அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 3,558 
 
 

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13

குழந்தைக்கு ‘நாம கரணம்’பண்ண ஆரம்பித்த வாத்தியார் இடம் காமாக்ஷியும்,சாம்பசிவனும் குழந்தைக்கு ‘மீரா’ என்று பெயர் வைக்க சொன்னார்கள்.வாத்தியாரும் அந்த குழந்தைக் காதிலே ‘மீரா’ என்று மூன்று தடவை சொன்னார்.

சாம்பசிவன் வாத்தியாருக்கு வெத்திலை பாக்கு,தேங்காய் பழத்துடன் தக்ஷணையையும் கொடு த்து அனுப்பினான்.வாத்தியார்கள் கிளம்பிப் போனவுடன் சமையல் கார மாமி எல்லோருக்கும் நுனி இலையைப் போட்டு,அவள் பண்ணீ இருந்த கல்யாண சமையலை பரிமாறினாள்.எல்லோரும் சாப்பிட் டு விட்டு சமையல் கார மாமியைப் பார்த்து “மாமி,சமையல் ரொம்ப நன்னா இருந்தது” என்று சொல்லி சமையல் கார மாமியை புகழ்ந்தார்கள்.

அன்று சாயந்திரம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கணேசன் தன் குடும்பத்தை அழைத் துக் கொண்டு சிவபுரிக்குப் போனார்.

அன்று இரவு சாப்பீட்டு விட்டு மரகதமும்,மஹா தேவ குருக்களும் எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப தயாரானார்கள்.

“நீங்கோ,இந்த பதினோறு நாளும் காமாக்ஷிக்கு ரொம்ப உதவியா இருதேள்.உங்களுக்கு தெரிஞ்ச மாமிக் கிட்டே இருந்து ஒரு ‘ஆவி’ வந்த தொட்டிலை வாங்கிண்டு வந்து தொட்டில் போட்டு, உங்க தெரிஞ்சவாளோட நிறைய தாலாட்டு பாட்டுகள் எல்லாம் பாடினேள்.என் அம்மா இல்லாத ‘குறை’ தெரியாம எல்லாத்தையும் பாத்து வகையா பண்ணேள்.இந்த பெரிய உதவியே நான் காலம் பூராவும் மறக்க மாட்டேன்” என்று கண்களில் கண்ணீர் மல்க கையைக் கூப்பிக் கொண்டு சொன்னார் சாம்பசிவன்

“நீங்கோ அப்படி எல்லாம் சொல்லி என்னே வேத்து மனுஷியா ஆக்காதேள்.நான் யாரோ இல்லே.காமாக்ஷிக்கு அம்மா.இந்த சமயத்லே நான் இந்த உதவியே பண்ணீயே ஆகணும்.அது என் கடமை இல்லையா” என்று சொன்னாள் மரகதம்.கொஞ்ச நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்து விட்டு வீட்டுக்குப் போனார்கள்.

அடுத்த நாள் முதல் சாம்பசிவன் கோவில் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார். காமாக்ஷி குழந்தையை அம்மா சொல்லிக் கொடுத்தது போல குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டும் தூக்கி வைத்துக் கொண்டும்,தூங்க வைத்துக் கொண்டும் வந்தாள்.

மரகதம் வாரம் ஒரு முறை காமக்ஷி வீட்டுக்கு வந்து காமாக்ஷியையும்,குழந்தையையும், ராம சாமியையும்,மாப்பிள்ளையையும் பார்த்து விட்டுப் போய் கொண்டு இருந்தாள்.

மஹா தேவ குருக்கள் சாம்பசிவனை கோவிலில் சந்தித்து,காமாக்ஷியின் சௌக்கியத்தையும், குழந்தையின் சௌக்கியத்தையும்,அப்பாவின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டு வந்தார். குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும்,காமாக்ஷி சமையலை செய்துக் கொண்டு வந்து,சமையல் செய்து வந்த மாமியை நிறுத்தி விட்டாள்.

சிவபுரியில் ராகவனுக்கு நாலு வயது ஆனதும் சுந்தரம் தம்பதிகள் அவனை பக்கத்திலே இருந்த ஒரு நர்ஸா¢ பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தார்கள்.ராதா காலையிலே ராக வனை ஒன்பது மணிக்குப் பள்ளிக் கூடத்துக்கு அழைத்துப் போய் விட்டு விட்டு,பகல் பன்னிரன்டு மணிக்கு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.

ராதாவுக்கு முடியாமல் இருந்த நாட்களில்,கணேசன் தான் பேரன் ராகவனை பள்ளிக் கூடத்தி ற்கு அழைத்துப் போய்,மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.வயது அதிகம் ஆகி விட்டதால், அந்த மாதிரி நாட்களில் கணேசன் மிகவும் சோர்வாக இருந்து வந்தார்.

கணேசன் அந்த மாதிரி சோர்வாக இருக்கும் போது அவரைப் பார்த்த கமலாவும்,சுந்தரமும், ராதாவும் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

ராகவன் நன்றாகப் படித்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

சிதம்பரத்தில் மீராவை சாம்பசிவன் தம்பதிகள் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.மரகதம் காமாக்ஷியைப் பார்க்க வரும் போது அவள் தனியாக இருக்கும் போது “காமாக்ஷிக்கு உனக்கு எப்போ அடுத்த குழந்தைப் பொறக்கும்.அந்த குழந்தையும் ஒரு புருஷக் குழந்தையா பொறக்க வேணும்ன்னு நானும் அப்பாவும் ரொம்ப ஆசைப் படறோம்” என்று ரகசியமாக சொன்னாள்.

காமாக்ஷி சிரித்துக் கொண்டே”அம்மா,உனக்கும் அப்பாவுக்கும் மட்டும் தான் இந்த ஆசை இருக்குன்னு நினைச்சுக்காதே.என் மாமனாரும்,ஆத்துக்காரருக்கும் இந்த ஆசை ரொம்ப இருக்கு. ஆனா குழந்தே பொறக்கறது நம்ம கையிலே இல்லையேம்மா,பகவானாப் பாத்து தான் அருள் புரிய ணும் இலையா சொல்லு”என்று சொன்னாள்.

மரகதம் “ஆமாம் காமாக்ஷி,நீ பொறந்த பிறபாடு நானும் உன் அப்பாவும் பகவானை வேண்டாத நாள்ளே இல்லே.ஆனா அவர் ‘அனுக்கிரஹம்’ எங்களுக்கு இல்லாமலே போயிடுத்து” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மீராவுக்கு நாலு வயது ஆனதும்,சாம்பசிவன் தம்பதிகள் அவளை பக்கத்தில் இருந்த ஒரு ‘நர்ஸா¢’ பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தார்கள்.ராமசாமி காலையிலே மீராவை ஒன்பது மணிக்குப் பள்ளிக் கூடத்துக்கு அழைத்துப் போய் விட்டு விட்டு,பகல் பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

மஹா தேவ குருக்கள் ஒரு நாள் ”மரகதம்,நான் உன் கிட்டே சொல்ல வேணாம்ன்னு தான் பாத்தேன்…” என்று சொல்லி முடிக்கவில்லை மரகதம் அவசரப் பட்டு “ஏன்னா,நான் உங்க கிட்டே எதையாவது இத்தனை வருஷமா மறைச்சுண்டு வந்து இருக்கேனா சொல்லுங்கோ. ஆனா நீங்கோ என்னவோ,எதையோ என் கிட்டே சொல்ல வேணாம்ன்னு நினைச்சேன்னு இழுக்கறேள்.நாம இப்போ தனியாத் தானே இருந்துண்டு வறோம்.அப்படி இருக்கும் போது ஏன் சொல்ல வேணாம்ன்னு நினைக் கறேள்.சொல்லுங்கோ” என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டாள்.

உடனே மஹா தேவ குருக்கள் “மரகதம் ரொம்ப அவசரப் படறயே.இப்போ ஆத்லே காமாக்ஷி கூட இல்லே.நாம் ரேண்டு பேரும் தனியாத் தான் இருந்துண்டு வறோம்.நான் சொல்லாம இருக்கறது க்கு காரணம் இல்லாம இல்லே.நான் சொன்னா,நீ ரொம்ப மனசு கஷ்டப் படுவியேன்னு நினைச்சு சொல்லாம இருந்தேன்.இப்போ அதுக்கு நேரம் வந்து இருக்கு.சொல்றேன் கவனமா கேளு” என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

மரகதம் ’என்னடா இவர் கண்ணே மூடிண்டு யோஜனை பண்ணீண்டு இருக்கார்.என்னவா இருக்கும் இவர் சொல்லப் போற விஷயம்.அதுவும் கல்யாணம் பண்ணீண்டு இத்தனை வருஷத்துக்கு அப்புறமா.ஒரு பக்கம் பயமாவும்,இன்னொரு பக்கம் கவலையாவும் இருக்கே’ என்று நினைத்துக் கொண்டு ஆத்துக்காரர் கண்ணேத் தொறந்து சொல்லட்டும்’ என்று பொறுமையை வர வழைத்துக் கொண்டு கணவர் வாயையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“மரகதம்,எந்த ஒரு அப்பா,அம்மாவுக்கும் அவ ‘பிராணன்’ போனா அவா வயத்லே பொறந்த பீள்ளைஅவாளுக்கு கொள்ளீப் போடணும்.கூடவே பிள்ளை வயத்து பேரன் ‘நெய்’ பந்தம் பிடிக்கணும் அப்போ தான் அவா ‘ஆத்மாவுக்கு’ ஒரு ‘நல்ல கதி’க் கிடைக்கும்ன்னு நம்ம ‘இந்து தர்ம சாஸ்த்ரம்’ சொல்றது.நம்ம விஷயத்லே நமக்கு ஒரு பிள்ளையே பொறக்கலே.அப்புறம் தானே பிள்ளை வயத்து பேரன் நெய் பந்தம் பிடிக்கறதுக்கு” என்று சொல்லும் போது மஹா தேவ குருக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கணவர் சொன்னதைக் கேட்ட மரகதத்துக்கு ‘அப்படியா,நம்ம ‘இந்து தர்ம சாஸ்த்ரம்’ சொல்றது. தெரியாம் அவர் சொல்ல மாட்டேரே.இந்த விஷயத்தே ஏன் நம்ம கிட்டே அவர் இது வரைக்கும் சொல்லலே.சொன்னா எங்கே நாம கஷ்டப் படுவோமோன்னு நினைச்சு சொல்லாம இருந்து வந்து இருக்காரே.சரி இப்போ சொல்லி இருக்கார்.அப்படி பிள்ளையே இல்லாதா அப்பா அம்மா என்ன பண்ணுவா’ என்று யோஜனைப் பண்ணீக் கொண்டு இருந்தாள்

மஹா தேவ குருக்கள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “மரகதம்,பிள்ளையே இல்லாத அப்பா,அம்மா அவா கடைசி காலத்தே ‘காசி க்ஷத்ரத்லே’ கழிச்சுட்டு, சதா பகவானே வேண்டிண்டு வந்து,அவா ‘பிராணனே’ விட்டா,நிச்சியமா அந்த ‘ஆத்மா’வுக்கு ஒரு ‘நல்ல கதி’ கிடைக்கும்ன்னு நம்ம ‘இந்து தர்ம சாஸ்த்ரம்’ சொல்றது.ஆச்சு காமாக்ஷி குழந்தேக்கு நாலு வயசு ஆயிடுத்து.அவளும் அவ ஆத்துக்காரரும் அந்த குழந்தேயே நன்னா வளத்துண்டு வருவா.இனிமே நாம இங்கே இருந்து ண்டு வரணும்ங்கற அவசியம் இல்லே”என்று சொல்லி நிறுத்தினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் மஹா தேவ குருக்கள் “மரகதம்,நேக்கு என்ன தோண்றதுன்னா.ஏன் நாம நம்ம கையிலே இருக்கற பணத்தே எடுத்துண்டு காசிக்குப் போய் ஒரு சின்ன ‘ஆமா’ப் பாத்துண் டு,காசி விஸ்வநாதரையும்,விசாலாக்ஷி அம்மனையும் தினம் தா¢சனம் பண்ணீண்டு வந்து இருந்து வரக் கூடாது.எனக்கு என்னமோ நம்ம ரெண்டு பேரோட ‘பிராணன்’ காசிலே ‘போனா’ ரொம்ப நலலது ன்னு படறது.இங்கே இருந்துண்டு இனிமே என்னப் பண்ணப் போறோம் சொல்லு” என்று விரக்தியிலே சொன்னார்.

“நீங்கோ சொல்றது எனக்கும் சரின்னு தான் படறது.நமக்கு இங்கே ஒன்னும் இல்லே. ஆனா நாம இப்படி சொன்னா காமாக்ஷி ஒத்துக்கணுமே.அவளுக்கு எப்படி நாம புரிய வக்கறது.அவ நம்மே போகாதீங்கோன்னு தானே சொல்லுவோ” என்று கேட்டாள் மரகதம்.

“உண்மை தான் மரகதம்.எல்லாம் நாம சொல்ற விதத்லே தான் இருக்கு.இனிமே நமக்கு ஒரு நல்லதே தானே நாம பண்ணீண்டு வரணும்.ஒரு நாள் சாயங்காலமா மாப்பிள்ளை ஆத்லே இருக்கும் போது நான் இந்த சமாசாரத்தே மொள்ள காமாக்ஷிக்கு சொல்லி புரிய வக்கறேன்” என்று சொல்லி விட்டு சந்தியாவந்தனம் பண்ண எழுந்துப் போனார் மஹா தேவ குருக்கள். மரகதம் எழுந்து தன் வேலைகளை கவனிக்கப் போனாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

குருக்கள் மரகதத்தை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ ஏறி காமாக்ஷியின் வீட்டுக்கு வந்தார்.அப்போது சாம்பசிவன் வீட்டிலே இருந்தான்.இருவரும் மீராவிடம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

மாமானாரையும்,மாமியாரையும் பார்த்த சாம்பசிவன் ஆடுவதை நிறுத்தி விட்டு “வாங்கோ மாமா வாங்கோ மாமி” என்று வரவேற்று ‘ஹாலில்’ இருந்த ‘சேர்’களைக் காட்டி உட்காரச் சொன்னான். உடனே காமாக்ஷி “வாங்கோப்பா,வாங்கோம்மா” என்று சொல்லி விட்டு, ஹாலில் இருந்த சேரை இருவரும் வசதியாக உட்காரத் தள்ளி வைத்தாள்.

குருக்களும் மரகதமும் காமாக்ஷி தள்ளி வைத்த சேர்களில் உட்கார்ந்துக்கொண்டார்கள்.

பிள்ளையும்,மாட்டுப் பொண்ணும் வரவேற்க்கும் சத்தம் ராமசாமிக்குக் கேடகவே படுத்துக் கொண்டு இருந்த அவர் மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்து “வாங்கோ,எங்கே இவ்வளவு தூரம்.நேக்கு தள்ளலே.கொஞ்சம் படுத்துண்டு இருந்தேன்.இவா ரெண்டு பேரும் உங்களே ‘வாங்கோ’ன்னு கூப்பிட்ட சத்தம் கேட்டு எழுந்து வந்தேன்” என்று சொல்லி விட்டு அவரும் ஒரு ‘சோ¢ல்’ உட்கார்ந்துக் கொண்டார்.

“ஒன்னும் விஷயம் இல்லே.உங்களே எல்லாம் நான் பாத்து ரொம்ப நாளாச்சேன்னு மரகதத்தையும் அழைச்சுண்டு வந்தேன்.மரகதம் அடிக்கடி உங்க ஆத்துக்கு வந்துட்டுப் போறா.எனக்குத் தான் கோவில் வேலே முடிஞ்சதுன்னா ரொம்பத் தள்றது இல்லே.ஆத்துக்கு வந்து ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு விடறேன்” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

உடனே ராமசாமி “நீங்கோ சொல்றது ரொம்ப நிஜமான வார்த்தை.நமக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ.இவா ரெண்டு பேரும் சின்னவா.இவாளுக்கு இன்னும் ‘பிரபஞ்சம்’ இருக்கு.மீராவை நன்னா வளத்து வரணும்.இவாளுக்கு எப்போ ஒரு புருஷக் குழந்தே பொறக்குன்னு காத்துண்டு இருக்கேன்.அந்த பேரக் குழந்தேயேப் பாத்துட்டு நான் கண்ணே மூடணும்ன்னு தான் காத்துண்டு இருக்கேன்” என்று விரகதியடன் சொன்னார்.

‘இது தான் நல்ல சமயம் என்று நினைத்து’ மஹா தேவ குருக்கள் ”எங்க ரெண்டு பேரே எடுத்து க்கோங்கோ.எங்க ரெண்டு பேருக்கும் வயசாயிண்டு வறது.நாங்களும் எங்களுக்கு ஒரு பிள்ளேக் குழந்தே வேணும்ன்னு சதா வேண்டிண்டு வந்துண்டு இருந்தோம்.ஆனா அந்த பகவான் கண்ணேத் தொறக்கலே.காமாக்ஷிக்கு அப்புறமா எங்களுக்கு குழந்தையே பொறக்கலே.இந்த மாதிரி பிள்ளை இல்லாத அப்பா அம்மா ரெண்டு பேரும் காசிக்குப் போய் அவா கடைசி காலத்தே கழிச்சுட்டு ‘பிராணனே’ விட்டா,அவாளுக்கு ஒரு ‘நல்ல கதி’ கிடைக்கும்ன்னு நம்ம ‘இந்து தர்ம சாஸ்திரம்’ சொல்றது” என்று சொன்னார்.

“என்னப்பா சொல்றேள்.நீங்கோ ரெண்டு பேரும் காசிக்கும் போக வேணாம்.ராமேஸ்வரத்துக்கு ம் போக வேணாம்.எங்க கூடவே இருந்துண்டு வாங்கோ.எனக்கு பெரியவான்னு நீங்கோ ரெண்டு பேரும் தானே இருக்கேள்” என்று கத்தினாள் காமாக்ஷி.

“காமாக்ஷி சொல்றது ரொம்ப சரி.நீங்கோ ரெண்டு பேரும் எங்கேயும் போகாம எங்களோடவே இருந்துண்டு வாங்கோ.நீங்கோ ரெண்டு பேரும் எனக்கும் காமாக்ஷிக்கும் ஒரு பக்க பலம்.உங்களையு ம்,என் அப்பாவையும் தவிர யார் இருக்கா எங்களுக்கு இந்த சிதம்பரத்லே சொல்லுங்கோ” என்று கேட்டார் சாம்பசிவன்.

“நீங்கோ ரெண்டு பேரும் சொல்றது எனக்கு நன்னாவே புரியறது.எங்க ரெண்டு பேரோட ‘ஜென்மத்துக்கும்’ ஒரு நல்ல கதி கிடைக்க வேணாமா.சொல்லுங்கோ.அதுக்கு ஒரே வழி நாங்க காசி க்குப் போய்,அங்கே கொஞ்ச காலம் இருந்துட்டு எங்க ‘பிராணனே’ விடறது தான்.நீங்கோ ரெண்டு பேரும் இதே நன்னா புரிஞ்சிக்கணும்.நாங்க இத்தனை வருஷம் உங்க கூட இருந்தாச்சு. இனிமே நாங்க இருந்துண்டு வந்து என்னப் பண்ணப் போறோம்” என்று மறுபடியும் காசிக்குப் போகும் ஆசையை சொன்னார் மஹா தேவ குருக்கள்.

“நீங்கோ ரெண்டு பேரும் எங்கேயும் போகக் கூடாது.நான் உங்களே காசிக்குப் போக விட மாட்டேன்.நீங்கோ ரெண்டு பேரும் என்னோடவே இருந்துண்டு தான் வரணும்”என்று பிடிவாதம் பிடித்தாள் காமாக்ஷி.சாம்பசிவனும் காமாக்ஷி சொன்னது போலவே சொன்னார்.

கொஞ்ச நேரம் போனதும் மஹா தேவ குருக்கள் “காமாக்ஷி,இந்த ‘லோகத்லே’ ஒரு அப்பா அம்மாவோட முக்கியமான கடமை அவாளுக்குப் பொறந்து இருக்கிற பொண் குழந்தைக்கு ஒரு நல்ல குடும்பத்லே பொறந்த ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணீ வக்கறது தான். அந்த கடமையே நானும் அம்மாவும் ரொம்ப நன்னா பண்ணீட்டோம்.எங்களுக்கு அதிலே பரம திருப்தி. இனிமே நாங்க எங்க வழியேப் பாத்துக்க வேணாமா சொல்லு.நாங்க காசிக்குப் போனா தானேம்மா எங்களுக்கு ஒரு ‘நல்ல கதி’க் கிடைக்கும்” என்று கெஞ்சும் குரலில் சொன்னார்.

ஆனால் காமாக்ஷியும்,சாம்பசிவனும் அவர்களைப் பார்த்து “நீங்கோ ரெண்டு பேரும் எங்களே விட்டுட்டுப் போகக் கூடாது” என்று சொல்லி பிடிவாதம் பிடித்து வந்தார்கள்.

ராமசாமியும்,மரகதமும் குருக்கள் சொல்லுவதையும்,காமாக்ஷியும் சாம்பசிவனும் பிடிவாதம் பிடித்து வருவதை மாறி மறிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

‘இவர் என்ன சொல்லி காமாக்ஷி மனசையும்,மாப்பிள்ளை மனசையும் மாத்தப் போறார். காசி க்குப் போறது ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே’ என்று தன் மனதில் நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தாள் மரகதம்.

கொஞ்ச நேரம் ஆனதும் மஹா தேவ குருக்கள் ராமசாமியைப் பார்த்து “ நீங்களே சொல்லுங்கோ மாமா.நான் சொல்றது உண்மையா இல்லையா.உங்களுக்கு நம்ம ‘இந்து தர்ம சாஸ்திரம்’நன்னாத் தெரியுமே” என்று கேட்டார்.

உடனே ராமசாமி ”நீங்கோ சொல்றது ரொம்ப உண்மை.’இந்து தர்ம சாஸ்திர’ப் படி அப்பா, அம்மாவுக்கு அவ வயத்லே பொறந்த ஒரு பையன் தான் அவாளுக்கு எல்லா ‘அந்திம காரியங்களும்’ பண்ணனும்.அப்படி அவாளுக்கு ஒரு பிள்ளை இல்லேன்னா,அந்த அப்பா அம்மா ரெண்டு பேரும் காசிக்குப் போய் அவா கடைசி காலத்தே கழிச்சுட்டு ‘பிராணனே’ விட்டா,அவாளுக்கு ஒரு ‘நல்ல கதி’ கிடைக்கும்ன்னு நான் சிவ வயசா இருந்தப்ப,சிவபுரி கோவில்லே அனந்த ராம திக்ஷிதர் சொன்ன கால§க்ஷபத்லே கேட்டு இருக்கேன்.அவர் எப்போ காலகக்ஷபம் பண்ணாலும் நம்ம ‘இந்து தர்ம சாஸ்த்ரம்’ என்ன சொல்றதுன்னு கால§க்ஷபம் கேக்க வருவாளுக்கு ரொம்ப விவரமா சொல்லிண்டு வருவார்” என்று சொன்னார்.

உடனே மஹா தேவ குருக்களும் “நானும் அவர் கால§க்ஷபங்களை நிறைய கேட்டு இருக்கேன். நீங்கோ சொல்றது ரொம்ப சரி” என்று சொன்னார்.

சாம்பசிவனுக்கும்,காமாக்ஷிக்கும் ராமசாமி சொன்னதைக் கேட்டு கோவம் வந்தது. காமாக்ஷி தன் கோவத்தைப் பொறுத்துக் கொண்டு இருந்தாள்.அவள் மணியைப் பார்த்தாள்.

மணி ஏழடித்து விட்டது.காமாக்ஷி சமையல் ‘ரூமு’க்குப் போய் தயிர் சாதத்தை பிசைந்துக் கொண்டு மீராவுக்குக் கொடுத்தாள்.மீரா அம்மா கொடுத்த தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு கைகளை எல்லாம் கழுவிக் கொண்டு ‘பெட் ரூமுக்கு’ப் போய் விட்டாள்.

காமாக்ஷி அவ அம்மா அப்பாவைப் பார்த்து “மணி ஏழடிச்சுட்ட து.இனிமே நீங்கோ ஆத்துக்கு எல்லாம் போய் பலகாரம் எல்லாம் பண்ணீண்டு இருக்க வேணாம்.நான் ‘கிடு’ ‘கிடு’ன்னு அரிசி உப்பு மாவைப் பண்ணி,கத்திரிக்க கொத்ஸ¤ம் பண்ணி விடறேன்.நீங்கோ ரெண்டு பேரும் இங்கேயே பலகாரம் பண்ணீட்டு ஆத்துக்குப் போங்க” என்று சொல்லி விட்டு சமையல் ‘ரூமு’க்குப் போனான்.

மரகதமும் காமாக்ஷி கூடப் போய் கத்திரிக்கா கொத்ஸ¤ பண்ண கத்திரிக்காய்களை நறுக்கிக் கொடுத்தாள்.

“என்னப்பா நீங்கோ.நானும்,காமாக்ஷியும் அவாளே காசிக்குப் போக வேணாம்ன்னு சொல்லிண் டு இருக்கோம்.நீங்கோ என்னடான்னா,அவா ரெண்டு பேருக்கும் காசிக்கு ‘டிக்கெட்’ வாங்கி முன் பதிவு பண்ணீ,அவாளே சிதம்பரம் போய் வண்டி ஏத்தி விட்டு தான்,மறு வேலே பாப்பேள் போல இருக்கே” என்று அப்பாவைப் பார்த்து கொஞ்சம் கோவமாகச் சொன்னார் சாம்பசிவன்.

“அப்படி இல்லேடா சாம்பசிவா.அவா சொல்றது நம்ம ‘இந்து தர்ம சாஸ்த்ரம்’ படி சரின்னுத் தான்,கால§க்ஷபம் சொல்ற ஒரு பெரிய தீக்ஷிதர் சொன்னதைத் தான் சொன்னேன்.நீ சொன்னா நம்ப மாட்டே.நானும்,உன் அம்மா எங்களுக்கு முதல் குழந்தே ஒரு பையனாப் பொறக்கணும்ன்னு பகவா னே ரொம்ப வேண்டிண்டு வந்தோம்.ஆனா எங்களுக்கு ஒரு பொண்ணு பொறதுடுத்து. அப்புறமா நீ பொறக்க இன்னும் நாலு வருஷம் ஆயிடுத்து.இந்த நாலு வருஷம் பூராவும் நானும்,உன் அம்மாவும் ‘நமக்கு அடுத்த குழந்தே ஒரு பிள்ளையாப் பொறக்கணுமேன்னு வேண்டிண்டு வராத தெய்வமே இல்லே.எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிண்டு வந்தோம்.எப்படியோ எல்லாம நல்ல படியா ஆயி நீ பொறந்தே.சரி அதே விடு.அது எப்பவோ நடந்த ஒரு பழம் கதை” என்று சொன்னார் ராமசாமி.

சாம்பசிவன் “அப்படியாப்பா, நீங்களும் அம்மாவும் நான் பொறக்கும் வரையிலே கவலைப் பட்டுண்டு வந்தேளா” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஆமாண்டா சாம்பசிவா.இதே நினைச்சுத் தான் நான் உன்னுடைய மாமனார் சொல்லும் போது, பரிதாபப் பட்டு சொன்னேன்.இந்த கவலை எல்லா அப்பா அம்மாவுக்கும் நிச்சியமா இருந்துண்டு தான் இருக்கும்.என் விஷயத்லே அந்த கவலை பகவான் ‘அனுக்கிரஹத்’தாலே சரியாப் போயிடுத்து. ஆனா குருக்களுக்கு அந்த கவலை நிரந்தரமா நின்ணுப் போயிடுத்து.இதே மனசிலே வச்சுண்டு தான்,நான் உனக்கும்,காமாக்ஷிக்கும் சொல்ல வறது என்னன்னா,அவா ஆசைப் பட்டது போல அவா ளே காசிக்கு அனுப்புங்கோ.உங்க ரெண்டு பேருக்கும் அது நல்லது” என்று சொன்னார் ராமசாமி.

அப்பா சொன்னதை சாம்பசிவன் யோஜனைப் பண்ணீக் கொண்டு வந்து இருந்தான்.அந்த நேரம் பாத்து காமாக்ஷி “அரிசி உப்புமாவும் கத்திக்கா கொத்சும் ரெடி.நீங்கோ எழுந்து,அப்பாவுக்கும் என் அம்மா,அப்பாவுக்கும் இலையே போடுங்கோ” என்று குரல் கொடுத்ததும், சாம்பசிவன் எழுந்துப் போய் போய் மூனு வாழை இலையைப் போட்டான்.

காமாக்ஷி மூனு இலைகளிலும் அவள் பண்ணிக் கொண்டு வந்த அரிசி உப்புமாவையும், கத்திரிக்காய் கொத்சையும் சூடாகப் பறிமாறினாள்.ராமசாமியும்,மஹா தேவ குருக்களும்,மரகதமும் அரிசி உப்புமாவையும்,கத்திரிக்கா கொத்ஸையும் சாப்பிட்டுக் கொண்டே “ரொம்ப ருசியா பண்ணீ இருக்கேம்மா.அரிசி உப்புமாவுக்கு எப்பவும் கத்திரிக்கா கொத்சு ஒரு ரொம்ப நல்ல ‘காம்பினேஷன்’. இன்னும் ரெண்டு வாய் உப்புமாவை சேத்து சாப்பிட வைக்கும்” என்று சந்தோஷமாக சொன்னார்கள்.

காமாக்ஷி மூவருக்கும் இன்னும் கொஞ்சம் உப்புமாவையும் கொத்ஸையும்போட்டாள்.மூவரும் உப்புமாவையும்,கொத்ஸையும் ரசித்து சாப்பிட்டார்கள்.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது காமாக்ஷி “அப்பா,நீங்கோ எங்க ரெண்டு பேர் கிட்டே எங்க அப்பா அம்மாவை காசிக்கு அனுப்புவது நான் நலல்துன்னு சொல்றேளா” என்று கேட்ட தும் “காமாக்ஷி,எனக்கு இன்னும் கொஞ்சம் அரிசி உப்புமாவும் கொத்ஸ¤ம் போடு” என்று கேட்டுக் கொண்டே,“ஆமாம்மா,அவ ரெண்டு பேரும் காசிக்குப் போய்,அவ ‘பிராணன்’ போனா அவளுக்கு ‘நல்ல கதி’ நிச்சியமா கிடைக்கும்.எதுக்கு நீங்கோ ரெண்டு பேரும் அதேத் தடுத்து,அவா ரெண்டு பேருக்கும் ஒரு மன சுமையை தறேள்.அவா சந்தோஷம் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியம் இல்லையாம்மா” என்று சொன்னார் ராமசாமி.

மஹா தேவ குருக்களும்,மரகதமும்,ராமசாமியும் பலகாரத்¨தை சாப்பிட்டு விட்டு,கைகளை கழுவிக் கொண்டு வந்து அவர்கள் உட்கார்ந்துக் கொண்ட‘சேர்’களில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

சாம்பசிவனும்,காமாக்ஷியும் ராமசாமி சொன்னதைப் பற்றி அவர்கள் ரூமுக்குப் போய் கலந்துப் பேசினார்கள்.அம்மா அப்பாவை காசிக்குப் போக சொல்லுவது தான் ‘உசிதம்’ என்று இருவருக்கும் தோன்றியது.அவர்கள் இருவரும் தங்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு “அப்பா சொல்லிட்டா.இனி மே நானும்,காமாக்ஷியும் உங்களே போக வேணாம்ன்னு சொல்லக் கூடாது.நீங்கோ ரெண்டு பேரும் காசிக்குப் போய் வாங்கோ.எங்க ரெண்டு பேருடைய சந்தோஷத்துக்காக, உங்களே எங்க கூட இருந்து வரச் சொல்றது சரி இல்லை தான்” என்று கண்களில் கண்ணீர் முட்டச் சொன்னார்கள்.

உடனே மஹா தேவ குருக்கள் “எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா.மாமாவும் நாங்க சொன்னது ‘சரி’ன்னு சொன்னார்.இல்லாவிட்டா நீங்கோ ரெண்டு பேரும் எங்களே காசிக்குப் போக சம்மதிச்சு இருக்கவே மாட்டேள்.நான் இன்னும் ஒரு வாரத்லே நான் இருக்கும் ஆத்தை ஒரு நல்ல விலைக்கு வித்துட்டு,அந்த பணத்தையும் ‘பாங்க்லே’ இருக்கற பணத்தையும் எடுத்துண்டு, வாத்தியாரேக் கூப்பிட்டு ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்லச் சொல்லி,அன்னேக்கு காசிக்கு கிளம்பறோம்.நாங்க கிளம்பற நாளை உங்க கிட்டேவந்து சொல்லிட்டுப் போறோம்” என்று சொல்லி எழுத்துக் கொண்டார்.

உடனே மரகதமும் எழுந்துக் கொண்டாள்.

இருவரும் எல்லோரையும் பார்த்து “அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்” என்று சொல்லி விட்டு தங்கள் செருப்பைப் போட்டுக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
சாம்பசிவனும்,காமாக்ஷியும் அவர்கள் கூட வாசலுக்கு வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றீ விட்டு வீட்டுக்குள்ளே வந்தர்கள்.

வரும் வழியிலே மரகதம் மஹா தேவ குருக்களைப் பார்த்து “அந்த மாமா மட்டும் நீங்கோ சொன்னது சரி இல்லேன்னு சொல்லி இருந்தா,காமாக்ஷியும் மாம்பிள்ளையும் நம்மே காசிக்குப் போக விட்டு இருக்கவே மாட்டா.இல்லையா சொல்லுங்கோ” என்று கேட்டதும் மஹா தேவ குருக்கள் “ஆமாம் மரகதம்” என்று சொல்லி விட்டு எப்படி காசிக்குப் போவது என்பதைப் பற்றி யோஜனைப் பண்ணிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

ஆட்டோ நின்றதும் மஹா தேவ குருக்கள் ஆட்டோ டிரைவருக்கு பணத்தை கொடுத்து விட்டு, வீட்டுக்குள் வந்து செருப்பைக் கழட்டி வைத்து விட்டு,கால்களை கழுவிக் கொண்டு,சுவாமி ‘ரூமு’க்கு ப் போய் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு ‘ஹாலுக்கு’ வந்தார்.

“மரகதம் எல்லாம் சரியாப் போய்,நாம பத்திரமா காசிக்குப் போய் சௌக்கியமா இருந்துண்டு வர ணும்.நீ கேட்டப்ப நான் இதேத் தான் நான் யோஜனை பண்ணீண்டு இருந்தேன்.அதான் நான் மேலே பேசாம சும்மா இருந்துண்டு வந்தேன்” என்று சொல்லி விட்டு ஹாலில் இருந்த சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டார்.

“எனக்கும் நீங்கோ சொல்றது ரொம்ப சரின்னு படறது.முன்னே பின்னே தெரியாத இடம். பாஷை வேறே புரியாது.ஆரம்பத்லே கொஞ்சம் சிரமமாத் தான் இருக்கும்.போகப் போக சரியாப் போயிடும்ன்னு நினைக்கிறேன்.எல்லாத்துக்கும் மேலே அந்த அம்பாள் ‘அனுகிரஹம்’ நமக்கு இருக்கணும்”என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போய், ஒரு ‘டம்ளா¢லெ’ மோரை விட்டு,கொஞ்சமாக உப்பைப் போட்டு கொண்டு வந்து கணவா¢டம் கொடுத்தாள் மரகதம்.

குருக்கள் அடுத்த நாள் ஒரு வீடு தரகரைப் பார்த்து “தரகரே,நான் என் வீட்டை விக்கலாம் ன்னு இருக்கேன்,நீங்க எனக்கு ஒரு நல்ல ‘பார்டியா’ப் பாத்து சொல்லுங்கோ” என்று சொன்னதும், “சாமி உங்க வூட்டு ‘அடரஸ்ஸை எனக்கு இந்த காகிதத்லே கொஞ்ச எழுதி குடுங்க.எனக்கு ஒரு நல்ல ‘பார்ட்டி’ கிடைச்சதும்,உங்க வூட்டுக்கு இட்டுக் கிட்டு வறேன்.வூடு விக்கற விலயே,நீங்க அந்த ‘பார்ட்டி’க் கிட்டே பேசிக்குங்க.வூடு என்ன விலைக்குப் போவுதோ,அதிலே எனக்கு 2% கமிஷன் தரணும்.உங்களுக்கு சம்மதமா சாமி.அப்புறமா நீங்க பின் வாங்கக் கூடாது” என்று ‘கண்டிஷனாக’க் கேட்டார் அந்த தரகர்.

“சரிப்பா.நான் என் வீடு என்ன விலைக்கு விக்கறதோ அதிலே உனக்கு 2% கமிஷன் தறேன். நான் பின் வாங்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு வந்தார் மஹா தேவ குருக்கள்.

இரண்டு நாள் போனதும் அந்த வீட்டுத் தரகர் ஒரு துணிக் கடைக்காரரை அழைத்துக் கொண்டு குருக்கள் வீட்டுக்கு வந்து “சாமி,இவர் உங்க வூட்டே வாங்க வந்து இருக்கார்” என்று சொல்லி அந்த துணிக் கடைகாரரைக் காட்டினார்.

குருக்கள் அந்தத் துணிக் கடைக்காரர் இடம் “சார்,நானும் என் சம்சாரமும் காசிக்குப் போகலாம் ன்னு முடிவு பண்ணீ இருக்கோம்.நான் இந்த ஆத்லே இருந்து என் துணி மணிகளையும்,என் ஆத்துக் காரி துணி மணிகளையும்,ரெண்டு பெட்டியிலே எடுத்துண்டுப் போகப் போறேன்.மத்த எல்லா ‘பர்னிச் சர்களும்’,அப்படியே விட்டுட்டுப் போக போறேன்.நீங்கோ இந்த ஆத்தே வாங்கின பிறகு,நான் இந்த ஆத்லே ஒரு பதினைஞ்சு நாள் தங்கி இருப்பேன்” என்று சொன்னார்.

வந்த துணீக் கடைக்காரர் குருக்கள் சொன்னதை ஒத்துக் கொண்டார்.மஹா தேவ குருக்களும் அந்தத் துணிக் கடைக்காரரும் கலந்து பேசி,வீட்டுக்கு ஒரு விலையை ‘நிர்ணயம்’ பண்ணீனார்கள் அந்தத் துணிக்கடைக்காரர் “சாமி,நான் அடுத்த வாரம் உங்க பேருக்கு வீட்டின் விலைக்கு ஒரு ‘ட்ராப்ட் தறேன்” என்று சொல்லி விட்டுப் போனார்.
சொன்னது போல அந்த துணிக் கடைக்காரர் அடுத்த வாரம் குருக்கள் வீட்டு வந்து,அவர்கள் வீட்டுக்குப் பேசின விலைக்கு ஒரு ‘ட்ராப்டை’க் கொடுத்தார்.பிறகு “சாமி,நீங்க இந்த வீட்டை விட்டு எப்போ காசிக்குக் கிளம்றீங்கன்னு எனக்கு ‘போன்’ பண்ணுங்க.நான் வந்து வீட்டைப் பூட்டி கிட்டுப் போறேன்” என்று சொல்லி விட்டு தன் ‘விஸிடிங்க் கார்டை’ மஹா தேவ குருக்கள் இடம் கொடுத்தார் அந்த துணிக் கடைக்காரர்.

மஹா தேவகுருக்கள் அந்தத் துணிக் கடைக்காரர் கொடுத்த ‘ட்ராப்டையும்,’விஸிடிங்க் கார்டை’யும் வாங்கிக் கொண்டு “நான் நிச்சியமா என்னிக்கு நாங்க காசிக்குக் கிளம்ப்றோம்ன்னு உங்களுக்கு ‘போன்’ பண்ணீச் சொல்றேன்” என்று சொன்னதும்,அந்த துணிக் கடைக்காரர் போய் விட்டார்.

மஹா தேவ குருக்கள் வீடு வித்த விலையில் 2% பணத்துக்கு அந்த தரகருக்கு கமிஷன் பணமாக அந்த தரகர் பேருக்கு ஒரு ‘செக்கை’க் கொடுத்தார்.’செக்கை’ வாங்கிக் கொண்டு அந்தத் தரகர் குருக்களைப் பார்த்து “ரொம்ப ‘தாங்க்ஸ்’ சாமி.சொன்னா மாதிரியே என் ‘கமிஷனே’ குடுத்துட்டீ ங்க.நீங்க தகறாரு பண்ணுவீங்கன்னு நான் நினைச்சேன்“ என்று சொல்லி விட்டுப் போனான்.

அடுத்த நாள் மஹா தேவ குருக்கள் ‘பாங்க்’க்குப் போனார்.‘பாங்க்’ மானேஜரைப் பார்த்து ”சார்,நானும் என் சம்சாரமும் காசிக்குப் போக போறோம்.நான் என் ஆத்தே வித்து விட்டேன்.’ஆம்’ வித்த பணத்துக்கு,என் ஆத்தை வாங்கினவர் இந்த ‘ட்ராப்டை’க் குடுத்து இருக்கார்.நீங்கோ இந்த் ‘ட்ராப்டை’ என் கணக்கிலே போட்டுட்டு,என் கணக்கிலே இருக்கிற மொத்த பணத்தையும் ஒன்னா சேத்து,எனக்கு ஒரு ‘ட்ராப்டா’ தர முடியுமா.நான் அந்த ‘ட்ராப்டே’ காசிலே ஒரு ‘பாங்க்லே’ போட சௌகா¢யமா இருக்கும்” என்று கேட்டார் மஹா தேவ குருக்கள்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *