நட்பதிகாரம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 5,559 
 

ரங்கா! இங்கே வாங்க! நாம நம்ம கம்பெனிக்கு வாங்குகிற மெட்டிரியல் எல்லாம் இன்னிலேயிருந்து பெரியக் கடைத்தெருவிலே உள்ள கிருஷ்ணா டிரேடிங்லதான் வாங்கனும் என உத்திரவிட்டார். நகரத்தின் முக்கிய பிரமூகர், நவீன் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், உரிமையாளர். பிரபல சிவில் இன்ஜீனியர் ராமன்.

சரி சார் அப்படியே செய்திடலாம்,என்றுக் கூறி வெளியே வந்தார் ரங்கா.

அட என்னாச்சு தெரியலையே? எவ்வுளவு நாளா வரவு செலவு வச்சு இருக்கோம்,இப்ப திடீர்னு ஏன் மாற்றச் சொல்கிறார் ஒன்றும் புரியலையே எனப் புலம்பிக்கொண்டே வந்தார் இருக்கைக்கு.

மெட்டிரியல் மேனஜரை அழைத்து விபரம் கூறினார்,ரங்கா.

கிருஷனா கடை ரொம்ப சின்னது,அங்கே போய் நாம என்ன வாங்கிறது,நம்ம ஒரு சைட்டுக்கு சாமான் எடுத்தாலே கடை காலியாகிடும்,
அங்கப்போய் வாங்கச் சொல்கிறாரே? என்ன செய்ய முதலாளி உத்திரவு. என நினைத்துக்கொண்டே கிளம்பினார்.

கிருஷ்ணா டிரேடிங்,பெரிய அளவில் வியாபாரமானக் கடை பணமதிப்பு இழப்பு ,கடன் சுமையாலும் அனைவரும் மொத்தமாக வெளியூரில் இருந்து வாங்குவதால் ரீடெயல் வியாபாரம் படுத்தேவிட்டது.

இப்போது அளவில் சிறியதாகவும், பொருட்கள் மிகக் குறைவாகவும், தரமான பொருட்களும்,கடனுக்கு தாராமலும் குறைந்த லாபத்திற்கு விற்கும் கடை என்பது ஊரறிந்த விஷயம்.

மேனாஜர் போன் செய்து , நான் நவீன் பில்டர்ஸ் ஆபிஸ்லேர்ந்து பேசறேன், 200 மூட்டை சிமென்ட் வேண்டும், குரு நகர் சைட்ல வேலை நடக்குது அங்க அனுப்பிடுங்க,எனக் கூறினார்.

அவ்வளவு ஸ்டாக் இல்லை,ஆனா நாளைக்குள்ளே அனுப்பிடலாம்.

என்னங்க இது, எங்க முதலாளியே மனது இறங்கி உங்கக்கிட்டே வாங்கச் சொல்றார்.நீங்க என்னன்னா இல்லைங்கிறீங்க, சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க, இல்லைனா ஆர்டர் போயிடும், என்றார்.

ஹலோ! உங்க முதலாளி வேனா ஆர்டர் போடலாம்,மாற்றலாம், ஆனால் ஸ்டாக் இல்லைன்னா இல்லைதானே, நாளைக்குத்தான் என்னால் அனுப்ப இயலும்,அப்புறம் உங்க சொளகரியம்,என்றார்.

முதலாளியிடம் செய்தி சென்றது.அவரோ, அப்படியா, ஒன்றும் அவசரமில்லை,மெதுவா வரட்டும், அவருக்கு முழு பணத்தைக் கொடுத்து விட்டு வாங்க,என்றார்.

அதோட அட்வான்ஸா இரண்டு லட்சம் கொடுத்து வைங்க அப்பப்போ நமக்குத் தேவையானதை அங்கேயே வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

என்னாச்சு முதலாளிக்கு ,நல்லா போயிட்டு இருக்கிற கடையை தவிர்த்து புதிதாக ஒரு கடை அதுவும் முழுத் தொகை கொடுத்து,என்ன செய்கிறார்னே புரியலையே! என்று புலம்பினார் மேனேஜர்.

சென்னை.

இன்ஜி.காலேஜ் ஹாஸ்டல் காம்பஸ்..

என்ன கனேஷ்,ஏதாவது பிராப்ளமா? ஏன் சோகமா இருக்கே? சாப்பிடக் கூட வரலை. இது நவீன்.

அவனின் ரூம் மேட், ஒரே ஊர், ஆனால் அறிமுகமானது இங்கே கல்லூரியிலேதான்,

வெளியே சாப்பிடப் போனா வார்டன் ஹாஸ்டல் பீஸ் கேட்பார் என்று சாப்பிடாமலே இருந்து விடுகிறான். என்பது நவினுக்கு மட்டுமே தெரியும்.

வா, போகலாம். என அழைத்துக்கொண்டு சாப்பிடச் சென்றனர்.

ஏம்பா,கனேஷ்,எங்க ஹாஸ்டல் பீஸ்? இன்னும் வரலையாமே,லிஸ்ட்ல உன் பெயரும் இருக்கே, என கேட்டார், காலேஜ் வார்டன்.

சார் அப்பாகிட்டே சொல்லிட்டேன், இரண்டு நாட்கள்ளே வந்துவிடும். என்றான்.எல்லோர் முன்னிலையில் கேட்டது ஒரு மாதிரியாக இருந்தது.

நம்ம அப்பா படற கஷ்டம் நமக்கு நல்லா தெரியுது.என்னோட பிடிவாதத்தாலே தான் இந்த காலேஜ்ல சிவில் இன்ஜினியரிங் படிக்கனும்னு கேட்டு படிக்க வந்துள்ளேன். அப்பாவின் தொழிலும் மந்தமாக அவரால் இவனின் கல்லூரி கல்வித்தொகையை ஏற்பாடு செய்வதற்குள் விழி பிதுங்கி விட்டார்.

இன்னும் இரண்டு வருடம் எப்படி பீஸ் கட்டி ,படிப்பது என்பதே இவனின் பெரும் கவலை.

இவனின் மன உளைச்சலால் படிப்பின் மீது கவனக் குறைவு ஏற்படுவதை நவீன் நன்கு அறிந்து வைத்து இருந்தான்.

என்னங்க,நவீன் போன் செய்து இருந்தான், நீங்க போனே எடுக்கலையாம், அப்பாகிட்டே ஒன்று கேட்டு இருந்தேன் அதை அவசியம் செய்யச் சொல் என்று சொன்னான்.

என்னங்க அது? புது மாடல் போன் ,பைக் ஏதாவது கேட்டானா?

அதெல்லாம் நம்ம பையன் கடந்து விட்டான்மா..

தன் கூட படிக்கின்ற நண்பனின் கஷ்டமறிந்து ,அவனுக்கு உதவி பண்ணனும்னு கேட்டான், அதுவும் கடனா இல்லாம, தொழில் முறையிலே கொடுத்து அவனின் படிப்புக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறான் என் மகன்,

வேறுபாடு இல்லாம, இயலும் போதெல்லாம் இனைந்து உரிமையுடன் பழகி இருப்பது என்பது நட்பில் மிகச் சிறந்த பண்பு. அதை நம்ம பையன்கிட்ட இருக்கிறதுக்கு நாமதான் பெருமைப் படனும்.

அப்படி என்னங்க பண்ணினான்.

கணேஷ் னு ஒரு பையன் நம்ம பெரியகடைத் தெருவுலே இருக்கிற கிருஷ்ணா டிரேடிங் அவரேட பையனும் இவனும் ஒரே ரூம் மேட் கலேஜ்ல, அவனின் நிலையறிந்து என்னிடம் சொன்னான்.

நான் வேனா உதவி பண்றேன் என்றுச் சொன்னேன்,

ஆனா அவங்க நல்லா வாழ்ந்து இப்போ கஷ்டத்திலே இருக்காங்க, அதனால கடனா குடுக்காம தொழில் ரீதியா ஏதாவது உதவிச் செய்யுங்கள் என்றான்,

அதான் அடுத்து வரப் போகிற பிராஜக்ட்க்கான அனைத்து மெட்டிரியலையும் அவர் கடையிலே வாங்கச் சொல்லி அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லி விட்டேன்.

இதனாலே நமக்கும் ஒரு நஷ்டமும் இல்ல , அவனின் நண்பனுக்கு உதவியும் பண்ணின மாதிரியும் ஆச்சு என்று மகனை நினைத்து பெருமையாக சொன்னார்.

Print Friendly, PDF & Email

1 thought on “நட்பதிகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *