அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 4,357 
 

அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 | அத்தியாயம்-27

சரோஜா மெல்ல தன் கண்ணைத் திறந்து “நான் ரமேஷ் அமெரிக்காவிலே படிச்சுட்டு சென்னை க்கு வருவான்.அவன் நாம பாக்கற ஒரு நல்ல பிராமணப் பொண்ணே பாத்து கல்யாணம் பண்ணீப்பா ன்.நான் மாட்டுப் பொண்ணோடவும்,பேரன் பேத்திகளோடவும் சந்தோஷமா இந்த ஆத்லே இருந்து வறப் போறேன்னு எத்தனே நாள் கனவு கண்டுண்டு வந்து இருந்தேன்ன்னு உங்களுக்குத் தெரியுமா. இப்போ என் கனவு எல்லாம் பகல் கனவா போயிடுத்தே.இனிமே ரமேஷ் எங்கே சென்னைக்கு வறது. இங்கே நான் பாக்கற பொண்ணே கல்யாணம் பண்ணீக்கறது.நான் என் பேரன்,பேத்திகளை எல்லாம் பாக்கறது.ஒன்னும் நடக்கப் போறது இல்லே.ரமேஷ் இப்படி ஒரு அமெரிக்கப் பொண்ணே கல்யாணம் பண்ணீப்பான்னு நான் நினைக்கவே இல்லே.என் ஆசைகள் எல்லாத்லேயும் மண்ணை அள்ளீப் போட்டுட்டான்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது,மறுபடியும் மயக்கம் வந்து சோபாவிலே சாய்ந்து விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து சரோஜா தன் கண்களை மெல்ல திறந்து “நான் உங்க கிட்டே ரமேஷ் அமெரிக்கா போக வேணாம்.அவன் இள வயசுப் பையன்.அங்கே போனால்,அங்கே இருக்கிற வாளேப் பாத்தா அவன் புத்தி பேதலிக்கும்ன்னு நான் படிச்சு,படிச்சுச் சொன்னேனே கேட்டேளா.நீங்கோ என்னவோ ‘சரோஜா,ரமேஷ் ஆசைப் படறா மாதிரி அவன் அமெரிக்கா போய் MS பண்ணிட்டு வரட் டுமே.ரெண்டு வருஷம் தானே.கண்ணே மூடி கண்ணேத் தோறக்கதுக்குள்ளே ஓடிப் போயிடும். எனக்கு என்னவோ அவன் ஆசை பட்டா மாதிரி பணறது சரின்னுப் படறது’ன்னு சொன்னேளே. இப்ப முதலுக்கே மோசமாயிடுத்தே.ரமேஷ் நம்ம கையை விட்டே போயிட்டானே.இனிமே நாம என்னப் பண்ணப் போறோம் சொல்லுங்கோ” என்று சொல்லும் போது அவள் மறுபடியும் மயக்கம் வந்து சோபாவிலே சாய்ந்து விட்டாள்.

பயந்துப் போய் பரமசிவம் தன் மணைவியின் கைகளைப் பிடித்து “சரோஜா,சரோஜா” என்று உரக்கக் கத்தினார்.

சரோஜா மறுபடியும் தன் கண்களை மெல்லத் திறந்து “நமக்கு ரமேஷ் ஒரே பையன்.இப்ப அந்த ஒரு பையனும்,நமக்கு இல்லேன்னு ஆயிடுத்……..” என்று சொல்லும் போது அவள் மறுபடியும் கண் களை மூடிக் கொண்டு ‘சோபாவில்’ சாய்ந்து விட்டாள்.“சரோஜா, நீ உன் கண்ணே மூடிண்டு ‘சோபா’லே சாய்ஞ்சுட்டயே.சரோஜா உன் கண்ணேத் தொறந்து என்னேப் பாரு” என்று கத்திக் கொண்டே சரோஜாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு இருந்தார் பரமசிவம்.

ஐந்து நிமிஷத்துக்கு எல்லாம் சரோஜா உடம்பு ‘ஜில்’ என்று ஆகி விட்டது.

பயந்துப் போய் பரமசிவம் வரதனைப் பார்த்து “வரதா,மூனு ‘ப்லாட்’ தள்ளி ஒரு டாக்டர் இருக்கார்.நான் அவரே அவசரமா கூப்பிடறேன்னு சொல்லி,நீ உடனே அவரே அழைச்சுண்டு வா” என்று கத்தினார்.

வரதனும் உடனே ஓடிப் போய் அந்த டாக்டர் கிட்டே நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி, அவரை கூடவே அழைத்து வந்தான்.

அந்த டாக்டர் சரோஜாவை ‘ஸ்டெதஸ்கோப்பை’ வைத்து நன்றாக பரிசோதனைப் பண்ணி பார்த்தார்.மீண்டும். மீண்டும் அவர் சரோஜாவை பரிசோதனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.ஐந்து நிமிடம் ஆனதும் அந்த டாக்டர் “சாரி,மிஸ்டர் பரமசிவம்.ஷீ இஸ் நோ மோர்.ஷீ மஸ்ட் ஹாவ் ஹாட் எ மாஸிவ் ஹார்ட் அட்டாக்” என்று சொல்லி விட்டு தன் கழுத்திலேப் போட்டுக் கொண்டு இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ கழட்டினார்.கொஞ்ச நேரம் இருந்து விட்டு, டாக்டர் அவருடைய ‘ப்லாட்டு’க்கு கிளம்ப ரெடி ஆனார்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட பரமசிவத்திற்கு தூக்கி வாரிப் போட்டது.

”என்ன டாக்டர் என் சரோஜா என்னே விட்டுட்டுப் போயிட்டாளா.அவளுக்கு ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ வந்துடுத்தா’.இனிமே நான் என்ன பண்ணப் போறேன்.சரோஜா என்னைப் விட்டு போனப் புறம்,நான் ஒரு ‘தனி’ மரம் ஆயிட்டேனே.சரோஜா என்னை விட்டு இவ்வளவு சீக்கிரமா போயிடுவா னான்னு நான் கனவிலே கூட நினைக்கலையே” என்று வாய் விட்டுக் கதறி அழுதார்.

அந்த டாகடர் பரமசிவத்துக்குத் தேத்தறவு சொல்லி விட்டு அவர் ‘ப்லாட்டு’க்குப் போனார்.

சுந்தரம் பரமசிவம் கிட்டே வந்து “அழாதீங்கோ மாமா.நீங்கோ இப்படி வாய் விட்டு கதறி அழுததே நான் பாத்ததே இல்லே.உங்க கஷ்டம் எனக்கு நன்னா புரியறது.உங்க கூட நானும் வரதனும் இருந்து வருவோம்.எங்க ரெண்டு பேரைப் பாத்து நீங்கோ கொஞ்சம் மனசு நிம்மதியா இருந்துண்டு வாங்கோ.ரமேஷ் இப்படி ஒரு காரியத்தேப் பண்ணியே இருக்கக் கூடாது.எனக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே.உங்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டமா இருக்கும்” என்று சொன்னார்.

உடனே வரதனும் “ஆமாம் அத்திம்பேர்.அக்கா இப்படி அகாலமா நம்மே விட்டு போயிடுவா ன்னு நானும் கொஞ்சம் கூட நினைக்கலே.ரமேஷ் மேலே உயிரையே வச்சுண்டு இருந்தா என் அக்கா. ரமேஷ் பண்ணதே தான் அக்காவாலே தாங்கிக்க முடியலே.ரமேஷ் இனிமே சென்னைக்கு வந்து அக்கா ஆசைப் பட்ட மாதிரி,ஒரு பொண்ணே கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு தெரிஞ்சதும் அவளுக்கு இந்த ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’வந்து இருக்கு.அவளுக்கு ஏற்கெனவே அவ ‘ஹார்ட்’ ரொம்ப ‘வீக்கா’ இருந்து இருக்கும்போல இருக்கு.சுந்தரம் மாமா சொன்னது போல நாங்க ரெண்டு பேரும் உங்க கூடவே இருந்து வறோம்.நீங்கோ கவலைப் படாம இருந்து வாங்கோ.நீங்கோ ஒரு தனி மரம் இல்லே.நானும் சுந்தரம் மாமாவும் உங்க கூட உங்க கடைசி காலம் வரைக்கும் இருந்துண்டு வருவோம் அத்திம்பேர் ”என்று சொல்லி பரமசிவத்தின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான்.

அவருக்கு தேத்தறவு சொல்லிக் கொண்டு வந்து தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் துண்டினால் துடைத்துக் கொண்டான் வரதன்.

சுந்தரமும்,வரதனும் ஒரு ‘ஐஸ்’ பெட்டிக்கு ஆர்டர் பண்ணினார்கள்.

ஆர்டர் பண்ண ‘ஐஸ்’ பெட்டி வந்ததும்,வரதன் ஓடிப் போய் அவர்கள் வசித்து வந்த தெருக் கோடியிலே இருந்த பூக் கடைக்குப் போய்,நாலு ரோஜாப் பூமாலைகளை வாங்கிக் கொண்டு வந்து, ரெண்டு மாலையை சுந்தரத்திடம் கொடுத்து அக்கா ‘ஐஸ்’ பெட்டி மேலே போடச் சொல்லி விட்டு, அவன் அழுதுக் கொண்டே ரெண்டு பூமலையை அக்காவின் ‘ஐஸ்’ பெட்டி மேலே போட்டான். சுந்தரம் அழுதுக் கொண்டே வரதன் கொடுத்த ரோஜா மாலைகளை ‘ஐச் பெட்டி’ மேலே போட்டார்.

ரெண்டு பேரும் சரோஜா ரெண்டு பேரும் சரோஜாவின் ‘பூத உடலுக்கு’ கையைக் கூப்பி வணக்கம் சொன்னார்கள்.

விஷயம் மத்த ப்லாட்டுகளுக்கு தெரிய வரவே,அந்த ப்லாட்டில் இருந்தவர்களும், பரமசிவத் தின் நண்பர்கள் பரமசிவத்தின் ‘ப்லாட்’டுக்கு வந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் சரோஜாவின் ‘ஐஸ் பெட்டி மேலே அவர்கள் கொண்டு வந்து இருந்த ரோஜாப்பூ மாலையைப் போட்டு விட்டு,சரோஜா ‘பூத உடம்புக்கு’ மா¢யாதை செலுத்தி விட்டு, பரமசிவத்தை துக்கம் விசாரித்து விட்டு,கொஞ்ச நேரம் இருந்து விட்டுக் கிளம்பிப் போனார்கள்.

விஷயம் கேள்விப் பட்டு பரமசிவத்தின் சக வக்கீல்களும்,ஜூனியர் வக்கீல்களும், சரோஜாவின் ஆபீஸ் தோழிகள் எல்லோரும் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து சரோஜாவின் ‘ஐஸ்’ பெட்டி மேலே, அவர்கள்கொண்டு வந்த ரோஜாப் பூ மாலையைப் போட்டு விட்டு,சரோஜா ‘பூத உடம்புக்கு’ மா¢யாதை செலுத்தி விட்டு,பரமசிவத்தை துக்கம் விசாரித்து விட்டு,கொஞ்ச நேரம் இருந்து விட்டுக் கிளம்பிப் போனார்கள்.

ரமேஷ் விடாமல் அம்மா அப்பாவுக்கு ‘போன்’ பண்ணிக் கொண்டே இருந்தான். ஆனால் பரமசிவம் அந்த ‘போனை’ எடுத்துப் பேசவே இல்லை.

ஒரு மணி நேரம் அழுது விட்டு பரமசிவம் வரதனைக் கூப்பிட்டு “வரதா,வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணீ சரோஜா ‘போய் விட்ட’ சமாசாரத்தேச் சொல்லி அவரை உடனே வரச் சொல்லு” என்று சொன்னவுடன்,வரதன் ஆத்து வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணி “வாத்தியார்,என் அக்கா ‘திடீர்’ன்னு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எங்களே எல்லாம் தவிக்க விட்டுட்டு ‘கண்ணே மூடிட்டா’.அத்திம்பேர் உங்களே உடனே எங்க ஆத்துக்கு வரச் சொன்னார்” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

“அப்படியா வரதா,கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே.நான் இன்னும் ஒரு அரை மணி நேரத்லே உங்க ஆத்துக்கு வந்து விடறேன்.உங்க அத்திம்பேரை ஜாக்கிரறதையா பாத்துண்டு வா. அவருக்கு வயசாயிண்டு வறது.அவராலே இந்த ‘துக்க சமாசாரத்தே’ தாங்கிக்க முடியாது” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார் வாத்தியார்.

ஒரு மணி நேரம் கழித்து ஆத்து வாத்தியார் ஆத்துக்கு வந்ததும்,அந்த வாத்தியாரை வைத்துக் கொண்டு பரமசிவம் அழுதுக் கொண்டே தன் தர்ம பத்தினி சரோஜாவுக்கு எல்லா ‘காரியங்களையும்’ பண்ணீனார்.

பரமசிவம் அடுத்த பன்னிரண்டு நாட்களுக்கும் எல்லா காரியங்களையும் ‘கிரமமாக’ப் பண்ணீ முடித்தார்.

சுந்தரம் தன் வீட்டுக்குப் போய்,அடுத்த பன்னிரண்டு நாட்களுக்கும் ரெண்டு வேளையும் சாப்பாடும்,ரெண்டு வேளை ‘காபி’யும்,‘டிபனு’ம் பண்ணீக் கொண்டு வந்துக் கொடுத்தார்.

பதி மூனாம் நாள் ஆத்து வாத்தியார் பரமசிவம் இருந்து வந்த ‘ப்லாட்’டுக்கு ‘புண்யாவசனம்’ பண்ணீ விட்டு,எல்லோருக்கும் மூன்று உத்தரணி ‘புண்யாவசன ஜலத்தை’க் கொடுத்து விட்டு, ‘ப்லாட்’ பூராவையும் ‘புன்யாவசன ஜலத்தை’ நன்றாக தெளித்தார்.

வாத்தியார் ஆத்தை ‘புண்யாவசனம்’ பண்ண பிறகு,சுந்தரம் அந்த ‘ப்லாட்டி’ல் சமையலை கவனித்து வந்துக் கொண்டு இருந்தார்.வரதனும் வழக்கம் போல ‘ப்லாட்’க்கு வந்து, வீட்டுக்கு வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

பரமசிவம் ‘கோர்ட்டு’க்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

ரமேஷ் தினமும் விடாமல் ஒரு பத்து நாளுக்கு அம்மா,அப்பாவுக்கு ‘போன்’ பண்ணிக் கொண்டு இருந்தான்.ஆனால் அவன் அம்மா,அப்பாவிடம் இருந்து அவனுக்கு பதிலே கிடைக்க வில்லை.அவன் மனம் ஒடிந்துப் போனான்.

’நம்ம பேர்லே அவாளுக்கு ரொம்ப கோவமா இருக்கும்.அதான் அவா ‘போனே’ எடுக்க மாட்டேங்கறா.நாம பண்ணது தப்பு தான்.ஆனா நாம பண்ணீட்டோமே.இனிமே நாம எப்படி நம்ம அம்மா,அப்பா கிட்டே மறுபடியும் ‘போன்’ பண்ணப் போறோம்.அவா கிட்டே இனிமே என்னால் பேசவே முடியாதா’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டான்.

அவனுக்கு அவன் மேலேயே கோவம் வந்தது.பொறுத்துக் கொண்டு வந்தான்.அவன் கண்க ளில் கண்ணீர் மிதந்தது.

‘ரெஸ்ட் ரூமில்” இருந்து வெளீயே வந்த ஜூலி ரமேஷ் கண்களில் கண்ணிர்ர் தளும்புவதைப் பார்த்து “என்ன ஹனி,ஏன் உன் கண்கள்ளே கண்ணீர்.உன் அம்மா அப்பா உடம்பு சரி இல்லையா. இல்லே வேறே ஏதாவது ‘சாட் நியூஸ்’ ஸா’”என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

ஜூலி சுவாதீனமாக ரமேஷ் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்து விட்டாள். ஜூலி தன் கண்களைத் துடைத்து விட்டதற்கு “ரொம்ப தாங்க்ஸ் ஜூலி” என்று ரமேஷ் சொன்னான்.
கொஞ்ச நேரம் ஆனதும் ”‘சாட் நியூஸ்’ ஒன்னும் இல்லே.நான் அவங்க கிட்டே உன்னேக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கேன்ன்னு சொன்னேன்.என் அப்பா கோவம் வந்து,என்னைப் பாத்து ‘ரமேஷா,நீ ஒரு அமெரிக்கப் பொண்ணையா கல்யாணம் பண்ணீண்டு இருக்கே,உனக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன.ஆசாரமான குடும்பத்லே பிறந்த நீ இப்படி ஒரு ‘கேவலமான காரியத்தே’ பண்ணுவேன்னு நாங்க கனவிலே கூட நினைக்கலே.நீ எங்களுக்கு பொறந்த பிள்ளையே இல்லேடா. இந்த ‘போன்’ காலோட’ நமக்கு இருந்த உறவு முறிஞ்சிப் போச்சுடா.இனிமே எங்களே உன் அப்பா, அம்மான்னு கூப்பிடாதே.எப்போ எங்களேக் கேக்காம நீ கல்யாணத்தே பண்ணீண்டு இருக்கியோ இனிமே இந்த ஆத்துக்கு உள்ளேயே நீ வறாதே’ன்னு கோவமா சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட் பண்ணீட்டார் “ என்று ஆங்கிலத்தில் வருத்தத்துடன் சொன்னான்.

ஜூலி கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “ரமேஷ்,எனக்கு ஒன்னு புரியவே இல்லே.நீ இங்கே உன் F1 விசாவை குடுத்துட்டு,H1 விசா வாங்கிக் கிட்டு,மூனு வருஷமோ,இல்லே நாலு வரு ஷமோ,இந்த கம்பனியிலே வேலே செஞ்சு வந்து,அப்புறமா இந்தக் கம்பனி உனக்கு Green Card க்கு ‘ரிகமண்ட்’ பண்ணீ,அந்த ‘ரெகமன்டேஷனை’ ’இமிக்ரேஷன் டிபார்ட்மெண்ட்’ ‘அப்ரூவ்’ பண்ணீன பிறகு தான்,உனக்கு Green Card கிடைக்கும்.நீ அந்த Green Cardலே ரொம்ப வருஷம் வேலே பண்ணீன பிறகு தான்,நீ ‘அமெரிக்கன் சிடிசன்ஷிப்புக்கு’ மறுபடியும் அப்ளை பண்ணனும்.அந்த ‘இமிக்ரேஷன் டிபார்ட்மெண்ட்’ உன் ‘அப்ளிகேஷனை’ ‘அப்ரூவ்’ பண்ணீன பிறகு தான்,நீ ஒரு ‘அமெரிக்கன் சிடிசன்’ ஆக முடியும்.ஆனா நீ என்னை கல்யணம் பண்ணிக் கிட்ட நாள்ளே இருந்து, நீ ஒரு ‘அமெரிக்கன் சிடிசன்’ ஆயிட்டயே.இதே நினைச்சு உங்க அம்மா அப்பா சந்தோஷபடாம,ஏன் உன்னே திட்டினாங்க.எனக்கு உங்க அம்மா,அப்பாவே புரிஞ்சிக்கவே முடியவிலையே.எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ரமேஷக் கட்டிக் கொண்டு கேட்டாள்.

ரமேஷ்க்கு என்ன பதில் சொல்றது என்று புரியாமல் கொஞ்ச நேரம் திண்டாடினான்.

“ஜூலி நீ சொல்றது ஒரு விதத்தில் ரொம்ப சரி.ஆனா எனக்கு அவா சொல்றதும் ரொம்ப சரியா படறது.ஆனா அவா சொன்னது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.அதான் என் கண்கள்ளே கண்ணீர் வந்தது“ என்று ரமேஷ் சொன்னதும்,” ’கம் ஆன் ரமேஷ்’ எனக்கு நீ சொல்றது கொஞ்சம் கூட சரியாப் படலே.எப்படி ரெண்டு பேரும் சொல்றது சரியாம் இருக்கும்.’லாஜிக்’ படி ஒருத்தர் சரியா இருக்கணும்.இன்னொருவர் தப்பா தானே இருக்கணும்.இல்லையா.நீயே சொல்லு” என்று கேட்டு ரமேஷை விடாம நச்சரித்துக் கொண்டு இருந்தாள் ஜூலி.அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான் ரமேஷ்.

”ஜூலி,இப்போதைக்கு இந்த ‘சப்ஜெக்ட்டை’ விடு.வா நாம ‘மாலு’க்கு போய் வரலாம்.அப்புறமா இந்த ‘சப்ஜெக்ட்டை’ப் பத்தி பேசலாம்” என்று சொன்னவுடன்,ஜுலி “ஓ.கே.வா போகலாம்” என்று சொல்லி விட்டு தன் ‘டிரஸ்ஸை’ மாற்றிக் கொள்ளப் போனாள்.

’மாலு’க்குப் போகலாம்’ என்று கூப்பிட்டால் ஜூலி நிச்சியமாக வருவாள் என்று ரமேஷ்க்கு நன்றாகத் தெரியும்.

‘மாலு’க்குப் போவது என்றால் ஜூலிக்கு ‘ஜிலேபி’,’குலாப்ஜான்’,’மைசூர் பாக்கு’ சாப்பிடுவது போல.அதனால் தான் ரமேஷ் உடனே அந்த ‘அஸ்த்திரத்தை’ப் போட்டு அவளை ஓயப் பண்ணீனான் இல்லாவிட்டால் விடாமல் அவ கேட்டதையே கேட்டு நச்சரித்துக் கொண்டு வருவாள் என்று ரமேஷூ க்கு நன்றாகத் தெரியும்.

ஜூலி அப்படிப் பட்ட குணம் கொண்டவள் தான்.

ஜூலியின் இந்த குணத்தை ரமேஷ் அவளை கல்யாணம் பண்ணிக் கொண்ட அடுத்த நாளே தெரிந்துக் கொண்டான் ரமேஷ்.

பல சந்தர்ப்பங்களில் அவள் நச்சரிப்பை எப்படியோ சமாளித்துக் கொண்டு வந்தான் ரமேஷ்.

ரமேஷூம் தன் ‘டிரஸ்ஸை’ மாற்றீக் கொண்டு ஜூலியுடன் மாலுக்கு காரில் போனான்.

வழி நெடுக “ரமேஷ்,வெளி நாட்டிலே இருந்து அமெரிக்கா படிக்க வர எல்லா ‘ஸ்டூடன்ஸ¥ம்’, MS ‘பாஸ்’ பண்ண பிறகு,அமெரிக்காவிலே ஒரு ‘சிட்டிஸன்’ஆகணும்ன்னு ஆசைப் பட்டு,அதுக்காக பல வருஷங்கள் ‘வெயிட்’ பண்ணீக் கிட்டு வறாங்க.ஆனா நான் உன்னே கல்யாணம் பண்ணீண்டு உன்னே சுலபமா ஒரு ‘சிட்டிஸன்’ ஆக்கி இருக்கேனே.உன் அம்மாவும்,அப்பாவும் இதே நினைத்து ரொம்ப சந்தோஷப் படணும்.இல்லையா சொல்லு” என்று மறுபடியும் ஆங்கிலத்தில் கேட்டதும்,ரமேஷ் பதில் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டான்.

’நீ எங்களுக்குப் பொறந்த பிள்ளையே இல்லேடா.இந்த ‘போன் காலோட’ நமக்கு இருந்த உறவு முறிஞ்சிப் போச்சுடா.இனிமே எங்களே உன் அப்பா,அம்மான்னு கூப்பிடாதே. எப்போ எங்களேக் கேக்காம நீ கல்யாணத்தே பண்ணீண்டு இருக்கியோ,இனிமே இந்த ஆத்துக்கு உள்ளேயே நீ வறாதே’ன்னு அப்பா சொன்ன வார்த்தைகள் ரமேஷ் காதில் விடாமல்,¡£ங்காரம் பண்ணிக் கொண்டு இருந்தது.

அவன் தன் மனதில் ’அப்பா சொன்னதில் ஒரு தப்பும் இல்லே.நாம அவா கிட்டே சொல்லிட்டு வந்தது ஒன்னு.ஆனா பண்ணது வேறே.எந்த அம்மா.அப்பாவுக்கு தன் ஒரே பையன் இப்படி பண்ணா கோவம் வறாம இருக்கும்.அவா கோவம் ரொம்ப நியாயம் தான்.’தப்பு’ என் பேர்லே தானே இருக்கு’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டான்.

ரமேஷ் அப்பா சொன்ன வாரத்தைகளால் வருத்தப் பட்டுக் கொண்டு வந்தானே ஒழிய,அதை வெளிக் காட்டிக் கொள்ளமல் ஜூலியுடன் சந்தோஷமாக குடித்தனம் பண்ணீ வந்தான்.

ஆனால் அவன் உள் மனம் மட்டும் ‘நாம எப்படியாவது கொஞ்சம் வருஷம் ஆனதும் அமெரிக் காவை விட்டுட்டு சென்னைக்குப் போய்,அப்பா,அம்மா கிட்டே மன்னிப்புக் கேட்டு,அவா கூட கொஞ்ச வருஷம் இருந்துண்டு வந்து,அவா ரெண்டு பேரையும் சந்தோஷமா வச்சுண்டு வரணும். அவா ரெண்டு பேரும் நம்மே பெத்த அப்பா,அம்மா இல்லையா.அவா சந்தோஷம் நமக்கு முக்கியம் இல்லையா.அது ஒரு பிள்ளையின் கடமை ஆச்சே’ என்று அடிக்கடி நினைத்து வந்தது.

ஜூலி ரமேஷைப் பார்த்து” ரமேஷ்,எனக்கு சிக்கிரமா ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.எனக்கு குழந்தையை வளக்க ரொம்ப ஆசை.நாம் ரெண்டு பேரும் அதுக்கு ‘சீரியஸ்ஸா ‘ட்ரை’ பண்ணி வரலாமா.நீ இதுக்கு ஒத்துக்கணும் ரமேஷ்.நீ ‘ரிப்யூஸ்’ பண்ணக் கூடாது என்ன“ என்று ஆங்கிலத்தில் கேட்டு ரமேஷை கட்டிக் கொண்டாள்.

ஜூலி சொன்னதைக் கேட்ட ரமேஷ்க்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்ன பேசறே ஜூலி.எல்லா ‘கப்பல்ஸ்’ஸூம் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமோ, மூனு வருஷமோ ஜாலியா தனியா இருந்துண்டு வந்து,‘லைப்பை’ நன்னா ‘எஞ்சாய்’ பண்ணி விட்டு, அப்புறமா ஒரு குழந்தையைப் பெத்துக்குவாங்க.நீ என்னமோ இந்த வருஷமே உனக்கு ஒரு குழந்தே வேணும்ன்னு சொல்றே.நீ சொல்றதே கேக்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்று ஆங்கிலத் தில் சிரித்துக் கொண்டே சொன்னான் ரமேஷ்.

“யார் எப்படி வேணுமானாலும் இருந்துக் கிட்டுப் போகட்டும்.எனக்கு இந்த வருஷமே ஒரு குழந்தை வேணும்.நான் கிட்டத் தட்ட பன்னிரண்டு வருஷமா கருத் தடை மாத்திரை போட்டுக் கிட்டு வறேன்.நான் அதே உடனே நிறுத்தியாகணும்.இந்த ஊர் டாக்டர்கள் எல்லாம் இள வயசு பெண் களைப் பார்த்து ‘நீங்க கருத் தடை மாத்திரைகளை ரொம்ப வருஷம் உபயோகப் படுத்திக் கிட்டு வரக் கூடாது.அப்படி உபயோகப் படுத்தி வந்தா ‘யூட்டரஸ்’க்கு நல்லது இல்லே.கல்யாணம் ஆன உடனே ஒரு குழந்தையைப் பெத்துக்கறது தான் நல்லதுன்னு ‘அட்வைஸ்’ பண்ணீனதை நான் ஒரு ‘சயன்ஸ் ஜர்னல்லே’ படிச்சேன்.அதான் நான் அப்படி சொன்னேன்” என்று தான் சொன்னது ‘சரி’ என்று ஆங்கிலத்தில் வாதாடினாள் ஜூலி.
ரமேஷ் அதற்கு பதில் ஒன்னும் சொல்லாமல் இருந்தான்.

“ரமேஷ்,நான் இத்தனை முக்கியமான சமாசாரத்தே உன் கிட்டே சொல்றேன்.ஆனா நீ எனக்கு பதில் ஒன்னும் சொல்லாம சும்மா இருக்கியே.நான் சொன்னதே நீ ‘அக்¡£ ’பண்றயா,இல்லே ’டிஸ்அக்¡£’ பணறயா” என்று விடாமல் ஆங்கிலத்தில் கோவமாகக் கேட்டாள் ஜூலி.

அவள் கோவமாக இருப்பதைப் பார்த்தான் ரமேஷ். ’சரி,இப்ப நாம ஜூலியை சமாதானைப் படுத்தியே ஆகணும்.இல்லாட்டா அவ விடாம கேட்டுண்டே இருப்பா’ என்று நினைத்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் ‘நான் இதிலே சொல்றதுக்கு என்ன இருக்கு ஜூலி.நான் அந்த ‘சயன்ஸ் ஜர்னலை’ படிச்சது இல்லே.தவிர இது ‘லேடீஸ்’ விஷயம்.நான் ‘அக்ரீ’ பண்றதுக்கும், ‘டிஸ் அக்ரீ’ பணறதுக்கும் இதிலே என்ன இருக்கு.நீ சொன்னா மாதிரியே நாம ‘ட்ரை’ பண்ணலாம்.எனக்கு இதிலே எந்த வித ஆக்ஷபணை இல்லை.நீ சந்தோஷமா இருந்து வந்தாப் போதும் எனக்கு” என்று ஆங்கிலத்லே சொன்னதும் “ஒரு ‘குட் ஹஸ்பெண்ட்’ இப்படித் தான் இருக்கணும்.’யூ ஆர் சிம்ப்லி எ க்ரேட் ஹஸ்பெண்ட்.எங்கே நான் ஆசைப் பட்டதை,நீ பண்ண ‘ரிப்யூஸ்’ பண்ணுவியோன்னு, நினை ச்சு நான் ரொம்ப பயந்துக் கிட்டு இருந்தேன்” என்று ஆங்கிலத்தில் சொல்லி மறுபடியும் ரமேஷ கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.

ஜூலி ரமேஷை அழைத்துக் கொண்டு ‘ரெஸ்ட்டாரெண்டுக்கு’ப் போகும் போது எல்லாம், அவனை கொஞ்சம் ‘வைன்’ குடிக்க ‘கம்பெல்’ பண்ணி வந்தாள்.ரமேஷ் “ நான் ‘வைன்’ எல்லாம் குடிக்க மாட்டேன் ஜூலி.என்னே தயவு செஞ்சி ‘கம்பெல்’ பண்ணாதே” என்று ஆங்கிலத்தில் சொன்னதும்,”ஓ.கே.”என்று சொன்னாள் ஜூலி.

கொஞ்ச நேரம் ஆனதும் “ரமேஷ்,நீ ‘வைன்’ தான் குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டே.நானும் ஒத்துக் கிட்டேன்.நீ என்னோடு ‘சிக்கனை’யாவது சாப்பிடு.இந்த ‘சிக்கன் டிஷ்’ ரொம்ப ‘டேஸ்டியா’ இருக்கும்.இதே கொஞ்சம் ‘டேஸ்ட்’ பண்ணிப் பாறேன்.You will like it.It is very tasty Ramesh” என்று ஆங்கிலத்தில் சொன்னாள் ஜூலி.

‘ரமேஷ் இது என்னடா வம்பு.ஜூலி நம்மே ‘சிக்கன்’எல்லாம் சாப்பிட சொல்றளே.எப்படி நாம அவ கிட்டே நான் இந்த ‘நான் வெஜ் அயிட்டம்’ எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்றது’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.

மறுபடியும் ரமேஷை சிக்கன் சாப்பிட ‘கமபெல்’ பண்ணிணாள் ஜூலி.

“இதோ பார் ஜூலி.நான் ஒரு ‘வேகன்’.நான் இத்தனை வருஷமா காய் கறிகளை மட்டும் தான் சாப்பிட்டிண்டு வந்து இருக்கேன். இப்போ ‘திடீர்’ன்னு என்னால் என் ‘புட் ஹாபிட்ஸ்’ ஸை எல்லாம் மாத்திக்க முடியாது.என்னே தயவு செஞ்சி ‘கம்பெல்’ பண்ணாதே” என்று கோவமாக ரமேஷ் ஆங்கில த்தில் சொன்னவுடன்,ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டாள் ஜூலி.

காரில் ‘ப்லாட்டு’க்கு வரும் போது “ரமேஷ்,நான் ‘ரெஸ்ட்டாரெண்டில்’ எல்லார் எதிரிலேயும் ‘சீன் கிரியேட்’ பண்ண விரும்பலே.அதான் நான் சும்மா இருந்து விட்டேன்.நாம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி கிட்டு இருக்கோம்.’வீ போத் ஆர் ஹஸ்பெண்ட் ஆண்ட் வைப்’.நாம ‘ரெஸ்ட் டாரெண்டில்’ தனித் தனியா ‘டிஷ் ஆரடர்’ பண்ணி சாப்பிட்டா,எல்லோரும் சிரிப்பாங்க.அமெரிக்காவு க்கு வர நிறைய இண்டியன் பையங்க எல்லாம் ‘நான் வெஜ் டிஷ்’ சாப்பிடறாங்க.’டிரிண்க்ஸ்ஸ¤ம்’ குடிக்கறாங்க.நீயும் சீக்கிரமா ஆரம்பி ரமேஷ்” என்று ஆங்கிலத்தில் சொன்னாள் ஜூலி.

“இதோ பார் ஜூலி,யார் என்ன வேணுமானாலும் பண்ணீண்டு போகட்டும்.எனக்குக் கவலை இல்லே.நீ ஒரு படிச்சு பொண்ணு.சினிமாவிலேயே ‘Drinks are injurious to health’ன்னு ‘சப் டைட் டில்’ போடறாங்க.அவங்க தெரியாம அப்படி போட மாட்டாங்க.அமெரிக்காவிலேயே ‘Go Vegan’ ன்னு ஒரு ‘மூவ்மெண்ட்’ இருக்கு.இது ரெண்டும் உனக்கு நன்னாத் தெரியும்.அப்படி தெரிஞ்சு இருந்தும்,நீ ஏன் என்னேப் பாத்து அந்த கெட்ட பழக்கத்தே ஆரம்பிக்கச் சொல்றே.In fact நீயும் என்னே மாதிரி எந்த ’டிரிண்க்ஸ்ஸ¤ம்’ குடிக்காம,வெறும் காய்கறிகளே சாப்பிட்டுண்டு வா.அது உன் ‘ஹெல்த்க்கு’ ரொம்ப நல்லது” என்று ஆங்கிலத்தில் சொன்னான் ரமேஷ்.

“என்னால் அது ரெண்டும் இல்லாம இருக்கவே முடியாது ரமேஷ்.எனக்கு புத்தி தெரிஞ்ச வயசி லே இருந்து நான் ‘நான் வெஜ்’ சாப்பாடு சாப்பிட்டு கிட்டு வறேன்.என்னோட பதினைஞ்சாவது வயசிலே இருந்து நான் ’டிரிண்க்ஸ்’ குடிச்சுக் கிட்டு வறேன்.உன்னே கல்யாணம் பண்ணிக் கிட்ட ஒரு காரணத்தாலே,நான் அந்த ரெண்டு வழக்கத்தையும் மாத்திக்கவே மாட்டேன்” என்று ஆங்கிலத்லே பிடிவாதமாக பதில் சொன்னாள் ஜூலி.

‘Its Ok then’.நீ உனக்கு பிடிச்சதே பண்ணீண்டு வா.நான் எனக்குப் பிடிச்சதே பண்ணீண்டு வறேன்” என்று ஆங்கிலத்தில் ரமேஷ் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, ‘ப்லாட்’ வந்து விடவே, அவன் காரை ‘பார்க்’ பண்ணி விட்டு கீழே இறங்கினான்.இருவரும் அதற்கு மேலே ஒன்னும் பேசாமல் ரமேஷ் ‘ப்லாட்டை’த் திறந்ததும்,இருவரும் படுக்கப் போய் விட்டார்கள்.

ஜூலிக்கும்,ரமேஷூக்கும் அடிக்கடி சின்ன,சின்ன சண்டைகள் வந்துக் கொண்டு இருந்தது. ஆனால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.
தன் ‘ஆபீஸ்’ வேலையில்,தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை,ஜூலி ரமேஷிடம் கேட்டாள். அவைகளை எல்லாம் ரமேஷ் வெகு சுலபமாக ஜூலிக்கு சொல்லிக் கொடுத்தது,அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.அவள் ரமேஷைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

“ரமேஷ்,நீ உண்மையிலேயே ஒரு ‘கம்ப்யூட்டர் ஜீனியஸ்’.எப்படி உனக்கு இவ்வளவு ‘கம்ப்யூட் டர்’ அறிவு இருக்கு.உன்னேப் போல நானும் தான்,‘காலேஜ் கம்ப்யூட்டர் ப்ரப்சர்கள்’ சொல்லிக் குடுத்ததைக் கத்து கிட்டு வந்து ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.ஆனா உனக்கு இருக்கும் இந்த ‘கம்ப்யூட் டர் ஸ்கில்’ எனக்கு இல்லையே ”என்று ஆங்கிலத்தில் ஆச்சரியமாகக் கேட்டாள் ஜூலி.

‘இது தான் நல்ல சமயம் என்று நினைத்து’ ரமேஷ் ”ஜூலி,நீயும் என்னே மாதிரி எந்த ’டிரிண்க்ஸ்ஸ¤ம்’ குடிக்காம,வெறும் காய்கறிகளே சாப்பிட்டிண்டு வா.அது உன் ‘ஹெல்த்க்கு’ ரொம்ப நல்லது.கூடவே உன் ‘ப்ரெயின்’ கூடிய சீக்கிரத்திலேயே என்னே மாதிரி ‘ஷார்ப்பா’ இருக்கும்“ என்று ஆங்கிலத்தில் சிரித்துக் கொண்டே சொன்னான் ரமேஷ்.

“No,no என்னால்,அது ரெண்டும் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது. நான் உன் ‘கம்ப்யூட்டர் நாலெட்ஜ்ஜே’ உபயோகப் படுத்திக் கிட்டு வறேன்அது போதும் எனக்கு” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஜூலி ரமேஷக் கட்டிக் கொண்டாள்.

ஜூலி எவ்வளவு கிண்டல் பண்ணீனாலும் ரமேஷ் விடாமல் ரெண்டு வேளையும் சந்தியாவந்த னம் பண்ணிக் கொண்டு,சுவாமிக்கு மந்திரங்கள எல்லாம் சொல்லி நமஸ்காரம் பண்ணிக் கொண்டு வந்தான்.

இருவரும் தனியாக இருக்கும் போது தங்கள் இடையே இருந்து வரும் கருத்து வேறு பாட்டை யும்,பழக்க வழக்க வித்தியாசங்களையும் நினைத்து வருத்தப் பட்டு வந்தார்கள்.

இவ்வளவு ‘கம்ப்யூட்டர் அறிவு ஜீவியாக’ இருந்த ரமேஷ் ‘நாம ஒரு அமெரிக்கப் பொண்ணே, கல்யாணம் பண்ணீண்டா,அவ எப்படி நம்ம ஊர் கலாசாரப் படி இருந்து வருவோ.அவ வளந்த வந்த சூழ்நிலைப் படித் தானே அவ இருப்போ.அவ நம்ம காலாச்சாரப் படி இருந்து வர மாட்டாளே’ என்று யோஜனைப் பண்ணி,ஜூலி அவனைப் பார்த்து “ரமேஷ் எனக்கு கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கு’ என்று கேட்ட போது,அவ கிட்டே’நான் உன்னே கல்யாணம் பண்ணிக்க முடியாது.நம்ம இடையே நிறைய cultural differences இருக்கு’ ன்னு சொல்லி இருக்க வேண்டும்!!

ஒரு அமெரிக்க பெண்ணை,சென்னையிலே பொறந்து,வளர்ந்து வந்து இருக்கும் ஒரு பெண் போல நிச்சியமாக மாற்ற முடியாதே!.அந்த காரியம் ‘வானத்தை ஒரு வில் போல’ வளைப்பதற்கு சமம் ஆகும்.ரமேஷ் இந்த ‘வருத்தத்தை’ அவனாக தனக்கு வரவழைத்துக் கொண்டது தானே!!

ஜூலியின் அழகுக்கும் இளமைக்கும் ரமேஷ் மயங்கி விட்டாதால் ஏற்பட்ட விளைவு!!

’ரமேஷை நாம கல்யாணம் பண்ணிக் கொண்டால்,அவனை நாளடைவிலே நாம ஒரு அமெரிக் கனைப் போல மாற்றி விடலாம்’ என்று நினைத்த ஜூலி ஏமாந்துப் போய் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஜூலியின் ‘வருத்தம்’ ரொம்ப நியாயமானது தான்.ஆனால் ரமேஷ் வருத்தம் நியாயமானதே இல்லை. அது அவனாக தனக்கு வர வழைத்துக் கொண்டது தானே!!

நாலு மாதம் ஆகியது.

ஜூலி உடலில் ஒரு ‘மாற்றம்’ தெரிந்ததால்,அவள் பாமிலி டாக்டர்’ கிட்டே போய் ‘செக் அப்’ பண்ணிக் கொண்டாள்.அந்த லேடி டாக்டர் ஜூலியை நன்றாக பரிசோத னைப் பண்ணீப் பாத்து

விட்டு,’டெஸ்டுகள்’ எல்லாம் எடுத்துப் பார்த்து விட்டு,‘கர்பபமாக இருக்கிறாள்’ என்று சொன்னாள்.

ஜூலி டாக்டர் கேட்ட பணத்தை சதோஷமாகக் கொடுத்தாள்.

”ரமேஷ்,நீ உன் சொன்ன வார்த்தையே காப்பாத்திட்டே. நான் இப்போ ‘ப்ரெக்னன்ட்’ஆக இருக் கேன்.என் ‘பாமிலி டாக்டர்’ என்னை ‘செக் அப்’ பண்ணீ’, ‘டெஸ்டுகள்’ எல்லாம் எடுத்து இன்னிக்கு காத்தாலே ‘கன்பர்ம்’ பண்ணார்” என்று சாயங்காலம் ரமேஷ் ‘ப்லாட்டு’க்கு வந்தவுடன் ஆங்கிலத் தில் சொல்லி அவனைக் கட்டிக் கொண்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *