ஆடு புலி ஆட்டம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 4,177 
 

கண்மாய்க் கரையும் கருவேலங்காடுமாக காட்சியளிக்கும் இது ஈரம்புளி கிராமம். 24 மணிநேரத்தில் ஒருமுறையாவது அங்குள்ள முகங்கள் களைகட்டுமோ இல்லையோ, முன்று வேளையும் கச்சேரி போல களைகட்டுகிறது அங்குள்ள பேருந்து நிறுத்தம். பேருந்து பழசுதான், ஆனால் பிரயாணம் செய்யும் பயணிகள், கொஞ்சம் புதிதாகத் தெரிவார்கள். ஏனென்றால், என்றைக்கும் இல்லாத குளியல்
அன்று நடந்திருக்கும் பயணம. செய்யும் பல பேருடைய முகங்கள் பவுடர் வாங்கியிருக்கும்.

கொன்னக்குடியைத் தாண்டி வரும் போது, ஹார்ன் சப்தம் கேட்டது. புறப்படுகிறவர்களை துரிதப்படுத்து வதற்காக விடப்படும் எச்ச ரிக்கையாக கூட இருக்கலாம். காக்கி ட்ரஸ் போட்ட டிரைவர் புத்திசாலியாச்சே.. இருக்காதோ, பின்னே. அரைமணி நேரத்துக்கு முன்பே, பலர் பஸ் ஸ்டாப்புக்கு வந்து, பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நன்னியம்மாளும், சாந்தியும் சுவாரசியம்மாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பேசிய பேச்சைவிட, வாயிலிருந்து தெறித்த எச்சில் தீர்த்தவாரி செய்து கொண்டதுபோல அவர்களை நனைத்திருந்தது. ஊக்கும், டேப்பும் வாங்கப் போகிறார்களாம்.

பக்கத்தில் பேசிக் கொண்டிருந்த தேவி, அக்கா சுசீலா, நிலம் கிரையம் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். பஸ்ஸைவிட்டு இறங்கிய வெள்ளச்சிக் கணக்கன், எந்த நிலத்தை,
ரோட்டையா, என அவர்களைப் பார்த்தார். இரண்டு பேரும் முகத்தைச் சுளித்துக் கொண்டு, ஒன்னோட வக்கணை உன்னொடவே இருக்கட்டும் என்று சொல்லி திரும்பிக் கொண்டார்கள்.

“…அடிப்போங்கடி போக்கத்த சிறுக்கியளா என்று, தடித்த வார்த்தை, வெளியில் வராமல் முனகிக் கொண்டு வீட்டைப் பார்த்து நடந்தார். எதிரே பேருந்துநிறுத்தததை நோக்கி , மின்னல் ராணி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். சதை ஆங்காங்கே ஆடி ஆட்டம் காட்டியது.

“..என்னடி கிணுக்கு மினுக்கின்னு சிலுக்காட் டம் வர்றே..ஒரே பயணமா இருக்கு… ரெஸ்ட்எடுக்க மாட்டியோ என்றார் வெள்ளச்சிக் கணெக்கன். அப்பரம் சொல்றேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு, ஓடிப்போய் பேருந்தில் ஏறி விட்டாள். பக்ககத்தில் உட்கார்ந்திருந்த சுசீலா, ”..மூஞ்சிக்கு மேக்கப்லாம் போட்ருக்கே, ஒன்னோட ஒடம்புலேர்ந்து கெட்ட நாத்தம் வர்தே.. குளிக்கலையா..? என்று கேட்டாள். குளிச்சிட்டேன் இந்த வெயிலுக்கு, வேர்வை மழையாக் கொட்டுது என்னத்தப் பண்ணச் சொல்றே…” என்றாள்.

“…என்னைவிடவாடி நீ வெக்கைல அலையிறே. நேத்து ஒன்னோட அக்கா புருசன், அவந்தான் வளந்து கெட்டது வந்ததா தெரிஞ்சிச்சு…”

“…யாரு…”

“…அந்த வளந்து கெட்ட போசுதாண்டி. ஒங்காக்கா சீமாட்டி இருக்காளே, சிரிக்க வச்ச சீனுக்காரி, அவளோட ஆமெக்கந்தான்…”

“…ஹூம் மச்சானைச் சொல்றியா..”

“…ஓமா இப்பத்தான் புரிஞ்சதாக்கும். நைட்டு ரொம்ப வேலையோ”.

“…இல்லையில்லை.. நாங்க மூணு பேருதானே”.

“…அப்ப ஒங்க மச்சான் எங்கெ தங்குனாருடி..?”

“…பக்கத்துலெ, சம்மந்தி வீட்லெ போயி படுத்திட்டாரு”.

“..அப்புடியா, அப்ப ஒனக்கு வேலையில்லை, நா நம்பிட்டேன்டி..” என்றாள் சுசீலா…

வீட்டுக்குப் போன வெள்ளசசி கணக்கன் , புறப்பட்டுப்போன பேருந்து மாதிரியே, மரத்தடியில் நின்று கொண்டு அளந்து கொண்டிருந்தான். அப்போது குறுக்கிட்ட, ராமச்சந்திரன்”…வெள்ளச்சி நாமளுந்தா
சாமியார்லாம் திருடுனோம்.. என்ன நடந்தெச்சு… ஒண்ணுமில்லே… நக்கிக்கோ, தொடைச்சுக்கோன்னுதா இருக்கு.. ஆனா இப்பப்பாரு ஆம்பளைப் பயலுகளெ பெத்தவளுக எப்புடி அடிச்சுக் குமிக்கிராளுக…” என்றான்.

“..என்னடா ஆச்சு..? அடிச்சு குமிக்கிறாளுகளா…எங்கேடா,, வெவரமாச் சொல்லு…நமக்கும் தோதுப்படுதான்னு பாப்போம்…”

“…அதெல்லாம் படாது. காலம்போன கடைசிலையா. என்னத்தச் சொல்லச் சொல்றே.. நீ பாத்துருப்பியே அந்தப் பொம்பளைய..? உனக்கு எதித்தாப.லே தானே போறா.. என்றான் ராமச்சந்திரன்.

“…ஆமா, மின்னல் ராணிதான், சேலை நளுவுற அளவுக்கு ஓடுனா… என்னடா ஆச்சு…?

“…ஆச்சு ஆச்சு, சொடக்குப் போட்டு முடிக்கிறதுக்குள்ள எட்டு லட்ச ரூவா பேசிட்டா…”

“..யாருக்கு…?”

“…யாருக்கு, மோருக்குனு… அவ மயனெக்குத்தான். ரெண்டாவது பயலுககு.

“…எனன…! அவனை வித்துட்டாளா..?

“…வித்தது மாதிரித்தான்…”

“..சரி… எந்தப் பொறந்து கெட்டாண்டா, அவனுக்குப் போயி எட்டு லட்ச ரூவா குடுக்குறதா சொன்னது..?

“…இருக்காங்கெ அதுனாலெ கேட்டு வாங்குறாளுக… ”

“…பக்கத்திலெ, ஒரு ஊர்லெ, பொண்ணு பாத்துருக்காளாம். அந்தப் பொண்ணெ மயனுக்கு கட்டப்போறாளாம்…மாப்ளைக்கு எட்டு லட்ச ரூவா பணமா.. நேத்துத்தான் மாப்ளே பேசுனாங்க…”

“…அப்டியா, யாராரு வந்தது. எல்லாரும் வந்தது மாதிரித்த்தான் தெரிஞ்சுச்சு…”

“…சரி அந்தப்பய வந்தானா…?

“..எந்தப் பயலெக் கேக்குறீங்க.. என்றான் ராச்சந்திரன்.

“…அவெந்தாண்டா, புரோக்கரையே தெரியலையா…வளந்து, மூஞ்சில்லாம் தொங்கத் தொங்க இருப்பன்ல காட்டுக் கழுதை மாதிரி…போசுனனு ஒருத்தன்..அவனைத்தாண்டா கேக்குறேன்…அவனா பூதப்பாண்டிய கேக்குறியளா..?

ஹூம், அவரும் வந்தாரு.. அவரோட சேலை கட்ன மாதிரி ஒருத்தரு கருப்பா குண்டா ஒருத்தரு வந்தாரு…. அவரு யாருங்க…?

“…டேடே நிறுத்துடா, இவ்ளவுதா நீ பாத்தது. அது அவரு இல்லைடா. அவனோட பொஞ்சாதிடா…’ என்றார் வெள்ளச்சிக் கணக்கன்.

“…அப்டித் தெரிலையே’ என்றான் ராமச்சந்திரன்

“..அப்டித்தாண்டா அவ இருப்பா.. கம்புக் கூட்லயாவது அவளுக்கு முடி இருக்கும், ஆனா தலையில அவ்ளோ இருக்காது… அந்தப் பயலோட பொண்டாட்டிதாண்டா அவ. ஏதோ மூக்லெ முடிபறந்த மாதிரி இருந்துச்சு… அதான் சேலை கட்ற ஆம்பளையோன்னு நினைச்சுட்டேன்…”

”…அப்ப போசும், அந்தப்பய பொண்டாட்டியும் வந்தா, இந்த ஒரு பையனுக்கு எட்டு லட்சமா இருக்காதுடா… ரெண்டு கல்யாணத்து க்கு எட்டு லட்ச ரூவா பேசிருப்பாடா…”

”…இந்தப்பய மின்னல்ராணிக்கு கடைசிப் பயல்ல.. அது எப்படி முடியும்..? என்றார் ராமச்சந்திரன்.

“…முடியும்டா, இப்ப அந்தப் போசுப் பயலுக்கும், அவளுக்கும் நாலு புள்ளைக. நாலு பேருக்கும் கல்லாணம் முடிஞ்சிச்சு…”

“…ஆனா எத்தனை மருமக இருக்கோணும்..?”

“…நாலு பேருதான் இருக்கோணும்…”

”…உங்க வீட்லெயும், எங்க வீட்லயும்தான் அப்டிததான் இருக்கோணும். அங்கே ஆறு பேரு இருக்காங்க.. எனக்குத் தெரிஞ்சு.. இன்னும் தெரியாம எத்தைனேனு தெரியலை… விசாரிக்கணும்…

”…என்னங்க கொடுமையா இருக்கு…

“…இதைக் கொடுமைனு சொல்லாத,,, இந்தப் போசுப்பய சொல்ற மாதிரி புரட்சித் திருமணம்னு சொலலுடா…”.

“…சட்டத்துலெ… இந்த மாதிரி கல்லாணத்துக்கு எடமிருக்கா என்றார் ராமச்சந்திரன்.

“…சட்டத்துலெ இருக்கோ இல்லையோ, அவங்கெ மனசுலெ இருக்குள்ளடா. அது போதாதா. கல்லாண பண்ணிக்கிறவங்க அவங்க வீட்லெ தானே குடும்பம் நடத்தப்போறாங்க…கோர்ட்டுலயா பண்றாங்க.. இந்த தைரியந்தான் இந்த மாதிரிலாம் ஆட்டம் போடுதுக, இந்தப்பய புள்ளைக…

“…அப்டீங்களா, அது இருக்கட்டும்… இந்த போசுக்கு ஒரு பொண்டாட்டி தானே, அவங்க சம்சாரத்துக்கு இவரு மட்டுந்தானே புருசென்… அப்பறம் எப்டி புள்ளைகளுக்கு மட்டும் இப்புடி…

“…அந்தப்பய புள்ளைக பெரும்போக்கான ஆளுகன்னு நெனைக்கிறேன். நாம அனுபவிக்காத சந்தோசத்தை புள்ளைங்க அனுபவிக்கட்டு ம்னு கூட இருக்கலாம்ல…”

“இல்லை… புள்ளைங்களுக்கும், கொளுந்தியா மக்களுக்கும் புரட்சிக் கல்லாணம் பண்றவங்க, அவங்க பண்ணாம இருப்பாங்களா…?

“சரிடா அந்த சனியங்களெ இத்தோட விடு. விசாரிப்போம்…”.

“வேற ஏதாவது இதுலெ உள்குத்து இருக்குமோ, என்னமோ.. விசாரிப்பம்டா.. பாக்கலாம். இவ மின்னல் ராணி வீட்டுக் கல்லாணத்துக்கு வந்துருடா.

“மேட்ரு ரொம்ப இருக்குல.. விசாரிக்க கட்டாயம் வந்துடுவேன்..”

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆடு புலி ஆட்டம்

  1. இதுபோலவும் பிறவிகள் இருக்கிறதா. எப்படி நம்புகிறார்கள். முட்டாள்களுக்கும், முரட்டுத்தனத்துக்கும் சம்பந்தம் உண்டு என்பதை இந்தக்கதை தெளிவுபடுத்துகிறது. சூப்பர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *