“தம்பி வேலு எங்க போற ” கடையின் முதலாளி கேட்க.
“அண்ணன் சொன்னல்ல”
“ஆமாப்பா ஆமா மறந்துட்டேன் சரி சரி போயிட்டு வா” கடைமுதலாளி கையில் இரு நூறு தாள்களை கொடுத்து அனுப்பி வைத்தார்.
வேலன் வீட்டிற்க்கு மூத்த பையன் ஒரே ஒரு அக்கா, அம்மா இருவர் மட்டுமே இவன் உலகம், 10 படிக்கும் போது தந்தை தவறிவிட, குடும்பத்தின் ஆணி வேராக மாறியவன் வேலு , இப்போது மெக்கானிக்காக இருக்கிறான்.
“அம்மா அவங்க இப்போ வந்துடுவாங்க எல்லாம் தயாராக இருக்கா ” பரபரப்புடன் வேலு கேட்க.
“எல்லாம் சரியா இருக்குடா உன் அக்கா தான், உம்முன்னு உட்கார்ந்து இருக்கா,என்னென்னு கேளு” தாய் ராமலட்சுமி அக்கா கோதையை காண்பித்தாள் .
“அக்கா ஏன் இப்படி இருக்க சந்தோஷமா இருக்கா, இந்த தடவை பாத்துட்டு போக வரல,பரிசம் போட்டு பூ வைக்க வாராக நீ எதையும் யோசிக்காம இரு” வேலு தன் அக்காவை சமாதானம் செய்தான்.
“தம்பி எனக்கே எல்லாம் செஞ்சி நீ கடனாளி ஆகிட்டா, உன் வாழ்க்கைக்கு என்ன பண்ணுவ” சொல்லி கொண்டிருக்கும்போதே,
கோதை முகம் வாடியது.
“நீ என்னோட இன்னொரு அம்மா உனக்கு செய்யாம, நீ கவலை படாம சந்தோஷமா இரு ”
கூறிவிட்டு வேலு மாப்பிள்ளை வீட்டாரை வரேவற்று வீட்டினுள் அமர வைத்தான்.
“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா, நாங்க இது வேணும் அது வேணும்னு கேட்கல உங்க, பொண்ணுக்கு போடுறத போடுங்க” மாப்பிள்ளைவீட்டார் பூ வைத்து கல்யாண தேதி கூறினர்.
தன் சகோதரிக்கு 20பவுன் நகை பூட்டி கல்யாணம் வெகு சிறப்பாக நடத்தி முடித்தான் வேலு, மறுவீடு செல்ல மணமக்கள் பெண் வீட்டிற்க்கு வந்தனர் .
வண்டியில் அனைத்து சீரும், ஏற்றப்பட்டு கோதையும் காரில் ஏறினாள்.அவள் நிமிர்ந்து தன் தமையனை காண அதில் தன் தகப்பன் முகம் தெரிய கை கூப்பியவள் கண்ணில் நீர் துளி கடலாய் பெருக்கெடுத்தது உடன்பிறப்புகள் இடையில்.