சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 8,011 
 

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14

செந்தாமரை அரை ஆண்டு பரிக்ஷகளில் மிக நன்றாகப் படித்து அவள் வகுப்பிலே முதல் மாணவியாக ‘மார்க்’ வாங்கி இருந்தாள்.செந்தாமரை வாங்கின ‘மார்க்குக்கும்’ ரெண்டாவதாக வந்த மாணவி வாங்கின மார்க்குக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைக் கவனித்த கணபதி செந்தாமரை யை மிகவும் பாராட்டி இதே போல வருடாந்திர பரிக்ஷயிலும் மார்க் வாங்க வேண்டும் என்று செந் தாமரைக்கு அறிவுரை சொன்னார்.செந்தாமரையையும் அவரிடம் “உங்க ஆசீர்வாதத்தால் நான் நிச்சியமா நிறைய மார்க் வாங்குவேன்ப்பா” என்று மிகவும் ‘காண்பிடண்டாக’ச் சொன்னாள்.

நாளாக நாளாக சாந்தா ‘செந்தாமரையை பன்னாடாது படிப்பு முடிஞ்சதும் வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும்’ என்று தன் கணவனிடம் பிடிவாதம் பிடித்து வந்தாள்.கணபதிக்கு ‘நான் செந்தாமரைக்கு அன்னைக்கு கல்லூரி வாசலிலே ‘காத்தாலே என் மாமியார் சொன்னதை ரொம்ப ‘சீரியஸ்ஸா’ உன் மனசுக்கு எடுத்துக்காதே.நான் உன்னை ஒரு கணக்கு பட்டதாரியாக்காம எந்த காரணம் கொண்டும் என் வீட்டை விட்டு எல்லாம் வெளியே அனுப்ப மாட்டேன்.நீ பயப் படாம உன் பாடங்களை எல்லாம் கவனமாக நல்லா படிச்சி வா.நான் இருக்கேன் உனக்கு”என்று சொல்லி செல்ல மாக முதுகில் தட்டி னோமே ஆனா இப்ப சாந்தா இப்படி பிடிவாதம் பிடிக்கிறாளே என்ன சொல்லி இவ ளை சமாளிச்சு வறது’ என்று வழி தொ¢யாமல் தவித்தார்.

அந்த வருட பரிக்ஷகள் ஆரம்பித்து விட்டது.செந்தாமரை தான் தினமும் வேண்டி வரும் பிள்ளையாரை நன்றாக வேண்டிக் கொண்டு தன் ரூமை விட்டு வெளியே வந்து அம்மா அப்பாவுக்கு நம்ஸ்காரம் பண்ணீ விட்டு எழுந்து ”அம்மா,அப்பா,நீங்க ரெண்டு பேரும் என்னை இவ்வளவு நாளாக சாப்பாடு போட்டு, இருக்க இடம் கொடுத்து,எனக்கு பள்ளிக் கூட ‘பீஸை’க் கட்டி கல்லூரிக்கு அனுப்பி வச்சேங்க.இப்ப பரிக்ஷ ஆரம்பிக்கப் போவுது.நான் எல்லா பரிக்ஷங்களையும் நல்லா எழுத ணும்ன்னு எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஆசீர்வாதம் பண்ணுங்க.உங்க ஆசீர்வாதம் தான் எனக்கு ரொம்ப முக்கியங்க” என்று சொல்லி கையைக் கூப்பி நின்றுக் கொண்டு இருந்தாள்.கணபதி தன் கண்களில் கண்ணீர் மல்க “எங்க ஆசீர்வாதம் உனக்கு பரிபூரணமா இருக்கு செந்தாமரை.நீ எல்லா பரிக்ஷங்களையும் ரொம்ப நல்லா எழுதி ரொம்ப நல்ல மார்கு வாங்குவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.நீ நிம்மதியா எல்லா பரிஷைங்களையும் எழுதி வா” என்று செந்தாமரையின் தலையைத் தொ ட்டு ஆசீர்வாதம் பண்ணினார்.சாந்தா ஒன்னும் சொல்லாமல் சும்மா நின்றுக் கொண்டு இருந்தாள். உடனே கணபதி “சாந்தா,செந்தாமரை இவ்வளவு தூரம் நம்மை ஆசீர்வாதம் பண்ணுங்கன்னு கேக்கறா ஆனா நீ சும்மா நின்னுக் கிட்டு இருக்கே.செந்தாமரையை எல்லா பரிக்ஷங்களையும் நல்லா எழுது ன்னு நீ ஆசீர்வாதம் பண்ணக் கூடாதா”என்று சற்று கடுமையாகச் சொன்னார்.உடனே சாந்தா “செந்தாமரை,நீ எல்லா பரிக்ஷகளையும் நல்லா எழுதி வா” என்று வேண்டா வெறுப்பாக சொன்னாள் செந்தாமரையும் சந்தோஷமாக தன் பரிக்ஷகளை எழுத காலேஜுக்கு கிளம்பிபாள்.எல்லா பரிக்ஷ களையும் மிக நன்றாக எழுதினாள்.பரிக்ஷ¢களை எல்லா எழுதி விட்டு செந்தாமரை வீட்டில் சும்மா இருந்து வந்தாள்.சாந்தா கணபதியிடம் “இதோ பாருங்க.செந்தாமரை பன்னாடவது பாஸ் பண்ணி முடித்தவுடன் அவளை நீங்க நிச்சியமா இந்த வீட்டை விட்டே அனுப்பி விடணுங்க.நாம செந்தாமரை யை இங்கே மதுரைக்கு இட்டுக் கிட்டு வந்ததுக்கு அவளை பன்னாடவது வரை படிக்க வச்சு விட்டோ முங்க.இந்தப் படிப்புக்கு அவளுக்கு ஏதாச்சும் ஒரு சின்ன வேலை நிச்சியமா கிடைக்கும்.அவ அந்த வேலையை செஞ்சு வந்து பிழைச்சு கிட்டு வரட்டுங்க” என்று கண்டிப்பாக சொன்னாள்.அதற்கு கண பதி “ஆகட்டும் சாந்தா,அப்படியே செஞ்சு விடலாம்.நீ இப்போ நிம்மதியா இருந்து வா” என்று சமாதானம் சொல்லி வந்தார்.

லீவு முடிஞ்சு அன்று பன்னாடவது ‘ரிஸல்ட்’ வருகிற நாள். பன்னாடாவது பரிக்ஷ எழுதின எல்லா மாணவர்களும் மாணவிகளும் ‘அஸெம்பலி ஹாலில்’ நின்றுக் கொண்டு இருந்தார்கள். பன்னாடவது வகுப்புக்கு பாடம் எடுத்த எல்லா வாத்தியார்களும் நின்றுக் கொண்டு இருந்தார்கள். ‘பிரின்ஸிபால்’ தன் ரூமை விட்டு வேகமா ‘அஸெம்பலி ஹாலு’ க்கு வந்தார்.’மைக்’ முன்னாடி நின்றுக் கொண்டு “செந்தாமரை இந்த கல்லூரிக்கு பேரையும், புகழையும் வாங்கி கொடுத்து இருக்கா. அவ சென்னை மாநிலத்திலே முதல் மாணவியாக பாஸ் பண்ணி இருக்கா.இப்பத் தான் எனக்கு ‘CBS போர்ட்டில்’ இருந்து போனிலே தகவல் கிடைச்சு இருக்கு. செந்தாமரை 1200 மர்க்குக்கு 1192 மார்க் வாங்கி இருக்கா.இந்த நல்ல செய்தியை உங்க எல்லோர் கிட்டேயும் சொல்லிக் கொள்ளத் தான் நான் என் ரூமை விட்டு வெளியே ஓடி வந்து இருக்கேன்”என்று சொல்லி விட்டு மேடையை விட்டு கீழே இறங்கி வந்து செந்தாமரை கையைப் பிடித்து “செந்தாமரை,ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா இந்த வருஷம் தான் நீ இந்தக் கல்லூரி கொடியை உயரப் பறக்க வச்சு இருக்கே.நீ எனக்கும் இந்தக் கல்லூரி க்கும்,இந்த கல்லூரி பன்னாடவது வகுப்பு வாத்தியார்களுக்கும் பெருமையையும் புகழையும் வாங்கி குடுத்து இருக்கே.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.உன்னை இந்தக் கல்லூரிக்கு கொண்டு வந்து சேர்த்த கணபதி ‘புரபஸருக்கும்’ நான் ரொம்ப கடமைப் பட்டு இருக்கேம்மா. ‘கங்கிராஜுலே ஷன்ஸ்’ செந்தாமரை.நான் உனக்கு இந்தக் கல்லூரியிலே பட்டப் படிப்பு படித்து வர ஒரு ‘சீட்’ குடுத்து ‘பீஸ்’ இல்லாம படிக்க அனுமதி தரேம்மா.நீ வேறே எந்த கல்லூரிக்கும் போகாம எங்க கல்லூரியிலே படிச்சு வா.உன்னை இந்தக் கல்லூரியிலே வச்சு வர நானும், ‘மேனேஜ் மென்ட்டும்’ ரொம்ப ஆசைப்ப டுகிறோம்.நீ இந்தக் கல்லூரியிலே படிச்சு வறயா” என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடி த்து குலுக்கிக் கொண்டே கேட்டார்.உடனே செந்தாமரை “சார்,இந்த பெருமை என்னை மட்டும் சேராது சார்.எனக்கு இந்த வருஷம் பாடம் சொல்லிக் கொடுத்த எல்லா வாத்தியார்களுக்கும் அந்த பெருமை சேரும் சார்.நான் நிச்சியமா இந்தக் கல்லூரியிலே பட்டப் படிப்பு படிச்சு வறேன்.நீங்க எனக்கு இந்தக் கல்லூரியிலே பட்ட படிப்புக்கு ஒரு சீட் குடுத்து ‘பீஸ்’ இல்லாம படிக்க அனுமதி குடுத்தது க்கு ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி விட்டு ‘பிரின்ஸிபாலின்’ கால்களை தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.

பிறகு எதிரே நின்றுக் கொண்டு எல்லா வாத்தியார்களையும் பார்த்து கையைக் கூப்பி வணக்கம் சொன்னாள் செந்தாமரை.உடனே எல்லா வாத்தியார்களும் ஓடி வந்து செந்தாமரையின் கையைப் பிடித்துக்கொண்டு “‘கங்கிராஜுலேஷன்ஸ்’ செந்தாமரை.நாங்க என்ன சொல்லிக் கொடுத்தாலும் அதை நல்லா மனசிலே வாங்கிக் கொண்டு அதை பரிக்ஷ தாள்ளிலே எழுதி வந்து ரொம்ப நல்ல மார்க் வாங்கி சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்தது பூராவும் உன்னுடைய உழைப் பால்தாம்மா.உண்மையிலே நீ ரொம்ப ‘க்ரேட்’ செந்தாமரை” என்று சொல்லி செந்தாமரையின் கை களையப் பிடித்து குலுக்கினார்கள்.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தன் கண்களில் கண்ணீர் மல்க நின்றுக் கொண்டு இருந்தார் கணபதி.எல்லா வாத்தியார்களும் போன பிறகு கணபதி செந்தா மரை கிட்டே வந்து “செந்தாமரை,நான் சொன்னதை நீ செஞ்சுக் காட்டி எனக்கும் எல்லா வாத்தியார்க ளுக்கும்,இந்தக் கல்லூரிக்கும்,எங்க பிரின்ஸிபாலுக்கும் பெருமையும் புகழையும் தேடி கொடுத்து இருக்கே.நான் உன் மேலே வச்சு இருந்த நம்பிக்கை வீண் போகலேம்மா.உண்மையிலெயே நீ ரொம்ப ‘கிரேட்’.பிரின்ஸிபால் கேட்டுக் கொண்டது போல நீ இந்தக் கல்லூரியிலே பட்ட படிப்பு படிச்சு வா. அப்படி படிச்சு வந்து என் கனவை நனவாக்கு”என்று சொல்லி தன் கண்களை துடைத்து கொண்டார். “நான் நிச்சியமா இந்தக் கல்லூரியிலேயே படிச்சு பட்டம் வாங்குகிறேன் சார்” என்று சொல்லி அவர் கால்களையும் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள் செந்தாமரை தினமும் வேண்டி வரும் பிள்ளையாருக்கு தன் நன்றியை மனமாரச் சொன்னாள்.அவள் வீட்டிற்குள் நுழைய இருந்த போது ஹாலில் தன் பேர் அடிப்பட்டு கொண்டு இருந்ததை கேட்ட செந்தாமரை,வீட்டுக்கு உள்ளே போகாமல் வீட்டு வாசல் ஒரத்தில் நின்றுக் கொண்டு கேட்க ஆரம்பித்தாள்.“ஏங்க செந்தாமரை தான் இப்போ பன்னாடாவது பாஸ் பண்ணி விட்டு இருக்காளே,அந்த படிப்பு அவளுக்குப் போதும்ன்னு நாம மெல்ல சொல்லி அவளை இந்த வீட்டை விட்டு அவ வீட்டு க்கு அனுப்பி விடலாமேங்க”என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் சாந்தா.மணைவி சொன்னதை மிகவும் பொறுமையாக கெட்டு வந்த கணபதி “சாந்தா,இப்போ திடீரென்று செந்தாமரையை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டா அவ எங்கே தங்கிப் படிப்பா.அவ இங்கேயே இருந்து படிச்சு வரட்டுமே”என்று சொல்லி முடிக்கும் முன்பே”அதெல்லாம் ஒன்னும் வேணாங்க.நான் சொல்றபடி நீங்க செய்யுங்க.இனிமே செந்தாமரை இங்கே இருக்க வேணாங்க.அவளை வெளியே அனுப்பி விட்டு நாம ரெண்டு பேரும் குழந்தை ஆனந்தனை நல்லபடி கவனிச்சு வளர்த்து வரலாமுங்க” என்று பிடிவாதமாக சொன்னாள். “சாந்தா,நீ இப்படி ரொம்ப பிடிவாதம் பிடிச்சு வந்தா வேறே வழி இல்லாம நான் செந்தாமரையை ஹாஸ்டலில் தங்கி படிச்சு வர சொல்லி விட்டு,அவளுக்கு ஹாஸ்டல் ‘பீஸை’ நான் கட்டி வர போ றேன்.அவளை ஒரு பட்டதாரி ஆக்கின பிறகு தான் நான் அவளை இந்த வீட்டை விட்டு போக சொல்லுவேன்” என்று கணபதியும் பிடிவாதமாகச் சொன்னார்.”எங்கோ இருந்து வந்த ஒரு சோ¢ப் பொண்ணுக்கு நீங்க இப்படி பணத்தை வாறி இறைச்சு வருவது கொஞ்சம் கூட சரி இல்லீங்க.நீங்க அப்படி செலவு பண்ண நான் நிச்சியமா விட மாட்டேங்க” என்று கத்தினாள் சாந்தா.கணபதி ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தார்.

இவர்கள் பேச்சுக் குரல் நின்று விடவே செந்தாமரை மெல்ல வீட்டிற்குள் வந்தாள்.உள்ளே நிழைந்ததும் செந்தாமாரை சாந்தாவைக் கூப்பிட்டு “அம்மா,உங்க ஆசீர்வாதத்தாலும்,அப்பா ஆசீர் வாதத்தாலும் நான் பன்னாடாவதிலே சென்னை மாநிலத்தலேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்ம்மா.எங்க ‘பிரின்ஸிபால்’ என்னை ‘கங்கிராஜுலேட்’ பண்ணி விட்டு எனக்கு நம்ப கல்லூ ரியிலே பட்டப் படிப்பு படிச்சு வர ஒரு ‘சீட்டும்’ கொடுத்து ‘பீஸ்’ இல்லாம படிக்க அனுமதி கொடுத்து இருக்கார்” என்று சொன்னதும் சாந்தா “ரொம்ப சந்தோஷம் செந்தாமரை.நீ அங்கேயே போய் படிச்சு வா.இந்த வார கடைசிக்குள்ளே நீ இந்த வீட்டை விட்டு உனக்குப் பிடிச்ச இடத்திலெ இருந்து அந்த பட்டப் படிப்பை சந்தோஷமா படிச்சு வா” என்று சொல்லி விட்டு சமையல் கட்டுக்குப் போய் விட் டாள்.செந்தாமரைக்கு தூக்கி வாரிப் போட்டது.உடனே கணபதி “நீ கவலைப் படாதே செந்தாமரை. நான் ‘பிரின்ஸிபால்’ கிட்டே சொல்லி உனக்கு நம்ப ‘ஹாஸ்டலிலே’ ரெண்டு மாணவிங்க ஒன்னா படிச்சு வர ஒரு ரூமை தரச் சொல்றேன்.அந்த ‘ஹாஸ்டல்’ ரூமுக்கு நான் உனக்கு பணம் கட்டறேன்” என்று சொன்னார்.சமையல் கட்டில் இருந்து வேளியே வந்த சாந்தா “ஏங்க,நான் உங்க கிட்டே இப்போ தான் நீங்க செந்தாமரைக்கு இனிமே பணம் செலவு பண்ணி வரக் கூடாதுன்னு சொல்லி விட்டு சமையல் கட்டுக்குப் போனேன்.நீங்க என்னடான்னா நான் உனக்கு ஹாஸ்டலுக்குப் பணம் கட்ட றேன்னு சொல்றீங்க.அப்போ நான் சொல்றதுக்கு என்னங்க அர்த்தம்..என் வார்த்தைக்கு நீங்க மதிப் பே தர மாட்டீங்களா.நான் மறுபடியும் சொல்றேன்.நீங்க செந்தாமரைக்கு இனிமே காலணா கூட செலவு பண்ணிக் கூடாதுங்க” என்று கத்தினாள்.செந்தாமரை தன் ரூமுக்கு போய் அழுதுக் கொண்டு இருந்தாள்.“நான் செந்தாமரை கிட்டே ‘உன்னை படிக்க வச்சு ஒரு கணக்கு பட்டதாரி ஆக்க ஆசைப் படறேன்.நீ என்னுடன் மதுரைக்கு வறயா செந்தாமரை’ ன்னு தானே கேட்டு,அவளை என்னுடன் மதுரைக்கு அழைச்சு வந்தேன் சாந்தா.அவ ஒரு கணக்குப் பட்டதாரி ஆக,அவளுக்கு எங்க கல்லூரி ‘பிரின்ஸிபால்’ அவளுக்கு படப் படிப்பு படிக்க சீட்டும் குடுத்து ‘ப்ரீயா’ படிச்சு வர அனுமதியும் குடுத்து இருக்கார்.நான் அவளுக்கு வெறுமனே ‘ஹாஸ்டல்’ செலவை ஏத்துக் கிட்டு செலவு பண் ணா தான்,நான் அவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாத்தினது போல ஆகும். அதனால் இந்த ‘ஹாஸ்டல்’ செலவை நான் ஏத்து கிட்டே ஆகணும்.இதை நீ மறந்து விடக் கூடாது” என்று மறுபடியும் நிதானமாகச் சொன்னார் கணபதி. “நான் எந்த காரணம் கொண்டும் அந்த செலவை அனு மதிக்கப் போவதில்லேங்க.இது நிச்சியங்க” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டு,தன் கணவரின் பதிலுக்காக காத்து இல்லாமல் மறுபடியும் சமையல் அறைக்குப் போய் விட்டாள் சாந்தா.கணபதி ஒன்று சொல்லாமல் சும்மா இருந்து விட்டார்.

அடுத்த நாள்.கணபதி படுக்கையை விட்டு எழுந்து, பல்லை தேய்த்து விட்டு காலைப் பேப்ப ரைப் பிரித்து படிக்க் ஆரம்பித்தார்.அவர் ‘செல் போன்’ மணி அடித்தது. செல் போன ‘ஆன்’ பண்ணி பேச ஆரம்பித்தார் கணபதி.“மிஸ்டர் கணபதி,உங்களுக்கு ஒரு ‘ஹாப்பி நியூஸ்’.இப்பத் தான் சுந்தரம் நிறுவனத்தின் ‘மானேஜீங்க் டைரக்டர்’ எனக்கு போன் பண்ணி அவங்க நிறுவனத்தின் சார்பாக சென் னை மாநிலத்திலேயே முதல் மாணவியா மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணின செந்தாமரைக்கு வருஷ த்துக்கு இருபத்தி ஐஞ்சு ரூபாய் கொடுத்து,நம்ப ‘ஹாஸ்டலில்’ அவளுக்கு ஒரு தனி ரூம் கொடுத்து, அவ பட்டதாரியாக ஆகும் செலவை ஏத்துக் கொள்ளப் போவதாக முடிவு பண்ணி இருக்காங்களாம் இதை செந்தாமரைக்குச் சொல்லி அவளை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.இது வரை அந்த நிறுவனம் நம்ப கல்லூரிக்கு இந்த மாதிரி சலுகை யாருக் கும் குடுத்ததே இல்லீங்க.செந்தாமரையால் தான் இந்த கல்லூரிக்கு இந்த பெருமையும் புகழுங்க. முக்கியமா நான் உங்களுக்குத் தான் ‘தாங்க்ஸ்’ சொல்லணுங்க.நீங்க தான் இந்த செந்தாமரையை சென்னையிலே ‘கண்டு பிடிச்சு’ நம்ப கல்லூரியிலே கொண்டு வந்து சேர்த்தேங்க”என்று சிரித்துக் கொ ண்டே சொன்னார்.

உடனே கணபதி “அப்படியா சார்,எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நான் நிச்சியமா செந்தாமரையை உங்களை உங்க ரூம்லே இன்னிக்கு வந்து பார்க்கச் சொல்றேணுங்க” என்று சொலி போனைக் ‘கட்’ பண்ணினார்.கணபதி ரூமில் இருந்த செந்தாமரைக் கூப்பிட்டார். “செந்தாமரை,நீ தினமும் வேண்டி வரும் பிள்ளையார் உன்னை கைவிடலே.இப்பத்தான் ‘பிரின்ஸிபால்’ எனக்கு போன் பண்ணீ ‘மிஸ்டர் கணபதி,உங்களுக்கு ஒரு ‘ஹாப்பி நியூஸ்’.இப்பத் தான் எனக்கு சுந்தரம் நிறுவன த்தின் மானேஜீங்க் டைரக்டர் போன் பண்ணி அவங்க நிறுவனத்தின் சார்ப்பாக சென்னை மாநிலத்தி லேயே முதல் மாணவியா மார்க்கு வாங்கி ‘பாஸ்’ பண்ணின செந்தாமரைக்கு வருஷத்துக்கு இருபத்தி ஐஞ்சு ரூபாய் கொடுத்து,நம்ப ‘ஹாஸ்டலில்’ அவளுக்கு ஒரு தனி ‘ரூம்’ கொடுத்து அவளை ஒரு பட்டதாரியாக்க முடிவு பண்ணி இருக்காங்களாம்.இதை செந்தாமரைக்குச் சொல்லி அவளை என்னை வந்து பார்க்க சொல்லுங்க.இது வரை அந்த நிறுவனம் நம்ப கல்லூரிக்கு இந்த மாதிரி யாருக்கும் குடுத்ததே இல்லே’ன்னு சொன்னாரு.உன்னால் தான் நம்ப கல்லூரிக்கு இந்த பெருமையும் புகழுங்க வந்து இருக்கு”என்று சொல்லி செந்தாமரையின் கைகளை பிடித்து சந்தோஷமாக சொன்னார் கண பதி.உடனே செந்தாமரை அவர் காலில் விழுந்து அவர் காலை தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்ப்பா’.எனக்கு இந்த சந்தர்ப்பம் உங்களால் தாங்க கிடைச்சு இருக்கு நீங்களும் அம்மாவும் எனக்கு தெய்வம் மாதிரி” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.சமையல் ரூமை விட்டு வெளியே வந்த சாந்தாவைப் பார்த்து கணபதி செந்தாமரைக்கு சுந்தரம் நிறுவனத்து மானேஜிங்க் டைரக்டர் எடுத்து இருக்கு முடிவைச் சொல்லி சந்தோஷப் பட்டார்.உடனே சாந்தா “அப்படின்னா,செந்தாமரையை உடனே இந்த வீட்டைக் காலி பண்ணி விட்டு காலேஜ் ‘ஹாஸ்டலுக்கே’ போய் தங்கி இருக்கச் சொல்லுங்க” என்று சொல்லி விட்டு சமையல் கட்டுக்குப் போய் விட்டாள்.

செந்தாமரை குளித்து விட்டு நாஷ்டா சாப்பிட்டு விட்டு கணபதி இடமும், சாந்தா இடமும் சொல்லிக் கொண்டு காலேஜுக்கு வந்து ‘பிரின்சிபாலை’ப் பார்த்தாள்.உடனே ‘பிரின்ஸிபால்’ எழுந்து நின்று கொண்டு “செந்தாமரை வா,‘கங்கிராஜு லேஷன்ஸ்’.சுந்தரம் நிறுவனத்தின் ‘மனேஜிங்க் டைர கடர்’ எனக்கு இன்னைக்கு காத்தாலே போன் பண்ணி,உனக்கு அவங்க நிறுவனத்தின் சார்ப்பாக சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா மார்க்கு வாங்கி ‘பாஸ்’ பண்ணின உனக்கு வருஷத்து க்கு இருபத்தி ஐஞ்சு ரூபாய் கொடுத்து,நம்ப ‘ஹாஸ்டலில்’ ஒரு தனி ரூம் கொடுத்து,நீ ஒரு பட்ட தாரியாக ஆக்க முடிவு பண்ணி இருக்காங்களாம்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு செந்தாமரை. அந்த நிறுவனம் நம்ப கல்லூரிக்கு இந்த மாதிரி யாருக்கும் இந்த மாதிரி குடுத்ததே இல்லே. உன்னல் தான் இந்த கல்லூரிக்கு இந்த பெருமையும் புகழும்” என்று சொல்லி விட்டு செந்தாமரையின் கைகளை பிடித்து குலுக்கி சொன்னார்.செந்தாமரை சந்தோஷம் பொங்க “ரொம்ப தாங்ஸ் சார்” என்று சொல்லி தன் கண்களில் அவர் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.சிறிது நேரம் ஆன தும் ‘பிரின்சிபால்’ செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை,நீ உடனே ‘ஹாஸ்டல்’ வார்டனைப் போய் பாரு.நான் அவரை உனக்கு ஒரு மாணவி தங்கி படிக்கும் ‘ரூம்’ ஒன்னைத் தரச் சொல்றேன்.நீ அவர் தரும் ‘ரூமில்’ தங்கி தனியா ஒரு வித ‘டிஸ்டர்பென்ஸ்’ இல்லாம படிச்சு வா.அவங்க சொன்ன இருப த்தி ஐஞ்சு ரூபாயை அவங்க எனக்கு அனுப்பினவுடன், நான் உனக்குத் தறேன்.நீ அந்த பணத்தை உன் செலவுக்கு வச்சுக் கொண்டு சந்தோஷமா படிச்சு ஒரு பட்டதாரியா ஆகி வா.‘பெஸ்ட் ஆப் லக்’” நான் இப்போ ‘ஹாஸ்டல் வார்ட்டனுக்கு’ போன் பண்ணி சொல்றேன்” என்று சொல்லி விட்டு அடுத்த நிமிஷமே ‘பிரின்ஸிபால்’ ‘ஹாஸ்டல் வார்ட்டனுக்கு’ போனில் கூப்பிட்டு “ஹாஸ்டல் வார்டன் ராமலிங்கம் நான் ‘பிரின்ஸிபால் பேசறேன்.இப்போ உங்க கிட்டே செந்தாமரைன்னு ஒரு பொண்ணு வருவா.அவ இந்த வருஷம் நம்ம கல்லூரியிலே படிச்சு வந்து பன்னாடாவது பரிஷையிலே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா ‘மார்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கான்னு உங்களுக்கு நல்லா தொ¢யும்.இப்போ அவளுக்கு சுந்தரம் நிறுவனம் வருஷத்துக்கு இருபத்தி ஐஞ்சு ரூபாய் கொடுத்து அவளை ஒரு தனி ரூம்லே இருந்து படிச்சு ஒரு பட்டதாரியாக முடிவு பண்ணி இருக்காங்க.அவ உங்களை வந்துப் பார்த்ததும் நீங்க அவளுக்கு ஒரு தனி ரூம் கொடுத்து விடுங்க.சுந்தரம் நிறுவனத்தார் அந்த இருபத்தி ஐஞ்சு ரூபாய்க்கு செக் அனுப்பினவுடன், நான் அவளை உங்களுக்கு ‘ஹாஸ்டல் பேமண்டை’ பண்ண சொல்றேன்” என்று சொன்னதும் ஹாஸ்டல் வார்ட்டன் “செந்தாம ரைக்கு ஒரு தனி ரூம் குடுத்து விடறேன்.மத்த ஹாஸ்டல் ‘ஸ்டாப்புக்கும்’ ‘டைனிங்க் ஹால்’ மேனேஜருக்கும் நான் இப்பவே போன் பண்ணி இந்த விஷயத்தை சொல்லி விடறேன் சார்” என்று சொல்லி போனைக் ‘கட்’ பண்ணீனார்.

பிரின்ஸிபாலின் ரூமை விட்டு வெளீயே வந்து ‘ஹாஸ்டல் வார்டனை’ப் பார்த்து அவர் தனக்கு என்று கொடுத்த ரூமைப் பார்த்து விட்டு அதன் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் செந்தாமரை.வீட்டுக்கு வந்து செந்தாமரை அம்மாவிடமும் அப்பாவிடமும் அவள் ‘ஹாஸ்டல் வார்ட னை’ பார்த்து அவர் தனக்குக் கொடுத்த ரூமைப் பார்த்து விட்டு அந்த ரூமின் சாவியை வாங்கி கொண்டு வந்து இருப்பதாய் சந்தோஷமாய் சொன்னாள்.உடனே கணபதி செந்தாமரையின் கைகளை ப் பிடித்து சந்தோஷமாய் ”எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கும்மா.நீ ஹாஸ்டலில் தனி ரூமில் இருந்து வந்து எந்த வித ‘டிஸ்டெர்பன்ஸ¤ம்’ இல்லாம உன் படிப்பை படிச்சு வந்து,சீக்கிரமா நீ ஒரு ‘ஹை பஸ்ட் க்ளாஸில்’ ‘டிகிரீ’ ‘பாஸ்’ பண்ணி வர வேண்டும்.அது தான் என் ஆசை செந்தாமரை” என்று சொல்லி தன் கண்களில் ஓரத்தில் துளித்த கண்ணீரை துடைத்து கொண்டார்.சாந்தா ஒன்னும் சொல்லாமல் சும்மா நின்றுக் கொண்டு இருந்தாள்.

சிறுது நேரம் ஆனதும் சாந்தா செந்தாமரையைப் பார்த்து “அதான் உனக்கு கல்லூரி ஹாஸ் டலிலே ஒரு தனி ரூம் குடுத்து இருக்காங்களே.அதனால்லே நீ இந்த வீட்டை விட்டு சீக்கிரமா காலி பண்ணி விட்டு அந்த ‘ஹாஸ்டலிலே’ போய் தங்கி படிச்சு வா” என்று சொல்லி விட்டு மறுபடியும் அங்கே இருக்காமல் சமையல் ரூமுக்குப் போய் விட்டாள்.சாந்தா சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டார் கணபதி.உடனே செந்தாமரை “நான் என் துணிமணீகள்,புஸ்தகங்கள் எல்லாத்தை யும் எடுத்துக் கிட்டு நாளைக்கே அந்த ஹாஸ்டலுக்குப் போய் தங்கிக் கொள்கிறேம்மா.என்னை இத் தனை வருஷமா இங்கே தங்கிப் படிக்க வச்சதுக்கு உங்களுக்கும்,அப்பாவுக்கும் ரொம்ப நன்றிம்மா” என்று தன் கைகளை கூப்பி சொல்லி விட்டு தன் ரூமுக்கு போனாள்.சொன்னது போல அடுத்த நாள் எழுந்து குளித்து விட்டு,தன் துணிமணிகள்,புஸ்தகங்கள்,தான் தினமும் வேண்டி வரும் சுவத்தில் மாட்டி இருந்த பிள்ளையார் படம் எல்லாவற்றையும் தான் கொண்டு வந்த பெட்டியில் எடுத்துக் கொ ண்டு ஹாஸ்டலுக்கு கிளம்புவதற்கு முன் கணபதி, சாந்தாவின் கால்களை தொட்டு தன் கண்களில் ஒத்தி கொண்டு கண்களில் கன்ணீர் மல்க “அம்மா,அப்பா,நான் ‘ஹாஸ்டலுக்கு’ போய் வறேன்.நீங்க ரெண்டு பேரும் உங்க உடம்பை நல்லா கவனிச்சுக் கிட்டு வாங்க.குழந்தை ஆனந்தனை நல்லா வளர்த்து வாங்க.அவனை நல்லா படிச்சு வரச் சொல்லுங்க.அவனும் அப்பாவைப் போல நல்ல படிச்சு ஒரு பொ¢ய ‘ப்ரபஸராக’ வரணும்”என்று சொல்லி விட்டு தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம் பினாள்.கணபதி வாசல் வரை செந்தாமரை கூடப் போய் அவளை வழி அனுப்பி விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தார்.வீட்டை விட்டு கல்லூரிக்குப் போன செந்தாமரை ‘ஹாஸ்டல் வார்ட்டன்’ கொடுத்த ரூமுக்குள் போய் தன் துணிமணிகள்,புஸ்தகங்கள் இவைகளை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, பிள்ளயார் படத்தை சுவத்தில் இருந்த ஒரு ஆணியிலே மாட்டி விட்டு “பிள்ளயாரே,உன் மேலே பாரத்தைப் போட்டு விட்டு இந்த ‘ஹாஸ்டலில்’ தங்கி படிக்க வந்து இருக்கேன்.நீ தான் என் படிப்பை எந்த வித தடங்கலும் இல்லாம பாத்து வந்து என்னை சீக்கிரமா ஒரு கணக்கு பட்டதாரியாக வேண் டும்” என்று சொல்லி வேண்டிக் கொண்டாள்.

அடுத்த வாரம் காலேஜ் ஆரம்பித்ததும் செந்தாமரை B.Sc. கணக்குப் பிரிவில் சேர்ந்து படித்து வர ஆரம்பித்தாள்.அவள் வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும்,செந்தாமரை மேல் ஒரு வித மரியாதையும் மதிப்பும் இருந்து வந்தது.அதே போல அவ வகுப்பு எல்லா ‘ப்ரப்சர்களுக் கும்’ செந்தாமரை மேல் ஒரு தனி மரியாதை இருந்து வந்தது.சென்னை மாநிலத்திலேயே பன்னா டவதிலே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணின மாணிக்கம் தானே இந்த செந்தாமரை.கணபதி செந்தாமரையை அடிக்கடி கல்லூரியிலே சந்தித்து,அவ படிப்பை பற்றி விசாரித்துக் கொண்டு வந்து, அவளுக்கு கணக்கில் ஏற்பட்டு வந்த சந்தேகங்களை எல்லாம் சொல்லி புரிய வைத்துக் கொண்டு வந்தார்.செந்தாமரை அவ படிப்பிலே மிக நன்றாகப் படித்து வருவதைப் பார்த்த கணபதி மிகவும் சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தார்.செந்தாமரை சுந்தரம் நிறுவனம் கொடுத்த இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபாயில் மிக குறைவாக தனக்கு செலவு செய்துக் கொண்டு வந்து மீதி பணத்தை பாங்கில் ‘சேவிங்கஸ்’ கணக்கில் வைத்துக் கொண்டு வந்தாள்

ரெண்டு வருஷம் முடிந்து விட்டது.செந்தாமரை B.Sc.கணக்கு கோர்ஸில் மிக நன்றாக படித்து வந்து,சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா,மிக நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ னாள்.உடனே ‘பிரின்சிபாலும்’ செந்தாமரைக்கு ‘க்லாஸ்’ எடுத்து வந்த எல்லா ‘ப்ரபஸர்களும்’ செந்தா மரையை வெகுவாகப் புகழ்ந்து செந்தாமரையின் கையைப் பிடித்து குலுக்கி தங்கள் சந்தோஷத்தை தொ¢வித்தார்கள்.கணபதியும் செந்தாமரையை பார்த்து “செந்தாமரை,நீ B.Sc. கணக்கு ‘கோர்ஸில்’ மிக நன்றாக படிச்சு,சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா மிக நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருப்பதை நினைத்து நான் ரொம்ப பெருமைப் படறேன்.நீ என் கனவை நனவாக்கி விட்டே. உன்னை புகழ என் கிட்டே வார்த்தைகளே இல்லே” என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடித்து மிகவும் புகழ்ந்தார்.‘நாம எந்த ஒரு காரணத்திற்காக செந்தாமரையை மதுரைக்கு அழைச்சு கிட்டு வந்தோமோ,அந்த படிப்பை இப்போ செந்தாமரை படிச்சு அவ ஒரு கணக்குப் பட்டதாரி ஆகி விட்டு இருக்கா.அப்பா முருகா,உன் அருளாலே செந்தாமரை இன்னைக்கு ஒரு கணக்குப் பட்டதாரி” என்று மனதில் சொல்லி தன் கன்னதிலே போட்டுக் கொண்டார் கணபதி.

பிரின்ஸிபால் உடனே சுந்தரம் நிறுவன மேனேஜிங்க் டைரக்டருக்கு போன் பண்ணி ”சார், நான் மதுரை காலேஜ் பிரின்ஸிபால் பேசறேன் சார்.நீங்க இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபாய் ‘ஸ்காலர் ஷிப்’ குடுத்து எங்க காலேஜிலே படிக்க வச்ச செந்தாமரை இப்போ B.Sc. கணக்கு கோர்ஸில் மிக நன்றாகப் படிச்சு,அவ இப்ப சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கா.இந்த ‘ஹாப்பி நியூஸை’ உங்களுக்கு சொல்லத் தான் நான் உங்களுக்கு இப்போ பண்ணி இருக்கேன்” என்று மிகுந்த சந்தோஷத்துடன் சொன்னார்.இதை கேட்ட சுந்தரம் நிறுவன மேனேஜிங்க் டைரக்டர் ராமன் “அப்படியா சார். எனக்கு இந்த ‘ஹாப்பி நியூஸை’ கேக்கவே ரொம்ப சந் தோஷமா இருக்கு சார்.நான் இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு உங்க காலேஜுக்கு வந்து செந்தாமரையை நேரே சந்திச்சு அவளை பாராட்டி விட்டு வறேன் சார்.நீங்க தயவு செஞ்சி செந்தா மரையை உங்க ரூமுக்கு ஒரு நாலு மணிக்கா வந்து இருக்க சொல்றீங்களா” என்று சொன்னதும் பிரி ன்ஸிபால் ”நிச்சியமாக சார்.நான் செந்தாமரையை என் ரூமுக்கு நாலு மணிக்கு வந்து இருக்க சொல் றேன்” என்று சொல்லி போனைக் ‘கட்’ பண்ணினார்.உடனே ‘பிரின்சிபால்’தன் ‘பியூனை’ அனுப்பி செந்தாமரையை பார்த்து தன் ரூமுக்கு வருமபடி சொல்லச் சொன்னார்.செந்தாமரை பயந்துக் கொ ண்டே மூனறை மணிக்கே பிரின்ஸிபால் ரூமுக்கு வந்து வெளியில் இருந்த பியூனிடம் தான் வந்து விட்டதாய் பிரின்ஸிபாலிடம் சொல்லச் சொன்னாள்.உடனே அந்த பியூனும் பிரின்ஸிபால் ரூமுக்குள் போய் “சார்,செந்தாமரை என்கிற பொண்ணு உங்களைப் பாக்க வந்து இருக்காங்க” என்று சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தான்.பிரின்ஸிபால் அந்த பியூனிடம் “செந்தாமரையை உள்ளே அனுப்பு”என்று சொல்லி விட்டு ஏதோ ஒரு ‘பைலை’ப் பார்த்துக் கொண்டு இருந்தார்.பியூன் வெளி யே வந்து “ ‘‘பிரின்சிபால் உங்களை உள்ளே வரச் சொன்னாருங்க” என்று சொன்னதும் செந்தாமரை தன் உடையை சரி செய்துக் கொண்டு பயந்துக் கொண்டே பிரின்சிபால் ரூமுக்குள் போய் “குட் மார்னிங்க் சார்” என்று சொல்லி விட்டு தன் கையைக் கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள். செந்தாமரையைப் பார்த்ததும் “வா செந்தாமரை.நான் சுந்தரம் நிறுவனத்தின் மேனேஜிங்க் டைரக்டரு க்கு போன் பண்ணீ நீ B.Sc. கணக்கு ‘கோர்ஸில்’ சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கே என்கிற ‘ஹாப்பி நியூஸை’ சொன்னேன்.அவர் நாலு மணிக்கு நம்ம காலேஜுக்கு வந்து உன்னை நேரே சந்திச்சு பாராட்டி விட்டு போக வறேன்னு சொல்லி உன்னை இங்கே வரசொல்லி இருக்கார்” என்று சொன்னதும் செந்தாமரை ”ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று சொல்லி விட்டு பிரின்ஸிபால் காட்டின ஒரு காலி சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டாள்.

மணி சரியாக நாலடித்தது.பியூன் பிரின்ஸிபால் கதவை முழுக்க திறந்தவுடன் சுந்தரம் நிறுவனத்தின் மேனேஜிங்க் டைரக்டர் ராமன் பிரின்ஸிபால் ரூமுக்குள் வந்து “குட் ஈவினிங்க் சார். ஐ ஆம் ராமன்.சுந்தரம் நிறுவனத்தின் ‘மானேஜிங்க் டைரக்டர்’ ” என்று சொல்லி பிரின்ஸிபாலுக்குக் கை யை கொடுத்து குலுக்கி விட்டு எதிரே இருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்துக் கொண்டார்.ராமனைப் பார்த்ததும் செந்தாமரை எழுந்து நின்றுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.உடனே ராமன் செந்தாமரை கைகளைப் பிடித்து குலுக்கி விட்டு ” ‘கங்கிராஜுலேஷன்ஸ்’ செந்தாமரை.நாங்க உங்க ளுக்கு கொடுத்த ‘ஸ்காலர்ஷிப்பை’ உபயோகப் படுத்தி வந்து,நீங்க ரொம்ப நல்லாப் படிச்சு BSc. Mathsல் நிறைய மார்க்குகள் வாங்கி சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கீங்கன்னு உங்க பிரின்ஸிபால் எனக்குக் காத்தாலே போன் பண்ணி சொன்னார்.நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.உடனே நான் எங்க கம்பனி ‘போர்ட் மீட்டிங்கை’ ஏற்பாடு பண்ணி அதிலே உங்க ளுக்கு MSc.Maths படிச்சு வர ஐம்பதாயிரம் ரூபாய் ‘ஸ்காலர்ஷிப்’ கொடுக்க முடிவு எடுத்து இருக் கோம்.அதன் படி நீ மதுரை காலேஜிலே இப்போ தங்கி வர ரூம்லே இருந்து வந்து நல்லாப் படிச்சு வந்து நீ BSc. Mathsல் வாங்கினது போல நிறைய மார்க்கு வாங்கி, MSc.Maths பரிக்ஷ¢யிலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணணும்.அது தான் எங்க எல்லா டைரக் டர்களின் ஆசை.அந்த ‘ஸ்கார்லர்ஷிப்’ ‘அவார்ட்டுக்குகான’ ‘அக்ரிமென்ட்’ இந்த கவரில் இருக்கு” என்று சொல்லி அந்த ‘அக்ரிமென்ட்’ கவரை பிரின்சிபாலிடம் கொடுத்தார்.

உடனே பிரின்ஸிபால் கொடுத்த ‘அக்ரிமென்ட் கவரை’ செந்தாமரை கையில் கொடுத்தார். உடனே செந்தாமரை ராமன் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு ”சார்,நீங்க எனக்கு ஒரு தெய்வம் மாதிரி.நீங்க மட்டும் இந்த ரெண்டு ‘ஸ்காலர்ஷிப்களையும்’ எனக்கு தராம இருந்தா நான் வெறுமனே பன்னாடாவது படிச்சதோடு என் படிப்பை முடிச்சுக்கிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்து வந்து, ‘நான் ஒரு கணக்குப் பட்டதாரியாக வேண்டும்’ என்கிற என் ஆசையை நெருப்பிலே போட்டு பொசுக்கி விட்டு வாழ்ந்துக் கொண்டு வந்து இருப்பேன்.நீங்க பண்ண இந்த உதவியை என் வாழ் நாள் பூராவும் நான் மறக்க மாட்டேன் சார்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள்.

உடனே ‘பிரின்சிபால்’ எழுந்து நின்று கொண்டு ராமனை மிகவும் புகழ்ந்து பேசி விட்டு “சார், நீங்க இந்த மாதிரி ‘ஸ்காலர்ஷிப்’ கொடுத்து வருவதால் நிறைய ‘டிஸர்விங்க் ஸ்டூடண்ட்ஸ்’ நல்லா படிச்சு வந்து அவங்க வாழ்க்கையி லே முன்னுக்கு வர முடிகிறது.அந்த மாதிரி ‘ஸ்காலர்ஷிப்’ வாங்கின ‘ஸ்டூடண்ட்ஸ்’ உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டவர்களாக இருந்து வருவாங்க” என்று தன் கையைக் கூப்பி சொன்னார்.சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ராமன் ‘பிரின்சிபால்’ ரூமை விட்டுக் கிளம்பி தன் ஆபீஸ¤ க்குக் கிளம்பிப் போனார்.செந்தாமரை பிரின்சிபால் காலைத் தொட்டு தன் கண் களில் ஒத்திக் கொண்டு ”சார்,நான் இன்னும் மேலே கணக்குப் படிப்பேன்னு கனவிலும் நினைக்க வில்லை.உங்க தயவாலும் சுந்தரம் நிறுனத்தின் மேனேஜிங்க் டைரக்டர் மிஸ்டர் ராமன் உதவியாலும் தான் நான் இப்போ நான் MSc.Maths படிச்சு வரப் போறேன்” என்று கண்களில் கண்ணீர் மல்க கைகளைக் கூப்பி சொன்னாள்.உடனே பிரின்ஸிபால் ”செந்தாமரை,உண்மையிலேயே நீ படிப்பிலே ஒரு ‘ஜீனியஸ்’.உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு அந்த கடவுள் நிச்சியமா உதவி பண்ணுவார். இந்த ‘ஸ்காலர்ஷிப்பை’ நீ நல்லா உபயோகப் படுத்தி வந்து MSc.Maths ‘கோர்ஸிலும்’ சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி எங்களையும்,சுந்தரம் நிறுவனத்தையும் கௌரவப்படுத்தணும். இது ஒன்னு தான் நீ இப்போ எங்களுக்கு செஞ்சு காட்டணும்” என்று சொன்னார்.“நான் நிச்சியமா நல்லா படிச்சு MSc.Maths சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ண எல்லா முயற்சியும் பண்ணி வருவேன்” என்று சொல்லி விட்டு ‘பிரின்சிபால்’ ரூமை விட்டு வெளியே வந்தாள் செந்தாமரை.தான் தினமும் வேண்டி வரும் பிள்ளையாருக்கு மனதில் நன்றி சொன்னாள்.செந்தாமரை நேரே கணபதி ‘ப்ரபஸர்’ ரூமுக்குப் போய் பிரின்ஸிபால் ரூமில் நடந்த எல்லா விஷயத்தையும் விவரமா சொன்னாள்.“அப்படியா செந்தாமரை,கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ உண்மை யிலே ரொம்ப ‘இன்டெலிஜென்ட்’ பொண்ணு.இப்போ சுந்தரம் நிறுவனம் கொடுத்து இருக்கும் ‘ஸ்கா லர்ஷிப்பை’ நல்லா உபயோகப் படுத்திக் கொண்டு MSc.Maths கோர்ஸிலும் சென்னை மாநிலத்தி லேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணனும்.அது தான் என் ஆசை” என்று சொல்லி செந்தாமரை கைகளைப் பிடித்துச் சொன்னார் கணபதி.”நான் நிச்ச்சியமா ரொம்ப நல்லா படிச்சு வந்து உங்க ஆசையைப் பூர்த்தி பண்ணுவேன் சார்”என்று அவர் கால்களை தொட்டு தன் கண்களில் ஒத்தி கொண்டு சொன்னாள் செந்தாமரை.பிறகு அவரிடம் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு தன் ஹாஸ்டல் ரூமுக்கு போனாள் செந்தாமரை.தன் ஹாஸ்டல் ரூமுக்கு வந்த செந்தாமரை மனது நிம்மதி இல்லாம படுக்கையிலெ படுத்துக் கொண்டு யோஜனைப் பண்ணினாள்.அவள் உள் மனம் ஏங்கியது ’நாம நம்ம அம்மா அப்பா ஆயா மூனு பேர் கிட்டேயும் சொல்லிக்காம இப்படி மதுரைக்கு ஓடி வந்து ட்டோமெ.இந்த MSc. Maths படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமே’ என்று மிகவும் கவலைப் பட்டாள்.இரவு பூராவும் தூக்கம் இல்லாம தவித்தாள் செந்தாமரை.அடுத்த நாள் காலையிலெ எழுந்த செந்தாமரை ஒரு தெளிவான முடிவுக்கு வந்தாள்.MSc.Maths கோர்ஸில் சேர்ந்து படிக்கும் ஆசை அவள் மனசிலே மேலோங்கி நின்றது.தன் மனதை கல்லாக்கிக் கொண்டு MSc. Maths கோர் ஸில் சேர்ந்து படித்து வர ஆரம்பித்தாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *