யாழ் இனிது! யார் சொன்னது?

 

உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி.

“என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டான்.

“துப்பாக்கிச் சத்தத்திலையும், பொம்மர்களின் இரைச்சலிலையும், ஷெல் பயத்திலையும் வடிவா உறங்கிக் கன காலமாச்சுதுதானே! இண்டைக்கித்தான் ஹெலிக்கொப்ரர் சத்தங்கூட இல்லை, வரப்பிலை கொஞ்சம் படுக்கலாமெண்டா….”

வேணி சட்டென்று எழுந்து கொண்டாள்.”அப்ப நீங்க படுங்கோ, நான் போறன்.”

“எங்கை போறீராம்?”

“அம்மாவும் அப்பாவும் இந்தியாவுக்குப் போகினம். உங்களுக்குப் பிடிக்கலையெண்டா நான் மட்டும் எதுக்கு இங்கை யாழ்ப்பாணத்திலை நிக்க வேணும்? நானும் போறன். பின் நேரம் தோணி.”

“பகிடி பண்ண வேண்டாம் வேணி. நீர் போய்ட்டீரெண்டா நான் இங்கை உயிரோடிக்கேலுமே? இந்தக் காணிக்காகவும் எண்ட வேணிக்காகவுந்தானே, நான் இன்னும் இன்னும் இலங்கையிலை நிக்கிறன்! இப்படி வாருமன்.”

எட்டி அவளுடைய கையை இவன் பிடிக்க முயல, அவள் விலகினாள்.

“ம்ம், கல்யாணத்துக்கு முந்தி என்னைத் தொடவே மாட்டேனெண்டு சொன்னதெல்லாம் மச்சானுக்கு மறந்து போச்சு போலை!”

“ஓமப்பா, சொன்னனான், ஆனா, இனியும் தாங்கேலாது. அடுத்த கிழமை நல்லூர் முருகன் கோவிலடியிலை எங்களுக்குக் கல்யாணம்.”

“அடுத்த கிழமையே? சமாதானம் வந்த பிறகுதான் கல்யாணம் எண்டு சொன்னனீங்கள்?”

“நீரும் நானும் உயிரோடிருக்கிற காலத்திலை சமாதானம் வராது போலைத் தெரியுது வேணி. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் ஒருக்கா கதிர்காமம் போய் வருவம்.”

“இதென்ன விசர்க் கதை மச்சான்! இங்கை இயக்கத்துப் பொடியன்களைத் தாண்டி வெளிக்கிட்டாலும் அங்கை ஆமிக்காரனைத் தாண்டிப் போகேலுமே?”

“முருகன் மனசு வைச்சானெண்டா எலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது. அங்கை என்ன பாக்குறீர் வேணி?, நான் உம்மிட்ட தான் கதைக்கிறன்.”

“உது என்ன மச்சான், வடக்காலை ஒரு சத்தம்!”

வேணி சுட்டிக் காட்டிய திக்கில் ரமணன் கவனம் செலுத்தினான். பிறகு, தீவிரமடைந்து வேகமாய் அவளுடைய கையைப் பற்றினான்.

“மச்சான் என்ன இது, கல்யாணத்துக்கு முந்தி….!” என்று ஆட்சேபித்த வேணியை இழுத்து இறுக்கமாய் அணைத்துப் பிடித்தான்.

“பொம்மர் ஒண்டு வருகுது வேணி, என்னைக் கெட்டியாய்ப் பிடிச்சிக் கொள்ளும்.”

பொம்மர் நெருங்கி வந்தது. ஒருவரோடொருவர் பின்னியபடி ரெண்டு பேரும் வரப்பிலிருந்து வயலுக்குள் உருண்டார்கள்.

தாழப்பறந்து வந்த பொம்மர், சில குண்டுகளை அனாயாசமாய்த் தூவிச் சென்றது. கண் மூடித் திறப்பதற்குள் காணி கருகி உருக்குலைந்து போனது. அதோடு, மென்மையான ஒரு காதலும்!

(ஆனந்த விகடன், தீபாவளி மலர், 2006) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த இன்டர்வியூவுக்கு நண்பன் பிரபுவின் பைக்கில் நானும் தொற்றிக்கொண்டு கிளம்பினேன். எங்கள் இருவரில் ஒருத்தருக்குக் கட்டாயம் இந்த வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. வழியில்... ஒரு எண்பது வயது மூதாட்டி, சாலையைக் கடக்கத் தடுமாறிக்கொண்டு இருக்க, ‘கொஞ்சம் பொறுடா!’ என்று இறங்கி ...
மேலும் கதையை படிக்க...
மசூதிக்குப் போகிற வழியில் ப்ளாட்ஃபாம் ஓரத்தில் அந்த அற்புதமான ஓவியத்தைப் பார்த்தேன். சரஸ்வ தி. வெள்ளைத்தாமரைப் பூவில் வீற்றிருக்கிற சரஸ்வதி, வீணை மீட்டிக் கொண்டிருக்கிற சரஸ்வதி. வசீகர முகம் ஒளிரும் சரஸ்வதி. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று அந்த ஓவியத்தை ரசித்தேன். வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் வீணை ...
மேலும் கதையை படிக்க...
விஸ்வநாதனின் அப்பா இறந்த தகவல் கிடைத்ததும், அண்ணா நகரிலிருந்து பொடி நடையாக வில்லிவாக்கத்துக்குப் புறப்பட்டேன். ஏ.ஸி. காரில் பந்தாவாகச் சென்னையைச் சுற்றி வந்த காலமொன்று இருந்தது. பிசினஸ் மந்தமான பிறகு, இப்போதெல்லாம் பஸ் அல்லது பொடி நடைதான்! உடம்பைப் பள்ளிக்கூடத்தில் வைத்திருந்தார்கள். விஸ்வநாதனின் ...
மேலும் கதையை படிக்க...
"பெரியப்பா மெட்ராஸ்க்கு நாளக்யாம்மாப் போறாவ?" என்று தயங்கித் தயங்கிக் கேட்ட செல்லம்மாவைக் கூர்மையாய்ப் பார்த்தாள் அம்மா. “என்ன, பெரியப்பா போறாவளான்னு மொள்ளமாக் கேக்க? நீயுந்தானட்டி அவியக் கூடப் போற! ராத்திரி ஏழு மணிக்கி ரயிலாம். வீராவரத்ல போய் ரயிலேறணும். நாலு மணிக்கெல்லாம் பெரியப்பா ...
மேலும் கதையை படிக்க...
(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆனந்த், தன்னுடைய ஆஃபீஸ் அறைக்குள்ளே சந்தடியில்லாமல் பிரவேசித்ததைப் பார்த்த அப்பாவுக்கு ஆச்சர்யம். அதோடு ஒரு குறுகுறுப்பும். விஷயமில்லாமல் இந்தப் பயல் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டானே ! "வாடா ...
மேலும் கதையை படிக்க...
மூணாந்தேதி. "டாளிங், பேப்பர்லாம் கொண்டு வந்து போடு." “எதுக்கு ?" “பழைய பேப்பர்க்காரன் வந்திருக்கான்.” “பழைய பேப்பர்க்காரன யார் கூப்ட்டா ?” “நாந்தான்.'' "பேப்பர் இப்பப் போட வேண்டாம். பேப்பர்காரனப் போகச் சொல்லுங்க." “பேப்பர் நெறைய சேந்துருச்சேம்மா?” “இப்ப வேண்டாம்னா வேண்டாம்தான். அவனத் திருப்பியனுப்புங்க.” முறைப்பும் முனகலுமாய்ப் பேப்பர்க்காரன் திரும்பிப் போனான். 'அடி சர்வாதிகாரீ' என்று ...
மேலும் கதையை படிக்க...
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்... டி.எம்.செளந்தரராஜனுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். "சின்னையா, அடுத்தது ஒங்க ...
மேலும் கதையை படிக்க...
யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, 'திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டுதான் சொல்லுவினம்' என்பார் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் என் நண்பர் சாந்தன். டால்டா என்றாலே வனஸ்பதி என்று ஆகிவிட்ட தைப் போல, டார்ட்டாய்ஸ் என்றால் கொசுவத்தி ...
மேலும் கதையை படிக்க...
அவளைப் பார்த்ததும் அசடு வழிவதைத் தவிர்க்கப் பிரயத்தனப் பட்டேன். நடிப்பு வரவில்லை. "யார்ங்க அது” என்றாள். “அது, நம்ம செல்வராஜ்.” “நம்ம செல்வராஜா, அது யார்ங்க நம்ம செல்வராஜ்?” “நம்ம எக்ஸ் ஸ்டாஃப், நம்ம கடையில வேல பாத்த பையன். அதுக்குள்ள மறந்துட்டியா நீ?” “என்னமோ கவர் குடுத்துட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆறு ஐம்பதுக்கு வந்து சேரவேண்டிய நெல்லை எக்ஸ்ப்ரஸ் வழக்கம் போல ஏழு ஐம்பதுக்கு சாவகாசமாய் எழும்பூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. ரயிலை விட்டுக் கீழே இறங்கி, ரெண்டு பக்கமும் பார்த்தான். கூட்டம் கரைந்து ...
மேலும் கதையை படிக்க...
மறைமுகமாய் ஒரு நேர்முகம்!
அரசியல் வியாதிகள்
இன்று அவர்கள் நாளை நாம்!
ஃபெயில் காலம்
அக்னிப் பிரகாசம்
ஸ்வீட் சர்வாதிகாரி
குயில்களும் கழுகுகளும்
தனியே தன்னந்தனியே..!
நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்
அன்புள்ள அக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)