அரிசி சோறு

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 7,537 
 
 

அடியே நானும் அஞ்சு பிள்ளை பெத்தவதான் இந்த மாதிரி கொவட்டிகில்ல என்னமோ ஊரில இல்லாத வயித்துபிள்ளை காரி மாதிரி இந்த கொவட்டு கொவட்டரியே சும்ம கம்ப அள்ளிபோட்டு கல்ல சுத்துவியா என , சிட்டு பாட்டி சத்தம் போட அரசி தனது வேதனையும் தாங்கிகொண்டு அரகல்லில் கம்பரிசியை அள்ளி போட்டு சுத்த ஆரம்பித்து விட்டால், தனது முதல் வகுப்பில் போகும் தன் மகனை பார்த்து டேய் அம்மாவிற்க்கு கொஞ்சம் தண்ணீர் கொடுடா, என சொல்ல அவனும் பெரிய நாச்சியார் வீட்டின் வெளியே இருக்கும் மண் பானை தண்ணீரை பிளாஸ்டிக் கிளாஸில் தர அவள் அதை அன்னாந்து குடிக்க இயலாமல் வாய் வைத்து குடிக்க பெரிய நாச்சியார், சிட்டு அந்த கிளாசை நீயே வைத்துக்கொள், என சொல்ல சிட்டு பாட்டி அரசியை பார்த்து அடியே சிறுக்கி பெரியவுக வீட்டு கிளாசில் வாய்வைத்து குடிக்கிறியே உங்க அப்ப ஆத்தா இப்படித்தான் சொல்லிதந்தார்களா என சத்தம் போட்டாள்.

சாயங்காலத்திற்க்குள் ஒரு மூட்டை கம்பு திரிச்சா ஒருவாரத்திற்க்கு வீட்டில் கஞ்சிக்கு பஞ்சமிருக்காது சீக்கிரம் சுத்துடி என மீண்டும் திட்ட நிறைமாத கர்ப்பிணியான அரசி வயிற்றின் பாரத்தையும் பார்க்காமல் பாட்டிக்கு பயந்து வேகமாக சுற்ற ஆரம்பித்தாள்.

அதற்க்குள் கருப்பன் அங்கு வர சிட்டுவின் பேரன் வேலப்பன் பாட்டி நாளைக்கு எங்க டீச்சர் சொன்னாவா சிலேட்டு கொண்டு வராமல் பள்ளீயோடத்திற்க்கு வரவேண்டாம்னுட்டாவ என்றான். அதற்க்கு பாட்டி எல கருப்பா டவுனுக்குதான போர வேலுக்கு சிலேட்டு வாங்கிட்டு வாட என சொல்ல அதற்க்கு கருப்பன் , எய் கிழவி உங்க அய்யனா கடை வச்சுருக்கான் காசு கொடுத்தா தருவான். காசு குடு என சொல்ல கிழவியும் தனது சேலை முடிப்பில் முடிந்து வைத்த இரண்டு ரூபாயை தர கிழவி சிலேட் 5 ரூவா இன்னும் மூனுருவா கொடு என்றான்.

அதற்க்கு கிழவி எ மவனுக்கு ஆம்பிள்ளை பிள்ளை பிறந்தா, சங்ககிரி கோட்டை மாரியாத்தாவிற்க்கு முடிஞ்சு வைத்த காணிக்கைடா , கூட போட்டுக்கோ நான் பிறகு கொடுக்கிறேன் என்றாள்.

சிட்டு பாட்டி அந்த‌ ஊரின் வ‌ண்ணாக்குடியில் வ‌சிக்கிறாள். அர‌சி அவ‌ள‌து ம‌க‌ள் வ‌யிற்று பிள்ளை த‌ன‌து ம‌க‌னுக்கு ம‌ன‌முடித்து வைத்தாள். நிறைமாத‌ க‌ர்ப்பினியான‌ அர‌சி த‌ன‌து க‌ண‌வ‌ன் குள‌த்திற்க்கு துணிதுவைக்க‌ சென்ற‌தும். த‌ன‌து பாட்டியுட‌ன் அந்த‌ ஊரின் ப‌ன்னை வீட்டில் க‌ம்பு ப‌ய‌ர் திரித்து மாவு வாக்கிகொடுத்து அதில் வ‌ரும் கூலியாக‌ கிடைக்கும் க‌ம்பு மாவில் தான் இவ‌ர்க‌ளின் ஜீவ‌ன‌ம்.

சிட்டுவின் ம‌க‌ன் சுந்த‌ரோ த‌ன‌து ப‌ணமெல்லாம் குடித்து விட்டு வீட்டிற்க்கு வ‌ந்த‌தும் த‌னது ம‌னைவியிட‌மும் தாயிட‌மும் மிர‌ட்டி அடித்து ப‌ண‌ம் வாங்கும் சாதார‌ன‌ குடிம‌க‌ன்.

மாலைக்குள் அர‌சி க‌ளைப்ப‌டைந்து விட‌ சென்னையில் இருந்து வ‌ந்த‌ நாச்சியாரின் க‌ல்லூரியில் ப‌டிக்கும் ம‌க‌ளும் அவ‌ளின் தோழிக‌ளும் அங்குதான் இருந்தார்க‌ள். அப்போது செல்வி அவ‌ள் அம்மாவிட‌ம் அம்மா பாவ‌ம் அந்த‌ பெண் ரொம்ம‌ திக்கிபோய்ட்டாள், போதும்மா என்ற உட‌ன் நாச்சியாரும் சும்மா கிட‌டி இவ‌ளுக‌ளுக்கு இதெல்லாம் ந‌டிப்பு, கூலி மாவு கொஞ்ச‌ம் குறைஞ்சாலும் க‌ண்க்கு கேட்டு வாங்குராளுக‌ என‌ எதிர் வாத‌ம் செய்ய‌ அவ‌ளும் அம்மாவை ச‌த்த‌ம் போட்டு ஏய் அர‌சி நீ வீட்டுக்கு போ என‌ சொன்ன‌வுட‌ன் அவ‌ளும் செல்வியை பார்த்து ஒரு ந‌ன்றிக‌ல‌ந்த‌ பார்வையை சிந்திவிட்டு புற‌ப்ப‌ட்டாள். வ‌ழியெல்லாம் சிட்டு கிழ‌வியின் திட்டு ட‌வுனு பிள்ளைக‌ அப்ப‌டித்தான் சொல்லுவாளுக‌

உன‌க்கேங்க‌ போச்சி நாதிகெட்ட‌ சிறுக்கி என‌ திட்டிக்கொண்டே வ‌ர‌ அவ‌ளும் பொருமையாக‌ ந‌ட‌ந்து வீட்டை அடைந்தாள்.

வீட்டிற்க்கு வ‌ந்த‌து வ‌யிற்றில் உள்ள‌ பிள்ளை வெளியே வ‌ரும் அவ‌ச‌ரத்தில் வ‌யிற்றினுள் சூழ்நிலை அறியாம‌ல் வ‌லியை உண்டு ப‌ண்ண‌ அவ‌ளும் வ‌யிற்று வ‌லியில் த‌வித்து பாட்டி வ‌யிறுவ‌லிக்கிற‌து. என‌ சொல்ல‌ கொஞ்சம் பொருத்துக்கோடி நான் போய் ராச‌ம்மாவை கூட்டி வ‌ரேன் என‌ சொல்லிவிட்டு வெளியே ப‌க்க‌த்து வீட்டில் இருந்த‌ பொண்ண‌ம்மா விட‌ம் பேத்திக்கு வ‌யிற்றுவ‌லி வ‌ந்துடுச்சு போய் ராச‌ம்மாவை கூட்டிவாரிய‌ளா என‌ சொல்ல‌ அவ‌ளும் ச‌ரி என‌ சொல்லிவிட்டு சென்றாள்.

சுள்ளிக‌ளை அள்ளிபோட்டு அடுப்பில் சுடுத‌ண்ணீர் வைக்க‌ சிட்டுவின் பேர‌ன் வேலு அம்மா வ‌லியில் அழுவ‌தைபார்த்து அம்மாவிற்க்கு என்ன‌ ஆச்சு என‌ கேட்க்க‌ சிட்டு பாட்டியோ உங்க‌ ஆத்தா உன‌க்கு த‌ம்பி பாப்பா த‌ர‌ப்போராடா என‌ சொல்ல‌ அத‌ற்க்கு வேலுவோ போ கிழ‌வி என‌க்கு த‌ங்க‌ச்சி பாப்பாதான் வேனும், என‌ சொல்ல‌ அவ‌ளும் பேடா பொச‌ கெட்ட‌ ப‌ய‌லே உங்க‌ப்ப‌ன் என்ன‌ கோட்டை ம‌க‌ராசாவா

பொட்டைபிள்ளையை வ‌ள‌ர்த்து ஆளாக்க‌ என‌ அவ‌னை ச‌த்த‌ம் போட‌ அத‌ற்க்குள் ராச‌ம்மா பாட்டி வ‌ர‌ அவ‌ளின் ம‌க‌ன் சுந்த‌ர‌மும் வ‌ர‌, அறைக்குள் பிர‌ச‌வ‌ வேலை ஆர‌ம்ப‌மாகிவிட்ட‌து. இவ‌ளுக்கு அவ்வ‌ள‌வு வ‌லியிலும் த‌ன‌க்கு ஆண்பிள்ளை பிற‌க்க‌வேண்டும் ப‌ழனி முருகா என‌ வேண்டிக்கொண்டாள். சிறிது நேர‌ வ‌லியின் க‌த்த‌லுக்கு பிற‌கு அழ‌கான‌ அர‌சியின் அச்சுவ‌டிவாக‌ பெண் குழ‌ந்தை பிற‌ந்து விட்ட‌து.

அர‌சி இவ்வ‌ள‌வு வ‌லியிலும் த‌ன் த‌ன‌க்கு பிற‌ந்த‌ பெண்குழ‌ந்தையை க‌ண்டு ஒரு புற‌ம் ஒருபுற‌ம் ஆன‌ந்த‌ம் என்றாலும் சிட்டு பாட்டியின் முக‌ம் விகார‌மாக‌ மாறுவ‌தை க‌ண்டு பிர‌ச‌வ‌ வேத‌னையை விட‌ த‌ன் பிள்ளை மீண்டும் த‌ன்னை விட்டு விட்டு சென்று விடுமோ என‌ற‌ ப‌ய‌ம் தொற்றிகொண்ட‌து.

சிட்டு வேக‌மாக‌ வெளியே வ‌ந்த‌வ‌ளை பார்த்து சுந்த‌ர் கேட்டான் , ஆத்தா என்ன‌ புள்ள‌ என கேட்க சிட்டுவோ செரிக்கு புள்ள‌ திரும்ப‌ பொட்ட‌ புள்ளைபெத்திருக்கிறாடா என‌ க‌ரிச்சு கொட்ட‌ ராச‌ம்மாவும் சிட்டுவும் குசுகுசு வென‌ எதோ பேச‌ வேலு த‌ன‌து த‌ங்க‌ச்சி பாப்பா பிற‌ந்தாள் என‌ தெரிந்து கொண்டாட்ட‌ம் போட்ட‌ வ‌ன‌து முதுகில் ஓங்கி ஒரு த‌ட்டு த‌ட்டி இந்த‌ ப‌ய‌ க‌ரிநாக்கு அதான் பொட்ட‌ புள்ள‌ பிற‌ந்து விட்ட‌து என‌ புல‌ம்ப‌

ராச‌ம்மாவிட‌ம் ய‌க்கா குழ‌ந்தையையை குளிப்பாட்டும் போது ச‌னிய‌ன் மூக்குல‌ த‌ண்ணிய‌ ஊத்திடுக்கா போய் ஒழிய‌ட்டும் என‌ சொல்ல‌ ராச‌ம்மாவும் மீண்டும் அறைக்குள் செல்ல‌ நிலையை புரிந்து கொண்ட‌ அர‌சி ய‌ய்யா என் புள்ளைய‌ கொஞ்ச‌ நேர‌மாவ‌து கொஞ்ச‌ உட‌ய்யா என‌ த‌ன‌து க‌ண‌வ‌னிட‌ம் சொல்ல‌ அவ‌னும் கொஞ்ச‌ம் ம‌ன‌மிள‌கி ராச‌ம்மாவை பார்த்து போ கிழவி நான் பிர‌கு வா ஆத்தாகிட்ட‌ பேசிகிட்டு இரு என‌ சொல்ல‌ சிட்டு அதை கேட்டுவிட்டு கோப‌த்துட‌ன் ஏன்டா அப்ப‌டி என்ன‌டா பேத்தி சொக்குபொடி போட்டா இந்த‌ வ‌ர‌த்து வார என‌ சொல்ல‌

அதற்கு சுந்தர் ‘யம்மே கொஞ்சம் வாய மூடிகிட்டு இரேன்’, அத‌ட்ட‌ ம‌க‌னின் சொல்லுக்கு கொஞ்ச‌ம் அட‌ங்கிய‌ சிட்டு பேர‌னிட‌ம் பாப்பா செத்து போச்சுப்பா என‌ சொல்ல‌ அத‌ற்க்கு வேலு போ பாட்டி போன‌வாட்டி பாப்பா பிற‌க்க‌ச்சே இதே தான் சொன்ன‌ அப்ப‌ பாப்பா கை கால் எல்லாம் ஆட்டுச்சி என்னை பார்த்து சிரிச்சுது நீதான் அதை கொன்னுபுட்ட‌ இப்ப‌வும் அம்மாகிட்ட‌ அது ங்க‌ ங்க‌ பேசுது நீ செத்து போச்சுன்னு பொய் சொல்ர‌ என‌ சொல்ல‌

அதை கேட்ட‌ அர‌சிக்கு த‌ன‌து ம‌க‌னின் தைரிய‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்தி த‌ன‌து பிள்ளையை காப்பாற்ற‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை வ‌ந்துவிட்ட‌து. எப்ப‌டியும் த‌ன் க‌ண‌வ‌ன் த‌னது அம்மாவின் பேச்சை தான் கேட்பான். இவ‌னை ந‌ம்பி புண்ணிய‌ம் இல்லை என்ற‌வ‌ளாக‌ ஒரு முடிவிற்க்கு வ‌ந்தாள்.

அவ‌னிட‌ம்,! ஒருநாள் இராத்திரி இந்த‌ புள்ளையோட‌ இருக்க‌ விட‌ய்யா, 10 மாத‌ம் சும‌ந்து பெத்த‌ ப‌ச்ச‌ ம‌ண்ணு இது என‌ சொல்ல‌ அவ‌னும் கொஞ்ச‌ம் ம‌ன‌மிள‌கி ஆத்தா நீ என்ன‌ வேனாலும் ப‌ண்ணு ஆனா இப்ப‌ வேண்டாம், காலையில் செய்துக்கோ என‌ சொல்லிவிட்டு தின்னையில் போய் அம‌ர்ந்து கொள்ள‌ சிட்டு பாட்டியும் ஏ ராச‌ம்மா காலையில வெர‌சால‌ வ‌ந்து புள்ளைக்கு காரிய‌ம் ப‌ண்ணு இந்த‌ ப‌ய‌லுக்கு நாதிகெட்ட‌ புள்ள‌ என்ன‌ பொடி போட்டாளோ தெரிய‌ல‌ என‌ சொல்ல‌ ராச‌ம்மாவும் த‌ன‌து வீட்டிற்க்கு ந‌டையை க‌ட்ட‌ அர‌சிக்கு யோச‌னை விடிஞ்சா பிள்ளை கொல்வ‌து உறுதி

திடீரென‌ ஒரு யோச‌னை வ‌ந்த‌து. ந‌ச்சியார் வீட்டு பிள்ளை ப‌டிச்ச‌வுக‌ அவுக‌ கிட்ட‌ சொன்ன‌ ந‌ம்ம‌ புள்ளைய‌ காப்பாத்தி விடுவாக‌ , என்ற‌ ந‌ம்பிக்கையில் எப்ப‌டி சொல்ல‌ என‌ நினைக்கும் போது அன்று புதிதாய் க‌ருப்ப‌ன் வாங்கிகொடுத்த‌ சிலேடை பைய‌ன் கையில் வைத்து புதிதாய் பிற‌ந்த‌ த‌ன‌து த‌ங்கையிட‌ம் காண்பித்து ஏதோ சொல்லிகொண்டிருந்தான். அவ‌ளுக்கு எழுத‌ ப‌டிக்க‌ தெரியாது, ஒரு யோச‌னை வ‌ந்த‌வ‌ளாக அந்த‌ சிலேடை அவ‌னிட‌மிருந்து வாங்கிய‌வ‌ள்.

ப‌ல்ப‌த்தையும் வாங்கி குழ‌ந்தையின் ப‌ட‌ம் ஒன்று வ‌ரைந்து அத‌ன் மீது க‌ல்லரை போல் க‌ட்ட‌ம் போட்டு. வேலுவிட‌ம், வேலு உன‌க்கு இந்த‌ த‌ங்க‌ச்சி பாப்பா எப்ப‌வுமே வேனுமா என‌ கேட்க்க‌ அந்த‌ பிஞ்சும் ஆமாம்மா என‌ சொல்ல‌ உங்க‌ பாட்டி இதை கொண்ணுடுமே என‌ சொல்ல‌ அவ‌ன் நான் கிழ‌வியை குத்தி போட்டுவேன் என்றான், .

அத‌ற்க்கு அவ‌ள் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், இந்த‌ சிலேடை கொண்டு போய் நாச்சியார் வீட்டு செல்லி அக்காகிட்ட‌ கொடு என்றாள். அழியாம‌ல் பார்த்துக்கோடா என‌ சொல்ல‌ அவ‌னும் த‌ன‌து த‌ங்கை காப்பாற்றும் உண்ண‌த‌ காரிய‌த்தை செய்கிறோம் என்றறியாம‌ல் இருந்தாலும் த‌ங்க‌ச்சி பாப்பா வேனும் என்ற‌ ஆர்வ‌த்தில் நாச்சியார் வீட்டை நோக்கி ந‌ட‌க்க‌ ம‌ழையும் லேசாக‌ துர‌ ஆர‌ம்பிக்க‌ அவ‌ன் அந்த‌ சிலேட்டில் எழுதியுள்ள‌ ப‌ட‌ம் அழியாம‌ல் இருக்க‌ ச‌ட்டைக்குள் திணித்து கொண்டு ந‌ட‌க்க‌ வீட்டு திண்னையில் ந‌ன்பிக‌ளுட‌ன் அர‌ட்டை அடித்து கொண்டிருந்த‌ செல்வி த‌ன‌து அம்மாவிட‌ம் அம்மா அர‌சியோட‌ பைய‌ன் வ‌ந்திருக்கான் என்றாள்.

அவ‌ள் அம்மாவும் என்ன‌டா இந்த‌ க‌ருக்க‌லில் என‌ கேட்க்க‌ வேலு அம்மா தான் இந்த‌ சிலேடை செல்லி அக்காகிட்ட‌ கொடுக்க‌ சொல்லுச்சு என‌ சொல்ல‌ செல்வியும் என்னிடமா என‌ கேள்வியாக‌ அவ‌ள‌து அம்மாமுக‌த்தை பார்த்த‌வாரே சிலேடை வாங்கி பார்க்க‌ அதில் ஒன்றும் புரியாம‌ல் என்ன‌ இது வ‌ட்ட‌ வ‌ட்ட‌மா ஒரு க‌ட்ட‌ம் போட்டு கை கால் மாதிரி உண‌க்கு எதும் எழுதி த‌ர‌னுமா என‌ கேட்க்க‌ சிறுவ‌னும் இல்லைக்கா அம்மாவுக்கு பாப்பா பிற‌ந்தருக்குள்ள‌ அதான் அம்மா இத‌ உங்க‌ கிட்ட‌ கொடுக்க‌ சொன்னா அவ‌ளும் அவ‌ள் அம்மாவிட‌ம் என்ன‌ம்மா இது ஒன்னும் புரிய‌ வில்லை என‌ சொல்ல‌. ஆனால் செல்வியின் அம்மாவிற்க்கு புரிந்துவிட்ட‌து. அவ‌ளும் அல‌ட்சிய‌மாக‌ அட‌ பெட்டைபிள்ள‌ பொரந்துருக்கு போல‌ அதான் பாவ‌ம் அந்த‌ பெண் இந்த‌ மாதிரி அனுப்புகிறாள் என்றாள்.

ஏற்க்க‌வே தனது ஊரில் ந‌ட‌க்கும் பெண்சிசுக்கொலைக‌ளை ப‌ற்றி அறிந்த‌வ‌ள். இதை ச‌ட்டென‌ புரிந்து கொண்டு வேக‌வேக‌மாக‌ த‌ன‌து ந‌ன்பிக‌ளுட‌ன் சிட்டுவின் வீட்டிற்க்கு செல்ல‌ விருந்த‌வ‌ளை, அவ‌ளின் அம்மா த‌டுத்தாள் , ம‌ணீ 10 ஆகுது அவிக‌ பிர‌ச்ச‌னையெல்லாம் ந‌ம‌க்கெதுக்கு வ‌ம்பு , சும்மா கிட‌டி வ‌ந்த‌யா இருந்தியா ப‌டிச்சியா என்றில்லாம‌ல் இதெல்லாம் உன‌க்கெத‌ற்க்கு என‌ ச‌த்த‌ம்போட‌, செல்வி வேலுவிட‌ம் நீபோடா காலையில் வ‌ருகிறோம் என‌ சொல்ல‌ அவ‌னும் ஏமாந்த‌ முக‌த்துட‌ன் வீட்டிற்க்கு சென்று அம்மாவிட‌ம் சொல்ல‌ அவ‌ள் சிறிது யோச‌னை செய்த‌வ‌ளாக‌ கூரையை பார்த்த‌ ப‌டி இருக்க‌ அங்கு சொருகிவைக்க‌ப‌ட்ட‌ அறிவாள் க‌ண்ணில் ப‌ட்ட‌து.

மெதுவாக‌ எழுந்து அந்த‌ அறிவாளை உறுவினாள், வேலுவும் அம்மாவின் செய்கை புரியாம‌ல் விழிக்க‌ த‌ன‌து க‌ண‌வ‌ன் ப‌டுத்திருக்கும் வெளிவிராண்ட்வில் சென்ற‌வ‌ள்
த‌ன‌து க‌ன‌வ‌னின் முன் சிறிது யோச‌னையுட‌ன் நின்ற‌வ‌ள். அவ‌னை யெய்யா என‌ எழுப்ப‌ அவ‌னும் குடி போதையில் இருந்த‌வ‌ன். த‌ன் ஆசை ம‌னைவி அறிவாளும் கையுமாக‌ நின்ற‌வ‌ளை பார்த்த‌வுட‌ன் ச‌ட்டேன‌ போதை தெளிய‌ எழுந்து என்ன‌ புள்ள‌ அறிவாளும் கையுமாக‌ என‌ சொல்ல‌ அர‌சி யோவ் எப்ப‌டியும் காலையில் என் புள்ளையை கொண்ணுடுவீங்க‌ அதுக்கும் முன்னால‌ என் கொற‌வ‌ளையை வெட்டு இந்தா என‌ சொல்ல‌ அவ‌னும் சும்மா இரு த‌ங்க‌ம் காலையில் பேச‌லாம், போடா போய் தூங்கு சார‌ல் வேற‌ அடிக்குது பிள்ளைதாச்சி உட‌ம்பு எதும் ஆயுடும் என சொல்ல‌,

அவ‌ளோ இப்ப‌ நீ வெட்டுகிறாயா இல்லை நானே வெட்டிகொள்ள‌வா என‌ கேட்க்க‌ அவ‌னும் ப‌த‌றிப்போய் புள்ள‌ உன் புள்ளைக்கு ஒன்னும் ஆக‌ விட‌மாட்டேன் என‌ சொல்ல‌ பாரு இன்னும் என் புள்ள‌ என்று தான் சொல்கிறாய், உன்னை நம்ப‌ மாட்டென் என‌ சொல்ல‌ அவ‌னும் ஏய் க‌ண்ணுமா சும்ம‌ ஒரு பேச்சுக்கு சென்னேன் த‌ங்க‌ம்! ந‌ம்ம‌ புள்ள‌ இந்த‌ அறிவாளால‌ எங்க‌ ஆத்தாவை வெட்டுவேன் என‌ பிள்ளைக்கு எதும் செய்தால் என்றான்.

அவ‌ளும் த‌ன் மீது த‌ன் க‌ன‌வ‌ன் உயிரையே வைத்திருக்கிறான் அத‌னால் ஒரு த‌ய‌ங்கிய‌ ச‌ந்தோச‌த்துட‌ன் உள்ளே சென்ற‌வ‌ள் ராச‌ம்மா த‌ன‌து மார்பில் பூசிவிட்ட‌ வேப்பிலை க‌ரைச‌லை ந‌ன்றாக‌ க‌ழுவி த‌ன‌து குழ‌ந்தைக்கு பாலூட்ட‌ ஆர‌ம்பித்தால் , த‌ண்ணீர் கொட்டும் ச‌த்த‌ம் கேட்ட‌ சிட்டு உள்ளே வ‌ந்த‌வ‌ள் த‌ன் பேத்தி அவ‌ள் ம‌க‌ளுக்கு பாலூட்டுவ‌தை பார்த்த‌வ‌ள்,

அடியேய் சிறுக்கி பாலுட்டினால் பிள்ளை சீக்கிர‌ம் சாகாத‌டி என‌ சொல்லி பிள்ளையை பிடுங்க‌ எத்தனித்த‌வ‌ள் த‌ன‌து ம‌க‌ன் வாச‌லில் அறிவாளும் கையுமாக‌ நிற்ப்ப‌தை பார்த்து ப‌ய‌ந்து போய் ராசா உன் ந‌ன்மைக்காக‌த்தான் சொல்கிரேன் என‌ சொல்லிவிட்டு மீண்டும் த‌ன‌து முந்தானையை உத‌றிவிட்டு முற்ற‌த்தில் உட்கார்ந்து புல‌ம்ப‌ சுந்த‌ரும் எய் கிழ‌வி சும்மா கிட‌ புல‌ம்பினால் வெட்டி புடுவேன் என‌ மிர‌ட்ட‌ ப‌ய‌ந்து போய் மூச்சுகாட்டாம‌ல் அங்கேயே தூங்க‌ அதிகாலை அர‌சிக்கு வ‌ச‌ந்த‌மாய் பூத்த‌து.

எப்பொழுது விடியும் என‌ எதிர் பார்த்திருந்த‌ செல்வி த‌ன‌து அம்மாவிட‌ம் கூட‌ சொல்லாம‌ல் த‌ன‌து தோழிக‌ளை அழைத்துகொண்டுசெல்ல‌ வ‌ழியில் ச‌ங்க‌கிரி சிமெண்டு பெக்ட‌ரியில் செக்யூரிட்டி வேலைபார்க்கும் முபார‌க் அண்ணா த‌னது யூனிபாமுட‌ன் ப‌ணிக்கு செல்ல அவ‌ரை வ‌ழிம‌றித்த‌ செல்வி அண்ணா கொஞ்ச‌ம் எங்க‌ கூட‌ வாங்க‌ என‌ விட‌ய‌த்தை சொல்ல‌ முபார‌க் அண்ணாவும் அவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து கொண்டு சிட்டுபாட்டியின் வீட்டிற்க்கு செல்ல‌

அங்கே எதிர் முனையில் ந‌ட‌க்க‌ போவ‌தை அறியாத‌ ராச‌ம்மா க‌ள்ளிப்பாலை கிண்ண‌த்தில் ஏந்திகொண்டு சிட்டுவிட்டிற்கு வ‌ர‌வும் இவ‌ர்க‌ள் அங்கு சேர‌வும் ச‌ரியாக‌ இருக்க‌ , முத‌லில் செல்வி வீட்டினுள் சென்ற‌வ‌ள் சுந்த‌ரை பார்த்து பொட்டைபிள்ளை பிற‌ந்தாள். ஏய்ய‌ கொல்ரீங்க‌ உங்க‌ ஆத்தா, உ பொண்ட்டாடி எல்லாம் பொம்பிள்ளைதானே அவ‌ங்க‌ள் அவ‌ங்க‌ கொன்னிருந்த‌ இன்னைக்கு நீ இருந்திருப்ப‌யா என‌ கேட்க்க‌ நில‌வ‌ர‌ம் புரியாதா ராச‌ம்மா ஏ சிட்டு புளளைய‌ கொண்டாடி என‌ சொல்ல‌ முபார‌க் அண்ணா யேய் கிழ‌வி ஓடிப்போ இல்லாட்டி ஜெயிலில் போட்டுவிடுவேன் என‌ மிர‌ட்ட‌ ப‌ய‌ந்து போன‌ ராச‌ம்மா சாமீ நான் ஒன்னும் செய்ய‌ல‌ என‌ சொல்லி போக‌ முய‌ல‌ இனிமே இந்த‌ ஊரில் எந்த‌ பொட்டைபிள்ளை இறந்தாலும் உண‌க்கு ஜெயில் தான் என‌ மிர‌ட்டி விர‌ட்டி அடித்த‌ன‌ர் அனைவ‌ரும் சேர்ந்து, த‌ன‌து குழ‌ந்தையை காப்பாற்றிய‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி சொல்லும் பார்வையில் நீங்க‌லேல்லாம் ந‌ல்லா இருக்க‌னும்மா என‌ சொல்ல‌, செல்வி குழ‌ந்தையை வாங்கினால் அதுவ‌ரை ந‌ன்கு தூங்கிகொண்டிருந்த‌ குழ‌ந்தை குளிர் க‌ர‌ம் த‌ன‌து உட‌லில் ப‌ட்ட‌வுட‌ன், மெல்ல‌ க‌ண்க‌ளை திற‌ந்து அங்கும் இங்கும் பார்க்க‌ அதிகாலை ந‌ன்றாக‌ விடிந்து விட்ட‌து. அந்த‌ குழ‌ந்தையின் அழ‌கில் ம‌ய‌ங்கிய‌ செல்வியின் தோழி த‌ன‌து க‌ழுத்தில் கிட‌ந்த‌ செயினை அந்த‌ குழ‌ந்தையின் க‌ழுத்தில் மாட்டி அழ‌கு பார்க்க‌ அர‌சி த‌ன‌து க‌ண‌வ‌னிட‌ம் பாருய்யா உன் குழ‌ந்தை வ‌ந்த‌வுட‌ன் ல‌ட்சுமியே ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்துட்டா என‌ சொல்ல‌

செல்வியின் தோழிக‌ள் அனைவ‌ரும் குழ‌ந்தைக்கு என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம் என்று யோச‌னை செய்யும் போது அனைவ‌ர‌து பெய‌ரின் முத‌ள் எழுத்துக்க‌ளை சேர்த்து ஸ்வேதா ப‌வானி என்று வைக்க‌ அர‌சிக்கும் சுந்த‌ருக்கும் அந்த‌ பெய‌ர் பிடித்திருந்த‌து. முபார‌க் அண்ணா த‌ன‌து பையிலிருந்த‌ 100ரூ தாளை ஸ்வேதாவின் கையில் கொடுக்க‌ வேலு நீ என்ன‌ பாப்பாவிற்க்கு த‌ருவாய் என‌ செல்வி கேட்க்க‌ வேலுவும் த‌னது ப‌ங்கிற்க்கு கூரையில் இருந்து ப‌னைஓலையை ஒடித்து காத்தாடி செய்து ய‌க்கா இது நான் என் த‌ங்க‌ச்சி பாப்பாவிற்க்கு கொடுப்பேன் என்றான்.

சுந்த‌ர் த‌ன‌து சைக்கிளை எடுத்து நேராக‌ த‌ன‌து ந‌ன்ப‌னிட‌ம் 50 ரூ க‌ட‌ன் வாங்கி ட‌வுனுக்கு போனான். அங்கே கும‌ர‌ன் நாடார்க‌டையில் அரிசி குடுங்க‌ சாமி என‌ த‌ன‌துன்டை காண்பிக்க‌ அடே வ‌ண்ணாப்ப‌ய‌ளுக்கு அரிசி கேட்க்குது என‌ கிண்ட‌ல‌டித்து தூர‌மா நில்லு என‌ சொல்லி சிறிது அரிசியை அள்ளி த‌ர‌ சாமீ என‌க்கு 50 ரூபாய்க்கு அரிசி வேண்டும் என‌ சொல்ல‌ எலே உண‌க்கு லாட்ட‌ரி எதும் அடிச்சுருக்கா புதுசா அரிசி கேட்கிறய் அதுவும் 50 ரூபாய்க்கு என‌ கிண்ட‌ல‌டிக்க‌ அத‌ற்க்கு சுந்த‌ர் சாமி என‌க்கு பொட்ட‌ புள்ள‌ பொரந்திருக்கு என‌ சொல்ல‌ ஒரு த‌ன‌க்கு யாரோ ஒரு அறை ஓங்கி விட்ட‌தை போல் இருந்த‌து,

8 வ‌ருஷ‌த்திற்க்கு பிற‌கு க‌ர்ப்ப‌மான‌ த‌ன‌து ம‌ரும‌க‌ளுக்கு ஸ்கே பார்க்க‌ க‌ருவில் வ‌ள‌ர்வ‌து பெண்பிள்ளை என்ற‌வுட‌ன் அதை க‌ருவிலேயே கொன்றுவிட‌ இவ்வ‌ள‌வு வ‌ச‌திக‌ள் இருந்தும் இந்த‌ பாத‌க‌ செய‌லை செய்த‌ நான், ம‌த்தியான‌ சாப்பாடிற்க்கே அல்லாடும் ஏழை தன‌க்கு பெண்பிள்ளை பிற‌ந்த‌து என்ற‌வுட‌ன், வாழ்க்கையில் இதுவ‌ரை அரிசியை க‌ளைந்து அடுப்பேற்றாத‌வ‌ன், இன்று ஊருக்கே சாப்பாடு போட‌ப்போகிறான். இது தான் பெண்குழ‌ந்தையின் ச‌க்தியா என்று ம‌ன‌திற்க்குள் க‌ண்ணீர்விட்ட‌ வாறு எவ்வ‌ள‌வு எடை என்று கூட‌ தெரியாம‌ல் அள்ளிபோட‌ சுந்த‌ர‌ த‌ந்த‌ காசை கூட‌ வாங்காம‌ல் இல்ல‌ப்பா சும்மாவே கொண்டுபோ என‌ நேற்று செய்த‌ பாவ‌த்திற்க்கு இத‌னால் பிராய்சித்த‌ம் தேட‌ முய‌ல‌ சுந்த‌ரோ த‌ன‌க்கு பிற‌ந்த‌து. தெய்வ‌மே தான் என்ற‌ ச‌ந்தோச‌த்தில் சைக்கிளில் ஊர் நோக்கி கிள‌ம்பினான்.

வீட்டில் ச‌ந்தோச‌ அலை க‌ரைபுர‌ண்டோடிய‌து, எல்லொரையும் விட‌ வேலு தான் அதிக‌ கொண்டாட்ட‌த்தில் இருந்தான், அவ‌னுக்கும் எதிர்பார்த்த‌ மாதிரியே த‌ங்க‌ச்சி பாப்பா கிடைத்துவிட்ட‌த‌ல்ல‌வா,

அப்பாவின் சைக்கிள் பெல் ச‌த்த‌ம் கேட்டஉட‌ன் ச‌ந்தோச‌ம் தாளாம‌ல் சென்ற‌வ‌னுக்கு அவ‌ன‌து அப்பாவின் சைக்கிள் கேரிய‌ரில் சிறிய‌ மூட்டை ஒன்று இருக்க‌ த‌ன‌து அப்பாவிட‌ம் இது என்ன‌ப்பா என‌ கேட்க்க‌ அரிசிடா அம்மாவை உலை வைக்க‌ சொல்லு இனிமே ந‌ம் வீட்டில் க‌ம்ப‌ங்க‌ஞ்சி கிடையாது அரிசி சோறு என்ற‌வுட‌ன்.

வீட்டிற்க்கு ஓடி வ‌ந்து அம்மா அப்பா அரிசி வாங்கியாந்திருகிராக‌. அம்மா நாம‌ளும் ப‌ண‌க்கார‌ர் ஆகிவிட்டோமா என‌ கேட்க்க‌ த‌ன‌து ம‌டியில் உற‌ங்கும் த‌ன‌து ம‌க‌ளின் முக‌த்தை பெருமையுட‌ன் பார்த்து அவ‌ள் க‌ழுத்தில் வ‌ளைந்து கிட‌க்கும் த‌ங்க‌ ச‌ங்கிலியை பார்த்து, பெருமையுட‌ன் ஆமாடா என‌ சொல்லி த‌ன‌து பாட்டியிட‌ம் பிள்ளையை கொடுத்துவிட்டு உலைவைத்தாள். அன்று இர‌வு தன‌து சொந்த‌க்கார‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் கோழிய‌டித்து சாப்பாடு போடா அனைவ‌ரும் என்ன‌டா நாம் பொட்ட‌ பிள்ளை பிற்ந்தால் ஆனால் இவனோ கோழியடித்து சாப்பாடல்லவா போடுகிறான், அப்ப நாமெல்லாம் இவ்வளவு நாளா அந்த பாவத்தை எதற்க்காக செய்தோம் ஆனால் இவனோ கோழியடித்து சாப்பாடல்லவா போடுகிறான், அப்ப நாமெல்லாம் இவ்வளவு நாளா அந்த பாவத்தை எதற்க்காக செய்தோம் என‌ ம‌ன‌ம் வ‌ருந்திய‌வாறு திரும்பி செல்ல‌,

த‌ன் ம‌னைவி த‌ன‌து ம‌க‌ன் என‌ அனைவ‌ரும் ஒர் இட‌த்தில் இருந்து த‌ன‌து ம‌னைவி த‌ன‌க்கு ஊட்ட‌ தான் அவ‌ளுக்கு ஊட்ட‌ வேலுவோ காலையில் பிற‌ந்த‌ த‌ன‌த‌ங்கையின் வாயில் ஒரு அரிசிசேற்றை எடுத்து ந‌சுக்கி ஊட்ட‌ இனிமேல் இப்புவியில் பெண்குழ‌ந்தைக‌ள் ம‌டிய‌க்கூடாது என்று ந‌மக்கு சொல்வ‌து போல் ம‌ண்பானையில் அரிசி சோறு ம‌ல்லிகையாய் உதிர்ந்து இருந்த‌து.

– சரவணா (மார்ச் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *