காதலின் மகிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 18,057 
 
 

“ஏண்டி காயத்ரி, எவ்வளவு வரன் வந்துண்டே இருக்கு. எதுக்கும் ஒத்துவரமாட்டேன்கிற”, என்று அலுத்துக்கொண்டாள் மாலினி.

“என்ன அம்மா, எனக்கு பிடிச்சாப்புல வரன் எங்கே இருக்கு. பையன் ஆள் அழகா இருந்தா இங்கிலிஷ் பேச வரதில்லை, நல்ல சம்பளம் என்று பார்த்தா சுத்தி அம்மா அப்பா தங்கை தம்பியின் பொறுப்பு. இதுவுமில்லன்னா, சுயமா சிந்திக்கிற நிலைமையே கிடையாது. எடுப்பார் கைபிள்ளையா இருக்கவேண்டியது. எப்படியம்மா நான் இந்த மாதிரி பையன்களை கல்யாணம் செய்திருக்கிறது “, என்றாள் காய்திரி.

“ஏண்டி, நம் உலகத்தில் இருக்கிற மனிதனை தான் கல்யாண பண்ணமுடியும். வேறு கிரகத்திலிருந்தா உனக்கு வரன் வரும்?. நாங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கலை?”.

“நீ உங்க வீட்டு பெரியவா பார்த்து வைத்த மணமகனை கட்டின்னடவ, இப்போ காலம் மாறிப்போச்சு தெரியுமோ?”.

“பெரியவா சொல்ல கேட்டு கல்யாணம் செஞ்சிண்டதலில், நான் என்னடி அம்மா குறைந்து விட்டேன்?”.

“அது அந்த காலம். பெண்களுக்கு சுதந்திரமா கொடுத்தாங்க, பிடிக்குதோ பிடிக்கலையோ, பெரியாவா சொன்னா அப்படியே செய்யனும். வாழ்கையில் கஷ்டப்படும் போது நாம தானே அனுபவிக்கிறோம். அதுக்குத்தான் இப்போ சுயமா சிந்தித்து பையனை நாங்களே செலக்ட் செய்யறோம்”.

“ஆமா சிந்திக்கிறேள்?. எல்லா பையன்களையும் பார்க்க வேண்டியது, குறை சொல்லிகிட்டே போகவேண்டியது. இப்படியே போனா திருப்தி ஆகறது எப்போ?. கலயாணம் நடக்கறது எப்போ?. 60 வயசில தாண்டி உனக்கு கல்யாணம் நடக்கும்”.

“ஏம்மா, இப்படி அலுத்துக்கிற. நாங்களா சுயமா சிந்திச்சா பழைய தலைமுறையான உங்களுக்கெல்லாம் பிடிக்காதே”.

“கல்யாணம் செஞ்சிக்கிற சிந்தனை இருக்கா, இல்லையா?”.

“எல்லாம் இருக்கு. நான் சரியின்னு சொல்ற வரை கொஞ்சம் பொருமையாய் இரு”.

அத்துடன் மாலினி விவாதத்தை நிறுத்தினாள்.

காய்திரி தான் வேலைக்கு செல்ல ஆயத்தமானாள். போயிட்டு வரேன் என்று கூறிக்கொண்டே சாலையில் இறங்கி சென்றாள்.

கீதா மாமி ‘மாலினி’ என்று அழைத்துக்கொண்டே வீட்டினுள் பிரவேசிக்க, வாங்கோ மாமி என்று அழைத்தாள் மாலினி

“போன வாரம் வரன் ஒன்னு வந்ததே குதிர்ந்ததா? ” என்று கேட்டாள்.

“எங்கே மாமி?”, என்றாள் மாலினி.

“மாப்பிள்ளை வீட்டிலே நிறைய எதிர்பார்க்கறாளோ? பையன் வீட்டிலே அப்படி ஒன்னும் கேட்கறாப்புல தெரியலையே?”.

“இல்ல மாமி, பையன் ஆத்து மனிஷா எல்லாம் பார்க்க தங்கமானவாளா தான் தெரியரா. நம்மாத்து பொண்ணுக்குத்தான் எதுவும் பிடிக்கல”.

“பையன பாங்கில்ல வேலை செய்யாறான், ராஜா மாதிரி இருக்கான். நானே பார்த்தேனே?’.

“எங்களுக்கெல்லாம் பிடிச்சு என்ன பிரயோசனம் மாமி?”.

“இன்னொரு வரன் இருக்கு, எனக்கு தெரிஞ்சவாதான். வந்து பார்க்க ஏற்பாடு பண்ணலாமா?”.

“வர சொல்லுங்கோ மாமி! பார்க்கலாம்”.

பெண் பார்க்கும் படலம் துவங்கியது . வரன் வீட்டார் அம்மா தங்கை அப்பா மாப்பிள்ளை பையன் எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

காய்திரியை சர்வ அலுங்கார செய்து மணப்பெணாக அமர்ந்திருந்தாள்.

“பையன் எங்கே வேலை செய்யாறான்”, என்று கேட்டாள் மாலினி

“தனியார் கம்பெனியிலே மாசத்திற்கு 50000 ரூபாய் சம்பாதிக்கிறான். இவ என் மகள், கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம். இவளுக்கு இரண்டு குழந்தைகள்”, என்றாள் பையனின் அம்மா.

“உங்க பொண்ணோட வீட்டுக்காரர் எங்க வேலை செய்யறார்?”.

“வெளிநாட்டில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறாரு”.

மாப்பிளை பையனை நோக்கினாள் காய்திரி. அவனிடம் காதல் வயப்பட்டாள். கணவனாகவும் மனது திர்மானித்தது. பார்த்த நோடியில் மனம் இவன் தான் கணவன் என்றது.

“பையனை பிடித்திருக்கா?”, என்றாள் பையனின் தாயார்.

அமைதியாக தலையாட்டினாள் காய்திரி.

மாப்பிள்ளை பையனுக்கும் காயத்ரியை பிடித்திருந்தது.

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துனர்.

“ஏண்டி காயத்ரி! மாப்பிள்ளை பையன் அவ்வளவு அழகாவா இருக்கான்?”, என்றாள் மாலினி.

“என்ன அம்மா! நீ அழகா இருக்கறவரை போய் அழகாக இருக்கிறாரா என கேட்கிற?”.

“பையனோடு அம்மா கட்டன் ரைட. இவ்வளவு நகை போடணும், இவ்வளவு சீர்செய்யணும் கண்டிஷன் போடறாளேடி”.

“அவாளுக்கா எல்லாம் கொடுக்கபோற?. எனக்கு தானே கொடுக்கபோறே?”.

இவளது மாற்றத்தை கண்டு வியப்பில் ஆழ்ந்தாள் தாய்.

காதலின் மகிமையால் மனிதன் குறைகளும் மறைக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *