காலம் ரொம்ப மாறிப் போயிடுத்து…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 4,252 
 
 

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2

அனந்த கிருஷ்ணன் MA, BL படித்து விட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு முண்ணனி வழக்கறிஞராக வேலைப் பார்த்து வந்தார்.அவா¢டம் ரெண்டு ஜூனியர் வக்கில்கள் வேலை செய்து வந்தார்கள்.

அனந்த கிருஷணன் காலையிலே எழுத்து குளித்து விட்டு, பட்டை பட்டையாக விபூதி இட் டுக் கொண்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு ‘டைனிங்க் டேபிளில்’ வந்து உடகார்ந்துக் கொண்டு,தன் மணைவியைக் கூப்பிட்டு “வசந்தா எனக்கு ‘டிபனைக் குடு” என்று சொன்னார்.
சமையல் அறையிலே இருந்த வசந்தாவுக்கு குக்கர் போட்டுக் கொண்டு இருந்த சத்ததில் கணவன் கூப்பிட்டது கேடகவில்லை.

ரெண்டு நிமிஷம் ஆகியும் மணைவி ‘டிபன் கொண்டு வராமல் இருக்கவே,அனந்த கிருஷ்ண ன் பொறுமை இழந்து, உரத்த குரலில் “வசந்தா வசந்தா” என்று கூப்பிட்டார்.
அப்போது தான் குக்கரை அணைத்த வசந்தா காதில் கணவர் கத்திக் கூப்பிட்டது கேட்டது.

‘என்னவோ ஏதோ.ஏன் இப்படி என் பேரை ரெண்டு தரம் உரக்கக் கத்தி ‘இவர்’ கூப்பிடறார். ‘இவர்’ அப்படி கத்தி எல்லாம் என்னே கூப்பிட மாட்டாரே’ என்று பயந்துப் போய் சமையல் அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள் வசந்தா.

“என்ன ஆச்சு.ஏன் இப்படி என் பேரை ரெண்டு தரம் உரக்கக் கத்தி கூப்பிட்டேள்.நான் பயந்தே போயிட்டேன்.கண்ணே வேறே மூடிண்டு உக்காந்துண்டு இருக்கேள்.உங்களுக்கு உடம்பு சா¢ இல்லை யா என்ன.ஏண் உங்க ரெண்டு கண்ணேயூம் மூடிண்டு இருக்கேள்”என்று பயந்துக் கொண்டே கேட்டாள் வசந்தா.

“ என் உடம்புக்கு ஒன்னும் இல்லே.நான் கல்லாட்டும் தான் இருக்கேன்.நான் ‘டைனிங்க் டேபிள்ளே’ வந்து உக்காந்துண்டு, உன்னே ‘எனக்கு டிபன் குடு’ன்னு கேட்டேன்.ஆனா ரெண்டு நிமிஷம் ஆயும் உன் தலையையே காணோம்.நான் கேட்டது உன் காதிலெ விழலே போல இருன்னு நினைச்சி,நான் உன் பேரே ரெண்டு தரம் கூப்பிட்டேன்.நான் உன் பேரேத் தானேக் கூப்பிட்டேன். பக்கத்தாத்து சாந்தா மாமி பேரேக் கூப்பிடலையே” என்று கிண்டல் அடித்தார் அனந்த கிருஷ்ணன்.

“அந்த ஆசை வேறே இருக்கா உங்களுக்கு இந்த வயசிலே.இனிமே நீங்கோ கல்லாட்டும் இருக் கேன்னு வேறுமனே சொல்லாதீங்கோ.கேக்கறவா கண்ணு பட்டு விடப் போறது.நீங்கோ அந்த மாதிரி இருந்தாத் தானே,நான் ஒரு ‘சுமங்கலியா’ போக முடியும்”என்று சொல்லி தன் கண்களைத் துடைத் துக் கொண்டு “நீங்கோ பூஜை அறைக்குப் போனதே நான் பாத்தேன்.மந்திரங்களே எல்லாம் இன்னிக் கு ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டு வந்து இருக்கேள் போல இருக்கே.இன்னேக்கு நீங்கோ கோர்ட்டுக்கு சீக்கிரமா போகணுமா என்ன” என்று கேட்டாள் வசந்தா.

“நீ என்னே கேள்விக் கேட்டே இன்னும் ‘லேட்’டாக்கறயே.சீக்கிரமா டிபனைக் குடு வசந்தா” என்று கொஞ்சம் சத்தம் போட்டுச் சொல்லவே,வசந்தா சமையல் ரூமுக்குப் போய் பொங்கலுக்கு சட்னியே அரைத்து விட்டு,பொங்கலையும் சட்னியையும் கணவர் முன்னால் வைத்தாள்.பொங்கலை ரசித்து சாப்பிட்டுக் கொண்டு “பொங்கல் இன்னேக்கு ரொம்ப நன்னா.எனக்கு இன்னைக்கு ஒரு முக் கியமான கேஸ்.அதுக்கு எல்லாம் தயார் பண்ணனும்.அதான் நான் சுவாமி மந்திரங்களை எல்லாம் கொஞ்சம் குறைவா சொல்லிட்டு ‘டிபன்’ சாப்பிட வந்து உக்காந்துண்டேன்”என்று சொன்னார்.

‘டிபனை’ சாப்பிட்டு விட்டு,தன் ‘கோர்ட்’ டிரஸ்சைப் போட்டுக் கொண்டு கேஸ் கட்டை கையிலே எடுத்துக் கொண்டு கோர்ட்டுக்கு கிளம்ப தயாரானார் அட்வகேட் அனந்தகிருஷ்ணன்.

”என்ன வசந்தா எங்கே பிள்ளையாண்டான் மகேஷை காணோம்.காலையிலேயே வெளியிலே யே கிளம்பிட்டானா.பொண்ணு ரேவதியையும் ஆத்லே காணோம்” என்று கேட்டார் அடவகேட்.

“ஆமாம் பாடத்லே ஏதோ சந்தேகமாம்,அவன் ‘பிரண்ட்’ அசோகனிடம் கேககப் போய் இருக் கான் மகேஷ்.இன்னைக்கு வெள்ளிக் கிழமையோன்னோ அம்பாளுக்கு கொஞ்சம் பூவும்,தேங்காய், வெத்திலைப் பாக்கு எல்லாம் வாங்கீண்டு வர ரேவதியைக் கடைக்கு அனுப்பி இருக்கேன்” என்று பதில் சொல்லி விட்டு கொண்டு ரெண்டாம் ‘டோஸ்’ ‘காபீ’யை கணவன் முன்னால் வைத்தாள் வசந்தா.

ரெண்டாம் ‘டோஸ்’ ‘காபி’யை ரசித்து குடித்துக் கொண்டே அட்வகேட் “இவன் கேக்கற சந்தேகத்திற்கு பதில் சொல்லி பாவம் அந்த பையன் தனக்கு இருக்கிற மூளையும் மழுங்கி விடாம இருக்கணும்” என்று கிண்டல் அடித்தார்.

”பேசாம இருங்கோ.நம்ப பையனை சதா கிண்டல் பண்றது உங்களுக்கு வேலை. உங்களுக்கு மணி ஆறது.சட்டு புட்டுன்னு கிளம்புங்கோ. கோர்ட்டுக்கு ‘லேட்’டாகப் போறது.ஏதோ முக்கியமான ‘கேஸ்’ இருன்னுன்னு சொன்னேளே.பையனைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு எல்லாமே மறந்துப் போயிடும்” என்று சொல்லி கணவனை விரட்டினாள் வசந்தா.

அந்த வருஷம் மகேஷ் ப்ளஸ் டூ பாஸ் பண்ணிவிட்டான்.கணவனும் மணைவியும் கலந்துப் பேசி மகேஷை ‘டொனேஷன்’ கொடுத்து ஒரு B.E. பட்டப் படிப்பு படிக்க ஒரு கல்லூரியில் சேர்த்தார்கள்.

நான்காவது வருடஇறுதியிலே ‘சிறந்த ஆண்’ ‘சிறந்த பெண்’ போட்டித் தேர்வு நடந்தது.சுருள் சுருளான தலை முடியுடன்,நல்ல கலராகவும், நல்ல ‘பர்ஸனாலிட்டியும்’,ஐந்து அடி ஆறு அங்குலம் உயரமாக இருந்த மகேஷ் தான் ‘சிறந்த ஆண்’ என்று தேர்வு செய்து மகேஷூக்கு ஒரு ‘ஷீல்ட்’ கொடு த்தார்கள் தேர்வுக்கு வந்த கமிட்டி.

எல்லா மாணவர்களும் மாணவிகளும் மகேஷூக்கு ‘கன்கிராஷூலேஷன்ஸ் ‘ என்று சொல்லி அவன் கையை குலுக்கினார்கள்.மகேஷூக்கு தான் தான் இந்த கல்லுரியிலே ஒரு ‘சிறந்த ஆண்’ என்கிற பட்டத்தை பெற்றதற்கு தன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், கடவுளுக்கும் தன் நன்றிகளை மனதில் சொல்லிக் கொண்டான்.

வீட்டுக்கு வந்து மகேஷ் தனக்குக் கிடைத்து இருங்க்கும் ‘ஷீல்டை’க் காட்டினான்.உடனே அட்வகேட்டும்,வசந்தாவும், ரேவதியும் அவன் கையைக் குலுக்கி ‘கன்கிராஜுலேஷன்ஸ் சொன்னார் கள்.வசந்தா “மகேஷ் இப்படி வந்து கொஞ்சம் உக்காரு.எல்லார் கண்ணும் உன் மேலே பட்டு இருக்கும் நான் உனக்குச் சுத்திப் போடறேன்” என்று சொல்லி விட்டு ஒரு பிடி மிளகாயையும், ஒரு பிடி உப்பை யும் கொண்டு வந்து மூனு தடவை நன்றாகச் சுத்திப் போட்டு விட்டு நெருப்பில் போட்டு பொசுக்கினாள்.

நான்கு வருட படிப்பு முடிந்து பட்டதாரியான மகேஷ் ஒரு ‘மெக்கானிக்கல்’ கம்பனியில் இஞ்சி னியராக வேலைக்கு சேர்ந்தான்.அட்வகேட்டுக்கும் வசந்தாவும் மிகௌம் சந்தோஷப் பட்டார்கள்.

ஒரு நாள் சாயங்காலம் மகேஷ் ‘ஸ்பென்ஸர் ப்ளாஸாவிலே’ இருந்த ‘காபி டேயில்’ சமோசா ‘ஆர்டர்’ பணி விட்டுக் காத்துக் கொண்டு இருந்தான்.காலியாக இருந்த அவன் ‘டேபிளின்’ எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள் ரஸியா.

சமோசா வரும் வரையில் அழகு பொம்மையாக இருந்த ரஸியாவிடம் பேச்சுக் கொடுத்து, தன் னை அறிமுகப் படுத்திக் கொண்டான்மகேஷ்.பதிலுக்கு ரஸியாவும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.ரஸியாவுக்கு மகேஷின் ‘பர்சனாலிட்டி’ ஒரு கிளு கிளுப்பைப் கொடுத் தது.தனக்கு வந்த சமோசாவை ரஸியா கிட்டேத் தள்ளி விட்டு சமோஸா கொண்டு வந்த பேரா¢டம் மறுபடியும் தனக்கு சமோசா ஆர்டர் பண்ணீனான் மகேஷ்.
ரஸியா ஆச்சா¢யப் பட்டாள்.

உடனே மகேஷ் “என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க.நான் எனக்காகத் தான் அந்த சமோசா வை ஆர்டர் பண்ணினேன்.நான் உங்க கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருக்கலாம் என்கிற சுய நலத்திலே தான் அப்படி செஞ்சேன்.நான் செஞ்ச்து உங்களுக்குப் பிடிக்கலைன்னா, நீ அந்த சமோசாவை என் கிட்டே தள்ளி விடுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.மகேஷ் சிரிப்பிலும் ரஸியா தன்னை ஒரு நிமிஷம் மறந்தாள்.

உடனே ரஸியா “இருக்கட்டுங்க.உங்களுக்கு நீங்க ஆர்டர் பண்ன சமோசா வந்தவுடன், ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடலாம்” என்று சிரித்துக் கொண்ட்டு சொன்னாள்.ரசியா சிரிப்பிலே த்ன்னை பற் கொடுத்தான் மகேஷ்.’பேரர்’ சமோசாவைக் கொண்டு வந்துக் கொடுத்ததும் இருவரும் தங்களைப் பற்றி நிறைய பேசினார்கள்.’காபி ‘வந்ததும் இருவரும் குடித்தார்கள்.மகேஷ் பில்லுக்கு ‘பே’ பண்ணி விட்டு அடிக்கடி சந்தித்து வர ஆசைப் பட்டார்கள்.

ஒரு ஆறு மாசம் பழகி வந்த பிறகு இருவரும் ஜாதி பேதம் பார்க்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவு பண்ணினார்கள்.

மகேஷ் வேலைக்கு சேர்ந்து மூன்று வருஷம் ஆகி இருக்கும்.திடீரென்று ஒரு நாள் மகேஷ் “அப்பா,அம்மா நான் ஒரு துலுக்கப் பெண்ணை மனசார காதலிக்கிறேன்.நான் கல்யாணம் பண்ணி ண்டா அவளைத் தான் பண்ணிப்பேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

திடுக்கிட்டுப் போனார்கள் அட்வகேட்டும்,அவர் மணைவியும்.

சற்று நேரம் கழித்து “ஏண்டா நம்ம ஜாதியிலே இருக்கிற பொண்களை விட்டுட்டு,நீ வேறே ஜாதிப் பொண்ணேக் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்ன்னு பிடிவாதம் பிடிக்கிறயேடா.இந்த கல்யாணத்துக்கு நாங்க எப்படிடா உனக்கு சம்மதம் தர முடியும்.உனக்கு மூளை இருக்கா,இல்லை திடீர்ன்னு பயித்தியம் பிடிச்சுட்டதா என்ன” என்று சொல்லி கத்தினாள் வசந்தா.

அட்வகேட் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.வசந்தா சொன்னதுக்கு பிள்ளையண் டான் என்ன பதில் சொல்லப் போறான்னு அவன் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

”அம்மா,உங்களுக்கு பிடிக்காட்டா என்ன.எனக்கு அந்த பொண்ணே ரொம்ப பிடிச்சு இருக்கு. அவளுக்கும் என்னே ரொம்பப் பிடிச்சு இருக்கு.நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பிப் போய் விட்டான் மகேஷ்.

இடிந்துப் போனார்கள் அட்வகேட்டும், அவர் மணைவியும்.

அட்வகேட் கூடப் பிறந்தவர்கள் நாலுப் பேர் கள்.வசந்தா கூடப் பிறந்தவர்கள் மூன்று பேர்கள். ஒருவர் குடும்பத்திலும் இந்த மாதிரி துலுக்க சம்பந்தம் இல்லை.’மகேஷ் ஆசைப் படறான்னு,நாம ஒரு துலுக்கப் பெண்ணை நாம இந்த குடும்பத்லே சம்மந்தம் பண்ணீண்டா,மத்த உறவுக்காரா எதிரிலே எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்’ என்று கவலைப் பட்டார்கள் அட்வகேட்டும்அவர் மணைவியும்.

வெளியே போன மகேஷ் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்பினான்.

உள்ளே நுழைந்ததும் வசந்தா அவனிடம் “டேய் நாங்க சொல்றதேக் கொஞ்சம் கேளுடா.அந்த துலுக்கப் பொண்ணே நீ கல்யாணம் பண்ணிக்காதேடா.நம்ம உறவுக்காரா எல்லார் ஆத்லேயும் நல்ல பிராமண சம்மந்தம் தாண்டா பண்ணீண்டு இருக்கா.நீ அந்தத் துலுக்கப் பொண்ணே கல்யாணம் பண்ணிண்டா,அவ எதிரிலேயும்,நானும் அப்பாவும் எப்படிடா தலே நிமிந்து நடக்க முடியும்டா,நீ அதே கொஞ்சம் யோஜனைப் பண்ணுடா.அந்த துலுக்கப் பொண்ணு வேணாம்.நானும் அப்பாவும் உனக்கு உன்னாட்டும் நன்னாப் படிச்ச ஒரு நல்ல பிராமணப் பொண்ணாப் பாத்து ‘ஜாம்’’ ஜாம்’ன்னு கல்யாணம் பண்ணி வக்கறோம்” என்று மகேஷை கெஞ்சினாள் வசந்தா.

“நான் அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போறேன்.இது தான் என் முடிவு” என்று சொல்லி விட்டு,ஒன்னும் சாப்பிடாமல் தன் ரூமுக்குப் போய் கதவை சாத்திக் கொண் டான் மகேஷ்.வசந்தா மகேஷ் ரூமைத் தட்டி “ராத்திரி ஒன்னும் சாப்பிடாம படுத்துக்காதேடா மகேஷ். அப்புறமா நடு ராத்திரியிலே வயத்தே இழுத்துப் பிடிச்சக் போறது” என்று சொன்னதற்கு “அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது.நீங்கோ கவலைப் படாதீங்கோ.நான் வெளியிலே சாப்பீட்டு விட்டுத் தான் ஆத்துக்கு வந்து இருக்கேன்” என்று பதில் சொன்னான் மகேஷ்.

இடிந்துப் போனார்கள் இருவரும்.

விடிந்ததும் யாரிடமும் ஒன்றும் பேசாமல் இருந்தான் மகேஷ்.

அட்வகேட்டுக்கு கோவம் வந்து ”இதோ பார் மகி.நீ அந்த துலுக்கப் பெண்ணைத் தான் கல்யா ணம் பண்ணிக் கொள்றதா இருந்தியான்னா,நீ ஆத்து வாசப் படியை மறுபடியும் மிதிக்காதே. அப்படி யே அந்தத் துலுக்க்ப் பொண்ணோடு போயிடு.நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பிள்ளையே இல்லே ன்னு நினைச்சி,உன்னே தலை முழுகிடறோம்” என்று கத்தினார்.

‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு கிளம்பும் போது மகேஷ் “நான் கிளம்பிப் போறேன்.இனிமே இந்த ஆத்து வாசப்படியை நான் மறுபடியும் மிதிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு கிளம்பிப் போய் விட்டான்.

உடனே அட்வகேட் ‘பாத் ரூமு’க்கு போய் ‘தட’’ தட’ வென்று தன் தலையில் பச்சைத் தண்ணீ ரைக் கொட்டிக் கொண்டார்.ஈரத் துண்டோடு வெளியே வந்த அவர் “வசந்தா,நமக்கு மகேஷிடம் இரு ந்த உறவு முடிஞ்சுப் போயிடுத்து.நீயும் போய் அவனுக்கு தலேயே முழுகிட்டு வா” என்று கோபமாகச் சொல்லி விட்டு தன் ரூமுக்குப் போய் விட்டார்.

வசந்தாவுக்கு தன் ஆத்துக்காரர் பண்ணது கொஞ்சமும் பிடிக்கவில்லை.கொஞ்ச நேரம் யோஜ னைப் பண்ணீனாள் வசந்தா.

’’அவர்’ என்ன பண்ணுவார் பாவம்.நல்ல தனமா ‘அவரும்’ நானும் மகேஷூக்கு நிறைய சொன் னோம்.ஆனா அவன் கேக்காம பிடிவாதமா ‘நான் அந்தத் துலுக்கப் பொண்ணேத் தான் கல்யாணம் பண்ணீப்பேன்னு ,சொன்னதோடு மட்டும் இல்லாம ‘அவர்’ கோவமா சொன்னதுக்கு, மகேஷூம்,’நான் இனிமே இந்த ஆத்து வாசப்படியை மறுபடியும் மிதிக்க மாட்டேன்’னு சொல்லிட்டு,வெளியே போய் விட்டான்.’அவருக்கு’க் கோவம் வந்து அப்படி பண்ணார்.என்னையும் பண்ணச் சொன்னார்’ என்று மனதில் சொல்லி கொண்டு தன்னை தேத்தறவு பண்ணிக் கொண்டாள்.

அனந்த கிருஷ்ணன தன் உறவுக்காரர்களுக்கும்,வசந்தா உறவுக்காரர்களுக்கும் மகேஷ் பண்ணக் ‘காரியத்தை’ சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.எல்லா உறவுக்கார்களுக்கும் அனந்த கிருஷண னுக்கும் வசந்தாவுக்கு தங்கள் வருத்ததைத் தெரிவித்தார்கள்.

வீட்டைவிட்டு ‘பாகடரி’க்குப் போனான் மகேஷ்.’நாம இனிமே சென்னையிலே இருக்கக் கூடாது’ என்று முடிவு பண்ணினான்.

சாயங்காலம் ரஸியாவைப் பார்த்து “ரஸி,நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்றதே எங்க அப்பாவும்,அம்மாவும் விரும்பவே இல்லே.அவங்க கோவம் வந்து என்னே வீட்டு வாசப் படியே மறுபடியும் மிதிக்காதேன்னு சொல்லிட்டாங்க.எனக்கு இனிமே சென்னையிலே இருக்கறது விருப்பமே இல்லே.என்னைக்காவது நாம அவங்க கண்லே படுவோம்.அதனால்லே நான் பெங்களுருக்கு மாத்தல் கேட்டு போயிடலாம்ன்னு ஆசைப் படறேன்.நீ என்னோடு பெங்களுருக்கு வறயா.நாம ரெண்டு பேரும் பெங்களுருக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம். நீ என்னோடு பெங்களுருக்கு வர முடியு மா ரஸி ‘ப்ளீஸ்’ ”என்று ரஸியாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டான் மகேஷ்.
“அப்படியா,மகேஷ் கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் என் ‘சிஸ்டர்’ கிட்டே நம்ம காதலைப் பத்தி சொல்லி,உங்க தர்ம சங்கடத்தையும் சொல்றேன்.அவங்க நிச்சியமா ஒத்துக்குவாங்க.நீங்க எனக்கு ரெண்டு மாசம் ‘டயம்’ குடுங்க.இந்த வருஷம் காலேஜ் முடிந்ததும்,நான் என் வேலையை ‘ரிஸைன்’ பண்ணிட்டு,உங்கக் கூட நான் பெங்களுருக்கு வறேன்.நான் பெங்களுரிலே ஏதாவது ஒரு காலேஜ்லே ஒரு ‘லெக்ச்சரர்’ வேலையைத் தேடிக்கறேன்.நாம அங்கே நம்ம கல்யாணத்தே பண்ணீக் கலாம்” என்று சொன்னதும் மகேஷ் மிகவும் சந்தோஷப் பட்டு ரஸியாவை ‘தாங்க்’ பண்ணீனான்.

மகேஷ் ரசியா ‘ரிசைன்’ பண்ணும் வரைக்கும் ஒரு ஹாஸ்டலில் தங்கி இருந்தான்.

மகேஷ் அவன் கம்பனி ‘மானேஜ்மெண்டை’தனக்கு பெங்களுருக்கு மாற்றல் கேட்டான். அவர்களும் மகேஷூக்கு மாற்றல் தருவதாக ஒத்துக்கொண்டார்கள்.ரெண்டு மாதம் ஆனதும் ரஸியா தன் வேலையை ‘ரிசைன்’ பண்ணினாள்.ரஸியா தன் வேலையை ‘ரிசைன்’பண்ணீனவுடனே,மகேஷ் பெங்களூர் மாற்றல் வாங்கிக் கொண்டு ரஸியாவுடன் பெங்களூர் வந்து சேர்ந்தான்.

ரேவதி ‘ப்ளஸ் டூ’ படித்து முடித்தவுடன் அனந்த கிருஷ்ணன் அவளை BA சேர்த்தார்.

ரெண்டு வருஷம் ஆனதும் ரேவதி BA பாஸ் பண்ணினாள்.

வசந்தாவின் அண்ணாவின் ‘ஷஷ்டியப்த பூர்த்தி’ வந்தது.தன் ‘கோர்ட்’ வேலைக்கு ஒரு நாலு நாள் லீவுப் போட்டு விட்டு,அனந்த கிருஷ்ணன்,மணைவி வசந்தாவையும்,பெண் ரேவதியையும் அழைத்துக் கொண்டு,தன் மைத்துனா¢ன் ‘ஷஷ்டியப்த பூர்த்தி’க்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்பிட்ட தினத்தில் சபேசனுக்கும்,அவர் மணைவி மதுரத்துக்கும் ‘ஷஷ்டியப்த பூர்த்தி ‘விழா மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

அடுத்த நாள் அனந்தகிருஷ்ணணும்,வசந்தாவும் சபேசனிடமும், அவர் மணைவி மதுரத்திடமு ம்,அவர்கள் கடைசி பையன் சுந்தருக்கு தங்கள் பெண் ரேவதியைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஆசைப்படுவதாய் சொன்னார்கள்.இந்த சம்பந்தம் சபேசனுக்கும் மதுரத்துக்கும் பிடித்து இருந்தது. இருவரும் அனந்த கிருஷ்ணண் இடமும்,வசந்தா இடமும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

சென்னை திரும்பி வந்த அட்வ்கேட் தம்பதிகள் அன்றே ரேவதியின் ஜாதகத்தை ‘கொரியர்’ பண்ணார்கள்.அவர்களுக்கு சுந்தரின் ஜாதகம் ‘கொரியா¢ல்’ கிடைத்தவுடன் ஆத்து வாத்தியாரை வர வழைத்து ஜாதகப் பொருத்தம் பார்க்க சொன்னார்கள்.

ரெண்டு ஜாதகத்தையும் ஒரு மணி நேரம் பார்த்த வாத்தியார் “ரெண்டு ஜாத்கமும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்கு” என்று சொன்னதும் அட்வகேட்டும்,வசந்தாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.அட்வகேட் வத்தியாருக்கு தக்ஷணையைக் கொடுத்து அனுப்பினார்.

ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளில் அனந்த கிருஷ்ணன் தம்பதிகள் தங்கள் பெண் ரேவதியை சுந்தருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள்.

ரேவதி மதுரையில் தன்னுடைய கணவன் சுந்தருடன் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தாள்.

அடுத்த வருஷம் கழித்து ரேவதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தைக்கு ‘தேவி’ என்று பேர் வைத்தார்கள்.கோர்ட்டில் ‘லீவு’ கிடைத்ததும் அனந்த கிருஷ்ணனும் வசந்தாவும் மதுரைக்குப் போய் தங்கள் பேத்தியைப் பார்த்து விட்டு ரெண்டு நாள் மதுரையிலே தங்கி இருந்து விட்டு சென்னைக்கு வந்தார்கள்.
இருபது வருஷங்கள் ஓடி விட்டது.

மதுரையில் வசித்து வந்த அட்வகேட்டின் பேத்தி தேவிக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பு படிக்க சீட் கிடைத்தது.

ரேவதியும்,சுந்தரும் மிகவும் கேட்டுக் கொண்டதால்,அட்வகேட்டும் வசந்தாவும் மிகவும் சந் தோஷப் பட்டு தேவியை அவர்கள் வீட்டில் வைத்துக் கொண்டார்கள்.தேவியும் தாத்தா பாட்டில் தங்கி வந்து தன் ‘மெடிக்கல்’ படிப்பைப் படித்துக் கொண்டு வந்தாள்.

சபேசனும்,மதுரமும் அனந்த கிருஷ்ணனையும் வசந்தாவையும் மிகவும் ‘தாங்க்’ பண்ணினார்கள்.

நான்கு வருஷ படிப்பு முடிந்ததும் ஒரு பொ¢ய ‘நர்ஸிங்க் ஹோமில்’ டாக்டர் வேலை கிடைத்தது தேவிக்கு.

அன்று கோர்ட்டில் ஒரு முக்கியமான வழக்கு.

மாலை வழக்கு முடிந்ததும் அட்வகேட் வெளியே வந்தார்.

கோர்ட் வாசலில் ஒரு இள வக்கீல் வாசலில் நின்று கொண்டு இருந்தான்.

அவன் மெல்ல தயங்கி தயங்கி வந்து “சார் நான் வக்கீல் படிப்பு படிச்சு ரெண்டு வருஷம் ஆவுது. எனக்கு சட்டங்களின் நுணுக்கங்கள் நல்லா தெரியும்.நான் உங்க கிட்டே ஜூனியராக சேரனும்ன்னு ரொம்ப ஆசைபடறேன். என்னை தயவு செஞ்சி உங்க ‘ஜூனியரா’க சேத்துக்க முடியுமா சார்” என்று கெஞ்சிய குரலில் கேட்டான்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தார் அனந்தகிருஷ்னன்.அந்தப் பையன் நல்ல வாட்ட சாட்டமாக நல்ல நிறத்துடன்,அழகாக இருந்தான்.

சற்று நேரம் யோசிச்சு விட்டு “சா¢,நீ இந்த சனிக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கா என் ஆத்துக்கு வா” என்று சொல்லி விட்டு தன் காரை ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் அட்வகேட்.

அன்று சனிகிழமை.மணி சா¢யாக ஆறடிதது.

வாசல் ‘காலிங்க் பெல்’சத்தம் கேட்டது.கதவை திறந்தார் அடவ்கேட்.

வாசலில் கோர்ர்ட் வாசலில் பார்த்த பையன் நின்றுக் கொண்டு இருந்தான்.

”உள்ளே வா” என்று சொல்லி விட்டு ஹாலில் இருந்த சோபாவில் அவர் உட்கார்ந்தார். அவ னையும் உட்காரச் சொன்னார் அட்வகேட்.

“உன்னுடைய பேர் என்ன” என்று கேட்டார் அட்வகேட்.உடனே அந்த இளைஞன் “என் பேர் பீட்டர் சார்” என்று பவ்மாகச் சொன்னான்.

அடவ்கே அந்த பையனுடைய சட்ட அறிவை சோதித்துப் பார்க்க ஆசைப் பட்டு பல சட்ட நுணுக்கங்களை எல்லாம் கேட்டார்.

அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் திறம்பட பதில் அளித்தான் பீட்டர்.

பிறகு அட்வகேட் அவன் அப்பா அம்மா ரெண்டு பேருடைய விவரத்தைக் கேட்டார்.

உடனே பீட்டர் “என் அம்மா பேர் மோ¢ங்க.அவங்க பெங்களூர்லே ஒரு காலேஜ்லே ‘லெக்சரரா’ வேலை பண்றாங்க.என் அப்பா பேர் மகேஸ்வரன்.அவர் ஒரு ‘பாய்லர் எக்ஸ்பர்ட்’.அடிக்கடி வெளி ஊர்லே ‘கன்ஸல்டன்ட்’ வேலேக்குப் போய் வறார்.என் அப்பா அம்மா ரெண்டு பேரும் ‘இன்டர்-காஸ்ட் மேரேஜ்’சார்” என்று எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் சொன்னான் பீட்டர்.

நெடு நேரம் யோஜனை பண்ணினார் அட்வ்கேட்.

அவருடைய வேலே செய்து வந்த ரெண்டு ஜூனியர் வக்கீல்களும் அவரை விட்டு விட்டு, வக் கீல் வேலைக்குப் போய் விடவே அட்வகேட்டுக்கும் ஒரு ‘ஜூனியர்’ வக்கில் தேவைப் பட்டது.

“சா¢, நான் உன்னை என் ‘ஜூனிய’ரா சேர்த்துக்கறேன்” என்று அட்வகேட் சொன்னதும் “ரொம்ப தாங்ஸ் சார்” என்று சொன்னான் பீட்டர்.

தினமும் அடவகேட் வீட்டிற்கு காலை எட்டு மணிக்கே வந்து அட்வ்கேட்டுக்கு அன்று நடக்க இருக்கும் வழக்குகளுக்கு வேண்டிய எல்லா கேஸ் கட்டுகளையும் சட்ட புஸ்தகங்களையும் எடுத்து வைத்தான் பீட்டர்.அட்வகேட் கோர்ட்டுக்கு கிளம்ப ரெடி ஆனதும்,பீட்டர் எடுத்து வைத்து இருக்கும் கேஸ் கட்டுகளையும் சட்ட புஸ்தகங்களையும் கொஞ்ச நேரம் படித்து விட்டு,பீட்டரையும் தன் காரில் அழைத்துக் கொண்டு கோர்ட்டுக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்.

அட்வகேட்டுக்கு பீட்டரின்,சட்ட அறிவும்,நடத்தையும், பவ்யமும் மிகவும் பிடித்து இருந்தது.

ரெண்டு மாதம் ஆனதும் பீட்டர் அட்வகேட்டிடம் “சார்.நீங்க எனக்கு ரெண்டு நாள் லீவு குடுக்க முடியுமா.நான் பெங்களுருக்குப் போய் என் அம்மா அப்பாவைப் பாத்துட்டு வறேன்”என்று பவ்யமாகக் கேட்டான்.அட்வகேட்டுக்கு அந்த ரெண்டு நாள் ‘கேஸ்’ ஒன்னுல் இல்லாததால் அவர் பீட்டருக்கு ரெண்டு நாள் ‘லீவு’ கொடுத்தார்.

அட்வகேட் தனக்கு லீவு கொடுத்ததும் பீட்டர் சந்தோஷப் பட்டு அன்று இரவு பெங்களுர் கிளம்பி வந்தான்.

வீட்டுக்கு வந்ததும் வராததும் பீட்டர் அம்மாவைப் பார்த்து “அம்மா, நான் சென்னையிலே இருக்கும் பிரபலமான அட்வகேட் அனந்த கிருஷ்ணனிடம் ஒரு ‘ஜூனியரா’க வேலேக்கு சேர்ந்து இருக்கேன்”என்று பெருமையாகச் சொன்னான்.

அனந்தகிருஷ்ணன் அட்வகேட் என்ற பேரைக் கேட்டதும் பாம்பைத் தீண்டியது போல் இருந் தது மோ¢க்கு.

“எந்த அட்வகேட் பேரே சொன்னே.அந்த அண்ணா நகா¢ல் இருக்கும் அனந்த கிருஷ்ணன் அட்வகேட் கிட்டயா நீ ‘ஜூனியரா’ வேலேக்கு சேந்து இருக்கே.உனக்கு வேறு எந்த அட்வகேட்டுமா கிடைக்கலே அவ்வளவு பொ¢ய சென்னைலே” என்று மோ¢ கேட்டாள் கவலை தோய்ந்த முகத்தோடு.

“ஏம்மா அவரை உனக்கு முன்னமே தெரியுமா” என்று ஆவலோடு லேட்டான் பீட்டர்.

தன் மகன் பீட்டர் அப்படிக் கேட்டதும் மோ¢ கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினாள்.

பிறகு நிதானமாக “இல்லே,நான் அவரை பத்தி நிறைய கேள்விப் பட்டு இருக்கேன்.அவர் ரொம்ப கோவக்காராமே.அதான் நான் உனக்கு அவவளவு பொ¢ய சென்னையிலே வேறே எந்த அட்வ கேட்டும் கிடைக்கலையான்னு கேட்டேன்” என்று சொல்லி சமாளித்தாள்.

உடனே “அம்மா.அவர் அப்படி இல்லவே இல்லை.நான் இந்த ரெண்டு மாசத்லே அவர் கோவப் பட்டதை பாத்ததே இல்லேம்மா” என்று சொன்னதும் மோ¢ “ஒரு வேளை இப்போ அவர் ரொம்ப மாறிப் போய் இருக்காரோ என்னவோ” என்று பதில் சொன்னாள் தன் கவலையை மறைத்துக் கொண்டு.

‘மகன் சந்தோஷத்தை நாம அவனிடம் இப்போது ஏதாவது சொல்லி கெடுத்து விடக் கூடாது’ என்று எண்ணி தன் மனதில் ஓடும் எண்ணங்களை மனதிலேயே போட்டு பூட்டி வைத்துக் கொண் டாள் மோ¢.
சந்தோஷப் பட்ட பீட்டர் “அம்மா, நான் கொஞ்சம் வெளியே போய் என் ‘ப்ரெண்ட்ஸ்களை’ பாத்து விட்டு வறேன்” என்று சொல்லி விட்டு அம்மாவின் பதிலுக்குக் கூட காத்துக் கொண்டு இல்லா மல் வெளியே போய் விட்டான்.

வெளியே போன பீட்டர் தன் ‘ப்ரெண்ட்ஸ்களை’ எல்லாம் சந்தித்தான்.சந்தோஷத்தில் அவன் அவர்களைப் பாத்து தனக்கு சென்னையிலே ஒரு ‘லீடிங்க்’ அட்வகேட்டிடம் ஜூனியராக வேலைக் கிடை த்து இருக்கும் சந்தோஷ செய்தியைச் சொல்லி விட்டு அவர்களுக்கு ஒரு பொ¢ய ஹோட்டலில் ‘ட்¡£ட்’ வாங்கிக் கொடுத்தான்.

பீட்டர் வெளியே போனவுடன் மோ¢ ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ராஜஸ்தானில் இருக்கும் தன் கணவனுக்கு ‘போன்’பண்ணினான்.தன் கணவன் ‘போனில்’ வந்ததும்,மோ¢ பீட்ட ருக்கு சென்னையிலே ஒரு ‘லீடிங்க்’ அட்வகேட்டிடம் ‘ஜூனியரா’க வேலை கிடைத்து இருப்பதாக சொன்னாள் மோ¢. மகேஷ்”மோ¢,பீட்டரை ஜாக்கிறதையா வேலே பண்ணீ வந்து நிறைய சட்ட நுணுக்க ங்களை எல்லாம் கத்துக் கிட்டு வர சொல்லு” என்று சொல்லிவிட்டு ‘போனை அணைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *