வேலைக்காரி சந்திரா குனிந்து கூட்டிக் கொண்டிருந்தாள்.
பேப்பர் படிப்பதுபோல திருட்டுத்தனமாக அவள் அழகை ரசித்துக் கொண்டிருந்தார் 50 வயதான கோபாலன்.
சமையலறையினுள் இருந்து இதை கவனித்துவிட்டார் அவர் மனைவி கற்பகம்.
“சே… என்ன மனுஷன் இவர்? மகளுக்கு கல்யாணமாகி பேரன் பேத்தி எடுத்தபிறகும் இந்த அற்ப ஆசை மட்டும் சிலருக்குக் குறையவில்லையே?” என மனசுக்குள்
அங்கலாய்த்துக் கொண்டாள்.
மாலை 6 மணி.
தெருவுக்குள் வந்த கோபாலன் சேலை விலகி அங்கங்கள் தெரிய வாசலை கூட்டிக் கொண்டிருந்த கற்பகத்தைப் பார்த்து திடுக்கிட்டார்.
“ஏய் கற்பகம்… இப்படி சேலை விலகினது கூட தெரியாம கூட்டிக்கிட்டிருக்கியே… ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் இந்த நிலையில் உன்னைப் பார்த்தா என்னாகும்” என்றார் கோபமாக.
“என்னாகும்? வேலைக்காரி சந்திராவை நீங்க திருட்டுத்தனமாக பார்க்கிறப்போ உங்களுக்கு எப்படி இருக்குமோ…அப்படித்தான் என்னை பார்க்கறவங்களுக்கும் இருக்கும்” என்றாள் கூலாக.
– தாரை செ. ஆசைத்தம்பி (21.9.11)