அம்மா எனும் கடவுள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 8,321 
 
 

அம்மா என்பவள் எந்த ரகம் ? படைத்த கடவுளைத் தான் கேட்க வேன்டும் பிடரியில் தள்ளி குழியில் வீழ்த்துகிறதே, துயரம் . யாரை? மாதுவை அவளை மனசை உனர்வை, இது ஒரு யுகம் கண்ட துயரம் கல்யாணம் கேளிக்கை வாழ்க்கை சந்தோஷ நிலா காணாமலே அவள் வாழ்க்கை இருண்டு போனதன் கடைசி நிலையாகவே இந்த அவல விழுக்காடும் அழுகை வெள்ளமும் அவளுக்கு உண்மையில் எவர்க்கும் ஒரு பொழுதும் அவள் துன்பம் விளைவித்ததில்லை சுடுகாடு பற்றியெரிய விட்டதில்லை மாறாக அன்பு வழிபாடு செய்தே அவள் வாழ்க்கை கழிந்தது அப்படிப்படவளுக்குத்தான் இந்தக் கதி. இருட்டில் இருக்கிறாள்? இது என்ன இருள்? ஒரு பெரும் புத்திர சோகம்.

ஆம் . பரந்து பட்ட உலகத்தில், இது சர்வசாதாரணம். இழப்பு வாழ்க்கையே பழகிப் போன அவளூக்கு, இது என்ன புது இருட்டா? எத்தனை பேர் வந்து மோதினார்கள்? தலை குப்புற வீழ்த்தினார்கள். அப்போதெல்லாம் இவற்றைப் புறந்த தள்ளி மறந்து விட்டு,, தலையில் கிரீடம் சூடிக் கொண்டு எழுந்து நின்று வாழ்ந்து கழித்த அவளின் சத்திய யுகமும், சாந்தி இருப்பும் இன்று எங்கே போயிற்று? உருக்குலைந்து ஒழிந்து மறைந்து போன அவள் மகளின் முகத்தை, அவள் தேஜஸை வடிவை இன்று தேடி என்ன பயன்? அவளை இப்படி நிர்மூலமாக்கி அவள் நிஜத்தை நிழலாக்கி அழகு பார்க்க ஆனந்தம் கொண்டு சந்தோஷக் களிப்பாட யாருக்கு மனம் வந்தது? எங்கே போனாள் அந்தக் குற்றாவாளி?

அவளை இப்போது தேடிக் கண்டு பிடித்துத் தண்டிக்கத்தான் முடியுமா? அப்படிக் கடவுள் அவளைத் தண்டித்து இருந்தாலாவது மாதுவிற்கு மனம் ஆறும். இப்படி அவள் மட்டுமல்ல ஒரு குற்றாவாளியோடு தான் அவள் வாழ்க்கை நரகத்தில் கழிந்தது அது மறைந்து போன கதை சாவைப் பற்றி நிலையாமை பற்றி சிந்திக்காமல் அவளைக் கருவறுத்துக் காட்டில் தள்ளி சந்தோஷம் கொண்டாடித் தீர்த்து மறைந்து விட்ட, கணவரையே அன்பு வழிபாடு செய்வதன் மூலமே அவரை வாழ்விக்க வந்த தேவதை அவள் அது புரியாமல் அவர் அவளை இருட்டில் தள்ளிய கதைக்கு இது முடிவல்ல முற்றுப் புள்ளி தான். எது? மனநலமே பாதித்து வீழ்ந்து கிடந்த மகளை, முப்பது வருடங்களுக்கு மேலாக அவளை இருட்டில் விடாமல் நெஞ்சில் சுமந்து வாழ்ந்து காட்டிய அவளுக்குத் தான் இந்தக் கதி? இன்று அப்படி என்னதான் நடந்து விட்டது அவளுக்கு ?

ஓவென்று கதறி அழ வேன்டும் போல் ஒரு நிலமை.. அழுதாள். இன்னும் மனம் ஆறவில்லை . ஆறாத, ரண களமாய் , இப்படி எத்தனையோ வலிகள் கடைசியில் இந்த மகள் இழப்பு ,முப்பது வருடங்களாய், கட்டிக் காத்த பொக்கிஷம் அவள். பொக்கிஷமல்ல, புரையோடி விட்ட நிழல். இரை விழுங்கும் மனிதப் பிசாசால் நேர்ந்த, கதி. இந்த சாத்தானைக் கேள்வி கேட்கவே ஆளில்லாமல் போன கொடுமையை, யாரிடம் சொல்லி அழவது?அழுதாலும் தூக்கி நிறுத்த, ஆளில்லாமல், இந்த உலகம் வெறிச்சோடிக் கிடக்கிறாதே. இது சம்சாரித்துவ அணுகு முறையால் நேர்ந்த கதி. முன்பே அவள் ஒரு தபஸ்வினி மாதிரி ஆகியிருக்கலாம். எங்கே விட்டார்கள்? வாழ்க்கை நிழல் துரத்த, வானமே பொய்த்துப் போக, அவள் ஓடிக் கொண்டேயிருக்கிறாள்.

இப்போது இருட்டிலே தான் தலை குப்புற வீழ்ந்து கிடக்கிறாள். வானமே பொய்த்துப் போனது. வாழ்கையும் வரண்டது. பாலைவனமாய், பற்றியெரிகிறது .சுற்றமே பொய்த்திருக்க. சூழும் நிழல் வருத்துக்கிறது . இனி மகளின் எழுச்சியில் புது வருகையில் தான் அவளின் வாழ்க்கை தொடரும். யாரோ இருட்டில் அவள் முகத்தைத் தேடுகிறார்கள் கணனித் திரை வெளிச்சம் கொண்டிருக்க, அங்கே லன்டனிலிருந்து அவள் கடைசி மகன் பாபு வின் முகம் பளிச்சென்று தோன்றுகிறது தொடர்ந்து அவன் குரல் அழுத்தமாக வந்தது.

அம்மா கொஞ்சநாளைக்கு அவள் அங்கை இருக்கட்டும் பிறகு கூட்டி வந்து வீட்டிலை வைச்சிருங்கோ என்றான் அவன் அன்பு பீறிடும் குரலில்.

அவள் மெளனமாகத் தலையாட்டினாள் . அழுகை நெஞ்சை அடைக்க ஒன்று ம் பேச வரவில்லை. சாந்தியை அது தான் அந்த மனநலம் கெட்ட நோயாளி மகளை இத்துணை காலமும் கஷ்டம் பாராமல் நெஞ்சில் சுமந்து வாழ்வித்து விட்டு ஆசுபத்திரியிருந்து வீட்டிற்குக் கூட்டி வராமல் அதுவும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வர, எப்படி மனம் வந்தது அவளுக்கு? உண்மையில் இது நடக்கக் கூடிய காரியமா? இல்லையே.

அப்படியானால் இது இந்த வினைக் கழிவு எப்படி நடந்தேறியது? எல்லாம் கனவில் நடந்த கதை தான். அவளுக்கு ஒரு கனவு வாழ்க்கை வாய்த்தது. இது கனவல்ல உதிரம் கொட்ட அந்த நெருப்பு மேடையை அவள் கடந்து வந்தது பொய்யா?நெருப்பு சுடும் என்ரு தெரிந்தும் அவல் வாழ்ந்து கழித்தது ஒரு பாவப் பட்ட கணக்கின் முடிவில்லா சோகக் கதை இது மடிவல்ல முற்றுப் புள்ளி தான் .மனநலம் கெட்ட தன் மகளை, அவளின் சிறு சந்தோஷத்துக்காக அவளை வீட்டிற்கு அழைத்து வந்து ஆறுதல் கொள்ளவும் முடியாமல், இந்த நரகப் படுகுழிதான், அவள் பாவப்ப்ட்ட திருமண வாழ்க்கையின் கடைசி முடிவா?

இந்தக் கல்யாண கேளிக்கை சங்கதியெல்லாம் அவளைப் பொறுத்தவரை கை கூடாமல், வெறும் கானல் இருப்பாகவே கழிந்து போனது எது கானல்,? இரு துருவங்களாய் வாழ்ந்த கதைஅன்பிலே புடம் போடப் பட்ட ஓர் ஆதர்ஸ தேவதை அவள் என்று அறியாமல், வெறும் சதை இன்பம் ஒன்றுக்காகவே அவள் புருஷனுக்கு அவள் ஒரு பலிக் கடாவாகவே ஆகி விட்ட கதையின், ஒரு பின் விளைவாகவே இன்று அவள் மகள் உடைந்து நொறுங்கிப் போன நடைப் பிணமாகவே ஆகி விட்டிருந்தாள் அவள் முன்னால் காடு பற்றி எரிகிறது.

காட்சியும் நின்றது. இந்த அவலம் மன விழுக்காடு எதனால் நேர்ந்தது? யாரால் வந்தது ? அன்புக்கு பஞ்சமாகிப் போன உலகில் இதுவல்ல, இன்னமும் இது போல் நிறையக் கொடுமைகள் நடக்கலாம். வேதம் சொன்னாலும் விளங்காத உலகில், வேதம் ஓதவும் சக்தியற்றுப் போன வெறும் ஜடமாகத் தான் அவள் கதை காற்றில் கரைந்து உருகி மறைகிறது. இது நிற்க வேண்டுமானல் வேதம் ஓதத் தகுந்த ஒரு தேவதையாகத் தான் அவள் புது அவதாரமே எடுத்து எழுந்து, நிற்க வேண்டும் படிக்க வேண்டும். வேதம். பழக வேண்டும். ஞானம் ஞான உதயத்தில் உச்சி குளிர வாழ்ந்து சிறக்க வேண்டும். இது நடக்குமா என்று தெரியவில்லை. இந்த சம்சாரித்துவ இழப்புகளே சாக்கடையில் குளித்த மாதிரித் தான். அவள் கங்கை குளித்துக் காட்சி மாற வேண்டுமானல், அவள் ஒரு தாயாகவல்ல . சைதன்ய சாட்சி புருஷனாக, உடலை விட்டுப் போனால் தான் இதெல்லாம் நடந்தேறும். தான் உடலல்ல ,மனமல்ல உடன் தோன்றிய புலன்களுமல்ல. அப்படியானால் யார் அவள்? எப்பேர்ப்பட்ட மகிமை பெற்ற ஒரு சாட்சி புருஷன் அவள். சைதன்ய இருப்பு. இதையெல்லாம் மறந்து, விட்டு வெறும் உலக இருப்புக்காகவும், இந்தக் கனவு வாழ்க்கைக்காகவும் உயிர் கரைந்து மனம் வருந்துதல் தகுமோ? நான் ஒரு சைதன்ய சாட்சி தேவதை என்ற நினைப்பிலே அவளின் கவலைக் கறைகளெல்லாம், கரைந்து விட ,கங்கை குளித்து விட்ட களிப்பில் , அதுவாகவே மாறிப் போன இருப்பில் ஒன்றுமே நடக்காத மாதிரி இப்போது அவளின் சாந்நித்ய தவக் கோலம். இதை அவளுக்கு கையளித்து விட்ட பெருமையில் அவளின் ஞான குரு அவளின் ஆன்மீக வழி காட்டி வானத்திரையில் அவரின் பளிங்கு திருமுகம் அவரின் அந்தத் தரிசன வழிபாடு ஒன்றே போதும் அவளை ஒளிப் பிரகாசமான ஒரு தேவதையாக மீண்டும் எழ வைக்க, அது வே நடந்தேறி விட்ட களிப்பில் இப்போது அவள் இந்த மண்ணிலல்ல . வானத்திலே தான், ஒரு துருவ நட்சத்திரம் மாதிரி .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *