பழையனூர் நீலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 34,099 
 
 

இரவு ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு எஸ்.ஐ உமாதேவி காவல் நிலையத்திற்கு வருகிறார். காவல் நிலையமே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

உமா :- ஏட்டையா என்னாச்சு..?

ஸ்டேசனே இப்படி அலங்கோலமா இருக்கு…

ஏட்டு:- திடீர்னு ஸ்டேசனுக்கு உள்ள சூழல் காத்து மாதிரி வந்திருச்சும்மா.. அதான் ஃபைல், பேப்பர்லாம் பறந்து இந்த மாதிரி ஆகிடுச்சு .

உமா :- ஜன்னலை அடைச்சு வைக்க வேண்டியது தான..

ஏட்டு:- ஜன்னல் அடைச்சு தான்மா இருந்தது. திடீர்னு காத்து உள்ள வந்திருச்சு..

உமா :- சரி சரி சீக்கிரம் கிளீன் பண்ண சொல்லுங்க..

என கூறி தன் இருக்கையில் போய் அமர்கிறார். ஏட்டு சற்று பயந்தபடியே பின்னாடியே சென்று உமாதேவி முன்னால் தலையை சொரிந்தவாரு நிற்கிறார். அதற்குள் உமாதேவி அங்கு மூலையில் அமரவைக்கபட்டு இருக்கும் ஒரு ஆளை பார்க்கிறார்.

ஏட்டை பார்த்து,

உமா :- யாரது.. என்ன கேசு..?

ஏட்டு :- கொலை கேசுமா.. பேரு குமாரு.. பொண்டாட்டியை கொண்ணுட்டு நேரா வந்து சரண்டர் ஆகிட்டான்..

உமா :- FIR போட்டுடீங்களா ..?

ஏட்டு:- அது வந்து…

என தயங்க,

உமா :- ஏட்டையா உங்க கிட்ட தான் கேக்குறேன். Fir போட்டீங்களா இல்லையா..?

என சற்று கோபமாக கேட்கவும்.

ஏட்டு:- Fir எரிஞ்சிருச்சுமா..

கோபமாக சேரில் இருந்து எழுந்து,

உமா :- என்னங்க இவ்வளோ அசால்ட்டா பதில் சொல்றீங்க..

ஏட்டு:- அந்த சுழல் காத்து வந்தப்ப கரண்ட்டு வேற போயிருச்சு.. விளக்கு வைச்சு எல்லாத்தையும் தேடி எடுத்துட்டு இருந்தோம். ரைட்டரு Fir பதிவு பண்ண புக்க எடுத்து இவன் மனைவி பெயரை எழுதும்போது மண் ண்ணை கொட்டி தீபிடிச்சிருச்சுமா..

உமா :- கவனமா பாக்குறது இல்லையா.. நல்லவேளை புது புக்கு இன்னும் Fir எதும் போடல. இதே பழைய புக்கா இருந்திருந்தா என்ன ஆகுறது. கமிஸ்னர் வரைக்கும் இந்த பிரெச்சனை போயிருக்கும் நல்லவேளை… சரி இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டீங்களா..

ஏட்டு:- இல்லம்மா..நீங்க வந்ததுக்கு அப்பரம் சொ சொல்லிக்களாம்ன்னு…

என மறுபடியும் தலையை சொரிய.

உமாதேவி இன்ஸ்பெக்டருக்கு கால் செய்கிறார். இன்ஸ்பெக்டர் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது என வருகிறது. போனை கட் செய்து சிறிது யோசித்து,

உமா :- நேரம் ஆகிடுச்சு.. இதுக்கு அப்புறம் டவுன் ஸ்டேசன் போய் புக்கு வாங்கி வந்து Fir போட்டாலும் காலைல தான் கோர்ட்டில் ஆஜர் பண்ணனும்.

Fir போடாம இங்க வைசிருக்குறது நல்லது இல்ல. இன்ஸ்பெக்டரும் இப்ப இல்ல.. அதனால இவன டவுன் ஸ்டேசன்ல ஒப்படைச்சுரலாம்.. மத்தத காலைல பாத்துக்கலாம்.. ஏட்டையா அவனை வண்டியில ஏத்துங்க.

என கூறியவாறு உமாதேவி ஜீப்பை நோக்கி நடக்க, கான்ஸ்டபிள் ஒருவரும் ஏட்டும் குமாரை அழைத்து கொண்டு சென்று வண்டியில் ஏற்றினர்.

உமா :- ஸ்பாட்ல யாரு இருக்குறது?

ஏட்டு :- கான்ஸ்டபிள் முத்து அங்க தான் இருக்குறாரு. பாடிய போஸ்ட் மாடதுக்கு அனுப்பியாச்சாம்.

உமா :- சரி நீங்க.. ஸ்டேசன பாத்து கோங்க. இவன விட்டுட்டு நா அப்படியே வீட்டுக்கு போய்யிடுறேன்.

ஏட்டு சரி என சொல்ல, வண்டி அங்கிருந்து புறப்பட்டது.

சிறிது தூரம் சென்றதும் உமாதேவி பின்னால் அமர்ந்து இருந்த குமாரை பார்க்கிறார். அவன் பயந்தபடி குனிந்த தலை நிமிராமல் சீட்டில் குத்த வைத்து உட்கார்ந்து இருக்கிறான்.

உமா :- ஏன்யா உன் மனைவியை கொண்ண..?

அவன் பதில் எதும் சொல்லாமல் தலை நிமிராமல் அப்படியே உட்கார்ந்து இருக்கிறான்.

கான்ஸ்டபிள் :- வந்ததில் இருந்து இப்படி தான் மா இருக்கிறான்.யார பார்த்தாலும் கொலை பண்ண அவன் மனைவி முகம் தெரிதாம். அதான் யாரையும் பாக்க மாட்ரான்.

உமா :- என்ன மோட்டிவ்னு விசாரிச்சீங்களா?

கான்ஸ்டபிள் :- இந்தாளு பொம்பள விசயத்துல கொஞ்சம் வீக் மேடம். அது விசயம் தெரிஞ்சு கொஞ்ச நாளாக ரெண்டு பேருக்கும் பிரெச்னை நடந்திட்டு இருந்திருக்கு. தனக்கு இடைஞ்சலாக இருக்குறானு கொண்ணுட்டான் மேடம்.

ஊர் எல்லையை தாண்டி வண்டி சென்று கொண்டு இருந்தது. திடீரென காற்று பலமாக அடிக்க தொடங்கியது. பாதை மோசமாக இருந்ததால் வண்டி மிதமான வேகத்தில் செல்கிறது. காற்றை எதிர்த்து வண்டியை செலுத்த டிரைவர் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருந்தார்.

உமா : என்ன இன்னைக்கு இப்படி காத்தடிக்குது, மழை வரமாதிரி எதும் தெரில. இவ்லோ கும்மிருட்டா வேற இருக்கு..

கான்ஸ்டபிள் : இன்னைக்கு அம்மாவாசை மேடம் அதான் இவ்லோ இருட்டா இருக்கு.

உமா :- ஓ இன்னைக்கு அமாவாசையா.. சரி இவன் கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுது. மனைவி பெயர் என்ன, குழந்தை இருக்கா..

கான்ஸ்டபிள் :- ரெண்டு வருசம் ஆகுது மேடம். ஆனா இன்னும் குழந்தை இல்ல. அவன் மனைவி பேரு நீலி.

அந்த பெயரை சொன்னதும் காற்று அதிகமாக அடிக்க தொடங்கியது. ஜீப் அதுக்கு மேல் நகர முடியவில்லை. எதிரில் ரோடே சரியாக தெரியவில்லை.

உமாதேவி குழப்பதில் செய்வதறியாது பார்த்துகொண்டு இருக்கிறார். அவர்கள் வண்டியை சுற்றி சுழல் காற்று வீசுகிறது. அந்த சுழல் காற்றில் ஒரு பெண் உருவம் மங்கலாக தெரிகிறது. அதை பார்த்து கான்ஸ்டபிலும் உமாதேவியும் திகைத்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

உமாதேவி பின்னால் திரும்பி குமாரை பார்க்கிறார். அவன் இவ்வளவு பிரச்சனையிலும் நிமிராமல் பயந்தபடி தலை குனிந்தே உட்கார்திருக்கிறான்.

பின்னால் கதவை யாரோ தட்டுவது போல் உள்ளது. அனைவரும் பின்னால் திரும்பி பார்க்கிறார்கள். அந்த உருவம் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. சிறிது நேரத்தில் வண்டியின் முன்னால் அந்த உருவம் தோன்றி வண்டியை கவுக்க முயற்சித்து கொண்டு இருந்தது.

உமாதேவி சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வண்டியில் இருந்து கீழே இறங்குகிறார்.

கான்ஸ்டபிள் :- மேடம் வேணாம் மேடம்.. கீழ இரங்காதீங்க.. அமாவாசை நேரத்துல தீய சக்திகள் ரொம்ப உக்கிரமாக இருக்கும்..

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே உமாதேவி வண்டியின் முன்னால் சென்று அந்த உருவத்தின் அருகில் சென்று நிற்கிறார். அவ்வளவு நேரம் குனிந்தபடி இருந்த குமார் உமாதேவியையும் அந்த உருவத்தையும் நிமிர்ந்து பார்க்கிறான். பயத்தில் அலருகிறான். உமாதேவி அந்த உருவத்தை பார்த்து,

யார் நீ.. உனக்கு என்ன வேணும்.. ஏன் எங்களை வழி மறிக்குற..?

என கேட்கவும் அந்த உருவத்தின் நெற்றியில் நீல நிறத்தில் நீலி என்று தோன்றி மறைகிறது. அதை பார்த்ததும் உமாதேவி சட்டென திரும்பி வண்டியின் உள் ஏறி கொள்கிறார்.

உமாதேவி :- அண்ணே பின்னாடி கதவை ஓப்பன் பண்ணி விடுங்க..

கான்ஸ்டபிள் :- மேடம் என்ன சொல்றீங்க..

உமாதேவி :- சொல்றத செய்ங்க..

கான்ஸ்டபிள் தயங்கியவாறே வண்டியில் இருந்து இறங்கி பின்னால் சென்று கதவை திறக்கிறார். குமார் பயத்தில்,

” வேண்டாம் வேண்டாம்.. கதவை திறக்காதீங்க”

என அழுது புலம்புகிறான்.

கான்ஸ்டபிள் :- பண்ணுறத பண்ணிட்டு இப்ப நீலகண்ணீர் வடிக்குறியா..?

எனகூறியவாரு கதவை திறந்துவிட்டு வந்து வண்டியில் ஏறுகிறார். குமார் கண்களை மூடியவாறு தொடர்ந்து அலறிக்கொண்டே இருக்கிறான்.

உமாதேவி :- அது நீலக்கண்ணீர் இல்லணே நீலிக்கண்ணீர்

வண்டிய எடுங்க.

வண்டியை எடுத்ததும் அந்த உருவம் குமாரை தர தரவென அந்த சூழலுக்குள் இழுத்து கொண்டது.

வண்டி அங்கிருந்து நகர தொடங்கியது. கான்ஸ்டபிள் பின்னால் திரும்பி பார்க்கிறார். அந்த சுழல் அங்கிருந்து வேகமாக பின் திசையில் நகர்ந்து கொண்டு இருந்தது.

கான்ஸ்டபிள் :- யாரு மேடம் அந்த ஆவி..?

உமா :- நீலி.

கான்ஸ்டபிள் :- பழையனூர் நீலியா..?

உமா :- ஆமா.. உங்களுக்கும் தெரியுமா..

கான்ஸ்டபிள் :- நானும் கேள்வி பட்டிருக்கிறேன் மேடம்.. இதே மாதிரி சபல புத்தி உள்ள கணவனை பலி வாங்க அழகிய பெண் உருவமிட்டு மர குட்சியை குழந்தையாய் உருவாக்கி ஊர்மக்களை ஏமாற்றி தன் கணவனை அடைந்து அவனை கொலை செய்து விட்டதுனும். அவனை பாதுகாக்க முடியாததுனால அந்த ஊரை சேர்ந்த 70 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும். கேள்வி பட்டிருக்கிறேன்.

உமா :- ஆமாம் துரோகம் செய்த கணவனை இரண்டு ஜென்மங்கள் காத்திருந்து பழிவாங்கியவள் நீலி. கண்ணீர் வடித்து சபையை ஏமாற்றி தன் கணவனை அடைந்து அவனை கொலை செய்தததால் தான் இன்றளவும் யாரேனும் அழுது சாதித்தால் நீலகண்ணீர் வடிக்கிறியா என கேட்கிறோம். உண்மையிலேயே அது நீல கண்ணீர் இல்ல நீலி கண்ணீர்.

கான்ஸ்டபிள் :- இப்ப என்ன பண்றது மேடம்.. இப்படி ஆகிருச்சு…

உமா :- பாதுகாக்குறதும், தண்டனை வாங்கி தர்ரதும் தான நம்ம வேலை. இப்ப நாம அதைதான் பண்ணியிருக்குறோம். நீங்க கவலை படாதீங்க.. நான் பாத்துக்கிறேன். எல்லாம் நல்லதுக்கு தான் நடந்திருக்கு. நடந்ததை அப்படியே சொல்லுவோம். அப்பதான் தப்பு பன்றவங்களுக்கு பயம் வரும்.

நீலி கதையல்ல நிஜம்னு தெரிஞ்சுக்கட்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *