அவனுக்கு இனிக் கனவுகளும் கூட வராது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 6,950 
 
 

அந்த ஆஸ்பத்திரி அந்த வாட்டு அதன் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாமே மௌனமாக இருந்தன. ஜன்னலுக் கருகில் சுவரோரமாக போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் சுமார் பதினெட்டு, பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கண்ணயர்ந்தபடி படுத்திருந்தான். அவன் கண்கள் மூடப்பட்டுக் கிடந்த போதும் ஏனிந்த வாழ்க்கை என்பது போல் அவன் முகம் மிக ஆழமான சோகத்தில் மூழ்கிப் போயிருந்தது போல் தான் தோன்றியது.

அவனது முகம் மட்டும் சோகத்தைப் பறைசாற்றவில்லை. அவனைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவன் சரீரத்தைப் பார்த்த போது மனது மேலும் திக்கென்றது. ஆம் அவனது முழங்கால்களுக்குக் கீழ் அவன் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டிருந்தன. வாழ்வின் நுழைவாயிலில் நுழையத் தயாராக இருந்த அவனுக்கு இனிமேல் அதற்கான சந்தர்ப்பம் முற்றாக இல்லாது போகுமா?

அவனை இப்போதைக்கு சாந்தன் என்று அழைப்போம். மன்னாரின்குக் கிராமமொன்றில் இரண்டு தங்கைளுக்கு அண்ணனாக குடும்பத்தில் மூத்தவனாக பிறந்தவன் தான் அவன் நீண்டகாலமாக நிலவி வந்த யுத்தம் அவர்களின் தந்தையை அவர்களிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டது. சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்ட அவர்களுக்கு தாய் மட்டுமே துணை. அவர்களின் தாய் மட்டுமே துணை. அவர்களின் தாய் அவர்களை வளர்த்து ஆளாக்க மிகச் சிரமப்பட்டாள். குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் அவன் தாய் சோர்ந்து போய் வானத்தை வெறித்துக் பார்த்துத் துக்கப்படும் போதெல்லாம் அவன் தன் தாய் படும் வேதனையை நினைத்து கலங்குவான். கண்ணீர் விடுவான்.

சிறுவனான அவனால் தன் தாய்க்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் மட்மே விஷ்வ ரூபம் எடுக்கும். தான் பெரியவனானதும் இலங்கையின் தலைநகர் கொழும்புக்குப் போய் உழைத்துப் பணம் சம்பாதித்து தன் தங்கைகளையும் அம்மாவையும் நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென நினைத்துத் தன்னை தேற்றிக் கொள்வான் எனினும் அதற்கான பாதை அவனுக்குத் தெரியவில்லை. அவனால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் வயிற்றுப்பசியை போக்குவதற்கே பலரின் கால்களில் மிதிபட வேண்டியிருந்தது.

எனினும் காலம் என்பது எதனையும் நிறுத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அது ஒரு கணமும் நகில்லாது ஓடிக் கொண்டுதான் இருக்கும். இந்தக் கால ஓட்டத்துக்கு சாந்தனும் அவன் தங்கைகள் இருவரும் கூட விதிவிலக்கானவர்கள் அல்ல. வேகமான கால ஓட்டத்தில் அவர்களும் உரிய வயதுகளைத் தாண்டி வளர்ந்தார்கள். சாந்தனின் கொழும்புக்குப்
போகும் கனவும் கூட அவனது வயதுடன் சேர்ந்து வளர்ச்சியடைந்தது. அவன் ௧௫ வயதைத் தாண்டியவுடனேயே பெரிய மனிதன் போல் நடந்து கொண்டான். பாறிய பொறுப்பு தனது தலைமேல் சுமத்தப்பட்டு அழுத்திக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தான். தன் தங்கைகளின் கரிய,பெரிய விழிகளை அவன் உற்றுப் பார்த்த போதெல்லாம் வாழ்வில் அவர்கள் காண விரும்பும் வண்ணக் கனவுகளெல்லாம் ஆவியாகிக் கரைந்து போய்க் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது அதற்கு ஒரு முடிவு கட்டியõக வேண்டும்.

அவனுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகும் வரை அதற்கான துணிச்சல் ஏற்படவில்லை. அம்மாவையும் தங்கைகளையும் விட்டுப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு வெளியிடத்தில் இருக்கும் மனோதிடம் அவனுக்கு இன்னமும் ஏற்படவில்லை. “நான் கொழும்புக்குக் போகப் போகிறேன்” என்று அவன் அம்மõவிடம் கூறிய போதெல்லாம் “போதுமடா நீ உழைத்து எங்ளுக்கு சோறு
போடுறதெல்லாம் ஆம்பிளப் பிள்ளைன்னு நீ மட்டும்தான் எங்களுக்கு துணையா இருக்கிற நீயும் போயிட்டா யாருடா எங்களுக்கு துணை என்று அம்மா புலம்பியதுடன் அவனும் அம்மாவுடன் கரைந்து நெகிழ்ந்து போவான். ஆனால் அவனுக்குள்ளிருந்த ஆதங்கம் போடா போடா என அவன் பிடறியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே இருந்தது.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவன் அம்மாவுக்குக் கடிதம் ஒன்று ஏழுதி வைத்துவிட்டு கொழும்பு பஸ்ஸில் ஏறினான். அவன் கொழும்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தானே தவிர அது எத்தனை பூதாகரமானது என்ற அறிவு அவனுக்கு கொஞ்சமும் இருக்கவில்லை. கொழும்புக்கு சென்று விட்டால் வேலை ஒன்று தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பு மாத்திரம் மனதில் வேரோடிப் போயிருந்தது. கிராமத்தில் குளம் குட்டை இலை குழை எனப் பழகிப் போயிருந்த அவனுக்கு பஸ் மற்றும் மோட்டார் எஞ்சின்களின் உறுமல்கள் கூட சிங்கங்கள் கர்ஜிப்பது போல் பயஉணர்வை ஏற்படுத்தின.

இத்தனை வாகனங்களுக்கு மத்தியில் எவ்வாறு வீதியைக் கடந்து எதிர்ப்புறம் செல்வதென்பது கூட அவனுக்கு தெரியவில்லை. ஆனால் பலபேர் அங்கும் இங்குமாக வாகனங்களுக்குள் புகுந்து வீதியைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்படி வீதியைத் துணிச்சலுடன் கடப்பவர்கள் கொழும்பு நகரத்தின் வீதிகளை எவ்விதம் கடப்பது என்ற நுட்பத்தினை நன்கு தெரிந்து வைத்திருந்தவர்கள் என்பது சாந்தனுக்குத் தெரியாது.

சாந்தனும் காட்டுத்துணிச்சலுடன் தெரிந்த திசைநோக்கி விரைந்தான். முதலில் வலதுபுறம் நோக்கிச் செல்லும் வாகனங்களைத் தவிர்த்து வீதியின் நடுப்புறம் சென்று அதன்பின் இடதுபுறம் செல்லும் வாகனத்தை தவிர்த்து மறுபுறத்தை அடைதல் என்பதே பாதை கடக்கும் நுட்பம் ஆனால் இதனை அறியாத சாந்தன் ஒரே விதத்தில் வேகமாக பாதையைக் கடந்தான். விளைவு எதிர்திசையில் விரைந்து வந்த டிரக் அவனை மோதி வீசித்தள்ளியது. அடுத்து வந்த வாகனம் அவன் கால்கள் மீது ஏறியது. யாரோ கூவினார்கள் “”ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவு” அந்தச் சத்தங்கள் மட்டுமே அவன் இறுதியாகக் கேட்டவை.

அதன் பின் அவனுக்கு ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பியபோது அவன் முழு வாழ்வுமே மீண்டும் ஒரே தரம் இருண்டுபோனது அந்த இருட்டில் அவனுக்குக் கனவுகள் கூட வரவில்லை.

இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர். கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *