கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 3,801 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 1 அத்தியாயம் 2

மணி வாழைக் கன்றுக்கு நீர் வார்த்துக்கொண்டிருந்த சின்ன ராசா தாயின் குரலைக் கேட்டதும். பின்புறமாகச் சென்று அடுக்களையின் முன்னுள்ள மாமரத்தின் கீழே வாளியை வைத்து விட்டு என்னம்மா’ என்றபடியே அடுக்களைக்குள் போனான். அங்கே அவள் நிற்கவில்லை. தள்ளியுள்ள குடிசைக்கு அருகாக இறக்கப்பட்ட பத்திப் பக்கமாக அவனது தாய் நின்றாள்.

IruttumVarai-pic2

தாய் அன்னலெட்சுமி பெட்டகத் தின் மீதிருந்த கடலைக் கடகத்தை நன்றாக அடுக்கிக்கொண்டு புறப் படத் தயாராகிக்கொண்டு நின்றாள். அவளுக்கு முப்பத்தைந்து வயது. மெல்லிய தோற்றமுடைய சிவப்பி, அவளுடைய உடலின் நிறத்தைப் பார்த் தால் இன்னொரு முறை அவளைத் திரும்பவும் பார்க்கத் தோன்றும். உருண்ட முகம். பெரிய கண்கள், பள பளக்கும் பார்வையுடைய கவருகின்ற கண்கள் அசுவ, சிவக்கச் சிவக்க வெற்றிலை போட்டிருப்பாள். சின்னராசா பலருடைய தாய்மாரைக் கண்டிருக்கின்றான். அவனுடன் படிக்கும் நண்பர்கள் எத்தனையோ பேருடைய தாய்மாரைப் பார்த்திருக்கின்றான். ஒன்றில் அவர்கள் பருமனாகக் கட்டை குட்டையாக அல்லது ஒல்லியாக, முருக் கங்காய் போல மெலிந்து தோன்று கிறார்கள், தூங்கற் கோழிபோல வாட்டமான அவர்கள் அரைக் கிழவிகளாகவே அவனது கண்களிற்குத் தோற்றினார்கள். அவனது தாயோ மிக இளமையாக, அழகாக இருக்கிறாள். மணயோடு அவள் ஒருநாள் பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தபோது அன்னமுத்து ரீச்சர். நீங்கள் மணியினுடையே அக்காளோ?’ என்று கேட்டபோது தாய் வாய்க்குள் சிரித் ததனை அங்கு நின்ற சின்னராசா நன்றாகவே கவனித்தான். தாயின் வசிகரத்தையும், வனப்பினையும் குறித்து சின்னராசாவிற்கும் மணிக்கும் மிகவும் பெருமை. தாயின் தோற்றப் பொலி விலும், கண்டிப்பான குரலிலும் அவர் களிருவரும் தங்களை மீறிக் கட்டுண்டதோடு, அளவற்ற அன்பும் வைத்திருந்தார்கள். தாய் மீது.

சின்னராசாவுக்கு இந்த விஷயம் தான் விளங்கவில்லை: எல்லோரும் விரும்பத்தக்க அவர்களின் தாயை. அன்ன லெட்சுமியை – அவளைப் பெற்ற வளோ ஓயாமல் திட்டிக்கொண்டி ருப்பாள். போதாக்குறைக்கு ஆச்சி யோடு அப்புவும் சேர்ந்து கொள்கி கிறார். அவர்களிருவரும் தாயை முன்னாலும் பின்னாலுமே திட்டினார்கள். தாய் அவற்றை அசட்டை செய்ததில்லை எனினும் சில வேளை தனியே இருந்து அழுவதைக் கண்டு மணியும், சின்னராசாவும் ஆச்சி அப்பு மீது மனத்துள்ளே தரும்பித் தீர்த்திருக்கிறார்கள். சிலவேளை கிழட்டுத் தன்மை வந்தால் இப்படித்தான் ஆகிவிடுகின் றதோ? ஆனாலும் ஆச்சி யும் அப்புவும் மணியையும் தன்னையும் மிகவும் நேசிக்கிறார்கள், உயிருக் குள் உயிரெனவைத்து அவர்களை வளர்க்கிறார்கள். அது எதற்கென்பதை இருவராலும் – மணியாலும் சின்ன ராசா வாலும் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“ராசா, நான் யாபாரத்துக்குப் போறன். அண்ணன் கடையாவைமந்து உடனை ரெண்டு பேருமா முகங்கழுவியிட்டுப் படியுங்கோ .கத்த ரிக்காய் பொரிச்சு உறியில் வைச்சிருக் கிறன். ஆச்சி சோறு போட்டுத் தரேக்கை கேட்டுப் போடவேணும்… ஆச்சி எங்கை போட்டா?”

“ஆச்சியும் அப்புவும் அடிவளவுக் குள்ளை புல்லுச் செருக்கிக்கொண்டி ருக்கினை … நீங்க போட்டு வாருங்கோ …..”

“ஆச்சியிட்டை இந்த ஐம்பேசத்தைக் குடுத்து அப்புவுக்கு முட்டை வாங் கச் சொல்லு: அப்பு கறட்டுக் கறம் டென்று இருமுகிறார். விடியக் காத் தாலையிலை அடிச்சுக் குடுக்கவேணும்”

“சரி…..”

கொட்டப் பெட்டிக்குள்ளிருந்து தாய் எடுத்துக்கொடுத்த ஐம்பது சதத்தை மிகப் பத்திரமாகச் சின்ன ராசா வாங்கிக்கொண்டான். எட்டு வயதேயானாலும் அவன் மிகக் கவன மானவன். அன்னலட்சுமி வாய்க் குள்ளே முனியப்பரை அழைத்துக் கொண்டு, கடலைக் கடகத்தைத் தூக் கித் தலையில் வைத்தவண்ணம் பட லையை நோக்கி நடந்தாள். அன்ன லெட்சுமி படலைக்குப் போகும்வரை அவளோடு போய், அவள் வீதியிலே ஏறியதும் படலையடிலேயே என்று கொண்டான் சின்ன ராசா. தாய் போய் கொண்டிருந்த பாடையினைக் கண் கள் தொடர்ந்தன, அவள் சிவப்பு நிறச்சீலையை உடுத்தியிருந்தாள். அதே நிறத்தில் சிவப்புப் பூக்கள் நிறைந்த இரவிக்கை , கைகள் எலுமிச்சம் பழமாய் விளங்கின. கருகருத்த அடர்த்தியான கூந்தலை அள்ளி முடித்திருந்தாள்.கெதி யான நடை. அவளை இக்கோலத்திலே கண்டால் தாய் ஒருபாட்டம் திட்டித் தீர்ப்பாள்… “உனக்கு ஏன் இந்த மினுக்கும் குலுக்கும்? இருட்டும் வரை இருந்திட்டு வெளிக்கிட்டியோ யாவார மெண்டு?” தாயில்லாத நோத்தில், பிள்ளைகளுக்கு முன்பாக ஆச்சி சரள யாகத் தூஷணம் பேசத் தொடங்கி விட்டால், அப்பு தடுத்துவிடுவார். பிள்ளையாள் இன்னும் குழந்தையளில்லை. சும்மா ஓட்டை வாய்ச்சிமாதிரிக் கதைக்காதை’ நாங்கள் இப்போது குழந்தைகளாகத்தான் இல்லை. ஆச்சி அதனால் தான் போலும் அப்பு சொன் னவுடன் மேற்கொண்டு எதுவுமே கதைக்க மாட்டாள், ஒருநாள் மாலை நேர மங்கற் பொழுதான வேளை யிலே. ஆச்சி எதையோ பேசியதைக் கேட்டுவிட்டுத் தாய் போயிருந்து தனியே அழுவதைக் கண்ட சினம் மிகமேலோங்கத் தனியே போய் நின்றான். அன்னலெட்சுமி ஒருபோதும் ஆச்சியையோ,அப்புவையோ நிமிர்ந்து பார்த்துத் தன் குழந்தைகளை எதிர்த் துச் கதைக்க விடமாட்டாள். அது மணிக்கு நன்றாகவே தெரியும், அன்ன லெட்சுமி கடலை வியாபாரத்திற்குப் புறப்பட்டுப் போனதும், மனி ஒன் றுமே பேசாமற்போய், அடுக்களையின் முன்புறமாகவுள்ள மாமரத்தின் கீழே நின்றான், கீழே கிடந்த இலையொன்றை எடுத்து துண்டுகளாக்கிக் கிழித்தெறிந் தன கைகள்.

அப்பு தன்னுடைய கூனிய முது கினைக் கைத்தடியில் பாரப்படுத்திக் கொண்டு அங்கு வந்து ஆச்சியோடு போய்ப் புல்லுச் செருக்கச் சொன்னார். மணி அலட்சியமாய் நின்றான். பிறகு புஸ்புஸ்ஸென்று மூச்சி முத்துக் கொண்டு உழவாரமும் கடகமுமாய் ஆச்சிவந்தாள். லெனமென்றதை அறியா முதியவள் அவள். அவளின் நிழல் புறுபுறுப்பும், சளசளப்பும் தான், ஆச்சி உருண்டு சுருங்கிய முகத்தை அவன் பக்கமாய்த் திருப்பிக் கேட்க முன்னர் நெஞ்சிற்குள்ளிருந்த சினம் மணியின் வார்த்தைகளில் வெடித்தது:

அம்மாவை நீ ஓயாமல் திட்டி றாய். பிறகு என்னை வந்து உன்னோடை வேலை செய்யச் சொல்லுறாய்-தாய் கூடாது பிள்ளை கல்லதோ? என் னாலே வரேலாது…நீ போ .. அங்காலை போ “

பதினொரு வயதுப் பிஞ்சு இப்ப டிச் சீறும் என முதியவள் எதிர்பார்க் கவேயில்லை நிமிஷங்கழிந்த திகைப் பின் பின்னால், முகர்ச்சியில் தளர்ந்த மெலிந்த உடல் குலுங்கத் தன்னை மீறிய மன அவலத்தோடு ஆச்சி கண் ணீர் சொரிந்தாள்.

“என்ரை குஞ்சுகளே, உங்களுக் காகத்தானே… நான். நான் பெத்தமக ளையே பேசிப் பேசிச் செத்துக்கொண் டிருக்கிறன்”

சுருக்கம் நிறைந்த அவள் முகத் தில் கண்ணீர் மடிந்து மடிந்து வழிந்து இரவிக்கை போடாத மார் பினை நனைத்தது.

மணி தன் தாயையும் ஆச்சியை யும் நினைத்துக்கொண்டான். ஆச்சி தான் அவர்களை அதிக நேரமாகக் கவனித்துவளர்க்கிறாள். தாய் மட்டு மென்ன. அவளின் அன்பிற்குக் குறை சொல்லவே முடியாது. இருவருமே தங்களிருவரையும் ஆசையோடு விரும்பியும் அவர்களிருவரும் மட்டும்-ஆச் சியும், அம்மாவும் ஏன் ஒருவரை யொருவர் அன்பாக நடத்துகிறார் களில்லை. அம்மா அன்பாக நடக்கிறாள், ஆச்சியோ அம்மாவை மறுதலித்து நடக்கின்றாள். அது தான் மணிக்கு . விளங்கவேயில்லை.

***

அவர்களுடைய அன்றாட வாழ்வி னிலே தாயை விட ஆச்சியும், அப்புவுந்தான் அதிக நேரத்தினைப் பங்கு கொண்டவர்கள். பனி கொட்டினாலும் மழை வீசி. வீசியடித்தாலும் அப்பு உதயநேரத்திற்கு முன்னரே நீத்திரை விட்டெழுந்து முகங்கழுவித் திருநீறு பூசி வாய்க்குள்ளே தேவாரத்தை முணுமுணுத்தபடி அடிவளவிற்குள்ளே போய்த் துருதுரு வென்று ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார். அது வழிவழியாக அவர்களுக்கு வந்த காணி, முதுசச் சொத்து. வளவின் முள் பகுதியில் சிறு குடிசையும், பக்கத்திலே அதனோடு தொடர்பாகவே இறக்கிய பத்தியும், சுவர் உயர்ததிய திண்ணையும். பத்தியின் உட்புற ஓர மாகப் பழைய பெட்டகமொன்று இடத்லத அடைத்துக்கொண்டிருக்கின் றது அந்த வயோதிபப் பெட்டகத்தின் மேலே தான் அன்ன லெட்சுமி கட லைக் கடகத்தைப் பத்திரமாக வைப் பது வழக்கம். அந்தத் திண்ணையிலே இருந்து சிறிது தூரம் தள்ளித்தான் அடுக்களை. அடுக்களையின் முன்னே திசுகத்த சிறுவன் போல பூ மணக்கும் பாமாம். அடுக்களையின் வலது புறமூலையிலே பெரிய தாச்சிச் சட்டி யும், இரண்டு அகப்பைகளும். பழைய பெட்டிக்குள் வெண்மணல், அரிதட்டு. ஓவல்ன் பேணிக்குள் நிரைய மஞ்சள் மாவும். அதனையடுத்துச் சிறிய சுண்டுகளும் தாறுமாறாய்க் கிடந்தன. இவை யெல்லாம் அன்னலெட்சுமியின் தொழி லிற்கான கருவிகள்.

குடிசையின் பின்புறமாக வற் றகை, பூசணிக்கொடிகள் படர்ந்துள் னன, வளவின் ஒதுக்குப்புற சே-ம் பில் பசுமாடொன்று கட்டி நிற்கிறது. வேப்ப மரத்திற்கும் அடுக்களைக்கு மிடையே கிழக்குப் பார்த்தபடி தென்னை மரம் சரிந்து நிற்கிறது. அதற்கு மேற்கே தள்ளிச் சிறிய கிணறு அமைந்திருக்கின்றது.

அப்பு, உதய வேணப்பொழுதிலே எழுந்து பரபரப்படையத் தொடங்கி வதும் ஆச்சி கொட்டாவி விட்டுக் கொண்டு எழுந்துவிடுவான். வழமையான காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தேத்தண்ணீர்க் கேத்த அடுப்பில் வைத்துவிட்டு, அடுக்களைக்கு வெளியே வந்து மாமரத்தின் கீழே சில நிமிஷங்கள் நிற்பாள். அந்த மாமரத்தின் கீழே நிற்கையில் அவ ளது உடல் சிலிர்க்கும்.

வானத்தை நோக்கிக் கைகளை நீட்டி நிற்பன போன்ற மரத்தின் கொப்புகளைப் பார்க்கையிலே அவ ளின் மனம் நெடுமூச்செறியும். தன்னுடைய மருமகள் கதிரவேலு தன் வாழ்நாளில் வைத்து வளரக் கண்டு மனம் பூரித்தது அந்த மா மரத்தினால். அந்த வளவிலே கதிரவேலுவின் நினை வாக எல்லோரது சிந்தனையிலும் ஒரு குளிர்ந்த இனிய நிழலாகவே அந்த மாமரம் விளங்குகின்றது.

தாயோடு படுத்திருக்கின்ற பிள்ளைகளை ஆச்சி மெதுவாகவே தட்டி யெழுப்புவாள். பிள்காகளோடு சேர்ந்து தாய் அன்ன லெட்சுமியும் எழுந்துவிடுவாள். மூவரும் எழுந்து சென்று முகங்கழுவி -ந்து குடிசைக் குள்ளே சென்று குடுவையைச் சரித்துத் திருநீறு எடுத்துப் பூசிக்கொள் வார்கள். சிறிய சிவபெருமான் படத் திற்கு முன்னே மணியும், சின்ன ராசா வும் தேவாரம் பாடிக் கொண்டிருப் பார்கள். அந்தப் பழக்கம். அவர் களின் தகப்பன் அவர்களுக்குப் பயிற்சி வழக்கமாகிவிட்ட ஒன்று. பிறகு படுத்த பாய்களை ஒழுங்காகச் சுற்றி மூலையில் வைத்து விட்டுப் பக்கீஸ் பெட்டியின் மேலே தலையணைகளை அடுக்கிவைப்பான் மணி இ.து மணி யின் நித்தியகடலை. சிறிய வேலைசள் செய்து முடித்ததும் அவர்களிருவரும் படிக்கத் தொடங்கி விடுவார்கள். தாய் அன்னலெட்சுமி, வளவிற்குள் ஏதா வது வேலையாக சிற்பாள், அல்லது கடலைக்கு மஞ்சள் மாப் பூசுவான்.

IruttumVarai-pic

பள்ளிக்கூடத்திற்குப் போகின்ற போது தாய் முகமலர அவர்களை வழி யனுப்புவாள். மத்தியானப்பொழுதில் சில வேளைகளில் மணியும், சின்ன ராசாவும் தாயை வீட்டிலே காண்பதில்லை. அம்மா எங்கே என்று விசாரித்தால் ஆச்சி பொரிகின்ற சோளனாப் வெடிப்பாள். ”அந்த அறுதலி என் கைது லஞ்சாளோ. வந்தாப்பிறகு கேளுங்கோ … இது தான் ஆச்சியின் பதில் அவர்களுக்கு அதற்கு மேலே எதுவும் கேட்கத்தோன்றாது. மாலையிலை, தாய் தானாகவே அவர்களுக்குச் சொல்லுவாள். நான் கோயிலுக்குப் போனேன், அல்லது தெரிஞ்சாள் வீட் டிற்குப் போனேன். இப்படி அவள் அடிக்கடி சொல்வாள். அவ்வேளையில் அவளின் உருண்ட முகத்தில் ஏதோ பிறழ்ச்சி துலங்கித் தெரியும். பிறகு ஒன்றுமே பேசாமல் போய்த் தனியாக இருந்து அள்னலெட்சுமி வெர் றிலை போடத் தொடங்கிவிடுவாள் வாய் சிவக்கச் சவக்க அவள் வெற் றிலை போடுவாள்.

அவர்களைக் கவனித்து உற்சாகமுட்டிக் கதைகள் சொல்லி என்றும் பக்கத் திலிருக்க ஆச்சி மிகவும் விருப்பமுடையவள், பேரக் குழந்தைகளில் மிகவும் பிரியமுடைய ஆச்சி அப்புவிக்கு அவர்கள்தான் முதுமைக் கடைசியின் பிராக் காகவுமிருக்கின்றார்கள்,

ஆச்சிக்கு எத்தனை வயது மதிக்க லாம் ? மணியும் சின்ன ராசாவும் இதைப்பற்றி யோசிப்பதுண்டு. ஆச்சி பொது நிறம் சுருக்கம் விழுந்த முகமும், மேனியும். இரவிக்கை போடாது முந்தானைச்சேலையால் மேலுடம்பை மூடிய கோலம். ஒரு பல் கூட அவளுக்கு விழவில்லை. பெரிய மூக்கு. காதிலே பன்னாளிலே பெரிய கடுக் கன் போட்டுத் தொய்ந்த பெரியது வாரங்கள். மெலிந்த உடலாயினும் கூன் விழாத முதுகு.

காலையிலே அவள் பிள்ளைகளுக்கு வாஞ்சையோடு சோறு அல்லது பிட் டைக் குழைத்து உருண்டை உருண்டையாக அவர்களது கைகளிலே வைத்துவிடுவான். கை இறைகளால் சொதி வழிய வழிய அவர்களிருவரும் சாப்பிடுவதைப் பார்த்தபடியே ஆசை யோடு தொள தொளக்கத் தொடங்கி விடுவாள், கவனமாகப் படிக்கவேண் டும் என்று ஓயாது சொல்லுவாள். அத்தோடு தனக்கும் அப்புவுக்கும் நல்ல முறையில் கொள்ளிவைக்கவேண்டும் என்பதும் அவர்களிடம் அவளு டைய நித்திய வேண்டுகோள் பலர்ந்து விகாசித் திருக்கும் ஆச்சியினுடைய முகம் அன்னலெட்சுமி அழகான தோற்றத்திலே வருவதைக் கண்டதும் கறுத்துச் சிறுத்துவிடும். ஏதாவதொரு சாட்டுவைத்துச் சுற்றிவளைத்து அன்னலெட்சுமியைத் திட்டித் தீர்த்து விடுவாள் ஆச்சி. அப்போது அவர்களுங்கு உணயே நஞ்சுச் சுமையாகி தொண்டைக்குள்ளேயே நின்றுவிடும். போதும் போதும் என்று அவர்கள் எழுந்துவிடுபார்சுள்.

ஆச்சி பேசி முடிய தாய் மௌனமாகி மாமரத்தின் கீழே போய் நிற்பாள். மணியையும் சின்ன ராசாவையும் அந்த பாமரத்திலே ஊஞ்சல் கட்டி அவர்க ளுடைய தகப்பனான கதிரவேலு ஆட்டி. மகிழ்ந்திருக்கிறான். இரண்டு வருஷங் களுக்கு முன்புவரை அந்தச் சந்தோவுமான நாட்களினை அவர்கள் அனுபவ வித்திருக்கின்றார்கள்.

அன்னலெட்சிமியின் கண்கள் அவ னின் நினைவு தந்த வேதனையிலே கலங் கின. கதிரவேலுவோடு தொடர்ந்து செல்லச்சாமியும் அவளது கண்களிலே வந்து நின்றான் உறுதியான அவனது வார்த்தைகள் காதோடு கேட்டன, புதிதாக மணமான நாளொன் றின் போது வெறும் வெண் மணல் பரவி யிருந்த அந்த இடத்திலே இளமை யின் கட்டறியாக் கனவுகளோடும் அவர்கள் தனித்திருந்த அந்த நடுநிசி வேளையில் தன் மடியிலே கிடந்த அன்னலெட்சுமியின் முகத்தை வருடிய படியே வாத்சல்யத்தோடு கதிர வலு முணு முணுத்தான் : ”டன்ரை வாழ்க் கையில என்னர மடியைத் தவிர வேறை ஒருத்தருடைய மடியிலும் நீ படுக்கக்கூடாது”……அப்படி அவன் சொன்னபோது அதிகாரமான ஆனால் கம்மியபடியே அவனது குரல் தொனித் தது. “என்ரை ராசாவுக்கு ஒருநா ளும் அப்பிடிச் செய்யமாட்டன்…அப் பிடிச் செய்வர் எண்டு நீர் நினைக்கி கிரீரோ?…” கதிரவேலு உணர்ச்சி மீறியவனாய் இருளைத்துளாவி அவளை ஆழ்ந்து பார்த்து அப்படியே குனிந்து அவளின் முகமெங்கும் முத்தங்களாய் சொரிந்தான். அவள் அந்தத் திணறிய மோகமூட்டும் நிமிஷங்களில் பேரா னந்த முற்று மயங்கினாற்போலானான். அவன் வாழந்த ஒன்பது வருஷங்களி லும், அதன் எல்லாக் கணங்களிலும் அந்த நடுநிசிச் சத்தியம் அவர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையாக அமைந்து விட்டது. அவன் இறந்துபோ பின் இரண்டு வருஷங்கள் இறந்து போயில் .

அன்னலெட்சுமி சஞ்சலப்படுகின்றாள், பேசாமல் அங்கேயிருந்து போய் வெற்றிலைத்தட்டையெடுத்து வெத் றிலையைப் போட்டபடி தன்னை ஏதா வது அலுவலில் ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

தாயினது மௌனமும். கண்ணீரும்’ இரகசியமாக வெளியாவதனை மரி நன்றாக அறிவான். அதற்கு ஆச்சியே ஒரு காரணம் என அவன் மனதார அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கின் றான். பதினொரு வயதானாலும் எதை ‘யும் கூர்ந்து பார்க்கின்ற திறன் அவ னுக்குண்டு. பின் வளவி.ேபோய் நின்று விசும்பி, அந்த விசும்பலை மறைத்து முகத்தைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து காலையிலே தண்ணீர் வார்த்த பூஞ்செடிகளுக்கெல்லாம் மாலை யிலே மீண்டும் அவள் தண்ணீர் ஊற்று கின்றபோதில் சின்னராசாவுக்கு மனங் குதிகுடிக்கும். அன்னலெட்சுமி தன் துயரங்களை யாருக்கும் சொல்லியறி யாள், வெளியே பச்சையாகவும், உள்ளே கனிந்த சிவப்பாய, மிருக்கும் வத்தகப்பழம்போல அவளது வாழ்வி ருக்கின் றது அன்னலெட்சுமி ஒரு நாள் அப்படி நினைத்தாள்.

மணி நினைக்கின்றான். ஒரு நாளைக்கு அம்மா தனித்திருந்து அழுகின்ற போது அவளிடம் சென்று அவளது: கண்ணீ ரைக் கைவிரல்களினால் கனிவோடு துடைத்து. எதற்காக நீங்கள் அழு கிறீங்கள்? என்று கேட்கவேண்டும்… அந்த நோக்குடனே செல்கின்ற போதில் அவளது பெரிய விழிகள் அவனை ஆழ்ந்த கருணையோடு நோக்கு கையில் அவன் கேட்கப்போனதையே மறந்துவிடுவாள். அவனோடு அவள் சில வார்த்தைகள் தான் கதைப்பாள். அவளினது பலமே சொற் சிக்கந் தான். ஆயினும் அவற்றினை மந்திரச் சொற்கள் போலக் கேட்டிருப்பதைத் தளிர அவன் வேறொன்று அறி யான், நன்றாகப் படிக்கவேண்டும், களவெடுக்கக்கூடாது, பொய் சொல் பக்கூடாது, என்று தாய் சொல்வாள். அப்போதெல்லாம் அவளுடைய சண் கள் கனவு காண்பன போல வான . தைப் பார்த்திருக்கும்.

சின்னாாசா தாயோடு மணியைவிட மிகச் செல்லமாகப் பழகுவான். அவ னுக்கு என்னென்ன வாங்கித்தரவேண் டும் என்று அன்னலெட்சுமி அடிக்கடி கேட்பாள். மணியும் தனக்கு விருப்பமான பொருட்களைத் தம்பியி டம் சொல்வதுண்டு.

சின்னராசாவும் மணியும் ஒருநாளும் அண்டை அயல் வீடென்றுபோயறி யார்கள், தாயின் கட்டளை அது. . எங்கே போலதானாலும் ஆச்சியைத் சான் கேட்டுக் கொண்டுபோகவேண்டு மென்று தாய் சொல் விவைத்திருக்கின் றாள். ஆச்சியிடம் கேட்டால் ஒன்றுக் குப் பத்து முறை யோசித்துவிட்டு அவள் முணுமுணுப்பாள்: ”அண்டை யல்ச்சனமெண்டு உங்களைப் புழங்க விட் டால் அதுகள் நாக்கிலை நரம்பில் லாமல் நூறு கதை சொல்லுங்கள். ஓண்டைப் பத்தாக்கிச் சொல்லுறது க்கு எங்கடை அயகக் கேட்டுத்தான்,. நான் என்ன செய்ய ? கொம்மா வின்ரை காதிலை நான் சொல்லிறது , தான் ஏறுமோ?

அப்பு கைத்தடியினால் நிலத்தைத் தட்டி விட்டு. ‘ சரி உன்ரை கதையை அவளவத்தோடை நிப்பாட்டு இனி ஈாங்க என்ன சொல்லியும் ஒரு மண் ணும் நடக்கப் போறதில்லை’ என் பார் வெகுகாரமாச.

இவர்கள் என்னவோ கேட்டால் எதையோ சொல்கிறார்கள் ? ஆச்சிக்கு நாங்கள் சொல்லுவது ஒன்று ேவிள ங்குவதில்லை. அப்புவும் அப்படித்தான். ஆச்சியின் புறுபுறுப்பை இடையிலே நிறுத்துவதற்குத் தான் அவர் இருக் கிார். அல்லது ஓடியாடி வேலை செய் வார். திருவாசக, தேவாரங்கள் பாடு வார். அவ்வளவுதான் அவர். நாங் கள் விளங்காமல் ஏதாவது கேட்டால் இவர்கள் ஒன்றில் அம் பாவைத் திட்டு கிறார்கள் அல்லது தங்களுக்குள் கச முச என்று சண்டை போட்டுக்கொள் ளுகிறார்கள், ஐயா செத்துப்போன தற் குப் பிறகு, அதுவும் கடந்த ஒன்றரை வருஷங்களாகப் பள்ளிக்கூடமும், வீடும் தவிர மணிக்கும் சின்னராசாவுக்கும் வேறொன்று தெரியாது. பள்ளிக் கூடம் முடியும் மணி அடித்தால் நேரே வீடு, வீட்டி விருந்து புறப்பட் டால் நேரே பள்ளிக் டம். வழியில் | ஒற்றைப்புளியடியில், சிலிர்த்திருக்கும் புளியமரத்தில் &ழே போய்க் கணத் தில் குருவியைப்போல புளியம்பழத்தை எடுக்கும்போதுகூட அவசரந்தான் : ஆனந்தத்திற்கு அனுமதியாத கட்டுப் பாடு. சில வேளைகளில் மணி கு. மனம் முற்றாகச் சவுத்துப்போய்விடுகிறது. ” ஆச்சி, மற்றப் பிள்காயளைப்போல, எங்களை வெளியில போய் விளை யாட ஏன் நீ விடுகிறாயில்லை ?”

மணி துடுக்காகவே கேட்டான்.

ஆச்சி முகம் நிறையச் சுருக்கம் விழ, கண்களை மூடிக்கொண்டு யோசித்தாள்.

பிறகு மூக்கைச் சொறிந்து கொண் டாள்,

“கொம்மா வந்த உடனை இதைக் கேளணை பாசா”.

– தொடரும்…

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஆகஸ்ட் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *