ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 20,131 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5 | அத்தியாயம் 6

மறு நாள் காலை சென்னையிலிருந்து புறப்பட்ட காஞ்சீபுரம் ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அமர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தார் துளசிங்கம். அந்தப் பெட்டியில் அவர் ஒருவர் தான் இருந்தார். நிம்மதியாய் பிரயாணம் செய்வதற்கு வேண்டிய சௌகர்யங்கள் அனைத்தும் இருந்தன. ஆனால் அவர் அப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டார். தில்லைநாயகத் தின் மரண வழக்குதான் அப்பொழுது அவருடைய மூளையை வெகுவாகக் குழப்பிக் கொண்டிருந்தது.

விஜயவல்லியின் எச்சரிக்கைக் கடிதம் அவருக்கு அன்று காலை யில் தான் வந்திருக்கிறது. உடனே தனக்குத் தந்தி அடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். யோசிப்பதற்குக்கூட அவள் அவருக்கு அவகாசம் கொடுக்கவில்லை! அவர் தன் அபிப் பிராயத்தை வெளிப்படுத்தித் தந்தியடிக்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது அவர் ஏன் அந்தக் கடிதத்தை ஆராய்ச்சிச் சாலைக்குக் கொண்டு வந்தார்? வழக்கம்போல் அந்தக் கடிதத்தை அவர் ஏன் உதாசீனம் செய்யவில்லை? ஒரு வேளை அது ஒருவருடைய கண்ணிலும் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதை அங்கு கொண்டு வந்து வைத்திருப்பாரோ? ஒரு வேளை நன்கு யோசித்து ஒரு முடிவிற்கு வரலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்குமோ? அவ்வாறு அவர் தந்தி அடிக்க முயன்று இருந்தாலும் அந்தக் கடிதத்தில் அவளுடைய விலாசம் காணப்பட வில்லையே! உடனே பதில் எழுத வேண்டும் என்று எச்சரித்திருந்த அவள் அத்தனை அஜாக்கிரதையாய் இருந் திருப்பாளா?–இவ்வாறு எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தார் அவர். அந்த வண்டி விரைவில் காஞ்சீபுரத்தை அடைந்து அவருடைய குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

காஞ்சீபுரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட பரிமள பவனத் தைப்பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். அந்த ஓட்டலைப் பற்றி அடிக்கடி பிரமாதமாகப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. செல்வந்தர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் அது என்று அவர் அறிந்திருந்தாரே தவிர, அந்த ஓட்டலை அவர் நேரில் பார்த்தது இல்லை. இப்பொழுது தான் முதல் முறையாகப் பரிமள பவனத்திற்கு வந்தார் அவர்.

அந்த ஓட்டல் மானேஜர் உடையிலிருந்தபடி அவர் கன்னட தேசத்தைச் சேர்ந்தவர் என்பது நன்கு விளங்கி விட்டது. ஆயினும் காஞ்சீபுரத்தில் பல காலம் வசித்து வந்தபடியால் நன்கு தமிழ் பேசினார் அவர். துப்பறியும் துளசிங் கம் தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டு விஷயத் திற்கு வந்தார்.

“விஜயவல்லியைப்பற்றித் தானே கேட்கிறீர்கள்? அவளை எனக்கு இரண்டு மூன்று வருஷகாலமாகத் தெரியும். எங்க ளுடைய நிரந்தர ஆதரவாளர்களில் அவளும் ஒருத்தி. அவள் கலி யாணமானவள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவ ளுடைய கணவனை நான் பார்த்தது இல்லை. இந்த ஊரில் இருக் கும் தன்னுடைய நிலபுலன்களைக் கவனிப்பதற்காக வந்து போவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒருபோதும் அவ ளுடைய கணவன் இங்கு வந்தது இல்லை. நாகரிக மோகமும் முற்போக்குக் கொள்கைகளும் மிகுந்திருந்த அவள் அவ்வாறு தனியாக வசித்ததைக் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை! ‘

“அவள் சென்ற புதன்கிழமை யன்று திடீரென்று புறப் பட்டு விட்டாள் அல்லவா?”

“ஆமாம். அவள் தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.”

“அவள் எங்கு சென்றாள் என்று சொல்ல முடியுமா?”

“அது எனக்குத் தெரியாது. இங்கு வந்து தங்குபவர்களை, என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள் என்று கேட்கும் கம் எனக்குக் கிடையாது. எனக்குச் சேரவேண்டிய பணத் தைக் கொடுத்த பிறகு அவர்களைப்பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”

“அது வாஸ்தவம்தான். ஆனால் சில நாட்கள் ஓர் ஓட்டலில் தங்கிவிட்டுக் கிளம்பும்போது தங்களுக்கு வரும் தபா அனுப்பி வைப்பதற்காக தங்களின் விலாசத்தைக் கொடுத்து விட்டுச் செல்வது சிலரது வழக்கமாயிற்றே என்று கேட்டேன்.”

“சிலர் அப்படிச் செய்கிறார்கள். சிலர் ஒன்றும் சொல்லா உட கிளம்பி விடுகிறார்கள். விஜயவல்லி எப்பொழுதும் தான் போகும் இடத்தைத் தெரியப்படுத்தி விட்டுத்தான் செல் வாள். ஆனால் இந்த முறை ஏனோ ஒன்றும் சொல்லவில்லை!”

“இதிலிருந்து அவள் வழக்கத்தைவிட விரைவாகக் கிளம்பி இருக்கிறாள் என்று விளங்குகிறதல்லவா? அது சரி, அவள் எவ் வளவு நாட்கள் இந்த ஓட்டலில் தங்கி இருந்தாள்?”

“சுமார் நாற்பது நாட்களாக இங்குதான் இருந்தாள்!”

“தன்னுடைய நிலபுலன்களைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறிய அவள் அவ்வளவு நாட்கள் இங்கு தங்கியது உங்களுக்குச் சந்தேகத்தை விளைவிக்கவில்லையா?”

“இதில் சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது? வாரா வாரம் எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை ஒழுங்காகக் கொடுத்து வந்தாள்! அவளைப்பற்றி எந்த விதமான புகாரும் என் காதில் விழவில்லை. அவளைத் தேடிக் கொண்டு பலர் வருவ துண்டு. ஆனால் அவள் ஒருவரையும் தன்னுடைய அறையினுள் அனாவசியமாய் அனுமதிக்க மாட்டாள். எல்லோருக்கும் பொது வான ஹாலில் அமர்ந்துதான் பேசிக்கொண்டிருப்பாள். அப்படி யிருக்கும்போது அவளை நான் ஏன் சந்தேகிக்கவேண்டும்?”

“சென்ற புதன்கிழமை காலை விஜயவல்லியைத் தேடிக் கொண்டு இங்கு யாராவது வந்தார்களா?”

புதன்கிழமையன்றா? ஆமாம், அன்று காலை நான் தற் செயலாய் வாசல் பக்கம் போனேன். அப்பொழுது ஒரு வாலிபன் விஜயவல்லி இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு வந்தான். அவள் இருக்கும் அறையைத் தெரிவித்தேன். வாசல் படிக்கட் டில் நின்றவண்ணம் அவன் என்ன செய்கிறான் என்று நான் கவனித்தேன். அந்த வாலிபன் கம்பீரமாக வராந்தாவில் நடந்து விஜயவல்லியின் அறையின் முன்னால் போய் நின்றான். அவன் கதவைத் தட்டியவுடன் வெளியே எட்டிப் பார்த்தாள் விஜய வல்லி. ஒரு நிமிடம் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். பிறகு அந்த வாலிபனை அழைத்துக்கொண்டு அவள் ஹாலுக்கு வந்து விட்டாள்.”

“அவள் அவனிடம் எவ்வாறு பழகினாள்?”

“கதவைத் திறந்து கொண்டு வெளியே தலையை நீட்டிய வீஜயவல்லி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவனை அவள் உடனே புரிந்து கொள்ளவில்லை என்பதை அந்தப் பார்வை வெளிப்படுத்தியது. “அட நீயா? என்னால் நம்ப முடிய வில்லையே?’ என்று அவள் சற்று உரத்த குரலில் உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் செவிகளில் விழுந்தன. அந்த வாலி பன் யாரென்று எனக்குத் தெரியாவிட்டாலும் அவனை அவள் வெகு காலத்திற்குப் பிறகு பார்க்கிறாள் என்பது எனக்கு விளங்கி விட்ட து.”

“அவர்கள் இருவரும் எவ்வாறு பழகினார்கள் என்று சொல்ல முடியுமா?

“பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உறவினர்கள் எவ் வாறு பழகுவார்களோ, அவ்வாறுதான் பழகினார்கள்.”

“அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்?”

“அவர்கள் ஹாலுக்கு வந்தவுடன் நான் என் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டேன். ஆகவே அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.”

“அந்த வாலிபனை உங்களுக்கு நினைவு இருக்கிறதல்லவா?”

“நன்றாக நினைவு இருக்கிறது. மறுபடியும் பார்த்தால் அடை யாளம் கண்டுபிடித்து விடுவேன்,”

“அந்த வாலிபனைச் சந்தித்த பிறகு அவள் என்ன செய் தாள்?”

“அவர்களின் பேச்சு எப்பொழுது முடிந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் வேலைகளை முடித்துக் கொண்டு இங்கு வந்தவுடன் அறையைக் காலி செய்வதாய்க் கூறிக் கணக்குத் தீர்த்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு உடனே புறப் பட்டு விட்டாள் அவள்” என்று பதிலுரைத்தார் அந்த ஓட்டல் மானேஜர்.

பரிமள பவனத்திலிருந்து புறப்பட்ட துப்பறியும் துளசிங் கத்தின் மூளை முன்னை விட வேகமாக வேலை செய்தது. அந்த வாலிபனைச் சந்தித்துப் பேசியவுடன் விஜயவல்லி திடீரென்று புறப்பட்டு விட்டாள்! அவன் கூறிய செய்தி அவளிடம் பர பரப்பை உண்டாக்கியிருக்கிறது. அந்த வாலிபன் ஏற்கனவே அறிமுகமாய் இருந்த வாசகன் தான். இதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த வாலிபனைப் பார்த்தவுடன் அவள் புரிந்து கொள்ள வில்லை என்று ஓட்டல் மானேஜர் கூறியது தான் அவளுடைய குழப்பத்தை அதிகப்படுத்திவிட்டது. செவ்வாய்க் கிழமையன்று தில்லைநாயகத்தை ஒழிக்கச் சூழ்ச்சிகள் செய்த அதே வாலிபன் தான் புதன்கிழமை காலை விஜயவல்லியைப் பார்க்க பரிமள பவனத்திற்கு வந்திருக்கிறான் என்றால் அவனை ஏன் அவள் பார்த்தவுடன் புரிந்துகொள்ளவில்லை? அந்த வாலிபனைக் கண்டு அவள் ஏன் ஆச்சரியப்படவேண்டும்? ஒருவேளை அவள் அவ் வாறு நடித்திருப்பாளோ? அந்த வாலிபன் விஜயவல்லியின் கூட்டத்தைச் சேர்ந்தவனாக இல்லாவிட்டால் அவன் எதற்காகத் தில்லைநாயகத்தைப் பின்தொடர்ந்து சென்றான்? அவர் இறந்து விட்ட செய்தியைத் தெரிவிக்க அவன் ஏன் அத்துணை அவசர மாக விஜயவல்லியைக் காணவந்தான்? அவனுக்கு எவ்வாறு விஜயவல்லியின் விலாசம் தெரியவந்தது? முன்னைவிட அதிக மான குழப்பத்துடன் சென்னை திரும்பினார் துளசிங்கம். ஆனால், வந்தவுடன் அந்தக் குழப்பத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டது. விரைவில் தன்னை வந்து பார்க்கும்படி துளசிங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார் வக்கீல் பஞ்சநாதன். வக்கீலின் வீட்டிற்குச் சென்றார் துளசிங்கம். முதல் நாளைவிடக் கொஞ்சம் தெம்பாகப் பேசினார் வக்கீல்.

“நேற்று எனக்கு ஏற்பட்டிருந்த அதிர்ச்சியால் ஒரு முக்கிய மான விஷயத்தை உங்களிடம் கூற மறந்துவிட்டேன். அது உங்கள் விசாரணைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான் உங்களை இத்தனை அவசரமாகக் கூப்பிட்டேன். தில்லைநாயகம் நன்கு படித்தவர், திறமை வாய்ந்தவர், எடுத்த காரியத்தை எப்படியாவது வெற்றிகர மாக முடித்தாகவேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர். ஆனால் அவருக்குச் சரியாக பழகத்தெரியாது. அற்ப புத்தி யுள்ளவர், முன்கோபமும் பிடிவாத குணமும் கொண்டவர். அதனால்தான் அவருக்கு அத்தனை செல்வாக்கு ஏற்படவில்லை.. விஜயவல்லி அவருடைய அத்தையின் மகள். அழகாகவும், நாகரிகமாகவும் நன்றாகப் படித்தவளாயும் இருந்தபடியால் அவளை அவர் மணந்துகொண்டார். அந்தக் கலியாணத்திலிருந்து அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் சச்சரவு ஏற்பட ஆரம்பித்தது. அது அதிகமாகித் தன் உற்றார் உறவினர்களின் தொடர்பையே விட்டுவிட்டார் அவர்! குடும்பத்திலிருந்து பிரிந்துவந்தும் வாழ்க்கை சுகப்படவில்லை. கணவனுக்கும் மனை விக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே யிருந்தது. கடைசியில் விஜயவல்லி அவரைப் பகைப்படுத்திக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டாள். இதனால் வெகுண்டு எழுந்த அவர் தன் சொத்தை மனைவி அடையக் கூடாது என்று தீர்மானித்தார். இது விஷயமாக என்னிடம் யோசனை கேட்டார் அவர். நான் அவருடைய உற்றார் உற வினர்களைப்பற்றி விசாரித்ததில் அவருடைய சகோதரி ஒருத்தி மிகுந்த அவல நிலையில் இருக்கிறாள் என்றும் அவளுடைய மகன் படித்துவிட்டு உத்தியோகம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான் என்றும் எனக்குத் தெரியவந்தது.

“அவருடைய சகோதரியின் மகனுக்குச் சொத்துக்களை எழுதி வைத்துவிடும்படி யோசனை கூறினேன். தில்லைநாயகம் அதை ஏற்கவில்லை. என்னையே தன் வாரிசாக நினைத்து உயில் எழுதி வைக்கப் போவதாகக் கூறினார் அவர். அந்த யோசனை எவ்வளவு தவறானது என்பதை எடுத்துரைத்தேன். கடைசியில் அவருடைய சகோதரியின் மகனையும் என்னையும் தன்னுடைய சொத்தின் வாரிசுகளாக எழுதி அவர் ஓர் உயில் எழுதிவைத் திருக்கிறார். அதை உங்களிடம் கூறுவதற்காகத்தான் இத்தனை அவசரமாக உங்களை வரச்சொன்னேன்.”

வக்கீலை நிமிர்ந்து பார்த்தார் துளசிங்கம்.

“இந்த விஷயம் எனக்கு மிகவும் உபயோகமாய் இருக் கிறது. அந்த உயிலை எனக்குக் காண்பிக்க முடியுமா?” என்று பிறகு கேட்டார் துளசிங்கம்.

வக்கீல் மேசை டிராயரில் இருந்த நீண்ட உறையை எடுத்துத் துளசிங்கத்தினிடம் கொடுத்தார். அந்த உயிலைப் படித்துப் பார்த்த பிறகு வக்கீல் கூறியது முற்றிலும் உண்மை என்று விளங்கிவிட்டது.

“அது சரி! இந்த உயில் ஏன் இன்னும் ரிஜிஸ்தர் செய்யப் படவில்லை?” என்று கேட்டார் துளசிங்கம்.

“அதற்குக் காரணம் இருக்கிறது! அதையும் சொல்லி விடுகிறேன். சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, நான் வழக்குச் சம்பந்தமான தஸ்தாவேஜுகளைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தில்லைநாயகம் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் கோபக்கனல் வீசிக்கொண்டிருந்தது. அவருடைய தோற்றத்தைக் கண்டு நான் பயந்து போய்விட்டேன். அதற்குக் காரணம் கேட்பதற்கும் எனக்கு பயமாக இருந்தது. தன் சொத்தில் ஒரு செல்லாத காசுகூடத் தன்னுடைய உறவினர்களுக்குப் போகக்கூடா என்றும், உயிலை என்பேரிலேயே மாற்றிவைக்கத் தீர்மானித்திருப் பதாயும் கூறியபோது நான் திடுக்கிட்டுப் போனேன், ஏன் அவர் அவ்வாறு தன் தீர்மானத்தை மாற்றினார் என்று அறிய முயன்றேன். அன்று தன் சகோதரியிடமிருந்து அவரை ஏசி ஒரு கடிதம் வந்திருப்பதாயும், என்ன தான் உதவி செய்த போதிலும் அது பலனளிக்காது என்றும் கூறினார். நன்மை செய்து கெட்ட பெயரை வாங்குவதைவிடக் கெட்டது செய்தே அந்தப் பெயரை வாங்கிக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் தான் உயிலை என்பேரில் மாற்றி அமைக்க நிச்சயித்திருப்ப தாய்க் கூறினார். நான் அவருடைய கோபத்தைத் தணித்து எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப்பார்த்தேன். ஆனால் அவரு டைய பிடிவாதத்தைக் குறைக்க முடியவில்லை. நான் அவருடைய சொற்படி செய்யாவிட்டால் வேறு வக்கீலின் உதவியை நாடு வதாகவும் கூறினார். அவருடைய பிடிவாதக் குணம் எனக்குத் தெரியுமாகையால் அவரை விட்டுப்பிடிக்கத் தீர்மானித்தேன். உயிலை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாய்க் கூறினேன். ஆனால் அவர் அத்துடன் விட்டுவிடவில்லை. திங்கட் கிழமையன்று என்னைப் பார்த்து ‘உயில் தயாராகிவிட்டதா? என்று கேட்டார்.

“இனிமேல் அவருடைய தீர்மானத்தை மாற்ற முடியாது என்று உணர்ந்து அவருடைய விருப்பப்படி புதன்கிழமை யன்று அந்தப் புதிய உயிலை ரிஜிஸ்தர் செய்வதற்கான ஏற்பாடு களைச் செய்வதாகக் கூறினேன். ஆனால் மறுநாள் அவர் இவ் வாறு துர்மரணமடைந்து விடுவார் என்று நான் நினைக்கவில்லை. தன்னுடைய சொத்து தன் உறவினர்களுக்குப் போகக்கூடாது என்று அவர் பெருமுயற்சி செய்தார். ஆனால் அது இப்பொழுது அவருடைய சகோதரியின் மகனுக்குத்தான் போகப்போகிறது! உண்மையில் அவன் தான் அதிர்ஷ்டக்காரன்” என்று கூறினார் வக்கீல்.

துப்பறியும் துளசிங்கத்தின் முகம் மலர்ந்தது. குற்றவாளி யின் அருகில் தான் நெருங்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது அவருக்கு!

“ஆமாம்! அந்த இளைஞனை அதிர்ஷ்டக்காரன் என்று தான் சொல்லவேண்டும். அது சரி! இந்த உயில் சம்பந்த மான விஷயம் அவனுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் துளசிங்கம்.

“எங்கள் இருவரைத் தவிர வேறு ஒருவருக்கும் அந்த விஷயம் தெரியாது. ”

“அவனுடைய பெயரையும் விலாசத்தையும் கூறமுடியுமா?”

“அவன் எங்கு இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவன் பெயர் தனஞ்சயன் என்று மட்டும் எனக்குத் தெரியும்!”

குற்றவாளியின் பெயர் கிடைத்துவிட்டது! தனஞ்சயன் தான் தில்லைநாயகத்தின் மரணத்திற்குக் காரணம். குடும்பத் துடன் விரோதம் கொண்டு விலகிச் சென்று தன் சகோதரன் நல்ல நிலைமையில் இருப்பதை உணர்ந்து தனக்கு உதவி செய் யும்படி அவள் எழுதி இருக்கவேண்டும். அது தில்லைநாயகத்தின் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.

தில்லைநாயகத்தினிடமிருந்து பதில் ஒன்றும் வராததினால் தன் மகனை அனுப்பியிருக்கிறாள் அவள். தனஞ்சயன் அவரை ஐஸ்கிரீம் பாரில் தனிமையில் சந்தித்துத் தன் குடும்ப நிலை மையை வெளிப்படுத்தி உதவி செய்யும்படி கேட்டிருக்கிறான். அதனால்தான் அவர் ‘முடியாது! கண்டிப்பாக முடியாது! என்று கூறியிருக்கிறார். அதனால் வெகுண்டு எழுந்த அவன் அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறான்! உணவில் விஷம் கலக்க ஏற்பாடு செய்திருக்கிறான். அதிலிருந்து தப்பித்து விட்டாலும் விபத்துக்குள்ளாகி அவர் மரணமடைய வேண்டும் என்பதற்காக அவருடைய ஆபீஸ் அறையின் மின்சார பல்பை மாற்றி அமைத்திருக்கிறான்! தில்லைநாயகம் இறந்துவிட்டபடி யால் இப்பொழுது அவருடைய சொத்தில் பாதி அவனுக்கு வந்துவிட்டது! ஆனால் அவனுக்கு அவருடைய உயிலைப்பற்றி எப்படித் தெரியும்? அவன் எவ்வாறு அவ்வளவு குறுகிய நேரத்தில் அவரைக் கொலைசெய்யச் சூழ்ச்சி செய்திருக்க முடியும்? அவன் ஏன் விஜயவல்லியைக் காணச்சென்றான்? அவளுக்கும் தில்லைநாயகத்தின் உயிலுக்கும் என்ன சம்பந்தம்? துப்பறியும் துளசிங்கத்தின் மூளை மீண்டும் குழம்பியது. ஆதிகேசவனைப் பார்த்து இரண்டு தினங்களா யிருந்தபடியாலும் அவர் மூலம் தனஞ்சயனைப்பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டபடியாலும் அவரைக் காண புறப்பட்டார் துளசிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *