காதற் பலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,575 
 
 

(1940-50ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சரஸ்வதி நல்ல அழகாயிருக்கிறாளே! பால்போல வெள்ளையாய் இருக்கிறதைப் பார்த்துத்தானோ “சரஸ்வதி” என்று பெயர் வைத்தாய்? என்று செல்லம் கேட்டாள்.

சற்றுத் தூரத்தில் கட்டிநின்ற பசுவைக் கனிவுடன் பார்த்துக் கொண்டே “ஓமோம். சரஸ்வதியின் தேகத்தில் ஒரு மறுவைக்கூடப் பார்க்க முடியாது!” என்று மகேஸ்வரி கொன்னாள்.

“என்னைப்பற்றி என்ன பேசிக்கொள்ளுகிறீர்கள்?” என்று கேட்பது போல சரஸ்வதி தலையை ஆட்டிற்று அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி “டிங்” என்று ஒலித்தது.

மகேஸ்வரி பசுவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனக் கண்முன், நடந்துபோன பல சம்பவங்கள் திரையிடப்பட்டன. அவள் கண்கள் ஜலத்தைப் பெருக்குவதற்குத் தயாராயிருந்தனவென்பதை அவளுடைய முகம் எடுத்துக் காட்டிற்று அந்தக் கண்கள் சரஸ்வதியை நேராக்கிக் கொண்டிருந்தபோது இமை வெட்ட மறுத்தன. ஆனால் அவள் உண்மையில் சரஸ்வதியைக் கவனிக்கவில்லை! நாம் எங்கேயாவது பார்க்கக் கொண்டிருக்கும் போது நமது மனதில் ஏதாவது யோசணை தோன்றிவிட்டால், எமக்க முன்னிருக்கும் பொருளை நாம் கவனிப்பதில்லையல்லவா?

“மகேஸ்! என்ன யோசிக்கிறாய்” என்று செல்லம் கேட்டாள். அவளுடைய கண்கள் மகேஸ்வரியின் முகத்தை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தன.

மகேஸ்வரி திடுக்கிட்டுப்போனாள். அதே சமயத்தில் அவள் கண்களிலிருந்து இரண்டு நீர் முத்துக்கள் தவறி விழுந்தன. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு “ஒரு யோசனை யுமில்லையே!” என்றாள். வலிய வரவழைத்த புன்சிரிப்பு அவள் முகத்தில் தவழ்ந்தது.

மகேஸ்வரி ஏதோ துக்கப்படுவது செல்லத்திற்கு நன்றாகத் தெரிந்து விட்டது. ஏன் மகேஸ்! என்னிடம் சொல்லக்கூடாத விசயமா? இல்லையே, அப்படி ஒன்றும் இல்லையே!

சரி சொல்லக்கூடாத விசயமானால் விட்டுவிடு நான் தூண்டிக்கேட்கவில்லை கோபித் துக்கொள்கிறாயே செல்லம்! அப்படியொன்றுமில்லை. சரஸ்வதியைப் பற்றிக் கேட்டாயே, அதுதான்…!

அதென்னது!

சரஸ்வதி வெள்ளையாய் இருப்பதற்காக மாத்திரம் அந்தப் பெயர் வைக்கவில்லை அது ஒரு விசயம் சொல்கிறேன் கேள்!

செல்லம் நீ இந்த ஊருக்குப் புதியவளானதனாலே இதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரி யாது. இந்த ஊரிலே எல்லாருக்கும் இந்தக் கதை தெரியும் சரஸ்வதி வேறு யாருமல்ல என்னு டைய தங்கைதான். என்னோடு கூடப்பிறந்த தங்கைதான். என்னிலும் பார்க்க இரண்டு வய துக்கு இளையவள் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் என்னைப் போலவே இருப்பாள் என் னிலும் பார்க்க அழகானவள் என்றுதான் சொல்லலாம். குணத்தில் கூட என்னைவிட அவள் எவ்வளவோ உயர்ந்தவள் செல்லம். நான் பாவி வஞ்சகி!

சரஸ்வதி என்மேல் எவ்வளவோ அன்பாயிருந்தாள். நான்கூட அவளோடு உயிராயிருந் தேன். கடைசியில் எனக்கு அப்போது பதினாறு வயது. சரஸ்வதிக்குப் பன்னிரண்டு வயது. அன்றைக்கு எங்கள் மாமா சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். வரும் போது அவருடைய மகனும் வந்திருந்தார். அவருக்கும் அப்போது பதினாறு வயதுதானிருக்கும் அப்போதே நல்ல அழகாக மினுமினுவென்றிருந்தார்.

நானும் சரஸ்வதியும் ஒரு பக்கததில் விளையாடிக்கொண்டிருந்தோம் அப்போது அவர் வந்தார் அவர் கையில் ஒரு பிஸ்கோத்துப் பெட்டி இருந்தது. எங்கள் கிட்ட வந்ததும் இந்தா என்று பெட்டியை நீட்டினார். அவர் யாரைப் பார்த்துச் சொன்னார் என்று தெரியவில்லை நான் பேசாமலிருந்தேன். சரஸ்வதியை சிரித்துக்கொண்டே பெட்டியை வாங்கிவிட்டாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மாமா, ஓகோ ! சுப்பிரமணியனுக்கு சரஸ்வதியின் மேல் தான் பிரியம் போலிருக்கும்! என்று கூறி சிரித்தார். கூட இருந்தவர்களும் சிரித்தார்கள். சரஸ்வதி முகத் தைச் சுளித்துக்கொண்டாள்.

என் மனதில் என்னவோ மாதிரியிருந்தது. இருந்தாலும் நானும் சேர்ந்து நகைத்தேன்.

அன்றையிலிருந்து பிடித்தது சனியன் எனக்கும் சரஸ்வதிக்கும் பெரிய போட்டி. எங்கள் மைத்துனர் சம்பந்தமான காரியங்களைச் செய்வதில் நாங்களிருவரும் முன்னுக்கு நின்றோம். ஆனால் நான் இதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. சரஸ்வதியோ வெளிப்ப டையாக அவரோடு உறவு கொண்டாட ஆரம்பித்தாள்.

மூன்று வருடங்கள் கழிந்தன. எங்களிருவரில் சரஸ்வதியைத்தான் எங்கள் மைத்து னருக்கு விவாகம் செய்யலாமென எல்லோரும் தீர்மானித்திருந்தனர். என் உள்ளமோ படாதபாடுபட்டது. அவரை விவாகம் செய்யாவிட்டால், உயிரையே விட்டுவிடுவதென்று தீர்மானித்திருந்தேன்.

என்னுடைய வாழ்க்கை பாழாய் போய்விட்டதென்றே அப்போது நினைத்தேன். ஏனெனில் அவரும் சரஸ்வதியை காதலிக்க ஆரம்பித்தார்.

நான் வாழ்க்கையை நீத்து விட தீர்மானித்து விட்டேன் அதற்காக என் அறையிலிருந்து ஒரு கடிதமெழுதினேன் அந்தக்கடிதத்தில் என் உள்ளத்தில் இருந்தவற்றையெல்லாம் எழுதி யிருந்தேன். எழுதிமுடிகிற சமயம் என் தங்கை உள்ளே வந்தாள் எனக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை கடிதத்தை மறைப்பதற்கும் கையெழவில்லை. சரஸ்வதி கடிதத்தை வாசித்தாள் அவள் கண்களில் நீர் துளிந்தது. ஆனால் அடுத்த நிமிடம் கலகலவென்று சிரித்தாள்.

ஐயோ, அந்தச் சிரிப்பில் நான் ஏமாந்து போனோன் அக்கா! விடயத்தை நன்றாக அறியா மல் செய்கிறாயே என்னை அவர் பார்க்கவில்லையே தவிர நீ இருக்கும் போது நான் அவரை விவாகம் செய்து கொள்வது கூடத் தவறு என்று சொன்னாலும் பைத்தியமா ? என்றாள் நான் அந்த வார்த்தைகளை நம்பி விட்டேன் அன்று இராத்திரியே தற்கொலை செய்து கொண்டாள் ஐயோ நான் பாவி.

சரஸ்வதி தன்னுடைய அவரை தியாகம் செய்து, என்னையும் என் கணவரையும் பிணைக்க உயிரைத் தியாகம் செய்தது மட்டுமல்ல எங்களிருவருக்கும் எங்கள் தன்னுடைய காதலை விட்டாள்.

என் கணவர் என்னோடு தானிருக்கிறார் ஆனால் அவர் என்னை விரும்புகிறார் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. சரஸ்வதியின் மனச் சாந்திக்காகவே அவர் என்னை விவாகம் செய்து கொண்டுமிருக்கலாம்.

இந்தச் சமயத்தில் மகேஸ்வரியின் கணவன் வரவே, அவள் பேச்சை நிறுத்தினாள். செல்லமும் மெதுவாக எழுந்து வெளியே சென்றாள். மகேஸ்வரியின் கணவன் மகேஸ்வரியின் பக்கத்தில் வந்து, மகேஸ்வரி “உள்ளத்தை சிதறவிடாதே, சரஸ்வதிக்குப் பிறகு உன்னைத்தான் நான் காலிக்கிறேன்” என்றார்

மகேஸ்வரியின் உள்ளத்திலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் நழுவி விழுந்தது.

– 1940-50, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *