எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 10,707 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13ஆம் அத்தியாயம் 

பவானியைத் தன் தங்கையாக்கி மாதங்கள் பல முடி வடைந்துவிட்டன. இத்தனை காலமும் அவள் துன்பம் என்றால் என்ன என்று அறிந்திருக்கமாட்டாள். அறியும் படி அவளை அவன் வளர்க்கவில்லை. அவளை வேலைக்குக் கூட விருப்பத்தின் பேரில்தான் அனுப்பி வைத்தான். அவள் உத்தியோகம் பார்க்கத் தொடங்கிய இந்த இரண்டு மாத காலத்திலும் அவளிடம் சம்பளம் எவ்வளவு என்று கூட அவன் கேட்டதில்லை. முதற் சம்பளத்தை அவளாகக் கொண்டு வந்து அவனிடம் நீட்டியபோதுகூட இது உன் பொருள் தங்கச்சி. உன் விருப்பம் போல செலவு செய்து கொள் என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டான். அப்படி யான செல்வ நிலையில் கவலையின்னது என்று தெரியாமல் வளர்க்கப்பட்ட அவளுக்கு என்ன அதிர்ச்சி வந்திருக்க முடி யும்….? ஒருவேளை அவள் வேலை செய்யுமிடத்தில் வேலைக் கஷ்டமாக இருக்குமோ…. என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினான். 

பவானி வேலை செய்யும் இடம் அவனுக்குத் தெரியும். அவளை அவன்தான் முதல் முதல் வேலைக்கு அழைத்துச் சென்றவன். அதனால் அந்த வீட்டு முதலாளியைக்கூட அவனுக்கு அறிமுகமாகியிருந்தது. அவர்களிடம் சென்று என்ன நடந்தது என்று விசாரிக்கலாமென்றால் அது பவானியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனப் பயந்தான். டாக்டரிடங் கூறிக் கேட்கச் சொல்லலாம் என்றால் நம்பிக்கை யான இடமென்று அவரே சிபார்சு செய்திருக்கும்போது அவன் அவரிடம் எப்படிக் கேட்க முடியும். ஆகவே- பவானிக்கு முதலில் சுகம் வரட்டும் அதற்குப் பின் கேட்க. லாம் என்று மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டான். 

அன்று சாயந்தரம் டாக்டர் வீட்டில் தன் கடமை களை முடித்துவிட்டு நேராக வீட்டுக்குச் சென்று குளித்து விட்டுப் பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று பவானியின் பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினான். வழியில் வீட்டுக்குப் போய் இலட்சுமியிடம் பவானியின் நிலையை எடுத்துக் கூறித் தானும் இரண்டு நாட்களுக்குப் படுக்க வரமுடியாது என்பதைத் தெரிவித்து விட்டுப் பவானிக்கு மாற்றிக் கொள்ள சில உடைகளும் எடுத்துக்கொண்டு திரும்பவும் டாக்டரிடம் வீட்டை நோக்கி: விரைந்தான். 

அவன் சென்றபோது டாக்டர் எங்கோ சென்று விட்டிருந்தார். அதனால் அவன் சிறிது துணிவு பெற்று பவானி படுத்திருந்த அறை வாயில்வரை சென்றுவிட்டான்.. ஆனால் அவன் துரதிர்ஷ்டம் அறைக்கதவு மூடப்பட்டிருந். தது. அவன் ஏமாற்றத்துடன் வெளித் திண்ணையில் நின்று கொண்டிருந்த போது தாதி ஒருவள் அந்த அறையை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளுக்கு ராமுவை நன்றாகத் தெரியும். அந்த டிஸ்பென்சரி ஊழியர் அனை வருக்கும் ராமுவை நல்ல பழக்கம். அவர்களுக்கு எல்லாம் வேண்டிய போது அவன் உதவிகள் செய்திருக்கிறான். அதனால் அந்தத் தாதி அவனைப் பார்த்து முறுவலித்த படியே அறைக் கதவைத் திறக்கப் போன சமயம் மிஸி.. என்று அழைத்துவிட்டுத் தயங்கினான் அவன். என்ன ராமு….? தங்கச்சியைப் பார்க்கவா…? டாக்டரிடம் அனுமதி பெற்றுவா என்று புன்சிரிப்புடன் அவள் கூறி விட்டுக் கதவைத் திறந்த சமயம் அவன் திரும்பவும் ‘மிஸி என்றான். அந்தத் தாதி அவனைத் திரும்பிப் பார்த்து ஏதோ கூறப்போன சமயம் ‘மிஸி’ நான் தங்கச்சியைப் பார்க்கவில்லை… ஆனால். இந்த விபூதியைத் தங்கச்சிக்குப் பூசி விடுவீங்களா மிஸி?’ என்று அவன் ஒரு குழந்தையைப் போற் கேட்டான். அந்தத் தாதி அவன் என்ன செய்கையைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தாள். ராமு… தங்கச்சி மேல் இவ்வளவு அன்பா . . . . பரவா யில்லைத் தா… உன் விருப்பப்படியே பூசி விடுகிறேன். என்று கூற ரகு தன் கையில் இருந்த அர்ச்சனைத் தட்டை அவளிடங் கொடுத்துவிட்டு அவள் அறைக்குட் செல்வதையே பார்த்து நின்றான். 

அவன் உள்ளம் தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டது. கடவுளே என் தங்கச்சிக்கு நல்ல சுகம் வந்து சுகமாகக் குழந்தையைப் பிரசவித்துவிட வேண்டும், எனத் தன்னை மறந்து அவன் வாய்விட்டுப் பிரார்த்தித்துக்கொண் டான். அந்தத் தாதி திரும்பும்வரை அவனால் அந்த இடத்தை விட்டு அகல முடியவில்லை. அவள் திரும்பும் போது தன் தங்கச்சியைப் பற்றி அவளிடம் கேட்டுவிட வேண்டும் என மனந் துடியாய்த் துடித்தது. அதனால் அவன் இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றான். 

அரைமணி நேரத்தின் பின் உள்ளே சென்ற தாதி வெளியே வந்தாள். என்ன ராமு… இன்னும் நீ போகவில்லையா ? இன்று முழுவதும் இப்படியே நிற் கிறதாக உத்தேசமாக்கும்….? என்று அவள் கேட்டு விட்டுச் சிரித்தபோதுதான் ரகு தன் நினைவு பெற்று இப்ப எப்படி மிஸி இருக்கு தங்கச்சிக்கு…? அதிட சுகத்தை அறிந்து கொள்ளத்தான் இதுவரை இதில் காவல் நின்றேன் ‘. என்று சொல்லிவிட்டு அவள் கூறப்போகும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றான். 

‘இப்போ எவ்வளவோ தேவலை ராமு பயப்பட வேண்டிய கட்டந் தாண்டிவிட்டது இருந்தாலும் இனி மேல்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த. ஒரு சிறு அதிர்ச்சியையும் இனி உன் தங்கையின் உடம்பு தாங்கிக்கொள்ளாது. பிரசவம் வரை கண்ணை இமை காப்பது போல் மிகவும் பத்திரமாகக் காக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுத் தாதி அப்பால் சென்றதும் ரகு தன் தலைமயிரைக் கோதிச் சிந்தித்தபடி வெளியே சென்று முன் படியில் அமர்ந்து கொண்டான். 

வாழ்க்கைப் பாதை இவ்வளவு கரடு முரடானதா..? அதற்கு எல்லையில்லாமல் இப்படியே தொடர்ந்து செல்ல வேண்டியதுதானா என்றெல்லாம் யோசிக்கத். தொடங்கினான். எல்லையற்ற சமுத்திரத்தில் செல்லும் கப்பல்கள் கலங்கரை விளக்கத்தைக் கண்டவுடன் பயணத்தை மகிழ்ச்சியுடன் முடித்துக் கொள்ளும். ராமு. கூடத்தான் பவானியைக் கண்டபோது அவள் சோகக் கதை, யைக் கேட்டு அவளைக் காப்பாற்றுவது என்ற முடிவுக்கு, வந்தபோது அவளைத் தன் வாழ்க்கையின் கலங்கரை விளக்க மாக எண்ணினான். அவன் வாழ்க்கைப் பாதையில் ஒளி விளக்காகச் சுடர்விட்டுப் பிரகாசித்த பவானிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் அவன் பயணமும் முடிந்திருக்கும். ஏதோ இறைவன் கருணையுள்ளவனாக இருந்துவிட்டான். ரகுவுக்கு, மனதில் அமைதியே குலைந்துவிட்டிருந்தது. 

உமாவைப் பிரிந்த அந்நிய நாட்களில் ஏற்பட்டிருந்த மனநிலை அவனுக்குத் திரும்பவும் ஏற்பட்டது. எந்த நினைவு தன்மனதில் திரும்பவுந் துளிர்விடக்கூடாது என்று எண்ணியிருந்தானோ அந்த நினைவு அந்த முகம் இன்று அவன் இதயக்கமலத்தில் புகுந்துகொண்டு அவனை வாட்டியது. பழைய நினைவுகள் கோவையாக வந்து அவன் நெஞ்சைப் பிணித்துக்கொண்டபோது அவற்றில் இருந்து அவனால் மீள முடியவில்லை. மீளவே முடியவில்லை. 

இப்படித்தான் உமாவுக்கும் ஒரு நாள் நல்ல ஜுரம் அடித்துக்கொண்டிருந்தது. அவளுக்கு ஜுரம் என்ற செய்தி மட்டுந்தான் அவனுக்குத் தெரிந்ததே தவிர அவளைப் பார்க்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம்கூட அவனுக்கு ஏற்பட வில்லை. அவள் மலர் வதனத்தை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்க்காமல் அவனால் இருக்கமுடியாது. அப்படி இருந்தால் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். அவளில்தான் தன் உயிர் தங்கியிருப்பது போன்றதோர் எண்ணம் அவனுக்கு. அன்று அலுவலகத்தில் இருந்து திரும்பிய நேரம் முதல் அவன் அந்த மாட்டுக்கொட்டி லையே வட்டமிட்டுத் திரிந்தான். அப்போது அவர்கள் உறவு பற்றி யாரும் அறிந்திராத அந்நிய நாட்கள். மாலை மணி ஐந்தும் அடித்துவிட்டது. இன்னும் சிறிது நேரம் தாமதித்தால் இருள் குவிந்துவிடும். வேறு ஒரு உபாயமும் தோன்றாத அவன் அந்த வேலி ஓரமாக நடந்து கொண்டே குழை ஒடிக்கும் சாட்டில் எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ‘ என்று பாடத் தொடங்கினான். அந்தப் பாட்டுக்கு எப்படியும் ஒரு தீர்வு கிடைக்கும் என்பது அவன் அபிப்பிராயம். ஆமாம்! அவன் நினைத்தது வீண் போக வில்லை. உமா மெதுவாக யன்னற்பக்கம் வந்து துப்புவது போற் பாவனை செய்துவிட்டுத் தனக்கு ஜுரம் என்பதை சைகையால் காட்டிவிட்டுப் போனாள். அதன் பின்பு தான் அவனுக்குச் சொட்டு நிம்மதி ஏற்பட்டது. 

இரண்டு நாட்களுக்குப் பின் அவள் ஜுரம் குணமாகி வெளியே நடமாடத் தொடங்கியபின் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பு அப்பப்பா… எவ்வளவு இனிமையானது. அந்த இரண்டு நாட்களும் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்திருந்தபோது அநுபவிக்க நேர்ந்த துன்பங்களையும், அந்தப் பிரிவின்போது சந்திக்கத் துடித்த துடிப்பையும் செய்து கொண்ட இரகசிய முயற்சிகளையும் ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டு சிரித்தபோது அந்தச் சிரிப்பினால் வெகுண்ட பறவையினங்கள் பக்கத்து மரங் களில் இருந்து பறந்தோடின. 

அவையெல்லாம் இறந்த கால நினைவுகள். நினைவு கள் இறந்த காலத்தவையாக இருக்கலாம். ஆயினும் நினைவுகள் எப்போதும் இறப்பதில்லை. தீபாவளிகள் பல வருகின்றன. எத்தனையோ நத்தார்கள் வருகின்றன. பல தைப் பொங்கல்கள் பிறக்கின்றன. இருந்தும் அவற்றை மக்கள் விலக்கி வைப்பதில்லை. வருடா வருடம் காலத்திற் குக் காலம் புதியதொரு நிகழ்ச்சியை எதிர்பார்ப்பது போல் தான் குதூகலமாக வரவேற்கிறார்கள். 

அத்தன்மையை உடையவை தான் நினைவுகளும். அவையும் அலுப்பதில்லை. இனிய நினைவுகளின் நிழலில் தான் பல மனிதர்கள் வாழ முயல்கிறார்கள். ரகுவும் அவற்றிற்கு விதிவிலக்கல்லன். கடந்த கால நினைவுகள் அவனுக்கு இனித்தன. அதனால் பவானியின் துன்பத்தை மறக்கக் கடந்த கால நினைவுகளை அசைபோடத் தொடங்கினான். 

“என்னப்பா ராமு…. எவ்வளவு நேரமாக இங்கே அமர்ந்திருக்கிறாய் என்ற குரல் கேட்டு அவன் தன் நினைவு களில் இருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்க்கிறான். அங்கே டாக்டர் தன் குடும்பத்துடன் வந்துகொண்டு இருந்தார். டிஸ்பென்ஸரியை ஒட்டியபடி இருந்த ஒருபகுதி வீட்டில் தான் டாக்டர் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அதனால் ரகுவுக்கும் அவர்களைப் பழக்கமாக இருந்தது. அவர்களைக் கண்டதும் ரகு அலறிப்புடைத்துக் கொண் டெழுந்தான். டாக்டர் மனைவியின் கையில் இருந்த குழந்தை, ரகுவைக் கண்டதும் அவனிடந் தாவிக் கொண்டது. 

“சாயந்தரம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன். தங்கச்சியை விட்டுப்போட்டு எங்குஞ் செல்ல மனம் இல்லாத தால் அமர்ந்துவிட்டேன்” என்று அவர் வினாவிற்குப் பதி லளித்த ரகு தன்னிடம் தாவிய குழந்தையை அன்புகனியப் பற்றித் தன் தோளில் சுமந்துகொண்டான். டே. . அப்ப நீ ராமு மாமாவோட இருந்துகொள்… நாங்கள் போறம்….” என்று மகனிடம் கூறி அவனை ரகுவோடேயே விட்டுவிட்டு டாக்டரும் மனைவியும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர். 

டாக்டர் ராஜனின் பழக்கம் ஏற்பட்ட நாள் முதலாக அவர்கள் குடும்பத்திற்கும் ஒரு நல்ல பிள்ளை யாகவே இருந்து வந்திருக்கிறான். டாக்டரின் மனைவி கூட அவனை ராமு என அடிக்கொரு முறை அழைத்து அன்புக் கட்டளைகள் இட்டுக்கொண்டே இருப்பாள். அவனும் ஓய்வுநேரங்களிலெல்லாம் அங்குச் சென்று அவ ருடைய அன்புக் குழந்தையுடன் விளையாடுவதில் இன்பம் அடைவான். அந்தக் குழந்தை மேல் அப்படியொரு பாசம் அவனுக்கு. அந்தக் குழந்தையைக் காணும் போதும் பேசும் போதெல்லாம் பவானிக்குப் பிறக்கப்போகும் குழந்தை யைப் பற்றியே அவனது எண்ணம் வட்டமிடும். அந்தக் குழந்தைக்கு என்ன பெயரிடுவது எப்படியழைப்பது அது யாரைப் போல் இருக்கும் என்றெல்லாம் சிந்திப்பான். அன்றுகூட அவன் பவானியின் குழந்தையை மனதில் நினைத்துக் கொண்டுதான் டாக்டரின் குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தான். அந்த மழலைச் செல்வத், தின் அன்பு முத்தங்கள் அவனைப் பரவசப்படுத்தின. 

‘என்ன ராமு நேரம் போவதே தெரியவில்லையா… கும்.. கொஞ்ச நாள் பொறுத்துக்கொள் உன் தங்கச் சிக்குப் பையன் பிறக்கட்டும் அப்புறம் கண்ணனைக் கவனிக்க மாட்டாயாக்கும்…! உம் இருந்துவிட்டுக் கண்ணன்ர அம்மா உன்னைச் சாப்பிட வரட்டாம். சாப்பிட்டுட்டு வாப்பா!. என்று டாக்டர் வந்து குழந்தையை அவனிடங் கேட்கும்வரை அவனுக்கு இரவு அவ்வளவு நேர மாகிவிட்டது என்று தெரிந்திருக்கவில்லை. 

ரகு குழந்தையை அவரிடம் நீட்டிவிட்டு வெளிப்புறந் திரும்பி நடக்க இருந்த சமயம் டாக்டர் மறுமுறையும் அவனை அழைத்து வீட்டுக்குப் போகும்படி கூறினார். வேண்டாம் ஸார். எனக்குப் பசிக்கவில்லை. நான் கோவிலில் இருந்து திரும்பும்போதுதான் வடையும் சாப் பிட்டுக் காப்பியுங் குடித்துவிட்டு வந்தேன். அதனாற் பசியே இல்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்றான் பணிவுடன். 

‘எங்கே நீ சாப்பிட்டுவிட்டாய் என்று பொய் சொல்லப் போகிறாயோ என்றுதான் நினைத்தேன். ஆனா லும் நீ பொய் சொல்லமாட்டாய் என்றொரு நம்பிக்கை எனக்கிருந்தது. எவ்வளவோ பெரிய பெரிய காரியங்களுக் கெல்லாம் பொய் சொல்லாத நீ கேவலம் இந்த அற்ப விடயத்திற்கா பொய் சொல்லப்போகிறாய் என்ற என் யூகம் பொய்த்துவிடவில்லை. சரி…பசிக்காவிட்டாற். பரவாயில்லை. ஒருவருக்காக ஒருவர் எதையாவது செய்ய லாம் அல்லவா… இப்போது நீ எனக்காகப் போய்- கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வா..’ என்று டாக்டர் கட்டளையிட்டபோது அவனால் அதை மறுக்கமுடியவில்லை. அன்புடைய ஆசிரியர் ஒருவருக்குப் பணிந்துபோகும் மாண வனைப் போல அவனும் அவருடைய வேண்டுகோளை மதித்து உட்புறமாக அவர் வீட்டை நோக்கி நடந்தான். 

மேசைமேல் அவனுக்கு உணவெல்லாம் தயாராகியிருந் தது. அவன் வரவைக் காத்துக் கொண்டு அமர்ந்திருந் தாள் டாக்டரின் மனைவி. ‘வந்திட்டியா ராமு… வா .. வா…. எங்கே நீ வராமல் தட்டிக்கழித்துவிடுவாயோ என்று பயந்திருந்தேன். நல்லபிள்ளை வந்திட்டாய். அப்படி உட்கார்ந்து சாப்பிடு. இது உன்வீடு மாதிரி ஆனபடியால் உன் இஷ்டப்படிக்குப் போட்டுச் சாப்பிடு. உம் வெட்கப் படாமல் போ ராமு..’ என்று கூறியதும் மறுவார்த்தைக் கிடமின்றி அவர்களுக்காக ஏதோ சாப்பிட்டுவிட்டு அவளுக்கு நன்றி செலுத்திவிட்டுக் குனிந்த தலை நிமிராமல் அப்பாற் சென்றான் ராமு. 

இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல இந்த உலகமும் இன்பமும் துன்பமும் நிறைந்த ஒன்று. அதில் எது வந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை மட்டும் மனிதன் பெற்றுவிட்டால் இந்த உலகத்தைச் சுவர்க்க மாக்கிவிடலாம் என்ற அரிய தத்துவம் அவ்வப்போது அவன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தது நிகழ்ச்சிகளால் அவ னுக்கு உதயமாகியது. அவன் டிஸ்பென்ஸரிக்குள் கால் வைத்த போது வெளித் திண்ணையில் பல மனிதர்கள் கூடி நிற்க யாரோ ஒரு பெண் விசும்பி அழும் சத்தங் கேட்டதால் அவன் அவ்விடத்திற்கு விரைந்தான். 

அவர்களிடம் விசாரித்ததில் தெரியாமல் மண்ணெண் ணெயை அருந்திய குழந்தையொன்றைக் கவலைக்கிடமான நிலையில் அனுமதித்திருப்பதாகவும் அங்கே அழுது கொண் டிருப்பவள் அந்தக் குழந்தையின் தாய் என்றும் அதைவிட அவளுக்கு வேறு குழந்தைகள் இல்லையென்றும் அறிந்து கொண்டான்.. அந்தத் தாய்படும் துன்பத்தைப் பார்க்க முடியாமல் இருந்தது. பலர் தாயைத் தேற்றிக்கொண்டிருந் தனர். உலக ஒப்புக்காக அவன் கூட இரண்டு வார்த்தைகள் சொல்ல நினைத்தான். ஆனால் சில மணி நேரத்திற்கு முன் இரத்த பாசமற்ற, பழகிய ஒரு ஜீவனுக்காகத் தான் பட்ட துன்பமுந் துயரமும் உணரப் பெற்றவனாய் அப்பால் நகர்ந்து தன் தங்கையின் அறைப் பக்கஞ் சென்றான். 

அந்தக் கதவு மூடப்பட்ட படியே இருந்தது. அந்த அறையைக் கடந்து சென்ற போது மூன்றாவது அறை யிலிருந்து டாக்டர் ராஜன் வெளிப்பட்டார்! கூடவே இரண்டு தாதிகளும் வந்தனர். டாக்டர் வந்த அவசரத்தில் இருந்து புதிதாக அனுமதிக்கப்பட்ட குழந்தை அந்த அறை யில் தான் அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டு அவன் தன் நடையைத் தொடர்ந்தான். அப்போது ‘ஐயோ டாக்டர்’ என்ற அலறல் கேட்டு அவன் அதிர்ச்சியடைந்து நின்றான். 

14ஆம் அத்தியாயம் 

ரகு தன் வாழ்க்கையில் எத்தனையோ மரணங்களைப் பார்த்து இருக்கிறான். மரணச்சடங்குகளில் பங்கு பற்றி யிருக்கிறான். அப்போதெல்லாம் தன் மனதில் ஏற்படாத சோகம் ஒரு கலக்கம் அன்று அந்த அவல ஓலத்தைக் கேட்ட போது அவனுக்கு ஏற்பட்டது. அது எதனால் என்பது தான் இன்னும் அவனுக்குப் புரியாத புதிர் ஆக இருந் தது. நோய்வாய்ப்பட்டு ஆபத்தான குழந்தை அவ னுக்கு அறிமுகமானதாக இருக்கவேண்டும் அல்லது அதன் பெற்றோர் அவனுக்கு உறவாக இருக்கவேண்டும். ஆனால் இரண்டும் கெட்ட நிலையில் யாரோ முன்பின் அறிமுகமற்ற பெண்ணொருத்தி அழுதால் அவன் மனம் எதற்காகக் குழம்ப வேண்டும். ஒருவேளை அவனது மனநிலை அதற்குக் காரணமாக இருக்கலாமா….? ஆமாம்! பவானியின் எதிர்பாராத வருத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவன் மனம் எந்த ஒரு துன்பத்தையும் சகித்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்ததே அதற்குக் காரணமாயிருந்தது. 

‘ஐயோ டாக்டர்’ என்று அலறிய பெண்ணின் குரல் இப்போது உச்ச ஸ்தாயியில் ஒப்பாரி வைத்து அலற அந்தப் பெண் தன் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி ஓடினாள். ரகுவுக்கு அவள் ஏன் ஓடுகிறாள் என்பது யாரும் கூறாமலே புரிந்தது. அவள் தலையில் -அடித்துக்சொண்டு ஓட அவளைப் பின்தொடர்ந்து அந்தக் கூட்டமும் ஓடியது. குழந்தை மரணத்தின் வாயிலில் அகப் பட்டுவிட்டது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. அவள் டாக்டரைத் தேடிப் போனாள். டாக்டர் அதற்குள் வீட்டுக்குப் போய்விட்டதாகச் செய்தி கிடைத்தன, அவனும் அதைத்தான் எதிர்ப்பார்த்திருந்தான். 

அவனும் அந்த வைத்தியசாலையில் வேலைக்குச் ‘சேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. டாக்டருடன் பழகி அவனுக்கு நல்ல அனுபவம் உண்டு. இதற்கு முன்புகூட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாராவது துர திர்ஷ்ட வசமாக இறக்க நேர்ந்தால் ராஜாவால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்பதை அவன் கண் கூடாகக் கண்டிருக்கிறான். ஏதாவது கேஸ் தவறினால் அடுத்த நிமிடம் டாக்டரை டிஸ்பென்சரியில் காண முடி யாது. அவர் வீட்டுக்குப் போய்விடுவார். திரும்பவும் அவர் டிஸ்பென்சரிக்கு வர அரைமணி அல்லது ஒரு மணி நேரஞ் செல்லும் தன்னைப் போல அவருக்கும் மிகவும் இளகிய உள்ளம் என்று நினைத்துக் கொள்வான். 

அன்றும் அப்படித்தான் டாக்டர் சென்றது அவனுக்கொன்றும் ஆச்சரியமாக இருக்கவில்லை. அதனால் அவன் அங்கு நின்ற தாதிமார்களில் தனக்குப் பழக்கமான வளைப் பார்த்துக் குழந்தைக்கு எப்படி என்று வேண்டு மென்றே கேட்டான். * என்ன ராமு.. உனக்குத் தெரிய வில்லை. குழந்தையின் ஆயுள் முடிந்துவிட்டது. சிறிது முந்திக் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.. என்னமோ விதி அவ்வளவுதான் என்று அவள் அலுத்துக் கொண்டபோது அவனுக்கு அழவேண்டும் போல இருந்தது. அதே சமயம் அவனால் பவானியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் பிந்தியிருந்தால் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும் என்று டாக்டரும் தாதியும் கூறியது அவன் ஞாபகத்திற்கு வந்த போது அதிர்ஷ்டம் இன்னுந் தன் பக்கம் இருப்பதாக அவன் தன்னைத் தேற்றிக் கொண்டான். 

எப்படியோ ஒருவாரஞ் சென்றுவிட்டது. பவானி எழும்பி நடக்கும் நிலையை அடைந்துவிட்டாள். ரகு ஓய்வு நேரங்களில் அவளுடன் பேசிக்கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்து வந்தான். இந்த இடைக்காலத்தில் டிஸ்பென்சரிக்கு ஒரு புதிய தாதியும் நியமனமாகியிருந்தாள் என்று பேச்சுப் போக்கில் தன் தங்கச்சி கூறக் கேள்விப் பட்டிருந்தானே தவிர அவளை அவன் இதுவரை காண வில்லை. டிஸ்பென்சரியில் என்ன நடக்குதென்றே அவ னுக்குத் தெரியாது. அதைப் பற்றி அவன் கவலைப்பட்ட தாகவுந் தெரியவில்லை. அதனால்தான் புதிய தாதி வந்தது கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பவானியை அங்கு அனுமதித்திருக்காவிட்டால் டிஸ்பென்சரித் திண் ணையிற் கூட அவன் கால் வைத்திருக்கமாட்டான். 

வழக்கம் போல அன்றும் அவன் பவானியோடு பேசிக் ‘கொண்டிருந்தான். அப்போது அந்தப் புதிய தாதி பவானியைப் பார்வையிடுவதற்காக உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததும் அவள் தான் புதியவளாக இருக்க *வேண்டும் என ரகு ஊகித்துக்கொண்டான். அவளை அவன் இதற்கு முன் பார்த்ததில்லை. மற்றைய தாதிகளில் சிலர் அவனோடு அன்பு பாராட்டி உரிமையுடன் பழகும்போது அவ னும் அவர்களுடன் ஒரு சகோ தரனுக்குரிய அன்புடன் பழகு வான். பேசாதவர்களோடு அவனும் பேசிக் கொள்ள மாட்டான். வலியச் சென்று யாருடனும் பேசிக் கொள்ளும் “வழக்கந்தான் அவனிடங் கிடையாதாச்சே. ‘எக்ஸ்கியுஸ் மீ’. நர்ஸ் அவனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுப் பவானியின் அருகிற் சென்று அவள் உஷ்ணத்தைப் பரீட் சிக்கத் தொடங்கினாள். அப்போது அவள் விழிகள் ரகு. வின் மீது பதிந்து தாழ்ந்தன. தூரத்திற் சென்று நின்ற ரகுவும் அதே சமயம் அவளைப் பார்க்க நேர்ந்ததால் இருவர் கண்களும் ஒருமுறை சந்தித்துக்கொண்டன. 

‘இவர் தான் என் அண்ணா மிஸி.. ராமு அண்ணா என்று கூறினேனே அவர் தான் இவர்.. என்மீது ரொம்பப் பிரியம்….’ 

பவானி ரகுவை அவளுக்கு அறிமுகஞ் செய்து வைக்க: அவள் மகிழ்ச்சியோடு ரகுவை இரண்டாம் முறை பார்த்தாள். 

மரியாதைக்காக ரகுவும் அவளைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தன் பார்வையை வேறு பக்கந் திருப்பிக் கொண்டான். 

பவானி மீது அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. எதற்காக இவளுக்கு என்னை அறிமுகஞ் செய்ய வேண்டும். என்று கர்விக் கொண்டவன் அந்தத் தாதி போகும்வரை காத்திருந்தான். இதற்கு முன்பும் அவன் அவளோடு பேசிக்கொண்டிருந்த சமயங்களில் வேறு தாதிமார் பவானி’ யைப் பரீட்சிக்க வந்திருக்கிறார்கள். அவர்கள் அவனோடு ஏதாவது குறும்பாகப் பேசிக்கொண்டே ஐந்து நிமிடத்தில் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் இவள் ஆமாம்! இவள் அவனுடன் ஒரு வார்த்தை. பேசவும் இல்லை. வேலை முடிந்தவுடன் போகவும் இல்லை. பவானியுடன் சில நிமிடம் ஏதோ அரட்டை அடித்துவிட்டுப் பின்புற யன்னற் பக்கஞ் சென்று சிறிது நேரம் வெளியுலகைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரகுவுக்கு அவள் மேல் ஆத்திரம் வந்தது. தான் ஒரு தாதி என்ற கர்வத்தைக் காட்டுகிறாள் போலும் என்று அவள் அந்த அறையை விட்டுப் போகும்வரை அவனும் வெளியே சென்று காத்து நின்றான். 

அவள் வெளியே செல்லும் பூட்ஸ் சத்தம் கேட்ட பின்புதான் அவன் உள்ளே சென்றான். ‘இதுதான் புதிதாக வந்த தாதி அண்ணா பெயர் நிர்மலா ரொம்ப நல்லவள். இன்றைக்கு இவள்தான் நைட் ட்யூடி யாம் ‘ என்று பவானி அவனிடங் கூறியதற்கு “உனக்கு யாரைத்தான் பிடிக்காது.. அது சரி எதற்காக நீ என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினாய்…. ? எனக்கிதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காது தங்கச்சி….” என்று அவன் சற்றுக் கண்டிப்புடன் சொல்ல பவானி சிரித்தாள். இதென்னண்ணா நீங்கள்…. படிக்காத ஆள் மாதிரி… உங்களை அறிமுகஞ் செய்ததில் என்ன தவறு. என்னண்ணாவைப் பற்றி நான் எப்படிச் சொன்னால், என்ன ? என்று பவானி திருப்பிச் சொன்னபோது ரகு சிரித்தான். 

பவானியின் மனம் நோகக்கூடியதாக அவனால் எது வுமே செய்யமுடியாது. அதனால் அவன் சிரித்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் குறிக்கப்பட்ட நேரம் வந்ததும் பவானியிடம் விடைபெற்று வெளியேறினான். அவன் வெளியேறிய போது எதிரே வந்துகொண்டிருந்த நர்ஸ் நிர்மலா அவனைப் பார்த்து முறுவலித்தாள். அவன் அவளைக் கவனிக்காதவன் போல் நேராக நடந்து சென்று விட்டான். அவளைப் பார்க்கவோ அவளோடு பேசவோ அவன் பயப்பட்டான். அவளைப் பார்த்தது முதல் அவ னுக்கு ஒரு மனப்பயம் உண்டாகி இருந்தது. 

பார்ப்பதற்கு அப்படியொன்றும் அவள் விகாரமல்ல. மேக்கப் போட்டால் அசல் சினிமா நட்சத்திரம்தான். மேக்கப் இல்லாமல் சற்றுப் பொதுநிறமானவள். அதனால் தான் அவனுக்கு அப்படியொரு பயம் ஏற்பட்டது. 

சிலரைப் பார்க்கும்போது முதற் பார்வையிலேயே பிடித்துவிடும். அவர்களிடம் ஏதோ கவர்ச்சி இருக்கும். சிலரை முதல்தரம் பார்க்கும் போதே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுவிடும். அதை அவன் அனுபவ மூலமாக அறிந் திருந்தான். நிர்மலாவைக் கண்ட போதும் அவளை அவனுக்கு ரொம்பப் பிடித்துவிட்டிருந்தது. அதனால் தான் இரண்டாம்முறை அவளை அவன் பார்க்க விரும்பவில்லை. ஆசைக்கு ஒரு தங்கையும் அன்புக்கு ஒரு காதலியும் இருக்கும் போது மூன்றாவது பெண்ணொருத்தியிடம் எதற்காக அன்பு செலுத்த வேண்டும் என்று தான் அவளைத் தட்டிக் கழிக்க முயன்றான். 

ஆனால் மனிதன் நினைத்தபடி என்னதான் நடந்து விடுகிறது…? எந்த ஒரு பொருளை அடைய விரும்பு கிறோமோ அது எம்மைவிட்டுத் தூர விலகிப் போவதையும் எதை விலக்கித்தள்ள முயற்சிக்கிறோமோ அது எம்மை நெருங்கி நெருங்கி வருவதையும் வாழ்க்கையில் பலமுறை கண்டிருக்கிறோம். ரகுவின் வாழ்க்கையிலும் அப்படித் தான் ஒன்று நடந்தது. 

ஆரம்பத்தில் காவல் காரணமாக அமர்த்தப்பட்ட அவன் காலப் போக்கில் டாக்டரின் அந்தரங்கக் காரிய தரிசிபோலானான். அவனுக்கென்று ஒரு தனிவேலை இருக்கவில்லை. அனேகமாக அவன் டிஸ்பென்சரியோடு சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் பழகிவிட்டான் என்றே கூறவேண்டும். அதனால் யாராவது வேலைக்கு வராத நாட்களில் டாக்டர் அவனை அந்த வேலைக்குத் தற்காலிகமாக நியமிப்பார். இப்போது வேறோர் காவற்காரன் அங்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்டிருந்தான். 

ஆனால் ரகுவின் துரதிர்ஷ்டம் அன்று அந்தக் காவற் காரன் வராததால் அவன் வரும்வரை டாக்டர் அவனையே காவற்காரனாக நியமித்திருந்தார். அத்துடன் இரவு .டியூட்டி பார்க்கும் நர்ஸுக்கும் வேண்டிய ஒத்தாசை செய்து கொடுக்க வேண்டும் என்பது டாக்டரின் கட்டளையாக இருந்தது. அவனுக்குப் பழக்கமான மிஸி யாராக இருக்க லாம் என்று தான் அவன் தடைசொல்லாமல் டாக்டரின் கட்டளையை ஏற்றுக்கொண்டான். ஆனால் இப்பொழுது அது அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. 

அவன் பக்கத்துக் கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வாயிற்படி அருகே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டான். அன்றையப் பொழுதைப் போக்கவும் நித் திரை தூங்காமல் இருப்பதற்காகவும் தனக்குப் பிடித்தமான ஆங்கில நாவலாசிரியையான ‘ பாபறா காட்லான்ட் ‘ என் பவரின் ‘லவ் இன் ஹைடிங்’ மறைவில் காதல் என்ற புத்தகத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தான். அதை முன்பு ஒருமுறை படித்திருக்கிறான். அதை எத்தனை முறை படித்தாலும் அவனுக்கு அலுப்பதில்லை. அந்த நாவலாசிரியையின் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் அவன் பலமுறை படிப்பான். வாசகர்களைப் பாத்திரங்களுடன் ஒன்றிப்போக வைக்கும் படைப்புகள் அவை. வழக்கம் போல பவானி படுத்திருந்த அறைப்பக்கம் வரை சென்று வெளியே நின்று பார்த்துவிட்டு மீண்டுந் தன் இருப்பிடத் திற்குச் சென்று புத்தகம் படிக்கத் தொடங்கினான். 

அப்போது யார் நீங்களா..? நீங்கள் கூட இங்கே தானே வேலை பார்க்கிறீர்கள்? எனக்குப் பவானி சொன் னாள். இங்குப் பல நாட்கள் வேலை செய்கிறீர்களாக்கும்.. ? நான் இங்கு வேலை ஏற்று ஒரு சில நாட்கள் தான் ஆகிறது. ஆயினும் எனக்கு இந்த டிஸ்பென்சரியும் டாக்டரும் ரொம்பப் பிடித்துள்ளனர். உங்களுக்கு நாவல்கள் என்றால்’ பிடிக்குமாக்கும்..? எங்கே அந்தப் புத்தகத்தைக் கொஞ்சம். பார்க்கலாமா..? என்று குரல் கேட்டது. 

அந்தக் குரலைக் கவனிக்காதவன் போல் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு அவள் குரலுக்கு மட்டும் காதைக். கொடுத்துக் கொண்டிருந்த அவன் தன் கையில் இருந்த புத்தகத்தை அவளிடம் நீட்டினான். ஆனால் தன் பார்வையை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். அவனைப் பார்த்தபடியே புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு ‘ஓ பாபறா காட்லாண்டின் புத்தகமாக்கும்! எனக்கு ரொம்பப் பிடித்தமான ஆசிரியை. ஆங்கில நாவல்கள் உங்களுக்கு அதிகம் பிடிக்குமாக்கும்..?’. 

அவள் கேள்வி அவனுக்குச் சினமாக இருந்திருக்க வேண்டும். ‘பிடிக்கும்’ என்று மட்டும் சுருக்கமாகப் பதிலளித்தான். அவள் புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். ஆனால் அவன் தன் பார்வையை வேறெங்கோ செலுத்திக் கொண்டிருந்தான். அவள் புத்தகம் நீட்டியதைக் காண வில்லை. ‘உங்கள் புத்தகம்’ என்று அவள் குரல் கொடுத்த பின்புதான் தன் கைைைய நீட்டிப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டான். 

அதன் பின்பு கேட்ட சப்பாத்துச் சத்தத்தில் இருந்து அவள் அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டாள் என்பது அவ னுக்குப் புலனாகியது. கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன். அவளுக்காக அவன் உள்ளம் முதல் தடவையாக ஏங்கிக் கொண்டது. அவளை உதாசீனஞ் செய்துவிட் டோமோ என்ற பயமும் கூடவே எழுந்தது. பவானியையும் பார்வையிடுபவளாக இருந்தபடியால் அவளுடன் சமாதானமாகவே நடந்துகொள்ள வேண்டும் என நினைத்துக்கொண் டான். அதனால் கையில் இருந்த புத்தகத்தை மூடிவிட்டு அவன் சிறிது நேரம் தெருவாயிலுக்கும் உள்ளுக்குமாக நடந்தான். அவன் மனதில் அமைதி நிலவுவதாக இல்லை. நிர்மலா எங்கே இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவன் மனம் துடித்தது. 

இதுவரை தெருவாயிலுக்கும் உள்ளுக்குமாக நடந்து கொண்டிருந்தவன் இப்போது டிஸ்பென்சரி விறாந்தை நீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். ஆனால் யாரைத் தேடி வந்தானோ அந்த முகத்தை அவனால் காணமுடிய வில்லை. எங்குப் போயிருப்பாள் என்று சிந்தித்தபடியே அவன் திரும்பவுஞ் சென்று தனக்குரிய இடத்தில் அமர்ந்து கொண்டான். 

வழக்கமாக அவன் ஆசையோடு படிக்கும் புத்தகத்தைக் கையில் எடுக்கவே அவனுக்கு அன்று பிடிக்கவில்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எவ்வளவு சீக்கிரத்தில் ஒரு மனி தனின் மனநிலையை மாற்றியமைத்து விடுகிறது என்பதற்கு அன்றைய சம்பவமே சாட்சியாக அமைந்திருந்தது. அன்று, புதிய கேஸ் ஒன்றும் அனுமதிக்கப்படாததால் ரகுவுக்கு சோம்பலாக இருந்தது. கூடவே தூக்கமும் வந்து அவனைப் பழி வாங்கியது. அவனது நினைவு திடீரென உமாவிடஞ் செல்கிறது. உமா இந்நேரம் நன்றாகத் தூங்கிக்கொண் டிருப்பாள். அவளுக்கென்ன சீமான் வீட்டுப்பிள்ளை.. இந்த ஏழையை நினைத்துக்கொண்டிருக்க அவளுக்கு எங்கே நேரமிருக்கப் போகிறது….? என்று எண்ணியவனின் உதடுகள் மீண்டும் அந்தப் பழைய பாட்டை மீட்டுக்கொண்டன.. 

‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு 
வாசலில் உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் 
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு 
வந்தவுடன் உன் ஆசைமுகத்தைப் பார்த்திருப்பேன்-
கண்ணில் நீரைக் காணாமல் 
கவலை ஏதும் கூறாமல் 
என்னை எண்ணி வாழாமல் 
உனக்கென நான் வாழ்வேன் 
காலம் வரும் என் கனவுகள் எல்லாம்
கனிந்து வரும்….’ 

இந்த அடிகளையே திருப்பித் திருப்பி முணுமுணுத்துக். கொண்டவன் காலம் வரும் என் கனவுகள் எல்லாம்- கனிந்து வரும்… என்று அடிகளைப் பாடியதும் கண் களில் இருந்து நீர் ஆறாகப் பெருகித் தன்னை மறந்து கண்ணை இறுக மூடிக் கொண்டு தலையைத் தன் நாற் காலியின் பின்புறமாகச் சாய்த்து அப்படியே கண்ணயர்ந்து` விட்டான். அது டிஸ்பென்சரி என்ற நினைவே அவனுக்கு அற்றுப்போய்விட்டது. அவன் மானசீகமாக உமாவோடு இரண்டறக் கலந்துவிட்டான். சுவர்க்கத்தை அவன் கண்டதில்லை. ஆயினும் தான் இருப்பது சுவர்க்கம் என் றோர் பிரமை தட்டியது அவனுக்கு. அப்போது ‘ராமு என்று குரல் கேட்டு அவன் திடுக்கிட்டு விழித்தான். அங்கே. அவனுக்குப் பழக்கமான IR வழக்கம் போல அவ னைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். 

15ஆம் அத்தியாயம் 

அந்த டிஸ்பென்சரியில் வேலை ஏற்கத் தொடங்கிய நாட்களில் இதுவரை இன்று போல அவன் தன்னை மறந்து படுத்துக்கொண்டதே கிடையாது-உள்ளத்தால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவன் உடலையுங் கூட வாட்டிவிட்டது. 

என்ன ராமு… நல்லாக் காவல் செய்கிறாய். இம்…. எழுந்திரு இனித்தான் விடிஞ்சுபோச்சே போய் வீட்டில் நல்லாத் தூங்கிக் கொள் ” என்று அந்த நர்ஸ் கூறிய பின்புதான் அவன் பரபரப்புடன் எழுந்தான். அவ னால் எழுந்திருக்க முடியாதபடி தலைசுற்றியது. எங்கே விழுந்துவிடுவோமோ என்று பயந்த அவன் பக்கத்தில் சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 

“என்ன ராமு… உனக்குச் சுகமில்லையா…? என்று கேட்ட நர்ஸ் அவன் தலையில் கைவைத்துப் பார்த்து விட்டு உனக்கு நல்ல காய்ச்சல் அடிக்குது. வா மருந்து தாறன். குடித்துப்போட்டு போய்ப் படுத்துக்கொள் என்றாள். 

ரகு அவளைப் பின்தொடர்ந்து சென்றான். அவன் உடலெல்லாம் வலித்தது. ஆகவே அந்த நர்ஸ் இருக்கும் டத்தில் இருந்த ஓர் நாற்காலியில் அமர்ந்துகொண்டான். அந்த நர்ஸ் கொடுத்த மருந்தைக் குடித்விட்டு அவன் பக்கத்து வாங்கின் மேல் படுத்துக்கொண்டான். 

திரும்பவும் அவன் கண்விழித்த போது நன்றாக விடிந்துவிட்டிருந்தது. காலைச் சூரியன் தன் பொற் கிரணங்களை உலகுக்கு அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.. அவனுக்குக் காய்ச்சல் சிறிது தணிந்து உடலும் லேசாக இருக்கவே அவன் எழுந்து பவானியின் அறைப்பக்கஞ் சென் றான். அது டாக்டர் வரும் சமயமாக இருந்ததால் பவானி யின் அறைக்குட் செல்லாமல் அவன் வெளியே டாக்டர் கண்ணுக்கு மறைந்து நின்று கொண்டான். 

டாக்டர் பவானியின் அறைக்குட் சென்று திரும்பும் வரை அவன் அவ்விடத்திலேயே நின்றுவிட்டு டாக்டர் அந்த அறையைத் தாண்டியதும் பூனையைப் போல் பதுங்கிப் பதுங்கி பவானியின் அறைக்குட் சென்றான். என்ன அண்ணா…. இப்போ காய்ச்சல் எப்படி….? வருத்தத் தோடு ஏன் வந்தீர்கள்….? வீட்டுக்குப்போய் நன்றாகப் படுத்துறங்குங்கள். இலட்சுமி அக்காளிடம் கூறி ஏதாவது சுடச் சுடப் போட்டுக் குடியுங்கள். 

அவனைக் கண்ட பவானி தன்பாட்டுக்கே பேசிக் கொண்டுபோன போது ரகு திடுக்கிட்டான். இதற்குள் இவளுக்கு எப்படி எனக்கு வருத்தம் என்று தெரிந்தது எனச் சிந்திக்கத் தொடங்கினான். மிஸிதான் சொல்லி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குள் எனக்குச் சுகமில்லை என்ற விடயம் உனக்கு எப்படித் தெரிந்தது தங்கச்சி என்று நினைத்ததைக் கேட்டு விட்டான். விடிந்து இவ்வளவு நேரத்திற்கும் நீங்கள் வராததால் அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று மிஸியிடங் கேட்டன். அதுதான் உங்களுக்குச் சுகமில்லை என்றும் தான் மருந்து கொடுத்த தாகவும் கூறியது என்றாள். 

ரகுவுக்கு உடல் உஷ்ணம் குறைந்திருந்ததே தவிர உடல் அசதி குறைந்தபாடாக இல்லை. அதனால் வானியிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் தெருவில் இறங்கி நடந்தான். 

அவனால் நடக்கக்கூடத் தெம்பு இருக்கவில்லை. எப்படியோ பஸ்ஸில் ஏறி வீட்டை அடைந்துவிட்டான். அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தபோது இலட்சுமி வீட்டு ரேடியோவில் இருந்து வெளிவந்த பாட்டு அவனை அப்படியே அதிரவைத்தது. 

“வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன் ” அந்த அடிகள் அவனை என்னவோ செய்தன. அந்த வீட்டில் அவன் காலடி ஓசை கேட்டு வரக்கூடிய ஆசைமுகம் இல்லவே இல்லை. அந்த ஆசைமுகத்தை அன்பு இதயத்தை அழகான உருவத்தைப் பார்க்கவேண்டுமானால் அவன் திரும்பவும் வல்வெட்டித் துறைக்குத்தான் போக வேண்டும். அதுதான் அவன் வாழ்க்கையில் நடக்காத நடக்கமுடியாத ஒரு காரிய மாய் விட்டது. அந்த அன்பு ஜீவனாகிய உமாவை அவன் நினைக்கக்கூட உரிமையற்றவனாகி விட்டான். அவளை மறக்கத்தான் முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை. போதாததற்கு அவனைச் சோதிப்பது போல் சந்தர்ப்பங் களும் உண்டாகிக்கொண்டேயிருக்கின்றன. அதற்கு மேலும் அவன் அங்கு நிற்கமுடியாதவனாய்த் தன் காதுகள் இரண் டையும் கைகளால் இறுகப் பொத்திக் கொண்டுதான் குடியிருக்கும் பக்கத்தை அடைந்தான். நல்ல காலம் அவன் வந்ததை யாரும் காணவில்லை. அவன் பாயை விரித்துப் படுத்துக்கொண்டான். 

நித்திரை கொள்ளவேண்டும்போல இருந்ததே தவிர அவனுக்கு நித்திரை வரவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவனின் உதடுகள் அந்தப் பாட்டின் சில அடிகளை முணுமுணுக்கின்றன. 

‘காலம் வரும் என் கனவுகள் எல்லாம் 
கனிந்து வரும். 
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் 
இணைந்துவிடும். 
காதல் என்றால் சேயாவேன், கருணை என்றால்
தாயாவேன் 
கண்ணா உந்தன் நிழலாவேன், 
உனக்கென நான் வாழ்வேன்’. 

இந்தக் கடைசி அடிகள்தான் உமாவுக்கு மிகவும் பிடித்த மானவை. அந்த அடிகளைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லிவிட்டுக் கேட்டுக்கொண்டே இருப்பாள். அவனும் அவளை அர்த்தத்துடன் பார்த்துச் சிரித்துக்கொண்டே பாடுவான். “என்னை அப்படிப் பார்க்காதீர்கள் அவன் பிகு பண்ணுவான். அவன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பான். 

அவள் முகம் குங்குமமாகச் சிவப்பேறக் கைகளால். முகத்தை இறுக மூடிக் கொள்வாள். ‘கண்ணா உந்தன் நிழலாவேன் உனக்கென நான் வாழ்வேன்’ அவன் அந்த அடிகளைப் பாடியதும் அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்வாள். அப்புறம் . அப்புறம். … அது அவர்களுக்குத்தான் தெரியும். 

‘உமா …. நீ என் மேல் உன் உயிரையே வைத்திருக் கிறாய் அந்த ஆழமான அன்பில் நம் ஏற்றத் தாழ்வை உன்னால் அணுவளவும் சிந்திக்கமுடியவில்லை. ஆனால்- என் மனதில் என்னையறியாமல் ஒரு பயம் குடி கொண் டிருக்கு உமா. இறைவன் நம்மை ஒன்று சேர்ப்பான் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. ஆயினும் தற்செயலாக உன் பெற்றோர் நம் காதலை ஆதரிக்காவிட்டால் என்ன நடக்கும் என்று நினைக்கவே எனக்குப் பயமாக இருக்- கிறது. என்னைவிட நான் உன்னைப் பற்றித்தான் அதிகம்.. கவலைப்படுகிறேன். நான் ஏழை. கட்டாந்தரையில் படுத் துறங்குபவன். அதனால் எதையும் தாங்கக் கூடிய இதயம் எனக்குண்டு. நீ பணக்கார வீட்டுப்பெண். பஞ்சு மெத்தை யில் படுத்துறங்குபவள். அதனால் உன் இதயமும் மென்மை யானதாக எந்தத் துன்பத்தையும் சகித்துக்கொள்ள முடி யாததாக இருக்கும் என்ற துன்பந்தான் என்னை மிகவும் வாட்டுகிறது உமா. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகக் கூற விரும்புகிறேன். நீ எங்கிருந்தாலும் அங்கே நானும் இருப்பேன் என்பதை மட்டும் நம்பு. உடலளவில் இல்லா விட்டாலும் என் உள்ளம் என்றென்றும் உன்னுடனேயே இருக்கும். எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு” இருப்பேன் என்று அவன் இடையில் பேச்சை வேறு திசையில் திருப்பும் போது அவள் தன் தாமரைக் கரத்தால் அவன் உதடுகளைப் பொத்திக் கொள்வாள். 

இப்போது அந்தப் பழைய நினைவுகளையெல்லாம்: இந்தப் பாட்டு மீட்டுவிட்டது. ஓய்வையும் அமைதியையுந். தேடி வந்தவனுக்கு மீண்டும் மனதில் ஒரே குழப்பம். அவன் உணர்ச்சி அவனைச் சித்திரவதை செய்தது. அப்படியே எழுந்து ஓடிப்போய் அவளை இறுகக் கட்டிக்கொள்ள வேண் டும் போல் அவன் அங்கமெல்லாந் துடித்தது. 

ஆசை என்னும் உஷ்ணத்தையே தன்னைத் தீய்த்து விடுமோ என்ற அச்சத்தில் கண் மூடியவன் அப்படியே கண்ணயர்ந்து விட்டான். அன்று சாயந்தரம் அவன் கண்விழித்தபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. தன்னை மறந்து கண்ணயர்ந்ததால் அவனுக்கு உடலும் லேசாக இருந்தது. அவன் எழுந்து திமிர்முறித்தபடியே வெளியே சென்றான். அப்போது தான் இலட்சுமி அவனைக் கண் டிருக்கவேண்டும். “எப்ப வந்தீங்க ராமு…? இது வரை நீங்கள் அறைக்குள்தான் படுத்திருந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. இரவு வேலையாக்கும் கண்ணெல்லாம் சிவந்து குடித்த மாதிரி இருக்கு…. ஆமாம்…. இப்போ பவானிக்கு எப்படி ? வீட்டுக்கு எப்போ வாறாவாம். உங்களுக்குத் தேனீர் தரட்டுமா என்று கேள்விகளாகவே அடுக்கிக் கொண்டு போனாள். 

எனக்கு இரவு வேலைதான். . அத்தோடு சாடை யான காய்ச்சலும். பிளெயின் டீ யாகத் தந்தீர்கள் என் றால் நல்லது. பவானிக்கு இப்போ எவ்வளவோ தேவலை யக்கா…. இன்னும் இரண்டொரு நாளில் வீட்டுக்கு வந் திடுவா என நினைக்கிறேன். இப்போ பவானியிடந்தான் போகப் போகிறேன். கையோடு டாக்டரையும் பார்த்து விட்டு வருகிறேன்” என்று பதிலளித்துவிட்டுப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ரகு. 

‘அடே. ஏன் நேரத்தோடேயே சொல்லவில்லை ராமு. குடிநீர் ஏதாவது போட்டிருக்கலாம். இப்போது கூட நான் கேட்காவிட்டால் நீங்கள் எதுவும் சொல்லி யிருக்கமாட்டீர்கள். பரவாயில்லை, கொஞ்சம் இருங்கள் குடிநீர் தயாரித்து வருகிறேன் என்று அவள் கூறவும் வேண்டாம் அக்கா. ஆஸ்பத்திரியில் இருந்து வரும்போது மருந்து எடுத்துத்தான் வந்தேன். இப்போ உடம்புக்குச் சுகமாயிருக்கிறது என்று மறுத்துவிட்டான் ராமு. 

சிறிது நேரத்தின் பின் இலட்சுமி கொண்டு வந்து கொடுத்த இஞ்சித் தேனீரைக் குடித்துவிட்டுப் பவானியைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றான். அவன் வைத்திய சாலையை அடைந்த போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. டாக்டர் வாயிலிலேயே நின்றிருந்தார். 

“என்ன ராமு காலையில் உனக்குக் காய்ச்சல் என்று யாரோ சொன்னார்கள்..சுகமா? இன்றைக்கு நான் வேறு ஆளை ஒழுங்குபடுத்தி விட்டேன். நீ வீட்டுக்குப் போய் நன்றாக இரண்டு நாட்களுக்குப் படுத்துறங்கு. உன் தங்கச்சியையும் நாளைக்கே அழைத்துப்போகலாம். அப்ப தான் நீயும் வீட்டிலே ஒழுங்காய் ஓய்வெடுப்பாய் என்று அவனைப் பார்த்துக் கூறிய அவரை நன்றிப்பெருக்குடன் பார்த்தான் அவன். 

அவர் கூறியதில் இருந்து அவன் திரும்பிச் செல்ல வேண்டியவனாக இருந்தான். ஆயினும் தன் தங்கச்சியைப்- பார்க்காமல் போக அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அவன் ஆஸ்பத்திரி ஊழியன். நினைத்த நேரம் உள்ளே செல்ல அவனுக்குப் பூரண அதிகாரம் உண்டு. ஆனால் அவன் அந்த அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதனால் தயங்கித் தயங்கி ஒரு படியாகத் தன் உள்ளக்கோரிக்கையை டாக்டரிடம் வெளியிட்டான். 

அப்போது டாக்டர் அவனைப் பார்த்துப் பலமாகச் சிரித்தார். “உன் தங்கச்சியை ஒரு நாள்கூடப் பார்க்காமல் இருக்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும் சரி சரி சந்திக்கும் நேரந் தவறிவிட்டது. உனக்காகப் பத்து நிமிடம் தருகிறேன். சீக்கிரம் பார்த்துவிட்டுப் போ…. என்றபோது அவர் குரலில் அன்புங் கண்டிப்புங் கலந்திருந்தன. டாக்ட ரைப் பழகிய குறுகிய காலத்துக்குள் அவரது குணநலன் களை நன்றாக ஆராய்ந்து வைத்திருந்தான். அவரது* நெஞ்சம் எவ்வளவு இளகியதோ அவ்வளவு கட்டுப்பாடும். கண்டிப்பும் நிறைந்தவர் அவர் என்பதும் அவனுக்குத் தெரியும். 

அதனால் அவருக்கு நன்றி செலுத்திவிட்டு அவன் விரைவாகப் பவானியின் அறையை நோக்கி நடந்தான். அன்று பவானி எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியில் கையை ஊன்றிய படி நேற்றுப் புதிதாக அவனைக் கலக்கிய தாதி நிர்மலா நின்றுகொண்டு பவானியோடு பேசிக்கொண்டிருந்தாள். ரகு அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை. உள்ளே * செல்வதா விடுவதா என்று ஒரு நிமிடம் சிந்தித்தவன் திடீர் என உள்ளுக்குள் சென்றான். பார்த்தீர்களா IR சொல்ல எப்படியும் அண்ணா வருவார் என்று நான் வில்லையா? என்று நிர்மலாவைப் பார்த்து பவானி உனக்குச் சுகமா அண்ணா என்று ரகுவைப் பார்த்து அன்புடன் வினாவினாள். 

‘எனக்கு இப்போ நல்ல சுகந் தங்கச்சி… படுத்தாற் போல் தூங்கிப் போய்விட்டேன். உன்னைப் பார்க்க வேண்டும் நீ காத்திருப்பாய் என்றுதான் அவசரமாக ஓடிவந்தேன். உனக்குத்தான் நல்ல மிஸி இருக்கிறாளே துணைக்கு…’ என்று நிர்மலாவை வேண்டுமென்றே ஓரக் கண்ணால் பார்த்தபடி கூறினான் ரகு. 

‘ஆமாம் அண்ணா மிஸிக்கு என்மேல் ரொம்பப் பிரியம். அடிக்கடி வந்து பார்க்கும். இப்போதுகூட அண்ணா ஏன் வரவில்லை என்று கேட்கத்தான் வந்திடுச்சு. உங்களுக்குச் சுகமில்லை என்று கூறிக்கொண்டிருக்கும் போது நீங்களே வந்துவிட்டீர்கள் உங்களுக்கு நூறு வயசு அண்ணா’ -என்று பதிலளித்தாள் பவானி. 

‘வேண்டாந் தங்கச்சி இருபத்தைந்து வருட வாழ்க்கை பூர்த்தியாவதற்குள்ளேயே இப்படி ஒரு சோதனை என்றால் நூறு வருடங்களை நினைத்துப் பார்க்கவே நான் விரும்ப வில்லை. ஆமாம் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறன். அதைக் கேட்டால் நீ ரொம்ப மகிழ்ச்சி யடைவாய். நாளைக்கு நீ வீட்டுக்குப் போகலாம் என்று டாக்டர் கூறிவிட்டார்’. 

“அப்படியா அண்ணா. ரொம்ப மகிழ்ச்சி. மிஸியை விட்டுப் போட்டுப் போறது தான்’ துக்கம் என்றாள் பவானி. 

“டிஸ்பென்சரிக்குப் போகும்போது ஒருமுறை வீட்டுக்கு வரச்சொன்னால் அந்தக் கவலையும் விட்டது’ என்று வாய் விட்டுச் சிரித்தான் ரகு. ஏனோ அன்று நிர்மலாவின் மனதைச் சீண்டி விளையாட வேண்டும் போல இருந்தது அவனுக்கு. 

அவன் கூற்றைக் கேட்டுப் பவானி சிரித்தாள். நீ உன் அண்ணாவோடு கதைத்துக் கொண்டிரு. பவானி நான் போயிற்று பிறகு வாறன் என்று கூறி வெளியேறினாள் நிர்மலா. அவள் செல்வதையே பார்த்து நின்ற ரகு பவானியின் பக்கந் திரும்பி அவளையே கண்வெட்டாமற் பார்த்து நின்றான். என்னண்ணா இது. அப்படி எதற்காக என்னைப் பார்க்கிறீர்கள். எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறிவிட்டுத் தலை குனிந்து கொண்டாள். ரகு தன் கொடுப்புக்குட் சிரித்துக்கொண்டான். இந்தப் பெண்களே புதிரானவர்கள் அன்றொரு நாள் உமாவின் அழகில் மயங்கி அவளை இப்படிப் பார்த்து ரசித்தபோது அவளும் இதே வார்த்தைகளைத்தான் சொன்னாள். இன்று இவளை என் சகோதரி என்ற உரிமையில் அன்பொழு கப் பார்க்கிறேன். இந்த இரண்டு வாரங்களுக்குள் ஏதோ ஒரு புதுவித வளர்ச்சியை இவளிடங் கண்டு பூரிப்பினால் பார்க்கிறேன். ஆனால் இவளும் அதே வார்த்தைகளைத் தான் சொல்கிறாள். பெண்களுக்கெல்லாம் உணர்ச்சி, ஒன்றுபட்டது தானா…? 

“உன்னைப் பார்க்கும்போது இந்த இரண்டு வாரங் களுக்குள் ஒரு வித்தியாசமான தோற்றமாக இருக்கிறது. என் மருமகன் பூரண வளர்ச்சி அடைந்து விட்டனோ என்று” சந்தேகித்து அப்படிப் பார்த்தேன் என்று கூறி அவன் சிரித்தபோது போங்கண்ணா என்று செல்லமாகக் கோபித் துக் கொண்டாள் பவானி. 

ரகு தன் கையில் இருந்த மணிக்கூட்டைப் பார்த்தான். டாக்டர் அனுமதித்திருந்த பத்து நிமிடங்களில் ஒன்பது நிமிடங்கள் சென்றுவிட்டிருந்தன. அவன் பவானியிடம் விடைபெற்றுச் சென்றான். அறையைவிட்டு வெளியேறி யவன் இரண்டடி வைத்து இருக்கமாட்டான் ‘உங்களைத் தான்…. கொஞ்சம் நிற்கிறீர்களா….?’ என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான். அவனை நோக்கி” விரைந்து வந்து கொண்டிருந்தாள் நிர்மலா. அவள் அவனி டம் எதையோ நீட்டிய போது அவன் அதைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினான். 

‘பயப்படாதீர்கள் உங்களுக்கு மருந்துதான். இதில் இருக்கும் மாத்திரைகளில் இரண்டை இரவுக்கும் இரண்டைக் காலையிலும் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றாள் நிர்மலா. 

காலையில் எனக்கு மற்ற மிஸி மருந்து தந்தவர்.. அதற்குப் பிறகுதான் எழுந்து நடக்கத் தொடங்கினேன். இனி எந்த மருந்தும் தேவையில்லை என்று கூற வாயெடுத் தவன் அதைத் தொண்டைக்குள்ளேயே புதைத்துவிட்டு அவள் நீட்டிய பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டான். அவன் உதடுகள் அவனையும் அறியாமல் நன்றி என்று பிரிந்து மூடிக்கொண்டன. 

‘பரவாயில்லை’ கூறிவிட்டு விர் என அவள் நடந்து சென்றாள். அவளைப் புரியாமல் அவனும் நடந்தான். சிறிது தூரஞ் சென்றதும் அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அதே சமயம் அவளும் அவனைத் திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். அதன் பின்பு இருவர் நடையும் மிகவும் துரிதமாக இருந்தது. ‘வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்’ உமா அவன் முன் நின்று பாடுவது போன்ற பிரமையில் நடந்து கொண்டிருந்தான் ரகு.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *