கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,099 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மங்கி மடியப்போகும் விளக்கு பக்குப் பக்’ கென்று தன் கடைசிச் சுவாலையை வீசுவது போல, ஆவணிமாத த்து அந்தி வெய்யில் தன் கடைசிக் கிரணங்களை முற்ற த்திற் சுளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. சாப்பி ட்டு விட்டுச் சுக நித்திரை செய்து கொண்டிருந்த கோகிலா எழுந்துவிட்டாள். ஒரே புழுக்கமாக இருந்தது அவளுக்கு. அவசர அவசரமாக முகத்தைக் கழுவித் தன்னை என்றைக்கும் போல அலங்கரித்துக் கொண்டாள். பின்னர் தன் பெரிய பங்களாவின்’ பரந்த முற்றத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் புத்தகமும் கையுமாக வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அவளுடைய ஒரு வயதுக் குழந்தை ராதாவை, ஆயா வழக்கம்போல வெளியிலே கொண்டுபோயிருந்தாள்.. தரலிங்கம் கந்தோரை விட்டு வந்ததும், அவருக் கோப்பி கொடுப்பதற்காயத்தமாக வீட்டில் வேலை காரன் காத்துக் கொண்டிருந்தான். கோகிலா வழக்க போலத்தான் சுந்தரத்தின் வரவை எதிர்பார்த்து மாம ரத்தின் கீழே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கென்ன? அப்பா சீதனமாகக் கொடுத்தது ஆயிரந்தலை முறைகட்குக் கவலையின்றிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கப் போதும். அவள் கணவனுக்கு அரசாங்கத்தில் மிகமிக உயர்ந்த உத்தியோகம். இந்த நிலையில் வீட்டு வேலைகளைச் செய்து, பிள்ளையையும் கவனித்துக் கொள்வது அவ ளுக்குத்தான் அழகா? அல்லது அவள் கணவருக்குத் தான் பெருமையா? ஆனாலும் கோகிலாவிற்குக் கல்யாணமாகிவிட்ட அந்தக் குறுகிய காலத்தில், கணவன் கந்தோரிலிருந்து வரும்போதெல்லாம். கன்வீட்டு முற்றத்து மாமரத்தின் கீழிருந்து அவரைப் புன்முறுவலோடு வரவேற்க அவள் எந்த நாளும் தவறியதே இல்லை!

இன்றைக்கும் கோகிலா அப்படித்தான் காத்துக் கொண்டிருந்தாள். வானவில்லைச் சுற்றிச்சுற்றிக் கட்டி யது போல வண்ணச்சேலை ஒன்றை உடுத்து, தன் நீண்ட கூந்தலைப் பின்னி அதனை மார்பின் மேலாக எடுத்து விட் டுக் கொண்டு அவள் தெருவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் நீண்ட கூந்தலில், பின்னல் தொடங் கிய இடத்தில் ஒரு கொத்து மல்லிகைப் பூக்கள் இடுக் கிக் கொண்டு அழகுப் பதுமையாய்த்தான் இருந்தாள். பகலில் நித்திரை கொண்டதால் ஊசிப் போயிருந்த அவள் கன்னங்களில் அந்திச் சூரியனது மஞ்சட் கிரணங் கள் பிரதிபலிக்கையில் அவள் முகம் ஓர் பளிங்குப் பூவைப் போல மினுங்கியது. நிரை நிரையாக இருக்கும் பூச்செடிகளின் மத்தியில், கத்தரித்து விடப்பட்ட கொடி ‘பந்தரின் அருகில், உயர்ந்து கவிந்திருந்த மாமரத்தின்ழ போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அவள் அருந்தது அந்தச் சூழலிற்கே ஒரு பெருமையாகத்தான் இருந்தது.

முகத்தில் புன்னகையை வருவித்துக் கொண்டு, தான் கையில் கொண்டு வந்திருந்த ஆங்கில ‘டிற்றெக் றிவ்’ நாவலைத்திறந்து படிக்க ஆரம்பித்தாள் கோகிலா.

கையிலிருந்த மணிக்கூடு நேரம் நாலரை என்று சொல் லிற்று! இனி ‘அவர் வந்துவிடுவார். ஆகவே அவளால் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. கோகிலா இப்படித் திண்டாடிக் கொண்டிருக்கையில் அவள் தலைக்கு மேலே மாமரத்தின் மேலிருந்த குயில் நீளக் குரல் எடுத்துக் கூவிற்று!

கோகிலாவிற்குச் சகுனத்தில் நம்பிக்கையில்லை. மேலும் குயில் கூவுவது நற்சகுனமா கெட்ட சகுனமா என்பது அவளுக்குத் தெரியாது. ஆனாற் ‘குயிலின் குரல் இனிமையாக’ இருக்கும் என்று அவள் புத்தகங்களில் படி த்திருக்கிறாள். இன்றைக்குத் தலைக்கு மேலிருந்து குயிலே கூவுகையில் அதன் பாட்டை ரசிக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று.

குயில் மறுபடியும் நீளக்குரல் எடுத்துக் கூ.விற்று. மறுபடியும் மறுபடியும், விட்டுவிட்டு, அது கூவிக் கொண் டேயிருந்தது.

குயிலின் குரல் இனிமையானது. இன்பந் தருவது என்று கேள்விப்பட்டிருந்த கோகிலாவிற்கு, அந்தக் குரல், தெஞ்சின் ஆழத்தில் உறைந்து போய்க் கிடக்கும் துக்கத்தை வெளியே இழுத்து நீட்டிக் கொண்டு வரும் சோகக் குரலாகத்தான் தோன்றிற்று. அதன் குரலில் இனிமை இருந்தது தான் என்றாலும், அது நெஞ்சம் நிறைந்த ஆனந்தத்தில் பொங்கி வழியும் இன்பக்குரல் அல்ல. மகனை இழந்த சந்திரமதியின் புலம்பலை நாகக் கொட்டகையில் கேட்கும் போது உண்டாகும் -. பத்தைத் தான் அந்தக் குயிலின் குரலிலும் அவள் உணர முடிந்தது.

கோகிலா நிமிர்ந்து, மாமரத்தின் மேலேயிருந்த குயி லைப் பார்த்தாள். அந்தக் குயிலின் கண்களில் ஒரு ஏக்கம்………. தவிப்பு… பரிவு …கன்றைப் பிரிந்த பசுவின் கண் களா அதன் கண்கள்? கோகிலாவும் பெண்தானே! அந் தக் குயிலைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. பரிதாபத்தோடே பார்த்துக் கொண்டிருந்த கோகிலா அந்தக் குயிலிடம் கேட்டாள்: “குயிலி! நீ என்றைக்கும் ஆனந்தமாகப் பாடுவாய் என்று உலகம் சொல்கிறதே. நீ ஏன் இன்றைக்கு இத்தனை சோகமாகப் பாடுகிறாய்?”

குயிலி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே 1 உலகம் கிடக்கிறதம்மா உலகம்; என் சோகத்தை உணர்வதற்கு அந்த உலகத்திற்குத் திராணிகிடையாதம்மா! நான் என்றைக்கும் இன்பமாகவே இருப்பதாக அது எண்ணுகிறது” என்றது.

“உன் சோகத்தைக் கேட்க நான் இருக்கிறேன். வான வெளியில் எவர் கட்டுப்பாடும் இன்றி உன் இணையோடு பறந்து திரியும் உனக்கு இன்பமே இல்லை என்றால் என்னால் நம்ப முடியாமல் இருக்கிறதே” என்றாள் கோகிலா.

இன்பம்! அம்மா கோகிலா, நான் இன்பமாயிரு ந்ததெல்லாம் சென்ற வசந்த காலத்தில் தான். என்னைப் போன்ற ஒருத்தி வாழ்விலேயே ஒரு தடவை தான் இன்பமாக இருக்க முடியும் என்று எண்ணுகிறேன். ஆம்…… இந்த மாமரம்……….. பழுத்து ஓய்ந்து கிழமாகிக்-க்கும் இந்த மாமரம் சென்ற வசந்தத்தில் தங்களின் தங்கள் போன்ற புதுத் தளிரைத் தென்றற்காற்றில் சைய விட்டுப் புது மணப்பெண்ணைப் போலக் காட்சி ளித்தது. அந்த வேளையில் தான் நானும் என் காதல னும் இந்தக்கிளைகளிலிருந்து கொண்டு இன்பத்தின் எல் லையையே கண்டு விட்டவர்கள் போலப்பாடினோம். நாங்கள் காதல் காதல்’ என்று பாடினோம், ‘காதல் போயி ற்சாதல்’ என்று பாடினோம். சாவிலே பூர்த்தியாகும் காதலைப்பாடினோம். சமாதியிலும் மாண்டு போகாத காதலைப்பாடினோம். தங்களின் இன்றைய நிலையைப் போல, லட்சியவாதியின் கனவைப்போல, உலகமே எங் கட்கு இன்பமயமான தாகத்தான் இருத்தது. இந்தக்காத ல்வாழ்வின் பலன்? அதுதான் உங்கட்குத் தெரியுமே! நான் கர்ப்பமானேன். கர்ப்பமானதும் நான் அமைதியை விரும்பினேன். நான் ஒரு தாயாகி விட்டேன் என்பதை எண்ணிப் பெருமைப் பட்டேன். என் பிள்ளைகளைச் சுக மாகப் பெற்றெடுத்து அவைகளைக் கண்ணை இமைகாப்பது போலக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என் ஆசை……’

குயிலி நீளக் குரலெடுத்து அழத்தொடங்கியது.

கோகிலாவின் தாயுள்ளத்தில் ஏதோ சுருக்கென்று தைத்தது போல இருந்தது. அவள் கண்களில் நீர் அரும் பிற்று, ”குயிலி ! கவலைப்படாதே…” என்று ஏதோ சொன்னாள். அவளுக்கு மேலே கதையைக் கேட்கவேண் டும் என்று ஆசை.

குயிலி மறுபடியும் தன் கதையைத் தொடங்கிற்று. “என் கணவருக்கு ஒரே காதல் காதல் என்பது தான் தாரகமந்திரமாயிற்று. காதலுக்குப் பின்னாலுள்ள கட மையைப்பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. என க்குக் கூடு கட்டித்தரவேண்டுமே, குஞ்சுகளைக் காப்பாற் றவேண்டுமே, என்ற கவலையே அவருக்குக் கிடையாது. ஒரு நாள் நானாக அவரிடம் நாம் ஒரு கூடுகட்டிக் கொள்ளவேண்டும்” என்று சொன்னேன். அவர் ஏளன மாக – நமக்கேன் இந்தத் தொல்லைகள் எல்லாம் – அதோ தெரிகிறதே காகக்கூடு; அதிலே போய் முட்டையை இட்டுவிட்டுவா. நாம் என்றைக்கும் போலக் காதல் காதல் என்று பாடிக்கொண்டேயிருப்போம்” என்றார்.

“எனக்குக் கோபம் வந்து விட்டது. என் வயிற்றிற் பாரம் கூடக்கூட எனக்குக் கோபமும் கூடிக்கொண்டே தான் இருந்தது. அந்தக் கோபத்தில் நான் நீங்களும் ஒரு ஆண்பிள்ளையா? காதல் செய்ய மட்டுந்தான் உங்களுக் குத் தெரியும். மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற் ற உங்கட்குத் திராணியில்லையா” என்றேன். அந்த நிமி ஷமே எனக்குக் கஷ்டகாலம் பிடித்துவிட்டது. மேன கையை விட்டுவிட்டு ஓடிய விசுவாமித்திரரைப்போல என் கணவரும் என்னைவிட்டுப் பிரிந்து ‘காதல் காதல் என்று பாடிக்கொண்டே பறந்து போய் விட்டார். அன் றைக்கே நானும் செத்துப்போயிருக்கலாம். ஆனால் என் குழந்தைகள்…”

“என் கணவர் பிரிந்ததும், மணமாகும் முன்பே கர்ப்பவதியாகிவிட்ட பெண்ணைப் போல என்னையும் சோகம் கவ்விக் கொண்டுவிட்டது. அன்று தொடக்கம் இன்று வரை சோக கீதத்தான் இசைக்கின்றேன். கடைசியாய் எனக்குப் பேறுகாலம் நெருங்கியதும் என் கணவர் கூறி யபடி, வேறு ஒரு வழியும் தோன்றாததால், காகக் கூட் டிலேயே முட்டை இட்டேன். இந்த யுக்தியையாவது என் கணவர் சொல்லித் தந்தாரே…”

குயிலி மறுபடியும் நீளக் குரல் எடுத்து அழத் தொடங்கிற்று.

கோகிலா குயிலியைச் சமாதானப்படுத்தும் எண்ணத்தோடு “குயிலி! கவலைப்படாதே. நாங்கள் கூடப் பிள்ளைகளைப் பெற்று, ஆயாவிடம் பாலூட்டி வளர்க்கக் கொடுப்பதில்லையா? உன் குஞ்சுகளும் காகத்தின் கூட்டிற் சந்தோஷமாக வளர்ந்து கொண்டிருக்கும்; பருவம் வந்ததும் உன்னிடம்….”

கோகிலா சொல்லி முடிக்க முன்னமே குயிலி கோபத்தோடு சொல்லிற்று. ‘என்மனசைத் தெரிந்து கொண்டுதானா இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்களும் ஒரு தாய் தானா? என் முட்டைகளைக் காகக் கூட்டில் இட்டுவந்த நாட் தொடக்கம் என் மனது எப்படி வேதனைப்படுகின்றது தெரியுமா? அன்று தொடக்கம் இன்றுவரை எனக்கு ஊண் இல்லை, உறக்கம் இல்லை. சதா காகக்கூட்டையே சுற்றிச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன். பொன்னான என் குஞ்சுகளைக் காண்பதற்காக ஒவ்வொரு வினாடியும் காகங்களாற் குட்டப்படுகிறேன். இன்றோ நாளையோ என் குஞ்சுகளையும்…… ஐயோ !”

குயிலி மறுபடியும் நீளக் குரல் எடுத்து அழுதது. அதன் அழுகைக் குரல் கோகிலாவின் மனோ உளைச்சலுக்குப் பகைப்புலமாக நின்றது. உடனே சிலையாய் கோகிலா மரத்துப்போய் நின்றாள்!

அத்தருணம் எதிரே தெரிந்த வேப்பமரத்தின் மேற் காகங்கள் ‘காகா’ என்று கரைந்து கொண்டே பறந்தன! வேண்டாத ‘சனியன்’ ஒன்று தங்கள் கூட்டத்திற் சேர்ந்து விட்டதால் அவைகள் அசூயையோடும், வெறுப் போடும் தங்கள் கூடு இருந்த மரத்தின் மேலும் கீழும் சுற்றிச் சுற்றி யுகாத்த காலத்து அழுகைக் குரல் எழுப் பிப் பறந்து கொண்டேயிருந்தன. கடைசியாகக் காகக் கூட்டில் இருந்து ஏதோ ஒன்று ‘பொத்’ தென்று கீழே விழுந்தது .

குயிலி ‘ஐயோ’ என்று கூவியபடியே தரையில் விழுந்த தன் குஞ்சை நோக்கி ‘விர்’ ரென்று பறந்து சென்றது. கோகிலாவும் தன்னை மறந்தவளாய் ஐயோ! என்றழுதாள்!

அழுது கொண்டிருந்த கோகிலாவின் முன்னால் ஆயா ராதாவைத் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள். கோகிலா வெடுக்கென்று பாய்ந்து ராதாவை ஆயாவிடமிருந்து பிய்த்தெடுத்துக்கொண்டு, அவள் மேல் ஆயிரமாயிரம் தடவை முத்தமிட்டாள். இந்த வெறி முத்தங்களைச் சகிக்க மாட்டாமல் ராதா அழுதாள். கீழே கிடந்த குயிற் குஞ்சும் கீச்சுக் குரலில் அழுதது.

அன்றிரவு, “நம் குழந்தைக்கு இனி ஆயா தேவையில்லை. அவளை நாளைக்கே அனுப்பி விடலாம்” என்று கோகிலா சொன்ன போது சுந்தரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது!

– வீரகேசரி-10-10-54

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *