அன்று ஞாயிற்றுகிழமை,எழில் கண்விழித்துப் பார்க்கும் போது,மணி எட்டு அருகில் கணவன் மதி இல்லை.பக்கத்து அறையில் மேனகாவும்,மோகனாவும் தூங்கி கொண்டிருந்தார்கள்.எழில் குளியலறை சென்று குளித்து முடித்தாள்.தன் உடையை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் நின்றாள்,எப்போதும் புன்னகை தவழும் முகம் அவளுடையது,எதற்கும் அதிகளவு கோபபடமாட்டாள்.தன்னை ஒரு முறை ரசித்துக் கொண்டவள்,குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு,தலையை துவட்டியப் படி சமையல் அறைப் பக்கம் வந்தாள் அவள்
மதி மும்மரமாக சமைத்து கொண்டிருந்தான்,என்ன பன்னுறீங்கள் என்ற கேள்வியுடன் அங்கு கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் எழில்.
என்ன மகாராணி!காப்பி நான் போட்டு தரவா?அல்லது நீங்கள் போட்டு தாரீங்களா?என்றான் மதி கிண்டலாக,அவள் சிரித்துக் கொண்டே,நானே காப்பி போடுறேன்,என்று அவள் இருவருக்கும் காப்பி போட்டாள்.இன்றாவது வாய்க்கு ருசியாக சாப்பிடுவோமே..என்று நானே டிபன் பன்னிட்டேன் என்று கண்ணடித்தான் மதி,அவள் அவனை செல்லமாக அடிக்கவந்தாள்.எழில் நன்றாகவே சமைப்பாள் மதி வீட்டில் இருந்தால்,அவளுக்கு வேலையே ஓடாது.
அதுவும் ஞாயிற்றுகிழமையென்றால்,ஏதோ அவள் வேலைக்குப் போய் ஓய்வு எடுப்பதுப்போல் தான் இருக்கும்.அவளுக்கும்,பிள்ளைகளுக்கும் வெளியில் போய் சாப்பிட பிடிக்கும்,மதிக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது,என்றாவது ஒரு நாள் போய் சாப்பிடுவார்கள்.ஞாயிற்றுகிழமைகளில் அவனே மார்கட் போய் இறைச்சி,மீன் ஏதாவது வாங்கிவந்து சமைக்க ஆரம்பித்துவிடுவான்,குறை கூற எதுவும் இருக்காது.மோகனாவும்,மேனகாவும் அப்பாவின் சமையலை மெச்சியப்படியே ருசித்து சாப்பிடுவார்கள்.எழிலுக்கு வெளியில் போய்சாப்பிடாத குறைமட்டும்தான் மற்றப்படி அமைதியாக சாப்பிடுவாள்.
மதி வீட்டில் இருந்தால்,பொழுது போவதே தெரியாது.பிள்ளைகளுடனும்,அவளிடமும் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பான்.அவனின் பேச்சில் அவ்வளவு சுவாரிசியம் இருக்கும்,ஏதாவது விளையாடுவார்கள்,அல்லது படம் பார்ப்பார்கள்.மாலை நேரம் ஏதாவது சிற்றுண்டி செய்து சாப்பிடுவார்கள்.இரண்டு பிள்ளைகளும் அப்பாவின் அளவு கடந்த செல்லம்,அவன் தலையை தடவிக்கொண்டும்,அவனின் தோளில் சாய்ந்துக்கொண்டும் இருப்பார்கள்.எழில் ஏதாவது சொன்னால்,இன்னும் கொஞ்ச நாட்களில் வேறு வீட்டுக்கு போய்விடுவார்கள்,இங்கு இருக்கும் மட்டும்தானே என்பான்,அதுவும் நியாயமாக தான் படும் அவளுக்கு
மோகனா காலேஜ் முடித்து விட்டு,வேலை தேடிக்கொண்டிருந்தாள்,மேனகா காலேஜ் போய்கொண்டிருந்தாள்,இருவருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம்,இருவரையும் எந்த சிரம்மமும் இல்லாமல் அன்பாக வளர்த்தார்கள் எழிலும்,மதியும்.எழில் வேலைக்கு போகவில்லை என்றாலும்,மதி நிறைய உதவிகள் செய்து கொடுப்பான்,அவளை திருமணம் செய்த நாள் முதல் கொண்டு.பிள்ளைகள் பிறந்தப் பின் கேட்க்கவே தேவையில்லை,வளர்ந்து நிற்கும் பிள்ளைகளை பார்க்கும் போது சந்தோஷப்பட்டுக் கொள்ளும் அவர்கள்,இன்னொரு வீட்டுக்கு வாழப் போய்விடுவார்கள் என்ற கவலையும் இடைக்கிடை எட்டிப் பார்க்கவே செய்தது.
எழில் நண்பர்கள் எல்லோரும் அவள் மீது பொறாமைப்படுவார்கள்.உனக்கு என்ன!அருமையான கணவர்,கொடுத்து வைத்தவள் என்பார்கள்,அவளுக்கு அதை கேட்க்கும் போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.மதி மீது இன்னும் அன்பு கூடும்,மதி எதற்கும் பிடிவாதம் பிடிக்க மாட்டான்,எழில் ஏதும் சொன்னால்,அதை அப்படியே கேட்டுக் கொள்வான்,எடுத்து எரிந்து பேசமாட்டான்,அன்பானவன்,பெண்களை மதிக்க தெரிந்தவன்,அதே போல் எழிலும் அன்பானவள்,எதற்கும் சண்டை போடமாட்டாள்,குடும்ப பொறுப்புகள் அனைத்தையும்,அவள் சரியாக செய்து முடிப்பவள்,எப்போதும் சுறுசுப்பாகவும்,சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்வள் எழில்.அதற்கு ஏற்ற மாதிரி இயங்கிகொண்டே இருப்பாள்,அதனால் மதிக்கு ஓய்வு கிடைக்கும் போது எல்லாம்,அவனால் முடிந்த உதவிகள் எல்லாம் செய்து கொடுப்பான் எழிலுக்கு,இருவரும் விட்டுக்கொடுத்து குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்துகிறார்கள்
மேனகா,மோகனா அதிகமாக சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள்.எதற்கும் விட்டு கொடுத்துப் போய்விடுவார்கள்.பெற்றோர்களிடம் மரியாதையுடன் நடந்துக் கொள்வார்கள்,பிடிவாத குணம் குறைவு,எடுத்தெரிந்துப் பேச மாட்டார்கள்,இந்த காலத்தில் இப்படி,பிள்ளைகள் கிடைத்திருப்பது நாங்கள் செய்த புண்ணியம் என்பாள் எழில்.மதி அதை ஒத்துக் கொள்ள மாட்டான்,இல்லை நாங்கள் அவர்களைப் அப்படி வளர்த்திருக்கோம் என்பான்.
பிள்ளைகள் எப்படி வளரவேண்டும்,என்று நாங்கள் நினைக்கின்றோமோ,முதலில் நாங்கள் அதற்குப் தகுந்தாற் போல மாறவேண்டும்,நானும்,நீயும் பொழுதனைக்கும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால்,அதைப் பார்த்து வளரும் பிள்ளைகளும் சண்டை தான் போடுவார்கள்,நாங்கள் போன் பார்த்துக் கொண்டு,டீவி பார்த்துக் கொண்டு,அவர்களை மட்டும் பார்க்காதே என்றால் அவர்கள் கேட்க்க மாட்டார்கள்,அந்த வகையில் நாங்கள் பிள்ளைகளை யாரும் எந்த குறையும் சொல்லாதளவிற்கு வளர்த்திருக்கோம்.
என்ன தான் இருவரும் படித்திருந்தாலும்,சமையல் முதற் கொண்டு,எல்லாம் தெரிந்து வைத்திருக்கார்கள்,நாளை வாழப் போகும் இடத்தில் அவர்களும் சந்தோஷமாக வாழ்வார்கள்,உன்னை உன் அம்மா சரியாக வளர்த்திருப்பதால் தானே,இன்று நாங்கள் சந்தோஷமாக வாழ்கின்றோம் என்பான் மதி.நீங்கள் எனக்கு ஏற்ற கணவராக இருப்பதால் தான் நாங்கள் சந்தோஷமாக இருக்கோம் என்பாள் எழில்,நாங்கள் நல்ல பிள்ளைகளாக இருப்பதால் தான் நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கீங்கள் என்பார்கள் பிள்ளைகள்,ஆக மொத்தத்தில் நாங்கள் வாழும் வாழ்க்கையில் தான் சந்தோஷம் இருக்கின்றது என்பான் மதி,நல்ல கண்வன் வாழ்க்கையில் அமைவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.