ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 3,053 
 

அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23

உடனே வரதனும்” ஆமாம் ராஜம்,ரமாஅந்த பரி¨க்ஷயை ஆத்லே இருந்து படிச்சு எழுதட்டுமே. ரமா அந்த பரி¨க்ஷயை எழுதி ‘பாஸ்’ பண்ணீ அவ ஒரு ‘கலெக்டர்’ ஆனா,சுரேஷ் சொல்றா மாதிரி நமக்குத் தானே பெருமை.நாம ஒரு ‘கலெக்டர்’ மாட்டுப் பொண்ணுன்னு சொல்லிக்கலாமே.உனக்கும் ரொம்ப பெருமையா இருக்காதா சொல்லு ராஜம்” என்று சந்தோஷத்துடன் சொன்னார்.

ரெண்டு பேரையும் பார்த்து “அவ படிச்சு ஒரு ‘கலெக்டர்’ ஆறது அப்புறமா இருக்கட்டும்.இப்போ ஆத்து செலவுக்கு உடனே பணம் வேணும்.’ஆள் ஒசந்தா ஒலை உசரும்’ன்னு உங்க ரெண்டு பேருக் கும் தெரியாதா.நீங்க ரெண்டு பேரும் பேசாம உங்க வேலையே பாத்துண்டு சும்மா இருங்கோ.ரமா படிச்சு இருக்கா.அவ படிப்புக்கு ஒரு நல்ல வேலே நிச்சியமா கிடைக்கும்.ரமா நீ ‘பேப்பரை’ப் பாத்து ஒரு நல்ல வேலைக்கு உடனே ‘அப்ளை’ பண்ணு” என்று சொல்லி ரெண்டு பேரையும் அடக்கினாள்.

உடனே சுரேஷ் ரமாவை தன் ரூமுக்கு அழைத்துப் போனான்

ரூமில் சுரேஷ் ரமா கைகளைப் படித்துக் கொண்டு “நான் சொல்றேன்னு என்னே தப்பா எடுத்துக்காதே ரமா.இந்த ஆத்லே அம்மா வச்சது தான் சட்டம்.நானோ என் அப்பாவோ அம்மா சொன்னதே மறுக்கவே முடியாது.நானோ,அப்பாவோ எது சொன்னாலும் அம்மா கேக்கவே மாட்டா.நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று சொல்லும் போது அவன் கண்களில் நீர் கசிந்தது.

ரமாவுக்கு சுரேஷ் சொன்னதைக் கேட்டதும் அசந்து விட்டாள்.”அப்போ,நீங்க என்னை பொண் ணு பாக்க வந்தப்பா வாக்கு குடுத்தேளே.இப்ப என்னால் ஒன்னும் முடியாதுன்னு சொல்லி உங்க கை யை விரிக்கிறேளே.நான் உங்க கூட இருந்துண்டு படிக்க முடியும்,ஒரு கலெக்டர் ஆக முடியும்ன்னு நம்பிண்டு தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதன்னு எங்க அம்மா அப்பா கிட்டே சொன்னேன். இப் போ நீ பண்றது நியாயமா சொல்லுங்கோ” என்று சொல்லி அழுதாள்.

சுரேஷ் மீண்டும் மீண்டும் தன் இயலாமையை சொல்லிக் கொண்டு இருந்தான்.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

தன் கணவர் அழுவதைப் பார்த்த ரமாவுக்கு ரொம்ப பரிதாபமாக இருந்தது.

அவள் தன் கணவனைப் பார்த்து “நீங்க அழாதீங்கோ.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் மெல்ல நேரம் கிடைக்கும் போது என் பாடங்களை படிச்சுண்டு வந்து பரி¨க்ஷயை எழுதறேன்” என்று சொல்லி தன் எண்ணத்தைச் சொன்னாள்.உடனே சுரேஷ்”அது தான் சரி ரமா.நான் உனக்கு முழு ‘ஹெல்பும்’ தறேன்.உன்னுடைய அசராத உழைப்புக்கு பகவான் நிச்சியமா பலன் தருவார்” என்று சொ ல்லி ரமாவை உற்சாகப் படுத்தினான்.

அதைக் கேட்டு ரமா மிகவும் சந்தோஷப் பட்டாள்.

எதற்கும் மசியாத மாமியார் அடுத்த நாள் முதல் ‘ரமாவை வேலைக்கு போயே ஆக வேண்டும்’ என்று தினமும் சொல்லி பிடிவாதம் பிடித்து வந்தாள்.’இது என்னடா கொடுமை.நாம வேலேக்குப் போகாவிட்டா விடமாட்டாப் போல இருக்கே இந்த மாமியார்.மாமியார் பிடிவாதம் தானே இந்த ஆத்லே கொடிக் கட்டிப் பறக்கறது’ என்று நினைத்து வருத்தப் பட்டாள் ரமா.

வேலைக்கு போக முயற்சி பண்ணுவது போல் பேப்பரைப் பார்த்து ஒரு சில கம்பனிக்கு ‘அப்ளை’ பண்ணீனாள் ரமா.’அது வரைக்கும் மாமனாரும்,ஆத்துக்காரரும்,ரொம்ப நல்ல மாதிரி இருக்காளே’ என்று சந்தோஷப் பட்டு ரமா சுரேஷூடன் ‘சகஜமாக’ இருந்து வந்தாள்.

சென்னையிலே இருந்த போது ‘நமக்கு ஒரு கலெக்டர் வேலே கிடைச்சு வடக்கே ‘போஸ்டிங்க்’ குடுத்தா உபயோகமாக இருக்கட்டுமே என்று ரமா ‘முப்பது நாளில் ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்’ என் கிற புஸ்தகத்தை வாங்கி ஹிந்தியை ஓறளவுக்கு கற்றுக் கொண்டு இருந்தாள்.

அவள் இப்போது டெல்லிக்கு வரவே தன் கணவன் கூட வெளியே போய் வரும் போது சுரேஷ் நிறைய ஹிந்தி பேசிக் கொண்டு வந்ததை கவனித்தும்,வீட்டில் மாமனார் வேலைகாரியுடன் ஹிந்தி பேசி வருவதையும் கவனித்தும்,அவள் வெளியே தனியாய் காய் கறி வாங்கி வரும் போது காய்கறி கடைக்காரர் கூட ஹிந்தி பேசியும்,மற்றவர்கள் பேசி வரும் ஹிந்தியை கேட்டும் ரமா ஹிந்தி நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டாள்.

ரமாவின் மாமனார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமப ராமாயணம்,திருப்புகழ் போன்ற சுவா மி புஸ்தகங்களை எல்லாம் படித்து தன் பொழுதை கழித்து வந்தார்.சுரேஷைப் போலவே அவர் பேச் சிலும் ஒரு விவேகம் இருந்ததை கவனித்தாள் ரமா.

ஆனால் மாமியார் அடிக்கடி தன்னை அழகுப் படுத்திக் கொள்வதிலும்.தலை மயிருக்கு ‘டை’ போட்டுக் கொள்வதிலும்,வித விதமாக ‘டிரஸ்’ பண்ணிக் கொள்வதிலும், ‘போனில்’ தன் ‘ப்ரெண்ட் ஸ்’களுடன் அரட்டை அடித்தும் தன் பொழுதி கழித்து வந்தாள்.அவன் பேச்சில் எப்போதும் ஒரு தோ ரணை,பெருமை எல்லாம் இருந்து வந்தது.

ரமா தன் மனதுக்குள் ‘இத்தனை வயசு ஆகிறது இந்த மாமியாருக்கு.ஒரு மாட்டுப் பொண்ணூம் வந்தாச்சு.வயசுக்கு தகுந்தா மாதிரி நடந்துக்காம என்னவோ ஒரு வயசு பொண்ணேப் போல தன்னை அழகு பண்ணீக்கிறாளே’ என்று நினைத்து ஆச்சரியப் பட்டாள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ரமா சுரேஷூடன் அடிக்கடி வெளியே போய் வந்துக் கொண்டு இருந் தாள்.இப்படி போய் வந்துக் கொண்டு இருந்தது ரமாவுக்கு ரொம்ப பிடித்து இருந்தது.அப்போது சுரேஷ் ரமாவுடன் நிறைய பேசி வந்தான்.ரமா சுரேஷ் பேச்சில் ஒரு விவேகத்தைப் பார்த்தாள்.

சுரேஷ் எப்போதும் நிறைய உலக விஷயங்கள்,மஹான்கள் சொன்ன விஷயங்கள்,இந்து மதத் தின் பெருமை,ராமாயணம்,மஹாபாரதம் இவற்றின் மகிமை,மனிதனின் கடமைகள்,தர்மம்,நீதி,நல்லது கெட்டது,பகவத் கீதையின் சாராம்சம்,பாகவதம் சொன்ன நல்ல கருத்துக்கள் போன்றகளைப் பற்றித் தான் நி¨றைய பேசி வந்தான்.

ரமா ஆச்சரியத்துடன் ‘இவர் இந்த வயசிலே இவ்வளவு தார்மீக சமாசாரங்களை எல்லாம் பேசி வறாரே’ என்று தன் கணவனை நினைத்து பெருமைப் பட்டாள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் இருக்கும் போது சுரேஷ் நிறைய ஹிந்திப் பாட்டுகளை எல் லாம் கேட்டுக் கொண்டு வந்து அவைகளை ரசித்து விட்டு, ரமாவுக்கு பல ஹிந்திப் பாட்டுகளீல் வரும் உருது வார்த்தைகளுக்கு அர்த்ததையும் சொல்லி வந்தான்.பழைய பாட்டுகளில் வரும் சங்கீதத்தை மிகவும் ரசித்து ஒவ்வொரு பாட்டின் ராகம் என்ன என்பதையும் சொல்லி வந்தான்.இதை நினைத்தும் ரமா ஆச்சரியப் பட்டாள்.

ரமா சுரேஷைப் பார்த்து “உங்களுக்கு எப்படி இந்த ராகம் எல்லாம் தெரியறது.’டக்’’ டக்’ன்னு சொல்றேளே” என்று கேட்டதும் சுரேஷ் “நான் ஒரு நாலு வருஷம் கிரமமா சங்கீதம் கத்துண்டேன் ரமா.எனக்கு சங்கீதத்லே ரொம்ப ‘இன்ட்ரெஸ்ட்’ உண்டு.நாலு வருஷம்ஆனவுடனே அம்மா தான் பா ட்டு ‘கிளாஸ¤ க்கு வீண் செலவு ஆறதுன்னு சொல்லி நான் பாட்டு ‘கிளாஸ¤’க்கு போவதை நிறுத்திட்டா” என்று வருதத்தோடு சொன்னான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டு ரமா மிகவும் வருத்தப் பட்டாள்.

உங்களுக்கு பாட்டுலே அவ்வளவு ‘இன்ரெஸ்ட்’ இருந்தும்,நீங்க ஒரே பையனா இருந்தும், உங்க அம்மா உங்க பாட்டு ‘கிளாஸை’ வீண் செலவுன்னு சொல்லி நிறுத்திட்டாரே.ஒரு அம்மா அவன் ஒரே பையனுக்கு இப்படியும் பண்ணுவாளோ.இதுக்கு உங்க அப்பா ஒன்னும் சொல்லலையா” என்று ஆச்ச ரியமாகக் கேட்டாள் ரமா.

உடனே சுரேஷ் “என் அம்மா கிட்டே என் அப்பா எவ்வளவோ தான் சொல்லிப் பாத்தார்.ஆனா அம்மா அதுக்கு ‘சுரேஷ் பாட்டு கத்துண்டு ஒரு பாட்டு வித்வானாவா ஆகப் போறானா என்ன.அவன் அந்த பாட்டு ‘கிளாசுக்கு’ போய் வற நேரத்தை அவன் படிப்புக்கு செலுத்தி நன்னா படிச்சானா,ஒரு நல்ல வேலே கிடைச்சு கை நிறைய பணம் வரும்.மாசா மாசம் சம்பளமும் வரும்.பாட்டு வித்வானுக்கு சபாவிலே பாட ‘சான்ஸ்’ கிடைச்சாத் தானே பணம் வரும்.இல்லாட்டா ஆத்லே சும்மா இருந்துண்டு தானே வறணும்.நாம என்ன ஒரு சங்கீதப் பரம்பரையிலா வந்து இருக்கோம்.சுரேஷ் தானே முதல் முதல்லே ஒரு சங்கீத வித்வானா ஆகப் போறான்.அவனுக்கு சபாபிலே எல்லாம் பாட ‘சான்ஸ்’ கிடை க்கிறது ரொம்ப கஷ்டம்’ன்னு சொல்லி பாட்டு நான் பாட்டு கிளாசுக்கு போறதே நிறுத்திட்டா” என்று சொல்லி மறுபடியும் வருத்தப் பட்டான்.

ரெண்டரை மாசம் ஆனதும் அவள் உடம்பில் ஒரு ‘மாற்றம்’ ஏற்படுவதைக் கவனித்தாள்.

அவளுக்கு சந்தேகம் வந்தது.

காலையிலே எழுந்ததும் தலையை சுற்றுவது போல இருந்தது.பல் தேய்க்கும் போது வாந்தி வந்தது.ஓசைப் படாமல் மெல்ல வாந்தியை எடுத்து விட்டு பல்லைத் தேய்த்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.ரெண்டு நாளும் அடுத்து,அடுத்து ‘இது’ போலவே இருந்ததால்,அவள் மெல்ல தன் சந்தேகத்தை தன் கணவனிடம் சொன்னாள்.
உடனே சுரேஷ் ரமாவைப் பார்த்து “ரமா,நம்ம ‘பாமிலி’ டாகடர் கிட்டே காட்டிண்டு வரலாம். அது தான் எல்லாத்துக்கும் நல்லது” என்று சொன்னதும் ரமா “சரி,எனக்கும் அது சரின்னு படறது” என்று வேறே வழி இல்லாமல் ஒத்துக் கொண்டாள்.

சுரேஷ் அவன அம்மா கிட்டே”அம்மா,ரெண்டு நாளா ரமா உடம்பு சரி இல்லேன்னு சொல்லி ண்டு இருக்கா.நான் அவளை நம்ம ‘பாமிலி’ டாகடர் கிட்டே கூட்டிண்டு போய் காட்டிட்டு வறேன்” என்று சொன்னான்.

உடனே ராஜம் ”ரமா நாள் பூராவும் இங்கே தானே இருக்கா.எங்க ரெண்டு பேர் கிட்டேயும் அவ ஒன்னும் சொல்லலையேடா.சொல்லி இருந்தா அப்பா அவளை நம்ம ‘பாமிலி’ டாக்டர் கிட்டே அழை ச்சுண்டு போய் இருப்பாளே” என்று சொன்னதும் வரதன் “ராஜம், யார் அழைச்சுண்டு போனா என்ன. ராமாவுக்கு நமப கிட்ட சொல்ல பயமா இருந்து இருக்கலாம்.அவ ஆத்துக்காரர் கிட்டே சொல்லி இருக் கா.விடேன்.அதே ஏன் பொ¢சு பண்ணீன்டு இருக்கே” என்று சொல்லி நிலைமையை சமாளித்தார்.

ஆனால் ராஜம் விடுவதாய் இல்லை.

”நாம என்ன புலியா சிங்கமா ரமா பயப்படறதுக்கு.சொந்த மாமியார் மாமனார் தானே”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சுரேஷ் தன்னை ரெடி பண்ணிக் கொண்டு “ரமா வீணா உங்க ரெண்டு பேரையும் தொந்தரவு பண்ண வேணாமேன்னு நினைச்சுண்டு சொல்லாம இருந்து இருப்பா. நான் ரமாவை அழைச்சுண்டு போய் காட்டிண்டு வறேன்” என்று சொல்லி அம்மா கொடுத்த ‘காபி’ யை குடிக்க ஆரம்பித்தான்.

ரமா மாமியார் கொடுத்த ‘காபி’யை குடித்து விட்டு, தன்னை ‘ரெடி’ பண்ணிக் கொண்டாள்.

மணி ஒன்பது அடித்ததும் சுரேஷ் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ரமாவை அழைத்துக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு கிளம்பினான்.

போகிற வழியிலே சுரேஷ் “ரமா,அம்மா சொன்னதே நீ ‘மைண்ட்’ பண்ணாதே.அம்மா சுபாவமே அப்படி.எதுவும் தனக்கு முன்னாடி மத்தவாளுக்குத் தெரியக் கூடாது நினைக்கக்கூடிய அம்மா என் அம்மா” என்று ரமாவுக்கு தன் அம்மாவைப் பற்றி சொன்னான்.

உடனே ரமா “எனக்கு அம்மாவைப் பத்தி நன்னா தெரியும்.நான் அம்மா சொன்னதே ‘மைண்ட்’ பண்ணலே.நீங்கோ கவலைப் படாதீங்கோ.நீங்கோ நிம்மதியா இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னாள்.

ரமா தன் மனசுக்குள் தன் மாமனாருக்கும்,கணவருக்கும் நன்றி சொன்னாள்.

சுரேஷ் ரமாவை ‘பாமிலி’ டாக்டா¢டம் காட்டினான்.அந்த டாக்டர் ரமாவை நன்றாக பதிசோத னைப் பண்ணி விட்டு,சில ‘டெஸ்டுகள்’ எடுத்து பார்த்து விட்டு ‘ரமா கர்ப்பமாக இருக்கிறாள்’ என்று சொல்லி சில மாத்திரைகளை எல்லாம் எழுதிக் கொடுத்து விட்டு,ரமா இனிமே எப்படி இருந்து வரணும் என்ற எல்லா ‘அட்வைஸ்’களையும் சொல்லி விட்டு,தன் ‘பீஸ¤க்கும்,‘டெஸ்டுகளுக்கும்’ ஆன மொ த்த பணத்தை சொன்னார்.சுரேஷ் டாகடர் சொன்ன பணத்தை அவா¢டம் கொடுத்து விட்டு,அவரை த் ‘தாங்க்’ பண்ணி விட்டு, ரமாவை டாக்டர் ‘ரூமி’ல் இருந்து வெளியே அழைத்து வந்தான்.

டாகடர் சொன்னதைக் கேட்டு சுரேஷ் ரொம்ப சந்தோஷப் பட்டான்.

ஆனால் ரமாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.இன்னொரு பக்கம் சந்தோஷமாயும் இருந்தது.

’இது என்னடா சோதனை.நாம இந்த குடும்பத்லே மேலே படிக்க முடியாம தங்கிப் போய் விடு வோமா’ என்ற பயம் அவளுக்கு வந்து விட்டது ரமாவுக்கு.

சுரேஷ் ரமாவை வீட்டுக்கு அழைத்து வந்து தன் அம்மா அப்பா கிட்டே ‘பாமிலி’ டாக்டர் சொன்ன சந்தோஷ சமாசாரத்தை சொன்னான்.

உடனே ராஜம் “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா சுரேஷ்” என்று சொல்லி விட்டு ரமாவைப் பார்த்து “சீக்கிரமா எங்களுக்கு ஒரு பேரனை பெத்துக் குடு” என்று சொன்னாள்.

வரதன் தன் மணைவியை பார்த்து ”எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் இல்லேன்னு சொல்லலே.ஆனா நீ கேக்கறா மாதிரி ரமா ஒரு பேரனே பெத்துக் குடுக்கறது அவ கையிலா இருக்கு. எல்லாம் அந்த பகவான் கையிலே தானே இருக்கு ராஜம்” என்று சொல்லி முடிக்கவில்லை, உடனே ராஜம் “ஆமாம்,நீங்க சொல்றது ரொம்ப நிஜம்.எல்லாம் அவன் கையிலே தான் இருக்கு”என்று சொல் லி விட்டு ரமாவைப் பார்த்து ”ரமா டாக்டர் குடுத்து இருக்கிற மத்திரைகளே தவறாம போட்டுண்டு வந்து,டாக்டர் சொன்னா மாதிரி இருந்துண்டு வா“ என்று கா¢சனமாக சொன்னாள்.

‘மாமியாருக்கு நாம ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துக் குடுக்கப் போறோம்ன்னு ஆனதுமே நம்ம கிட்டே கா¢சனமா பேசறாளே’ என்று நினைத்து ஆச்சரியப் பட்டாள் ரமா.

ராஜம் சென்னைக்கு ‘போன்’ பண்ணி ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் ரமாவின் சந்தோஷ சமாசாரத்தை சொன்னாள்.

உடனே அவர்கள் இருவரும் “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.ரமாவை ஜாக்கிறதையா இரு ந்து வரச் சொல்லுங்கோ.நாங்க கூடிய சிக்கிரமா டெல்லிக்கு வந்து,உங்க எல்லாரையும் பாக்க வறோம்” என்று சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணினார்கள்.

மங்களம் தன் கணவரைப் பார்த்து “ஏன்னா, ரமா அவ ஆத்துக்காரர், மாமியார், மாமனாரோட சந்தோஷமா இருந்து வறாப் போல இருக்கு.ரொம்ப சிக்கிரமா அவ ‘பிள்ளயாண்டு’ இருக்காளே.இன் னும் கொஞ்ச நாள்ளே நாம ரெண்டு பேரும் பாட்டி தாத்தா ஆகப் போறோம்” என்று சந்தோஷத்தில் சொன்னாள்.

ராமநாதன் ”ஆமாம் மங்களம்.எனக்கும் ரமா ரொம்ப சந்தோஷமா இருந்துண்டு வறாப் போலத் தான் தோன்றது.சுதாவுக்கு கிரமா ஒரு கல்யாணம் ஆயி இருந்தா,நாம எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடியே தாத்தா பாட்டி ஆயி இருப்போம்.ஆனா நமக்குத் தான் அந்த ‘ப்ராப்தம்’ இல்லாம போயி டுத்தே.நாம எப்போ தாத்தா பாட்டி ஆகணும்ன்னு என்கிறது பகவான் கையிலே தான் இருக்கு. மனு ஷா கையிலெ இல்லவே இல்லே” என்று விரகதியுடன் சொல்லிக் கொண்டு தன் கண்களைத் துடை த்துக் கொண்டார்,

ஒரு வாரம் ஆயிற்று.

ரமாவுக்கு ‘தான் கர்ப்பமா ஆகி விட்டோமே,நாம படிக்க முடியாம போயிடப் போறதே’ என்கிற கவலை தலை தூக்கியது.அவள் கவலைப் பட்டாள்.நெடு நேரம் யோஜனைப் பண்ணினாள்.ஒரு முடி வுக்கு வந்தாள்.

மெல்ல ஆத்துக்காரர் கிட்டே சொல்லி இந்தக் குழந்தையை கலைச்சுடலாம்’ என்று முடிவு பண்ணீனாள்.

ஆனால் எப்படி அதை அவர் கிட்டே சொல்றது.அவரோ நம் கூட பேசி வரும் போதெல்லாம் எவ்வளவு நல்ல தர்மமான விஷயங்களை எல்லாம் பேசி வருகிறார்.அப்படிப் பட்டவர் கிட்டே நாம ‘சிசு வதையை’ப் பத்தி சொன்னா அவர் கேக்கமாட்டாரே.அப்படி பண்ணுவது ‘சரி இல்லே’ன்னு தானே சொல்லுவார்.நம்ம சந்தோஷத்துக்காக அவரை இந்த மாதிரி ஒரு ‘மஹா பாதகத்தை’ பண்ண கேப்பது நல்லதா.ஒரு வேளை நாம படிக்கறதுக்காகத் தானே கேக்ககறோம்ன்னு சொல்லி ஒத்துப்பாரா.இல்லே அது தப்புன்னு சொல்லி மறுத்துடுவாரா’ என்று பல வித யோஜனைகளை எல்லாம் பண்ணீக் கொண் டு வந்தாள் ரமா.

அவளுக்கே அவள் பண்ண கேட்பது நியாயமாகத் தோன்றவிலை.

என்ன பண்ணுவது என்று புரியாமல் இருந்து வந்தாள் ரமா.

அடுத்த நாள் இரவே ரமா மெல்ல தன் கணவனிடம் “நமக்கு இவ்வளவு சீக்கிரமா இந்த குழந் தை வேணாமே.கொஞ்சம் தள்ளிப் போடலாமே.இப்போதைக்கு நாம இந்த குழந்தையை கலைச்சுட லாமா.நான் கலெக்டர் ஆன பிற்பாடு ஒரு குழந்தையே பெத்துக்கலாமே” என்று கெஞ்சி பார்த்தாள்.

உடனே சுரேஷ் “ரமா நான் சொல்றேன்னு என்னைத் தப்பா மட்டும் எடுத்துக்காதே.குழந்தை என்பது பகவான் குடுக்கறது.அதை அழிக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லே.ஜீவனை உண்டு பண் ணுவதும்,அழிப்பதும் அவர் வேலை.அதை நாம செய்யவே கூடாது.எனக்கு இதிலே உடன்பாடு இல் லே.இருந்தாலும் நீ படிக்க ரொம்ப ஆசைப் படறேன்ற காரணத்தாலே நான் ஒத்துண்டாலும்,என் அம் மாவும்,அப்பாவும் இதுக்கு நிச்சியமா சம்மதமே தர மாட்டா.அவா சீக்கிரமா ஒரு பேரனையோ பேத்தி யையோ பாக்கணும்ன்னு ரொம்ப ஆசை பட்டுண்டு இருக்கா.என் அப்பாவையாவது நான் எப்படியாவ து சொல்லி சமாளிச்சுண்டு வரலாம்.ஆனா என் அம்மா கிட்டே நான் என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டா.நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

உடனே ரமா “நீங்க சொல்றது எனக்கு நன்னா புரியறது.நீங்க சொல்றது சரி” என்று சொல்லி விட்டு சும்மா இருந்தாள்.

தன் மனதை தேற்றிக் கொண்டாள்.வேறு வழி இல்லாமல் குழந்தையை பெற்றுக் கொள்வது என்று தீர்மானம் பண்ணி விட்டு தன் ‘சிவில் சர்விசஸ்’ பாடங்களை படித்து வந்துக் கொண்டு இருந்தாள் ரமா.

தன் மாட்டுப் பொண்ணு பிள்ளை உண்டாகி விடவே,சந்தோஷப் பட்டு,ரமாவைப் பார்த்து “ரமா நீ இப்போதைக்கு வேலைக்குப் போக வேணாம்.குழந்தைப் பொறந்து ஒரு ஆறு மாசம் ஆனதும், நீ ஒரு நல்ல வேலைக்கு ‘அப்ளை’ பண்ணி வேலைக்குப் போய் வா.நான் குழந்தயே பாத்துக்கறேன்” என்று சொன்னாள் ரமாவின் மாமியார் ராஜம்.
’அது வரைக்கும் இப்போவே வேலைக்குப் போகணும்ன்னு சொல்லாம இருந்தாளே இந்த மாமி யார்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள் ரமா.

அடுத்த நாளே ராமநாதன் தனக்கும் மங்களத்துக்கும் ‘G.T.எக்ஸ்பிரஸ்ஸில்’ முதல் வகுப்பில் டெல்லிக்கு முன் பதிவு செய்தார்.

சம்மந்தியைக் கூப்பீட்டு “சம்மந்தி,நாங்க இந்த மாசம் முப்பதாம் தேதி கிளம்பற ‘G.T. எக்ஸ்பிர ஸ்லே டெல்லிக்கு வறோம்.எங்களுக்கு டெல்லி ரொம்ப புதுசு.அதனாலே மாப்பிள்ளையே கொஞ்சம் டெல்லி ஸ்டேஷனுக்கு வந்து எங்களே உங்க பங்களாவுக்கு அழைச்சுண்டு போகச் சொல்ல முடியுமா” என்று தயங்கிக் கொண்டே கேட்டார்.
உடனே ராஜம் “நிச்சியமா.நான் சுரேஷை டெல்லி ஸ்டேஷனுக்கு அனுப்பி உங்களே எங்காத்து க்கு அழைச்சுண்டு வரச் சொல்றேன்.நீங்க கவலைப் படாம கிளம்பி வாங்கோ.உங்க ‘கம்பார்ட்மெண்ட் நம்பரையும்’,’பெர்த் நம்பரையும்’ சொல்லுங்கோ”என்று தேன் ஒழுகக் கேட்டு விட்டு ‘போனி’ல் காத்து கொண்டு இருந்தாள்.
உடனே ராமநாதன் அவர் ‘ரிஸ்ர்வ்’ பண்ணி இருந்த ‘கம்பார்ட்மெண்ட் நம்பரை’யும்,’பெர்த் நம்ப ரை;யும் சொன்னார்.ராஜம் ராமநாதன் சொன்ன விவரத்தை ஒரு காகிதத்திலே எழுதிக் கொண்டாள்.

’தன் மாமியார் தன் அம்மா அப்பா கிட்டே இப்படி தேன் ஒழுகப் பேசுவதைப் பார்த்த ரமா தன் மனதுக்குள் ‘இருக்கட்டும்,இருக்கட்டும்.மாமியார் போட்டு இருக்கும் எல்லா வேஷமும் அப்பா அம்மா நேர்லே இங்கே வந்து பாத்தா வெளுத்து விடும்.நம்ம அம்மாவும் அப்பாவும் கேட்டா இந்த மாமியார் என்ன பதில் சொல்லப் போறா பாக்கலாம்.பதில் சொல்ல முடியாம வகையா மாட்டிண்டு திண்டாடப் போறா மாமியார்.அப்போ மாமியார் சாயம் வெளுத்துப் போக போறது’ என்று சொல்லி தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் ரமா.

ராமநாதன் டெல்லி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் ராஜம் தன் தம்பியை ‘போ னில்’ கூப்பிட்டு “ராமு,ரமாவோட அம்மா அப்பா ரமாவை பாக்க இந்த மாசம் முப்பதாம் தேதி G.T. எக்ஸ்பிரஸ்லே வறாளாம்.எனக்கு உன் பங்களா ஒரு பத்து நாளைக்கு வேணும்”என்று கேட்டாள்.

உடனே ராஜத்தின் தம்பி ராமசாமி “அக்கா,அந்த ‘பீரியட்லே’ நாங்க டெல்லிலே இருக்க மாட் டோம்.நாங்க அமொ¢க்காவுக்கு ஒரு ஆறு மாசம் போறோம்.நீ பத்து நாள் என்ன,ஒரு மாசம் கூட தங்கி இருந்துக்கோ.எனக்கு ஒரு ‘ப்ராப்லெம்மும்’ இல்லே.உன் சந்தோஷம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்” என்று சொன்னதும் “ரொம்ப தாங்க்ஸ் ராமு.நான் ஒரு பத்து நாளைக்குத் தான் உன் பங்களாவிலே இருக்கப் போறேன்.அப்புறமா எங்காத்துக்கு வந்திடுவேன்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீ னாள் ராஜம்,
மாமியார் தன் தம்பி இடம் பேசினதைக் கேட்ட ரமா திடுக்கிட்டாள்.

’என்ண்டா இது.இந்த மாமியார் மறுபடியும் தன் அம்மா அப்பா எதிர்லே தன் பணக்கார ‘டிராமா வை’ப் போடப் போறாளா.அவா ரெண்டு பேருக்கும் இந்த குடும்பத்தின் உண்மை வேஷம் எப்போ தெரியப் போறது.ஒரு வேளை தெரியாமலே போயிடுமா’ என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள்.

குறிப்பிட்ட தினத்தில் சுரேஷூம் ரமாவும் டெல்லி ஸ்டேஷனுக்குப் போனார்கள்.

வண்டி வந்து நின்றதும் சுரேஷூம் ரமாவும்,ராமநாதன் ‘போனி’ல் சொல்லி இருந்த பெட்டிக்கு எதிரே போய் இருவரையும் வரவேற்றார்கள்.

மங்களம் ரமாவைக் கட்டிக் கொண்டு ”ரமா,இவ்வளவு சீக்கிரமா இந்த சந்தோஷ செய்தியே சொ ல்லுவேன்னு நானும் அப்பாவும் எதிர் பார்க்கவே இல்லே.எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷ மா இருக்கு.நீ உன் உடமபே டாக்டர் கிட்டே காட்டினாயா.அவர் என்ன சொன்னார்.அவர் சொன்னா மாதிரி ஜாக்கிறதையாக இருந்துண்டு வறயா.அவர் குடுத்த எல்லா மாத்திரைகளையும் ஒழுங்கா சாப் பிட்டுண்டு வறயா” என்று கேள்விகள் மேலே கேள்விகள் கேட்டாள்.

உடனே ரமா ”அவர் என்னை அவா ’பாமிலி’ டாக்டர் கிட்டே காட்டினாரும்மா.அந்த டாக்டர் சொன்ன மாத்திரைகளை எல்லாம் ‘ரெகுலரா’ சாப்பிட்டுண்டு வறேன்.டாக்டர் சொன்ன அறிவுரை படி தான் நடந்துண்டு வறேன்” என்று சொன்னாள்.

‘இப்படி சந்தோஷமா இருந்து வர நம்ம அப்பா அம்மா கிட்டே நம குடும்ப வண்டவாளத்தே எல் லாம் சொல்லி அவாளை கஷ்டப் படுத்த வேணாம்.நாம கஷ்டப் பட்டுக் கொண்டு வரணும்ன்னு அந்த பகவான் நம்ம தலையிலே எழுதி இருக்கான்.அதை அனுபவிச்சு வந்து,நாம நமக்கு ஒரு வழி தேடிக்க லாம்’ என்று நினைத்து தன் வாய் வரைக்கும் வந்த அவ குடும்ப சமாசாரத்தை சொல்லாமல் அடக்கிக் கொண்டாள் ரமா.

ராமநாதனையும் மங்களத்தையும் பங்களாவுக்கு அழைத்து வந்தார்கள் சுரேஷூம் ரமாவும்.

பங்களாவுக்கு வந்ததும் சுரேஷ் ரமாவை ‘பெட் ரூமு’க்கு அழைத்துப் போனான்.

“ரமா,உனக்கு எப் படி நான் என் நன்றியே சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறேன்.உன் அப்பா அம்மாவைப் பாத்ததும்,நீ என் குடும்ப உண்மை விஷயங்களையும்,என்னை பத்தின எல்லா விவரத் தையும் சொல்லி விடப் போறேன்னு நான் நினைச்சேன்.ஆனா நீ அதை பத்தி எல்லாம் ஒன்னும் சொ ல்லாம சும்மா இருந்தே. ரொம்ப “தாங்க்ஸ்’ ரமா” என்று ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் களில் கண்ணீர் மல்க சொன்னான்.

“நீங்க எனக்கு ‘தாங்க்ஸ்’ எல்லாம் சொல்ல வேணாம்.உங்களே மாதிரி ஒரு நல்ல ஆத்துக்கார ரும்,மாமனாரும் எனக்குக் கிடைச்சு இருக்கா.அது போதும் எனக்கு இந்த ஜென்மத்லே.நான் நிச்சி யமா இந்தாத்து உண்மையை எங்க அம்மா அப்பா கிட்டே சொல்லவே மாட்டேன் என்னை நம்புங்கோ. நான் உங்க கூட இருந்து இந்த ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுதி ‘பாஸ்’ பண்ணனும்.ஒரு கலெக்டர் ஆகணும்.இது தான் என் வாழ் நாள் ஆசை.நீங்கோ அழாதீங்கோ.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லி சுரேஷ் கண்களில் வழிந்துக் கொண்டு இருந்த கண்ணீரைத் துடைத்தாள்.

மூனு நாள் ராமநாதனும் மங்களமும் அந்த பங்களாவிலே தங்கள் பெண் ரமாவோடு சந்தோஷ மாக இருந்து வந்தார்கள்.

அவர்கள் கிளம்பிப் போகும் போது மங்களம் ராஜத்தை பார்த்து “மாமி,ரமா வளைகாப்புக்கு செ ன்னைக்கு வர வேணாம்.நீங்க என்னைக்கு சீமந்தம் வச்சுக்குறேளோ,அன்னைக்கு காத்தாலே நாம ரமாவோட வளைக் காப்பையும் வச்சுக்கலாம்.ரமா பிள்ளைதாச்சி பொண்ணு.மாசம் ஆன பிற்பாடு வெ றுமனே அவளே டெல்லிக்கும்,சென்னைக்கும் அலைக்கழிக்க வேணம்ன்னு எனக்குப் படறது. உங்க அபிப்பிராயம் என்ன” என்று கேட்டாள்.உடனே ராஜம் மிகவும் சந்தோஷப் பட்டு “அப்படியே பண்ண லாம் இதிலே எனக்கு ஒரு ஆ§க்ஷபணையும் இல்லே” என்று சொன்னாள்.

உடனே ராஜம் ‘நல்ல வேளே.சம்மந்தி மாமி ரமாவை சென்னைக்கு வளைகாப்புக்கு அழைச்சுண்டு போகலே,ரமாவுக்கு மாசம் ஆயிட்டதாலே நல்ல படியா சென்னைக்குப் போயிட்டு,டெல்லிக்கு திரும்பி வரணும்.சம்மந்தி மாமி சொன்னா மாதிரி பண்னா அந்த கஷ்டம் எல்லாம் இருக்காதே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.
ராமநாதனும் மங்களமும் ரெண்டு நாள் சம்மந்தி வீட்டில் ரமாவுடன் சந்தோஷமாக இருந்து விட் டு சென்னைக்கு கிளம்ப தயாரானார்கள்.மங்களம் ரமாவைத் தனியா அழைத்து “ரமா,மாசம் ஆக, ஆக, நீ உன் உடம்பே ரொம்ப ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வா” என்று ரமாவைக் கட்டிக் கொண்டு சொ ன்னாள்.ராமநாதனும்,மங்களமும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அடுத்த நாளே ராஜம் தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு வந்து வந்து சேர்ந்தாள்.ரமா வீட்டில் இருந்து தன் பாடங்களை படித்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் மாமியார் ராமாவைப் பார்த்து “இப்படி பள்ளி கூடத்துக்கு போற பொண்ணு போல நீ எப்பவும் புஸ்தகத்தை வச்சுண்டு சதா படிச்சுண்டு இருக்க முடியாது.நீ இந்த ஆத்து மாட்டுப் பொண் ணு.எழுந்து வந்து எனக்கு கூட மாட உதவி எல்லாம் பண்ணு” என்று சொல்லி முடிக்கவில்லை வரதன் “ராஜம்,ரமா படிச்சு வற பாடங்கள் ரொம்ப கஷ்டமானது.அதே ரொம்ப நேரம் படிக்கணும்.இப்படி நீ சொல்றா மாதிரி விட்டு விட்டு படிக்கக் கூடாது” என்று சொன்னதும் “நான் உங்களே ஒன்னும் கேக்க லே.உங்களாலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே.மாட்டுப் பொண்ணாவது எனக்கு கூட மாட ‘ஹெல்ப்’ பண்ணட்டுமே.சுரேஷூக்கு கல்யாணம் ஆகியும் நான் ஒத்தி தான் எந்த ஆத்து வேலே எல் லாம் செஞ்சுண்டு வரணுமா.அதுக்கு நான் சுரேஷூக்கு ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சே இருக்க மாட்டேனே.பையனுக்கு கல்யாணத்தே பண்ணி வச்சும்,நான் தான் இந்த ஆத்லே எல்லா காரியமும் பண்ணீண்டு வரணுமா.ரமா கல்யாணத்துக்கு முன்னாடி அவ படிப்பை எல்லாம் முடிச்சுட்டு வந்து இருக்கணும்.மாமியார் ஆத்துக்கு வந்து படிச்சுண்டு இருக்க முடியுமா.தீராது ரமா வேலேக்குப் போய் வந்துண்டு இருந்தாலும் பரவாயில்லே.ஏதோ ஆத்துக்கு கொஞ்சம் பணம் வறதேன்னு நான் எல்லா வேலையையும் பண்ணீண்டு வரலாம்.இவ அதுக்கும் போகாம பிள்ளையாண்டு இருக்கா.மாசம் ஆயி ட்டா அவளாலே எந்த காரியமும் பண்ண முடியாது.ஆனா இப்போ எனக்கு கூட மாட சின்ன சின்ன உதவிகளை எல்லாம் பண்ணீ வரலாமே” என்று கத்திச் சொன்னாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *