கேரளத்தில் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 1,290 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

(அப்பா! நீங்கள் பெரிய ஆளாயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றாது. 

இதுயார்? எங்கிருந்தோ சென்று போன வருடங்களின் இருளினின்று ஒரு குரல் பிரிந்து கேட்கிறது. கட்டைக் குரல்.) 

தெருவில், பையன்கள் இருவர் பச்சை வாழை மரப் பட்டையால் ஒருவரையொருவர் அடித்து விளையாடிக் கொண்டு செல்கின்றனர். 

ஒருவன் தலைகீழாக ஒருவாத்துக் கொத்தைப் பிடித்த வண்ணம் விலை கூவிக் கொண்டு போகிறான். 

நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் நெரித்தது. புதுச் சரக்குகள் – காய்கறிக் கூடைகள், வாழைப் பழத்தார்கள், இலைக் கட்டுகள், கோணிகளில் தேங்காய், அரிசி, மாட்டுத் தீவனம், ஏதேதோ கைவண்டிகளில், லாரிகளில் இறங்கியவண்ணம் இருக்கின்றன, தெருவையடைத்துக் கொண்டு. அவைகளினிடையே, லாரிகள், பஸ்கள், போக்கு வரத்துக்கள். மனிதக் கால்நடை நெளிந்து நெளிந்து, வளைந்து வளைந்து, வைதுகொண்டு, திணறிக்கொண்டு, சிரித்துக்கொண்டு, தடுக்கி, இடறி, எப்படியோ தம்தம் வழியை வகுத்துக் கொண்டு 

இத்தனை சந்தடியில் ஒரு பிணக் கோலம், தாரை தப்பட்டையுடன். 

என்முறை எப்பவோ? சொல்லி விட்டுப் போகணும். 

“மிஸ்டர் ஜியார்ஜ், எனக்குச் சவப்பெட்டி அல்ல; எரு மூட்டை” என்று. 

இது என்ன பேத்தல்? நானே போன பின் என் சடலத் தின் பட்டுவாடா பற்றி ஏன் இந்தக் கவலை? அப்படி ஏன் தோன்ற மாட்டேன் என்கிறது? சந்ததி சந்ததியாக ரத்தத் தில் ஊறிப்போன சடங்குகள், பழக்கங்களினின்று சட்டென மனது ஏன் விடுவித்துக் கொள்ள மறுக்கிறது? எதைப்பற்றியும் என்னால் இப்போ செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. மிஸ்டர் ஜியார்ஜ், செலவுக்கு அவரிடம் ஒப்படைத்த பணத்தை இடுப்பில் இடுக்கிக் கொண்டு அங்கேயே ஒரு பலா அடியில் மண்வெட்டியால் குழி தோண்டி அப்படியே சவத்தை உருட்டிவிடுகிறாரோ என்னவோ? அவரைப்பற்றி எதற்கும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 

அம்மா சிரார்த்தத்தை உதறி விட்டதால் நான் மஹான் ஆகிவிடுவேனோ? கருணாகரன் என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே! 

“என் வயிற்றுப் பிழைப்பைக் கேரளத்தில் போட்டி ருக்கிறது. நான் பிரசுரமாக, தமிழ் நாட்டுக்கு என் எழுத்தை அனுப்ப வேண்டியிருக்கிறது. பத்திரிகைக்காரன் புத்தக வெளியீட்டுக்காரன் மோவாய்க்கட்டைத் தடவ அப்பப்போ இங்கைக்கும், சென்னைக்கும் ஷட்டில் ஆவற துங்கறது சாத்யமான காரியமா? வியாபாரத்தில் வார ண்ணுரெண்டை ரயில்காரனும், மதறாஸ் ஓட்டல்களும், ரூம்களும் வலிச்சிட்டுப் போகிற அளவுக்கு நான் எழுத் துக்கு அர்ப்பணமாகவில்லை. அர்ப்பணித்துக் கொள்ற தாவது, ஆட்டுக்குட்டியாவது. சப்பாத்திக் கள்ளியில் ஆட்டுக்குட்டி மாட்டிக் கிட்டால், அதை விடுவித்து அணைத்துக் கொள்ற மேய்ப்போன் பைபிளோடு சரி. இப்போ அது மாதிரி, நேர்ந்ததுன்னா, அங்கேயே குழி தோண்டி ஆட்டுக்குட்டியை அதனுள் போட்டு, மேலே வைக்கோலை மூட்டம் போட்டு, பச்சை வேர்க்கடலையை அவிச்சுத்தின்கற மாதிரி தின்றால் அது ஒரு தனிருசி. 

கருணாகரன் புத்தலை நடையை என்னிடம் பரிஷை பண்ணி பார்க்கிறாரா? சரியான cool man; cold blood. 

”வழிதப்பி, அர்ப்பணம், லக்ஷியங்களில் மாட்டிக் கொண்டு விட்டால், அவிச்ச ஆட்டுக்குட்டிதான். 

“அட்ஜஸ்ட்மெண்ட்! அட்ஜஸ்மெண்ட்! இப்போ வாழ்க்கையின் தத்துவம் அதுதான். தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது. வயித்தில் ஒண்ணு, வாயில் ஒண்ணு. அதுதான் அட்ஜஸ்ட்மெண்ட். ஓங்கின கைதான் குடை நிழல், அதுதான் புத்தலை…வார்த்தைகளை அளவு பார்த்து, இடம் பார்த்து, ஓசை பார்த்து, தோடு கட்டற நாளுக்கு சலாம் வெச்சாச்சு. எழுத்தும் ஒரு தொழிற்சாலை தான் ப்ரதர்! ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள். பக்கத்தை நிரப்பு.நிரப்பிக் கொண்டேயிரு. பேர் வந்த பிறகு திரும்பிப் பார்க்க உனக்கு நேரம் கிடையாது; வேண்டாம், நீ கொடுத்ததெல்லாம் உனக்கே கசந்தாலும் பக்கங்களுக்குச் சர்க்கரை, மக்கள், என்றைக்கும் குழந்தை கள்தான். சர்க்கரை தின்னிகள், கொடு அவங்களுக்கு, கன்றுக்குட்டிகள் பாலை மட்டுமா குடிக்குது? புல்லை மட்டுமா கடிக்குது? பேப்பர், கந்தைத்துணி எல்லாம்தான் தின்னுது! எதையும் ஜீரணம் பண்ண மாட்டுக்குத்தான் நாலு இரைப்பை இருக்கே! 

கருணாகரன் ஃபார்முக்கு வந்து விட்டார். இன்று அவரை இப்படி உந்த வைப்பது எதுவோ? 

சூரியன் கிழக்கே உதிச்சால் என்ன? மேற்கே உதிச்சால் என்ன? நமக்கு ஆகவேண்டியதென்ன? அது கிழக்கே உதயம் ஆகவில்லை.அது உதிக்கும் திக்கு கிழக்கு. இல்லை கிழக்குக்கு அப்போ என்ன பேரோ அது. அது அது ஒரு ஒரு பேர்தானே! ‘நம் எழுத்து உலகத்தின் நிலவரம் இப்போ அப்படியிருக்கு!’ 

சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டு, மீண்டும்: 

“புத்தலைப் பேச்சிலும் ஒரு கட்சி இருக்கு. அப்படி என்ன ஒரு அமர இலக்கியத்தைப் படைச்சுட்டோம்? எதுதான் அமரம்? எல்லாமே ஒண்ணுக்கு ஒண்ணு ஒப்பிடு தல்தானே! பாருங்க இந்த தாஜ்மஹால் படறபாட்டை! ஷாஜஹான் அதை ஒரு அழியாக் காவியமாக எண்ணி ஆளையும் பணத்தையும் கொட்டிக் காட்டினான். கட்டடமே ஆட்டம் காணுதாம், என்ன சொல்றீங்க? நீங்கள் பேப்பர் படிக்கிறீங்களா?” 

நான் உதட்டைப் பிதுக்கினேன். 

“எனக்கு இப்போதுதான் ஞாபகம் வரது. உங்களுக்கு ஒரு கடிதாசு வந்திருக்கு! அவருடைய கச்சாச் கணக்குப் புத்தகத்தைப் புரட்டி எவ்வளவ குங்குமம்! எவ்வளவு மஞ்சள்! இத்தனை குங்குமம், மஞ்சளில் நம்பிக்கை வைத்துக் கொண்டு இவர் எப்படி புது அலை ஆவார்?- ஏடுகளினிடையிலிருந்து ஒரு கவரை எடுத்துத் தந்தார். 

முன்னும் பின்னும் திரும்பிப்பார்த்தேன். அனாவசியம். பழக்கக் கோளாறு. தபால் முத்திரையை ஆராயும் திருட்டுப் புத்தி. அத்தக் கையெழுத்தை அடையாளம் கண்டதும் மார் படபடத்தது. 

“எப்போ வந்தது?”எங்கெங்கோ முத்திரை உதை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறது. 

“ஒரு வாரமாச்சு. நீங்களும் redirect விலாசம் தரல்லே. எங்கேயோ உள்ளே மூஞ்சூராட்டம் புதைஞ்சிருக்கீங்க. நீங்களே சொல்லாதபோது நான் எப்பிடிக் கேட்கறது. 

கண்டனத்துக்கும் -கருணாகரனுக்கு அவர் சொல்லி விட புன்னகை தான் ஆயுதம். சொல்லில் தைத்த முள்ளைப் புன்னகை எடுத்து விடும். என்றைக்கும் சிணுங்காத முகம். 

ஜேபியில் சொருகிக் கொண்டேன்.அப்புறம், சாவகாசமாகத் தனி நேரத்தில் ருசி பார்க்க வேண்டிய விஷயம். 

“இந்தக் கடிதாசுக்கு… Go கருணாகரன், கலியாணி பாத்திரக்கடை, சாலை, திருவனந்தபுரம் என்று று தானா கவே வர எப்படித் தெரிந்தது? 

“உங்கள் மகனிடமிருந்து, உங்கள் இருப்பிடம் விசாரிச்சு இந்தக் கடிதத்துக்கு முன்னால் ஒரு எழுத்து எனக்கு வந்தது. 

எனக்குத் தெரிஞ்ச நிலவரத்தை, இதுமாதிரி மூணு மாதம், அறு மாதத்துக்கு ஒரு முறை நீங்கள் கடைக்கு வந்து போவீர்கள் என்று எழுதினேன். 

எனக்குக் கன்னம் குறுகுறுத்தது. “உங்களிடம் நான் மெனெக்கெட்டு சொல்லியிருக்கும்போது 

என்னைக் காட்டிக் கொடுத்து விட்டேளே!” 

“காட்டிக் கொடுத்து விட்டேனா? என்னத்தைக் காட்டிக் கொடுத்துட்டேன்?” கருணாகரனுக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவர் குரலின் வெல்வெட்டும் கூடிற்று. ஆளுக்கு ஆள் பாணி வேறு. புது ஆத்திச்சூடியில் சேர்த்துக் கொள்ளணும். 

“நான் இருக்கும் இடம் சோடை கூடத் தெரியக்கூடா துன்னு உங்களைக் கேட்டுக் கொண்டேனே!” 

“இப்போ மாத்திரம் எனக்கென்ன தெரியும்? திடீர்னு வரீங்க, திடீர்னு மறைஞ்சு போறீங்க மலையாள சீமையில் வாசம் மாந்த்ரீகத்தில், கண் கட்டு வித்தை அரிச்சுவடி முதலில் படிஞ்சுவிடும் போல இருக்குது. 

இந்த மனுஷன் உண்மையிலேயே ரூடா இருக்கான். 

“கருணாகரன், நான் ஏதும் போலீஸ் குற்றம் செய்து விடல்லே. கடன் வாங்கி ஏமாத்திட்டு ஓடி ஒளியல்லே. இந்த சுதந்திர நாட்டில் என் அந்தரங்கம் என் உரிமை”. 

கருணாகரன் தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்துப் புன்னகை புரிந்தார். அவர் சைகை எனக்கு ஆத்திரத்தைத்தான் விளைவித்தது. அதற்குப் பல அர்த்தங்கள் பண்ணலாம். 

உன்னுடைய இந்த சவாலுக்கும் என் அம்புறாக் கூட்டில் அஸ்திரம் இருக்கு. ஆனால், நான் தொடுக்க மாட்டேன். 

இன்று போய் நாளை வா 

உலகம் நீங்கள் நினைக்கிற மாதிரி இப்போ அவ்வளவு பரந்ததில்லை. ஓடி ஒளியறதுக்கு உகந்ததில்லை. அது ஒரு கூண்டுதான். நீங்கள் உங்களை romanticise பண்ணிக் கிறீங்க. 

“ஓடி ஒளியல்லேன்னு நீங்கள் சொல்றீங்க. நான் என்னத்தைக் கண்டேன்?” 

“சண்டை போடவே மெனக்கெட்டு வந்தீங்களா?” 

ஓடி ஒளியணும்னு நினைக்கிறவனே அந்தரங்கத்தைத் தேடுபவனே குற்றவாளிதான். அந்தக் குற்றத்தை முடக்க இன்னும் சட்டம் ஏற்படவில்லை, அவ்வளவுதான். இந்த ரீதியில் இன்னும் எவ்வளவோ முடைந்து கொண்டு போகலாம். 

“அப்பா! உங்களிடம் ஒரு சுபாவம் அதை நீங்கள் உணர்ந்தீர்களோ இல்லையோ, உங்கள் புத்திக் கூர்மை உங்களையே வெட்டுமளவுக்கு அதைத் தீட்டி விட்டீர்கள். எதிராளிக்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் எல்லாப் பதிலையும் நீங்களே சொல்லி விடுகிறீர்கள். கேள்வியும் உங்களுடை யது. பதிலும் உங்களுடையதா? எதிராளிக்கு ஒண்ணுமே கிடையாதா? உங்களுடைய பதிலை அவன் வாயிலிருந்து எதிர்பார்க்கிறீர்களே தவிர, அவன் பதில்- அவனாகவே நினைத்து அவனிடமிருந்து அவனிச்சையில் வெளிப்படும் அவனுடைய பதில், அது நீங்கள் ஏற்கனவே நினைத்து விட்ட பல பதில்களில் அடங்கி விட்டாலும்…..” 

கருணாகரன் கெட்டி. இரண்டு கைகளையும் தட்டி னால்தானே ஓசையென்று சைகையில் இறங்கிவிட்டார். கெட்டிக்காரன். 

கடையேறி வந்து பையன் மௌனமாக நின்றான். அவனைக் கண்டதும் கருணாகரன் பரபரப்பாக எழுந்து இருளுள் மறைந்து சில நிமிடங்களுக்குப் பிறகு வெளிப் பட்டு வந்து பையன் கையில் கற்றையாய் நோட்டுக்களைத் திணித்தார். அவன் எண்ணக்கூட இல்லை. உடனே போய் விட்டான். 

பொம்மலாட்டம். 

“ஸார் என்னன்னு பார்க்கிறீங்களா?” 

அத்தியாயம்-4

எனக்கின்னும் ஊடல் தணியவில்லை. “நான்ஒண்ணும் பார்க்கல்லே. எனக்கென்ன வந்தது?” என்று எனக்கே முனகிக் கொண்டேன். 

“ஒரு ரொடேசன், எதிர்ச்சாரியில் ஒரு வெற்றிலை வியாபாரி ; பாய். இப்படி மாதத்தில் ஒருமுறை,இருமுறை, அஞ்சு, பத்து,பெரிசு உதவுவார். இரண்டு மூணு நாளைக்கு; மிஞ்சிப் போனால் ஒருவாரம். 

“வெற்றிலையில் அவ்வளவு பிரளுமா என்ன?”

“வெட்கக்கேடு! இந்தச் சீமையில் சோறு, தண்ணி ல்லாமல் இருந்தாலும் இருப்பா. வெற்றிலையும்,புகை யிலையும் இல்லாமல் முடியாது. ஏற்றுமதி வேறு, எக்கச் சக்கம். இராக், குவாய்ட், ஈரான், அங்கே போய்ச் சேரு வதற்குள் எவ்வளவு அழுகலோ. வாடலோ அவங்களுக்கே வதங்கல் வெற்றிலைதான் பிடிக்கும் என்கிற அளவுக்கு வெளியூர் நாக்கையே இவர் கட்டில் அடக்கி வெச்சிருக்கார். இவருக்கே வெற்றிலைத் தோட்டம் ஏக்கர் கணக்கில் ஓடுது. அதுவும் பத்தல்லே. கூடைகூடையா சரக்கு வேறே தினம் இறங்கிட்டே இருப்பதைப் பார்த்தால் எனக்குத் திணறுது: 

என்னுடைய பிரமிப்புக்கு ஒரு கணம் தயங்கினார். ஒப்புக்குத் தலையை அசைத்தேன். பசி வயிற்றைக் குடை கிறது. மணியோ ஓடிக் கொண்டே யிருக்கிறது. இவர்களிட மெல்லாம் இது ஒரு பெரிய கோளாறு. ‘அங்கே வாரும் பிள்ளாய் – என்று சபை நடத்துகிறார்கள். உன் சிண்டு என் கையில் என்று அப்பட்டமாயில்லாமல் அத்தனை விதமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாமும் தலையை இவர்களிடம் கொடுத்து விட்டு இவர்கள் வாயை எதிர் பார்த்துக் கொண்டுதானே நிற்கிறோம்! என்னதான் நம் ஒசத்தியை நம்மிடையே பீற்றிக் கொண்டாலும், நமக்கு குமாஸ்தா புத்திதானே!’ இவர்களைப்போல் துணிந் தடித்து ஒரு வியாபாரத்தில் இறங்குகிறோமா? அதற் கேற்ற நரம்பும் நமக்கு உண்டா? 

“வெற்றிலை, ஸ்பெகுலேஷன் பிஸினெஸ், வாய்ச் சான் போச்சான்” – என்று முனகினேன்.கருணாகரனுக் குக் கேட்டுவிட்டது! 

‘நாம் அப்படி நினைக்கிறோம். ஆனால் பாயி, தன் பதினோராவது வயதிலிருந்து இதிலேயே முங்கி முளச்சு, தாடியை உருவிக்கிட்டே ஆயுசு முழுவதையும் தாண்டி யாச்சு மூணுதாரம், இருவத்தி ஆறு சிசுக்கள்’- 

கருணாகரனுக்குக் கலியாணமாகி பதினைஞ்சு வருடங் களுக்குப் பிறகு சீமந்தத்துக்கு அவர் அச்சடித்திருந்த அழைப்பிதழ் ஒண்ணு மூணுபொறும். ஆனால் பாவம்! அந்த முயற்சி வீணாகிவிட்டது. இப்போ ஒரு பெண் ஏணையில் ஆடுகிறது – சோனி, என்னென்னவோ போஷாக்குப் பண்ணியாகிறது. இந்தக் கடவுள் இருக் கானே, அவன் விளையாட்டே வக்கிரம், 

“இன்னும் எல்லோரும் ஒருகுடும்பம்தான். பாயி வீடு அந்தக் காலத்துக்கோட்டை மாதிரி. அகழிதான் இல்லை. எல்லாரும் நைனாவுக்கு சேவுகம், நைனா இருக்கிறவரை அவங்களுக்கோ, அவங்க பீகம் ஸஹிபாக்களுக்கு எண்ணம் எப்படியிருந்தாலும் ஒண்ணும் நடக்காது. வெற்றிலைக்கு எடுக்கற மாதிரி, முதுகு நரம்பை உரிச்சிடுவாரு. ஏன், அத்தனையும் சுயார்ஜிதம். தினம் மட்டன் சூப்பில் அவனவன் பல்லால் கடிச்சுச் சுரண்டி சப்பற எலும்புத் துண்டு கூட ஐயாவுடையது. இந்த கூட்டுக்குடும்ப ஸிஸ்டம் இதிலே என்ன குறைவாயிருக்கு? இந்தப் பொருளாதார நிபுணர்களெல்லாம் என்னென்ன தியரியெல்லாம் பேசறாங் களே, எனக்கும்தான் தெரியல்லே.” 

இதே கருணாகரன் என்னிடம் ஒருமுறை சொல்லி யிருக்கிறார். அவருடைய தாயார் தனியாத்தானிருக்கிறா ளாம். இரண்டு மாடுகளை வைத்துக் கொண்டு பிழைக் கிறாள். “அம்மாகிட்டே தான் இன்னமும் எனக்கு வேண்டிய பாலை வாங்கிக்கறேன் – துட்டு கொடுத்துத் தான். அவள் அதிலே கெட்டி. ஆனால், அவள் கழுத்தில் தான் தேர் வடமாட்டம் நாலுபட்டைச் செயின் தொப்புள் வரை தொங்குது. இவளுதையெல்லாம் வியாபாரம் வியாபாரம்னு கடையில் போட்டாச்சு. வரப்போ இவளும் கொஞ்சமாக கொண்டு வரல்லே. என்ன செய்யறது? அம்மா தனியாக் குடித்தனம் செய்யக் காரணம்?’ அந்த மனோகரப்புன்னகை புரிந்த வண்ணம் கை விரிக்கிறார். “எல்லாம் வழக்கம் போல்தான். தொன்று தொட்ட காரணம்தான். ஒரே கூட்டில்ரெண்டு புலி. 

நான் குடும்பத்தை விட்டு ஓடி வந்தவன். 

எங்களிருவருக்கும் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிப் பேச என்ன வாய்ப்பு இருக்கிறது. 

வீட்டுக்கு வீடு வாசற்படி. 

“ஆனால் இப்போ வரவரக் கட்டி மேய்க்கறது கஷ்ட மாயிருக்கு துன்னு கேள்வி. வேளைக்கு நூறு இலை விளற வீடு குடும்பமா, காலனியா? ஆனால் இது கூடப் பராபரியா காதில் விழறதுதான். கிழவன் இருக்கிறவரை எவனும் ஒண்ணும் ஆட்டிக்க முடியாது. ஆனால் கிழவன் இப்போ தைக்குத் தலையைப் போடறதா இல்லை. உடம்பை அவ்வளவு கண்டிஷன்லே வெச்சிருக்காரு. என்ன லேகியம் சாப்பிடறானோ தெரியல்லே, அதுக்கும் இந்த சீமையில் பஞ்சமில்லை.” 

மறுபடியும் ஒரு தயக்கம்; வெடி குண்டுக்குத் திரி வைப்பதற்கு முன்னால். 

”ஆனால் அவர் ஒண்ணும் கொடுங்கோலன் அல்ல. நியாயம் தெரிஞ்ச மனுசன். நியாயம் வளங்கற மனுசன். ஒரு விசயம் பாருங்களேன். ரொடேசனுக்கு ஒரு வாரம் பத்துநாளைக்கும் விரல் வாங்கறேனே, ஐயா அதுக்குவட்டி வாங்கறதில்லே. இஸ்லாமில் வட்டி வாங்க அனுமதியில்லை எல்லோரும் சோதரர்கள். ஒருவருக்கொருவர் கடமைப் பட்டவர்கள்”- 

எனக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. “என்ன கருணாகரன், அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறீர்கள்!” 

“அதெல்லாம் ஒண்ணுமில்லே, வியாபாரம் மந்தம், நீங்கதான் பார்க்கரீங்களே, மணி டைட்-” 

“கருணாகரன், இதென்ன தூண்டில் விளையாட்டு? இதற்கெல்லாம் நான் லாயக்கில்லை.” 

“என்ன ஸார் உங்களுக்கு திடீர் மருட்சி? என்ன நடந்துட்டுது?” 

“உங்களை நம்பி என் முதல் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் வட்டியில்தான் ஏறவோ தாழ்வோ, நான் வயிறலம்பியாறது. வெற்றிலை சுல்தான் உங்களிடம் வட்டி வாங்காவிட்டால் நான் அவர் போல இருக்க முடியுமா? உங்களுக்குக் கஷ்டமானால் என் பணத்தைத் திருப்பிவிடுங்கள். 

கருணாகரன் ஓரிருகணம் திறுதிருவென விழித்தார். என் பேச்சு அவர் மண்டையில் ஊறியதும் அவர் முகத்தில் மூட்டம் பளிச்சென்று விலகி கையைக் கொட்டி விழுந்து விழுந்து சிரித்தார். புரைக்கேறி திணறி (இது ஒரு நடிப்பா? ராமா ஒண்ணும் புரியல்லியே!) ஒரு வாறு சமாளித்து : 

“டே டே! ரூட்டு அப்படி மாறிப்போச்சா? நான் ஏதோ வியாபார நிலவரத்தைப் பத்திப் பேசிக் கொண்டி ருந்தேன். அவ்வளவுதான். அதுக்குள் தாய், கன்னுக் குட்டியை உதைக்குதுன்னு அலண்டுட்டீங்களே! அட ராமா! இந்தப் பிராம்மணாள் இருக்காளே!…” மறுபடி சிரித்தார். அப்புறம் சொன்னார்… 

“ஸார் ஒண்ணு சொல்றேன் என்னுடைய இந்தப் புலம்பல், இன்று நேற்றையது அல்ல. இந்த பிஸினெஸ் பதினாலு வருடம் நடக்குது. இந்தப் புலம்பலும் கூடவே நடந்துட்டிருக்குது. அதனாலேயே அது புரட்டுன்னுநீங்கள் கொள்ளக் கூடாது. அதுவும் உண்மைதான். அதுதான் பிஸினெஸ். தவிர, உங்கள் பணத்தைத் திடீர்னு கேட்டால் என்னைப்போல் சின்ன வியாபாரி எங்கே போவது? உங்கள் பணம் எங்கேயும் ஓடிப் போயிடல்லே. இங்கே தான் எப்படி யெப்படியோ- (கடைச் சரக்கின் மேல் கைவீசிக் காட்டினார்)- எப்படியெப்படியோ முடங்கிக் கிடக்குது. நீங்கள் கேக்கறது எப்படியிருக்குன்னா உயிர் பிண்டம் பூமியில் விழுந்தப்புறம் இந்த உலகத்தைப் பார்த்து பயந்து, நான் திரும்பவும் கர்ப்பத்துக்கே திரும்பிட றேன்னா, அது நடக்கிற காரியமா? நியாயமா?” 

“கருணாகரன், உங்கள் பேச்சு தைரியம் தருவதா யில்லே. குரங்கு நியாயம் பேசறீங்க, பணியாரம்என்கையில் வந்தாச்சு. நான் பிடிக்கிற தராசுதான் உனக்கு உண்டு. இனி பணியாரத்தைப் பணியாரமா நீ பார்க்க முடியாது என்கறீங்க, அதானே?” 

”செச்சே! கனாவில்கூட அப்பிடி நான் நினைக்கல்லே. ஸத்யமா, யாரை ஏமாத்தினாலும் உங்களை ஏமாத்தமாட் டேன். பிராம்மண சாபம் பொல்லாது ஸார்- பூண்டோடு அறுத்துடும். அவள் நாலுமாதமா குளிக்கல்லே.உங்கள் ஆசியில், பிள்ளையாப் பிறக்கணும். 

அப்படியே நெடுஞ்சாங்கடையா காலில் விழுந்து விட்டான்.நான் எதிர் பார்க்கவில்லை. அதனால் தடுக்க முடிய வில்லை. 

”கருணாகரன், எழுந்திரும்! எழுந்திரும்! இப்போ என்ன நடந்து விட்டது?” எனக்கு என்னவோ போலாகி விட்டது. இப்போ நான் அவரை மன்னிப்புக் கேட்கிறேன். அவர் எழுந்ததும் முகம் சிவந்திருந்தது.கண் துளும் பிற்று. 

“ஸாருக்கு என் மேல் என்ன கடுப்போ தெரிய வில்லை. மூக்கை உறிஞ்சினார். 

“கருணாகரன் எனக்குப் பசி என்று நினைக்கிறேன்.” பதறிப் போனார். “அடடா! காலையில் ஆகாரம் பண்ணேளோ இல்லையோ, எழுந்திருங்க. கடையை அடைச்சுட்டு வீட்டுக்கே போகலாம்.” 

“இல்லை கருணாகரன் ஊர் திரும்பறேன். பன்னி ரண்டு மணி வண்டியைப் பிடிச்சால், சாப்பாட்டுக்கு வீட்டுக்கே போயிடலாம்.” 

என்ன சார் பல்டி? இருந்து சாப்பிட்டுவிட்டு, மாலை ஒரு மலையாளப் படம்- எங்கள் ப்ரேம் நஸீர், ஷீலா ஜோடி. நீங்கள் பார்த்தே ஆகணும். நடிப்பு என்ன என்று அப்புறம் நீங்களே சொல்லப் போறீங்க.” 

(ஹும்.உங்களைவிடவா?) 

“இரவு தங்கிட்டு காலை குழல்புட்டு தேங்காய்ப் பாலோடு சாப்பிட்டிருக்கீங்களா? என் மாமியார் ஸ்பெஷல், வந்திருக்காங்க 

“இல்லை கருணாகரன், நான் கிளம்பறேன். வீட்டில் போட்டது போட்டபடி அப்படியே வந்திருக்கேன். 

இவனோடு ஒருகணம் எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. இங்கு விட்டுக் கயண்டால் போதும். 

“என்ன ஸார், அவங்க சமைச்சு வெச்சுக்கிட்டு ஆ ஆவலோடு எதிர்ப்பார்த்துட்டிருக்காங்க. நீங்களே பசின் னீங்க.உடனே காலில் கஞ்சியை வடிச்சுக்கிட்டு நிக்கறீங்க.” 

‘இல்லை; அடுத்த தடவை பார்த்துக்கலாம்.’ பெருமூச்செறிந்தார். 

“ஏ பையா, பச்சை வாழைப்பழம் ஒரு இருபத்தி அஞ்சு வாங்கிவா — ஊம், ஜல்தி” 

நான் கடையை விட்டு இறங்கி விட்டேன். 

“என்ன ஸார், பணம் வேண்டாமா?” 

“ஓ, ஸாரி, தாங்ஸ்.”

– தொடரும்…

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *