எழில்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 14,995 
 
 

அது காலை வேளை, சுமார் 8.00 மணி இருக்கும் கதிரவன் எல்லாவிடத்திலும் படர, பரபரப்பான காலையாக இருந்தது. அழுக்கு மூட்டையோடு பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களைத் திரட்டிக்கொண்டு ஒரு உருவம், டீ கடைவாசலில் பால் கவர்களுக்காகவும், யாராவது டீ வாங்கிக் கொடுப்பார்களா! என ஏங்கியது தெளிவாக தெரிந்தது.

“டேய் தண்ணீ எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன், ஓடிடு” என்றான் டீ கடை மாஸ்டர்.

“மாஸ்டர் அவருக்கு ஒரு டீ கொடுங்க, காசு நான் தரேன்” என்றார் ஒரு நபர்.

டீ வந்தது, குடிக்க ஆரம்பித்த குப்பைக்காரன் பையில் 10 ரூபாய் நோட்டை வைத்து அங்கிருந்து கிளம்பினார். அந்த இடத்தில் உள்ள எல்லோரும் வியந்தார்கள்? ரயில் நிலையத்தை நோக்கி
நடந்தார் அவர். அது திருவள்ளுர் ரயில் நிலையம், ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

‘சென்னை மார்கமாக போக வேண்டிய மின்தொடர்கள் சற்றே தாமதமாக வரவுள்ளது, அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்’ என்ற குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தவாரே இருந்தது.ஒரு பெரியவர் அந்த பெஞ்சை நோக்கி வந்தார். “சார்! என் பேரு லிங்கம், உங்கள் டீ கடையில பாத்தேன், அங்க நீங்க பண்ணதையும் பார்த்தேன், உங்க பேரு என்ன சார்?”

“என் பெயர் எழில் ங்க….”

‘எழில் சார்! நீங்க டீ வாங்கி கொடுத்தீங்க சரி, ஏன் 10 ரூபாய் கொடுத்தீங்க?’ என்றார் லிங்கம்.

“அடுத்த வேளை டீ க்கு கொடுத்தேன், சார்”

‘அவர் தான் குப்பை பொறுக்குறானே, ஏதாவது கிடைக்குமே!’

‘நானும் ஒரு காலத்துல குப்பை பொறுக்கிட்டு தான் இருந்தேன் சார், அடுத்த வேளை டீக்கும்,
சோறுக்கும் அலையிறது எனக்கு தெரியும்’ என்றார் எழில்.

லிங்கம் இதை கேட்டு வியந்து போனார், ‘இப்போ நல்ல இருக்கீங்களே’

‘ஆமா, சார், இப்போ ஒரு எஃஸ்போர்ட் கம்பெனியில டெய்லரா இருக்கேன்’.

‘நான் முன்னாடி போயிடுறேன், அதுதான் இறங்க கிட்ட’ என்று நகர்ந்தார் லிங்கம்.

கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு ஒரு மின்தொடர் வண்டி வந்தது, அதில் எழில் ஏறவில்லை, அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். அடுத்த ரயிலில் போகலாம் என்று நினைத்து வானோக்கி பார்த்து யோசிக்கிறது போல ஒரு தோரணை, அப்போது தான் நினைவின் தாழ்களைத் திறந்தார் எழில். நான்கு ஆண்டுக்கு முன் எஸ்தரைச் சந்தித்தது, பழகிய நாட்கள், துயரத்தின் சுவடுகள், ரணத்தின் தழும்புகள், மீளா இன்பத்தின், துன்பத்தின் நினைவுகளில் மழையில் குடையில்லாமல் நனையத் தொடங்கினார், அத்துடன் இளையராஜாவின் ஆர்.ஆர் கூடவே வர……..

அன்று….

ஒரு அற்புதமான காலை, பட்டரைவாக்கம் இரயில் நிலையம் அரக்கோணம் செல்லவிருக்கும் மின்சார ரயிலும், சென்டரல் செல்லவிருக்கும் ரயிலும் வெவ்வேறு நடைமேடையில நின்றுகொண்டிருக்க, எல்லா மக்களும் இறங்கி நகர, ரயில்களும் நகர்ந்தது. எல்லோரும் பரபரப்பாக நடந்தார்கள்,

‘சார், திருமலை எஃ°போர்ட் கம்பெனிக்கு எப்படி போகனம்” என்றாள் எஸ்தர்.

‘வாங்க! நானும் அங்கதான் வேலை செய்கிறேன், போகலாம்’ என்றான் என் நண்பன் மணி.

‘என் பெயர் மணி’, உங்க பெயர் என்ன?

‘எஸ்தர்’

‘இவங்க ரெண்டு பேரும் என் ஃபெரண்ட், அவன் பாபு, இவன் எழில்’ என்ற மணியின் குரலுக்கு, எஸ்தருக்கு வணக்கம் வைத்தோம் இருவரும்.

‘முன்னாடி, எங்க வீடு பக்கத்துல டெய்லர் கடையில் வேலை பார்த்தேன், சரி கம்பெனி போனா இன்னும் வேலை கத்துக்லாம்ன்னு சொன்னாங்க’ என்று கூறியவாறு நடந்தாள் எஸ்தர்.

கம்பெனி வந்தது, உள்ளே நுழைந்தோம், எஃப் .எம்-ல் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. தையல்மெஷின்களின் சத்தம், அந்த பாட்டுக்கு கோரஸ் போல் இருந்தது.

சூப்பர்வைசர் எஸ்தருக்கு இடம் கொடுத்து, வேலையை ஆரம்பிக்கச் சொன்னார்.

என்னவோ, தெரியவில்லை என் விழிகள் அவளையே தேடியது, நிலவில்லா வானம் போல் படர்ந்த நெற்றி, சிலுவை ஏந்திய செயின், சிவப்பு சுடிதார் என அவள் என் கண்களை நிரப்பிக் கொண்டே இருந்தாள். அன்று ஒரு புதன்கிழமை, என் வாடிநவில் அதுபோல ஒரு புதன்கிழமை இல்லவே இல்லை, சூரியன் விழுந்து பின்னும் என் விழி விழித்திருந்தது,

‘என்னடா இன்னும் தூங்களயா?’ என்றாள் அக்கா.

என் அக்கா பெயர் மதி, வீட்டு வேலை, முற வாசல் என அக்கம் பக்கம் இருக்கும் எல்லா வேலைகளும் செய்து கொண்டிருந்தாள். எனக்க தையல் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்பா, அம்மா இல்லை என்ற குறையில்லாமல் வளர்த்தாள் என் அக்கா. ஊரே என்னைத் திட்டும். “அக்காவிற்கு கால காலத்தில் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்யக் கூடாதா?” நான் முயற்சித்தாலும் அவள் அது நடக்கும் போது நடக்கும் என்பாள். அவனுக்கு நான் தையல் கடை வைக்க வேண்டும் என்பது ஆசை, அவளுக்காக கோயிலுக்கு செல்வதை விட, எனக்காக செல்வது தான் அதிகம், அவளின் உதடுகள் எனக்காக மட்டுமே முணுமுணுக்கும்; அவள் என் அம்மா என்றே சொல்லாம்.

அடுத்த நாள், ஒரு புது தீபாவளி சட்டையை தேடி ஹிஸ்திரிப் போட்டு மேல போட்டு, முகதிற்கு ஃபேர் அன்ட் லவ்லி போட்டு, அக்காவிடம் சண்டை போட்டு, 50 ரூபாய் வாங்கி சீக்கிரமாக கிளம்பியவனைப் பார்த்து ‘டேய் என்னடா, புது சோக்கு’ என்றாள்.

‘ஐய்ய, எப்பவும் போல தான்! மதி நீ மிதி வாங்க போற’ என்று முறைத்து கூறி, வெளியே அசடு
வழிந்தேன்.

என் நண்பர்கள் மணியும், பாபுவையும் சீக்கிரம் கிளப்பி கம்பெனி டீ கடை வாசலில் நிக்க வைத்தேன், எதுக்கு இவன் காரணமில்லாம பண்றான்னு தெரியாமல் இருந்தார்கள். இரயில் நிலையத்திலிருந்து ஒரு கூட்டம் நடந்து வந்தது, அதில் எஸ்தரும் வந்தாள், அவளைப் பார்த்ததும் விறு விறுன்னு கம்பெனி பார்த்து நடந்தேன் பாபுவும், மணியும் காண்டாகி என்னைத் திட்டினார்கள்.

தினமும் சூரியன் தன் வேலையைச் செய்வது போல், தினமும் அதே போல் செய்தேன், அவள் வரும்போது வேகமாக நடப்பது, பின் தொடர்ந்து நடப்பது என கேவலமான செயல்களைச் செய்தேன். பாபுவுக்கும் மணிக்கும் தெரிந்தது, நான் எஸ்தர் மீது ஒரு கண் உள்ளதென்று.

எஸ்தர் தினமும் என்னை பார்ப்பாள், நானும் பார்ப்பேன், சிரிக்க கூட மாட்டோம் அங்கு ஒரு எறும்பு ஊரும் நெஞ்சில்.‘அந்த தருணம் எழிலானதுடா எழில்’ என்று நானே எனக்கு கூறிக்கொண்டேன்.

ஆறு அரை மாதம் ஓடியது, மணியும் பாபுவும் எஸ்தரிடம் பேசுவார்கள், நான் மட்டும் பேச மாட்டேன். ஒரு நாள் மணி “ஏய், எஸ்தர்! எழில் ஏதோ பேசனுமா!” என்று கூற, அந்த நேரத்தில் மனதில் அலறல் கண்களில் தெரிந்தது, ‘ஒன்றும் இல்ல! அவள் பொய் சொல்றான்!’ திரும்ப சொல்லி திரும்பிபார்காமல் ஓடினேன்.

அந்த காலகட்டத்தில் 1100 நோக்கியா மொபைல் வாங்கினேன். அக்காவிடம் காண்பித்தேன், அவளுக்கு கலர் போன் வாங்குவது தான் லட்சியமாக இருந்தது. ‘ஏதோ வாங்கினியா! சந்தோசம் போவியா!’ என்றேன் நான்.

பாபுவிடம் மணியிடமும் மொபையிலை காண்பித்தேன், நம்பரையும் கொடுத்தேன். “இங்க போன் மணி அடிச்சா, சர்ச் வரைக்கும் கேக்குமா?” என்றான் பாபு.

‘டேய் சர்ச் மணி தான் இவன் அடிக்க போறான் பாரு!!’ என்று மணியும், பாபுவும் என்னை கேலி
செய்தார்கள்.

‘டேய், எழில் எஸ்தர் கிட்ட பேசு, நம்பர் கொடு’ என்று பாபும், மணியும் என்னிடம் சொல்லிக்
கொண்டே இருந்தார்கள்.

நான் ஒரு பயந்தாங்கோலி, ‘அட போங்கடா’ என்று தையல் மெஷினிடம் என் கால்கள் உரையாட ஆரம்பித்தது. எப்படியோ எஸ்தர் நம்பர் தெரிந்து என் மொபைலில் பதிவு செய்தேன், அது என் நண்பர்களுக்கு நன்றாக தெரியும், எனக்கு தெரியாமலே அவர்கள் எஸ்தருக்கு மிஸ்டு கால் கொடுத்தார்கள். அன்று வேலையை முடித்து வீட்டுக்கு வந்தேன், இரவு 9.00 மணிக்கு எஸ்தர் காலிங் ன்னு மொபைலில் வந்தது. என் கை, கால்கள் ஓதரல் எடுத்தது, மொபைல் வைபரேஷன் போல் என் மனம் துடித்துக்கொண்ருக்க, எடுத்து பேசலாமா? வேண்டாமா? என சீ சா வானது புத்தி, துணிச்சலாக எடுத்தேன்.

‘நான் எஸ்தர் பேசுறேன், நாளைக்கு நேர்ல பேசனும் சீக்கிரம் வந்திடு’ என்று கட் ஆனது அந்த
கால்.

செந்தில் ஒரு படத்தில் கவுண்டமணியை கப்பலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவார், அது போல் என்னை ஏமாற்றுவாளா! என யோசை வெளுத்துக்கட்டியது. அன்றிரவு உறக்கம் இல்லை, மறுநாள் எல்லா கூத்தையும் என் அக்காவிடம் சொன்னேன், எனக்கு வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தாள், நானும் பாக்கனும் என்று அடம்பிடித்தாள்.

‘மொதல என்ன பேசப்போறாளோ தெரியல்ல, நீ வேற’ எல்லாம் உடன் உடனே நடப்பது போல தோன்றியது, மணிக்கும், பாபுவுக்கும் தெரிவித்தேன். ‘சூப்பர் டா மாப்புள’ என்றார்கள், ரயில் ஏறி பட்டரைவாக்கம் போவதற்க்குள் அக்கா மதி ஐந்து முறை போன் அடித்தாள், என்னை விட அவளுக்கு ஆர்வம் அதிகம்.

அவளை சந்தித்தவுடன் ‘நான் உன்னை திருமணம் செடீநுய ஆசை படறேன்’ ன்னு சொல்லனும் என்று நினைத்து வைத்திருந்தேன். அவள் ஏற்றுக்கொள்வாளா? இல்லை என்னை அழைத்து உன் நடவடிக்கை சரியில்லைன்னு சொல்ல போறாளா? அந்த முப்பது நிமிடங்களில் முவாயிரம் சிந்தனைகள்.

எனக்கு முன்னரே எஸ்தர் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தாள். ஐந்து நிமிடம் நானும் அவளும் பேசவேயில்லை, அவள் பேசிய முதல் வார்த்தை “எழில், உன் பேரு ரொம்ப பிடிச்சிருக்கு, அப்பயே உன்னையும், என்ன கல்யாணம் பண்ணுவியா?” அந்த வெகுளி குரலில் சொன்ன போது ஆயிரம் ஜேசுதாஸ் என் காதில் பாடுவது போல, நான் இறக்கை இல்லாமல் பறந்தேன். நீங்கள் நினைத்ததை உங்களிடம் வந்து ஒரு பெண் கூறினாள் எப்படி இருக்கும். அன்று முழுவதும் ரயில்களின் சிம்போனியாக இருந்தது.

என் அக்கா பொறுமை தாங்காமல் பின் ரயிலில் ஏறி வந்தாள். நானும் எஸ்தரும் அவள் கண்ணில் சிக்கினோம். அவளுக்கு எஸ்தரை மிகவும் பிடித்து போனது, ‘உங்க வீட்ல சம்மதிப்பாங்களா? என்றாள் அக்கா ‘அது என் பொறுப்பு’ என தைரியமாக கூறினாள் எஸ்தர். ‘நாங்களும் அப்பப்போ ஏசு கும்மிடுவோம்’ என்று அசட்டு தனமாக அக்கா கூறியது இப்பவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மூன்று மாதங்கள் முப்பது நிமிடங்களாக நகர்ந்தது, சிறிது நாள் கழித்து தான் தெரியும் எஸ்தர் வெகு நாட்களாகவே என்னை பார்த்துக் கொண்டிருந்தாள் என்று; எல்லா சந்தோஷமும் ஒரே சமயத்தில், என் அக்காவுக்கும் மாப்பிள்ளை கிடைத்தது, திருமணமும் நிச்சயமானது வர தை மாதம் திருமணம் என முடிவு செய்தோம். மாப்பிள்ளை ஆட்டோ டிரைவர், அக்காவுக்கம் பிடித்துபோனது.

அக்கா திருமணம் முடிவான செய்தியை எஸ்தரிடம் சொன்னேன் மிகவும் மகிழ்ந்தாள். அவங்க அப்பா மதவெறி கொண்டவர் என அவள் அன்று சொன்னாள், நானும் சரி விடு என அலட்சியமாக இருந்துட்டேன். ‘உங்க அப்பா சம்மதிக்கலனா, நாம் ரிஜிஸ்டர் பண்ணிடலாம்’ என்று சொன்னேன், அதற்கு எஸ்தரும் சரி என்றாள். இது நான் அடிக்கடி கேக்கிற விஷயமானது.

அது டிசம்பர் மாதம், எஸ்தர் வியாசர்பாடியில் வசிக்கிறாள். அவள் போகும் சர்ச் எதுவென கண்டுபிடித்து, ஒரு கேரோல் ஒன்றில் சேர்ந்தேன். அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டேன், என் நண்பர்கள் பாபுவையும், மணியையும் வரச் சொன்னேன், அந்த வேடம் போட்டு தெரு தெருவாக பாடிக் கொண்டு சென்றேன். அவள் வீடு எனக்கு தெரியும். நான் மட்டும் கூட்டத்திலிருந்து விலகி, எஸ்தர் வீட்டுக்குச் சென்றேன் கதவைத் தட்ட திறந்தாள் எஸ்தர். கிறிஸ்துமஸ் தாத்தா முகமுடியை கழட்டினேன், மகிழ்ச்சியின் உச்சியில் அவள், என்னை அப்படியே கட்டிக் கொண்டாள், யார் அக்கம் பக்கம் என ஒரு துளி யோசனை கூடயில்லை. அவள் அப்பா, அம்மா, பார்த்தார்கள், அதிர்ச்சியோ! அதிர்ச்சி. அவள் அம்மா என்னைத் தொடப்பத்தால் அடிக்க, அப்பா செருப்பைக் கொண்டு எரிய, அடித்து விரட்டினார்கள், மணியும் பாபுவும் என்னை காப்பாற்றி அழைத்துச்
சென்றார்கள். எஸ்தர் அப்பா அம்மாவிற்கு எல்லாம் தெரியவந்தது. அன்று தான் எஸ்தரைக் கடைசியாக பார்த்தேன்.

எனக்கு அக்கா தான் ஆறுதல், ‘இருடா பொண்ண தூக்கலாம்’ என்று பாசிடிவ் ஆக சொல்லுவாள் விரக்தியின் உச்சியில் இருந்தேன். அவளுக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற ஒரு உணர்வோ! பொறுப்போ! இல்லை எனக்கு, எஸ்தர்… எஸ்தர்… மட்டும் தான் என் மூளையில் ஒரு வாரம் ஆனது நானும் கம்பெனிக்கு போகவில்லை அவளும் வரவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள்.

பாபு வந்தான் வீட்டுக்கு “மாப்புள, எஸ்தருக்கு கல்யாணமாயிடுச்சடா, அவ அப்பன் அவசர அவசரமா யாருக்கோ கல்யாணம் பண்ணிட்டான் அதுமட்டுமில்ல டா அவ ஒரு வேலைக்காரி மாதிரி இருக்கப்போறா. அவ மாமியாருக்கு கண்ணு தெரியாதாம்” என்று எல்லாவற்றையும் கக்கினான், என் கண்கள் இருண்டது, மிகவும் தெம்பாக ‘சரி! நீ போடா மாப்புள’ என்று கூறினேன், என் அக்கா இரண்டு நாட்களுக்கு அருகிலே இருந்தாள். ‘லவ் ஃபெய்லியர் எல்லாம் மாட்டரே இல்ல டா இப்போ! என்று சொன்னாள் அது என் உயிர் வலி என்று அவர்களுக்கு தெரியாது. மூன்றாவது நாள் அவள் வேலைக்குச் சென்றான், என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை, ஒரு வெறுப்பு யாருக்கும் சொல்லாமல் கோயம்பேடு போனேன் ஏதோ ஒரு பஸ்
ஏறினேன், இறங்கினேன் அது திருநெல்வேலி.

பைத்தியம் போல திருநெல்வேலியைச் சுற்றினேன் குப்பைப் பொறுக்க ஆரம்பித்தேன், அழுக்கு சட்டை, முடி சடையானது, தாடியும் கூடவே நாற்றமும் என்னைச் சுற்றிக் கொண்டிருந்தது. என் அக்கா பற்றி ஒரு துளி நினைவு கூட இல்லை. நான் டீ கடை வாசலில் நின்றால் எதாவது ஒரு டீ மாஸ்டர் சுடு தண்ணியால் என் முகத்தை கழுகி விடுவார். ஒரு வேளை டீக்காக ஏங்கிய நாட்கள் அது, மூன்று மாதங்கள் கடந்தது. அனாதையாக குப்பைப் பொறுக்கி கொண்டிருந்த என்னை ஒரு தனியார் தொண்டு நிறுவனம் அழைத்து போனது, என்னை மீண்டும் மனித உருவதிற்கு மாற்றியது. தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய ஜோதி
அண்ணன் தான் முக்கிய காரணம் என் மாற்றத்திற்கு, யாரிடமும் சொல்லாத என் கதையை
ஜோதி அண்ணிடம் சொன்னேன்.

‘அக்கா பத்தி எதாவது தெரியுமா? ’என கேட்டார் ஜோதி

‘அவளுக்கு கல்யாணம் ஆயிட்டிருக்கும் சார்,” நான் வாழுற பொணம், அசிங்கம், உதவாக்ர என்று என்னையே திட்டிக் கொண்டேன்.

ஜோதி அண்ணன் என் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாய் வைத்து உடனே சென்னைச் செல்லுமாறு கூறினார். அவரே பஸ் ஏற்றிவிட்டார். அவசரதுக்கு அவர் மொபைல் நம்பரும் கொடுத்தார். இந்த நான்கு மாதங்களில் என் உடலில் அவ்வளவு மாற்றம், முன் பல் கொட்டிபோனது, உடல் மெலிந்து போனது என்னை அடையாளம் கொள்வார்களா? என்று ஐயத்தோடு என் தெருவிற்க நுழைந்தேன்.

உலகத்தில் துன்பத்தை குத்தகை எடுத்தவன் நான் தான் போல, அக்காவிற்கு திருமணமாகவில்லை, மூன்று மாதங்களாக இருதய நோயால் படுத்த படுக்கையில் இருக்கிறாள், பார்த்தவுடன் ஏன் என்னை உயிர் வாழ வைக்கிறான் கடவுள் என திட்டினேன்.

என் அழுகையால் விழித்தாள் அக்கா. அவளுக்கு பெரிய மகிழ்ச்சி.

‘டேய்! வந்திட்டியா…..’ என சக்தியில்லாத கையால் அடிக்க தொடங்கினாள்.

‘நாயே! நாயே!’ எங்கடா போனே?’ மெலிந்த குரலில் கேட்டாள்,

அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்னைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

‘நீ ’செத்துட்யா? இல்ல எங்க போயிடன்னு தெரியாம உங்க அக்கா கல்யாணம் வேணடாம்னு சொல்லிடா! என்ன ஜென்ம டா நீ என்றார். பக்கத்து வீட்டு மாமா.

அக்காவிற்கு இருதய நோய், அவளால் வேகமாக எதுவும் செடீநுய முடியாது. பாதி நேரம், உறங்கிக் கொண்டு தான் இருப்பாள், ஜோதி அண்ணனுக்கு போன் செய்தேன்,

எல்லாவற்றையும் கூறினேன், அவர் ஒரு டாக்டர் நம்பர் கொடுத்தார்.

“அக்கா ! நாளைக்கு தெரிஞ்ச டாக்டரை போய் பாக்கலாம்” என்றேன். ‘சரி! டா’

அடுத்த விடியலுக்காக, நான் உறங்கினேன், விழிந்தது நான் எழுந்தேன் அக்கா! எழுந்திரி அக்கா! ஒரு காகம் போல் கரைந்தேன், உருகினேன், அக்கா எழவில்லை. இதயம் துடிக்கவில்லை, அவள் உயிர் பிரிந்ததை உணர்ந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஜோதி அண்ணனுக்கு போன் செய்தேன். அவர் ஒரு டாக்டர் நம்பர் கொடுத்தார், “உங்க அக்கா உடலும் உயிரும்தான் போயிருக்கு, அவ கண் இந்த உலகத்த பாக்கட்டும், கண; தானம் செய்’ என்றார்.

நானும் போன் செய்தேன் டாக்டர்கள் வந்து கண்களை எடுத்துச் சென்றார்கள், அவள் கண் இனி நல்லதையே பார்கட்டும் என்று நினைத்தேன். அவள் கண் தானம் செய்யப்பட்டது பாபுவும், மணியும் அக்கா இறுதி சடங்கிற்கு உதவி செய்தார்கள், உறுதுணையாக இருந்தார்கள். என் கண்கள் உறங்கியதைவிட அழுததே அதிகம்.

சோகத்தை எண்ணி எண்ணி சந்தோஷத்தின் கணக்கு தெரியாமல் போனது. இரண்டு வாரம் போக , ஜோதி அண்ணன் என்னைப் பார்க்க வந்தார்

‘உங்க அக்கா கண்ண யாருக்கோ பொருத்திடாங்களாம் டா’ என்றார்.

‘மதி எங்கயோ பார்த்திட்டுதான் இருக்கான்ற திருப்தி போதும் அண்ணே;’

‘ரொம்ப தாங்ஸ்’ என்றேன் கண்ணீருடன்.

வினோதமான விதியின் விளையாட்டே வியப்பு தான், என் அக்கா கண்கள் தான் எஸ்தர் மாமியாருக்குப் பொருத்தப்பட்டது என்பது டாக்டர் மூல்யமாக தெரியவந்தது.

‘அந்த குடும்பத்தினர் உன் விலாசம், பெயர் கேட்கிறாங்க பா’ என்றார் டாக்டர்.

‘அக்கா பெயர், ஊர் எதுவும் சொல்லா வேண்டாம், அது ஒரு அனாதை பொம்பளயோட கண்ணுனு சொல்லிடுங்க’ என்று காலைப் பிடித்து கேட்டுக் கொண்டேன்’….

நினைவுகளின் மழை நின்றது, வெயில் சுhஞல;னு அடிக்க அத்துடன் இளையராஜாவின்
ஆர்.ஆர் நின்றது..

இப்பொழுது…

சிமெண்ட் பெஞ்சை தேய்த்த எனக்கு ஒரு பிச்சைகாரர் வந்து ‘அஞ்சு ட்ரெய்ன் போயிச்சு, என்னாதான் யோசிக்கிரியோ?’ என்று கூறிச் சென்றார்.

“ஹலோ! சூப்பர்வைசர் சார்!! நான் எழில் பேசுறேன் இன்னக்கி ட்ரெய்ன் லேட் போல, அடுத்த ட்ரெய்ன் உடனே வந்துடும், ஏறிடுவேன் சார், வந்திடுறேன்”…

Print Friendly, PDF & Email

5 thoughts on “எழில்

  1. மனதை மிகவும் பாதித்த கதைகள் வரிசையில் ஒரு கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *