அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15
ஆறுமுகத்தைக் கூப்பிட்டு நகைப் பெட்டியை தன் ரூமில் வைக்க சொன்னான்.உடனே ஆறு முகம் ரமேஷிடம் இருந்து அந்த நகைப் பெட்டியை அவன் ரூமில் வைத்து விட்டு,அவன் வேலையை கவனிக்கப் போனான்.ஆறுமுகம் அவன் ரூமைத் திறந்த போது,அந்த ரூமில் அவன் செய்த ‘மிருக தனமான’ செயல் அவன் ஞாபகத்துக்கு வந்தது.ரமேஷ் வெட்கப் பட்டான். மனம் வருந்தினான். ’இனி மே அந்த ரூமுக்கே நாம போக கூடாது.நாம சுரேஷ் இருந்த ரூமிலே தான் இனிமே இருந்துண்டு வரணும்’என்று தீர்மானித்தான்.பிறகு தன் துணிகளை எல்லாம் கழட்டி விட்டு குளித்து விட்டு வந் தான்.துணிகளை எல்லாம் மாற்றிக் கொண்டு ‘வீல் சோ¢ல்’ சுவாமி ரூமுக்குப் போனான்.நெத்தியிலே பட்டையாக விபூதியை இட்டுக் கொண்டான் ரமேஷ்.சுரேஷ் படித்து வந்த ஒரு சுவாமி மந்திர புஸ்தக த்தை எடுத்து சுவாமி மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.அந்த புஸ்தகம் முடிந்ததும் எழுந்து ‘பாவமா’ ஒரு நமஸ்காரம் பண்ணினான்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் ‘மானேஜிங்க் டைரக்டரை போனில் கூப்பிட்டு பார்த்து ”சார்,எங்க குடும்பத்லே நாங்க யாரும் இல்லாட்டாலும் ரெண்டு ‘பாக்டரிகளையும்’ இவ்வளவு நன்னா பார்த்துண்டு வந்ததுக்கு உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்’” என்று சொல்லி தன் நன்றியை தெரிவித்தான்.பதிலுக்கு அவர் ரமேஷ் உடம்பைப் பத்தி விசாரித்தார்.
ரமேஷ் உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்ததைக் கேள்விப்பட்டு,அவன் நண்பர்களும்,வரதனும், அவனை வந்துப் பார்த்துப் பேச வந்தார்கள் ரமேஷ் அவர்களிடம் பட்டும் படாமலும் பேசி வந்தான். அவர்கள் எல்லோரும் அவனது வலது கால் ‘ஆம்புடேட்’ பண்ணதை கேட்டு வருத்தம் தெரிவித்தார்கள். எல்லோரும் அவனைப் பார்த்து “ரரேஷ்,நீ சீக்கிரமா குணம் ஆகி ‘ஆர்டிபிஷியல் லெக்’ வச்சுண்டு வந்து பழையபடி ஜாலியாக இருக்கணும்”என்று சொல்லி வாழ்த்தினார்கள்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு அவர்கள் ரமேஷிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பிப் போனார்கள்.’இனிமே நாம,வரதனைத் தவிர மத்த நண்பர்கள் கிட்டே இருந்து,விலகி இருந்துண்டு வந்து,அப்புறமா அவா சகவாசமே இல்லாம வாழ்ந்து வரணும்’ என்று எண்ணினான் அவன்.
ரெண்டு நாள் ஆனதும் வீல் சேருடன் சுவாமி ரூமில் இருந்து வெளியே வந்த ரமேஷ் தன் ‘மேனேஜிங்க் டைரக்டருக்கு’ப் போன் பண்ணினான்.அவர் போனில் வந்ததும் ரமேஷ் அவரிடம் “சார்,நீங்க எனக்கு ஒரு ‘ஹெல்ப்’ பண்ணணும் சார்”என்று சொல்லிக் கேட்டான்.அவர் உடனே “சொ ல்லுங்கோ சார்.என்ன ‘ஹெல்ப்’ உங்களுக்கு வேணும்” என்று கேட்டதும் ரமேஷ் “சார்,நான் ரெண்டு நாளா இந்த ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுண்டு இருக்கேன்.எனக்கு இந்த ஹோட்டல் சாப்பாடே பிடிக்கலே. ரொம்ப ‘ஸ்பைஸியா’ வேறெ இருக்கு.’ஹெல்தி’ யாவும் இல்லேஅதனால்லெ நீங்க எனக்கு உடனே இந்த ‘கேடரிங்க் ஏஜென்ட்ஸ்’ கிட்டே பேசி,ஒரு ஆண் சமையல் காரரை‘ அரேஞ்ச்’ பண்ண முடியுமா” என்று கேட்டான்.அவர் உடனே “நான் இப்பவே போன் பண்ணி உங்களுக்கு ஒரு ஆண் சமையல் காரரை ‘அரேஞ்ச்’ பண்றேன் சார்”என்று சொன்னார்.ரமேஷ் “ரொம்ப தாங்க்ஸ் சார்”என்று சொல்லி தன் போனை ‘ஆப்’ பண்ணினான்.சொன்னபடி அந்த மேனேஜிங்க் டைரக்டர் ரமேஷ்க்கு ஒரு நாப்பது வயசு நிறைந்த ஒரு நல்ல சமையல்காரரை ஏற்பாடு பண்ணினார்.அந்த சமையல் காரரிடம் ரமேஷ் தனக்கு காத்தாலே ‘டிபனில்’ இருந்து இரவு சாப்பாடு வரைக்கும் அவன் அம்மா அந்த நாள் போட்டு குடுத்த ‘மெனு’ மாதிரி ஒரு மெனு போட்டுக் கொடுத்தான்.அந்த சமையல் காரரும் அந்த ‘மெனு’ படி எல்லா சமையலையும் பண்ணி வந்தார்.
ரமேஷ் அவர் செய்து வந்த சமையலை ரசித்து சாப்பிட்டு வந்தான்.ரமேஷ் ஆத்துக்குள்ளே ‘வீல் சோ¢ல்’ இங்கும் அங்கும் போய் வந்துக் கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் ஆனதும் அவன் TVயை ஆன் பண்ணி அவனுக்கு பிடிச்ச ‘தேண் கிண்ணம்’ ’ப்ரோகி ¢ராமை’ பார்க்க ஆரம்பித்தான்.ஒலி பரப்பு ஆன பிறகு அடுத்த பாட்டு வந்தது.
‘ஆடிய ஆட்டம் என்ன.
தேடிய செல்வம் என்ன,
அதற்கு மேலே அவனுக்கு அந்த பாட்டை கேட்க பிடிக்கவில்லை.அவன் TVயை அணைத்து விட் டான்.’நாம எவ்வளவு ஆட்டம் போட்டோம்.எவ்வளவு செல்வம் சேர்த்து இருக்கோம்.ஆனா இப்போ ஒரு நொண்டியா இருந்து வறோமே’ என்று நினைக்கும் போது அவனையும் மீறி அவனுக்கு அழுகை வந்தது.கொஞ்ச நேரம் அழுதான்.பிறகு அந்த துக்கத்தை மறக்க எதிரே இருந்த ‘தெய்வத்தின் குரல்’ புஸ்தகத்தை படிக்க ஆரம்பித்தான்.சாயங்காலத்தில் ஆறுமுகம் ரமேஷை ‘வீல் சேருடன்’ தோட்ட த்தை சுத்தி வந்தான்.அவனுக்கு அங்கு இருந்த ரோஜா செடிகளை பார்க்கும் போது,அவன் போட்ட ‘ப்லான்’ ஞாபகத்துக்கு வந்தது.வெட்கட்பட்டான்.மனம் வருந்தினான்.மனதுக்குள்ளே அழுதான்.
ரெண்டு வாரம் ஆனதும் ”சார் நான் டாக்டர் பேசறேன் சார்.நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்து போக முடியுமா.உங்களுக்கு ‘ஆர்டிபிஷியல் லெக்’ பண்ண ஆர்டர் எடுக்கிற ஆள் வந்து இருக்கார்” என்று டாக்டர் ‘போன்’ பண்ணினார்.உடனே ரமேஷ் “ரொம்ப தாங்க்ஸ் சார்.நான் இன்னும் அரை மணி நேரத் லே அங்கே வந்து விடறேன்” என்று சொல்லி போனை ‘ஆப்’ பண்ணினான்.ரமேஷ் ‘வீல் சேருடன்’ ஹஸ்பிலுக்கு வந்து காத்துக் கொண்டு இருந்தான்.பத்து நிமிஷம் ஆனதும், ’ஆர்டிபி ஷியல் லெக்’ அளவு எடுக்கும் ’பர்சன்’ வந்து ரமேஷ் வலது கால் அளவு எடுத்தார்.கொஞ்ச நேரம் கழித்து “சார், இன்னும் ‘டென் டேஸ்லே’ நான் உங்க ‘ஆர்டிபிஷியல் லெக்கை’ நாங்க ‘டெலிவரி’ பண்ணி விடறே ன்.அப்புறமா இந்த ஹாஸ்பிடல்லே இருக்கும் ஒரு ‘பிஸியோ தெராபிஸ்ட்’ வந்து இந்த ‘ஆர்டிபிஷி யல் லெக்கை’ உங்களுக்கு ‘பிக்ஸ்’ பண்ணி,உங்களுக்கு நடக்க கத்துக் குடுப்பார்.நீங்க அந்த மாதிரி ஒரு நாலு நாள் அந்த ‘பிஸியோ தெராபிஸ்ட்’ கிட்டே நடந்து வந்தா பழகி வாங்க.அப்புறமா நீங் களே யார் ‘ஹெல்ப்பும்’ இல்லாம நீங்க நன்னா நடந்து வரலாம் சார்” என்று சொன்னார்.ரமேஷ் அவரு க்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு டாக்டரையும் பார்த்து ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு காரில் ஏறி தன் பங்க ளாவுக்கு வந்தான்.
பத்து நாள் கழித்து ரமேஷ் ‘ஆர்டிபிஷியல் லெக்’ வந்து விட்டது என்று டாகடர் போன் பண் ணி சொன்னதும்,ரமேஷ் ஹாஸ்பிடலுக்கு போனான்.‘பிஸியோ தெராபிஸ்ட்’ கார்த்திக் வந்ததும் “மிஸ் டர் கார்த்திக்,இவர் என் ‘பேஷண்ட்’.நீங்க இவருக்கு இந்த ‘ஆர்டிபிஷியல் லெக்’கை ‘பிக்ஸ்’ பண் ணி அவருக்கு அதை போட்டு கொண்டு நடப்பது எப்படி,நடந்து முடிஞ்ச பிறகு அதை எப்படி கழ ட்டுவது எப்படி,போன்ற எல்லா ‘டீடேல்ஸும்’ சொல்லிக் குடுங்க”என்று சொன்னார்.உடனே கார்த் திக் “சார் நான் பண்றேன்” என்று சொல்லி விட்டு ரமேஷை தன் ‘பிஸியோ ரூமு’க்கு அழைத்துப் போ னார்.கார்த்திக் அந்த ‘ஆர்டிபிஷியல் லெக்’கைப் ரமேஷூக்கு போட்டு, அக்குள் கட்டையை வைத்து நடக்கப் பழக்கினார்.கார்த்திக் சொன்னபடி ரமேஷ் மெல்ல நடந்தான்.ஐஞ்சு நிமிஷம் நடந்து முடி ந்ததும்,கார்த்திக் ரமேஷூக்கு அந்த ‘ஆர்டிபிஷியல் லெக்’கை காலில் இருந்து எப்படி கழட்டுவது, எப்படி அதை மறுபடியும் போட்டுக் கொள்வது,உபயோக படுத்தாம இருக்கும் போது அதை எப்படி ஜா க்கிரதையா வைத்து வருவது,போன்ற எல்லா ‘டீடேல்ஸும்’ சொல்லி கொடுத்தார்.ரமேஷ் டாகடருக்கு ’தாங்க்ஸ்’ சொல்லி விட்டு அப்போலோ ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்து தன் காரில் தன் பங்க ளாவுக்கு வந்தான்.பங்களாவிலே தன் ‘ஆரிடிபிஷியல்’ காலைப் போட்டுக் கொண்டு,அக்குள் கட் டையையும் வைத்துக் கொண்டு நடக்க பழகி வந்தான்.ஒரு வாரம் ஆனதும் அவனால் நன்றாக நடக்க வந்தது.
ரெண்டு மாசம் போனதும் அந்த சமையல் கார மாமா அம்மாவுக்கு கண் ‘ஆபரேஷன்’ பண்ண ஐம்பதாயியம் தேவைப் பட்டது.மெல்ல அவர் ரமேஷை “சார்,எங்க அம்மா ரெண்டு கண்ணும் இப்போ தெரியலே.ரெண்டு கண்ணும் ஆபரேஷன் பண்ண டாகடர் ஐம்பதாயிரம் ஆகும்ன்னு சொல்றார்…” எ ன்று தயங்கி கொண்டே சொன்னார்.சமையல்கார மாமா கேட்டதும் ரமேஷ் உடனே “நான் இப்போவே தறேன்.நீங்க,உங்க அம்மாவுடைய ரெண்டு கண்னையும்,உடனே ஆபரேஷன் பண்ணுங்கோ” என்று சொல்லி அவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் குடுத்தான்.உடனே அந்த சமையகார மாமா “நான் கேட்டு இன்னும் முடிக்கலே, அதுக்கு ள்ளே நீங்க பணத்தை தந்து இருக்கேளே.நீங்க ரொம்ப வருஷம் நல்ல ஆயிசோடு இருந்து வரணும்”என்று சொல்லி தன் ரெண்டு கைகளையும் கூப்பி கண்களில் கண்ணிர்ர் வழிய தன் நன்றியை தெரிவித்தார்.ரமேஷ் தன் மனதுக்குள் ‘பாவம்,அவர் ரொம்ப நல்லவர்.அவர் அம் மா கண் ஆபரேஷனுக்கு நான் பணம் குடுத்ததும் என்னை ஆசீர்வாதம் பண்ணி இருக்கார்.நான் இந்த லோகத்திலே ஏன் ரொம்ப வருஷம் வாழ்ந்துண்டு வரணும்.இனிமே எனக்கு என்ன இருக்கு சந் தோஷமா வாழ்ந்து வர’ என்று சொல்லி வருத்தப் பட்டான்.ரமேஷ் ’அப்பாடா,முதல் முதல்லே நாம ஒரு நல்ல காரியம் பண்ணி இருகோம்’என்று நினைத்து பகவானுக்கு தன் நன்றியை சொன்னான்.
ஷேவிங்க் பண்ண தலையில் நன்றாக முடி வளர்ந்ததும் ரமேஷ் அவன் தான் முன்னம் வைத்து இருந்த கூடை தலை மயிர்,கிருதா,இவற்றை வைத்துக் கொள்ளாமல் தன் அண்ணன் வைத்து இருந் தது போல் சாதாரணமாக தலை மயிர் வைத்துக் கொண்டான்.சுரேஷ் மாதிரியே கொஞ்சம் கூட வித் தியாசம் ‘டிரஸ்ஸும்’ பண்ணீ வந்தான் ரமேஷ்.தங்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வரும் வாத்தியாரை வரவழைத்து,தான் சந்தோஷமா இருந்து வர என்ன என்ன ஹோமங்கள்,பூஜைகள்,எல்லாம் பண்ண ணும்ன்னு சொன்னாரோ அவற்றை எல்லாம் பண்ணி முடித்தான்.அந்த வாத்தியாரை தான் மறுபடியும் ‘பாக்டரிக்கு’ப் போய் வர ஒரு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னான் ரமேஷ்.அவன் ‘மேனேஜிங்க் டைரக்டருக்கு’ப் போன் பண்ணி வாத்தியார் சொன்ன நாளில் தான் கிண்டி ‘பாக்ட ரிக்கு’ வர இருப்பதாய் சொன்னான்.
வாத்தியார் சொன்ன நல்ல நாள் அன்று ரமேஷ் காலையில் எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு, நமஸ்காரம் பண்ணி விட்டு ‘பகவானே,நான் இன்னியிலெ இருந்து என் ‘பாக்டரி’ வேலைகளை எல்லாம் கவனிக்கப் போகிறேன்.நீங்க தான் எனக்கு உறுது ணையா இருந்து வரணும்” என்று வேண்டிக் கொண்டு ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு,கார் டிரைவரை கா ரை போர்ட்டிகோவுக்கு கொண்டு வர சொன்னான்.டிரைவர் வந்தவுடன் ரமேஷ் தன் ‘ஆர்டிபிஷியல்’ காலைப் பொருத்தி கொண்டு அக்குளில் கட்டையை வைத்து கொண்டு,மெல்ல பங்களாவுக்கு வெளி யே வந்து டிரைவர் கார் கதவை திறந்ததும்,அக்குள் கட்டையை டிரைவரிடம் கொடுத்து விட்டு மெல்ல காரில் ஏறி உட்கார்ந்தான்.டிரைவர் அக்குள் கட்டையை அடுத்த பக்க கதவைத் திறந்து ரமேஷ் பக்க த்தில் வைத்தான்.காரை கிண்டி பாக்டரிக்கு ஓட்டினான் டிரைவர்.ரமேஷ் இது நாள் வரை சுரேஷ் பாக்டரிக்குப் போனதே இல்லை.காரில் இருந்து ரமேஷ் கீழே இறங்கி,தன் ‘ஆர்டிபிஷியல் லெக்’ கைத் தன் காலில் பொருத்திக் கொண்டு,அக்குளில் கட்டையை வைத்துக் கொண்டு ஆபீஸ்க்குள் போய்,’சுரேஷ்’ என்று ‘போர்ட்’போட்டு இருந்த ரூமுக்குள் போய் உட்கார்ந்தான்.உடனே பீயூன் அந்த ரூமின் விªக்குகள் எல்லாம் போட்டு விட்டு ஏ.ஸி.யையும் ‘ஆன்’ பண்ணி இருந்தான்.பியூன் ரமே ஷூக்கு ஒரு ‘சல்யூட்’அடித்து விட்டு கண்ணில் தண்ணீர் முட்ட “ரொம்ப வருத்தமா இருக்குங்க.இந்த மாதிரி கஷ்டம் உங்க குடும்பத்துக்கு வந்து இருக்க வேணாம் சார்.சமாசாரம் கேட்டு நான் மூனு நா ளைக்கு தூங்கவே இல்லீங்க.நீங்க ஒருத்தராவது பிழைச்சி வந்து இன்னைக்கு என் கண் எதிரே உக் காந்து கிட்டு இருக்கீங்களேன்னு நினைச்ச மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்று சொ ல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் அந்தப் பியூன்.
சற்று நேரதிற்கெல்லாம் ‘மேனேஜிங்க் டைரக்டர்’ ரமேஷ் ரூமுக்கு வந்து ‘குட் மார்னிங்க’ சொல்லி விட்டு அவன் எதிரில் உட்கார்ந்தார்.’மேனேஜிங்க் டைரக்டர்’ ரமேஷைப் பார்த்து “இப்போ எப்படி இருக்கீங்க சார்.உங்களால் இந்த ‘ஆர்டிபிஷியல் லெக்’கை வச்சுண்டு நடந்து வர முடியற தா,ஏதாவது‘ ப்ராப்லெம்’ இருக்கா”என்று விசாரித்தார்.பதிலுக்கு ரமேஷ் ‘கம்பர்டபலா’ இல்லே.என்ன பண்றது.பகவான் என்னை இனிமே இதை வச்சுண்டு தானே வாழ்ந்து வரணும்ன்னு என் தலையிலே எழுதி இருக்கார்”என்று சொல்லும் போது அவன் கண்களில் நீர் முட்டியது.தன் கைக் குட்டையை எடுத்துத் துடைத்துக் கொண்டான் ரமேஷ்.கொஞ்ச நேரம் அவர் ‘பக்டரியை’ பத்தின எல்லா விஷய த்தையும் சொல்லி விட்டு ரமேஷ் ‘ஆர்டர் பண்ண காபியைக் குடித்து விட்டு அவர் ரூமுக்குப் போ னார்.ரமேஷ் ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசரை’ தன் ரூமுக்கு வரச் சொல்லி நாலு மாச வரவு செலவு எல்லாம் எடுத்து வரச் சொன்னான்.‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர்’ ரமேஷ் ரூமுக்கு வந்ததும் ரமேஷை ‘விஷ்’ பண் ணி விட்டு துக்கம் விசாரித்தார்.பிறகு ரமேஷ் ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர்’ கொண்டு வந்து வைத்த கணக் குகளை எல்லாம் நிதானமாகப் பார்த்தான்.
அவர் போன பிறகு ரமேஷ் எல்லா யூனியன் தலைவர்களையும் ‘மீட்டிங்க் ஹாலுக்கு’ வரச் சொன்னான்.எல்லா யூனியன் தலைவர்களும் வந்து பிறகு ரமேஷ் ‘மேனேஜிங்க டைரக்டருடன்’ ‘மீட் டிங்க் ஹாலுக்கு’ப் போனான்.எல்லா தலைவர்களும் ரெண்டு பேருக்கும் ‘விஷ்’ பண்ணினார்கள். ரமேஷ் எல்லா தலைவர்களுக்கும் தன் நன்றியை சொன்னான்.அவர்களும் பதில் நன்றியை சொல்லி விட்டு,ரமேஷ் ஆர்டர் பண்ணீ இருந்த ‘பிஸ்கெட்டையும்’ ‘டீயையும் குடித்து விட்டு ‘மீட்டிங்க் ரூமை’ விட்டு வெளியே போனார்கள்.அவர்கள் போனதும் எல்லா ‘போர்மென்களும்’ ‘சார்ஜ்மென்களும்’ வந்து,ரமேஷூக்கும் ‘மேனேஜிங்க டைரக்டருக்கும்’ ‘விஷ்’ பண்ணினார்கள்.எல்லோரும் ரமேஷை துக் கம் விசாரித்தார்கள்.ரமேஷ் அவர்கள் எல்லாருக்கும் ‘பிஸ்கெட்டும்’ ‘டீயும்’ கொடுத்தான்.அதை சாப்பி ட்டு விட்டு ‘மீட்டிங்க் ரூமை’ விட்டு போனார்கள்.
“சார்,எனக்கு இப்போ ஓரளலவுக்கு இந்த பாக்டரியைப் பத்தின ‘இபர்மேஷன்களை’ நான் தெரிஞ்சுடுட்டேன்.இதே மாதிரி நான் அம்பத்தூர் பாக்டரியைப் பத்தின ‘இபர்மேஷன்களை’ தெரி ஞ்சுக்கணும் சார்.அதனால்லே நாம அந்த பாக்டரிக்கு நாளைக்குக் காத்தாலே போய் வரலாமா சார்” என்று கேட்டான்.உடனே ‘மானேஜிங்க் டைரக்டர்’ “சரி சார்,நாம நாளைக்குக் காத்தாலே அங்கே போ ய் வரலாம்” என்று சொல்லி விட்டு போனார். அவர் வெளியே போனதும் ‘நான் பிழைச்சு வந்து முதல் முதல்லே சுரேஷ் உக்காந்து இருந்த சீட்லே உக்காந்து இருக்கேன்.சுரேஷை போலவே நான் என் மீது வாழ் நாளை எல்லாம் நல்லவனா நான் வாழ்ந்து வரணும்.அதுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் தன் தெய்வமா இருந்து என்னை ஆசீர்வாதிக்கணும்’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு தன் அம்மா அப்பாவை வேண்டிக் கொண்டான்.ரமேஷ்.அவன் கணகள் குளமாயிற்று.’இனனைக்கு இவ்வளவு செ ஞ்சது போதும்’ என்று நினைத்து,ரமேஷ் கார் டிரைவரை வர சொல்லி பங்களவுக்கு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டான் ரமேஷ்.
தூங்கி எழுந்தான் ரமேஷ்.’நாம தினம் காத்தாலே நாம் ஒரு கோவிலுக்கு போய் வரணும்’ என்று முடிவு பண்ணோமே அதன்படி நம்மால் இந்த ‘ஆர்டிபிஷியல்’ காலை வச்சுண்டு கோவிலுக்கு போய் வர முடியறதா’ என்று தன்னை ‘டெஸ்ட்’ பண்ண விரும்பினான்.’இன்னைக்கு சாயங்காலம் பூரா நாம ‘ப்ரீயா’ இருப்பதாலே ஏன் வட பழனி கோவிலுக்கு போய் வரக் கூடாது’ என்று நினைத்து கார் டிரை வரை கார் எடுத்துக் கொண்டு ‘போர்ட்டிகோவுக்கு’ வரச் சொன்னான் ரமேஷ்.டிரைவர் வந்தவுடன் ரமேஷ் ‘ஆர்டிபிஷியல்’ காலை பொருத்தி கொண்டு,அக்குளில் கட்டையை வைத்துக் கொண்டு மெ ல்ல பங்களாவுக்கு வெளியே வந்து டிரைவர் கார் கதவைத் திறந்ததும் காரில் ஏறிக் கொண்டான்.வட பழனி கோவில் வந்ததும் தன் ‘ஆர்டிபிஷியல்’ காலை பொருத்திக் கொண்டு மெல்ல இறங்கினான். டிரைவர் அக்குள் கட்டையைக் கொடுத்தவுடன் அதை வைத்துக் கொண்டு மெல்ல நடந்து ‘சிறப்பு தரிசன’ டிக்கட் வாங்கி கொண்டு முருக பெருமானை கிட்ட பார்த்து தரிசனம் பண்ணி விட்டு காரில் ஏறி பங்களாவுக்கு வந்தான்.அடுத்த நாள் காலையிலேயே ரமேஷ் எழுந்து குளித்து விட்டு, சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு, ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு அம்பத்தூர் ‘பாக்டரி’க்குப் போக ரெடி ஆனான். டிரைவர் காரை எடுத்து வந்ததும் ரமேஷ் அம்பதூர் ‘பாகடரிக்கு’ போக சொன்னான்.
அம்பத்தூர் ‘பாக்டரிக்கு’ வந்ததும் ரமேஷ் காரை விட்டு மெல்ல இறங்கினான்.அக்குள் கட் டையை வைத்துக் கொண்டு மெல்ல நடந்து தன் ரூமுக்கு வந்து உட்கார்ந்தான்.உடனே பீயூன் ஓடி வந்து அந்த ரூமின் விªக்குகள் எல்லாம் போட்டு விட்டு ஏ.ஸி. யையும் ‘ஆன்’ பண்ணினான்.பியூன் ரமேஷூக்கு ஒரு ‘சல்யூட்’அடித்து விட்டு கண்ணில் தண்ணீர் முட்ட“ரொம்ப வருத்தமா இருக்குங்க. இந்த மாதிரி கஷ்டம் உங்க குடும்பத்துக்கு வந்து இருக்க வேணாம் சார்.நீங்க ஒருத்தராவது பிழைச்சி வந்து இன்னைக்கு என் கண் எதிரே உக்காந்து கிட்டு இருக்கீங்களேன்னு நினைச்ச மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் அந்தப் பியூன்.
சற்று நேரதிற்கெல்லாம் ‘மேனேஜிங்க் டைரக்டர்’ ரமேஷ் ரூமுக்கு வந்து ‘குட் மார்னிங்க’ சொல் லி விட்டு அவன் எதிரில் உட்கார்ந்தார்.’மேனேஜிங்க் டைரக்டர்’ ரமேஷைப் பார்த்து “இப்போ எப்படி இருக்கீங்க சார்.உங்களால் இந்த ‘ஆர்டிபிஷியல் லெக்’கை வச்சுண்டு நடந்து வர முடியறதா, ஏதாவது‘ ப்ராப்லெம்’ இருக்கா” என்று விசாரித்தார்.பதிலுக்கு ரமேஷ் ‘கம்பர்டபலா’ இல்லே.என்ன பண்றது.பகவான் என்னை இனிமே இதை வச்சுண்டு தானே வாழ்ந்து வரணும்ன்னு என் தலையிலே எழுதி இருக்கார்”என்று சொல்லும் போது அவன் கண்களில் நீர் முட்டியது.தன் கைக் குட்டையை எடுத்துத் துடைத்துக் கொண்டான் ரமேஷ்.கொஞ்ச நேரம் அவர் ‘பக்டரியை’ பத்தின எல்லா விஷய த்தையும் சொல்லி விட்டு ரமேஷ் ‘ஆர்டர் பண்ண காபியைக் குடித்து விட்டு அவர் ரூமுக்குப் போ னார்.ரமேஷ் ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசரை’ தன் ரூமுக்கு வரச் சொல்லி நாலு மாச வரவு செலவு எல்லாம் எடுத்து வரச் சொன்னான்.‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர்’ ரமேஷ் ரூமுக்கு வந்ததும் ரமேஷை ‘விஷ்’ பண் ணி விட்டு துக்கம் விசாரித்தார்.பிறகு ரமேஷ் ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர்’ கொண்டு வந்து வைத்த கணக் குகளை எல்லாம் நிதானமாகப் பார்த்தான்.
அவர் போன பிறகு ரமேஷ் எல்லா யூனியன் தலைவர்களையும் ‘மீட்டிங்க் ஹாலுக்கு’ வரச் சொன்னான்.எல்லா யூனியன் தலைவர்களும் வந்து பிறகு ரமேஷ் ‘மேனேஜிங்க டைரக்டருடன்’ ‘மீட் டிங்க் ஹாலுக்கு’ப் போனான்.எல்லா தலைவர்களும் ரெண்டு பேருக்கும் ‘விஷ்’ பண்ணினார்கள். ரமேஷ் எல்லா தலைவர்களுக்கும் தன் நன்றியை சொன்னான்.அவர்களும் பதில் நன்றியை சொல்லி விட்டு,ரமேஷ் ஆர்டர் பண்ணீ இருந்த ‘பிஸ்கெட்டையும்’ ‘டீயையும் குடித்து விட்டு ‘மீட்டிங்க் ரூமை’ விட்டு வெளியே போனார்கள்.அவர்கள் போனதும் எல்லா ‘போர்மென்களும்’ ‘சார்ஜ்மென்களும்’ வந்து,ரமேஷூக்கும் ‘மேனேஜிங்க டைரக்டருக்கும்’ ‘விஷ்’ பண்ணினார்கள்.எல்லோரும் ரமேஷை துக் கம் விசாரித்தார்கள்.ரமேஷ் அவர்கள் எல்லாருக்கும் ‘பிஸ்கெட்டும்’ ‘டீயும்’ கொடுத்தான்.அதை சாப்பி ட்டு விட்டு ‘மீட்டிங்க் ரூமை’ விட்டு போனார்கள்.
”ரமேஷூக்கு தன் பழைய சீட்டை விட்டு எழுந்தரிக்கவே மனசு வரவில்லை.ரொம்ப நேரம் அந்த சீட்டிலேயே உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.’ரொம்ப நேரம் உட்காந்துக் கொண்டு இருந்து இருக்கிறோமே’என்று நினைத்து தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.அதில் மணி ஒன்னு காட்டியது. பிறகு மெல்ல எழுந்து வந்து காரில் ஏறி தன் பங்களாவுக்கு வந்தான் ரமேஷ்.சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படுத்தான்.படுத்தவன் நன்றாக தூங்கி விட்டான்.அவன் எழுந்து பார்க்கும் போது மணி ஐந்து. தன் முகம் எல்லாம் கழுவிக் கொண்டு அவன் ஹாலுக்கு வந்து ‘டிபன்’ காப்பி குடித்தான்.பிறகு டிரைவரை வரச் சொல்லி ரமேஷ் மைலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் ஏகாம்ப ரேஸ்வரர் சுவாமியையும்,கற்பகாம்பாள்அம்பாளையும் தரிசனம் பண்ணி விட்டு கோவில் வெளிப்பிர காரத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தான்.நிம்மதியாக அவன் அங்கேயே உட்கார்ந்து கொண்டு கொ ஞ்ச நேரம் தியானம் பண்ணினான்.ஒரு அரை மணி தியானம் பண்ண பிறகு,அவன் மெல்ல எழுந்து காரில் ஏறி தன் பங்களாவுக்கு வந்து சேர்ந்தான்.ரமேஷ் தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு. சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,’டிபன்’ சாப்பிட்டு விட்டு காரில் ஏறி தினம் ஒரு கோ விலாகப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு,அப்புறம் ஒரு நாள் கிண்டி‘பாக்டரிக்கும்’,அடுத்த நாள் அமபதூர் ‘பாக்டரிக்கும்’ போய் வேலைகளை கவனித்து வந்தான்.
‘நாம கல்யாணம் ஆகாத ஏழை பெண்கள் கல்யாணம் பண்ணி கொள்ள பண உதவி பண்ணி வரனும்,நிறைய ஏழை பிராமண பையன்களுக்கு உபநயனம் பண்ணி வைக்க வேணும்,கோவில்களில் இருக்கும் ஏழை குருக்களுக்கு மாசா மாசம் பண உதவி பண்ணி வரணும்.’இப்படி எல்லாம் செய்து வந்தால் ‘நாம் பண்ண பாவத்துக்கு’ பிராயசித்தம்’ கிடைக்கும்’ என்று நம்பினான் ரமேஷ்.
அன்று காத்தாலே காயத்திரி ‘காபி’ போட அந்த ஆத்துக்கு போய் காலிங்க் பெல்லை அமுக்கி னாள்.கதவைத் திறந்த மாமி “காயத்திரி மாமி,உங்க வாயை தொறாங்கோ”என்று சொன்னதும் காய த்திரி அந்த மாமி சொன்ன மாதிரி பயந்துக் கொண்டே தன் வாயை கொஞ்சமா திறந்தாள்.உடனே மாமி காயத்திரியின் வாயில் ஒரு ஜிலேபியை போட்டாள்.காயத்திரிக்கு ஆச்சரியமாக இருந்தது.” உங்க வாய் முஹ¥ர்த்தம் பலிசிடுத்து.என் மாட்டுப் பொண்ணுக்கு இன்னும் ஏழு மாசத்திலே ஒரு குழந்தை பொ¡றக்கப் போறது” என்று சந்தோஷத்தில் சொன்னாள்.உடனே காயத்திரி “அப்படியா மாமி, இந்த சந்தோஷ ‘நியூஸை’ கேக்க எனக்கே இவ்வளவு சந்தோஷமா இருக்கே,உங்களுக்கும் மாமாவுக்கும் இன்னும் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்”என்று சொல்லி விட்டு மாமி போட்ட ஜிலேபியை கடிக்க ஆரம்பித்தாள்.உடனே மாமா “நீங்க எங்க குடும்பத்லே ஒருத்தரா ஆயிட்டேள்.எங்க ஆத்லேயே சமை யல் பண்ணிண்டு வாங்கோ”என்று சொன்னார்.காயத்திரியும் சந்தோஷமாக சமையல் வேலை பண் ணிக் கொண்டு வந்தாள்.பகவானுக்கும்,தன் கணவருக்கும்,மனதார தன் நன்றியை சொல்லி வந்தாள் ஏழு மாசம் ஆனதும் மாலாவுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.குமாரும்,மாமியும் மாமாவும் தொட்டில் போடும் விழாவுக்கு எல்லா உறவுக்காரகளையும்,’ப்ரெண்ட்ஸ்’களையும் கூப்பிட்டு, ‘கிரா ண்டா’க கொண்டாடினார்கள்.காயத்திரியும்,லதாவும்,அவ குழந்தையும்,அந்த விழாவிலே கலந்துக் கொண்டு சந்தோஷப் பட்டார்கள்.
ஒரு வருஷம் ஓடி விட்டது.காயத்திரி தினமும் லதாவை ஜாகிறதையாக இருந்து வரச் சொல்லி விட்டு சமையல் வேலைக்கு போய் வந்து கொண்டு இருந்தாள்.லதா போர்ஷனில் குழந்தையை குளிப் பாட்டி,பவுடர் போட்டு தினம் ஒரு டிரஸ்ஸா போட்டு சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.அம்மா அந்த ‘வீட்லே இருந்து கொண்டு வந்துக் கொண்டு இருந்த மீதி ‘டிபன்’ சாப்பாடு எல்லாம் சாப் பிட்டு கொண்டு வந்து கொண்டு இருந்தாள்.’எனன தான் வயிறு நிறைஞ்சு இருந்தாலும்,அம்மா அன்னைக்கு ஒரு நாள் சொன்னாப் போல ‘அப்பா பேர்’ தெரியாத ஒரு குழந்தையை எப்படி வளத்து வர போறோம்’ என்கிற கவலை அவள் மனத்தை தினமும் அரித்து கொண்டு வந்தது.இதை தன் சொ ந்த அம்மாவிடமே அவளால் சொல்ல முடியவில்லை.’நாம தானே இந்த குழந்தையைப் பெத்துக்கப் போறோம்’ ன்னு அம்மா கிட்டே சொல்லி இருக்கோம்’ என்பது அவள் ஞாபகத்துக்கு அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.குழந்தையை பார்க்கும் சந்தோஷம் மட்டும் அவளுக்கு இருந்த்தே ஒழிய, ‘சூனிய மான’ எதிர் காலத்தை அடிக்கடி நினைத்து கொண்டு வந்த லதா மனம் பாரமாவே இருந்து வந்தது. அவள் உடம்பு முன்னும் இருந்ததை விட மிகவும் இளைத்து இருந்தது.
இதை காயத்திரியும் கவனித்து வந்தாள்.பாதி நாள் ராத்திரி அவள் படுத்துக் கொண்டு ‘இந்த வீட்டு சமையல் வேலை நமக்கு நிரந்தரமா இல்லையே என்னைக்காவது ஒரு நாள் இந்த வீட்டில், நமக்கு சமையல் வேலை இல்லை என்று சொல்லி விட்டால்,நாம என்ன பண்ணுவோம்.பேர் தெரியாத ஒரு குழந்தை,கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு,கணவரும் இல்லாத நாம இந்த உலகத்திலே எப்படி இருந்து வர போகிறோம்.லதா குழந்தை பொ¢யவனா ஆனா அவனை பள்ளி கூடத்லே சேக்கணும் அவனுக்கு ‘ஸ்கூல் யூனிபாரம்’,காலுக்கு ‘ஷூ,பாட புஸ்தகங்கள்.நோட்டு புஸ்தகங்கள்,பென்ஸில், ரப்பர்,பேனா,எல்லாம் வாங்கணுமே.விலை வாசி நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறதே.நாம என்ன பண்ணப் போகிறோம்.இந்த கவலை பாவம் லதாவுக்கும் இருக்குமே’ என்று நினைக்கும் போது அவளுக்கு தூக்கமே வராது.ரொம்ப நேரம் கழிச்சு தான் அவளுக்கு தூக்கமே வரும்.
ஆனந்தனுக்கு மூனு வயசு ஆகி விட்டது.மெல்ல இன்னும் ஒரு வருஷம் போனா அவனை பக்கத்லே இருக்கிற பள்ளிக் கூடத்திலெ சேத்து படிக்க வைக்க ஆசைப் பட்டாள்.சமையல் வேலைக்கு சாயங்காலம் போன காயத்திரியை பார்த்து அந்த ஆத்து மாமி “காயத்த்ரி மாமி,என் பையனுக்கும் மாட்டு பொண்ணுக்கும் அமொ¢க்காவிலே வேலை கிடைச்சு இருக்கு.நானும் மாமாவும் அவாளோட அமொ¢க்கா போய் வரலாம்ன்னு இருக்கோம்.நாங்க அடுத்த வாரம் ஞாயித்துகிழமை ராத்திரி கிளம்பப் போறோம்.அந்த ‘போர்ஷன்லே நீங்களும் லதாவும் குழந்தையும் இருந்து வாங்கோ.உங்களுக்கு வேறே எங்கேயாவது சமையல் வேலை கிடைச்சு,நீங்க உங்க ஜாகையை மாத்திண்டா,நீங்க ‘போர்ஷனை’ நன்னா பூட்டி விட்டு சாவியை என் தம்பி சேகர் கிட்டே குடுத்துட்டுப் போங்க” என்று சொன்னதும் கா யத்திரிக்கு பூமியே பிளந்து தான் அதள பாதாள லோகத்துக்குப் போவது போல இருந்தது.ரெண்டு நிமிஷம் அவளுக்கு பேச்சே வரவில்லை.’நாம நினைச்சா மாதிரி ஆயிடுத்தே பகவானே,நான் இனிமே என்ன பண்ணப் போறேன்’ என்று நினைக்கும் போது அவளுக்கு அழுகையே வந்தது.
மெல்ல தன்னை சுதாரித்து கொண்டு “சரி மாமி,நீங்க இத்தனை வருஷமா எனக்கு சமையல் வேலை குடுத்த துக்கும் என் பொண்ணு பிரசவம் ‘ப்ரீயா’ பண்ணதக்கும்,என் போர்ஷனுக்கு ‘ப்ரீயா’ புண்யாவசனம் பண்ணதக்கும்,குழந்தை தொட்டில் போடற விழாவை ரொம்ப கோலாகலமா பண்ண தக்கும் என் நன்றியை நான் சொல்றேன்.நான் வேறே இடத்லே ஒரு சமையல் வேலையை பாத்துண்டு அவசியம் ஏற்ப்ட்டா நான் என் ஜாகையே மாத்திக்கறேன்.அப்படி மாத்திண்டு போற வரைக்கும் உங்க போர்ஷன்லே இருந்துண்டு வறேன்.நான் ஒரு வேளை ஜாகையே மாத்த வேண்டி வந்தா நான் போர் ஷனை நன்னா பூட்டி,சாவியே உங்க தம்பி கிட்டே குடுத்துட்டுப் போறேன்” என்று சொல்லும் போது அவள் கண்களில் கண்ணிர் முட்டியது.சமையல் ரூமுக்குள் போய் தன் கண்களை துடைத்து கொண்டாள்.
சமையல்.வேலை முடிஞ்சதும் மீதி டிபனை எடுத்துக் கொண்டு போர்ஷனுக்கு வந்த அம்மா கண் அழுதா மாத்ரி இருக்கவே “ஏம்மா,நீ அழுதா மாதிரி இருக்கே.அந்த மாமி உன்னே ஏதாவது சொன்னாளா”என்று கவலையுடன் கேட்டாள் லதா.காயத்திரி தான் கொண்டு வந்த ‘டிபன்’ டப்பா வை வைத்து விட்டு கண்களீல் கண்ணிருடன் அந்த மாமி சொன்ன சமாசாரத்தை சொன்னாள். அம்மா சொன்ன நியூஸைக் கேட்டதும் லதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.அவள் உடனே “இது என்னம்மா ஒரு புது சோதனை.இனிமே உனக்கு வேறே இடத்லே சமையல் வேலையே தேடிக்கணுமே. அது வரைக்கும் நாம் என்ன பண்ணப் போறோம்” என்று சொல்லும் போது அவள் கண்களிலும் கண்ணீர் வந்தது.காயத்திரி “இது வரைக்கும் நமக்கு நல்லதை பண்ணி வந்த அந்த அம்பாள்,இனி மேலும் ஏதவவது நல்லது நிச்சியமா பண்ணுவா.எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.நீ இப்போ கவலைப் படாம இருந்து வா.சாப்பிட்டு விட்டு படுத்துக்கலாம்.அது வரைக்கும் அந்த அம்பாள் அந்த மாமி மனசிலே பூந்து,இந்த ‘போர்ஷனை’ எனக்கு வேறே சமையல் வேலே கிடைக்கற வரைக்கும் வச்சுக்க சொல்லி இருக்காளே.அந்த மாமி என்னை உடனே காலி பண்ண சொல்லி இருந்தா நாம ஜாகைக்கும் இல்லே எங்காவது தேடணும்.இப்ப சமையல் வேலைக்கு மட்டும் தேடி வந்தா போறுமே லதா” என்று சொல்லி அவள் கொண்டு வந்த ‘டிபன் பாக்சை’ திறந்து ‘டிபனை’ லதாவுக்கு குடுத்து விட்டு மீதி ‘டிபனை’ தானும் சாப்பிட்டு விட்டு பிறகு இருவரும் படுத்துக் கொண்டார்கள்.
மாமி,அவங்க கணவர்,பிள்ளை,மருமகள் நாலு பேரும்,அடுத்த ஞாயிற்றுக் கிழமை வீட்டைப் பூட்டிக் கொண்டு,காயத்திரி லதா கிட்டே சொல்லிக் கொண்டு அமொ¢க்கா கிளம்பிப் போனார்கள். காயத்திரி தன் கிட்டே இருந்த பணத்திலே வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கி சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு வந்தாள்.ஒரு மாசம் ஓடி விட்டது.காயத்திரி ஒரு நாள் சாயங்காலம் “லதா, இப்படி வெறுமனே நான் ஆத்லே இருந்து வந்தா என்ன பிரயோஜனம்.நான் கோவிலுக்கு போய் அந்த குருக்கள் மாமா கிட்டே போய் ‘வேறே யாராவது ஆத்லே எனக்கு ஒரு சமையல் வேலை கிடைக்குமா’ ன்னு கேட்டுண்டு வறேன்.நீ ஜாக்கிரதையா இருந்துண்டு வா” என்று சொல்லி விட்டு கோவிலுக்குக் கிளம்பிப் போனாள்.கோவிலில் இருந்த குருக்கள் காயத்திரியைப் பார்த்ததும்“என்ன மாமி,உங்களுக் கு என் அண்ணா சொன்ன இடத்லே சமையல் வேலை கிடைச்சதும்,இத்தனை வருஷமா கோவிலுக் கு வறதையே நிறுத்திட்டேளே.என்னை தான் பாக்க வர வேணம்.சுவாமியே பாக்க ஒரு தடவை கூட வரலையே.இது உங்களுக்கே நன்னா இருக்கா” என்று கோவமாக கேட்டார்.
உடனே காயத்திரி ”அப்படி இல்லே மாமா.அந்த ஆத்லே நான் காத்தாலே ஆறு மணிக்கும், அப்புறமா பத்து மணிக்கும்,நாலு மணிக்கும்,அப்புறமா ஏழு மணிக்கும் சமையல் வேலைக்கு போக வேண்டி இருந்தது.அந்த மாமிக்கும்,மாமாவுக்கும் பிள்ளைக்கும்.மாட்டு பொண்ணுக்கும்,காத்தாலே ‘காபி’ டிபன் பண்ணனும்.மத்தியானம் மாமிக்கும் மாமாவுக்கும் சாப்பாடு பண்ணணும்,சாயங்காலம் நாலு மணிக்கு மாமிக்கும் மாமாவுக்கும் மறுபடியும் காபி போடணும்.சாயங்காலம் எல்லாருக்கும் அந் த மாமி சொல்ற ‘டிபனை’ எல்லாருக்கும் பண்ணணும்.எனக்கு முழு நாளும் அவ ஆத்லே வேலை இருந்துண்டு இருந்தது.அதனால் தான் என்னால் கோவிலுக்கு வர முடியலே” என்று சொன்னதும் “ஓ அப்படியா,எனக்கு இது தெரியாது.சாரி,உங்களே நான் தெரியாம கேட்டுட்டேன்”என்று சொன்னதும் காயத்திரி “பரவாயில்லே மாமா.அவா பையனுக்கும் மாட்டு பொண்ணுக்கும் அமொ¢க்காலே வேலை கிடைச்சு அவா நாலு பேரும் அமொ¢க்கா போயிட்டா.நான் இப்ப சமையல் வேலை இல்லாம் இருந்து ண்டு வறேன்.நீங்க உங்க அண்ணா கிட்டே சொல்லி,அவர் ‘உபாத்யாயம்’ பண்ற வேறே யாராவது ஆத்லே எனக்கு ஒரு சமையல் வேலை கிடைகுமான்னு சித்தே எனக்காக கேட்டு சொல்ல முடியுமா” என்று தன் கண்களில் கண்ணீர் தளும்ப கேட்டாள்.அவரும் உடனே ”நான் நிச்சியமா கேட்டு சொல் றேன் மாமி” என்று சொல்லி விட்டு சுவாமிக்கு தீபத்தைக் காட்டி விட்டு காயத்திரிக்கு விபூதிப் பிரசா தம் கொடுத்தார்.காயத்திரி அந்த விபூதிப் பிரசாதத்தை தன் நெத்தியில் இட்டுக் கொண்டு சுவாமியை நன்றாக வேண்டிகொண்டு சுவாமியை மூனு பிரதக்ஷணம் பண்ணி விட்டு கோவிலை விட்டு தன் ‘போர்ஷனு’க்கு வந்தாள்.
போர்ஷனுக்கு வந்து காயத்திரி குருக்கள் மாமா தன்னை கோபித்துக் கொண்டதையும்,அதற்கு அவ சொன்ன பதிலையும் லதாவிடம் சொல்லி வருத்தப் பட்டாள்.
ரெண்டு மாசம் ஆகி விட்டது.வாரம் ரெண்டு தடவை காயத்திரி கோவிலுக்கு போய் வந்துக் கொண்டு இருந்தாளே ஒழிய அவளுக்கு சமையல் வேலை எங்குமே கிடைக்கவில்லை.அன்னைக்கு அம்மா மளிகை கடைக்கு சாமான்கள் வாங்க போயிருந்த போது லதா முதல் தடவையாக தன் அப்பா படத்துக்கும்,அம்பாள் படத்துக்கும் முன்னாடி நின்று கொண்டு “அம்மா,தன் கைலே இருக்கிற பண த்தை செலவழிச்சுண்டு வறப் போறா.அவ கைலெ இருக்கிற பணம் முழுக்க தீந்து போறதுக்கு முன் னாடி,அம்மாவுக்கு ஒரு சமையல் வேலையே எங்காவது குடுத்து,இந்த குடும்பத்துக்கு ஒரு நல்ல வழி யே காட்டும்மா.காட்டுப்பா.நான் குழந்தையே எப்படியாவது படிக்க வச்சு முன்னுக்கு வரணும்’ என்று மனம் உருகி ரெண்டு நிமிஷம் வேண்டிக் கொண்டு நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்து,தன் கண் ணைத் திறந்து பார்த்தாள்.அம்மா காத்தாலே அம்பாள் படத்தின் மேலே வச்சு விட்டுப் போன ரோஜாப் பூ தரையில் விழுந்தது.
– தொடரும்…