தங்கமான வண்டியும் தங்கமணியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 1,881 
 
 

“வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க”

“கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்”

“ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?”

“போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்”

“ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?”

“இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற‌?”

“இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?”

“ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. “

“ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க”

“ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?”

“மாத்திடுங்க”

“பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. “

“ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்”

“அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன‌ என‌க்கா கேக்குறேன்?”

“கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க”

“சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்”

“சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?”

“ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?”

“இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா”

“வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது..”

“டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க… அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?”

“சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா”

“மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?”

“கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?”

“மொத்தம் எவ்ளோ வரும்?”

“சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி”

“இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?”

“நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?”

“#$%#%#$%#$%&$%&”

(&(&^%&^%%^%$$&$^$”

“^%(*()&()&()

– பெப்ரவரி 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *