சுசீலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 23,367 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுசீலை தன் தந்தையின் தூரபந்துவாகிய அம்மணியம்மாள் கூட வசிக்கத் தொடங்கி ஒரு வருஷத் திற்குப் பிற்பாடு தான் இராமநாதனை முதன்முறை சந்தித்தாள். இராமநர் தன் அம்மணியம்மாளுடைய தங்கையின் குமாரன்.

சுசீலை சிறு குழந்தையா யிருக்கையிலேயே அவள் தாய் இறந்துவிட்டாள். அவள் தகப்பனார் பெருஞ் செல்வவானாயிருந்தார். அவருடைய பண முழுவதையும் போட்டிருந்த அர்ப்பத்நட் பாங்கு திடீரென்று முறிந்து விட்டது. தமது ஏக் புத்திரியை வறுமை வாழ்விற்கு இரையாக்கி விட்டோமே என்ற ஏக்கம் பிடித்து அதுவே நோயாக விரைவில் மரணமடைந்து விட்டார்.

சுசீலைக்கு வயது பதின்மூன்று. நிரம்ப அழகு வாய்ந்தவள். ஆதரவு செய்வர் ரொருவரு மின்றித் தவித்துக்கொண்டிருந்தாள். சுசீலையின் பிதா இறந்து விட்டதைக் கேள்வியுற்றதும் அம்மணியம்மாள் துக்கம் விசாரிக்கச் சென்றாள். சென்ற இடத்திலே சுசீலையின் நிலையை யுணர்ந்து அவளைத் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து தனது குழந்தைபோல் பாவித்து மிக்க் ஆதரவோடு வளர்த்து வந்தாள். அம்மணியம்மாள் ஒரு விதவை. அவளுடைய அகமுடையான் பொருட் செல்வத்தை நிரம்பத் தேடிவைத்து விட்டு இறந்தார். குழந்தைச் செல்வம் இல்லை.

அம்மணியம்மாள் இல்லாவிடில் தன் கதி என்னவா யிருக்கும் என்று சுசீலை அடிக்கடி நினைத்து வருந்துவாள். தன்மீது தாயினும் மேலாக அன்பு பூண்டு போற்றிவந்த அம்மணியம்மாளிடம் மிகுந்த பக்தி விசுவாசத்துடன் அவள் ஒழுகி வந்தாள்.

இராமநர் தனைச் சுசீலை பார்த்ததே இல்லை; ஆனால் அவன் சென்னையில் கிறிஸ்தவ கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த போது எடுத்த படமொன்றை அசிமணி யம்மாள் தன் வீட்டு மாடி ‘ஹாலி’ல் தூக்கியிருந்தாள். அவன் பேரில் அம்மணியம்மாளுக்கு மிகுந்த பிரியம். தன் பெரிய தர்யாரது அன்பு நிறைந்த கண்களுக்கு அவன் எவ்வளவேர் அழகுள்ளவனாகவும் எவ்வளவேர் சிறந்த குணங்களுள்ளவனாகவும் தோன்றியது ஓர் ஆச்சரியமாகுமா? இப்போது அவன் வான சாஸ்திரத்தில் மகா நிபுணனாய்ச் சென்னைச் சர்வகலாசங்கத்தின் ஆராய்ச்சிச் சாலையில் ஒரு தலைமை யாசிரியனாக் விளங்கினான்.

விடுமுறைக் காலத்திலே அவன் தனது பெரிய தாயார் வீட்டிற்கு வருவதர்க எழுதியிருந்தான். தான் எழுதிவருகிற க்கோள சாஸ்திரத்தை முடித்தற்கு, சந்தடி யில்லாத அமைதியான கிராம வாசந்தான் தக்கதாகு . மென்று அவன் கருதினான். அவன் வருகிறானென்று கேள்விப்பட்டதும் சுசீலை அடைந்த வருத்தத்தைச் சொல்லி முடியாது. தான் இதுவரை அனுபவித்து வந்த சௌக்கிய வாழ்விற்கு இடையூறு ஏற்பட்டுத்தான் வேறெங்கேனுஞ் செல்ல வேண்டிய தாயிருக்குமோ என்று மிகவும் பயப்பட்டாள்.

இராமநர் தன் வந்துவிட்டான். அவனைச் சுசீலை எதிர்பாராத விதமாக நேருக்குநேர் பார்த்துவிடும்படி வாய்த்தது. அவன் கடிதத்திலிருந்து மத்தியானத்திற்கு மேல் தான் அவன் வீடு வந்து சேருவதாயிருக்குமென்று அம்மணியம்மாள் எதிர்பார்த்திருந்தாள். வீட்டை அதி காலையிலே மெழுகிக் கோலமிட்டு, பூச்செடிகளுக்கெல்லாம் நீர்வார்த்து, பார்ப்பதற்கு ரம்மியமாயிருக்க வேண்டும் ஏற்பாடுகளை அந்த அம்மாள் செய்துகொண்டிருந் தாள். சுசீலை தெருவாசலில் நின்று வீட்டினழகைப் பார்த்த வண்ணமாக இருந்தாள். திடீரென்று ஒரு கார் வந்து நின்றது. இராமநர் தன் ஒரு நண்பனின் உதவி யால் காலையிலேயே வீடு வந்து சேர முடிந்தது. சுசிலை திரும்பிப் பார்த்ததும் இராமநர் தன் வண்டியிலிருந்து இறங்கி நின்றதும் ஒரே சமயமாயிருந்தது.

இராமநர் தன் அழகு வாய்ந்தவன் என்று அவன் பெரிய தயார் சொல்லிக்கொண்டிருந்தது உண்மை தர்ன், கம்பீரமான முகம்; பளபளப்புடன் கறுத்து விளங்கிய தலைமுடி கிராப்பு’ செய்யப்பட்டிருந்தது. நல்ல தேக்க்கட்டு; புயங்கள் சிலம்ப வித்தையிற் பழக்க மடைந்தன போல் வலுத்துத் திரண்டிருந்தன; கண்களில் அசாதாரணமான ஒளி; ஆனால் சாந்தமும் ஆழ்ந்த சிந்தனையும் அங்கே குடிகொண்டிருந்தன.

***

அம்மணியம்மாள் சுசீலையின் சரித்திரத்தைச் சுருக்க . மாகக் கூறி முடித்தாள், இராமநாதனுடைய கண்கள். சிறிது கலங்கின. இத்தனை இள வயதில் அவள் பெற்றோரை இழந்துவிட்டது பெருந் துர்ப்பாக்கியந்தர் னென்று வருந்திக் கூறினான்.

சுசீலையின் மெல்லிய அழகிய சரீரம் எல்லாவகை யிலும் லக்ஷணம் நிரம்பிய தர்க இருந்தது. அவளது அழகு இராமநர் தனது கனவுலகில் அபூர்வமாகக் காட்சி யளிப்பது போலத் தோன்றிற்று. அவளது பொன் போன்ற மேனியும், கறுத்து நெய்த்துச் சுருண்டகூந்தலும் அவனைப் பரவசமாக்கி விட்டன என்றே கூறவேண்டும். அவள் தன் மருண்ட கண்களை நிமிர்த்துப் பார்க்குந் தோறும் அவனுடைய உள்ளம் கலக்கமடைந்தது.

அவளும் தன்னைக் கண்டு அவன் கலக்கமுறுவதை ஒருவாறு உணர்ந்தாள். இதுவரை அமைதியோடிருந்த வாழ்க்கை இனிச் சஞ்சலப்படுமோ என்று பயமுங் கொண்டாள்.

இராமநாதன் வந்து ஒரு வாரமாயிற்று. அதன் பின் தான் ஓர் ஆண் மகனது வாழ்க்கை -கலத்தில் தனது கருத்துச் சஞ்சரிக்கக் கூடுமென்பதைச் சுசீலை உணர்ந்தாள். இராமநாதனோ எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையோடேயே இருந்தான். புஸ்தகம் எழுதுவதில் முழு நோக்கங்கொண்டுள்ள ஒருவன் இப்படி யிருந்தது ஆச்சரியமல்ல, என்றாலும், ஏதேனும் சுசீலைக்கு ஆக வேண்டியது இருக்குமானால் அதை எப்படியோ உணர்ந்து முன் கூட்டியே செய்து விடுவான்.

ஒரு நாள் இரவு வான மண்டலத்தில் நக்ஷத்திரங்கள் தெளிவாகவும் அழகாகவும் விளங்கிக் கொண்டிருந்தன. தனது தூரதிருஷ்டிக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு மூன்றாம் மாடிக்கு இராமநாதன் போய்க் கொண்டிருந் தான். மாடிப்படிக்கருகில் தனது பெரிய தாயாரும் சுசீலையும் நிற்பதைக் கண்டான். அவர்களை நோக்கி “‘நக்ஷத்திரங்களைப் பார்க்க வருகிறீர்களா? நான் மூன்றாம் மாடிக்குப் போகிறேன்” என்று சொன்னான். அம்மணி அம்மாள் தனக்கு மாடி ஏறி இறங்குவது முடியாதென்றும், வேண்டுமானால் சுசீலை போய்ப் பார்க்கலாமென்றும் சொன்னாள். சுசீலைக்கோ அரைமனதாக இருந்தது. முடிவில் சும்மா போய்ப் பார்” என்று அம்மணி யம்மாள் கூறவே, அவளும் பின் சென்றாள். அவளுடைய இருதயமானது சிறிது வேக்மாக்வே துடித்துக் கொண்டிருந்தது.

இருவரும் மூன்றாம் மாடியிற் போய்ச் சேர்ந்தார்கள். சுசீலை சிறிதுநடுக்கத்துடனேயே நின்றுகொண்டிருந்தாள். இராமநாதன் அவளை அருகில் வரச் செய்து ஆகாயத்தை உற்று நோக்கச் சொல்லி அங்கே காணப்பட்ட நக்ஷத்தி ரங்களை ஒவ்வொன்றாகக் காட்டினான். ஒரு சிறு நக்ஷத்திரத்தைக் காட்டி அதைக் கவனித்து நேர்க்கும் படியாகச் சொன்னான். அவளுக்கு அந்நக்ஷத்திரம் அவ் வளவு தெளிவாகத் தெரியவில்லை. எந்த நக்ஷத்திரத்தை என்று தயங்கிக் கேட்கவே, அவன் அவளது மெல்லிய விரலின் நுனியைப் பிடித்துத் தன் விரலோடு சேர்த்து உயர்த்தி நக்ஷத்திரத்தைக் காட்டினான். பின் கிரகங் களுடைய பெயர்களை ஒவ்வொன்றாகச் சுட்டிச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்பெயர்களெல்லாம் இவள் காதில் தெளிவர்க்ப் பட்டன என்று சொல்லமுடியாது. தான் சொல்லுவதைக் கவனிக்கவில்லை யென்பதைத் தெரிந்து கொண்டு நான் சொன்னதை நீ முழுவதும் கவனிக்க் வில்லை போல் தோன்றுகிறதே” என்றான். சுசீலை சிறிது வெட்க மடைந்தாள். “நக்ஷத்திரங்களின் பெயர்களைப் பற்றித் தர்னே கூறுகிறீர்கள். என்றாலும் எத்தனையோ லக்ஷக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவைகளைப் பற்றி இத்தனை உற்சாகம் காட்டுவதற்குக் காரணம் தெரியவில்லை. இவற்றின் முன் நான் எவ்வளவேர் அற்ப மென்று எனக்குத் தோன்றுகிறது” என்று சொல்லிச் சிறிது நடுங்கினாள்: “மக்கள் எல்லாருமே இவைகளை நோக்கும்போது மிக மிக அற்பந்தான்” என்று இராம நர் தன் பதிலளித்தான். பழையபடி சுசீலைக்கு ஒரு சிறு நடுக்கம் உண்டாயிற்று. “உனக்குக் குளிருகிறதென்று நினைக்கிறேன்” என்று சொல்லி அவளைக் கீழே இட்டு வந்தான்.

அன்றிரவு சுசீலை கனவு கண்டாள்: இருவரும் மாடிக்குச் சென்று வானத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள். பிறைச்சந்திரன் தாழ்ந்து தாழ்ந்து தங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. தங்கள் கைக்கு எட்டக் கூடிய தூரத்தில் ஒரு பெரிய ஊஞ்சல் போல அது தொங்கிக் கொண்டிருந்தது. இராமநாதன் தன்னை ஜாக்கிரதையாக எடுத்து அவ்வூஞ்சலின் மீ துவைத்தான்; தானும் ஏறிக்கொண்டான்; ஊஞ்சல் மிக்வேக்மாக ஆடத் தொடங்கிற்று. “என்னுடன் இவ்வூஞ்சலில் ஆடிச் சந்திரமண்டலம் போவதில் உனக்கு அச்சமில்லையா?” என்று கேட்டான். “நீ அருகிலிருக்கும் போது எனக்குப் பயமென்பது தோன்றவில்லை” என்று மறுமொழி கூறினாள். அப்போது இராமநர் தனுடைய முகத்திலே இதுவரையிலும் இல்லாத ஒரு புதிய புன்னகை தவழ்ந்தது. தாங்கள் ஏறியிருக்கும் பிறைச்சந்திரனது ஒளி கூட இப் புன்னகையொளியின் முன் மங்கிப் போயிற்றென்றே நினைத்தாள். அந்த ஒளியிலேயே மனம் ஊன்றி நின்று கண்ணயர்ந்து உறங்கி விட்டாள். காலையில் விழித்தெழுந்துங் கூட அந்தக் கனவு அவள் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. தன்னைச் சந்திர மண்டலத்திற்கு அழைத்துச் சென்ற இராமநர் தன் மீது சுசீலைக்குக் காதல் அரும்பத் தொடங்கிற்று.

ஆனால் இராமநாதன் தன்னைப்பற்றி நினைப்பதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. அவளுடைய அழகு சாதாரணமான தன்று என்பதை அவன் தெரியாதவனல்ல. அதைப்பற்றி அவன் மகிழ்ச்சி கொண்டு பெரிய தாயாருடன் வேடிக்கையாகப் பேசுவதையும் அவள் கேட்டிருக்கிறாள். என்றாலும், அவன் மனத்தில் அது சிறிதும் பதிந்திருப்பதாக் மாத்திரம் தெரியவில்லை. சுசீலைக்கு இது மிகவும் வருத்தத்தை உண்டு பண்ணிற்று. இவ்வாறு வருத்தம் நேரிடுங் காலங்களில் இவள் அவ் வீட்டிலுள்ள புஸ்தக் அறைக்குச் சென்று புஸ்தகங்களை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பாள். காவியச் சுவையிலே அவள் மிகவும் ஈடுபட்டிருந்தாள்.

ஒரு நாள் அம்மணியம்மாள் தனது தோழி யொருத்தி வீட்டிற்குச் சென்றிருந்தாள். மழை பெய்து கொண்டிருந்தது. இராமநாதன் தான் எழுதிக் கொண்டிருந்த புஸ்தகத்தில் மனம் அழுந்தியிருந்தான். சுசீலை புஸ்தக அறையிலுள்ள ஒரு நாற்காலியில் சாய்ந்திருந்து புஸ்தகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வாசிக்க் முயன்றாள். ஆனால் அவள் மனம் படிப்பில் செல்லவில்லை; மேல்மாடியில் எழுதிக் கொண்டிருக்கும் இராமநாதனைப் பற்றியே அவள் சிந்தனை செல்லலாயிற்று. அப்போது திடீரென்று ஆளரவம் கேட்டது.

வந்தவர் தனது தந்தையினுடைய பழைய நண்பரில் ஒருவரான பேசாமநர் தர். அவர் புஸ்தகங்கள் பிரசுரித்து வெளியிடும் தொழிலை மேற்கொண்டிருந்தவர். அவரைக் கண்டதும் சுசீலையின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. அவர் “சௌக்கியந்தானா ?” என்று கேட்டுக் கொண்டு உள்ளே வந்து சுசீலையின் பக்கத்திலிருந்த ஒரு நாற்காலி யில் உட்கார்ந்தார். “ என்ன வாசிக்கிறாய் ? கண்ணன் பாட்டுத்தானா?” என்று கேட்டார். “பாரதியை நான் அடிக்கடி வாசித்து வருகிறேனென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டதும், அவர், “நீ என்ன தான் வாசித்துக் கொண்டிருப்பாய் என்பதைக்கூட நான் சொல்லிவிடுவேனே ” என்று கூறினார்.

“ஆமாம், நீங்கள் சொல்லியது சரிதான்.”

“சரி, பாடு பார்ப்போம். எனக்கும் பாரதி பாட்டுக்களில் மிகப் பிரியம். நானும் சொல்லிப் பார்க்கிறேன்.”

காற்று வெளியிடைக் கண்ணம்மா!- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்

என்ற பாட்டைச் சுசீலை பாடத்தொடங்கினாள்.

“மிக அழகான பாட்டைப் பொறுக்கியிருக்கிறாய். அம்மணியம்மாள் இன்னும் திரும்பவில்லை. இராமநர் தன் அந்தப் பாழாய்ப் போன ககோள் சாஸ்திரத்தை ஓயாமலெழுதிக் கொண்டிருக்கிறான். நான் தான் அதைப் பிரசுரிப்பதாக் ஒத்துக் கொண்டிருக்கிறேன், இருந்தர்லும் இப்படியா செய்கிறது? எப்பொழுதும் எழுத்து வேலை தானா? உன்னைப் போல ஒரு யுவதி எத்தனை அழகாய்ப் பாடினாலும் அவனுக்குக் கர்தும் இல்லை, கண்ணும் இல்லை! அதை அனுபவிப்பது என் அதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும்.”

இப்படிச் சோமநாதர் சொன்னதும் சு சீலை தன்னருகில் கிடந்த சிறு திண்டை அவர் மீது எறிந்து சிரித்து விட்டு முன் போலவே செள் கரியமாக உட்கார்ந்து கொண்டாள். சோமநாதருக்குச் சுமார் 55 வயது இருக்கலாம். பெரிய குடும்பி. சுசீலை சிறு குழந்தையாயிருக்கும்போது அவர் இவளை மடிமீதெடுத்து வைத்துச் சீராட்டியவர். தன் தந்தையிடத்தில் கூச்சமின்றி விளையாடுவது போலவே சுசீலை அவரிடத்தில் விளையாடுவாள்.

இருவரும் பாடினார்கள். இருவரது குரலும் ஒத்து இசைந்து சென்று, கேட்பதற்கு மிக் இனிமையாயிருந்தது. கடிகாரம் ‘டிக்டிக் ‘ என்று அடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று ஆளரவம் கேட்டது. சுசீலை திரும்பிப் பார்த்ததும் இராமநாதனைக் கண்டாள். “ஏதாவது வேண்டுமா?” என்று சிறிது கலக்கத்துடன் கேட்டாள்.

“விசேஷமர் யொன்றுமில்லை. நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாடுவது மிக நன்றாவிருக்கிறது. எவ்வளவு நேரமாகப் பாடுகிறீர்களேர்?”

பதில் கூறாது இருவருஞ் சிரித்தார்கள்.

“வானுலகத்திலுள்ள தாரகையைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதைக் காட்டிலும் தன் அருகிலுள்ள ஒரு சிறுமியின் அழகொளியைக் கண்டு மகிழ்வது நல்லதல்லவா?” என்று கூறிக் கொண்டே சேர்மநாதர் . எழுந்திருந்தார். “உன் பெரிய தாயார் வந்து விட்டாளேர்?”

“ஆமாம், வந்தாயிற்று. உங்களிருவரையும் காப்பி சாப்பிடுவதற்கு அழைத்தாள்,” என்றான் இராமநாதன்.

“கேட்டியோ அம்மா! இரண்டு பேரும் சேர்ந்து ஒரு காதற் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்தால் அப்படிக் காதற் பாட்டைப் பாடுவார்களென்று உனக்குத் தோன்றுகிறதா?” என்று தன் பெரிய தாயாரைப் பார்த்து இராமநாதன் கேட்டான்.

சுசீலையைத் தவிர எல்லாரும் சிரித்தார்கள். அவள் மட்டும், “எனக்குப் போது போகவில்லை. படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் வந்தார். இருவரும் பாடிக் கொண்டிருந்தோம்” என்று கூறினாள்.

“சேர்ந்து பாடுவதற்கு நானும் வந்திருப்பேனே; என்னை ஏன் கூப்பிடவில்லை?” என்றான் இராமநாதன்.

சுசீலைக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது இராமநாதன் மனம் காதற் கொந்தளிப்பினால் சுழன்று மறுகுகிறதேர் என்று நினைத்தாள். எல்லையற்ற வேதனையின் அடையாளமல்லவர் இவ்வார்த்தைகள்? ஏன் இந்த வேதனை!

மறுநாள் காலையில் தபால் மூலமாக ஒரு கடிதம் வந்தது. அதன் முத்திரையை அம்மணியம்மாள் கண்டதும் பேருமகிழ்ச்சியடைந்து “எனக்குத் தெரியுமே! சுந்தரியின் பெற்றோர்கள் வெகுகாலம் தங்கியிருக்க மாட்டார்களே! வந்துவிட்டார்க் ளென்று தோன்றுகிறது.”

சுசீலை :– யார்?

அம்மணியம்மாள் :– சுந்தரியின் பெற்றோர்கள். மேலே மாடியில் ஓர் அழகான பெண்ணின் படத்தை நீ பார்த்திருக்கிறாயல்லவோ? அதுதான் சுந்தரி. அவள் பெற்றோர்களும் அவளும் பம்பாய்க்குப் போய் ஒரு வருஷமாகிறது. அங்கே சுந்தரியின் தகப்பனாருக்கு உத்தியோகம். அவர்களெல்லாரும் வர வேண்டிய காலம் ஆகிவிட்டது. ஒருத்தன் எத்தனை காலமாகத்தான் சுந்தரிக்காகக் காத்திருப்பது?

சுசீலை:-யார் காத்திருக்கிறார்கள்?

அம்மணியம்மாள் :-யார்! இராமநாதன்.

சுசீலையின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டினது போல் இருந்தது.

அம்மணியம்மாள் :- சுந்தரி என் அண்ணாவின் குழந்தை, இராமநாதனும் சுந்தரியும் சிறு குழந்தைகளாயிருக்கும் பொழுதே இணைபிரியாத தோழர்களர்யிருந்தார்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டி வந்தார்கள். இதைக் கண்டு இருவருடைய பெற்றோர்களும் இருவரையும் மண்முடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள். ஆனால் சௌக்ரியம் வாய்க்கவில்லை; என் அண்ணா தூரதேசங்களிலே வேலையாயிருந்தார். இப்போது தான் வருகிறார்.

சுசீலை :- என்றைக்கு வருகிறார்கள்?

அம்மணியம்மாள் :–கடிதம் வந்திருப்பதால் சீக்கிரம் வருவதாயிருக்கும். வந்தவுடன் கலியாணம் நடக்கும்.

சுசீலைக்கு உடம்பு என்னவோ ஒரு மாதிரியாக இருந்தது. சிறிது வாட்டத்துடன் அறைக்குச் சென்றாள். இராமநாதன் காதலுணர்ச்சி யற்றவனாபிருப்பதன் காரணம் இப்போது தான் தெரிந்தது. அவன் மன அடக்கத்தைக் குறித்து ஒருவாறு மகிழ்ச்சியும் அடைந்தாள். சுந்தரியை முன் ஒரு முறையும் பாராதவளாயிருந்தும் அவள் மீது வெறுப்புக் கொண்டாள்.

அறைக்குச் சென்றபோதிலும் அங்கே அவளால் இருக்க முடியவில்லை. தனியேயிருந்தால் தன் மனத்திலிருக்கும் பாரம் அதிகப்படுவது போலத் தோன்றிற்று. உடனே அம்மணியம்மாள் இருக்குமிடத்திற்கு வந்தாள்.

“ஏனம்மா! உனக்கு உடம்பு என்ன செய்கிறது? ஒருமாதிரியாக இருக்கிறாயே! முகத்தைப் பார்க்க முடியவில்லையே! நான் வெளியே போகிறேன். டாக்டரை வரச் சொல்லட்டுமா?”

“வேண்டாம், கொஞ்சநேரத்தில் எல்லாம் சரியாய்ப் போய்விடும். நான் இங்கேயே இருக்கிறேன்.”

அம்மணியம்மாள் புறப்பட்டுப் போய்விட்டாள். சுசீலை தன்னை யறியாமலே புஸ்தக் அறைக்குச் சென்று உட்கார்ந்தாள். துக்கம் மேலிட்டது ; கண்ணீர் வடிந்தது. தனக்கு இனி வாழ்வென்பதே கிடையாது என்று எண்ணலானாள்.

அன்று மாலையில் புதிதாக ஓர் அம்மாள் அம்மணியம்மாளைத் தேடிவந்தாள். அவள் அவ்வூர்ப் பெண் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயினி. பள்ளிக் கூடத்தில் மறுநாள் ஒரு விசேஷம் நடக்கப்போகிற படியால் அதில் சுசீலை ஏதாவது ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று ஏற்பாடு செய்வதற்கு வந்தாள். சுசீலை முதலில் மறுத்துப் பார்த்தாள். சோமநாதர் அவளது பாட்டுத் திறமையைப்பற்றிக் கூறியிருப்பதால் அவள் அவசியமாக் வந்து தான் தீரவேண்டுமென்று உபர்த்தியாயினி வற்புறுத்தினாள். தான் போய்ப் பாடுவது அம்மணியம்மாளுக்கும் திருப்தியா யிருக்குமென்று உணர்வே சுசீலை உடன்பட்டாள். உபாத்தியாயினி திருப்தியுடன் விடைபெற்றுச் சென்றாள்.

“எதைப் பாடப் போகிறாய்?” என்று அம்மணியம்மாள் கேட்டாள்.

சுசீலை :- எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை.

அம்மணியம்மாள்:- கண்ணன் பாட்டுப் புஸ்தகத்திலிருந்து ஏதாவது பாடினால் போகிறது. நேற்றுப் பாடினதையே பாடு. ராமு இன்று காலை முதல் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறான். பைத்தியம் பிடித்தது போலிருக்கிறான். அவன் தன் அறையிலுள்ள புஸ்தகங்களைக் கண்டபடி விட்டெறிகிற சத்தமும் அடிக்கடி கேட்கிறது. இந்தப்படியானால் அவன் எழுதி வருகிற புஸ்தகம் எப்போ முடியும்? அதனால் வரும் பணத்தைக் கொண்டு சுந்தரிக்கு ஏதாவது நகைகள் வாங்கிக் கொடுப்பான் என்றல்லவோ நினைத்திருந்தேன்.

சுசீலை :- எதற்காகக் கோபமாயிருக்கிறார்? அவருக்குக் கோபம் வந்ததைப் பார்த்ததேயில்லையே!

அம்மணியம்மாள் :- அப்படிச் சாந்தமா யிருக்கிறவர் களுக்குத்தான் மிகுந்த கோபம் வரும். இன்றைக்குத் தபால் வருவதற்கு முன்னாலேயே அவன் கீழே வந்து விட்டானே.

சுசீலை :- ஒருவேளை சுந்தரியம்மாளின் பெற்றோரிடமிருந்து காகிதம் வந்ததோ?

அம்மணியம்மாள்:- அப்படி யிராது. அவர்களிடமிருந்து கடிதம் வந்தால் மிகுந்த உத்ஸர்கமாயல்லவா இருப்பான்? சுந்தரிக்கும் அவனுக்கும் கலியாணமாகிவிட்டதானால், அப்புறம் இவ்வளவு கோபதாபங்களுக்கு இடமே யிராது. அம்மணியம்மாள் கடைக்குப் போகவேண்டியதாயிருந்த்து. சுசீலை மறுநாள் பாடவேண்டிய கண்ணன் பாட்டைத் தயார்செய்ய வேண்டிய தாயிருந்ததால் கூடச் செல்லவில்லை. கண்ணன் பாட்டுப் பதக்த்தை யெடுக்கப் போனாள். அப்பொழுதுதான் சோமநாதர் அதைக் கொண்டு போயிருப்பது அவளுக்கு ஞாபகம் வந்தது. எனன செய்வது? தான் முந்திப் பாடின பாட்டை மனத்துக்குள் சொல்லிப் பார்த்தாள். முதற் செய்யுளில் அங்கங்கே ஞாபக் மறதியா யிருந்தது. எவ் வள்வேர் முயன்றும் அந்தச் செய்யுள் முழுமையும் நன்றாக ஞாபகத்திற்கு வரவில்லை. சோமநர் தருக்கு ஓராள் அனுப்பவேண்டும் என்று நினைத்தாள். அந்தச் சமயம் சோமநர் தரிடமிருந்தே ஒரு கடிதத்தை இராமநாதன் கையில் கொடுப்பதற்கு ஓராள் வந்தான். அவனிடம் தனக்கு அம்முதற் செய்யுளை எழுதியனுப்பும்படி ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவன் கொண்டுவந்த கடிதத்தை யெடுத்துக்கொண்டு இராமநாதன் அறைக்கு வந்தாள்.

கதவைத் திறந்தாள். உள்ளேயிருந்த இராமநாதனைப் பார்க்கவே பயமாயிருந்தது. அவன் முகத்திலே வெறுப்பும் கோபமும் போராடிக் கொண்டிருந்தன. அவனிடம் சென்று கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சரேலெனச் சுசீலை திரும்பி வந்துவிட்டாள். சில நிமிஷங்களில் இராமநாதனும் வெளியே புறப்பட்டுச் சென்றான்.

ராமு திரும்பி வரும்போது அவனை அம்மணியம்மாளும் சுசீலையும் கண்டார்கள். முன்னிருந்த வெறுப்பும் கோபமும் இப்போது சுவாலை விட்டெரியத் தொடங்கிவிட்டன. இருவரும் ஸ்தம்பித்துப் போய்விட்டார்கள். “என்ன விசேஷம்? சோமநாதர் நீ எழுதிய புஸ்தகத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டாரா?” என்று அம்மணியம்மாள் கேட்டாள்.

“இல்லை, அந்த நாசமாய்ப் போன புஸ்தகத்தை அந்தக் கிழட்டுத் திருடன் எடுத்துக் கொண்டான்” என்று கடுத்த குரலில் இராமநாதன் பதில் சொன்னான். சுசீலையைப் பார்த்து, “இந்தர், உனக்கொரு கடிதம். உனக்கு நிரம்பத் திருப்தியா யிருக்குமென்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஒரு கடிதத்தை அவளிருந்த இடத்தை நோக்கி எறிந்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான். அம்மணியம்மாள் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துவிட்டுச் சுசீலையைக் குறிப்பர்க்ப் பார்த்தாள். உடனே சுசீலை, “நாளைக்குப் பாட வேண்டிய கண்ணன் பாட்டில் ஒரு செய்யுள் இது. என்க்கு ஞாபகத்துக்கு வராததால் எழுதியனுப்பும்படி சோமநர்தருக்குக் கடிதம் கொடுத்திருந்தேன். இது என் கடிதத்திற்குப் பதில்” என்று விவரமாய்க் கூறினாள்.

“உன்னைப் பார்க்கவே, பிடிக்கரதபடி முக்த்தைத் திருப்பிக் கொண்டானே! என்ன காரணம்? இதற்கு முன் இப்படியிருந்ததைக் கண்டதேயில்லையே?”

இராமநாதன் உணவுகொள்ளக் கீழே இறங்கி வரவில்லை. அவனைப் போய்ப் பார்த்துவர அம்மணியம்மாள் மேலே சென்றாள்.

“ராமு, ஏன் இப்படியிருக்கிறாய்? ஏதாவது விசேஷமுண்டா? எங்களுக்கெல்லாம் பயமாயிருக்கிறதே!” என்று அம்மணியம்மாள் கேட்டாள்.

“எங்களுக்கு” என்று யாரைச் சொல்லுகிறாய்?”

“என்னைப் போலொத்த பெண்டுகளுக்குத்தான்.”

“பெண்டுகளென்றால் எனக்கு எரிகிறது. அவர்களைப் பற்றிப் பேசாதே. அவர்கள் எல்லாரும் கள்ளிகள். உன்னையும் என் அம்மாவையும் தவிர-”

“சுசீலையோ?”

“அவளும் கள்ளிதான்; ஒன்றும் வித்தியாசமில்லை.”

“சுந்தரியோ?”

“இந்தக் கடிதத்தைப் படித்துப்பார். விஷயம் விளங்கும்.”

“அன்புள்ள ராமுவுக்கு,

இந்த வருஷம் கலியாணம் நடத்திவிட வேண்டு மென்று உறுதியாயிருந்தேன்.. ஆனால் உனது மாமி தன் அண்னா கோபுவுக்கு. இரண்டாம் தாரமாகச் சுந்தரியைக் கொடுக்க வேண்டு மென்று பிடிவாதம் பண்ணிவிட்டாள். அவன் பணக்காரனல்லவா? பல காரியங்களைக் கட்டியளந்து சுந்தரியையும் தனக்குச் சகாயமாகச் சேர்த்துக் கொண்டாள், அவர்கள் கருத்துப் படியே கலியாணத்தை நடத்தி விடுவதென்று தீர்மானித்துவிட்டேன், எனக்கு வருத்தம்தான். உனக்கும் அளவில்லாத வருத்தம் இருக்கக் கூடியது இயல்பே. ஆனாலும் என்ன செய்வது? என் பேரிலே மனஸ்தாபம் கொள்ளமாட்டா யென்று நினைக்க்றேன்,

இப்படிக்கு,
சந்திரசேகரன்.’

அம்மணியம்மாள் வருத்தம் சகிக்க முடியாமல், சிறிது. நேரம் ஒன்றும் பேசாமல், அப்படியே இருந்துவிட்டாள். கடைசியில் ஒருவாறாகத் தெளிந்து, “போனால் போகிறது. இதற்காக சாப்பிடாமல் இருப்பானேன். வா, கீழே போவோம்” என்று அழைத்தாள்,

“சுந்தரி எக்கேடு கெட்டாலுஞ் சரியே. எனக்கு அதைப்பற்றி அக்கறையே யில்லை. ஆனால் பெண்களையே வெறுக்கிறேன். எல்லாரும் கள்ளிகள்”

அம்மணியம்மாள் மட்டும் இழே வந்தாள். விஷயத்தைச் சுசீலைக்குத் தெரிவித்தாள், பிறகு திடிரென ‘சரி! சுந்தரியை மணஞ்செய்ய முடியாததால் அவனுக்கு மனம் இடித்துதாவிருக்கிறது. ஆனால் உன்னைப்பற்றி அவ்வாறு சொன்னது கொஞ்சமும் சரியல்ல. நான் போய் அவனிடம் பேசி வருகிறேன்”

“என்னப்பற்றி என்ன சொன்னார்?”

*நீயும் எல்லாப் பெண்களையும் போல் கள்ளி தான் என்றான். பெண்களை இப்படி இழிவாய்ப் பேசுகிறவனை எனக்கு பிடிக்காது”

சுசீலைதன் அறையில் தனியாக உட்கார்ந்திருந்தாள், அவளை அரித்துத் தின்று கொண்டிருந்த மனவாருத்தம் எங்கேயோ பறந்துவிட்டது.

நாளை பாடவேண்டிய பாட்டைத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது சார்த்தியிருந்த கதவு மெல்லத் திறந்தது. ராமு வாடித் தொங்கிய முகத்துடன் உள்ளே வந்தான்.

“பெண்களெல்லாம் கள்ளிகள்; நம்பத்தகாதவர்கள் , கள்ளத்தனமாகக் காதல் செய்வது தான் அவர்களுக்கு இயல்பு போலிருக்கிறது! அப்படித்தானா?” என்று கேட்டான்.

சுசீலை ஆச்சரியத்தோடு, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்குத் தெரியவில்லையே” என்றாள்.

“சுந்தரி அப்படிச் செய்திருக்கிறாள் என்று நினைக்க வேண்டியதாயிருக்கிறது. நீயும் அப்படித்தானே?”

“நான் அப்படியொன்றுஞ் செய்ததாகத் தெரியவில்லையே?”

“கிழப்பிணங்கள் காதற்பாட்டுகளைப் பாடிக் கள்ளத் தனமாக எழுதி அனுப்பினால், அவைகளைக் கள்ளி யல்லாமல் வேறு யார் ஏற்றுக்கொள்வார்கள்?”

சுசிலைக்கு முகம் சுண்டிவிட்டது. “கள்ளிதான் அவ்வாறு செய்வாள். என்னிடம் ஏன் அதைச் சொல்ல வேண்டும்?”

“ஏன் சொல்லவேண்டு மென்றா கேட்கிறாய். அந்தக் கிழட்டுச் சோமநாதன் கள்ளத்தனமாக உனக்குக் காதற் பாட்டு எழுதியனுப்பினான். நீ அதை அன்போடு வாங்கி வைத்துக் கொண்டாயே?”

சுசீலைக்கு அப்போது தான் விளங்கிற்று. “நீங்கள் அதைப் படித்துப் பார்த்தீர்களா?”

ராமுவுக்கு மிகுந்த வருத்தமுண்டாயிற்று. தனக்குத் தகாத ஒரு காரியத்தைச் செய்து விட்டதாகச் சட்டென்று உணர்ந்தான். இப்படி யுண்ருகிறானென்று சுசீலை கண்டதும் அவளும் வருத்தங் கொண்டாள்.

“நான் பார்க்கவேண்டுமென்று நினைத்துச் செய்ததல்ல. அந்தக் கிழவன் கடிதத்தின் உறையை ஒட்டாமற் கொடுத்துவிட்டான். சுந்தரி விஷயத்தில் மனம் ஊன்றியிருந்த நான் கடிதத்தைக் கைசோர விட்டேன். அது கீழே விழும்போது உறையிலிருந்து கடிதம் வெளிவந்துவிட்டது. அப்போது அது என் கண்ணைக் கவர்ந்ததேயன்றி, நானாகப் பார்க்கவில்லை. நீ அனுப்பிய கடிதத்திற்குப் பதில் என்று சொன்னனே. நீ அப்படிச் செய்யலாமா?”

“தாங்கள் என்னைப்பற்றிக் கனவிலேனும் சிந்தித்தது உண்டேர்?”

“ஓயாத சிந்தனையுங் கவலையுந்தான். இல்லாமற் போனால், நான் அந்தக்கடிதத்தைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்கமாட்டேன். அதிலெழுதியிருந்ததைக் கண்டதும் என் வருத்தம் சகிக்க முடியவில்லை. சுந்தரி வேறொருவனைக் கலியாணம் பண்ணிக்கொள்வதில் எனக்குச் சிறிதும் வருத்தமேயில்லை.”

சுசீலையின் மனத்தில் தைரியம் பிறந்தது. ராமுவை அன்பு கனிந்த கண்களால் ஏறிட்டு நோக்கினாள். “நாளைய தினம் இவ்வூர்ப் பெண்பள்ளிக்கூடத்தில் ஒரு விசேஷம். அதில் பாரதியின் கண்ணன் பாட்டிலிருந்து ஒரு பாட்டு நான் பாடுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். அதை நானும் சோமநர் தரும் பாடியபொழுது நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அந்தப் புஸ்தகத்தை அவர் ஏதோ பார்க்கவேண்டுமென்று சொல்லி வாங்கிப் போனார். எனக்கு அரைகுறையாய் ஞாபகத்திலிருந்ததால், முழுவதையும் எழுதியனுப்பும்படி அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்தேன். அதற்குப் பதில் தான் நீங்கள் கொண்டுவந்தது. பாட்டை முழுவதுங் கேட்கிறீர்களா?” என்று கூறிவிட்டு,

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்தன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் – அமு
தூற்றினை யொத்த இதழ்களும் – நில
வூறித் ததும்பும் விழிகளும் – பத்து
மாற்றுப்பொன் னெத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ண வனாகப் புரியுமே!

நீயென தின்னுயிர் கண்ணம்மா – எந்த
நேரமும் உன் தனைப் போற்றுவேன் – துயர்
போயின போயின துன்பங்கள் – நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே – என்தன்
வாயினி லேயமு தூறுதே – கண்ணம்
மாவென்ற பேர்சொலும் போதிலே – உயிர்த்
தீயினி லேவளர் சோதியே! – என் தன்
சிந்தனையே! என் தன் சித்தமே!

என்ற செய்யுட்களைக் கந்தர்வ கான மோ என்று சொல்லும்படி இனிய உருக்கமான குரலிலே பாடினாள். அவள் அழகிய கண்களிலே காதல் கனிந்து விளங்கிற்று. ராமு அவளை அணுகித் திரும்பவும் அச்செய்யுள்களைக் கூறும்படி வேண்டினான். அவள் திரும்பவும் பாட, ராமுவும் அவளைப் பின்தொடர்ந்து சொல்லத் தொடங்கினான்:

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன். அமு
தூற்றினை யொத்த இதழ்களும் – நில
வூறித் ததும்பும் விழிகளும்

என்றதுவரை பாடல் சென்றது. இருவருடைய கண்களும் சந்தித்தன.

– ஓர் ஆங்கிலக் கதையைத் தழுவி யெழுதியது, சிறுகதை மஞ்சரி, முதற் பதிப்பு: 1944, தினமணி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *