முதல் முத்தம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 10,600 
 
 

மொட்டை மாடியும் குறும் பட ஆலோசனையும்

யோசனைகளை உருவாக்குதல், திட்டங்களை செயல்படுத்துதல், சந்தோஷமும் துக்கமும் பகிர்தல் அல்லது அவைகளை தனிமையில அனுபவித்தல்,ரகசியங்களை நம் அந்தரங்கத்துக்கு உரியவரிடம் உடைத்தல், இன்னும் பல காரியங்களுக்கு ஏற்ற சுற்று சூழலை அமைத்து தரும் இடம், நம் வீடுகளில் இருக்கும் மொட்டை மாடி தான். மேல் சொன்ன காரணங்கள் போக, மொட்டை மாடியின் முக்கியத்துவத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம். அது தான் இயற்கையின் தொடர்பு. ஆம், எந்த இயற்கை நம் துவைத்த துணிகளையும் வத்தல்களையும் உளற வைக்கிறதோ அந்த இயற்கையை நம் வீட்டை விட்டு வெளியேபோகாமல் ரசிப்பது தான் அந்த முக்கிய காரணம்.

அதே இயற்கையின் ஒரு காட்சியை அன்பரசன் இப்போது ஒரு மொட்டை மாடி மேல் இருந்து கண்டுகளிக்கிறான். அவன் கவனத்தை கொள்ளை கொண்ட காட்சியில் – ஒரு ஏறி, அதன் கரைகளிலும் நடுவிலும் அங்கு-அங்கு செருக பட்டு இருந்த கடைகள் மேலும், செடிகளிலும் பருவகால பறைவைகள் இளைப்பாறி கொண்டிருந்தன. அவனோடு அந்த மொட்டை மாடியை பகிர்ந்தவர்கள், தியோவும் ஷக்தியும் மட்டுமே. அவர்கள் எடுக்க இருந்த குறும் படத்தில் இருக்கும் இடையூர்களை நீப்பது மற்றும் படம் பிடிப்பு கருவியின் இடங்களை முடிவுசெய்ய தான் அவர்கள் அங்கு கூடி இருக்கின்றனர். விவாதத்தில் கலந்துகொள்ளாத அன்பை கொஞ்ச நேரமாகவே தியோ சட்டை செய்யவில்லை, ஆனால் இப்போது பொறுமை இழந்து பொறுக்க முடியாமல் “டேய் அங்க……இன மைற பாக்குற?… இங்க வா உக்காரு!”

ஒரு குறும் படத்தின் ஒரு குறும் அறிமுகம்

படம் பெயர்- comprehending love (தியோ வைத்தது), உள்ளங்கள் அறிந்தன

(அன்பும்,சக்தியும் வைத்தது)

கதை,இயக்கம் – தியோ

வசனம் – அன்பும் , சக்தியும்

கதையின் மேலோட்டம் – ஆறு வருட காதல் வாழ்க்கையில் ஒரு திடீர் பிளவு , சபதத்தை உடைத்த முத்தம் அந்த பிளவை மூடியது.

கதை

தன் காதலனை இன்னொரு பெண்ணிற்கு பறி கொடுத்து விடுவோமோ என்ற பயம் உடைய பெண்ணிடம், அவளை தவிர வேற எந்த பெண்ணிற்கும் தன் அந்தரங்கத்தில் இடம் கிடையாது என்பதை புரியவைக்க அவள் காதலன் போராடுகிறான். கதையின் மைய புள்ளி ஆனது இறுதி கட்ட பேச்சு வாதம் முத்தத்தில் முடிவது தான். ஏன் என்றால், வாதத்தில் இருபக்கமும் இருந்த எல்லா நியாயங்களும், அவதூறுகளும் பரி மாரி முடித்த தருணத்தில், அவர்கள் ஒருவாறு மனசோர்வு அடைகிறார்கள். ஆனால் சிறிதளவு கூட மனம் பிரிய விரும்பவில்லை. அந்த பெண், இதற்கு மேல் தாம் சொல்லுவதற்கு
ஒன்றும் இல்லாத பச்சத்தில் , ஒரு வேலை அவனுக்கு முத்தம் கொடுத்தாள் அவளுடைய காதலை புரிந்துகொண்டு அவளை விட்டு போக மாட்டான் என்று எண்ணினாள். அவள் காதலனும் அவளை போலவே அவளுக்கு முத்தம் கொடுத்து அவளை தவிர வேற யாரையும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும், அவலோடு தான் அவன் வாழ விரும்புகிறான் என்றும் உணர்த்த தீர்மானித்தான். தங்களுடைய கல்யாணம் வரை முத்தமிட கூடாது என்ற சபதத்தை முத்தம் இட்டு உடைக்கிரார்கள். முத்தத்தின் விளைவாக, ஒருவர்க்கு ஒருவர் புரிந்து கொள்ளாமல் அவசர பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்களின் முதல் முத்தத்தால் இருவரின் வேண்டுகோளும் ஒத்துபோனதை உணருகிறார்கள். அவர்களின் காதல் வலு பெறுகிறது.

***

இந்த காதல் கதையின் கதாநாயகனாக நடிக்க அன்பு தியோவிடம் ஒப்புக்கொண்டான். அவாறு ஒப்பந்தம் செய்துவிட்டு இப்பொழுது ஆலோசனையில் கலந்துகொள்ளாமல் பராக் பார்த்து கொண்டு இருந்தால் யாராக இருந்தாலும் கோவப்பட்டிருப்பார்கள். தியோ வின் அழைப்புக்கு சற்றும் தளராமல் சிரித்துக்கொண்டே அன்பு “அது..என மைறா பாத்துக்கிட்டு இருக்க?… இங்க வந்து ஒக்காரு டா!” With a little bit of slang, it will be “dei! என மைத்த டா பாத்துக்கிட்டு இருக்க?”. மேல் இருந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே சக்திக்கும் தியோக்கும் எதிரில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்துவிட்டு தியோ வை பார்த்து ஒரு ஏளனம் நிறைந்த குறும் சிரிப்பை தந்தான். தியோ வட மாநிலத்தைச் சேர்ந்தவன், தரபோஸுது தமிழகத்தில் தங்கி அன்பும் ஷக்தி உடனும் படித்து வருகிறான். அவன் தமிழ் உச்சரிப்பை பற்றி அவ்வப்போது மற்ற இருவரும் கிண்டல் செய்வது உண்டு. அதற்கு தியோ வும் நன்றாக பழகி போய்விட்டான். அதற்கு பதிலாக நண்பர்களை மரு ஏளனம் செய்வானே தவிர அவர்கள் மேல் கோவிப்பதை தவிர்ப்பான். ஆனால் முக்கியமான விஷியத்தை பற்றி பேசும்போது அன்பு கிண்டல் செய்ததற்கு தியோ சலிப்புடன் “Bitch please… just get into the fucking discussion will you?” என்று வினவினான்.

“சேரி டா… அந்த பொண்ணு ரெடி ஆஹ்? ஊர்ல இருந்து இங்க வந்துட்டாளா?”

‘yes smitha is in town, but she’s leaving in a week. We gotta finish the shoot before she leaves. Her Tamil isn’t good enough, so we need to find someone to voice her character after the shoot”

சக்தி குறுக்கிட்டு “ டேய் தமிழ் பேச தெரிலனா எப்படி நடிப்பா?”

தியோ அதற்கு “she is slightly better than me in pronunciation and I’ve sent her the lines which anbu recorded for her to practice… she must be fine after a couple of rehearsals”

பொதுவாக குறும் படங்களில் நடிக்க பெண்கள் கிடைப்பது மிகவும் கடினம். அதுவும் முத்த காட்சி இருக்கும் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் சொல்லவே வேண்டாம். இதை மூன்று பேருமே தங்கள் அனுபவத்தால் நன்றாக அறிந்திருந்தார்கள். அப்பேர் பட்டவர்களுக்கு ஸ்மிதா ஒரு வரம் தான் அல்லவா? ஆதலால் அவள் படத்தில் நடித்தால் போதும் மத்த பிரச்சனைகளை சமாளித்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தை, தியோ ஸ்மிதா இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டாள் என்று முதல் முதலில் சொல்லும் போதே மூவர் மனதிலும் உருவாகிற்று.

ஆலோசனையில் அவர் அவர்கள் தன் மனதில் தீட்டி வைக்கப்பட்டிருந்த கற்பனை ஓவியங்களை முன் வைத்தார்கள். அந்த ஓவியங்களில் இருந்து சிறப்பான அம்சங்களை மட்டும் தனியே பிரித்து, ஒரு மிக பெரிய ஓவியம் சித்தரித்து உருவாக்கப்பட்டது. அந்த ஓவியத்தின் கலையம்சமும், வர்ணங்கள் பிணைக்க பட்ட விதமும் அந்த மூவர் மனதிற்குள் ஒப்புதலை உருவாக்கிற்று. ஆலோசனையின் நடுவில் தியோ எதையோ மறந்தவனை போல் அன்பிடம் “dei…did you talk with your mom? Is she okay with this?”

“Ilada… I am gonna talk with her today” . தியோ ஏமாற்றத்துடன், “டேய்” என்று சலிப்புடன் எதையோ சொல்ல ஆரம்பித்தான், அதற்குள் அன்பு குறுக்கிட்டு “நான் பாத்துக்குறேன், அத பத்தி நீ யோசிக்காத” என்று சமாளித்து விட்டான்.

மங்கி கொண்டு இருந்த சூரிய ஒளி, தற்போது கருகலான கீழ் மேகங்களின் நெற்றியில் இளஞ்சிவப்பை அள்ளி பூசிற்று. ஆலோசனையும் முடிவு பெற்றது. மூவரும் தான் செய்யவேண்டிய காரியங்களை மனதில் சுமந்து கொண்டனர். சூரியனை போலவே அந்த மொட்டை மாடியில் இருந்து மூவரும் விடை பெற்று அவரவர் வழியில் பிரிந்து சென்றனர்.

தாயும் மகனும்

அன்பு வீட்டுக்கு செல்லும் வழி எல்லாம் தனது அம்மாவிடம் இதை பற்றி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே பயணித்தான். வீட்டுக் கதவை திறந்த உடனே, சமையல் அறையில் இருந்து “என் டா லேட்டு?” என்ற அம்மாவின் சத்தமான கேள்வி அவனை இவ்வுலகிற்கு மீண்டும் இழுத்து விட்டது. இவ்வளவு நேரமும் தனது அம்மாவை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டு இருந்த அன்புக்கு திடீர் என்று அம்மாவின் குரலையே கேட்டதால் அந்த யோசனை ஒரே அடியாக குறைந்து வலு அற்று போனது. அம்மா விற்கு பதில் சொல்லாமல் நேராகா அவனோட அறைக்கு சென்றான். தோல் பையை ஒரு மூலையில் விட்டு கெடாசிவிட்டு, அவனுடைய உடலிலும் மனதிலும் இருந்த அனைத்து சோர்வும் கொண்டு மெத்தை மேல் சொலன்று தோப்பென்று விழுந்தான். அம்மா தன்னை தேடி வருவதற்குள், அவர்களை சம்மதிக்க வைக்க எதாவது அதிசயம் நேராதா? இதோ இந்த சுழற்றி கொண்டு இருக்கும் மின் விசிறி, எனக்கு யோசனை சொல்லாதா? என்று ஏங்கினான். மின் விசிறியால் எதையும் சொல்ல முடியாததால், இன்னும் வேகமாக சுழற்றி காற்றை அள்ளி வீசி அன்பை சமாதானம் செய்ய முயன்றது. ஆனால் பயனில்லை. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த யோசனையும் அவனிற்கு வரவில்லை, சேரி எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று தீர்மானித்து சட்டென்று எழுந்திரித்தான். ஆனால் அவன் அதிர்ச்சிக்கு ரொம்ப நேரமாக அறை வாசலில் இருந்து அமையதியாக அவனை அம்மா கவனித்து கொண்டு இருந்தார்கள். அமைதியை உடைத்து கொண்டு அம்மா “என்னடா யோசிச்சிக்கிட்டு இருக்க?” என்றார்கள். அம்மா வை பார்த்த உடன் சுற்றி வளைத்து பேசாமல் அன்பு “நாளைக்கு ஷூட்-ல , நான் அந்த பொண்ண கிஸ் பன்னனும்” என்றான்.

தாய்க்கும் மகனிற்கும் நடுவில் இருக்கும் புரிதலை பற்றிய ஒரு சுருக்கம்

– தகப்பன் இல்லாமல் வளர்ந்தவன் அன்பரசன்

– தாயை தவிர வேறு யாரிடமும் அதிகமாக தன் இரகசியங்களை பகிராதவன் அன்பரசன்.

– தாயும் நண்பனுமான தனது அம்மாவிடம் இரகசியங்கள் மற்றும் இல்லாமல் எல்லாம் விஷியங்களையும் உள்ளதை உள்ளபடியே பேசி அதில் இருக்கும் நல்லது கெட்டதை தெரிந்து கொள்வான் அன்பரசன்.

– சில நேரங்களில் அவனுடைய குறும் படங்களில் இருக்கும் இடையூர்களை பற்றி கூட அம்மாவிடம் ஆலோசனை கேட்பான் அன்பரசன்.

***

அன்பு சொன்னதை கேட்டு அம்மா வின் உலகமே நின்று போனது. எப்படியோ அதை சமாளித்து கொண்டு அம்மா “ ஏன் முத்தம் குடுக்காம படம் எடுக்க முடியாதா?” என்று வினவினார். “அது தான் மா , படத்துல டர்நிங் பாயிண்டே! அவங்க அவசரப்பட்டு தப்பு பன்னதால தான் அவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்குறாங்க”.

இதற்கு முன் அம்மா விடம் அன்பு கதையை முழுவதாக சொல்லவில்லை, அது ஏன் என்று நேயர்களுக்கு புரிந்திருக்கும. இப்பொழுது திடீர் என்று இப்படி ஒரு காட்சி படத்தில் இருப்பதாய் சொன்னதும், இதை அவர்கள் இடம் இருந்து வழக்கத்துக்கு மாறாக மறைத்தது அவர்களை கொஞ்சம் காயப்படுத்திற்று. மகனின் மாறுதலை பற்றிய சிந்தனையில் இருந்து மீண்டார். ஏனெனில், இப்போது ஏன் இதை மறைத்தான் என்று கேள்வி கேட்பதில் பிரயோஜனம் இல்லை. மறைத்தது மறைத்தது தான் . ஆனால் அவன் இனி செய்ய போவதை தவிர்க்க எண்ணி அம்மா, “உனக்கு நா பிரீடம் கொடுத்ததே, உனக்கு இண்ட்ரெஸ்ட் இருக்குற விஷியத்துல எது சரி, எது தப்புன்னு ஒழுங்கா சூஸ் பன்னுவன்னு நம்பி தான்!.. ஆன நீ..” அன்பு குறுக்கிட்டு “ஏன் மா புரிஞ்சிக்க மாற்றிங்க ?… அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் வரைக்கும் வெயிட் பன்னலாம்னு சேர்ந்து செஞ்ச ப்ராமிஸ் அ பிரேக் பன்னிடுறாங்க… அதனால அவங்க தப்பு பண்ணிட்டோம்னு பீல் பண்றாங்க. சோ அந்த சீன் இல்லாம்ம இது ஆடியன்ஸ்க்கு ஒழுங்கா கணவே ஆகாது !… கொஞ்ச நாள் முன்னாடி தானே டைடானிக் பத்தி பேசினோம், அந்த படத்த முதல் தறவ பார்த்துட்டு ஜாக்க திட்னிங்களா? இல்ல ரோஸ் திட்னிங்களா?அவங்கள அட்மயர் பன்னிங்க தானே ?”

“அவங்கலுக்கு ஒத்து போகும் டா, உனக்கு ஒத்து போகுமா? … சரி அதெல்லம் விடு. நீயே உன்ன போர்ஸ் பண்ணி தானே இத பண்ற? கதை நல்லா இருக்குனா முத்தும் குடுத்துடுவியா?. அதுக்கப்புரம் நிம்மதியா இருந்திடுவியா? ”

இதை தவிர வேறு எந்த கேள்வியை அம்மா கேட்டிருந்தாலும் அவன் சமாளித்துருப்பான். ஆனால் கதை கேட்ட நாளில் இருந்து அவன் ஆழ் மனதில் அவனையே கேட்டுக்கொண்டு இருந்த கேள்வி அது. அம்மா வும் அதையே கேட்ட உடனே அன்பின் வாய் அடைத்துக்கொண்டது.

அன்பின் அந்தரங்கத்தில் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்று அம்மாவிற்கு நன்றாக தெரியும். அம்மாவை பொறுத்த வரை கல்யாணம் முன்பாக காதலிக்கும் சமயத்தில் முத்தம் இட்டாலே தவறு தான், ஆனால் எந்த காதல் உணர்ச்சிகளும் இல்லாமல் முத்தும் இட்டால் தவறு மட்டும் இல்லாமல் அர்த்தமே இல்லாத செயல் என்று எண்ணினார். ஆகையால், அன்பு தனது முதல் அனுபவத்தை இப்படி உணர்ச்சிகளே இல்லாமல் கேவலம் ஒரு படத்திற்காக வீணடித்தால் , அவனை அவனே மன்னிக்க மாட்டான் என்று பயம் உண்டாகிவிட்டது அம்மாவிற்கு.

“அது எல்லாம் ஒன்னும் ஆகாது…நான் பாத்துக்குறேன்”. என்று அம்மாவின் முகத்தை பார்க்காமல் தரையை பார்த்துக்கொண்டே அன்பு சொன்னான்

“டேய் என்னடா பேசுற?”

“நா பாத்துக்குறேன்…!” என்று கடுமையாகவும் அழுத்தமாகவும் கத்திவிட்டான்.

அன்பிடம் இப்போது அம்மா என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை. அவன் இதை செய்யவேண்டும் என்று தீர்மானித்து விட்டான். மேலும், பல வாக்குவாதங்கள் அவர்கள் இடையே நடந்திருக்கிறது, ஆனால் இப்போது நடப்பது ஒரு புது பரிமாணத்தை எட்டியிருந்தது, ஏனெனில் இவ்வளவு காலமாக அன்பிடம் எந்த விஷியத்துக்கு வாதாடினாலும், அவர்களுக்கு அன்பு ஒரு சிறு பிழையாக தான் தெரிந்தான், ஆனால் அம்மா அவனை அவாரு பார்க்காமல், ஒரு முதிர்ச்சி அடைந்த மனதும், மதியும் கொண்டவனாக தான் நடத்தினார்கள். இப்போது அதே பிழை ,காரியத்தை சாதிப்பதற்கு அம்மாவை எதிர்த்து பேசுவது தான் அந்த புதிய பரிமாணம். இதை அம்மாவால் சிறிதும் தாங்க முடியவில்லை, திரும்பி பேசவும் நா எழவில்லை. அமைதியாக சமையல் அறைக்கு மறுபடியும் சென்றுவிட்டார்கள்.

அம்மா சென்ற பின் சிறிது நேரம் அவர்கள் நின்ற இடத்தையே அன்பு கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான். மறுபடியும் சலித்து கொண்டே தோப்பென்று மெத்தையில் வீழ்ந்தான். அவனுக்கு மேல் இருந்த மின்-விசிறி அவனை சமாதானம் செய்ய மீண்டும் முயற்சி செய்தது, அவனோ என சொல்லி இருந்தால் அம்மா ஒற்று கொண்டு இருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஆழ்ந்தான், அவ்வப்போது அவன் செய்வது அம்மா சொல்லுவது போல் தவறு தானோ என்ற சந்தேகம் அவனை ஊசி போல் குத்திவிட்டு , குத்திவிட்டு போனது. சிந்தனைகளின் பாரம் தாங்கமுடியாத அளவை எட்டியது, அன்பு சட்டென்று கரும் பலகையில் இருக்கும் எழுத்தை அழிப்பது போல் எல்லாவற்றையும் அழித்துவிட்டு கண்ணை மூடி இருளில் மூழ்கினான். சிறிது நேரத்துக்கெல்லாம் நித்திரையில் ஆழ்ந்தான்.

இதழ்கள் பதிந்தன

மனிதர்கள் தம் வாழ்நாளில் அவர்களால் செய்யமுடியாது என்று என்னிய காரியங்களை, சில நேரங்களில் அதிர்ச்சிகரமாக செய்து முடிப்பது உண்டு. அதில் சுலபமான உதாரணங்களில் ஒன்று, நம் மனதை கொள்ளை அடுத்தவர்களிடம் நம்முடைய காதலை சொல்லுவது. அன்பரசனுக்கும் அதே போல் ஒரு இக்கட்டு தான், ஆனால் அவன் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்லுவதில் இல்லை, அவனோடு நடிக்கும் பெண்ணிர்க்கு முத்தம் தருவதில் தான். அவன் எந்த காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி அம்மாவிற்கு உணர்த்த போராடினானோ அதே கட்சிக்கு உயிர் பிறக்க இப்போது போராடுகிறான். நாம் நேசிக்கும் நபரிடம் புதிதாக பேசத்தொடங்குவதே கடினம். யார் என்று தெரியாத நபருக்கு முத்தம் கொடுப்பதை பற்றி சொல்லவே வேண்டாம். அரசன் முகத்தில் கொஞ்சம் பதட்டமும், சிறு வேர்வை துளிகளும் எட்டி பார்த்து கொண்டிருந்தன. ரொம்ப நேரமாக பொறுத்து கொண்டு இருந்த அலைப்பேசி மேஜையில் அதிர்வுற்றது. அழைப்பது கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்து கொண்டிருந்த தியோ தான்.ஆனால் அவன் அதை வெளி காட்டமல் “Look… I know this is hard for you, but we are losing light!” அதற்கு அன்பு – “வந்துட்டேன் டா… டூ மினிட்ஸ்” என்று சமாதானம் கூறினான். இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அலைபேசியை மேஜையில் போட்டுவிட்டு மொட்டை மாடிக்கு சென்றான்.

இரும்பு தட்டால் ஆன கூரை பொருத்த பட்டு இருந்தது அந்த மொட்டை மாடியில். ஒரு பக்கத்தில் தியோ-வும் சக்தியும் அவர்களோட புகைப்பட கருவிகளை தயார் நிலையில் வைத்து கொண்டு நின்றார்கள். மறு பக்கத்தில், ஸ்மிதா, ஏரியை பாத வாரு கைகளை மதில் மேல் வைத்து நின்றுகொண்டிருந்தாள். எல்லா பக்கமும் கூரையில் இருந்து, மத்தில் செவுருக்கு நடுவில் இருந்த இடைவெளியில் காற்று மெதுவாக விட்டு விட்டு அடித்தது. அவளுடைய கருப்பு ஆடையுடன் இருந்த துப்பட்டா காற்றோடு மேலும் கீழும மெதுவாக நடனம் ஆடிக்கொண்டிருந்தது. மாடியில் எரிய உடன், தியோ வை நோக்கி அன்பு சென்றான். ” everything is ready, just go there… talk with her, when you feel comfortable enough, we will start rolling” என்றான் தியோ. அன்பும் இதற்கு எதுவும் சொல்லாமல் தலையை அசைத்து கொண்டே அந்த பெண்ணை பார்த்து நடந்தான், திடீர் என்று எதையோ மறந்தவனை போல் திரும்பி வேகமாய் இரண்டு பாய்ச்சலில் தியோ வை அணுகினான். புருவங்களை உயர்த்தி கொண்டே அன்பு “just one take… like we agreed” ” என்றான். தியோ அதற்கு பொறுமையாக கண்ணை மூடி தலையை அசைத்து கொண்டே “just one take” ” என்றான்.

ஸ்மிதாவிடம் சென்ற பிறகு அவளை போலவே மதில் மேல் கையை வைத்து கொண்டு ஏரியை நோக்கினான். ஆனால் அவன் சிந்தனை எல்லாம் அவன் சொல்ல வேண்டிய வரிகளிலும் கடைசி காட்சி மேலும் உலாவி கொண்டு இருந்தன, பற்றாகுறைக்கு ஸ்மிதாவிடம் இப்போது இருக்கிறோம் என்ற எண்ணமே அவன் பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்தது. அவனுடைய சிந்தனைகளையும் அவர்கள் இடையே இருந்த அமைதியையும் கலைக்க எண்ணி அன்பு “லயன்ஸ் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான். தன் கவனத்தை இழுத்த கேள்விக்கு ஸ்மிதா “I think so…”. அரசன் “Do you wanna go through the lines or shall I ask teo to roll the camera?” என்று பணிவுடன் கேட்டான். ஸ்மிதா உறுதியாக “No Im fine, let’s begin” என்றால்.

ஒரு அவமானம் நிறைந்த திருப்பத்தின் சுருக்கம்

– எடுத்த இருவத்தி இரண்டு டேக்குகளிலும் ஸ்மிதா அவள் வரிகளை சரியான உச்சரிப்போடு சொன்னாள்

– இருவத்தி இருண்டாவுது டேக்கில் மட்டும் தான் அரசன் அவன் வரிகளை முழுவதாக தளராமல் சொல்லி முடித்தான்.

அவன் இதுவரை நடித்த எல்லா படங்களிலும் ஆண் நண்பர்களுடன் மட்டும் தான் நடித்து இருந்தான்.அது மட்டும் இல்லாமல் அவன் மனதில் வரிகளை சொல்லி பயிற்சி செய்வதற்கு செயற்கையாக உருவாக்கிய பெண்ணின் இடத்தில இப்போது நிஜ வாழ்க்கையில் வேறொரு பெண் இடம் சொல்லுகிறோமே என்ற எண்ணம் அடிக்கடி அவனை தோந்தரவு செய்தது. ஆதலால் தான் அவன் ஒழுங்காக வரிகலை சொல்லமுடியவில்லை. ஆனால் எப்படியோ அவனால் முடிந்த வரை நடித்து வந்தான்.

“Cut!” என்று தியோ உரக்க கத்தினான். ஆம், படம் இப்போது இறுதி கட்டமான முத்த காட்சிக்கு வந்துவிட்டது. அன்பு தான் முதுர்ச்சி அடைந்த பருவத்தில் இருந்து வெகு காலமாக அவனது முதல் முத்தம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பல சித்திரங்களை தீட்டிவைத்திருந்தான். இப்போது அந்த நினைவுகள் எல்லாம் ஒரு அலை பின் ஒரு அலையாக அவனை தாக்கின. மதில் மேல் சாய்ந்து இருந்த படி நின்ற அன்பு, இனி யோசித்து நேரத்தை வீணாக்க கூடாது என்று எண்ணி, செவிற்றில் இருந்து விலகி கையை உதறிவிட்டு அவனை காட்சிக்கு தயார் படுத்தினான். ஸ்மிதா இதை எல்லாம் பார்த்து, “are you alright?” என்று நகைத்து கொண்டே விசாரித்தால். அதற்கு “yes” என்று கூறி விட்டு ஸ்மிதாவை நெருங்கினான் அன்பு. இதை பார்த்துவிட்டு தியோ “It’s already rolling… just keep performing and don’t worry about anything else” என்று உறுதி கூறினான். இதை கேட்டு திரும்பி பார்க்காமல் ஸ்மிதாவையே பார்த்து கொண்டிருந்தான் அன்பு. என்ன தெரியாத, புரியாது ஒரு உக்காதுக்க காக காத்துருந்தான், சட்டென்று ஒரு சிறிய முடி இழை கொத்தாக அவள் தலையில் இருந்து பிரிந்து அவள் இடது கண்களுக்கும் அவள் முகிற்கும் நடுவில் ஊசல் ஆட தொடங்கிற்று. அரசனுக்கு ஊக்கம் கிடைத்தது! முடி இழையை மெதுவாக தாங்கி கொண்டு அவள் இடது காதுக்கு மேல் அமர்த்தினான். இந்த செயலின் எதிரொலியாக அன்பும் ஏக்கமும் நிறைந்த கண்களால் அரசனை ஸ்மிதா தாக்கினால். அவளுடைய கரு விழிகளின் ஆழத்தில் முழுகி இந்த இக்கட்டில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணி, முகத்தை அவள் பக்கமாக இழுத்து சென்றான். இருவர் கண்களும் மிக நெருக்கம் அடைந்த பின் ஒன்றை ஒன்று காண எல்லாமல் மூடின. இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று பதிந்தன.

அவர்கள் முத்தம் இட்ட பின், அன்புக்கு என்னவென்று தெரியாத ஆயிர கணக்கான உணரச்சிகள் அவன் உடம்பில் மேலையும் கீழயும் ஓடின. காதை செவிடு படுத்தும் படி ரீங்காரம் அவன் தலையை உலுக்கியது. சிறிது நேரத்துக்கு பிறகு அந்த ரீங்காரம் ஓய்ந்தது, இப்போது அவனுடைய இதய துடிப்பு அதிக சத்தத்தில் அவனால் கேட்க்க முடிந்தது, அதோடு படி படியாக பறவைகளின் சத்தமும் சுற்று சூழலில் இருக்கும் எல்லா சத்தமும் கேட்க ஆரம்பித்தது. ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவன் கட்டுப்பாட்டை மீறி அவன் இதயத்தை பிளந்து கொண்டு கண்ணீராய் பெருக்கி அவன் கண்ணில் இருந்து கீழ் இறங்கியது. தியோ எந்த உணர்ச்சிகளையும் விடாமல் படம் பிடித்து கொண்டு இருந்தான். கதையில் அவ்விருவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதை போல், ஸ்மிதா அன்பு ஏன் அழுகிறான் என்று எப்படியோ யூகித்து விட்டால், அவன் கன்னத்தில் இருந்த கண்ணீர் துளிகளை மெதுவாக அகற்றி “it’s ok…. this feeling will go away” என்று ஆறுதல் கூறினாள். அன்பும் அவள் போக்கிலேயே சென்று தலை அசைத்தான்.

“Cut” என்று சத்தம் மறுபடியும் கேட்டது. இருவரும் விலகி நின்றார்கள். கண்ணீர் துளிகள் நன்றாக துடைக்க பட்டன. எந்த விமர்சனமும் தியோ விடம் இருந்த வரவில்லை. பேசிய படி ஒரு டேக்குக்கு மேல் அந்த காட்சியை படம் பிடிக்கவும் இல்லை. மீதி இருந்த காட்சிகளும் வேகமாக ஒளி மங்குவதற்கு முன் எடுத்து முடித்துவிட்டார்கள். அன்பால் எதையும் பழையபடி பார்க்கமுடியவில்லை, அவன் கண்களுக்கு எல்லாமே புதிதாக தெரிந்தது.

யாருமே அந்த காட்சிக்கு பிறகு அதிகம் பேசவில்லை, அவர்களுக்கு அந்த காட்சியால் ஏற்பட்ட உணர்ச்சியிலேயே மெதந்தார்கள். விடை பெற்று பிரியும் போது கூட அந்த காட்சியை பற்றி பேசவே இல்லை. அன்பு பேச வேண்டிய அவசியமே இல்லை, ஏனெனில் எல்லாருக்குமே அவன் முகத்தில் இருந்து அவன் என்ன சிந்தனையில் அழுந்து இருக்கிறான் என்று ஒருவாறு புரிந்துகொண்டார்கள். அன்பு வீட்டுக்கு செல்லும்போது மீண்டும் எல்லா உணர்ச்சிகளும் அவனை தாக்கின. ஸ்மிதாக்கு முத்தம் கொடுத்து விட்டோமே!, அவளை மறுபடியும் பார்ப்போமா?, அவள் யார் என்று கூட தமக்கு சரியாக தெரியாதே!, இதையெல்லாம் தாண்டி உண்மையில் அவன் காதலிக்காமல் அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்ததால், ஒரு முழுமை தன்மை அடையாத உணர்ச்சி தான் அவனை ரொம்பவும் வாட்டியது.

வீட்டிற்குள் நுழைந்த உடனே சமையல் அறையில் இருந்து அம்மா அவனை ஒரு முறை மொறைத்தார்கள். அந்த உணர்ச்சி இப்போது பன் மடங்கு ஆகிற்று. அம்மா பேச்சை கேட்டிருந்துருக்கலாமே என்ற வருத்தமும் அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அம்மா முறைத்து விட்டு, மறுபடியும் சமையலில் ஈடுபட்டார்கள். அன்பு அவன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டான். மெத்தையில் படுத்து கொண்டு மின் விசிரியை பார்த்தான், “நீ தவறு செய்தாய், இப்போது கஷ்ட படுகிறாய் , நான் எதற்கு உன்னை சமாதானம் செய்ய வேண்டும்?” என்ற பாணியில் மின் விசிறி கம்மியாக காற்று அடித்து கொண்டிருந்தது. அவன் நினைத்த படி படமும் ஒரு அளவிற்கு நன்றாக தான் உருவானது, ஆனால் அவன் எதையோ இழந்துவிட்டோம என்ற எண்ணத்தை மட்டும் படம் உருவாகி பல காலங்கள் ஆகியும் அவனால் மறக்கவும் முடியவில்லை மருக்கவும் முடியவில்லை.

போயும் போயும் ஒரு முத்தத்திற்க்கு , யாராவது இவ்வளவு கஷ்ட படுவார்களா? என்று நேயர்களில் பலர் யோசிக்க கூடும். அன்பை போன்று, காதலை இன்னும் சுவைக்காமல், அதற்காக ஏங்குகிற உள்ளங்களுக்கு ஒரு முத்தம் அதிலும், முதல் முத்தம் என்பது வாழ்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அரிய பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை, சிறந்த கதைக்காகவும், காவியங்களுக்காகவும், நடித்து தியாகம் செய்தும் செய்யப்போகும் ஒவ்வொரு கலைஞனுக்கும் இக்கதை சமர்ப்பணம்…

எழுத்து வடிவம்: நடராஜ்.வி.

Print Friendly, PDF & Email

2 thoughts on “முதல் முத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *