கம்பியூட்டர் எண்:18

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 11,481 
 
 

எல்லாருக்கும் ஏதாவது சில விசயங்கள் சிறு வயதுமுதலே பிடித்திருக்கும்,  அப்படி எனக்கு பிடித்தமான பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்று கம்பியூட்டர்.

ஏனோ தெரியவில்லை கம்பியூட்டரின் மீதாது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு, அதனாலேயே +2 படித்தவுடன், அந்த பாடத்தையே தேர்ந்தெடுத்து படித்தேன்.

படித்தேன் என்று சொல்லக்கூடாது, காலேஜ் போனேன், கம்பியூட்டர் என்னை ஈர்த்தது, அதற்கும் எனக்கும் எப்போதும் ஒரு பினைப்பு இருப்பது போன்றே தோன்றும் அதனால் தானோ என்னவோ எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. எப்படியோ நான்கு ஆண்டுகள் படித்து முடித்து விட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன்..

இங்கு நேரம் பர்க்காமல் வேலை பார்த்தாக வேண்டும், வேலை காடினமாக தோன்றவில்லை, நான் நேசித்த கம்பியூட்டருடன் தானே வேலை அதனால கடினமாக இல்லை.

எனது அதிகம் பாத்தித்தது, எனது நினைவுகளாகத்தான் இருக்கும், எனது கடந்த காலம் எனக்கு அவ்வளவு நல்லதாக இல்லை.

என்னற்ற ஏமாற்றங்களும் , துரோகங்களும் நிறைந்திருந்தன, அதை மறாக்கவே கடுமையாக உழைக்க துவங்கினேன்.

மனிதனின் மனமானது எப்போது முக்கியதுவத்தை நிலையாக வைத்திருக்காது. அதுவும் ஒரு வகையில் நல்லது தான்.

இவ்வாறு மாறுவதால் தான் என்னால் எனது கடந்த காலத்தில் இருந்து வெளியில் வர முடிந்தது. இப்போது எனது அட்டவணையில் முதலிடத்தில் இருப்பது எனது வேலை மட்டுமே. நேரம் பாராது உழைத்துக்கொண்டிருந்தேன். அதன் பரிசாக முதலாண்டிலேயே ” பெஸ்ட் பெர்ஃபார்மர் அவர்ட்” (Best Performer Award) கிடைத்தது. அலுவலக வரலாற்றிலேயே சேர்ந்த முதல் வருடத்திலேயே அதை பெறுவது நான் தான் என்றார்கள்.

*****

 இவ்வாறாக பகலில் வேலையும் இரவில் , பாடல் கேட்டபடி தூங்கவுவதுமாக கழிந்தன நாட்கள்.

இப்போது ஒரு பிரச்சனை , எனது கடந்த கால நினைவுகள், இரவில் வந்து என்னை தொல்லை செய்ய துவங்கின. நான் சுய நினைவில் இருந்தால் தான் அதை கட்டு படுத்திவிடலாமே, தொல்லையோ கனவில், கண் விழித்ததும் அதன் பாதிப்புகள் என்னுள் இருக்கிறது.

நடு இரவில் தூக்கத்தை விட்டு பதட்டத்துடன் அடிக்க்கடி விழித்திருக்கிறேன். இதை எப்படி சரி செய்வது என்று அனேக முறை யோசித்திருக்கிறேன். ஆனால் பயன் இல்லை.

அலுவலகத்தில் ஒரு இனிய செய்தி வந்தது ” வேலை நேரத்தில் மாற்றம்”

அதாவது இதுவரை பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த எங்கள் அலுவலகம் இனி இரவிலும் செயல் படும்.

வேலை செய்பவர்களே தங்களின் பணி நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் .

இதை கேட்து சந்தோஷ பட்ட முதல் ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன். கல்லூரியில் படிக்கும் போதே படிப்பு சம்பந்தமான வேலைகளை கூட நான் இரவில் தான் செய்வேன். பகலை விட இரவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பகலில் தேவைப்படும் நேரத்தில் பாதிதான் எனக்கு இரவில் தேவைப்படும். எதை யோசித்தாலும் சட்டென ஒரு தெளிவு கிடைக்கும்.

இப்படி ஏ.ஆர்.ரகுமானைப் போல எனக்கும் இரவை ரொம்ப பிடிக்கும்.

அதனால் செய்தி கேட்டவுடன் உடனடியாக , அடுத்த வாரம் முதலே எனது பணி நேரத்தை இரவிற்கு மாற்ற முடிவு செய்தேன்.

பணி நேரம் மாலை 7.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை.

நான் இருந்த டீமில், நானும் , ஐரோப்ப நாட்டை சேர்ந்த நாட்டை சேர்ந்த ஒருவனும் இரவு நேரத்தை கேட்டிருந்தோம்.

சின்ன விசாரணைக்கு பிறகு , கேட்டபடி இரவு நேரம் கிடைத்தது இருவருக்கும்.

***

     நான் இரவு நேரத்தை தேர்ந்தெடுத்ததை ஊரில் இருக்கும் அம்மாவிடம் சொல்லவில்லை, அவர்களுக்கு நான் இரவில் வேலை பார்த்தால் பிடிக்காது

“உடம்புக்கு ஒத்துக்காது” என்பார்கள்.

பகலை விட இரவு அழகானதாய் இருந்தது, எங்கும் நியான் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட சாலைகள், அதனிடையே நடந்து அலுவலகத்தை வந்தடைந்தேன்.

இன்று தான் முதல் முறை இரவில் அலுவலகத்திற்குள் நுழைவது. நிறைய வித்தியாசம் விளக்குகளின் ஒளியால் அறையே வேறொரு நிறத்தில் காட்ச்சி அளித்தது.

பகலை விட ஆட்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு, வாசலில் இருந்து எனது இடம் செல்ல 20 மீட்டர் நடக்க வேண்டும்.

எனக்கு முன்னமே ஐரோப்பிய நண்பன் டேவிட் வந்திருந்தான்.

டேவிட் : hai dude, good eveng

 நான் : hai, happy eveng david

 டேவிட் : do you got any mail from our team lead regarding with task schedule

நான் : let me check

எந்து கம்பியூட்டரை உயிரூட்டினேன், சில நநிமிடங்கள்

1

2

3

4 வது நிமிடம்

நான் : david I got mail and I forwarded that to you, please check it.

மின்னஞ்சலில் குறிப்பிட்ட அட்டவணைப்படி வேலைகளை துவங்கினேன், எனது  கைகடிகாரம் நேரம் 10 மணி என காட்டியது.

நான் டேவிட்டை அழைத்துக் கொண்டு  கேண்டினை நோக்கி சென்றேன்.சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் கழித்து மீண்டும் இருக்கைக்கு வந்தோம். மீண்டும் வேலையில் மூழ்கினேன்.

4.30 மணி  ஆனது , இருவரும் கிழம்பினோம், கேண்டின் சென்றோம் நான் மட்டும் தேனீர் அருந்தினேன் , அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். பின்பு இருவரும் அவர் அவர் இருப்பிடம் நோக்கி செல்வதற்காக அலுவலக வாசலில் பிரிந்தோம்

****

     பொதுவாக அலுவலகத்தில் யாரும் பேசிக் கொள்ள மாட்டோம். ஏதேனும் தேவை என்றால் கூட கம்பியூட்டர் வழி உரையாடல் தான் , இதற்காகவே பிரத்யேகமாக ஒரு மென்பொருள் ஒன்றின் மூலம் அனைத்தும் கம்பியூட்டரும் இணிக்கப்பட்டிருக்கும்.

இப்போது இரவில் வேலை செய்வதால், நானும் டேவிட்டும் நேரடியாக பேசிக் கொள்வோம். எங்களது அவ்வப்போது உறைந்திருக்கும் மெளனத்தை கலைக்கும்.

எங்களை போலவே இரவில் பணிபுரியும் பலரும், அங்கு நிலவும் சப்தத்தை வைத்து புரிந்து கொள்ள முடிந்தது.    இவ்வாறாக நாட்கள் நகர்ந்தது, இரவு நேர நியான் வெளிச்சம் பிடித்து போனது.

****

     வழக்கத்திற்கு மாறாக அலுவலகத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. எனக்கு மட்டும் தான்  இந்த உண்ர்வோ என்று டேவிட்டிடம் எனது சந்தேகத்தை தெளிவு படுத்தி கொண்டேன்.

எனது கருத்தை அவனும் ஆமோதித்தான்.

வழக்கம் போல் இரவு உணவை சாப்பிட்டு விட்டு இருக்கையில் அமர்ந்தேன் வேலையில் கவனம் செலுத்த துவங்கினேன்.

வழக்கத்திற்கு மாறாக எனக்கு ஒரு தகவல் வந்திருந்தது பிரத்யேக மென்பொருள் வழியாக.

தகவல்:  hi how is your work?

அனுப்பியவர் ” கம்பியூட்டர் 18 “ எனக் காட்டியது..

யாரவது தவறாக அனுப்பியிருப்பார்கள் என்று விட்டு விட்டேன், மீண்டும் வந்தது, அதே தகவல் அதே இடத்தில் இருந்து.

மீண்டும் தவிர்த்ததேன், மீண்டும் வந்தது….

இப்படியாக பதிமூனாவது முறை பதில் அனுப்பினேன்.

நான் : doing good,

உடனே பதில் வந்தது

கம்பியூட்டர் 18 : thank u , don’t you ask about my work?

நான் : wait

என்று அனுப்பி வைத்து விட்டு வேலையை கவனிக்க துவங்கினேன்.

கிழம்பும் போது , நான் wait  சொல்லியதை மறந்துவிட்டேன், அது என் வீட்டிற்க்கு சென்ற பிறகு தான் நியாபகம் வந்தது. சரி இன்று இரவு போகும் போது பதில் அனுப்பி கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

***

     இன்று அலுவலக கட்டிடத்திற்குள் நுழையும் போதே டேவிட் கைபேசியில் தொடர்பு கொண்டான்,

சீக்கிரம் கேபின்-க்கு வா நமக்கு இன்று நிறைய வேலைகள் ஒதுக்கியிருக்கிறார்கள்” என்று சொல்லி முடித்தான்.

நானும் நேராக இடத்திற்கு சென்றேன், எனது கம்பியூட்டருக்கும் சேர்த்து அவனே உயிரூட்டியிருந்தான்.என்னை பார்த்ததும் அகம் மகிழ்ந்தவனாக ஒரு புன்னகையய் உதிர்த்தான்.

பின்னர் செய்ய வேண்டிய வேலைகளை விழக்கி கூரினான்.

இன்றே முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம், இரவு உணவையும் மறந்து வேலை செய்து கொண்டிருந்தோம். எப்படியோ அதிகாலை 4 மணிக்கு முடித்தும் விட்டோம்.

4.15 கேண்டினீல் தேனீர் அருந்தி கொண்டிருந்தேன், அப்போது தான் நேற்றைய நிகழ்வுகள் கண்முன் வந்து சென்றது.

அடடே இன்றும் மறந்து விட்டோமே என்று நினைத்துக் கொண்டேன். இன்று இரவாவது வந்தவுடன் பதில் அனுப்பி விடுவோம் என்று வீட்டிற்கு சென்றேன்.

மீண்டும் மாலை, அவசர அவசரமாக , நியான் வெளிச்சத்தில் நடந்து அலுவலகம் வந்தேன்.நேற்றைப் போல் இல்லாமல், இன்று அலுவலகத்தில் குளிர் அதிகமாக இருந்தது. வேலை தொடங்கி சிறிது நேரத்தில்

கம்பியூட்டர் 18 : good evening

நானும் பதிலுக்கு அதையே அனுப்பினேன், வழக்கமாக , இதில் எண்களுக்கு பதிலாக பணிபுரிபவர்களின் பெயர் தான் இருக்கும். இங்கே இல்லாததல் நான் கேட்டேன்

 நான் : உங்கள் பெயர் என்ன?

கம்பியூட்டர் 18: தாமிரா

 நான் : நல்ல தமிழ் பெயர்

கம்பியூட்டர் 18 : :-) , ஒரு சிரிப்பு மட்டும் பதிலாக

 

பின்பு நான் வேலையில் மூழ்கினேன், ஏன் உங்கள் பெயரை வைக்கவில்லை என்று கேட்க்க நினைத்தேன் ஆனால் கேட்க்கவில்லை.

*****

     பகல் பொழுதில் நன்றாக தூங்கிவிட்டேன், 6.45-க்கு தான் கண் விழித்தேன் , அவசரமாக கிழம்பி 7.15க்கு வீட்டை விட்டு சாலை வந்தேன்.. அப்போது தான் , நான் கைகடிகாரம் அணியாதது நியாபகத்திற்கு வந்தது, மீண்டும் வேக வேகமாக வீடு வந்து, அதை எடுத்து அணிந்து கொண்டேன்.

அலுவலகம் சென்றதும், கைகடிகாரத்தை கலட்டி மேஜை மீது வைத்துவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அது வெறும் எந்திரம் அல்ல, எனது தோழியின் கடைசி பரிசு. அவள் நியாபகமாக அதை வைத்திருக்கிறேன். எனது பிறந்த நாளுக்கு அவள் கொடுத்த பரிசு அதை நான் எந்திரமாக பார்த்ததே இல்லை.

சென்ற வருடம் என் பிறந்த நாள் அன்று அவள் வெளியூரில் இருந்தாள் அதனால் இதை கொரியரில் அனுப்பிவைத்துவிட்டு, என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னாள்.

டேய் சோம்பேறி இன்னைக்காது சீக்கிரம் எழுந்திருக்கலாம்ல, இன்னைக்கு உனக்கு ஒரு பார்சல் வரும் , யார் அனுப்பிருபாங்கன்னு அவசரமா ஃப்ரம் அட்ரஸ்(From Address)தேடாத, நான் தான் அனுப்பிருக்கேன்., இனியயாவது நீ சுறு சுறுப்பா இருக்கியான்னு பார்க்குறேன். அப்புறம் ஒரு முக்கியமான விசயமடா, என்னவா இருக்கும்னு யோசுச்சுட்டு இரு நான் நேர்ல சொல்றேன்

 

இது நான் அவள் என்னிடம் அவள் கடைசியாக பேசிய வார்த்தைகள். நேரில் வருவதாக சொன்னவள் , வரும் வழியில் சாலை விபத்தில் இறந்துவிட்டாள்.

அன்றிலிருந்து , வெளியில் செல்வதானால், கைகடிகாரத்துடன் தான் செல்வேன். ஏதோ அவள் என் அருகில் இருக்கும் உணர்வை அது ஏற்படுத்தியது. நினைவுகளில் இருந்த என்னை, டேவிட்டின் குரல் நிஜத்திற்கு கொண்டு வந்தது.

என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில்.

 

கம்பியூட்டர் 18: do you need any help?

சற்றும் யோசிக்கவில்லை

நான் : ஆமாம் என்று சொல்லிவிட்டு, எனது பணி அட்டவனையை தாமிராவு-க்கு அனுப்பி வைத்தேன்.

எப்படி , நமக்கு உதவி தேவை என்று, தாமிராவுக்கு தெரிந்தது, என்று யோசித்த படி , மேஜை மீதிருந்த கைகடிகாரத்தை பார்த்தேன். மீண்டும் நினைவுகளில் நீந்த துவங்கினேன்.

என்னை நெறிப்படுத்தியவள் அவள், சபையில் சரியாக பேசக்கூட தெரியாது  அதாவது இடம் பார்த்து பேசத்தெரியாமல் இருந்த எனக்கு பேச சொல்லி கொடுத்தாள்.

கோப்பத்தை கட்டுப்படுத்த சொல்லிக் கொடுத்தாள்.இப்படி நிறைய மாற்றங்களை உண்டு பண்ணியவள்.  நான் இந்த வேலையில் இருப்பதற்கு என்னை தயார் படுத்தியவளே அவள் தான், ஆனால், இன்று அவள் இல்லை.  மீண்டும் டேவிடின் குரல்

நேரம் ஆகிவிட்டது வா கிளம்பலாம்

சரி என்று கம்பியூட்டரை பார்த்தேன், தாமிரா அனைத்து வேலைகளையும் முடித்து அனுப்பியிருந்தாள்.

நான் : நன்றி 🙂 என அனுப்பி விட்டு கிளம்பினேன்.

****

     இரண்டு நாட்கள் விடுமுறை, நன்றாக வீட்டிள் ஓய்வெடுத்தேன்.

மீண்டும் திங்கள் மாலை வழக்கம் போல் அலுவலகம் கிளம்பினேன். அதிகமான வேலை, செவ்வாய் அன்றும் அதிகப்படியான வேலை.

புதன்கிழமை, வேலை சற்று குறைவாக இருந்தது, முதலில் சரியாக இருந்த குளிரின் அளவு , நாங்கள் உணவருந்திவிட்டு வரும் போது சற்றே கூடி இருந்தது.

வேலை அதிகம் இல்லாததால், மெதுவாக பார்த்து கொண்டிருந்தேன்.

கம்பியூட்டர் 18:hi how are you?

 நான் : fine , what about u?

கம்பியூட்டர் 18 : 🙂

சிரிப்பு மட்டுமே பதிலாக

நான் :  நான் உங்கள பார்க்கணுமே

கம்பியூட்டர் 18:முடியாதே

 நான் : நான் உங்கள் கேபினுக்கு வருகிறேன்

கம்பியூட்டர் 18:வேண்டாம் , எனக்கு வேலை இருக்கிறது.

சரியாக அப்போது, டீம் லீடரிடம் இருந்து அழைப்பு வந்தது, வேரு வேலை கொடுத்திருப்பதாகவும் உடனே முடிக்கும் படியும் சொன்னார்.

நான் : wait I have some work

என்று அனுப்பிவிட்டு வேலை பார்க்க துவங்கினேன்.

*****

     அடுத்த வாரத்தில் எனது வேலை நேரம் பகல் பொழுதிற்கு மாற்றப்பட்டது, காரணம் கேட்டேன் புது பிராஜக்ட் வந்திருக்கு அதான் என்றார்கள்.

நான் தாமிரா வைப்பற்றி அறிய அலுவலகத்தின் ஐ.டி. டிபார்ட்மெண்டை தொடர்பு கொண்டேன்.

அவர்களிடம் தான் எந்த கம்பியூட்டரை யார் பயன் படுத்துகிறார்கள் என்கிற விவரம் இருக்கும்.

கம்பியூட்டர் 18 எந்த பிளாக்(block)-யில் இருக்கிறது என்று விசாரித்தேன். நான் இருக்கும் அதே பிளாக் தான் என்று பதில் வந்தது.

உடனே திரும்பி வந்து அந்த கேபின் நோக்கி சென்றேன், அங்கே யாருமே இல்லை, பக்கத்து கேபினில் விசாரித்தேன்

யாரு தாமிராவா? அவள் விபத்தில் இறந்து எட்டு மாதம் ஆகிறாதே” என்றார்கள். எனக்கு பகீர் என்றது.

 

ஏதும் பேசாமல் எனது இடத்திற்கு வந்து அமைதியாக அமர்ந்துவிட்டேன்.

சில வாரங்களுக்கு முன் பார்த்த “தலாஷ்” (ஹிந்தி) படம் நியாபகத்திற்கு வந்தது. அதில் கரீனா கபூர் , இறந்த பின்பு ஆவியாக வந்து போலீஸ் அதிகாரி அமீர்கானுக்கு உதவி செய்வார். அமீர் கானின் கண்களுக்கு மட்டுமே கரீனா கபூரின் உருவம் தெரியும்.

இதை முதலில் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறதே, இப்படி என்னுடைய தோழி வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

ஆனால் , தாமிராவால் எப்படி கம்பியூட்டரில் வர முடிந்தது என்று ஒரே குழப்பம்.  இணையத்தில் ஆவிகளை பற்றிய ஆய்வு கட்டுரைகளை தேடத்துவங்கினேன். கிடைத்த பதிலகள்.

ஆவிகளால் டிஜிட்டல் ஊடகத்திலும் வர இயலும் ” என்றது ஒரு ஆய்வு

ஆவிகள் நமது உலகத்திற்குள் வரும் போது, அந்த இடத்தில் வெப்ப நிலை வழக்கத்தவிட்ட குறைவாக இருக்கும்,(குளிர்ச்சியாக இருக்கும்)” என்றது மற்றொரு ஆய்வு.

இரண்டாவதை படிக்கும் போது சிலிர்த்தது, தாமிரா என்னுடம் பேசிய பொழுதுகளில் அறையின் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது.

ஏன் தாமிரா என்னுடம் பேச வேண்டும்? ஏதும் சொல்ல நினைத்திருப்பாளோ?? என் வேலை நேரத்தை மாற்றாமல் இருந்திருந்தால் காரணம் அறிய வாய்பிருந்திருக்கும்.

சம்பந்தமே இல்லாத தாமிரா என்னுடம் பேசி எனக்கு உதவும் போது ஏன் என் தோழி இது வரை என்னுடம் பேச வில்லை??

இப்படி பல்வேறு குழப்பங்கள்..

மாலை வீட்டிற்கு வந்தது சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன். நேரம் இரவு 10.30 , எனது கைபேசி ஒலியேழுப்பி என் தூக்கம் கலைத்தது, கண்களை திறக்காமல் அழைப்பை எடுத்து “ஹலோ” என்றேன்.

டேய் சோம்பேறி” என்று பழக்கப்பட்ட குரல் கேட்டது எதிர் முனையில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *