உன்னோடு நான் பேச மாட்டேன் ! என்ற சிறிய பேப்பர் துண்டு அவன் மேசையில் இருந்தது.
முத்தான எழுத்துக்கள்!
அவன் நினைத்துக்கொண்டான் ‘என் மேல் உனக்குள்ள உரிமை என்னையே கட்டுப் படுத்துவது போல ‘பேச மாட்டேன்’ என்ற எழுத்துக்கள் .
அவன் ‘நான் என்ன செய்தேன்! அந்த சீட்டின் மறு பக்கத்தில் எழுதினான் பதில் வந்தது.
‘உன்னால் எனக்கு வேறு எதிலும் செயல்படும் திறன் நின்று விட்டது .
படிக்க முடிய வில்லை !
எழுதமுடியவில்லை! எதிலும் என் நினைவு ஒட்டவில்லை!
அவன் ‘அதற்க்கு நான் என்ன செய்யட்டும்!’
பதில் இல்லை! அவனையே முறைத்துப் பார்த்தாள்.
நீ முறைத்துப் பார்த்தால் கூட அதில் ஒரு அழகு இருக்கிறது!
ஆனால் என்னால் திருப்பி முறைக்க முடியவில்லை !
‘ஏன்’ என்று அவள் எழுதினாள்!
‘உன்னைப் பார்த்து ரசிக்கும்போது எப்படி முறைத்துப் பார்க்க முடியும்!
‘நான் கொஞ்ச நாட்கள் உன்னைப் பார்க்காமல் இருக்கப் போகிறேன் ‘
அவன் ‘நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை! ஆனால் உன்னால் பத்து அடி கூட தனியா போக முடியாது ! திரும்பி ஓடி வந்து விடு வாய்.
சீ !போடா !என்னதான் உன் கிட்ட மந்திரம் இருக்கோ! இப்படி என்னை உன் பக்கம் இழுக்கிறையே!
இது ஊடலா! அல்லது இரு காதலர்களின் பிரியாத கொஞ்சலா !
அருமையான நேரங்கள்!ஒருவருக்குஒருவர் அளவில்லா அன்பும் காதலும் இப்படியெல்லாம் அவர்களிடம் விளையாடும் .
அவர்களின் இரு மனங்களும் இடம் மாறி விளையாடுகின்றன !
இனிமையான நேரங்கள் அந்த இனிமைக்கே தனி மெருகு கொடுக்கிறது!
இவை எல்லாம் எங்கே நடக்கிறது ! சென்னையில் அல்ல!
கடல் தாண்டி காத தூரம் படிக்க வந்த திரு நாட்டில்!
அமெரிக்காவின் அழகிய நகரம் சியாட்டில்!
அவர்கள் சந்தித்ததே ஒரு வேடிக்கை!
அவன் மும்பையிலிருந்து வந்தான் .பெயர் மாதவன் !
அவள் சென்னையிலிருந்து வந்தாள்.பெயர் செல்வி !
சந்தித்தது பிராங்க்பர்ட் ஜெர்மனி ஏர்போர்ட் டிரான்சிட் நேரத்தில்!
இந்தியாவில் எங்கிருந்து வந்தாலும் சியாட்டில் போக இந்த இடத்தில் ஒன்று சேர வேண்டும் .பயணிகள் இடம் நிரம்பி இருந்தது.
ஓரத்தில் உட்கார இரண்டு இடம் .ஒன்றில் செல்வி உட்கார்ந்து இருந்தாள்.அது ஆகஸ்ட் மாதம் .மிதமான ரம்மியமான நேரம் வெளியில் !
ஒரு கேரிஆன்! கையில் ஒரு கம்ப்யூட்டர் பை !பிறகு ஒரு சிறிய பை! ஜீன்ஸ் உடை !லெதர் ஜாகெட் !
செல்வி சென்னை பிரபல டாக்டர் சண்முகநாதனின் பெண்! அந்த நாட்டில் வேண்டிய உறவினர்கள்
நண்பர்கள் உண்டு .சியாட்டில் நண்பர் சுரேஷ் மூலமாக யுனிவெர்சிடி வாஷிங்க்டன் பக்கத்திலேயே தங்க இடம் பார்த்தாகி விட்டது .
செல்விக்கு இரண்டு அண்ணன்கள் .இருவரும் டாக்டர்கள் .
அப்பாவிற்கு உறுதுணை .கிளினிக்கில் !
அம்மா பல்கலைக் கழகப் பேராசிரியை .தற் சமயம் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்கள் .
