காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 4,070 
 

பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6

தீபக் ஆபீஸ் அறைக்கு வந்ததும் தன் அப்பா படத்தை தொட்டுக் கும்பிட்டு சேரில் அமர்ந்தான். அறை வாசலில் நின்று மானேஜர் “மே ஐ கமின்?”

தீபக் ” எஸ் கமின். ப்ளீஸ் டேக் யுவர் சீட்.” மானேஜர் சேரில் உட்கார்ந்தபடி “அவுட்லட் ஸ்டோருக்கு அக்கவுண்டண்ட் அப்புறம் ஸ்டோரை கவனிக்க நம்ம சூப்பர்வைசர் பாலுவோட பொண்ணு ரெண்டு பேரையும் கூட்டி வந்திருக்கேன்.”

தீபக் “பொண்ணா? வேண்டாமே. எனக்கு பெண்களை அப்பாயிண்ட் பண்றதில் இஷ்டமில்லை.”

மானேஜர் “பெண்கள் சின்ஸியரா வேலை பார்ப்பாங்க. அந்தப் பெண் ரொம்ப ஷார்ப்பா இருக்குது.

நேரில் பாருங்க. பிடிக்கலைனா அனுப்பிடுவோம்.” என்றதும் தீபக் அரை மனதோடு “வரச்சொல்லுங்க பார்க்கலாம்.”

மானேஜர் “தேங்க்யூ ஸார்.” என்று எழுந்து போனார். வெளியே அடுத்த அறையில் சிவகுருவும் ஆதிராவும் காத்திருந்தனர். மானேஜர் இவர்களிடம் வந்து ” M.D கூப்பிடுறார். இவருக்கு ஓகே பட் உனக்குத்தாம்மா கொஞ்சம் சந்தேகமாயிருக்கு

எங்க M.D க்கு லேடிஸை வேலைக்கு வைப்பதில் அத்தனை பிடித்தமில்லை.”

ஆதிரா “பெண்ணைப் பிடிக்காத மனுஷன் உண்டா?”

அப்போது காசிநாதன் அந்த அறைக்குள் வந்தார். “என்னம்மா பார்க்கிறே? இது என் ஆபீஸ் ரூம் தான்” என அந்தப் பெரிய டேபிளுக்கு அந்தப் பக்கம் இருந்த சேரில் அமர்ந்தார். டேபிளில் டெலிபோன்கள் ஃபைல்கள் இருந்தன. ஆதிரா புன்னகைத்து “நீங்க நாலும் தெரிந்த நல்ல மனிதராக இருக்கீங்க.ஆனா உங்க M.D இந்தக் காலத்தில் பெண்கள் செய்ற வேலை பிடிக்காது என்கிறார். எனக்கு வேலை கிடைக்கலைனாலும் பரவாயில்லை. நிச்சயம் உங்க முதலாளிக்கு பெண் பற்றின நினைப்பை சரிபண்ணியே ஆகணும்.”

காசிநாதன் மனதுள் ஒரு உற்சாகம். இந்தப் பெண் தான் தன்னுடைய துருப்புச் சீட்டு. இவளை விடக்கூடாது.

“பெண் பற்றிய நினைப்பை மாத்தணும்னா நீ இந்த ஆபீஸில் வேலை பார்க்கணும். இல்லையா?”

ஆதிரா “அதுக்குத் தானே வந்திருக்கேன்.”

காசி “ஒரு நிமிஷம். நான் சொல்றதைக் கேளு. எதற்கும் பதில் பேசாதே. சரி சரின்னு கேட்டுக்கோ. குறைஞ்சிடப் போவதில்லை. உனக்கு கட்டாயம் வேலை உண்டு. என்னை நம்பு. உன்னை நான் நம்பறேன்.”

ஆதிரா மெளனமானாள்.

காசிநாதன் மானேஜரிடம் “யோவ் மானேஜர் நான் தீபக் ரூமிற்கு முதலில் போறேன். பிறகு ஒருத்தர் பின் ஒருத்தரா அனுப்பு. சரியா?”

மானேஜர் தலையாட்டினார்.

காசி தீபக் அறைக்கு வந்தார்.

தீபக் நிமிர்ந்து பார்த்து “கதவை தட்டிட்டு வர மாட்டீங்களா மாமா? உட்காருங்க.” என்று கூறிவிட்டு ஃபைலில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான். காசிக்கு அவன் சொன்னது அவமானமாக இருந்தது. ‘உன் நிம்மதியை குலைக்க ஆயுதம் ரெடி மவனே’ என மனதுள் சொல்லியவர் “ஸாரி தீபக் இனிமே தட்றேன்” என்று அழுத்தி சொன்னதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. கையெழுத்து போட்டபடி இருந்தான். ‘இவன் திமிரைப் பாரேன். நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லக்கூட இஷ்டமில்லை.’ அப்போது மானேஜர் “மே ஐ கமின் ஸார்” தீபக் தலையாட்டியதும் சிவகுரு பின் தொடர மானேஜர் வந்தார். தீபக்கை கைகூப்பி வணங்கியபடி சிவகுரு வந்தார். தீபக் பதில் வணக்கம் செய்து அவரை உட்காரச் சொன்னான்.

மானேஜர் “இவர் சிவகுரு. ரிட்டையர்டு போஸ்ட்மாஸ்டர். போன மாதம்தான் ரிட்டையர்டு ஆனார். நம்ம ஸ்டோரில் அக்கவுண்ட்ஸ் பார்க்க இவரை அப்பாயிண்ட் பண்ணலாமா?”

தீபக், சிவகுரு விடம் அக்கவுண்ட்ஸ் பார்க்கத் தெரியுமா? என்பது பற்றி அவர் குடும்பம் பற்றி எல்லாம் கேட்டறிந்தான். அவரும் பவ்யமாக தன் பிள்ளைகளுக்கு திருமணம் பண்ணிவிட்டதையும், தானும் தன் மனைவியும்தான் என்பதையும் தன் பட்டறிவையும் கூறினார். அவர் நாணயமானவர் என தீபக் புரிந்து கொண்டான்.

தீபக் புன்னகையுடன் “வெயிட் பண்ணுங்க. ஆர்டர் தருவாங்க.”

சிவகுரு நன்றியுடன் “நன்றி ஸார். மிக்க மகிழ்ச்சி.”

அவர் போனதும் சில விநாடிகளில் ஆதிரா தன் ஃபைலை மார்போடு அணைத்துக் கொண்டு வந்தாள்.

தீபக் நிமிர்ந்தான். அன்று கார் கண்ணாடியில் பாரத்த அந்த முகம். கண்ணாடியில் ஏதோ பேரு…

ஆதிரா “வணக்கம். நான் ஆதிரா.”

தீபக்கிற்கு நினைவு வந்தது ஆதிரா என்று அவள் எழுதியது.

ஆதிரா “நான் உட்காரலாமா?”

தீபக் “டேக் யுவர் சீட்.. உட்காரலாமான்னு கேட்கிறீங்க ரூமிற்குள் வரலாமான்னு கேட்கலையே”.

ஆதிரா “சிவகுரு ஸார் வந்ததும் நீ வான்னு மானேஜர் சொன்னாரு. அதனால் வந்தேன். யாரும் கேட்டு வரணும்னு ஒரு போர்டு மாட்டிடுங்க.”

காசிக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். தீபக் முகத்தில் கோபம் தெரிந்தது.

ஆதிரா “நான் பி.காம் படிச்சிருக்கேன். ஸ்டோர் சூப்பர்வைசர் வேலைன்னு சொன்னாங்க. எனக்கு ஆபீஸில் வேலை பார்க்கணும்னுதான்‌ ஆசை. பட் இது அதில்லை. இருந்தாலும் பரவாயில்லை.”

தீபக் “நான் வேலை தர்றதா சொல்லலையே.”

ஆதிரா “எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை. பட் சின்ஸியரான ஒர்க்கரை உங்க ஆபீஸ் இழக்கப்போகிறது.”

தீபக் எரிச்சலாகப் பார்த்தான்.

காசி சட்டென்று “என்ன பயங் காட்டிறீயாம்மா? உன் சின்ஸியாரிட்டியை நாங்களும் பார்க்கிறோம். மானேஜர் இந்தப் பொண்ணுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுங்க.” என்றதும் தீபக்கினால் ஏதும் பேச முடியவில்லை. ஆதிரா புன்னகையுடன். “நன்றி ஸார்.” போனாள்.

தீபக் “மாமா நீங்க ஏன் அந்தப் பொண்ணுக்கு வேலைன்னு சொன்னீங்க? எனக்கு இஷ்டமில்லை. அது திமிரா பேசுது.”

காசி “அந்த திமிரை வேலை வாங்கி வேலை வாங்கி அடக்கணும் மாப்ளே. அதான் நீ கண்டுக்காதே. நான் படுத்தற பாட்டில் அதுவே ஓடிப் போயிடும். வேலை கொடுக்கிற பாஸ்கிட்டே போர்டு மாட்டுங்கன்னு அது சொல்லுமோ. வரட்டும்.”

தீபக்கிற்கு அவளை தண்டிக்க வேண்டும் என்று மனம் சொன்னது. ‘என்ன திமிர்!?’

தீபக் மெளனமானான்.

காசி வெளியே வந்தார். ஆபீஸ் ஹாலில் ஆதிரா வேலைக்கான ஆர்டருடன் நின்றிருந்தாள்.

காசி “என்னம்மா? ஆர்டர் வாங்கிட்டியா?”

“வாங்கிட்டேன். நீங்க இல்லேன்னா எனக்கு வேலை கிடைச்சிருக்காது. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.”

காசி “இருக்கட்டும்மா. நீ தைரியமான பொண்ணு. நீ இந்த ஆபீஸிற்கு அவசியம் என்றுதான் நான் M.Dயையே எதிர்த்து பேசினேன். நீ எப்பவும் இப்படியே துணிச்சலான பொண்ணா இரு. நான் இருக்கேன்.”

ஆதிரா மகிழ்ச்சியுடன்”ஓகே ஸார். எங்க வீட்டில் கூட யாரும் என்னை எங்கரேஜ் பண்ணினது கிடையாது. நான் காலையில் ஒன்பது மணிக்கு இங்கு இருக்கணுமாம். இப்ப நான் கிளம்பலாமா ஸார்?”

காசி “நாளைக்குப் பார்க்கலாம்” என்றதும் துள்ளல் நடையில் உற்சாகமாக நடந்து போனாள்.

பார்வே டீ எஸ்டேட் ஆபீஸ் வேலை வாழ்வில் பெரிய மாற்றத்தை செய்யப் போவது தெரியாமல் ஆதிரா சந்தோஷத்தில் திளைத்திருந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *