கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 3,123 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்ரீமான் அப்பர்சுந்தரம் அப்படி நிகழும் என்று எதிர்பார்க்கவே இல்லை. சிருஷ்டி சக்தி, மனிதர்களுக்கு மட்டும் வருங்காலத்தின் போக்கை உணரும் திறமை அளித்திருந்தால், இந்த உலகத்தில் எத்தனையேர் விபரீத காரியங்கள் நடைபெறமல் நின்றுவிடும்; தடுத்துவிடக்கூடிய வலிமை பெற்றுவிடுவார் கள் மனிதர்கள், அத்தகைய் அதிமனித சக்தி எதுவும் பெற்றிராத காரணத்தினாலே தான், அப்பர்சுந்தரம் தனக்குத்தானே ‘சே, என்ன முட்டாள் தனம் செய்துவிட்டேன்!’ என்று அடிக்கடி நொந்து கொள்ள வேண்டியதாயிற்று.

ஊரிலே பெரிய மனிதரான அவர் சுய் நிந்தனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன என்று கேட்டாலோ, கல்யாணி தான் காரணம் என்று பலரும் சொல்வார்கள். கல்யாணி வளர்ந்த விதமும் அவள் போக்கும் ஊரறிந்த விஷய் மாயிற்றே என்றும் சொல்வார்கள். அதனால் தான், திருவாளர் அப்பர்சுந்தரம் நாலு பேரைப் போல கௌரவமாக ஊரில் தலை நிமிர்ந்து திரிய முடிவதில்லை.

அவரது வாழ்க்கைச் சரித்திரத்தின் வெள்ளிய் பக்கங் களிலே இந்த அகௌரவத்தின் கறுப்புச் சுவடுகள் பதிந்திருக்க வேண்டியதில்லை தான். ஆனால், வாழ்க்கை நிய்தி என்ன மனிதரின் நினைப்புக்குள்ளா அடங்கிக் கிடக்கிறது!

அந்த விஷயம் அவர் காதில் விழுந்ததும் அவர் இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார். அவர் எதிர்பாராதது அது. எதிர்பார்த்ததோ, பாராததோ-அது நடந்து விட்டது. அவரது பெயருக்கு இனி என்ன மதிப்பு! அதை நினைத்த போது தான், அவர் உள்ளம் துடிதுடித்தது, எதிர்காற்றில் அகப்பட்ட காற்றாடி ஓலை போல.

திருவாளர் அப்பர்சுந்தரம் அவரது சமூகத்தில், அவர் குடியிருந்த தெருவில்-ஏன், அந்த ஊரிலேயே என்று செல்லலாம்-ஒரு ஹிட்லராகக் கருதப்பட்டவர். அவர் நினைப்பும் அப்படித் தான். ‘ஐயாப்பிள்ளை பெயரை எழுதி ஒரு சாமானை நடுத்தெருவிலே போடுங்களேன். எந்த ராத்திரியானாலும் அது திருட்டு போயிடுமா, பார்க்கலாம்! எவனுக்கு தைரியம் வரும் அதைத் தொட?’ என்று அவரது அக்காள் ஷண்முகத்தாச்சி சவால் விடுந் தொனியிலேயே அவரது அதிகாரத்தின் பாவட்டா பறக்கும் ஒலி படபடக்கும் என்றால், அப்புறம் அளப்பானேன்! ஆனால் அவருக்கு இது பொறுக்காது. ‘ஹெஹ்ஹே! நல்லாச் சொன்னே யக்கா! என் பெய்ரை எழுதித் தான் போடனுமோ? நம்ம வீட்டு முன்னாலே சாமானைப் போட்டால் அது இரும்புப் பெட்டிக்குள்ளே வச்சுப் பூட்டின மாதிரிக் கிடக்குமா, சும்மாவா!’ என்று ஒரு கனைப்பு கனைப்பார்.

‘பின்னே? எந்த நாய் தொட்டுப் பிழைக்கும்!’ என்று தனது சாதுர்யத்தை ஒலிபரப்புவாள் அக்காள்.

அவர்கள் பேச்சில் உண்மை இல்லாமல் இல்லை. மேல் நாட்டுச் சர்வாதிகாரிகள் அரசியல் மாந்தங்களுக்கு விளக்கெண்ணெய் சிகிச்சை மூலம் வெற்றி கண்டார்கள் என்றால், அப்பர் சுந்தரம் திருட்டுவாதம், திமிர்த்தனம் முதலிய மனிதகுலச் சில்லறை வியாதிகளுக்கு, சவுக்கடி சிகிச்சை சரியான மாற்று என்ற அனுபவ சித்தாந்தத்திலே அசையாத நம்பிக்கை கொண்டவர். அவர் எண்ணினால், அதைச் செயலில் காட்டாமல் இருக்கமாட்டார். இந்த சித்தாந்தத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் எவ்வளவோ பேர். தன் விட்டு விவகாரமல்ல; தெரு, ஊர் வழக்குகளிலும் அவர் முன்னுக்கு வந்து சித்து விளையாட்டை நடத்திக் காட்டத் தயங்குவதில்லை. அதனால் ஊரில் அவருக்கு தனி மதிப்பு, மற்றவர்களுக்குப் பயம். இந்த அஸ்திவாரத்தின் மீது அவர் எழுப்பியிருந்த அந்தஸ்துக் கோட்டை யெல்லாம் காற்றில் அடிபட்ட சிட்டுக்கட்டு போல. ஒரேய்டியாகச் சிதறி விடுவது என்றால்! அதுவும் ஒரு பெண்ணின், தனது மகளின், அறியாத்தனத்தால் மண்ணோடு மண் ஆகிவிடுவ தென்றால்!

விஷயம் அறிந்ததும் நீண்டமூச் செறிந்து மோன நிலையில் அமர்ந்து விட்டார். அவ்வேளையிலே அவர் மனதில் குழம்பிய சிந்தனைச் குறையின் கதியை நிர்ணயிக்க முடியுமா?

அவர் மௌனத்தைக் கலைக்க ரொம்ப நேரம் ஆகவில்லை. தம் மனதை ஒருவிதமாகத் தேற்றிக் கொண்டு, ‘இதுக்கெல்லாம் யாரை நொந்து கொள்வது! என் புத்தியை செருப்பால் அடித்துக் கொள்ளணும். அந்தக் காலத்திலிருந்தே சரியான படி பாடம் கற்பித்திருந்தால், இப்படி வருமா அந்த மூதேவி!’ என்று அலுத்துக் கொண்டார். அதைப் பற்றி மேலும் கவலைப் பட விரும்பாதவர் போல ஒதுக்கிவிட்டார். ஆனால் காலமும் சூழ்நிலையும் அவருக்கு உட்பட்டன அல்லவே!

எரிமலை வெளித் தோற்றத்திற்குச் சாதாரணமாகத் தான் இருக்கிறது. என்றாலும் அதனுள் கொதிப்பும் குமுறலும் மறைந்து தகிப்புடன் இருக்கின்றன அல்லவா? அவை எப்பெழுதாவது சில சமயங்களில் வெளியே பீறிட்டுப் பாய்வது போல, அப்பர்சுந்தரத்தின் உள்ள நிலையும் வெளிப்பட்டு விடு வது உண்டு. என்ன தான் அவர் கவலையற்றவர் என்பது போல் நடந்தாலும், அத்தனையும் வெறும் விஷயம், அந்தச் சம்பவம் அவர் அந்தரங்கத்தைப் புண்ணாக்கி கொதிப்படையச் செய்து விட்டது என்பது நன்கு புலனாகும். அவர் பக்கத்தில் உள்ளவர்கள் மீது எரிந்து விழுவார். பின் ‘என் முட்டாள் தனம்’ என்று ஏசிக் கொள்வார்.

பாவம், ஓடிச் செல்லும் கால நிலை அவரை அப்படி ஆட்டி வைக்கிறது! அவரால் என்ன செய்யமுடியும்?

2 வது அத்தியாயம்.

கல்யாணி தன் தந்தைக்கு அகௌரவம் வாங்கிக் கொடுத்ததற்கு, தந்தையே தான் காரணம். திருவாளர் அப்பர்சுந்தரம் தனது கண்டிப்பையும் சித்தாந்தத்தையும் தன் மகளிடம் காட்ட வில்லை, ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற கணக்கிலே தான் அதுவும் என்று சொன்னாலும், ஆட்சேபிக்க முடியாது. ஆனால் அதுவே தனிக் காரணமாகிவிடாது:

கல்யாணியின் சின்னஞ் சிறு வய்திலேயே அவள் அன்னை சிவகாமி அம்மாள் ‘கைலாச பதவி’ அடைந்துவிட்டாள், தாயில்லாக் குழந்தையை ஒரு குறைவும் இல்லாமல் வளர்க்க வேண்டும் என்ற பரிவு. எடுத்ததற்கெல்லாம் ‘தாயில்லாப் பசலை… தாயில்லாப் பசலை’ என்று வக்காலத்து வாங்கிப் பேச முன் வந்த அக்காள் ஷண்முகத்தாச்சியின் செல்லம். கல்யாணியின் சிறு பிள்ளைத் தனத்திலே கலந்து மின்னிய ஓர் கவர்ச்சி, இவை யெல்லாம் போக, அப்பர்சுந்தரச்தின், நவயுக மனோபாவம் – எல்லாம் கூடி கல்யாணியை இஷ்டம்போல் வளரும் மனப் பண்பை ஊட்டிவிட்டன.

கல்யாணி, கள்ளங் கபடற்ற சிட்டுக்குருவி போல் திரிந்தாள். யாரும் அவளை அடக்கவில்லை. கண்டிக்க, சந்தர்ப்பம் இடம் கொடுக்கவில்லை. அவள் சுயேச்சை மனோபாவத்துடன் வளர வளர, அதில் நவயுகப் பண்பு ஊறி முளையிட கலாசாலைப் படிப்பு உதவியது. காலம், அவளை அசல் நவயுவதி ஆக்கி விட்ட்து.

கையில் ஓர் சுமைப் புத்தகங்கள், கண்ணிலே கண்ணாடி, நுனி முடியாமல் சிலிர்த்து நிற்கும் பாஷன் சடை, ஒரு கத்தைக் கனகாம்பரம்; முகத்தை வெளிறடிக்கும் பவுடர், ஸ்கோ ‘மேக் அப்’, மணிக்கு மணி ‘ஸாரி’ மாற்றம்; கைகளில் கலகலக்கும் ஒரு டஜன் வளைகள்- இத்யாதி சம்பிரமங்களுடன் விளங்கும் நவயுவதிகளில் கடைசி அனுபந்தமாக மிளிர்ந்த கல்யாணியின் போக்கில் அவள் தந்தை தவறு ஒன்றும் காணவில்லை.. அவள் கலாசாலைக்குப் போகிறாள், வருகிறாள், படிக்கிறாள். மாலை உலாப் போகிறாள் – புதுமைப் பெண் கலாசாரப்படி அவள் வளர்ந்து வருகிறாள். தாயில்லாப் பெண் எப்படியாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான்! இது தான் அவர் எண்ணம். அவர் யுக தர்மங்களை எதிர்க்கும் குறுகிய மனம் படைத்தவரல்ல. அதனால் கல்யாணியைக் கண்காணிக்க வேண்டுமென்ற நினைப்பே அவருக்கு எழவில்லை.

துளிச் சந்தேகம் அவருக்கு எழுந்தாலும் – நம்ம கல்யாணி தங்கமா வளர்கிறாள். அவளுக்கு நீ என்ன கவலைக்கு இடம் வைத்திருக்கிறாய். அவள் பாட்டும் படிப்பும்…என்று புராணம் பரப்ப அவள் அத்தைய்ரசி இருக்கவே இருக்கிறாள்!

ஆனால்…

செல்லமாகக் கொஞ்சி விளையாடினால் நாய்க்குட்டி மேலே தாவி முகத்தை நக்கி மகிழ்வுறத் துடிக்கிறது. அப்படி முன்னேறி விட்டால் தான், அதன் சொந்தகாரனுக்கு தனது நாயின் மீது-அது உயர்ஜாதி ஜடைக்குட்டியேயானாலும் கூட – எரிச்சல் ஏற்படுகிறது! ‘சீ!’ என விழுந்து அலுத்துக் கொள்கிறான்.

கல்யாணியின் பண்பும் உச்சநிலையை எய்திவிட்டது என்பது அவளது செயல் மூலம் புரிந்ததும் தான், தந்தைக்கு ஆத்திரம் பற்றி வந்தது. கல்யாணி தந்தையைப் பிரிந்து, அன்பு அத்தையை மறந்து, காலேஜ் மாணவன் கைலாசத்துடன் காதல் இன்பத்தை எய்த பரந்த உலகப் பூங்காவிலே, இளம் மைனாக்கள் போல, பறந்துவிட்டார்கள் என்ற செய்தி, அவர் எதிர்பாராதது தான், ஏன், கல்யாணியை கவனித்து வந்த அத்தை கூட எதிர்பார்க்கவில்லை தான்!

அப்பர்சுந்தரம் ‘தொலைகிறது, பீடை’ என்று விட்டுவிட் டார். ஷண்முகத்தாச்சியோ ‘சே, இதை நான் முன்பே கவனிக்கவில்லையே!’ என்று வருத்தப்பட்டாள். அவள் கவனித்திருந்தாலும், உணர்ந்திருக்க முடியாது. பாசம் மெல்லிய பனித்திரை பரப்பி, அவள் பார்வையை மறைத்திருந்தது.

3-வது அத்தியாயம்

கல்யாணியின் ‘கங்காணி’யாக ஷன்முகத்தாச்சி நடந்திருக்க வேண்டுமென்றால், அந்தத் தாயில்லாப் பெண்ணின் மண்டையிலே எத்தனையோ முறை ஓங்கி அடித்திருக்க நேர்ந்திருக்கும்! அதற்குரிய சந்தர்ப்பங்கள் எவ்வளவோ எதிர்ப்பட்டன்.

எதை மறந்தாலும் ஆச்சி ஒரு முக்கிய சந்தர்ப்பத்தை மறக்கவே முடியாது. கல்யாணியின் வாழ்க்கை ஏட்டிலே அமர எழுத்துக்களால் தீட்டப்பட்ட் காவியம் அது! அவளுக்கு எழுந்த துணிச்சலின் எக்காளக் குரல் அது! ‘அன்று மட்டும் அவளைக் கண்டித்திருந்தால்?’-இன்று அவளது அத்தையாசி இவ்விதம் எண்ணி என்ன செய்ய! அன்று அவள் காட்டிய மனோபாவமோ!

கல்யாணியின் பொழுது போக்கு சீதா தன் வீட்டு மொட்டை மாடிமேல் உலாவுவது தான், காலையிலும் சரி, மாலையிலும் சரி அவள் கலாசாலை செல்லாத நேரங்களில் எல்லாம் அங்கு தான் சுற்றிக் கொண்டிருப்பாள், காரியம் எதுவுமின்றி வான வீதியிலே, வெயில் வெள்ளத்திலே, சிங்காரமிட்டு சிறகடித்துச் சுற்றுகின்ற பொன் வண்டு போல.

அவளது அழகு உருவம், பலரது விழி வண்டுகளைக் கவர்க்திழுக்கும் மோகன மலராக மின்னியது. மலர்ந்து மணம் பரப்பும் புஷ்பங்களைச் சுற்றி வளையமிட இளம் வண்டுகளுக்கு என்ன குறைவா! அதிலும் கல்யாணியின் வீடு அமைந்திருந்த இடமும் சூழ்நிலைகளும்…

நகரின் நடுப்பாகத்திலே தான், அந்த வீடு இருந்தது. அதை ஒட்டியே வாய்க்கால் ஒன்று-சாக்கடை நீர் ஐக்கியமாகவும், பொது ஜனங்கள் ஸ்நானம் செய்யவும் உபயோகமாகி வந்த புண்ணிய உபாதி! – ஓடிக்கொண்டிருந்தது. அதில் எப்பொழுதும் கூட்டம் உண்டு. வாய்க்கால் படித்துறையிலும், பாலத்திலும் வேலையற்ற வாலிபர்கள் குழுமியிருப்பது வழக்கம். அவர்களுக்கு எவ்வளவோ காரணங்கள். ஆனால் அடிப்படையான உண்மைக் காரணம் மாடி மோகினி தான் என்று திட்டமாகச் சொல்லலாம்.

கல்யாணி நாகரிக பிம்பம் தான், எனினும் சோளக் கொல்லை காவல் பொம்மைகளைப் போல காட்சியளிக்கும் பெரும்பாலான நவயுவதிகளைப் போன்றவள் அல்ல. அவள் கனகாம்பரம் அல்ல: இனிய ரோஜர் தான். தேனீக்கள் வட்டமிடாமல் இருக்க முடியுமா! புதுயுகம், உரிமை, சுதந்திரம், சமத்துவம் போன்ற கருத்துக்களிலே நீந்திய கல்யாணியும் பின்னிடுபவள் அல்ல. அதைச் செய்லிலும் காட்டினாள்.

வழக்கம் போல் மாடிமீது உலாவிக் கொண்டிருந்தாள் அவள். கர்வ நடையிலும் மயிலைப் போல, உலாவுதலா அது! அழகுப் பரிவர்த்தனை தான் அங்கு நடந்து கொண்டிருந்தது! தனது அழகைப் பிறர் கண்டு வியக்கவும், ஆணழகர்களின் வனப்பை தான் ரசிக்கவுமே அந்த நவயுவதி அங்கு திரிந்தாள் என்று சொல்லிவிடலாம். இது, அந்த வட்டாரத்து வாலிபர் அனைவரும் உணர்ந்த உண்மை தானே!

அன்றும் அதே கதை தான். அவள் நின்று வாய்க்கால், பிடி மீது கண் வீசினாள். அவள் வலையிலே பட்ட வாலிபன் ஒருவனைக் கண்டு சிரித்துவிட்டு, தன் அருகே நின்ற தங்கையிடம் என்னவோ சொன்னாள். அவளும் சிரிப்பைக் கலக்க, இருவரும் மகிழ்ந்தனர். இது வாலிபன் மனதில் தைத்துவிட்டது. அவன் அவள் தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி விட்டான் போலும்! உறுத்து நோக்கினான். அவளும் ஸ்டைலாக கைகளை மார்புப் பக்கம் கட்டி நின்று அவனை வெறித்துப் பார்த்தாள். அவனுக்கு கோபம். அந்த முரடன் ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டான். கிண்ணெனப் பறந்து வந்த கல் அவளை முத்தமிட்டிருந்தால், அவளுக்கு நல்ல புத்தி கற்பித்திருக்கலாம். ஆனால் அது பக்கத்தில் கிடந்த ‘டின் ஷெட்’ மேல் லொட் என்று விழுந்தது. அவள் குலுங்கிச் சிரித்தாள், விழுந்து சில்லாகிச் சிதறி ஒலிக்கும் கண்ணாடிக் கோப்பை ஒலி போல.

இந்தக் காட்சி, பக்கத்து மாடியிலிருந்து கவனித்த மீனாட்சி சுந்தரத்திற்கு, சிரிக்க வேண்டியதாகத் தோன்றவில்லை. வேறொருவன் என்றால் வேடிக்கை பார்த்து விட்டு ‘சிரிச்சுத் துப்பியிருப்பான்’! ஆனால் மீனாட்சி பேசும் மனம் பெற்றவன், அவன் மனம் எந்த விஷயத்திலும் நியாயம் போதிக்கத் துடிக்கும். இல்லா விடில், சதா அரித்து அவன் மனதைக் குலைத்து விடும். அவன் பார்த்தான். கல்யாணியை, வாய்க்காலை, வந்து விழுந்த கல்லை, கன்னியின் சிரிப்பை எல்லாம் கவனித்தான். அவன் கடமை என்ன என்பதை அவன் மனம் போதித்து; ஓடினான்.

ஓடினான் ஷண்முகத்தாச்சியிடம். அவன் குற்றச்சாட்டின் எதிரொலியாக எழுந்தது ‘ஏன்டி…ஏ, கல்யாணி! இங்கே வா’ என்ற அழைப்பு.

கல்யாணி வந்தாள். அவள் முகம் முழு நகையால் மலர்ந்திருந்தது.

‘ஏன்டி, இந்த மாமா சொல்வது நிசந்தானா?’ என்று கேட்டாள் அவள், கல்யாணி மீனாட்சி மீது பார்வையை எறிந்தாள். பின் ‘என்னடி, இப்படி நடக்கலாமா?’ என்று கேட்டாள்.

அப்பொழுது தான் புதுயுகப் பெண்மை குரல் கொடுத்தது! உரிமை தலையாட்டும் நவயுகப் பெண்மையின் பண்பாடு அங்கே உதயமாகியது! கல்யாணி தனது தவறை உணரவில்லை. ஏன், தான் செய்தது தவறு என்றுகூட எண்ணியதாகத் தெரியவில்லை! அதற்கு மாறாக ‘அது கிடக்கட்டும். இந்த மாமா அவனை கண்டிக்கிறது தானே! ஏன்டா கல் எறிகிறே? என்று கேட்காமல் இங்கே வந்து குறைகூறுவது…’ என்று ஆரம்பித்தாள்.

தனது மருமகளின் புத்தி தீக்ஷண்யத்தில் பூரித்துப் போன் அத்தையரசி சிரித்தாள், ‘பார்த்தியா தம்பி!’ என்று சொல்லி நகைத்தாள். கல்யாணியின் சிரிப்பும் சேர்ந்து ஒலி செய்தது.

4.வது அத்தியாயம்

கல்யாணியுடன் சேர்ந்து சிரித்திராமல் அன்றே அவளை மட்டம் தட்டியிருந்தால்…? அத்தை ஷண்முகத்தாச்சி அதைச் செய்யத் தவறிவிட்டாள். அது மட்டுமா! தனது மருமகளின் வித்தாரப் பேச்சு அவளுக்கு பூரிப்பளித்தது. ‘என் சமர்த்து!’ என்று மெச்சிக் கொண்டாள். அது தான் கல்யாணியின் வருங்கால விபரீதப் போக்குக்கு விதை என்று சொல்லலாம். அன்றிருந்து கல்யாணியின் வளர்ச்சி தீவிரமாகத் தான் இருந்தது. அவளை யார் கண்டிக்க இருக்கிறார்கள்!

வீட்டு வாசற்படியில் நின்று தெருவில் போவோர் வருவோரைப் பார்த்து மகிழ ஆரம்பித்தாள். சில சமயங்களில் அவளுக்குச் சிரிப்பு வெடித்து விடுவதும் உண்டு. அவள் எதற்காகச் சிரித்தாளோ, ஏனோ, யாருக்கும் தெரியாது. ஆனால் அவ்வேளையிலே விதி வழியே செல்கின்ற வாலிபர்கள் அந்தச் சிரிப்பு தங்களுக்காகத் தான் என்று எண்ணிக் கொண்டு மயங்குவது உண்டு.

சாலையிலே பச்சைப் பசுமையாய், செவ்விய பழங்கள் பழுத்துக் கிடக்க, அழகாக நிற்கும் மரங்களை நாடிவர மைனாப் பறவைகளுக்கு அழைப்பர் அனுப்ப வேண்டும்! தானாகவே ஓடிவரும். அதிலும் மரங்களில் அமர்ந்து இதர பறவைகள் கூச்சலிடும் போது, சொல்வானேன்! அப்படித் தான் கல்யாணி விஷயத்திலும். அவள் அழகு பிம்பமாக வாசலில் நிற்பதைக் கண்டு மயங்குகிறவர்கள் அவள்து சிரிப்பைப் பெற அசட்ர்களாக மாறிவிடுவது உண்டு.

அவ்விதம் அகட்டுப்பிசட்டு என்று நடந்து கொண்டவர்களில் கைலாசமும் ஒருவன். அவன் தான் முக்கியமானவன் என்று கூடச் சொல்லி விட்லாம். அவனுக்கு அவளை அடிக்கடி காண சந்தர்ப்பம் அமைந்திருந்தது. அவன் மீனாட்சி சுந்தரத்தின் நண்பன். அவன் வீட்டுக்கு தினமும் தவறாமல் வந்து செல்வான். அப்போதெல்லாம் கல்யாணியின் கருணா கடாட்சம் அவன் மீது படர்வது உண்டு. காலப் போக்கிலே அவள் நோக்கு பரிபூர்ணமாக அவன் மேல பதிந்து விட்டது.

கல்யாணி மீனாட்சியை வலைவீசிப் பிடிக்க முயன்றான். குழவி கொட்டிக் கொட்டியே புழுவை தன் இனமாக மாற்றிவிடும் என் பார்கள். மங்கையின் கண்வீச்சு, குழவியின் கொட்டு தலைவிட் சக்தி வாய்ந்தது. பார்வையாலேயே மயக்கிப் பிறரை தன் வயமாக்கிவிடும் வல்லமை பெற்றது என்றாலும், அவள் சக்தி அவனிட்ம் பலிக்கவில்லை.

அவன் ஒரு மாதிரி! நாகரிக வாலிபர்களிடையே அலாதிப் பிறவி. நவயுவதிகள், நாகரிகம், இந்த யுக கலாசாரம் இவைகள் மீதெல்லாம் ஒரு வெறுப்பு. அந்த மனப்பண்பு பெற்றுவிட்ட அவன், கலயாணியை எப்படி விரும்ப முடியும்? ‘நவயுக ஜூலி யட் ஒவ்வொருத்தியும் ஒரு டஜன் ரோமியோக்களின் காதலைப் பெறத் தவிக்கிறார்கள்’ என்ற சித்தாந்தம் அவன் உள்ளத்திலே நன்கு வேரோடியிருக்கும் போது, அவன் கல்யாணியை எப்படிக் கவனிக்க முடியும்?

கல்யாணி தன்னால் ஆனமட்டும் முயன்றாள், அவன் கவனத்தைக் கவர, அவளது கைவளைக் குலுக்கலும், கலகலச் சிரிப்பும், மெல்லிய பாடல் பயிற்சியும் மீனாட்சியைப் பொறுத்த மட்டில் காட்டில் சிதறிய நிலாவாகத் தான் போயின. அவள் அலுத்துக் கொள்ளும் சமயத்தில் தான், கைலாசம் வந்து சேர்ந்தான்.

இந்த யுகத்து மாணவர்களின் தன்மையைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்களில் ஒருவனான கைலாசம் எப்படி இருப்பான் என்று வர்ணிக்கவும் வேண்டுமா! நவயுவர்களிடையே அவன் சரியான நாகரிக தெர்மாமீட்டர் என்று சொன்னால் போதுமானது.

படிப்பை உல்லாசப் பொழுது போக்காகவும், நவயுவதிகளை கண்டு அழகை ரசிப்பதை முக்கியத் தொழிலாகவும் கொண்டிருந்த அவனுக்கு, கல்யாணி விரிந்த லட்சியமாக மின்னவே, அவன் அடிக்கடி மீனாட்சி சுந்தரம் வீட்டிற்கு வரத் தொடங்கினான். அவ்வேளைகளி லெல்லாம் இருவர் விழியீன்களும் மோதித்துள்ள, புன்னகை பூப்பதுண்டு.

அவன் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தால் அண்டை விட்டு மின்னல்கொடி அங்குமிங்கும் பாயும், அவன் மாடி ஜன்னலண்டை இருப்பது தெரிந்தால் அந்த உலவும் காவியம் தன் வீட்டு மாடியிலே வட்டமிடும். இப்படியாக உணர்ச்சி இவ்விருவரிடையே ‘கிச்சுக் கிச்சுத் தாம்பலம், கீய்க்கா தாம்பலம்’ விளையாடிக் கொண்டிருந்தது.

இது தான் ஐயா காதல்; அது தெய்வீகமானது என்று யாரும் சொன்னால், நான் நம்பத் தயாராயில்லை. உண்மையில், காதலாவது காதல்! கர்மத் துடிப்பு, தணியாத மனத்தின் அரிப்பே அது. அந்த உணர்வில் அலைப்புலும் நவயுவதி யாரும் கதையில் வரும் லைலியாக வாழ்வர் என்று சொல்வதற் இல்லை. கல்யாணியும் அப்படித்தானே!

இவர்களுக்கு நடுவிலே அரும்பி இதழ் அவிழ்ந்து வந்த உணர்ச்சி முழுதும் மலரவில்லை. காலத் தென்றல் வேறுவித மாக அசைத்துவிட்டது! கல்யாணியின் திருமணம் சமீபித்தது. அவள் மகிழ்வுடன் அதை ஏற்காமலா போவாள்! பெண்ணின் லட்சியமே கல்யாணம் என்று தானே கருதப்படுகிறது!

பெண்ணின் எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும், எந்நிலையில் பாதிக்கப்படும்; அவளது வாழ்க்கைத் துணைவனாக வரும் கணவன் எத்தன்மையினன் என்பதை யெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? பெண்ணுக்கு கல்யாணம் செய்து முடித்துவிடுவதால் தங்கள் மீது படிந்து கிடக்கும் பெரும் சுமை-கடமை-குறைந்து விடுகிறது என்பது பெற்றோர்கள் எண்ணம்.

திருவாளர் அப்பர்சுந்தரத்தின் மனச் சாட்சியை இந்தப் பளு அழுத்திக் கொண்டிருக்க வில்லை. ஆனால் அவரது அக்காள் ஷண்முகத்தாச்சியின் தொணதொணப்பு, சகிக்க முடியாத மூட்டைப் பூச்சிக் கடியாக இருந்தது அவருக்கு. ஓயாத தொல்லையைப் பொறுக்க முடியாமல், தனது பொறுப்பை தட்டிக் கழித்தார் அவர். அந்தக் கல்யாணமும் மணமகனும் அவ்வித நினைப்பை எழுப்பும் சின்னங்கள் தான்.

கல்யாணி, கல்யாணத்து அன்று மகிழ்வுடன் விளங்கினாள், என்றாலும், அவளது வாழ்க்கையிலே அது மலர்ச்சி உண்டாக்கியதா? அவளுக்கு வந்த கணவன் காசிநாதன் அவளது அன்பின் செல்வனாக வாய்த்தானா?

அவ்விதம் அமைந்திருந்தால் அப்பர்சுந்தரம் வருத்தப்பட் வேண்டிய பிரமேயம் ஏற்பட்டிருக்கவே செய்யாது! கல்யாணியின் வாழ்வில் புதுமலர்ச்சி புகுத்தப் பிறந்த திருமணம், அவள் வாழ்வைக் குலைக்கும் சம்பவமாகவே நெளிந்தது. குடும்பப் பெருமையை மண்ணாக்கும் வரண்ட் காற்றாகவே சுமூன்று விட்டது அது.

இன்பத்தை நாடும் மனித மனம்; மலருக்கு மலர் தாவும் வண்டு, தனது அடிமையான ஆத்மாவை அது அலைக்கழிக்கிறது. மனக் கயிற்றின் அசைவிலே ஆடுகின்ற பட்டபானாள் அந்தப் பேதை.

5-வது அத்தியாயம்

திருவாளர் காசிநாதன் அதிகாரத்தின் அவதாரம். தனது அதிகார ஆதிக்கத்தின் உதவியால் அரசியல் இயந்திரத்திற்கு இன்றியமையாத சேவை புரிவதாக நம்பி வாழ்ந்தவர். சம்பளம் பெற்று சர்க்கார் உத்தியோகம் பார்ப்பவர் தான். என்றாலும், அந்த அம்சத்திற்கு அவர் ஒரு முக்கிய சின்னம் தானே, பெரிய இயந்திரத்தில் சின்னஞ் சிறு ஆணியும் அத்தியாவசிய அம்சமாக இருப்பது போல.

இந்தப் பெருமையில் அவர் தன்னை மறந்து மூழ்கிக் கிடந்ததால், வாழ்க்கையின் வேறு வச்திகளைப் பற்றி அவர் எணணவேயில்லை. வருஷங்கள் ஓடின. அவர் தன்னந்தனியாக இருந்து அதிகாரப் பொறுப்பை நிர்வகித்து வந்தார். காலப் போக்கும், உறவினர்களின் உபதேசமும் மெல்ல மெல்ல அவரது வாழக்கையில், ‘ஒரு துணை தேவை தான்’ என்ற எண்ணத்தை உண்டாக்கின. அது ஆசையாக எழுந்ததும், அவரது முந்திய வாழ்க்கை கோரமாகக் காட்சியளித்தது. ‘இனி, புதிய வாழ்வு தொடங்க ஒரு துணைவியை எங்கே தேடுவது? யார் பெண் கொடுப்பார்கள்?’ என்ற சந்தேகங்கள் எழுந்து சுழன்றன. அப்பொழுது அவருக்கு வயது நாற்பது.

என்ன இருந்தால் தான் என்ன! முயற்சி செய்தால் எது தான் சாத்தியமாகாது இந்தச் சமூகத்திலே? அவர் வயதும், பூர்வ வாழ்வுமா குறுக்கே வந்து நின்றுவிடப் போகின்றன ஒரு கல்யாணத்திற்கு! பெண்களை வைத்துக்கொண்டு எப்படியாவது கல்யாணம் செய்து கொடுத்துவிடத் தவிக்கும் பெற்றோர்கள் இருக்கும் போது, அவர் வீணாகக் கவலைப்படுவானேன் ?உறவினர்களின் இந்த உறுதிப் பேச்சு, அவர் முய்ற்சியில், அவருக்கு ஆர்வமளித்தது.

அதன் விளைவாக அவர் அப்பர்சுந்தரத்தின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற முடிந்தது. அவரது அதிகாரத்தின் போக்கு, உத்தியோகம் இத்யாதி சில்லறை விஷயங்கள், அப்பர்சுந்தரத்தின் மதிப்புக்கு இலக்காயின. அதனால் காசிநாதரின் வயதை அவர் மறந்தேவிட்டார், இவரையே கல்யாணியின் கணவனாக்கி விடலாம் என்று மகிழ்வுடன் தீர்மானித்தார்.

அவருக்கு திருப்தி என்றால், தனக்கும் பூரணமான சம்மதமே என்று ஆமோதித்தாள் அக்காள். கல்யாணி ஒன்றுமே சொல்லவில்லை. ஆகையால் சில தினங்களிலேயே கல்யாணி ஸ்ரீமதி காசிநாதன் ஆக – ‘மறுமலர்ச்சி’ யுற்றாள். விரைவி லேயே அதன் மணத்தை நுகர வாழ்வுப் பூங்காவிலே இறங்கி விட்டாள்.

காசிநாதன் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த நகர் ஒன்றிலே தான் உத்தியோகத் தூணாக அதிகாரம் செலுத்தி வந்தார். விடுமுறையிலே ஓய்வுக்காக சொந்த ஊர் வந்தவர் வாழ்க்கைத் துணைவியுடன் திரும்பினார். அதில் அவருக்கு மட்டற்ற மகிழ்வு. கல்யாணி அழகி. நாகரீக தேவதை. யுவதி. இவையெல்லாம் அவரது மகிழ்வை அதிகரிக்கச் செய்தன. அவளை அன்பாய், செல்வமாய் போற்றவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டார்.

அந்த வகையிலே அவர் கல்யாணிக்கு எவ்விதக் குறையும் வைக்கவில்லை. அவள் எதை எதை விரும்புவாள் என்று அவருக்குத் தோன்றுமோ, அந்த நாகரிகச் சாமான்களை எல்லாம் வீட்டிற்கு இறக்குமதி செய்துவிடுவார். ஸாரிகள், ஜம்பர்கள், நவயுக அலங்காரப் பூச்சுகள் முதலியனவற்றை காணிக்கையாகச் சமர்ப்பித்து கல்யாணியின் மனதை தன்னிடம் லயிக்கச் செய்ய அவர் பெருமுயற்சி செய்தார்.

அவரது பக்தி கல்யாணிக்கு மகிழ்வு கொடுத்தது. அவளுக்குத் துணையாக வந்திருந்த அத்தை திருப்தியடைந்தாள், தான் கண்போல் காத்து வளர்த்த கல்யாணி இனி கிளிபோல பாதுகாக்கப் படுவாள் என்ற நம்பிக்கையுடன் அவள் ஊர் திரும்பினாள். அந்த நம்பிக்கை இலவம் பஞ்சு போல அந்தரத்திலே அல்லல் உறும்படி இருந்தது, மூன்று மாதங்களுக்குப் பிறகு நிகழ்ந்த ஓர் விஷயம். அவள் கனவு சிதையும்படி இருந்தது கல்யாணி திரும்பிவந்தது.

ஆம். கல்யாணி திரும்பி வந்துவிட்டாள். பிறந்தகத்திற்கு கணவன் வீட்டிலிருந்து மகிழ்வுடன் திரும்பிய வருகை அல்ல அது.

6-வது அத்தியாயம்

ஒரு நாள் மத்தியான வேளை. ஷண்முகத்தாச்சி சாப் பாட்டை முடித்து விட்டு வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது ‘அத்தை’ என்ற குரல் அவளைத் திடுக்கிடச் செய்தது. நிமிர்ந்து பார்த்தால், ‘கல்யாணி’ நின்றாள். அவள் உருவமும் அந்த வேளைத் தோற்றமும்! பரட்டைத் தலையும் அழுக்கு உடையுமாக நின்றாள், பஞ்சத்தில் அடிப்பட்டவள் போல, நாகரிக மோஸ்தர் சிறிதும் பிறழாமல் மணிக்கொரு விதமாக ‘மேக் அப்’ செய்து காட்சி தரும் கல்யாணியா இப்படி நிற்பது!

‘என்னடீ இது, பார்க்க சகிக்கலையே!’ என்று அங்கலாய்த்தாள் அத்தை. ‘எப்படி வந்தே? எங்கிருந்து வாறே? ஏன், என்ன விசேஷம்?’ என்று விஷயம் முழுவதையும் அறிய வேண்டும் என்ற ஆவல் அத்தனையையும், கேள்விகளாகக் கொட்டினாள். கல்யாணி மௌனமாக உள்ளே போனதும், பரப்பரப்புடன் அவளைப் பின் தொடர்ந்தாள் அத்தை.

‘என்ன, கல்யாணி, ஏன்..?’ அவளது கேள்வித் தொடர்கள் உருண்டோட் வேண்டிய அவசியம் மீண்டும் ஏற்பட்டவில்லை. கல்யாணி பேசினாள். அவள் வாசித்த நீண்ட் குற்றப்பத்திரிகையே அது!

கல்யாணி செல்லமாக வளர்ந்த நவயுவதி. அதை அறியாதவரல்ல காசிநாதன். அவரும் அவளை அன்புடன் அர்ச்சிக்கத் தான் செய்தார். என்றாலும் அவருடைய அன்பு அவளை ஆனந்தத்தில் ஆழ்த்தவில்லை. திருமண அனுபவம், வாழ்வின் மாற்றம்-இவை புதுமை மோகமாக இருந்தன ஆரம்பத்தில் தன்னிடம் தனது அழகு முன், பக்தி செலுத்தும் கணவன் கிடைத்ததனால் களிப்புற்றாள் கல்யாணி. ஆனால் அந்த திருப்தி நிலைத்து நிற்கக் கூடியதல்ல என்று உணர அவளுக்கு வெகு காலம் பிடிக்க வில்லை. மூன்று மாதங்களிலேயே அந்த வாழ்வு அலுத்து விட்ட்து.

காசிநாதன் தன்னிடம் கொட்டும் பக்தி உணமை அனபு அல்ல. அவரது தன்னம்பிக்கையற்ற பண்பை அஸ்திவாரமாகக் கொண்டு எழுந்த குணமே அது. அவரிடம் கவர்ச்சியோ இளமையோ இல்லை என்ற குறைபாடு தெரியாமல் அவள் மனதை வசீகரிக்க அவர் கையாண்ட வித்தை அது. வலுவற்ற பிராணிகள் பளபளப்பான மேல் தோலினாலும், கவரும் அங்க அசைவுகளாலும், பிறவற்றை மயக்கி தங்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றனவே; அப்படித்தான் காசிநாதனும் வெளிப்பகட்டால் அவளை மய்க்க எண்ணினான். இது எத்தனை நாளைக்கு நிற்கும்? அதிலும் ஒளிக்கதிர்களை நாடியே-அது சுட்டெரித்து விடும் என்பதைக் கூட் சட்டை செய்யாமல்-வட்டமிடும் விட்டில் போன்ற கல்யாணியிடம்.

அவள் திருமண வாழ்வில் இன்பக் கனவுகளை நிர்மாணிக்க எண்ணினாள். பிரத்தியட்ச் வாழ்க்கை அவளுக்கு சூன்யமாகத் தோன்றவே, அன்றாட வாழ்வு கசந்தது. ஒவ்வொன்றும் குற்றமாகவே பட்டது. அவளது அன்பைப் பெறத் துடித்த கணவனைக் கண்டாலே எரிச்சல் ஏற்பட்டது. அமைதியை இழந்தாள். அவனது அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுத்தாள். அவன் ‘ஏன் கல்யாணம் செய்து கொண்டோம்!’ – என்று வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

அதற்குப் பிறகு குடும்ப வாழ்விலே இன்பம் எப்படி இருக்க முடியும்? அடிக்கடி மனஸ்தாபங்களும் வாக்குவாதங்களும் எழுந்தன. அது முற்றிவிடவே, காசிநாதன் அவளை தந்தை வீட்டிற்கே அனுப்பிவிட்டார்.

கல்யாணி தனது தவறுகளை உணரவில்லை. கணவன் தான் முழுக் குற்றங்களுக்கும் பொறுப்பு என்று அடுக்கிக் கொண்டே போனாள். அவளுடைய அத்தைக்கு துக்கம் துக்கமாக வந்தது. ‘கல்யாணி, உனக்கு வாய்த்த மாப்பிள்ளை இப்படியா வர வேண்டும்’ என்று வருந்தினாள்.

வெளியே சென்றிருந்த அப்பர்சுந்தரம் வந்து, விஷயத்தை அறிந்ததும், பிரமாதமாக ஏதோ நடந்து விட்டதாகக் கவலைப் படவில்லை. ‘ஸரி, விட்டுத் தள்ளு! எல்லாம் நாளானால் சரியாப் போயிடும்’ என்று அவரது சுபாவப்படி ஒதுக்கி விட்டார்.

கல்யாணி தனது பழங்கால நடைமுறைகளைக் கையாள ஆரம்பித்தாள். அந்த வட்டாரத்திலே அந்த அழகுக் கொடியின் தோற்றம் மீண்டும் பரபரப்பை உண்டாக்கத் தொடங்கியது.

சூழ்நிலைப் பரபரப்பு அதிகம் முற்றவில்லை. அதற்குள் கல்யாணிக்கு ‘விமோசனம்’ பிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கல்யாணியின் கணவன் அவளை மீண்டும் அழைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதம் நடைபெற வில்லை. காசிநாதனிடமிருந்து கடிதம் கூட இல்லை. கல்யாணி அதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவள் வழக்கம்போல் அலங்கார பொம்மையாகத்தான் திரிந்தாள். அவள் போக்கு ஷண்முகத்தாச்சிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது.

‘சே, இந்தப் புள்ளை இப்படி அலையுது. இதோடு அப்பனோ மௌனமா இருக்கான். இப்படியே விட்டு விடப் படாதே’ என்று புழுங்கினாள் அவள். ஆகவே எப்படியாவது நிலைமையை சரிக்கட்டுவது தனது கடமை என்று பொறுப்பை தன் தலையிலே தூக்கிப் போட்டுக் கொண்டாள். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், இதையே பிரஸ்தாபித்து வந்தாள்.

‘என்ன தம்பி, கல்யாணியின் கதி என்னாவது? நல்லதும் பொல்லாததும் அனுபவிக்க வேண்டிய வயசிலே இப்படி விட்டு விட்டால்? நீ தான் மாப்பிள்ளையைப் பார்த்து எப்படியாவது..’ என்று சிபார்சு செய்து தொந்தரவு கொடுத்தாள்.

ஆரம்பத்தில் அப்பர்சுந்தரம் ‘நாம் என்ன செய்வது? நீ என்ன அக்கா சும்மா தொண தொணன்னு…’ என்று எரிந்து விழுந்தார். என்றாலும் முடிவில் ஷண்முகத்தாச்சியின் மூட்டைப் பூச்சிப் பண்பாட்டிற்குத் தலை வணங்கத்தான் வேண்டியிருந்தது.

ஒரு நாள்-கல்யாணி வீட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு-அப்பர் சுந்தரம் தன் மகளுடன் ரயிலேறினார். திரும்பி வரும்பொழுது அவர் மட்டும் தான் வந்தார். ஆவலுடன் எதிர்ப்பார்த்த அக்காளுக்குத் திருப்திதான்.

நான் போன பிறகும் அவர் ஏதாவது சொலல முடியுமா, என்ன! என்னென்னவோ அளந்தாரு. கல்யாணி குணம் அப்படி அவள் செய்வது இப்படி…அவள் அன்று அதைச் சொன்னாள், இன்று இதைச் செய்தாள் என்று பட்டியல் வாசித்தார். நான்-சரிதான் மாப்பிள்ளை, கல்யாணி சின்னஞ் சிறிசு. அதுக்கு என்ன தெரியும்? நீங்க தான் சரி சரின்னு பார்த்தும் பாராமலும் தட்டிக் கொடுத்துக் கிட்டு போகணும் என்று சொல்லி வைத்தேன். இவளுக்கும் போதிச்சேன்’ என்று சொன்னார்.

‘நான் மட்டும் சும்மாவா அனுப்பினேன். ஏண்டி கல்யாணி இன்னும் நீ விளையாட்டுப் பிள்ளையா? இப்படி பொறுப்பற்ற தனமா நடந்து கிடலாமா? எப்படி இருந்தாலும் பெண்களுக்கு புருஷன் வீடு தானே வாழ்வு என்று சொல்லி புத்தி கற்பித்ததேன்.’ இனி நல்ல பிள்ளையாக நடக்க வேண்டும். அவ்வளவு தான், என்று குல தெய்வத்தைக் கும்பிட்டுக் கொண்டாள்.

‘என்னவோ, கல்யாணி சந்தோஷமாக இருந்து நல்ல பெயர் எடுத்தால் சரிதான்’ என்று முனங்கினார் அப்பர்சுந்தரம்.

7-வது அத்தியாயம்

கல்யாணி சந்தோஷமும் அடையவில்லை, நல்ல பெயரும் எடுக்கவில்லை என்பது ஒன்றரை மாதங்களுக்குள்ளாகவே தெரிந்தது. யாரும் எதிர்பாராவிதமாக ஒரு நாள் அப்பர்சுந்தரம் வீட்டின் முன்பாக ஒரு ஜட்கா நின்றது. அதில் இருந்து, சோகம் குவித்த முகத்தினராய் காசிநாதன் இறங்கினார். பின் மெதுவாக கல்யாணியை இறங்கச் செய்து, பரிவாக அணைத்து கவனத்துடன் அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ஷண்முகத்தாச்சி கவலை, துக்கம், ஆவல் முதலிய பலரக உணர்ச்சிகள் நெளியும் குரலில் ‘என்ன, என்ன?’ என்று தவித்தாள்.

‘கல்யாணிக்கு உடம்புக்கு சௌக்கியமில்லை. திடீர் திடீரென்று மயக்கம் வந்து, வாயிலே வந்தபடி பேச ஆரம்பித்து விடுகிருள். டாக்டரிடமெல்லாம் காட்டிப் பார்த்தேன். ஓய்வு வேண்டியிருக்கலாம் என்று இங்கே கூட்டி வந்தேன்’ என்றார்.

அங்கு வந்த அப்பர்சுந்தரம் ‘டாக்டர் என்ன சொல்கிறார்?’ என்று கேட்டு வைத்தார்.

காசிநாதன் அலுப்பாக நாக்கை ‘ச்சு’க் கொட்டினார். ‘டாக்டர் என்ன சொல்வார்! அவர்களுக்கே என்ன வியாதி என்று பிடிபடலே; நரம்புத் தளர்ச்சியாக இருக்கும் என்கிறார்கள். மனக்கோளாறு தான் காரணம்’ என்றார்.

அவர் பேச்சையே கவனித்து நின்ற ஷண்முகத்தாச்சி ‘ஐயோ கல்யாணி’ என்று பதறிப் போய் தாவினாள். கல்யாணி பிரக்ஞையற்று கீழே விழயிருந்தாள்! நல்ல வேளையாக அவள் அத்தை அவளைத் தாங்கி மெதுவாகப் படுக்க வைத்தாள்.

கல்யாணி சிறிது நேரம் கட்டையாகக் கிடந்தாள். திடீரென்று ‘நீ ஒரு புருஷனா! போடா. இங்கே ஏன் இன்னும் நிக்கிறே…இன்னுமா தொலையலே…போ, ஒழி’ என்று கத்தி. ‘கிரீச்’ சென்று கூவினாள்.

காசிகா தன் தலைகவிழ்ந்தார். ‘இப்படித்தான், மாமா தினம் இதே ஏச்சு. எத்தனை நாள் பொறுப்பது? நீங்கள் உங்களால் இயன்ற வைத்தியம் செய்து பாருங்கள். செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்…நான் வரட்டுமா?’ என்று சொல்லி, வேறு பேச்சு பேசாமல் குனிந்த தலையுடன் வெளியேறினார்.

அப்பர்சுந்தரம் அவசரம் அவசரமாக ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை, வந்த காலோடு போறீகளே? சாப்பிட்டு விட்டுப் போகலாம்’ என்று அழைத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. ‘பிறகு வாறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஷண்முகத்தாச்சி கல்யாணிக்கு சிகிச்சை செய்வதில் ஈடுபட்டாள். ‘சும்மயிரம்மா கல்யாணி, தண்ணி குடிக்கிறியா…காப்பி வேணுமா?’ என்று உபசரித்தாள். கல்யாணியா பதில் பேசாமல் கண்களை உருட்டி விழித்தாள். பின் சிரித்தாள், ஆச்சிக்கு விஷய்ம் புரிந்துவிட்டது! ‘அது தானே பார்த்தேன். இது சீக்கா? டாக்டர் என்ன செய்வான்! இது பேய்க் குத்தம், பிசாசு பிடிச்சிருக்கு’ என்று தலையை ஆட்டினாள்.

விடுவிடென்று போய் விபூதி அள்ளி வந்து கல்யாணியின் நெற்றியில் துலாம்பரமாகப் பூசிவிட்டு ‘அம்மா ஆயிரங்கண்ணுடையாளே, கல்யாணியை புடிச்சிருக்கிற பிசாசு தொலைஞ்சிடட்டும். உனக்கு வெள்ளியாலே கண் செய்து வைக்கிறேன்!’ என்று பிரார்த்தித்துக்கொண்டாள்.

அந்த பிரார்த்தனையின் மகிமைதானோ, அல்லது வேளை வந்ததோ என்னவோ, கல்யாணியை ஆட்டிய ‘பேய்’ அந்தப் பொழுதிற்கு அந்தர் தியானமாக, அவள் மூர்ச்சித்து விழுந்தாள். ‘கல்யாணி, கல்யாணி’ என்று ஆசுவாசப்படுத்தி அவளை எழுப்புவதற்குள் பெரியபாடு ஆகிவிட்டது.

கல்யாணி எழுந்தவுடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். ‘அவுகளெ எங்கே?’ என்று அன்பாக விசாரித்தாள்! விஷயம் அறிந்ததும், ‘ஐயோ! சாப்பிடாமலா போயிட்டாக? கோபித்துக் கொண்டா? அத்தை, திரும்ப வறேன்னாகளா?’ என்று அங்கலாய்த்தாள்.

அத்தைக்கு ஆத்திரம். ‘வருவாக வருவாக! வராமல் எங்கே போகப்போறாரு’ என்று மொழிந்தாள்.

அவர் மீது வருத்தப்பட்டு என்ன செய்ய? அவரும் மனுஷன் தானே. இவள் அப்படி கண்ட்படி ஏசிப்பேசினால், அவர் மனம் புண்படாமல் என்ன செய்யும்?’ என்று பரிந்து பேசினார் அப்பர்சுந்தரம்.

‘நல்லா சொன்னே, போ! அவள் என்ன வேணுமின்னா இப்படிப் பேசினா? தன்னைத் தெரியாமல் அவள் மயங்கிக் கிடக்கிறாள். பேய்ப்புலப்பத்தை இவள் புலம்பினான்னு நினைச்சுக்கிட்டு கோபிக்கிறதுன்னா….கல்யாணி அப்படி மயங்கிக் கிடக்கிறாளே, என்ன என்று நின்று கவனியாமலே போறாரே….செலவுக்குப் பணம் அனுப்புவாராம்! அவர்கிட்டே தான் பணம் இருக்கு போலிருக்கு!’ என்று முணு முணுத்தாள்.

அது அப்பர்சுந்தரம் மனதிலே கூட் வெறுப்பு உணர்ச்சியை விதைத்தது. அது வளர வகை செய்வதாகத் தானிருந்தது காசிநாதன் செயலும். அவர் கல்யாணியை தந்தை வீட்டில் விட்டுச் செல்ல வந்தவர் தான். பிறகு எட்டிப் பாக்கவே இல்லை.

அவர் வராததற்காக கல்ய்ணியின் விசித்திர நோய் வராமல் நின்றுவிடவில்லை. நாலைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து, கணவனுக்கு வசை புராணம் புலம்பிவிட்டு மறைவது வழக்க மாகிவிட்டது. பல வைத்தியர்கள் வந்து வந்து போனார்கள். மந்திரவாதிகள் கூட வந்து மந்திரம் போட்டார்கள். பயனில்லை. முடிவாக எல்லோரும் சொன்னது ஒன்று தான்; ‘உடலிலே நோய் இருந்தால் அல்லவாதிரும்! இது உள்ளத்தின் கோளாறு’.

8-வது அத்தியாயம்

கல்யாணிக்கு வந்த நோய் உண்மை வியாதியல்ல; உள்ளத்தின் சேஷ்டையாகத்தான் இருக்கும் என்று அவளுடைய அத்தையால் நினைக்கக் கூட முடியவில்லை. அப்படி எண்ணுவதே கல்யாணிக்கு துரோகம் செய்வதாகும் என்பது அவள் முடிவு. அப்பர்சுந்தரமோ ‘இருக்கும். இது இவளாகச் செய்யும் அகம்பாவ நோய்! புருஷனைப் பிடியாததால் இப்படி வம்பு செய்கிறாள் போலும்’ என்று சந்தேகப்பட்டார். இதுபற்றி சந்தேகமே இல்லாத உறுதிகொண்ட்வன் மீனாட்சிசுந்தரம் தான்.

அவன் கூட் முதலில் உண்மையான வியாதியாகத் தான் இருக்குமோ என்று நினைத்தான். பிறகு நடந்தவை அதை அகற்றிவிட்டன. சில தினங்கள் தோன்றிய் வியாதி பின் திடீரென நின்றுவிட்டது. மறுபடியும் காசிநாதன் திரும்பி வந்த அன்று தான் வெடித்தது.

முதல் நாள் கல்யாணி மயக்கம் தீர்ந்ததும், கணவனை எங்கே என்று ஆவலுடன் கேட்டாளா? அதன் பிறகு அவரைப் பற்றியே கவலைப்பட்வில்லை. ‘எப்படியும் போகட்டுமே!’ என்று

அலட்சியமாகக் கூடப் பேசி ஆரம்பித்தாள். ஆகவே, முதல் நாள் வந்ததும் ஏசிவிட்டு, பின் ஆவலுடன் கேட்டது உண்மையில் அவளுக்கு வியாதி தான், பிரக்ஞை இல்லாமல் பேசியது என்று ஊர்ஜிதம் செய்வதற்கு நடித்தது தான் என்று மீனாட்சி நினைத்தான். கல்யாணியின் பண்பை அறிந்த அவன், அவள் காசிநாதனை விரும்பவில்லை என்று உணர சிரமம் எடுக்க வேண்டியதாயில்லை.

காசிநாதன் உரிமையில் வாழ்வதைவிட, சுயேச்சையாக, இன்பக் கிளிபோல, இஷ்டப்படி வாழ்வதையே கல்யாணி விரும்பினாள் என்பதையும் அவன் உணர முடிந்தது. அடுத்த வீட்டில் வசித்த அவள் செயல்களை ஆராயும் அவனுக்கு, இந்த முடிவுக்கு வர பிரமாத முய்ற்சிகள் தேவையில்லை தானே?

கல்யாணி அடுத்த வீட்டு மாடியில் நின்று மீனாட்சியைத் தனது கருணாகடாட்சத்திற்கு இலக்காக்கி, அவனைக் கவர்ச் சிக்க அரும் பாடுபட்டாள். ஆனால், இந்த மீன் ‘அவள் வலையில் சிக்க வில்லை. அவளாகப் பற்ற வந்தாலும் கையில் பிடிபடாமல் நழுவும் பண்பு பெற்ற ரீனாக் இருக்கவே, கல்யாணி வேறு திசை யில் வலை வீசினாள். அவள் வலையில் விழுந்தவன் கைலாசம் தான்.

கைலாசம் முன்பே கல்யாணியைக் கண்டு ஏங்கித் திரிந் தவன். அவள் பார்த்தால் அவன் சிரிப்பான். அவள் புன்னகை புரிந்தால் அவன் பேச வேண்டும் எனத் துடிப்பான். இப்பொழுது மலரே தன்னை அழைக்கிறது என்று அறிந்தால் அந்தத் தேனி விலகியா போகும்!

மீனாட்சிசுந்தரம் அவனை எச்சரித்தான். அவனுக்குப் புத்தி புகட்டினான். தேனின் போதையிலே இன்பத் துடிப்புடன் சிறகடித்து ரீங்காரஞ் செய்து பாய்கின்ற தேனி, போதனைகளுக்கும் எச்சரிக்கைகளுக்குமா பின் வாங்கிவிடப் போகிறது! தீ சுடும். அதில் விழுந்தால் விட்டில் நாசமாகும். அதற்காக? கவரும் சுடரைக் கண்டால் அது தாவாமல் நின்று விடுகிறதா! பெண் அழைத்தால், ஆண் மகிழ்வு அடையாமல் நிற்பது சாத்தியமா! இது கைலாசத்தின் கட்சி. அப்புறம் அவனை யார் என்ன செய்ய முடியும்?

9-வது அத்தியாயம்

கல்யாணியின் அத்தை ஷண்முகத்தாச்சிக்கு காசிநாதன் மேலிருந்த வெறுப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. அப்பர் சுந்தரமோ அவரைக் கோபிக்க விரும்பவில்லை. ஆயினும், மாதக் கணக்கிலே அவர் தன்னையோ, கல்யாணியையோ பார்க்க வராமல் இருந்ததின் மர்மம் புரியாமல் வருத்தப் பட்டார். ‘இனி கல்யாணியைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் உத்தேசமே அவனுக்குக் கிடையாதோ’ என்று சந்தேகித்தார். கல்யாணியின் வியாதி தீர்ந்து விட்டது போல் தான் தோன்றியது. ஏனெனில், அது விஜயம் செய்து ரொம்ப நாட்களாகி விட்டன.

ஒவ்வொருவர் மனதும் இப்படி விதவிதமான எணண வடடங்களிலே சுழலும் சமயத்தில் தான் காசிநாதன் வந்து சேர்ந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதை அவர் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? என்றாலும், தன் விஷயத்தை விளக்க ஆரம்பித்தார்.

‘மாமா, எனக்கு லீவ் இன்னும் இரண்டு நாட்களில் முடிகிறது. நான் ஊருக்குப் போறேன், கல்யாணி என்ன சொல்கிறாள்? அவளுக்கு வியாதி எப்படி இருக்கிறது? அல்லது இன்னும் சில மாதங்கள் இங்கேயே சந்தோஷமாக இருக்க விரும்புகிறளா?’

அவர் பேசிய தோரணையும் முகபாவமும், அவர் அவ்வப்போது கல்யாணியின் போக்கை மற்றவர்களுக்குத் தெரியாமலே கவனித்து வந்திருக்கிறார் என்று அறிவித்தன. அப்பர் சுந்தரம் ‘கல்யாணியிடமே கேட்டு விடலாமே’ என்று இழுத்தார்.

அவ் வெளையிலே தடார் என்ற சப்தம் கேட்டது; பின், ‘சிலிர்’ என்று கண்ணாடி உடைந்து சிதறும் ஓசையும், பெண் சிரிப்பொலியும் படர்ந்தன.

‘ஐயோ, வாருங்களேன்….கல்யாணி, கல்யாணி!…கல்யாணியைப் பாருங்கள்!’ என்று அவள் அத்தை, கதறிக் கொண்டு பெட்டகசாலைக்கு ஓடி வந்தாள். வீட்டுக்கு முன்னாலிருந்த சிறு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அப்பர்சுசுந்தரமும், காசிநாதனும் வேகமாக வந்தனர்.

கல்யாணி சுவரில் மாட்டியிருந்த நிலைக்கண்ணாடியைக் கீழே தள்ளி உடைத்திருந்தாள். அவள் தலை பரட்டையாகத் தொங்கியது. நெற்றியிலும், கன்னத்திலும் ரத்தம் போல குங்குமம் அப்பப்பட்டிருந்தது. அவள் பீரேர் ஒன்றின் முன் நின்றாள். பிரோக்கதவிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப்பார்த்துக் கொண்டே ‘மாட்டேன்…போ, நீ என்னடா மனிசன்! தொலை’ என்றும் இன்னும் கண்ட்வாறெல்லாம் கத்தினாள். வேறு என்னென்னவோ புலம்பினாள். அவள் நின்ற நிலை, பிரோவைத் தன்மீதே இழுத்துத் தள்ளிக் கொள்வாளோ என்று பயப்பட வேண்டியதாயிற்று.

காசிநாதன் ‘கல்யாணி, இது என்ன!’ என்று வினவினார். ‘நீ யாரடா? இங்கே ஏண்டா வந்தே?’ என்று மூஞ்சியில் அறைந்தாற்போல அவள் கேட்கவே, அப்படியே இரண்டு அறைவிட்டு அவளது பற்களை உதிர்த்து விடலாமா என்றிருந்தது அவருக்கு. ‘தூ’ என்று துப்பி விட்டு விலகினார்.

அப்பர் சுந்தரம் ‘என்னம்மா இது! உனக்கு ஏன் இப்படி…’ என்று ஆரம்பிக்கவும், ‘உன்னை யாரடா கேட்டது? நீ யார்?’ என்று கூச்சலிட்டாள் கல்யாணி. அவருக்கு ஆத்திரம். கல்யாணியின் கன்னத்தில் ‘பளார்’ என ஒரு அடி கொடுத்தார். கல்யாணி ‘யாரடா என்னை அடித்தவன், இதோ என்ன செய்கிறேன், பார்’ என்று கூப்பாடு போட்டு பீரோவைப் பிடித்து இழுத்தாள்.

ஷண்முகத்தாச்சி ‘ஐயோ, புள்ளை போச்சு! ஐயோ, ஐயா’ என அலற, அந்த வீடு முழுவதுமே ஏக களேபரமாகி விட்ட்து . அடுத்த வீட்டிலிருந்து மீனாட்சிசுந்தரமும், கைலாசமும் ஓடி வந்தனர். அப்பர்சுந்தாம் கல்யாணியைப் பிடித்து அப்புறம் இழுக்க, மற்றவர்கள் பீரோ விழுந்து விடாமல் பிடித்து நிறுத்தினர். கல்யாணி தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவளுக்கு சிரிப்பு வேறு பிறந்தது. அதை மறைக்க முயன்று கொண்டிருந்தாள், ஒரு முறை கைலாசம் கண்கள் தன் முகத்தில் பதிவதைக் கண்டதும் அவள் சிரித்தே விட்டாள். அதை காசிநாதன் நன்கு கவனித்துக் கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்ட மெல்லாம் ஒருவாறாக அடக்கியதும் காசிநாதன் ‘மாமா, நான் விடைபெற்றுக் கொள்கிறேன். இனிமேல் நான் இந்தப் பக்கமே வரப் போவதில்லை. நான் கல்யாணம் செய்து கொண்டதே முட்டாள் தனம். அதை நன்றாக உணர்ந்து விட்டேன். இனி கல்யாணி என்னுடன் வர இஷ்டப்பட்ட மாட்டாள். அவளுக்கு சந்தோஷம் கிடைக்கிற இடத்திலேயே இருக்கட்டும்! எனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு இன்றோடு சரி மற்றதை சாவகாசமாக யோசித்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு எவ்விதமான பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பிப் போய்விட்டார்.

அப்பர் சுந்தரத்துக்கு ஒன்றுமே ஓட வில்லை. அந்த நேரத்தில் ஷண்முகத்தாச்சி வந்தாள். ‘தம்பி, இது என்ன, இருந்தாய போல் இருந்து திடீர்னு இப்படி..நல்ல மாந்தரீகனா ஒருத்தனைப் பார்த்து…’ என்று தொடங்கினாள்.

‘மாந்தரீகனைப் பார்ப்பாயோ, எவனைத் தேடுவாயோ! உன் மருமகள் பாடு உன் பாடு, போ. சவம் அடம் சாதித்து இப்படி வேஷம் போடுது. அதுக்கு வியாதியா எழவா? இனி ஆயுள் பூரா இங்கேயே இருந்து வைத்தியம் பார்க்கட்டும்’ என்று எரிந்து விழுந்தார்.

ஆனால், கல்யாணி அவருக்கு அவ்விதத் தொந்தரவு எதுவும் வைக்க வில்லை!

யாரும் எதிர்பார்க்கவில்லை அப்படி நிகழும் என்று. கல்யாணி அவ்விதம் துணிவு பெற்றவள் என்றோ, கைலாசம் இவ்வளவு தூரம் மூன்னேறிவிடுவான் என்றோ மீனாட்சிசுந்தரம் கூட் எண்ணவில்லை. அந்த நிலையில் அப்பர்சுந்தரமும், ஷண்முகத்தாச்சியும் நினைக்க இடம் எது?

எனறாலும், அது நடக்கத்தான் செய்தது. கல்யாணி திடீரென அந்தர் தியானமாகி விட்டாள். கூட கைலாசமும் சென்றிருக்கிறான் என்ற செய்தியும் கிடைத்தது. மீனாட்சி ‘சரிதான்!!’ என்று தள்ளி விட்டான். ஆனால், கல்யாணியின் தந்தையும் அத்தையும் அவ்விதம் ஒதுக்கிவிட முடியுமா என்ன!

கல்யாணி எங்கே போயிருப்பாள்; என்ன செய்வாள்? மூதேவிக்கு மூளை இப்படியா போக வேணும்? கழுத்திலே கிடந்த கொஞ்ச நகை தானே, கையிலே பணம் கூட இல்லையே என்று பரிதவித்தாள் அத்தை. தன் தம்பியிடம் ஆள் அனுப்பி தேடும்படித் தூண்டினாள். ஒரு பலனும் கிட்டாததால் ஒப்பாரி வைத்துக் காலம் கழிப்பதைத் தொழிலாக்கிக் கொண்டாள்.

அப்பர்சுந்தரம் அதை அமைதியாக ஏற்றுக் கொள்ளப் போராடினார். ஆயினும், முடிய வில்லை. மனோவேதனை வெளியே வெடித்து விடாமலா போய்விடும்! அதிலும் பிணங்கொத்திக் கழுகுகள் போல பக்கத்து வீட்டுக்காரர்களைப் பிய்த்துப் பிடுங்கி சீரழித்துச் சிரித்துத் துப்ப சமூகத்தின் அங்கத்தினர்கள் காத்திருக்கும் பொழுது, மனிதனுக்கு அமைதியா ஏற்படும்! அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் மனிதன் விதியை நோக வேண்டும். அல்லது கடவுளை நொந்து கொள்ளவேணும். ஆனால், அவரோ தன்னைத் தானே குறை கூறி அலுத்துக் கொண்டார். தன் மகளை ஒழுங்காக வளர்த்திருந்தால், இந்த அகௌரவம் விளையாத தல்லவா?

10-வது அத்தியாயம்

கல்யாணி என்ன ஆனாள்? அவள் வாழ்வின் புதிய சுவட்டிலே இன்பங்கள் விளைத்தனவா? அனுபவம் எந்த ரீதி யிலே வளைந்து சென்றன? இவற்றைப் பற்றி யெல்லாம் ஆராய்ந்து மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும் என்று அப்பர் சுந்தரம் எண்ண வில்லை. ‘சனியன் தொலையட்டும்’ என்று முனங்கினார்.

ஆனால், அந்தச் சனிய்னின் இந்தச் சின்னச் செயல், அவர் அந்தஸ்தையே பாதித்து விட்டது. பெயரும் புகழுமாய் பிரபலஸ்தராக வாழ்ந்த அவர், தலை குனிய வேண்டிய தாயிற்று, பலரும் பலவிதமாகப் பேசும் பொழுது. அதற்கு மேலாகக் காத்திருந்தது ஒரு விஷயம். சிக்கலானது தான். அது தான் மனித சமுதாயம், எவ்வளவு குறுகிய மனோபாவம் பெற்றது என்று அறியும்படி செய்தது.

கல்யாணி வெளியேறி விட்டாள். அதற்கு யார் என்ன செய்ய முடியும்? அவள் குணக்கோளாறு அது-இந்த நினைப்பில் மற்றவர்கள் மற்றக் காரியங்களைக் கவனிப்பரர்களா! அப்பர் சுந்தரத்தின் குடும்பத்திற்கே கெட்ட பெயர் கொடுத்து விட்டார்கள். இதை அவர் சட்டை செய்யும் பண்பு பெற்றவால்ல. ஆனால், செருப்பு காலைக் கடிப்பது அதை அணிந்திருப்பவனுக்குத் தானே தொந்தரவு கொடுக்கும்! சூழ்நிலைக் கடிப்பு அவர் அமைதியைக் கெடுத்தது.

அப்பர்சுந்தரத்தின் இரண்டாவது பெண்ணுக்கு-கல்யாணியின் தங்கைக்கு- கல்யாணம் செய்ய முயன்ற போது அவருக்குச் சிக்கல்கள் எதிர்ப்பட்டன. எவ்வளவு அலைந்தும், பணம் செலவு செய்தும் என்ன? ‘ஓடிப் போனவ’ளின் தங்கையை யார் மணம் செய்து கொள்ள முன் வருவார்கள்!

‘ஏனய்யா அலைகிறீர்கள்? அக்காளைப் போலத்தானே தங்கச்சியும்!’ என்று சிலர் சொல்லெறியும் போது, தந்தையின் உள்ளம் புண்பட்டுக் குவிந்தது. மனம் குமுறினாலும் என்ன செய்ய முடியும்?

கண்ணற்ற மனிதக் கும்பல். சிந்திக்கும் திறனற்றது. அக்காள் செய்த பாவம் தங்கை தலையிலா விடிய வேண்டும்! ஐயோ ஈனச் சமுதாயமே…ஊம், என்னச் சொல்ல வேணும். அந்த மூதேவியை முதலிலேயே அடக்கி வளர்த்திருந்தால்…?

இதுவே அவரது புலம்பலாகி விட்டது. இதை மீனாட்சிசுந்தரம் கேட்கும் பொழுது துயரப்படுவதுண்டு. ‘குருட்டுச் சமுதாயத்தில் ஒரு குருடராக இருந்து இப்பொழுது தான் கண்விழித்திருக்கிறார் இவர். பாவம்’ என்று நினைப்பது அவன் இயல்பாகி விட்டது. அத்துடன் ‘இவருக்கு ஏற்ற துணைதான் கைலாசமும்’ என்று ஒரு அனுபந்தமும் இணைக்க நேர்ந்தது. இந்தத் திருத்தம் செய்யத் தூண்டியது தபாலில் வந்த ஒரு கடிதம் தான்.

அது கைலாசத்திடமிருந்து வந்திருந்தது. பக்கம் பக்கமாக வரைந்து தள்ளி யிருந்தான். அவனது செய்கைக்காக வருந்தினான், அனுபவம் அவன் கண்களைத் திறந்து விட்டதாம். ஏதேதோ ஞான உபதேசங்களை உதிர்த்திருந்தான். காரணம், பிரமாதமாக ஒன்றும் இல்லை! கல்யாணி அவனிடம் தனது குணத்தைக் காட்டி விட்டாள். அந்தக் கிளி வேறோர் கொடிக்குத் தாவி விட்டதாம்!

சில தினங்கள் கைலாசத்தினிடம் மோகமாயிருந்தாளாம். காதல், காதல் என்று மகத்தான கோட்டைகள் கட்டப்பட்டன. கனவு உலகிலே தான்! காலம் அவற்றைப் பனிப்படலமாக்கி விட்டது. போகப் போக அவளுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. சூழ்நிலை அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவள் மறைந்து போனாள்! அவன் கண்ட முடிவு இது தான்:

‘அன்ப, இதற்கு யாரைக் குறை சொல்வது! மலருக்கு மலர் தாவும் வண்டுகள் ஆண்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள், பார்க்கப் போனால் பெண்கள் மட்டும் என்ன! மனித மனப் பண்பே இப்படி வளர்ந்து வருகிறது. ஒரு பூவிலிருந்து மறு பூ: இந்தச் செடியிலிருந்து அடுத்த செடி- இப்படிக் கவர்ச்சியில் இருந்து அதிகக் கவர்ச்சி என மயங்கி அலைகிறது. தூரத்துப் பச்சை தான் கண்களை இழுக்கிறது. காலமும் அனுபவமும் சேர்ந்து எல்லாம் ஒரே இழவு தான் என்று சூடேற்றும் வரை, உண்மை – புலனாவதில்லை. நான் இப்பொழுதாவது விழிப்புற்றேனே, அதற்காக மகிழ்கிறேன். காலம் கல்யாணியின் கண்களையும் திறக்கட்டும்!’.

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *