கறுப்புத்தங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 11,483 
 
 

“சந்திரா, என் க்ரெடிட் லிமிட் முடிஞ்சது. தொ¢யாத்தனமா வீட்டை அடகுவெச்சிட்டேன். இன்னும் ஒன்றை லட்சந்தான் பாக்கி. ஆனா பேங்க்ல என்னென்னவோ பேசி பயமுறுத்துறாங்க. வெளியில தொ¢ஞ்சா அசிங்கன்ற நிலமைல இருக்கேன். கடைசியா கேக்குறேன். இந்த வீடு போச்சுன்னா சொந்தக்காரங்ககிட்டதான் போயி நிக்கனும். நாலு வளையலாவது குடேன். தவனையக் கட்டீடறேன்.” என்று கிணற்றடியில் வேலை செய்துகொண்டிருந்த மனைவியிடம் கெஞ்சினார் ரத்னம்.

கொஞ்சமும் மசியவில்லை அம்மையார். “இதுவரைக்கும் அடகு வெச்ச நகை எதையாவது மீட்டிருக்கீங்களா? கிணத்துல போட்டாலும் ‾ங்களுக்கு தரமாட்டேன். எங்கயாவது ஏற்பாடு பண்ணுங்க. இனியும் நான் ஏமாறமுடியாது.” என்றார்.

ரத்னம் பதிலுக்கு, “வீட்ல ஏழு ரூம் இருக்குன்னு சும்மா சும்மா சொந்தக்காரங்களக் கூட்டீட்டு வந்து தங்கவெச்சு விருந்து ‾பசாரம் ஊர் சுத்துறது ஷாப்பிங்னு மாசம் மூனு லட்சம் செலவாச்சு. அது என் தப்பா? கரன்ட் பில் கட்டாம ·ப்யூச பிடுங்கி ஒரு வாரம் ஆச்சு. ஆயிரமா இரண்டாயிரமா? நாப்பதாயிரம் பில். இப்ப வீட்டு பிரச்சனை வேற.” என்று சலித்துக்கொண்டார்.

அவர் மனைவி சற்றும் சளைக்காமல், “அதனாலதான் எந்த பிரச்சனையும் பண்ணாம கிணத்துல தண்ணி இரைக்கிறேன். ஆளுங்கள நிறுத்தீட்டு நானே நம்ம மூனு பேருக்கும் சமைக்கிறேன். ‾ங்கள யாரு ப்ரென்ட்ச நம்பி கோடிக்கணக்குல கடன் கொடுத்து ஏமாறச் சொன்னது? கம்பெனியும் வாங்குன கடனுக்கு சா¢யா ‾ங்க சித்தப்பா கைக்கு போயிருச்சு. சா¢ சா¢. மறந்திட்டு கிளம்பீறாதீங்க. மாமாவைக் குளிப்பாட்டி தேவையானதெல்லாம் செஞ்சுட்டு போங்க. நீங்கதான் செய்யமுடியும்.” என்றார்.

ஐந்து வருடங்களுக்கு முன் மனைவி இறக்க, பேராலிசிஸ் வந்து வலதுபக்கம் செயலிழந்து நடக்கமுடியாமல் ஆனார் ரத்னத்தின் தந்தை. பேச்சு சற்று குழறும் என்றாலும் cரளவுக்கு பு¡¢யும் அளவுக்கு இருந்தது.

இனி பேசி பயன் இல்லை என்று முடிவுசெய்து, “இதெல்லாம் நான் வாங்கிக்கொடுத்தது. எனக்கே தண்ணி காட்டுறா. என் தலையெழுத்து. வீட்ல சொன்ன பொன்ன கல்யாணம் பண்ணீருக்கனும்.” என்று எண்ணியவாறு அங்கிருந்து கிளம்பினார் ரத்னம். அவர் நான்கைந்து அடிகள் நடப்பதற்குள், “அய்யய்யோ!! என் வைரத்தோடு கிணத்துல விழுந்திருச்சே! என்னங்க என்னங்க இறங்கி எடுங்க!” என்று அலறினார் சந்திரா.

கிணற்றை எட்டிப்பார்த்த ரத்னம், “தண்ணி அதிகமா இருக்கு. நான் முக்குளிச்சு எடுக்கமுடியாது. இரண்டு வளையலாவது குடு. கரன்ட் பில்ல கட்டீட்டு மோட்டார் போட்டு தண்ணியெல்லாம் வெளில எடுத்துட்டு இறங்கலாம்.” என்றார்.

சா¢யென்று வேறு வழியின்றி வேகமாக கழற்றிக்கொடுத்தார் சந்திரா. மதியம் ஒரு மணியளவில் மின்சாரம் கிடைத்தது. தண்ணீரையெல்லாம் வெளியேற்றிவிட்டு, ஒரு தீப்பந்தத்தைக் கொளுத்திப் போட்டு, எதுவும் விஷ வாயுக்கள் இல்லை என்று ‾றுதிசெய்தபிறகு கிணற்றுக்குள் இறங்கினார் ரத்னம். பழகாத வேலை. இருந்தாலும் கைப்பிடிகளைப் பிடித்தவாறு கஷ்டப்பட்டு வழுக்காது படிகளில் இறங்கினார். அரைகுறை இருட்டில் தோடு பளிச்சென்று மின்னியது. அதை எடுத்துக்கொண்டு ஏற நினைக்கையில் காலில் இரும்புபோல ஏதோ தட்டியது.

என்னவென்று பார்த்தால், பாதி புதையுண்ட நிலையில் ஒரு இரும்புப் பெட்டி. அருகிலிருந்த கற்களை
வைத்து முழுவதும் தோண்டி எடுத்தார். பெட்டி மிகவும் கனமாக இருந்தது.

மனைவியிடம் வாளியை இறக்கச்சொல்லி அதில் பெட்டியை வைத்துவிட்டு மேலேறி வந்து அதை
இறைத்து எடுத்து ‾டைத்துப் பார்த்தால் இரண்டு மூன்று ப்ளாஸ்டிக் பைகளில் சுற்றியபடி இருந்தன அம்மாவின் பழைய தங்க நகைகள். எடை சுமார் இரண்டு கிலோவிற்கு மேலிருக்கும். அதை
எடுத்துக்கொண்டு தந்தையிடம் cடினார் ரத்னம்.

அதைக்கண்ட அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “மன்னிச்சுக்கடா ரத்னம். ஆறுமாசமா நீ கஷ்டப்பட்டுக்கிட்டிருக்க. இது இருக்கிறதையே நான் சுத்தமா மறந்துட்டேன். முப்பது வருஷம் ஆச்சு என் தம்பிக்கு பயந்து ஒளிச்சுவெச்சு. சொத்தை பி¡¢க்கசொல்லி பிரச்சனை. வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்திருக்கேன் அது இதுன்னு மிரட்டினான். அவன் ஏதாவது கலகம் பண்ணி, ரெய்டு வந்தா அவ தாய்வீட்ல போட்ட நகையையெல்லாம் அநியாயமா புடுங்கீடுவாங்களோன்னு அவசர தேவைன்னு பொய் சொல்லி அவகிட்ட வாங்கி ஒளிச்சு வெச்சேன். எங்கிட்ட கறுப்புப் பணமும் இல்ல.

இது கறுப்புத்தங்கமும் இல்ல. அவகிட்ட என் குடும்பத்த விட்டுக்கொடுக்க விரும்பல. ‾ங்கிட்டகூட சொல்லல. புது நகை வாங்கீட்டதுனால அப்பறம் பாத்துக்கலான்னு விட்டுட்டேன். புன்னியவதி காப்பாத்தீட்டா. எல்லாம் அவளோடது.” என்றார்.

மூவருக்கும் மகிழ்ச்சி. அன்னையின் நகைகளை தந்தையின் விருப்பத்தின்படி விற்று வீட்டையும் நகைகளையும் மீட்டு புதிதாக தொழில் தொடங்கினார் ரத்னம். தந்தையின் ‾டல்நலமும் படிப்படியாக
முன்னேறியது.

ரத்னமும் அவர் மனைவியும் இனி தாங்களாவது குடும்பத்துக்குள் ஒளிவு மறைவின்றி நடந்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *