்க கவலைப்படவேண்டாம்” என்றான்.

“என்னாசார் உங்க பிரண்டு ன்னு சொன்னீங்க அவனும் நல்லவன் போல் நடிச்சுட்டு இப்படி குண்டக்க மண்டக்க பண்ணிட்டு போயிட்டானே பணத்தை நீங்க கொடுத்திட போறீங்க அதுக்காக நான் வருத்தப்படலே நல்ல வேலை தெரிந்த நர்ஸ் லீலாவையும்ல கிளப்பிட்டு போயிட்டானேசார்

“விடுங்க சார் அவன் செய்த உதவிக்கு என் பணம் பெரிதில்லை கேட்டால் கொடுத்திருப்பேன், பைத்தியக்காரன் ,நால்லா இருக்கட்டும் போங்க”, விரக்தியோடு சொன்னான் அன்பு
நல்ல நண்பேண்டா ….

– 21-5-2006

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)