கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 10,562 
 

Room Temperature சென்னை வெயிலையும் தாண்டி அண்டார்டிகாவை உணர்த்தியது. YouTube-ல் மரகதமணியின் சேலை பாட்டு மனதை வருடிக்கொண்டிருந்தது. Light Off பண்ணிட்டு கொஞ்சமாவது தூங்கினாதான் நாளை காலை கல்யாணத்துக்கு போகமுடியும். இப்ப தூங்கற idea இருக்கா? இல்லையா? மனைவியின் குரலில் கோபம்.

Facebook, Whatsapp, You Tube ஒவ்வொன்றையும் log off செய்தவாரே பேச ஆரம்பித்தான் ரவி.

எதுக்கும் இன்னொருதடவை முகூர்த்த டைம் சரி பார்த்துக்கறேன் பத்திரிகையை பிரித்து பார்க்கிறான்.

“உதயநாழிகை 7 மணிக்கு மேல் 10 நாழிகைக்குள்”என்று இருந்தது. அதாவது காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள். (1 நாழிகை = 24 minutes).

8 மணிக்கெல்லாம் கார் வந்திரும்; அதுக்குள்ள ரெடியாயிடனும். நான் ரெடியாயிடுவேன்; உன்ன நெனச்சாதான் ……. சரியான நேரத்திக்கு போலேன்னா நமக்கு தான் அசிங்கமா போயிடும். இவ்ளோ மெனக்கெட்டு Flight Ticket, Hotel Room, Car இப்படின்னு செலவழிச்சு நம்மல கூப்பிட்டு இருக்கா; அந்த ஒரு காரணத்திற்காவது Time-க்கு போய் attend பண்ணிட்டு வரனும்.

இங்க வந்தும் எனக்கு அர்ச்சனை தானா? போதும் உங்க lecture ; படுத்து தூங்குங்க. கண் அயரும் போது இருவரும் ஒருசில வார்தைகள் பேச ஆரம்பித்தனர்.

நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா, சரியா பதில் சொல்வோளா? மழுப்பக்கூடாது.
என்னடி ஏதோ ஜோடனையா ஆரம்பிக்கர; நேரடியாவே கேளேன்டி.
என்ன உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்?
அடி அசடே கல்யாணமாகி 5 வருஷம் ஆச்சு, இன்னும் 10 வருஷம் கழிச்சு இந்த கேள்விய கேளேன்.
மழுப்பக்கூடாதுன்னு சொன்னேனே.

“பல் துலக்கும் முன்பே sms செய்வாய்;
whatsapp தான் தெய்வம் என்பாய்.”

நம்மலோட ஆரம்ப நாட்கள் எல்லாம் மறந்துட்டேண்ணு நெனைக்கிறியா?

என்ன விட்டுட்டு நீங்க மட்டும் official tour போவேளே;அப்போலாம் என்ன மிஸ் பன்னிருக்கேளா?

உன்னதாண்டி மெச்சுக்கனும்; என் கட்டிச் சமத்து . . . . . .
மழுப்பாம பதில் சொல்லணும்.

“ தொலைவெனில் தூக்கம் தொலைவதேன்?; தொல்லை ஏன்?”

இப்படி ராப்பொழுதா ஆபிஸ் ஆபிஸ்ன்னு பழியா இருக்கேளே; அப்ப நான் உங்களுக்கு ரெண்டாம் பட்சம்தானா?

இந்த வெகுளித்தனம் தாண்டி உங்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே.

ஐஸ் வச்சது போதும்; எனக்கு உங்க பதில்தான் வேணும்.

“அலுவல்கள் முழிபிதுங்கும் ;
அமிலங்கள் மூளை துலைக்கும் – உன் நினைவாகவே”

கவிதைய சொல்லிச் சொல்லியே என் வாயை அடச்சுடறேள்.
உங்க மனசுல என்ன? பெரிய கவிஞர்னு நெனப்போ?

நான் ஒரு பெரிய கவிஞன்னா இல்லாட்டியும் ஒரு நல்ல கணவனா இருக்க try பண்ணுவேண்டி. என்ன . . . எனக்கு கொஞ்சம் Male Chauvinism தூக்கல் தான்; என்ன பண்றது? ரத்தத்துலயே ஊரினது.

சரி, சரி காலம்ற சீக்கரம் ஏந்துக்கனும் இப்ப தூங்குவோம். அலாரம் வச்சாச்சு, 6 மணிக்கு.

இன்னும் ஒரே ஒரு கேள்வி.

ம்….ம். கேளு

உங்க Short Film Outline என்னன்னு decide பண்ணியாச்சா?
ஏதோ meeting, discussion-ன்னு போனேளே; எல்லாம் scene போட்டேளா? வெறும் build-up தானா?

அதபத்தி ஏன்டி கேக்ற; ஒரு பக்கம் கூட முழுசா எழுத வரல. பேப்பரும், பேனாவும் எடுத்து வச்சு உட்கார்ந்தாலே தூக்கம் தான் வருது.

நாளைக்கு காலம்ற என்ன பார்க்க என் school frined கார்த்திக் வரேன்னு சொல்லி இருக்கான். அவன் நெறைய ideas வச்சுருக்கான். ஏதாவது ஒரு கதையாவது மாட்டும்.

அலாரம் சினுங்கும் முன்பே ரவி குளித்து முடித்திருந்தான். தன் மொபைல் போனில் கிழக்கு மேற்கா swipe செய்து wi-fi ஆன் செய்தான். whatsapp மொத்தமும் pictures – அத்தனையும் முதல் நாள் wedding reception photos . நெறைய selfi தான்.

மனைவி உமாவை எழுப்பி குளிக்கச் சொல்கிறான். intercom-ல் dial செய்து 2 coffee order செய்கிறான். உமா குளித்து முடித்து வெளியே வரும்போது மணி 6.45

Coffee-யை Sip செய்தவாறே, நான் இன்னும் ½ hour-ல ரெடியாயிடுவேன். நீங்க உங்க friend கார்த்தியோட பேசின்டு இருங்கோ வந்துடறேன்.

யாரு? நீ? ½ hour-லயா? மழை கொட்டோ கொட்டுணு கொட்ட போகுது……

தலைய நன்னா தவிட்டு; ஈரம் சொட்றது.

நான் reception-ல wait பண்றேன். சீக்கிரமா வந்து சேரு; கார் வந்திடுவான்.

கார்த்திக்கும்;ரவியும் நெறைய skype-ல் பேசியிருக்கார்கள் school days thick friends, school days பிறகு இருவரும் சந்திப்பது இப்போதுதான். இருவருக்குமே short film discussion சுவாரஸ்யம் கூட்டியது .

நம்ம ஸ்ரீரங்கத்து காரர் ஒரு books எழுதியிருந்தாரே; படிச்சிருக்கியா? ஒரு கதைனா எப்படி இருக்கனும்; கதையை விட script எவ்ளோ முக்கியம்னு simple – லா எழுதியிருக்காரு, அத படிச்சா ஒரு spark தோனும். படிச்சு பார்டா.

மச்சி; அத படிக்கவேண்ணா நல்லாயிருக்கும் ஆனா உதவாதுடா; வெறும் ஏட்டுச் சுரக்காய்.

அப்ப உன் கதையை எல்லாத்தையும் chart form-ல ரெடிபன்னுடா. உன்னோட thought process இன்னும் clear ஆகிடும். அப்பறமா chart – அ base பண்ணி script develop செஞ்சுக்கலாம்.

டேய்…. உன்னோட MBA style -ல இங்க காட்றியா? ஏற்கனவே ஆபிஸ்ல chart, power point, picture-னு படம் காட்டியாச்சுடா. கதைலையும் chart-ஆ?

மதுரை- லேர்ந்து MBA படிச்சிட்டு ஒரு Director, Cinema Industry-க்கே trend setter ஆ இருந்தாரு. ஆனா இப்ப என்னடான…… அவர் எடுக்கற எல்லா படமும் ஒரே stereo type ஆ இருக்குடா. நாம கூட office-ல review meeting – ங்கற பேர்ல ஒவ்வொரு மாசமும் ஒரே presentation காட்டுவோமே அது மாதிரி தோனுதுடா. வேற idea ஏதாவது சொல்லுடா.

மச்சி….எங்கடா உன் wife, Uma? இன்னும் வரல? Car வந்தாச்சுடா.

ரவி intercom-ல் room-ற்கு dial செய்கிறான். மறுமுனையில்,

இதோ வந்துடேன்;எல்லாம் முடிச்சுட்டேன் புடவையை மட்டும் இன்னொரு தரம் திரும்ப கட்டிக்கனும். நழுவற மாதிரி தோனுது. அப்பறம் கடைசியா ஒரு சின்ன powder touch-up அவ்ளோதான்.

போனை வைத்தவாறே ரவி மொனகினான்…… மெல்லிய குரலில்,

“என்னிக்கி இந்த பொண்ணுங்க சொன்ன நேரத்துக்கு make-up-அ முடிச்சிருக்காங்க”

டேய், நீ உன் idea-வ continue பண்ணுடா.

ஏதாவது ஒரு concept எடுத்து wikipedia, google எல்லாத்துலயும் refer பண்ணி notes எடுத்து study பண்ணுடா. அத கருவா வச்சு ஒருபடத்துல புகுத்திடலாம் – Chaos Theory; Split Personality; Bi-Polar Disorder; அவ்ளோ ஏன்டா? நம்ம பாரதியார் கவிதைகள படி பாஞ்சாலி சபதம் படி, பெண்களை பற்றி உணர்ச்சி பொங்க ஒரு script ரெடி பண்ணு.

எனக்கு யாரையும் காப்பி அடிக்க இஷ்டம் இல்லடா. நமக்கு lively-யா தோன்றத வச்சு, audience reach பன்ற மாதிரி எழுதனும். அவ்ளோதான்டா.

Audience சோட Taste Complete ஆ மாரிப்போச்சு . முன்னாடிலாம் 100 நாள் ஓடினா Success. ஆனா இப்ப ஒரு வாரம் ஓடினா போதும்டா. Audience attention span கொறஞ்சுப்போச்சு. ரொம்ப heavy subject எல்லாம் வேலைக்கு ஆகாதுடா.

Mumbai Don, Sleeper Cells, IPL betting இந்த மாதிரி கதையெல்லாம் இப்ப release செய்தா Flop தான்-டா.

டேய் ….. என்ன நீ பேசறேன்னு உனக்கே புரிஞ்சதான் பேசரியா? நீ என்ன தான் கஜகர்ண வித்தயா தனித்துவமா கதை எழுதினாலும், பார்க்கற ஆடியன்ஸ் அவன் ஏற்கனவே பார்த்த Korean படத்தையோ , Spanish படத்தையோ பார்த்துட்டு அந்த பாதிப்புல அதே கதைமாதிரி உன்னோடதும் இருக்குன்னு decide பன்னிடுவான். இன்னக்கி ஆடியன்ஸ் எந்த மூலைல இருந்தாலும் உலக சினிமா அத்தனையும் updated ஆ இருக்காங்க.

ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோடா; ஒரு குழந்தைய காட்டி 4 பேர்கிட்ட யார் ஜாடையா இருக்குன்னு கேட்டுப் பாரு உனக்கு 5 பேரோட ஜாடைன்னு பதில் கிடைக்கும். என்ன? 4-5 Logic இடிக்குதேன்னு முழிக்கிறயா? ஒருத்தனோட மனசுல யாரு அழமா பதிஞ்சிருக்காங்களோ அவங்க ஜாடைதான் ஒவ்வொருத்தனோட மனசுலையும் ஆழமா இருக்கும்.

மச்சி, ஒரு நிமிஷம் இருடா, அவளுக்கு phone பண்றேன். sorry ரவி இன்னும் 5 நிமிஷத்துல கீழ வந்திடுவேன். Uma reception வருகிறாள், மணி 8:45.

என்னங்க? கதையவே ஆரம்பிக்கமாம Script-மட்டுமே இவ்ளோ நீளத்துக்கு இழுத்துட்டேன்னு யோசிக்கறீங்களா என்னோட இந்த கதை ஒரு சின்ன OUTLINE தாங்க இதுல எந்த Secret-ம் கெடையாது.

“எப்படிஒருபெண்தன்னோட Make-Up-ரிற்குஇவ்ளோநேரம்செலவிடறாங்கறதுதான்கதையோட Wafer Thin Outline.”

½ மணிநேரம்ன்னுசொல்லிட்டு 5 நாழிகைஎடுத்துக்கிட்டதுதிடுக்கிடும்படியாஇருக்கலாம். ஆனா, இதுதாங்க Fact.

ஒருபெண்தன்வாழ்நாள்-ல 474 நாட்கள் (24 மணிநேரமும்) அயமநரிமட்டுமேசெலவிடறா. நான்சொல்லலிங்கஒரு Statistics Publish ஆகிஇருக்கு.

Uma விடம் சொல்கிறான் Ravi, ஒரு வழியா make-up முடிச்சுட்டு வந்துட்டியா? உன்ன பத்திதான் கதையோட outline. வண்டில ஏறு போற வழில சொல்றேன்.

கார்த்திக் ரொம்ப Thanks Da , Keep in Touch, bye ……

காரில் போகும் போது கதையை கேட்டுக்கொண்டே வருகிறாள்.

நான் உங்ககிட்ட ஒன்று கேட்கட்டா?

ம்….. கேளுடி

போன வாரம் Theatre-க்கு போய் படம் பார்த்தோமே

ம்…..ஆமா…….. ஜிகர்தண்டா.

ம்….. Yes. அதேதான். அந்த படத்தோட காப்பி மாதிரி உங்களோட இந்தகதை இருக்கே ?

அடி அசடே…….

ஒரு படத்தோட கதையும்; ஒரு குழந்தையோட ஜாடையும் ஒன்னுடி. உன் மனசுல எது ஆழமா பதிஞ்சிருக்கோ அதோட சாயல் தான் கண்டிப்பா மனசுல படும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *