எதிர்காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 5,113 
 
 

முரளி கண்ணில் கறுப்பு கண்ணாடி,கையில் வெள்ளை பிரம்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு யாரின் துணையும் இல்லாமல் முதல் தடவையாக வெளியில் அடியெடுத்து வைக்கும் முரளி மனதில் ஆயிரம் குழப்பங்கள் மெதுவாக வெள்ளை பிரம்பை ஊன்றியப் படி பாதையோரம் நடக்கத் தொடங்கினான் அவன்,பின்னாடி வரும் மிதி வண்டிகாரர்களின் மணியோசை கொஞ்சம் அதிகமாகவே கேட்டது,யார் மீதும் மோதி விடுவோமோ என்ற பயம் மனதில் எழுந்தது,அவசரமாக வரும் மிதிவண்டியில் மறுப்படியும் அடிப் பட்டு விட்டால் என்ன செய்வது அதை நினைக்கும் போது மனதில் திக் என்றது அவனுக்கு,கண்களில் கண்ணீர் வந்து விடுமோ என்ற பயத்தில் அடக்கி கொண்டு மெதுவாக நடந்தான் அவன்,பிறவியிலையே பார்வை இல்லாமல் பிறப்பது வேறு விடயம்,இப்படி இருப்பது வயதில் பார்வையை இழந்து நிற்பது என்பது கொடுமையான விடயம்.

வாழ்க்கையில் பல கனவுகளுடன் காலேஜ் போய் கொண்டிருந்த முரளியின் வாழ்க்கை இன்று இப்படி தலைகீழாக மாறி விடும் என்று அவனும் அவன் குடும்பமும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை,சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவு இல்லை அவர்கள் வீட்டில் அப்பா கருணாகரன்,அம்மா புவனேஷ்வரி இருவரும் அரசாங்கத் தொழில் செய்பவர்கள்,இரண்டு பிள்ளைகள் மூத்தவன் முரளி இரண்டாவதாக அர்ஜூன் இத்தனை வருடங்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஓடியது அவர்களின் குடும்ப வாழ்க்கை,முதல் முறையாக முரளியின் விபத்து குடும்பத்தையே ஆட்டம் காண செய்து விட்டது,மூத்த பிள்ளை செல்லமாக வளர்த்த பிள்ளை இன்று கண் பார்வை இழந்து நிற்பதை முரளியின் பெற்றோர்களால் தாங்க முடியவில்லை,அழுது ஓய்ந்து விட்டு மறுப்படியும் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டார்கள் அதற்கு காரணங்களும் இருந்தது.

இருந்த பழைய வீட்டை திருத்துவதற்காக இருவரும் சேர்ந்து பேங்கில் லோன் எடுத்து இருந்தார்கள்,நமக்கு ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாமல் இருக்க முடியுமா? இல்லை என்றால் முதலை தான் கொடுக்காமல் விட முடியுமா? அரசாங்கத் தொழில் மாதம் மாதம் சம்பளத்தில் பணத்தை பிடித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பேங் இவர்களுக்கு லோன் கொடுத்தது அதற்காக தற்போது கட்டாயம் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை,முரளியையின் வைத்திய செலவிற்கும் கடன் பட்டு விட்டார்கள்,இதெயெல்லாம் சமாளிக்க முரளியை வீட்டில் தனியாக விட்டு விட்டு மனதை கல்லாக்கி கொண்டு கருணாகரனும் புவனேஷ்வரியும் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள்,இருவரினது உழைப்பு கட்டாயமாக தேவைப் படும் போது இதையே நினைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் வீட்டில் இருந்து விட முடியும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மறுப்படியும் ஓடினார்கள் அவர்கள்.

அர்ஜூன் ஆரம்பத்தில் முரளியை நன்றாக கவனித்துக் கொண்டான் தற்போது அவனுக்கும் நேரம் கிடைப்பது இல்லை,படிக்க விளையாட என்று போய் விடுவான் அவனை குற்றம் சொல்லவும் முடியாது பதினெட்டு வயதுகாரனை பொறுப்பாக வீட்டில் இருந்து அண்ணனை கவனித்து கொள் என்றால் சில நேரம் கோபம் கூட வரலாம் அப்படி இருந்தும் அர்ஜூன் முரளியை வெளியில் அழைத்துப் போய் ஓரளவிற்கு பழக்கப் படுத்தி விட்டான் அந்த தைரியத்தில் முதல் தடவையாக வெளியில் வந்தாலும் அவனுக்கு படபடப்பு குறையவில்லை.

காலேஜ் போய் கொண்டிருந்தவன்,கண்களை இழந்து தவித்துக் கொண்டு இருக்கான்,உண்மையில் அவனுக்கு உலகம் இருண்டு தான் போனது,எத்தனை கற்பனைகள்,எவ்வளவு ஆசைகள்,எதிர்பார்புகள் படித்து முடித்தவுடன் இந்த உலகமே நம் கையில் என்று நினைத்தவன் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது நிதர்ஷன் மூலம்,அன்று மட்டும் அவன் கவனமாக வாகனத்தை ஓட்டி வந்திருந்தால் இன்று இவனுக்கு இந்த நிலைமை இல்லை,நிதர்ஷன் வசதியான குடும்பத்து பிள்ளை.

அப்பா ரங்கசாமி தொழில் அதிபர்,அம்மா சூரியலதா குடும்பத் தலைவி,மகள் கீத்தா திருமணம் முடிந்தவுடன் வெளியூரில் தஞ்சம்,பணத்திற்கு குறைவு இல்லாத குடும்பம்,நிதர்ஷன் காலேஜ் போய் கொண்டிருப்பவன்,வருணா காதலி அவளும் இவனும் ஒரே காலேஜ்,அவளின் குடும்பமும் வசதியானது,ஒரே மகள் அப்பா வெங்கடம் புடவை கடை நடத்துபவர்,அம்மா பவானியும் அதை கவனித்துக் கொள்பவர்,இரு குடும்பத்தாருக்கும் பிள்ளைகளின் காதல் தெரியும்,அடிக்கடி வருணா நிதர்ஷன் வீட்டுக்கு வருவாள்,இன்னும் முறைப்படி பேசி முடிக்கவில்லை,காலேஜ் முடியும் மட்டும் அமைதியாக இருந்தார்கள் பெற்றோர்கள்.நிதர்ஷனும் வருணாவும் அடிக்கடி வெளியில் போவது வழக்கம்,கையில் வாகனம்,பையில் பணம்,பக்கத்தில் காதலி இருக்கும் போது உலகத்தை மறப்பது சகஜம் தான்,எப்போதும் நிதர்ஷன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது வருணாவிற்கு பிடிக்கும்,வானத்தில் பறப்பது போல் இருக்கு என்பாள்,உனக்கு நன்றாகவே வண்டி ஓட்ட வருது என்று போதா குறைக்கு ஐஸ்கட்டியை நிதர்ஷன் தலையில் அள்ளி வைப்பாள் வருணா,புகழ்ச்சிக்கும்,பாராட்டுக்கும் ஏங்கும் வயது.

அவனுக்கோ தலை கால் புரியாது,இளம் ரத்தம்,காதலியின் புகழ்ச்சி,வழமையை விட அன்று சற்று வேகமாகவே வாகனத்தை ஓட்டி வந்தான் நிதர்ஷன்,எதிரே வேகமாக இன்னொரு வாகனும் வந்தது,அந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க,சற்றே பாதை ஓரத்தில் ஓட்டியதால்,பாதையோரத்தில் மிதிவண்டியில் வந்துக்கொண்டிருந்த முரளி மீது மோதி,அவன் மிதிவண்டியில் இருந்து கீழே உருண்டுப் போய் முள்கம்பிகள் மீது விழுந்தான்,அவன் நேரம் சரியாக முள்கம்பிகள் அவன் கண்களை பதம் பார்த்துவிட்டது தலையில் பலத்த அடி மயங்கி விட்டான் அவன்,நிதர்ஷன் வாகனத்தை நிறுத்தவில்லை வேகமாக சென்று விட்டார்கள்,அவன் பின்னாடி வாகனத்தில் வந்தவர்கள்,உடனே அவர்களுடைய வாகனத்தை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ்க்கும்,காவல் துறைக்கும் தகவல் சொன்னார்கள்,உடனே ஆம்புனலன்ஸ் வண்டி வந்து விட்டது காவல் அதிகாரிகள் சற்று தாமதமாகவே வந்தார்கள் பிறகு முரளியை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி விட்டு விசாரணை என்ற பெயரில் தகவல் கொடுத்தவர்களை துளைத்து ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள் காவல் அதிகாரிகள்,நாங்கள் வண்டி நம்பரை மட்டும் பார்த்து வைத்தோம் என்று நம்பரை கொடுத்து விட்டு பாவமாக நின்றார்கள் அவர்கள்

ஏன் இவர்களுக்கு தகவல் சொன்னோம்,எங்களையே சந்தேக கண்களுடன் பார்க்கின்றார்கள் நாங்களும் கண்டுக்காமல் போய் இருந்திருக்களாம் என்று மனதில் நினைக்கத் தோன்றியது அவர்களுக்கு,சரி இப்போது போங்கள்,எதுவும் தேவை பட்டால் உங்களுக்கு மறுப்படியும் நாங்கள் போன் பன்னி கேட்ப்போம் என்று அவர்களின் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்கள் காவல் அதிகாரிகள்,நல்லது செய்ய போய்,நாங்கள் பிரச்சினையில் மாட்டி கொள்வோம் போல் இருக்கே,என்று மனதில் திட்டியப் படி அவர்களின் வாகனத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

முரளி கையில் வைத்திருந்த பையும் போனும் கீழே விழுந்து கிடந்தது,அதை எடுத்து ஆராயும் போது முரளியின் பெயர்,வீட்டு விலாசம்,போன் நம்பர் என்று எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகம் காவல் அதிகாரியின் கையில் கிடைத்தது,அது வசதியாக இருந்தது முரளியின் பெற்றோர்களுக்கு போன் பன்னி தகவல் சொல்வதற்கு,அதை கேட்டவுடன் அவனின் பெற்றோர்கள் அழுது ஆர்பாட்டம் பன்னி ஆஸ்பிட்டலுக்கு போய் சேர்ந்தார்கள்.

முரளி ஐசியூவில் அனுமதிக்கப் பட்டிருந்தான்,இதை பார்த்த அவர்கள் கத்தி அழுதுவிட்டார்கள்,அம்மா இங்கு சத்தம் போடக் கூடாது என்று ஒரு நேர்ஸ் வந்து கூறினாள்,உனக்கு என்னம்மா தெரியும்,இருப்பது வருசமா வளர்த்த பிள்ளை,இப்படி அடிப்பட்டு படுத்து கிடக்கிறான்,அழுவதற்கு கூட அனுமதிக்க மாட்டீங்களா?என்றாள் முரளியின் அம்மா புவனேஷ்வரி,அது இல்லை அம்மா,இங்கு நிறையப் பேர் இருக்கார்கள்,உங்கள் மகன் மட்டும் இல்லை,ஒவ்வொருவரும் வந்து இப்படி இங்கு சத்தம் போட்டால் மற்றவர்களை அது பாதிக்கும் என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள்,பிறகு ஒரு டாக்டர் வந்து,இவர்களை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்,இருவரையும் உட்கார வைத்தார்,பிறகு அவர் சொன்னது உங்கள் மகன் கண்கள் பாதித்து இருக்கு ஆளத்திற்கு ஏதோ குத்தி இருக்கு என்றதும் இவர்கள் பதறிப் போய்விட்டார்கள் என்ன டாக்டர் சொல்லுறீங்கள் என்றார்கள் இருவரும்,டாக்டர் மேலும் சொன்னது,நரம்புகள் எல்லாம் இரத்த ஓட்டம் இல்லாமல் பாதித்திருக்கு,தலையிலும் அடிப்பட்டிருக்கு ஒரு ஆப்ரேஷன் பன்னனும்,அது செய்தாலும் கண் பார்வை கிடைக்குமா என்பதை சொல்ல முடியாது கட்டாயம் ஆப்ரேஷன் செய்யனும் இல்லை என்றால் அவன் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று அவர் சொன்னதும் இருவரும் அலறிவிட்டார்கள்.

பெற்ற பிள்ளைக்கு இப்படி என்று சொல்லும் போது எந்த பெற்றோர்களால் தான் அதை தாங்க முடியும்,அய்யோ டாக்டர் அவன் உயிருடன் எங்களுக்கு வேண்டும்,எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை,என்று பதறினார்கள் அவர்கள்,பணம் கொஞ்சம் செலவாகும் நீங்கள் பணத்திற்கு ஏற்பாடு பன்னுங்கள்,நான் ஆகவேண்டியதை பார்க்கிறேன் என்றார் டாக்டர்,தற்போது கண்பார்வை இல்லை என்றாலும் பரவாயில்லை,அவன் உயிருடன் இருந்தால் போதும் என்ற மனநிலைமைக்கு தள்ளப் பட்டார்கள் இருவரும்,பணத்தை பிரட்டி கொடுத்தார்கள்.அவசரமாக வீட்டை நோக்கி சென்ற நிதர்ஷன் நடந்தவற்றை அப்பாவிடம் சொன்னான்,பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் விடு என்று அலட்சியமாக சொன்னார் அவர்,நிதர்ஷன் வண்டி நம்பரை வைத்து,அவன் வீட்டை கண்டுப் பிடித்து வந்து விட்டார்கள் காவல் அதிகாரிகள்,நிதர்ஷன் அப்பா ரங்கசாமி வீட்டில் இருந்தார் அதிகாரிகளிடம் தன் டைவர் நல்லையா வண்டி ஓட்டும் போது நடந்து இருக்கு.

அவனும் இன்று தான் என்னிடம் சொன்னான்,பயந்து கொண்டு வண்டியை நிறுத்தாமல்,என்னிடமும் ஒன்றும் சொல்லாமல்,மூடி மறைத்து விட்டான் பாவி,இங்கு தான் இருக்கான்,அவனை உடனே விசாரித்து ஆகவேண்டியதை கவனியுங்கள் என்றார் அவர்,இதை நம்பிய காவல் அதிகாரிகள் அவனை ஜீப்பில் ஏத்திக் கொண்டு போய்விட்டார்கள்,பாவம் பணத்திற்கு ஆசைப் பட்டு செய்யாத குற்றத்திற்கு பழியாகிப் போனான் நல்லையா,நிதர்ஷன் நிம்மதி பெருமூச்சி விட்டான்.முரளியின் பெற்றோர்கள் பெருமூச்சுடன் ஆப்ரேஷன் தியேட்டர் முன்னாடி உட்கார்ந்து இருந்தார்கள்,வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டு கண்களில் கண்ணீருடன் ஆப்ரேஷன் முடியும் மட்டும் உட்கார்ந்து இருந்தார்கள்,அவர்களின் பரிதவிப்பை பார்க்க சைக்கவில்லை,மூன்று மணித்தியாலம் அவர்களுக்கு மூன்று யுகம் போல் இருந்தது,மருத்துவர் ஆப்ரேஷனை முடித்து விட்டு வெளியில் வந்து சொன்னார் தற்போது அவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்றதும் தான் இவர்களுக்கு மூச்சே வந்தது,அவர்கள் உள்ளே போய் பார்த்தார்கள்,அவன் கண்கள் கட்டியப் படி சுய நினைவு இல்லாமல் படுத்திருந்தான்.

மெதுவாக முரளியின் தலையை தடவி விட்டு,வந்த கண்ணீரை அடக்கி கொண்டு வெளியில் வந்துவிட்டார்கள் அவர்கள்,அவனுக்கு சுய நினைவு வந்தப் பிறகு மறுப்படியும் மெதுவாக உள்ளே போய் பார்த்தார்கள்,முரளி மெதுவாக கட்டியிருந்த கண்களை தொட்டுப் பார்த்து விட்டு அமைதியாக படுத்து இருந்தான்,நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் அவனிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார்கள் இனி கண் பார்வை இருக்காது,கவலை படாதே யாரிடமாவது கண்களை பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்று நம்பிக்கை அளித்தார் மருத்துவர்,அவனுக்கு தலையே சுற்றியது ஏன் என்னை காப்பாற்றினீரகள் என்று கத்தி விட்டான் அவன்.

முரளியின் பெற்றோர்கள் தான் அவனை சமாதானம் படுத்தினார்கள்,முரளி அப்பாவிடம் இனி எப்படி அப்பா கண் பார்வை இல்லாமல் வாழ்வது என்றான்?அந்த கேள்வி தங்கவேலுக்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது,நீ கவலை படாதே,என் கண்களை உனக்கு தந்து விடுகிறேன் என்றார் அவர்,அதை கேட்ட முரளி ஏன் என்னை காப்பாத்துனீங்கள் கண் இல்லாமல் இருப்பதற்கு நான் செத்தே போய் இருப்பேன் என்றான் அவன்,புவனேஷ்வரி துடித்துப் போய் விட்டாள்,உன் வாயால் அப்படி சொல்லாதே,காலம் முழுக்க நான் உன்னை வைத்து பார்த்து கொள்வேன் என்று அழுதாள் அவள்,மனதளவில் மூவரும் பாதித்து இருந்தார்கள்,யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை,அதை நன்கு அறிந்த அர்ஜூன்,விடு அண்ணா இப்போது எல்லாம் கண் அறுவை சிகிச்சை செய்து கண்களை மாற்றிவிடலாம்,நீ எதற்கும் கவலை படாதே என்றான் ஆறுதலாக,மூன்று வாரங்களுக்கு மேல் ஆஸ்பிட்டலில் இருந்து விட்டு வீடு திரும்பினார்கள் அவர்கள்.

முரளி கையில் வெள்ளை பிரம்பு கொடுத்து சிறிதளவு பயிற்சி கொடுத்து அனுப்பினார்கள் ஆஸ்பிட்டலில்,வீட்டுக்கு வந்தப் பிறகு அப்பா அம்மா உதவியுடன் முரளி நடந்து பழகினான்,அவனின் பெற்றோர்கள் அதிகளவு விடுப்பு எடுத்துவிட்டதால்,அவர்கள் மறுப்படியும் வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம் போக ஆரம்பித்தார்கள்,அர்ஜூனுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் வெளியில் அழைத்துக் கொண்டு போய் வந்தான்,அதன் பிறகு நீ தனியாக போய் வருவதற்கு பழகு என்று தைரியம் கொடுத்தான் முரளியும் எவ்வளவு நேரம் தான் வீட்டில் தனியாக அடைந்து கிடப்பான்,இன்று முதல் முதலாக வெள்ளை பிரம்பு துணையுடன் வெளியில் வந்தவனுக்கு பயமாக தான் இருந்தது,அவன் ஏதோ சிந்தனையில் நடந்துக் கொண்டு இருந்தான்,அவனின் எதிர்காலம் கேள்வி குறியானது,ஒவ்வொருவரினது எதிர்காலத்தையும் உங்கள் கவன குறைவால் தயவுசெய்து சிதைத்து விடாதீர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *