கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 7,780 
 

பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு பழகிவிட்டாள்.

கேசவன் பலமுறை அவளைப் புடவைக் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். ”போங்க, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது” என சொல்லி விடுவாள்.

அப்படிப்பட்டவள், ஒருநாள் தானே முன்வந்து, கேசவனிடம் கேட்டாள், ”என்னங்க, ஐவுளிக்கடையில ஷோகேஸ் பொம்மைக்கெல்லாம் சேலைக் கட்டிவிடுறீங்களே…. எனக்கும்….நீங்களே சேலைக் கட்டிவிடக் கூடாதா?”

”அட, இதைக் கேட்கவா இத்தனை நாளாத் தயக்கம்” கேசவன் உற்சாகமாகி அவளுக்கு சேலைக்கட்டி விட்டான். அந்த டிசைனர் சேலையில் சித்ரா தேவதையாய்த் தெரிந்தாள். இப்படியே இவள் தினமும் இருந்தால்…. பெருமூச்சுடன் கடைக்குக் கிளம்பியபோது, சித்ரா, செல்போனில் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தாள்..

“டைரக்டர்; ஸார்! நீங்க சொன்னபடியே ஒரு மணிநேரத்துல “சேலை காஸ்டியூம்ல” நேரா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுறேன்.. அந்த கேரக்டர வேறு யாருக்கும் கொடுத்திடாதீங்க, .பிளீஸ்!..” சொல்லிக் கொண்டே அவசரமாக காரில் ஏறினாள் சித்ரா.

(குங்குமம் 06-06-2016 வார இதழில் வெளியான சிறுகதை)

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

1 thought on “சேலை

  1. ”சேலை” கதையினை பதிவிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நல்லாதரவை அனைத்து வளரும்…வளர்ந்த எழுத்தாளர்களுக்கும் அளித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *