பவித்ராவும் நானும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 11,790 
 
 

3. குறுந்தொகை பாடல் – 28 (ஔவையார் – முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?

ஏண்டீ.. இப்டி இருக்கே …. என்னா ஆச்சி உனக்கு…

பதில் வரவில்லை பவித்திராவிடம் இருந்து. வாயை திறந்தா என்ன முத்தா கொட்டிடும்.

கமலத்தை முறைத்து பார்த்தாள் பவித்ரா.

எழுந்து செல்ல இருந்தவளை பிடித்து உட்கார வைத்தாள்…

ஏன், ஒரு மாதிரியாக இருக்கே……

மனசு வலிக்குதுடீ

ஏன்,

ஒன்னும் தெரியாது மாதிரி கேட்கிறியே…

இதோ ரெண்டு மூனு மாசத்திலே வரேன்னு போனான், நாலு மாசம் ஆச்சி வரல்ல, அதானே…

ஆமா…

வந்தா வரான்…. வரலைன்னா போறான் விடுவியா சனியனை…

பளார் என்று அறைந்தாள் பவித்ரா… காதல்ன்னா.. என்னன்னு தெரியுமாடி உனக்கு..?

ஐய்யே.. அந்த கண்றாவியெல்லாம் எனக்கு எதுக்கிடி… இனி அடிச்சின்னா பாரு…தெரியும் சேதி…

சரி.. அவனை நான் முத முதல்லே எங்கே வச்சி பார்த்தேன் சொல்லு…

நீ ராட்டினத்தில் உட்கார்ந்திருந்தியே… அப்போ பார்த்தேன்னு சொன்னே…

நீயும் நானும் அப்போது ஒன்பதாவது இல்லே படிச்சிக்கிட்டு இருந்தோம். கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள் பவித்ரா.

ரொம்ப நல்லவன் டீ

ம்ஹும்ம்..சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது. சரி சொல்லு…

ஒரு நாள் இரவு நேரம்… செம்ம மழை…. ஒரு கம்பெனி கேட் லேசாக திறந்திருக்க ஒதுங்க உள்ளே சென்றோம். வாட்ச்மேன் எங்கேயோ பக்கத்திலே போயிருப்பான் போலிருக்கு மணி என்னமோ ஆறரை தான். ஆனால் பத்து மணி போலிருந்தது.

கமலத்திற்கு உடம்பெல்லாம் என்னமோ செய்தது. ஏய்… சீக்கிரம் சொல்லி தொலையேன்… என்னமோ நீட்டி முழக்கிகிட்டே போற…

கேளுடீ….ஒரு இடி இடித்தது பார்… அவன் கிட்டே போய் ஒட்டி நின்னுக்கிட்டேன்… பெரிய கிழவன் போல, பயப்படாதே… என்று கூறிவிட்டு சற்று தள்ளிப் போய் நின்னுக்கிட்டான். நல்ல காலம் அந்த வாட்ச்மேன் வந்தான்.

ஏய்.. யார் நீங்க… என்று கேட்டு விட்டு படு கேவலமாக பார்த்தான். பகலவன்… வா என்று என் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

ஆமா, அவன் பேரு என்ன சொன்னே….

பகலவன்…

ஏன் பகல்லே பொறந்தானாமா… நைட்டில் பொறந்திருந்தா… ராத்ரின்னு வச்சிருப்பாங்களோ….சரி சரி… நீ ஏதோ கனவு உலகத்தில் இருக்கிறாய்… கொஞ்சமா வீட்லே வேலை இருக்கு… முடிச்சிட்டு வர்றேன். கமலம் கிளம்பினாள்.

எத்தனையோ தடவை தனியாக சந்தித்த போதும் தப்பான பார்வையோ தப்பான செயலோ அவனிடம் அவள் காணவில்லை.

வீடு வாசல் இருந்தாலும் இவளின் ஜாதி வேறு, அவர்களின் ஜாதி வேறு. பணத்தால் சரி கட்டுகிறேன் என்று கூறிப் போனான். ஒரு ஃபோன் இல்லே, லெட்டர் இல்லே…ஆயிற்று… ஐந்து மாதம்… அவன் தள்ளி போனது நல்லதாய் போயிற்று… நம் ஆசைக்கு அவன் இணங்கி இருந்தால்… இந்நேரம் ஊர் வாய்க்கு அவலாக இல்ல ஆகி இருப்போம்…

ஒரு முறை கோயிலுக்கு சென்றனர் இருவரும். புடவை கட்டி இருந்தாள். இளம் கிளிபச்சை புடவை.. இரட்டை பின்னல்கள். தலையில் பூ. .

கூட வந்த பகலவன், அவளை பார்த்து சொன்னான், பவித்ரா.. எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க….. நீ இன்னைக்கு அழகா இருக்கே…வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்.

கோயிலில் இருந்து வெளியே வந்ததும், ஒரு மரத்தடியில் உட்கார, பவித்ரா அவனது நெற்றியில் திறுநீற்றை இட்டாள். பின்பு இலேசாக ஊதி விட்டாள். சட்டென்று அவன் சிறிது விலகி கொண்டான்.

பவித்ரா…

ம்…

இங்கே இருக்கும் மலர், செடி, கொடி அப்புறம் வானம், காற்று எல்லாம் சாட்சி, நீ தான் என் மனைவி… என்ன, சரியா….

இலேசாக கன்னத்தில் சற்று குழி விழ சிரித்தபடியே தலையை ஆட்டினாள்.

கட்டி பிடித்து உருளுவதில் உள்ள சுகத்தை விட அவனின் ஒரு பார்வையே போதும் என்று இருந்தது அவளுக்கு.

எல்லா இளசுகளும் வருவதும் போவதுமாய் இருக்க, ஒரு பெரிசு மட்டும் இவங்களையே குரு குருன்னு பார்த்துக் கொண்டிருந்தது.

பகல்…

ம்…

அந்த கிழவன பாரேன்…

எதுக்கு..

நம்மளையே வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே இருக்கு….

சரி .. சரி .. கிளம்பு…

நடந்தனர் இருவரும்… அந்த ஆள பத்தி நீ என்ன நினைக்கிறே.. பகல்…

எந்த ஆளு…

அந்த கிழவன்…

அவன் பெண்டாட்டி சரியா பழகி இருக்க மாட்டார்கள். அவர்களின் நினைப்பு.. இவர்க்கு எல்லாம் அடங்கி விட்டிருக்கும் என்று.. ஆனால், சிலருக்கு வயது ஏற ஏற தான் ஆர்வம் அதிகம் ஆகும். பேப்பரில் படிக்கல….சிறு வயது குழந்தைகளை 60 வயது 70 வயது ஆண்கள் பாலியல் பலாத்காரம் என்று.

ஒரு பெரிய கிழவன் மாதிரி பேசினான் பகலவன். நான் என்ன சொல்றேன்னா.. பெண்கள் எத்தனை வயதானாலும் தன் கனவனை அன்புடனும் ஆசையுடனும் பார்த்து கொள்ளனும். பேசனும்,… நல்லா அன்பா கணிவா பார்த்துக்கனும்.. அவரின் உணர்ச்சியை அறிந்து நடந்துக்கணும். இதையும் மீறி கிழடுகள் தப்பு செய்தால் தூக்கி உள்ளே போட வேண்டியது தான்.

பெரிய கிழவன் மாதிரி பேசுறியே.

இன்னும் ஒரு இருபத்தொன்பது முப்பது சேர்ந்தால் கிழவன் தான்… உயிரோடு இருந்தால்…

ஏன்.. உயிரோடு இருந்தால்ன்னு சொல்றே…

ரீசண்ட்டா…. இல்லே ஒன்றரை ரெண்டு வருஷம் இருக்கும்…ட்ரெக்கிங்க் என்று சென்னையில் இருந்து ஒரு குரூப்பும், இன்னும் சில பேரும் தேனீ மாவட்டத்தில் உள்ள குரங்கனி என்ற தோட்டத்தில் உள்ள ஒத்த மரம் ஷூட்டிங்க் ஸ்பாட்டிற்கு சென்றவர்களில் இருபது பேர் என்னமோ இறந்துட்டாங்களாம்… எத்தனை கனவுகளுடன் இருந்திருப்பார்கள்..?

பகல்… கொஞ்சம் நிறுத்தேன்…

எதை..

இந்த பேச்சை தான்….

என் ஃபிரண்ட்ஸ்க்கு தெரிந்தவர்களில் ஒருத்தர், மதுரை அப்பல்லோ ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி, 12 நாள் கழித்து இறந்து விட்டார்கள். நடை பிணமாய் தற்கொலை செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள் அந்த பெண்ணின் தாய் தந்தையர்.

ஐய்யோ பாவமே…

ஆமாம்.. அவர்கள் கருட புராணத்தில் படித்தாக கூறினார்களாம். தற்கொலை செய்து கொண்டால், ஆவியாக தான் அலைய வேண்டும் என்று. அப்புறம், அந்த ஆத்மாவிற்கு யார் கர்மா செய்வது….

நல்லா தெளிவாக ஒரு ஞானியை போல் பேசினான் பகலவன்.

ஏண்டீ… என்ன பண்றே… இன்னுமா இங்கேயே இருக்கே… கமலா அருகே வந்து அமர்ந்தாள்.

காரக்குழம்பா டீ…

ஆமாம் .. என்ன வாசனை வருதா..

ம்ம். உலகத்திலேயே இந்த காரகுழம்ப எந்த குழம்பாலும் அடிச்சிக்க முடியாது…

போறப்ப வர்றேன்.. கொஞ்சமா கொடு…

ம்…. கற்பனை..,. எல்லாம் எந்த அளவில் இருக்கு…

அவனை மாதிரி யாரும் இருக்க முடியாதுடி…

ம்ம்.. ஆரம்பிச்சுட்டியா…

ஒரு தடவை வீட்டில் பொய் சொல்லிட்டு அவனோடு சினிமாவுக்கு போனேன். எங்களுக்கு முன்னாடி, கடைசி சீட்டில் எங்க வயசு தான் இருக்கும்… என்னென்னமோ செய்துகிட்டு.. ச்சீ.. பாக்கவே கேவலமாக இருந்தது.

இதை பார்த்த பகல் என்ன செஞ்சான் தெரியுமா…

ம்ம்.. சொல்லு… சொல்லு… ஆர்வத்துடன் கேட்டாள் கமலம்…

பாத்துடீ…கண்ணு வெளியே வந்துவிட போவுது…

என் கையை பிடித்து, வேறு இடத்திற்கு அழைத்து சென்று விட்டான்…..

போகும் போது.. காரக்குழம்பை வாங்கி சென்றாள் பவித்ரா மறக்காமல். . இரவில் ஊரே உறங்கியது. பவித்ராவிற்கோ தூக்கம் வரவில்லை. ஊரே அமைதியாக உறங்குவதை கண்டு பொறாமையாக இருந்தது.

அப்பாவின் செல் ஃபோனிற்கு ஃபோன் வந்தது…

பவித்ரா..அப்பாவா?

ஆமாம்… நீங்க யாரு…

நான் பவித்ராவோட நண்பன்… வெளி நாட்டில் வேலை செய்கிறேன்.. ரெண்டு நாளில் வந்து விடுவேன். அதே வேலையை நம்ம ஊரிலேயும் செய்யலாம். எனக்கு அம்மா இல்லே, அப்பாவும் ஒரே தம்பியும் தான். பவித்ராவை நான் நல்லா பாத்துப்பேன்… எனக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து தர்ரீங்களா..? நீங்க சரீன்னா நான் என் ஃபேமிலியோட புதன்கிழமை காலையில் வர்றேன்…..

ஃபோனை கட் செய்தார் பவித்ராவின் அப்பா.

மீண்டும் ஃபோன் வர… எடுத்தார்… யார்ரு…

நான் தான் பகலவன். பேசிக்கிட்டே இருக்கிறப்பவே ஃபோனை கட் பண்ணிட்டீங்களே…

நேரே வாப்பா.. பேசிக்கலாம்… இப்போ ஃபோனை வைக்கட்டுமா….

அமைதியாக சற்று நேரம் உட்கார்ந்தார். வசந்தி.. என்றார்….ஏங்க… வந்து நின்றாள் பவித்ராவின் தாய். பவித்ரா… என்று கத்தி கூப்பிட கொல்லையில் இருந்து வந்தாள் பவித்ரா.

ரெண்டு பேரும் நிற்க… சற்று தயங்கியவராய்… பவித்ரா.. உனக்கு பகலவன்… அப்படின்னு யார்ன்னா தெரியுமா…?

ஆமாம்ப்பா…

பழக்கமா…

ம்ம்ம். ஒரு தடவை திருவிழாவில் வைத்து பார்த்தது… அப்படியே ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம்ப்பா….சிறு வயதில் இருந்தே அப்பா என்றால் கொள்ளை பிரியம். அதனால் பயமின்றி பேசினாள் பவித்ரா.

உனக்கு அவனை பிடிச்சியிருக்கா…

ம்ம்ம்.. சரி புதன்கிழமை ரெண்டு பேரும் ரெடியா இருங்க.. எங்கேயும் வெளியே போயிடாதீங்க.. நானும் வேலைக்கு லீவ் சொல்லிடறேன். அந்த பையன் வர்றான்.

வெளியில் வண்டியிண் சத்தம் கேட்டது. அப்பா வேலைக்கு போயிட்டார்.

என்னடி.. என்ன நடக்குது இங்கே… பகலவனை பற்றி கூறினாள். நீ சந்தோஷமா இருந்தா அது போதும்மா எனக்கு. உன்னை கண்ணு கலங்காம பார்த்துப்பானா…

நிச்சயமா…

புதன்கிழமை வந்தது. பகலவன் தன் குடும்பத்துடன் வந்தான். பேசினார்கள். அவனே திருமணம் முழுவதும் பார்த்துக்கிட்டான். முதலிரவில், பகலவன், பவித்ராவின் கையை காதலொழுக, அன்புடன் கரம் பற்றினான்.

நீ என்ன நினைத்தாய் என்னைப் பற்றி…

ஆண் மகனில் நீ வித்தியாசமானவனாய், நல்ல மனித தன்மையுடன், பொம்பொள பொறிக்கியா இல்லாம நல்லவனாக இருக்கோணும்ன்னு கடவுள் கிட்டே வேண்டிக்கிட்டேன். நீ எப்பவும் அப்படியே இருக்கணும்..வாழ்க்கையில் நம்ம ரெண்டு பேருக்குள்ளே எந்த பிரச்சனை வந்தாலும் பேசி தீத்துக்கணும்…

கண்டிப்பாக…ஒரு படத்தில் பத்மினி அம்மா, சிவாஜி சாரிடம், இத்தனை வகையான இனிப்புக்கள் உள்ளது. பார்ப்பதற்கு நிறத்திலும், அளவிலும் பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கும். ஆனால் இனிப்பின் தன்மை என்னவோ ஒன்று தான் என்பார்கள். நான் சிறியவன் தான். ஆனால் எது செய்தால் நம் குடும்பமும், நம் சந்ததியினரும் வாழ்வாங்கு வாழ செய்ய முடியுமோ அந்த காரியத்தை மட்டும் தான் நான் செய்வேன். இது, இந்த முதல் இரவில் நான் உனக்கு செய்து தரும் சத்தியம் என்றான். பவித்ராவும் நானும் எப்பவுமே சந்தோஷமா இருப்போம்.. என்ன சரி தானே?

வண்டு தன்னை நெருங்குவதை கண்டு, தன் வளையல்கள் நிறைந்த கைகளால் தன் கண்ணை மெல்ல மூடினாள் பவித்ரா, தன் வாழ்க்கை பாதையும் பவித்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன். நாமூம் நம்புவோம் நல்லதையே….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *