என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு குடுத்திட்டு இருந்தன். அவனுக்கு புரியுதோ இல்லையோ அப்பியோடா உண்மையாவா என்டு ரியாக்சன் குடுத்துக்கொண்டு நின்டான். மத்த பெடியங்கள் பெட்டைகள் அவையவை அவையவைக்கு தெரிஞ்சத அலம்பிட்டு இருந்தாங்கள். அப்ப வகுப்பே எங்கட சாகவச்சேரி சந்தை போல அவளவு அமைதியா இருந்திச்சு (ஹீ ஹீ ). ஒருத்தன் சந்தோசமா இருந்திட கூடாதே அடுத்தவனுக்கு வயிறு எரிஞ்சுடுமே அப்பிடி பக்கதில கணித பாடம் எடுத்த சேர் ஒராலுக்கு எரிஞ்சுட்டு போல…. எங்கட வகுப்புக்கு வந்து உங்கட்வகுப்பு மிஸ் வராட்டி அவாண்ட பாட புத்தகத்தை எடுத்து எல்லாரும் படியுங்கோ என்டுட்டு அவர் பாட்டுக்கு கணக்கு பண்ண ஐ மீன் பாடமெடுக்க போயிட்டார் .
நாமளும் எவளவு நேரம் தான் படிக்கிற மாதிரியே நடிக்கிறது . அப்ப தான் ஒரு அழகான அறிவான பெரியன் எழும்பி … (எழும்பின பெடியன காணல என்டு தேடாதிங்க நான் எழும்பனாலும் ஒசரம் அவளவு தான் இருப்பன் ஹீ ஹீ ) நாங்க எல்லாம் ஒரு கேம் விளையாடுவம் என்டு சொன்னான் … சரி சத்தம் போடாம என்ன கேம் விளையாலாம் என்டு பெடியங்களும் பெட்டைகளும் புசு புசுனு கதைக்க வெளிக்கிட்டுதுகள்… அதுவே பெரிய சத்தமாய் போச்சு . அப்ப ஒரு பையன் அவன் ஒரு முற்போக்கு வாதி இப்ப பிரான்ஸ் ல இருக்கான் ராகுலன் என்டு அவன் கல்யாணம் பண்ணி விளையாலாம் என்டுட்டான் . எனக்கு உடம்பெல்லாம் வேத்து போச்சு அது எப்பிடி ஒரு பையனும் பையனும் கல்யாணம் பண்ற என்டு (இப்ப இதெல்லாம் நல்லா நடக்குது . நம்ம ஆபிசிலையும் இனம் மொழி கடந்து ஒரு காதல் கதை ஓடுது) பிறகு இல்லடா பொண்ணதான் என்ட உடன தான் எனக்கு நிம்மதியா போச்சு .
ஆனாலும் இதே போல நாலாம் ஆண்டு படிக்கிற அண்ணா மார் போன கிழமை விளையாடினவை என்டு ஸ்கூல் புல்லா கதைச்சவை அதுக்கப்புறம் அதிபர் ஆக்களை பிடிச்சு அடி பின்னிட்டார் . எனக்கு சின்ன பயம் வந்துட்டு அதிபர் கிட்ட மாட்டுறது இல்லை நாம இப்ப இரண்டாம் ஆண்டு தானே இது கல்யானம் பண்ற வயசா இல்ல இரண்டு வருசம் வெயிட் பண்ணனுமே என்டு சின்ன பயம் .
ஆனாலும் பறவால்ல நான் கல்யானத்துக்கு ரெடி பா பொண்ண கூப்பிடுங்க என்ற போல நான் நிக்க ஒரு குண்ட தூக்கி போட்டானுங்கள். பெயர் எழுதி குலுக்கி போடுவாங்களாம் அதில ஆற்ற பெயர் வருதோ அவைக்கு தானாம் கல்யாணம் மிச்ச எல்லாரும் சும்மா தான் நிக்கனுமாம் .. அட என்னடா கொடுமையா போச்சு என்டு சரி பெயலை எழுதி போட்டு தொலைங்கடா என்டு நா பாத்துட்டு நின்டன் .. ஆனா நம்ம பசங்க இருக்காங்களே கஜனை எழுத விடுவம் அவன் தான் வடிவா எழுதுவான் கள்ள வேலையும் பண்ண மாட்டான் என்டு பொறுப்பு என் பக்கம் வந்திச்சு …
இப்ப ஐஞ்சு பேரின்ட பெயரை எழுதனும் அத மேசையில போட்டு
ஒரால எடுக்க விடுவாங்க பெயர் வாற ஆளுக்கு கலியாணம் இது தான் லூல்ஸ் அன்ட் றெகுலேசன் .
நான் எழுதிட்டு இருக்கேக்க என் பேரை இரண்டு பேப்பறில எழுதிட்டு சுத்தி வச்சுட்டன் . நம்ம பெயர் வாறதுக்கு சான்ஸ் அதிகம் இருக்கு இப்ப ….
சரி என்டு ஒரு பையனை கூப்பிட்டு எடுக்க வைச்சாச்சு அவன் பெயரை வாசிச்சான் … நான் இருக்கிற எல்லா தெய்வத்துட்டையும் என் பெயர் வந்தா எனக்கு பிறக்குற குழந்தைக்கு உன் கோயிலுக்கு வந்து மொட்டை போடுறன்டா சாமி என்று நேத்தி கூட வச்சுட்டன் … என்னோட முயற்சியும் கடவுளோட அனுகிரகத்தாலும் நான் போன ஜென்மத்தில செய்த புண்ணியத்தாலையும்
கஜன் உன் பெயர் வந்திருக்குடா வாயில சிரிப்பும் வயித்தில நெருப்புமா ராகுலன் சொன்னான் … எனக்கு சரியான வெக்கமா போய்ட்டு நான் போய் மணமகன் இருக்கிற இடத்தில இருக்க அங்காலையும் பெட்டைகள் பக்கம் குலிக்கி போட்டு அலுங்காம குலுங்காம ஜெசிந்தா வை கூட்டுட்டு வருயினம் . நானும் மனசுக்க இவ எத்தின சீட்டில இவ பெயரை எழுதி இருப்பா என்டு யோசிச்சு கொண்டு இருந்தன் …
அப்ப இவங்கள் ஒரு பெட்டையின்ட தலையில இருந்த மஞ்சல் ரிபன கழட்டி அதில பேனை மூடியை கட்டி கச்சிதமா எனக்கி தாலிக்கொடியை செஞ்சுட்டு இருக்காங்க எனக்காக இப்பிடி பாடுபட்ட நண்பர்களை நினைக்கும் போது இப்பவும் கண்ணில ஜலம் நனைக்குது..
வகுப்பறையே வாழ்த்த எனக்கு சீரும் சிறப்புமாக கல்யானம் நடந்திச்சு ….
காலங்கள் உருண்டோடின … இடம்பெயர்ந்தோம் … ஓடினோம் .. தங்க வீடு இல்லாமல் ரோட்டில இருந்த போதும் அம்மா சாப்பாடு தீத்தும் போதும் பக்கத்தில செல் விழுந்து வீடுகளும் பாடசாலைகளும் கோவில்களும் உடைந்த போதும் எங்கட பெற்றோர் எங்களுக்கு புத்தகத்தை மட்டுமே கையில தந்திருந்தாங்க … படிச்சு கொண்டே இருந்தம் .. சண்டை இல்லாம இருந்த காலத்தில நல்ல பள்ளிக்கூடத்தில சேத்தாங்க படிச்சு முடிச்சு…. வெளிநாடு போய் அங்கையும் படிச்சுட்டுட்டு ஊருக்கு போய்….. நியமாவே கல்யாணம் பண்ணலாம் என்டு பாத்தா “இப்ப என்ன அவசரம் 30 வயசுக்கு பிறகு ஆறுதலா பண்ணிக்கலாம் என்டுறாங்க ….