செல்வி மைக்ரோபயாலஜி யில் முதுகலைப் படிக்கப் போகிறாள் .
மாதவன் மெதுவாக சுற்றுமுற்றும் பார்த்து விட்டு இவள் இருக்கும் இடம் பார்த்து ‘அட! நம்ப ஊருப் பொண்ணு ! சரி! போகலாம் ‘ என்று சொல்லி அந்த இருக்கையில் அவனுடைய கைப் பையை
வைத்தான்.
அவள் இவனைப் பார்க்கவில்லை .ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு ,கையில் ‘டாப்லெட் ‘பார்த்துக் கொண்டு இருந்தாள், இவனுக்கு சொல்ல தயக்கம் .சரி வெச்சுட்டுப் போலாம் என்று திரும்பினான்.
அவனுடைய பெட்டிக்கு அவனுக்கு மேல் அவசரம் போல!
அவன் கால் தட்டி அவள் பெட்டி மேல் சரிந்தது !
பெட்டி காலில் விழ அவள் நிமிர்ந்து முறைத்துப் பார்த்தாள்.
‘தப்பா நினைக்காதேங்க !தவறி காலில் விழுந்து விட்டது! என்றான்.
அவளிடமிருந்து பதில் இல்லை ! அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது . ‘ஹெட்போன் போட்டா உலகமே தெரியாதுப்பா ! பார்த்தா தமிழ் பொண்ணு மாதிரி இருக்கு ‘
ஹெட்போனைக் கழட்டிக் கொண்டே ‘அதுதான் பெட்டி கால்லே விழுந்தாச்சே! அப்புறம் என்ன!
‘அப்பாடி! தமிழ் சரளமா வருது ஜெர்மன் ஏர்போர்ட்டிலே !
‘மேடம் ! நான் சாரி கேட்டேன் ! அதுக்கு இப்படிப் பேசறீங்களே !சரி! திட்டுங்க ! ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சு திட்டுங்க ! அதுக்குள்ளே அந்த காபி ஷாப்புக்குப் போயிட்டு வந்திடறேன் !
செல்வி சிரித்து விட்டாள்!
அப்பாடி !இது போறும்! நான் வந்திடறேன் ! சொல்லிப் போய் விட்டான்! திரும்பி வரும்போது இரண்டு கப் காபியுடன் வந்தான் .
எக்ஸ்கியுஸ்மீ ! என் தப்புக்காக உங்களுக்கு ஒரு காபி!
செல்வி கோபத்தோடு பேச ஆரம்பித்தாள்.
‘என்ன நினச்சிக்கிட்டு இருக்கீங்க ! பெட்டி தட்டி விட்டீங்க ! சாரிகேட்டிங்க இப்போ காபி கொடுக்கிறீங்க !என்ன இதெல்லாம்!
மாதவன் சொன்னான் ‘ இதே நம்ப சென்னையோ அல்லது மும்பையோ இருந்தால் நான் இப்படி செய்ய மாட்டேன் .அங்கே போர்ட் பாருங்க ! சியாட்டில் போட்டு இருக்கு .நம்ப இரண்டு பேரும் இங்குள்ள எல்லாரும்
அங்கேதான் போறோம் . அதிலேயும் நாம் இந்தியாவிலருந்து வரோம் .தமிழ் பேசறோம் . இன்னும் மூணு நாலு வருஷத்திற்கு அந்த ஊரில் இருக்கப் போறோம் .வெளி நாட்டிலே காலெடுத்து வெச்சு .தமிழ் பேசற நமக்கு இந்த ஜெர்மனியிலே அறிமுகம் ஆரம்பம்! அதற்குதான் இந்த காபி !
என் பெயர் மாதவன் ! மும்பையிலிருந்து வரேன் .தாய் மொழி தமிழ் !
செல்வி பதில் பேசவில்லை .மனதுக்குள் மகிழ்ச்சி !ஒரு தைரியம் !
என்ன இருந்தாலும் நம்ம ஊர்ப் பையன்!
தேங்க்ஸ் ! சொல்லி காபியை வாங்கிக் கொண்டாள்.
‘என் பெயர் செல்வி ! சியாட்டில் யுனிவெர்சிடி வாஷிங்க்டன் போறேன் !
இதுதாங்க தெய்வச் செயல் ! நான் மும்பையிலிருந்து வந்தாலும் அதே யுனிவர்சிடி தான் போறேன் ! என்றான் மாதவன் .
செல்வி மறுபடியும் சிரித்தாள்.!
அப்பாடி சிரிச்சிடீங்க! தப்பிச்சேன்டா சாமி ! என்றான் மாதவன் .
காபி கப்பே கொண்டாங்க ! என்று வாங்கி குப்பையில் போட்டான்.
அதற்குள் கேட் ஓபன் செய்து செக்கின் ஆரம்பித்தார்கள் .
போகிற தூரம் கொஞ்சம் நீளம் .அவள் பின்னாலேயே போனான் .
சீட் நம்பர் கேட்கலை .
ப்ளேன் படியில் கால் வைப்பதற்கு முன் ‘ஐயோ ! என் டேபிலேட்!அங்கே சீட்லே வச்சுட்டு வந்திட்டேனே ! செல்வி பதறினாள் .
‘அட! இதுக்குப் போய் ! இந்தா இந்த லக்ககேஜ் .உள்ளே போகாதே !இங்கயே இரு ! என்று சொல்லி கேட்டுக்கு ஓடினான் .
செக்கின் பண்ணினால் வெளியே போக முடியாது .எப்படியோ சொல்லி ஸ்டுடன்ஸ் என்ற சலுகை சொல்லி உட்கார்ந்த இடத்தில் டாப்லெட் பின்னால் விழுந்து கிடந்தது .எடுத்துக்கொண்டு ஓடி வந்தான் .
தேங்க்ஸ் மாதவன் ! தேங்க்ஸ் எகைன்!
பரவா இல்லைங்க !இங்கே எதுவும் தொலையாது ! ஏன் மாதவன்னு பெரிசாக் கூப்பிடறீங்க ! மாதுன்னே கூப்பிடுங்க!
செல்வி லேசாக முறைத்தாள்.
அடுத்த கணம் உங்க டிக்கட்டைக் கொடுங்க ! என்று அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள் .மாதவனுக்குப் புரிந்து விட்டது .!
‘இந்த பிளைட் ஓரங்கள்ளே இரண்டு சீட் ,நடுவுலே நாலு சீட் .எல்லாம் எனக்குத் தெரியும் .சும்மா பெட்டியை ரோல் பண்ணிக்கிட்டு வாங்க !
ஏர் ஹோச்டசிடம் பேசினாள்.இவள் சீட் பதினாலு ஏ,அவன் சீட் பத்னேழு பி .தன சீட் பக்கத்தில் மாற்றினாள்.அந்த சீட் உள்ளவரும் ஸ்டுடன்ஸ் என்று சொல்லி மாறிக் கொண்டார்.அவருக்கு நன்றி
சொன்னார்கள் .
தேங்க்ஸ் செல்வி! அதெப்படி உன் பக்கத்திலேயே இடம் போட்டாயே !
அது தான் நீ சொன்னாயே !ஒரே ஊருக்குப் போறோம் .ஒரே யுனிவர்சிட்டிலே படிக்கப் போறோம் .அதை இங்கேயே ஆரம்பிக்கத்தான் இந்த ஏற்பாடு ! என்று சிரிக்க ஆரம்பித்தாள் செல்வி!
யப்பா ! நமக்கு மேல போட்டு வாங்கராடா இந்தப் பொண்ணு !
உட்கார்ந்தார்கள் .அடுத்து சியாட்டில் போகும் வரை இவர்கள் இருவர்தான்
ப்ளைட் கிளம்பியது .முதலில் ஜூஸ் கொடுத்தார்கள் .
மாது!
என்ன!
ட்ரிங்க்ஸ் எல்லாம் ஆர்டர் பண்ண மாட்டே இல்ல !
அட! அதெல்லாம் மாட்டேன் .அதுவும் உன்னைப்போல அழகான ஒரு பொண்ணு இருக்கும் போது!
மாது! நான் இப்பவே சீட் மாறிப் போய் விடுவேன் ! மெள்ள வேற மாதிரி ஏதோ ஆரம்பிக்கறே !
செல்வி! நீ கேட்டதாலே சொன்னேன் !தண்ணி அடிக்காமே ஒரு பையன் இருப்பானா ! ஆனா நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் .
உன்னைப் பார்த்தா பியுட்டி கான்டச்ட்லே போற பொண்ணு மாதிரி உயரமா நல்லா இருக்கே ! அதனாலே சொன்னேன் .தவிர நான் ரொம்ப ஓபனா எதையும் நேரா உண்மையைச் சொல்றவன் .
இப்பதான் நாம சேர்ந்து உட்கார்ந்து இருக்கோம்.நான் பாட்டுக்கு இஷ்டமா எது வேணா பேச மாட்டேன் .
சரி!ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு !
நீ பியுட்டி கான்டச்ட்லே கலந்து கொண்டிருக்கயா இல்லையா !
முதன் முறையாக அந்த உண்மையான அழகுப் பெண்ணிடம் இயற்கையான வெட்கம் லேசாக அவள் முகத்தில் தானாகத் தெரிந்தது !
ஆமாம்! நான் காலேஜில் வின் பண்ணி இருக்கிறேன் .
அது சரி!எப்படி இதெல்லாம் டக்குனு உடனே சொல்லறே! உனக்கு இது தான் வேலையா !
வேற யார் கிட்டேயாகிலும் இந்த மாதிரிப் பேசி இருக்கையா!
மாதவன் நிமிர்ந்து உட்கார்ந்தான் .
இதோ பாரு செல்வி! இப்ப தான் நாம பேச ஆரம்பிச்சு இருக்கோம் .அதுக்குள்ளே நீயே ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் இப்ப கேட்கறே !
எனக்கு படிப்பு உண்டு !நான் உண்டு! நான் ஐ ஐ டி மும்பை கிராஜுவேட் ‘கோல்ட் மெடலிஸ்ட் .சைட் அட்டராக் ஷன் எல்லாம் நேரமில்லை .ஆனா எல்லா விஷயமும் தெரியும் !
செல்விக்கு ஏனோ மனதில் ஒரு நிறைவான நிம்மதி வந்தது .
அவள் மகளிர் கல்லூரி மாணவி ! அம்மாவின் நேர் பார்வை !
இந்த மாதிரி பையன்கள் எல்லாம் பழக்கமில்லை .
ஆனாலும் இயற்கையாக எல்லா விஷயமும் தெரிந்த இந்தக் காலத்துப் பெண் .
மாதவனும் ஸ்போர்ட்ஸ்மன் ! டென்னிஸ் பாட்மிண்டன் சாம்பியன் .
உயரத்துக்குத் தகுந்த அழகு .செல்வியின் அழகுக்கு ஈடு கொடுக்கும் தோற்றம் உள்ளவன் .
சாப்பாடு வந்தது .இரண்டு பேரும் வெஜிடேரியன் சாப்பாடு தான் .
மாது!நீ நான் வெஜ் சாப்பிட மாட்டாயா !
இல்லை செல்வி!என் வீட்டில் எல்லோரும் வெஜிடேரியன் .சுத்த தயிர் சாதம் !நீ எப்படி !
அப்பா ,அண்ணன்கள் எல்லாம் வீட்டிலே வெஜிடேரியந்தான் . எல்லாரும் டாக்டர்ஸ் .சாப்பாடிலே கேர் ஜாஸ்தி தவிர என் அம்மா சுத்த சைவம் .நானும்தான் .
தேங்க்ஸ் என்றான் மாது .
கொஞ்சம் கொஞ்சமாக பேசிப்பேசி மனத்தால் நெருங்க ஆரம்பித்தார்கள் .
மறுபடியும் பணிப்பெண் ‘ எனி ட்ரிங்க்ஸ் யு வாண்ட் ‘என்று கேட்க அவன் அவள் முகத்தைப் பார்த்தான் .அவள் வேண்டாம் என்று தலை அசைத்ததும் இவனும் ‘நோ தேங்க்ஸ் ‘ என்று சொல்லி விட்டான்
மனத்தால் நெருங்கிய அவன் அவளின் மன விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்தான் .
மாது!
என்ன !
உன்னைப்பற்றி கொஞ்சம் சொல்லு !
தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப் போறே!
அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அந்தப் பார்வை அவனுக்கு வேறு ஒரு புதுக் கவிதை சொல்லியது!.
என்னைப் பற்றித் தெரிந்துகொள்ளுவதர்க்கு முன் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சில மணி நேரங்கள் தான் இருக்கும்.
அதற்குள் இன்னும் நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறோம்.
‘செல்வி! உனக்கு ஏதாகிலும் புரிகிறதா ?
மாது!எது எப்படியோ தெரியாது.ஆனால் என்னுடைய வரும் நாட்கள் உன்னோடுதான் என்று என் உள் மனது சொல்லுகிறது! எனக்கு இது முற்றிலும் புதுசா இருக்கு.! ஆனா இது எனக்கு ரொம்ப பிடிச்சுஇருக்கு!
நாளை நாம் சியாட்டில் போனதும் எனக்கு என் ரூம் மேட் நம்ம ஊரு பொண்ணு வரா.
நீ எங்கள் இடத்துக்குப் பக்கத்திலேயே இடம் பாரு.!
உன்னை நான் பார்க்க வேண்டும் அப்பப்போ !
மாதவன் அசந்து போய் விட்டான்.!
செல்வி! மறுபடியும் சொல்றேன் !நாம் ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொண்டு இன்னும் ஒருநாள் கூட ஆகவில்லை!
அதற்குள் உனக்கு என்ன நம்பிக்கை!
மாது !அதெல்லாம் தெரியாது ! ஐ லைக் யு !
நோ மட்டும் சொல்லாதே!
மாது! எனக்கு தூக்கம் வருது! உன் மேலே சாஞ்சிண்டு தூங்கலாமா ?
உன்னை எதுக்குக் கேட்கணும் ! என்று சொல்லிக்கொண்டே அவன் தோளின் மீது தலை அணை வைத்து தலையை சாய்த்துக் கொண்டாள்.
மும்பை மாதவன் சென்னையின் செல்வி மனதில் ,ஆகாயத்தில் பறக்கும் விமானத்தின் இருக்கையில் இருந்த படியே நிரந்தரமாக நிலைக்க ஆரம்பித்தான் .அவள் அவன் தோளில் நிம்மதியாகத்
உறங்குகிறாள் !அவனோ அவள் மனத்தில் உறங்குகிறான் .
அட்லாண்டிக் கடல் மேல் ஆகாயத்தில் ஒரு இனிய காதல் உருவாகியது!
இது வரைக்கும் செல்விக்கு இப்படி ஒரு நெருங்கிய சூழ்நிலையோ ,அறிமுகமோ,பழக்கமோ நேர்ந்ததில்லை!
முதல் தடவையாக தனக்கு நிகரான ஒருவனிடம் தன மனத்தில் பங்கு கொள்கிறாள் .அவள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் !
முற்றிலும் புதிய உணர்வுகள் ! புதிய சூழ்நிலை!
பெண்மைக்கே உண்டான ஓர் அரிய தன்மை ! ஒரு நல்ல சூழ்நிலையில் ஒருவனுக்கு மனதில் இடம் கொடுத்து விட்டால் வாழ்க்கையில் இன்னொருவனுக்கு இடம் இல்லை! அது என்றும் மாறாது!
மாதவன் அவள் மனதில் நிலை கொண்டு விட்டான் !
மாதவனுக்கும் படிப்பு,விளையாட்டு என்று இருந்ததினால் தீவிரமாக எந்தப் பெண்ணிடமோ பழகியோ மனம் விட்டுப் பேசியோ இருக்க வில்லை!
புனிதமான இந்த இரு உள்ளங்கள் இங்கே ஒரு அருமையான நேரத்திலே ஒருமனப்பட்டு உலவ ஆரம்பிக்கின்றனர் .
மாதவனோ கொஞ்சம் தயங்குகிறான்!.
செல்விக்கு தயக்கமே இல்லை!பூரணமாக அவனை நினைக்க ஆரம்பித்து விட்டாள்.
அதன் முடிவு!காதலன் தோளில் மிக நிம்மதியாக தூங்குகிறாள் !
காதல் புனிதமானது! அழகான நேரங்களைக் கொண்டது!
விமானப் பெண் எழுப்பினாள்.
காலை உணவு வந்தது .
மாது!
என்ன!
நல்லாத் தூங்கினேன் .நீ தூங்கினாயா !
ம் !தூங்கினேன் ! நீ எப்படி அசந்து தூங்கினே !
அவள் சிரித்தாள்! அதுக்கு மேல என்னை ஒண்ணும் கேட்காதே மாது!
பணிப்பெண் மறுபடியும் வந்தாள்.
மாது கேட்டான் ! எனக்கு ஒரு லாலி பாப் மிட்டாய் கிடைக்குமா ?
கொண்டு வரேன் !ஆனா குழந்தை எங்கே ? என்று சுற்றி அங்கும் இங்குமாப் பார்த்தாள்
மேடம் !குழந்தை இங்கே இருக்கு ! என்று சொல்லி செல்வியைக் காண்பித்தான் .
அவள் பெரிதாக சிரிக்க ஆரம்பித்து பிறகு உடனே கொண்டு வரேன் என்று சொல்லி ,செல்வி இடம் ‘உன்னுடைய பாய்பிரண்ட் ரொம்பக் கியூட்! என்று சொல்லிப் போனாள்.
செல்விக்கு வந்த வெட்கம் அவள் முகத்தை இன்னும் அழகாக்கியது !
மாது! நான் என்ன குழந்தையா?
ஆமாம்! குழந்தைதான் ! நல்ல என் மேல சாஞ்சிண்டு தூங்கினே!இப்போ முழிச்சிண்டு இருக்கே ! அதுக்குத்தான் லாலி பாப்!
சீ !போடா !ஆனாலும் நீ ரொம்ப மோசம் .மாது!
ஆனா ஒண்ணு! அங்கே போய் யுனிவர்சிட்டிலே வேற எவளுக்கும்லாலி பாப் கொடுத்தேன்னா உன்னை சும்மா விட மாட்டேன் !
அம்மா !தாயி !நீ ஒருத்தியே போதும் !இந்த ஜன்மத்தில் இன்னும் ஒருத்தியே கிடையாது !கிடையவே கிடையாது !
மாது ! ஆர் யு சீரியஸ் !
எஸ் !நான் ரொம்ப உறுதியா இருக்கேன் !
சட்டென்று மாது கைகளை எடுத்து தன இரு கைகளால் இறுக்கிக் கொண்டாள்.
இந்த நொடி முதல் நான் செல்வி சண்முகநாதன் இல்லை !நான் செல்வி மாதவன் !
மாதவன் கண்களில் நீர் வழிந்தது! அவன் அருமைக் காதலி செல்வி துடைத்து விட்டாள் .
இம்மாதிரி நேரங்கள் உண்மைக் காதலை ஓவியமாக மாற்றும் தருணங்கள் !
இவர்கள் வாழ்நாளில் இது மறக்க முடியாத நேரம் !
சியாட்டில் டகோமா ஏர்போர்ட் வந்தது.
மாதவனுக்கு சித்தி வீடு ரெட்மண்டில் உள்ளது .போக வேண்டும் .
செல்விக்கு குடும்ப நண்பர் சுரேஷ் பெல்வியு வில் இருக்கிறார் .அவள் அங்கு போகிறாள் .
இமிக்ரேஷன் முடிந்து வெளியில் வந்தார்கள்
அங்கிள்! இது மாதவன் .எங்க யுனிவர்சிட்டிலே ஏரோனாடிக்ஸ் படிக்கப்
போகிறார் .
அப்படியா !இன்னும் பத்து நாள் இருக்கே !வாங்க பெல் வியு வுக்கு. அதற்குள் மாது அவன் சித்தியைப் பார்த்து சித்தி! இது செல்வி !
சென்னை டாக்டர் சண்முகநாதன் டாடர் .இங்கே எங்க யுனிவர்சிட்டிலே மைக்ரோ பயாலஜி படிக்கப் போகிறாள் ..சித்தி
அவளைப் பார்த்து சிரித்தாள்..
ஜர்னி நல்லா இருந்துதா !
உங்க அப்பா கிளினிக் நான் கூடப் போயிருக்கேன் .
அட!நம்ப சுரேஷ் சார் !அவர் வீட்டுக்குப் போறியா? அப்புறம் பார்க்கலாம் .
செல்வி பெல்வியு வந்தாள்
செல்வி !இப்போ இந்தியாவிலே ராத்திரி நேரம் .காலையிலே பேசலாம் .
சுரேஷ் அங்கிள் வீடு சற்று உயரமான இடத்தில இருப்பதால் ,சியாட்டில்
முழுதும் ஏரி மலைகள் எல்லாம் பார்க்கலாம் .
வந்த இரண்டு நாட்களில் போனில் பேசினார்கள் .செல்போன் வாங்கிக் கொண்டார்கள் .
ஒரு நாள் அவள் அபார்ட்மெண்ட் பார்க்கப் போனாள்.அதற்குள் வெள்ளிகிழமை வந்துவிட்டது .
அங்கிளும் ஆண்டியும் சியாட்டில் சுற்றிக் காண்பிக்கப் போனார்கள் .
அங்கிள்! நம்ப மாதுவையும் கூப்பிடலாமே என்று சொல்லி மாது வீட்டுக்குப் போய் அவனையும் கூட்டிண்டு பைக் பிளேஸ் மார்கெட் மற்றும் சியாட்டில் சுற்றி விட்டு இரவு பிரசித்தி பெற்ற
நம்ப ஊர் உணவு ரச்டாரண்டில் டின்னெர் சாப்பிட்டு ,வந்தார்கள் .
மாது!மூணு நாளா உன்னைப் பார்க்காமல் தவிச்சுப் போயிட்டேன் .
ஆமாம் !நான் கூடத்தான் ! உன் இடத்துக்குப் பக்கத்திலேயே
நானும் இடம் பார்த்துட்டேன் .
என் ரூம் மேட் ஜான் இந்த ஊர் அமெரிக்கா பையன் .ரொம்ப நல்லவன் .
அடுத்த வாரம் போய்டலாம் .அப்புறம் லீவுக்கு இங்கே வரலாம் .
அபர்ட்மெண்டில் குடி ஏறினார்கள் .
படிப்பு மிகுதியினால் அதிகம் பார்க்க முடியா விட்டாலும் சந்தித்த வேளைகளில் இந்த மாதிரி ஊடல்கள் நடந்தன.
ஒரு செமஸ்டர் முடிந்தது.இருவரும் நல்லா கிரேடில் இருந்தார்கள் .
விண்டர் வந்து முடிந்து ஸ்பிரிங் வந்தது.
பூக்கள் இலைகள் பூத்து எவர் கிரீன் ஸ்டேட் என்ற பேருக்கு ஏற்ப சியாட்டில் நகரம் முழுக்க அழகு சொட்டியது !
புதியதாக மாதவன் அண்ணியின் தங்கை சுபாஷினி இஞ்சினீரிங் படிக்க வந்தாள் .
செல்வியின் ரூம் மேட் வேறு இடம் போனதால் அந்த இடத்திற்கு சுபா வந்தாள் .
ஒரு சனிகிழமை !லேட்டா எழுந்திருந்து காபி போடப் போனாள் சுபா.
செல்வியின் பொன் அடித்தது .அவள் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
சுபா போன் அடித்தது .
சுபா!தூங்கிண்டு இருக்கையா? மாதவன் குரல் .
இல்லேடா! என்ன விஷயம் ?
என் ரூம் மேட் ஜான் பர்த் டே பார்ட்டி .செல்வியைக் கூப்பிட்டு இருக்கான் .அதுதான் .
மாது !நான் இங்கே தனியா என்ன பண்றது ! நானும் வரேண்டா !
சரி !கேட்டு சொல்றேன் .
மாது ஜானிடம் கேட்கலே .செல்வி எழுந்ததும் அவளிடம் ‘செல்வி!மெதுவாப் பேசு!அங்கே சுபா இருக்காளா !
இல்லை .குளிக்கரா நினைக்கிறேன்.
அவளும் பார்ட்டிக்கு வரேன் சொல்றா.!நீ என்ன சொல்றே?
அதனால் என்ன !கூட்டிக்கிட்டுப் போலாம் .
ஜானின் பிரண்ட் ஜெனிபர் அவள் காரில் எல்லோரும் போனார்கள் .
கிர்க்லண்டில் ஜான் வீட்டில் பார்ட்டி .பரிசு மலர்கொத்து எல்லாம் வாங்கியாச்சு .
மாது!ரொம்பக் குடிக்காதே !பார்ட்டிலே எல்லாம் கொடுப்பாங்க !என்றாள் செல்வி .
இல்லை !கவலைப் படாதே !பாத்துக்கிறேன் !என்றான் மாது.
சுபா மாதுவைப் பார்த்தாள்.
இவனுக்கு அவள் ஆர்டர் போடறா !அவனும் தலை ஆட்டுகிறான்.
என்னன்னு புரியலையே ! பார்க்கலாம் .
பார்ட்டி நடந்து கொண்டிருந்தது
ஜானின் அம்மா இவர்கள் இருக்கும் பக்கத்துக்கு வந்தாள்.
ஹே!மாது !இரண்டு ப்ரெட்டி கேர்ல்ஸ் இருக்காங்க !இதில் யார் ஒன்னோட கேர்ல் பிரண்ட்!
மாது தயக்கம் இல்லாமல் ‘தேட் டால் ஒன்! செல்வி!
ஒ !மை காட் ! வாட் எ பிரட்டி கேர்ல் !ஷி லுக்ஸ் பியுடிபுல்! என்று செல்வியை கட்டிக் கொண்டாள்.
பிறகு சுபாவைப் பார்த்து ஷி ! என்றாள்
அவள் என் கசின் !சுபா !என்றான் .இன்ஜினியரிங் படிக்கறா!
சுபாவின் முக மாற்றத்தை மாது கவனித்து விட்டான் . மாது சாப்பாடு எடுக்க வரும் போது செல்வி ஜெனிபருடன் இருந்தாள்.
சுபா மெதுவாக மாது ! இது மாமா மாமிக்கு தெரியுமா !நான் வரும்போது கூட உங்க அம்மா உன்னைப் பற்றிதான் கவலைப் பட்டா !
சுபா!உனக்கு விவரமாச் சொல்றேன் .ஊதிப் பெரிசா ஆக்காதே !
இல்லை .மாட்டேன் .என்று சுபா சொன்னாலும் அவள் முகம் வாடி விட்டது.
அதற்குள் ஜானின் அம்மா சுபாவிடம் இந்திய சமையலைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தால் மெதுவாகச் செல்வியை லிவிங் ரூமுக்கு வரச் சொல்லி ‘செல்வி! சுபாவுக்கு நம் மேல சந்தேகம் வருது .!
வந்தால் என்ன மாது !நான் என் அப்பா அம்மாவிடம் பேசப் போறேன் .
நீயும் உங்க வீட்டிலே பேசு .
மாது !நீ இல்லாமே ஒரு நிமிஷம் கூட !ஏன் அடுத்த நிமிஷமே நான் இருக்க மாட்டேன் .!
செல்வி டார்லிங் !நான் உடனே பேசறேன் !எனக்கு எல்லாமே நீதான் !
இது உன் மீது சத்தியம் !
உணர்ச்சி வசத்தில் ஐயோ !என் சுவீட் மாது அவனை இறுக்கக் கட்டிஅவன் கன்னத்தில் முகத்தைப் பதித்தாள்.
சுபா கண்கொட்டாமல் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் .
செல்வி! சுபாவை நாம் கழட்டி விட முடியாது.ஜாக்கிரதையாக டீல் பண்ணனும் .இல்லேன்னா என் அண்ணன் அண்ணிக்கு நம் மேல் வெறுப்பு வந்திரும் .பதட்டப் படாமெப் பாத்துக்கோ .கொஞ்ச நாள் .அப்புறம் எல்லாம் சரியாகும் .
யோசனை செய்தான் .இங்கு இரவு என்றால் இந்தியாவில் பகல் !இவ எங்கேயாகிலும் மெசஜ் அனுப்பிடப் போறா !
நேரா சுபா விடம் போனான்.
சுபா! என்று சொல்லுவதற்குள் மாது! நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குத் தெரியும்.என்னாலே எந்தப் பிரச்னையும் வராது .கவலைப் படாதே.ஆனா எனக்கு ஷாக்காக இருக்கு.உங்க அம்மா வேற மாதிரி
பிளான் போடறாங்க !
தேங்க்ஸ் சுபா !இங்கே சித்தி கிட்டேயும் சொல்லாதே .சீக்கிரம் நான் ஏற்பாடு பண்ணறேன் .
ஆனா மாது ! அவள் முகத்தில் பெரிய ஏமாற்றத்தின் நிலை தெரிந்தது .
இந்தப் பெண் என்ன கோட்டை கட்டினாளோ! அவளும் படித்த அழகான பெண் அல்லவா !
பார்ட்டி முடிந்து ஜெனி இவர்களைக் கொண்டு விட்டாள்.காரில் யாரும் பேச வில்லை.
ஜெனி சொன்னாள்.நாளை நம்ம எல்லோரும் பெயின் பிரிட்ஜ் தீவுக்குப் ‘போட் ரைட் போறோம் .எல்லோரும் ரெடியா இருங்க .
ஜான் ,என் பிரதர் ரிச்சர்ட் எல்லாம் வராங்க !என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள் .
சுபாவுக்கு இஷ்டமில்லை !மறு பக்கம் போக ஆசை! பேசாமல் ரூமுக்கு போனாள்.
இரவு பத்தரை இருக்கும்.சுபா !என்று செல்வி கதவை தட்டி நின்றாள்.
என்ன செல்வி இந்நேரத்தில் .உள்ளே வா .
சுபாவே பேசினாள்.
செல்வி!என்னைப் பத்திக் கவலைப் படரையா! நானும் உன்னைப் போல பெண் தானே!நீங்க ரெண்டு பெரும் இவ்வளவு டீப்பாக அன்பாக இருக்கும் போது என்னாலே ஒரு சின்ன இடைஞ்சல் கூட வராது.மாது அம்மாவைக் கன்வின்ஸ் பண்ணறது கொஞ்சம் கஷ்டம் .எனால ஆனா உதவி செய்வேன்.நீ ரொம்ப லக்கி !
மாது ரொம்ப நல்லவன் .!
சுபா!நாங்க ஏர் லைன்லே சந்திச்சோம் .பழகின கொஞ்ச நேரத்திலேயே இவன் தான் என் லைப் என்று தீர்மானம் பண்ணிட்டேன் .இது வரை நான் யாரிடமும் பேசினது கூடக் கிடையாது .உன் உதவியை நான் மறக்க மாட்டேன் .என்று பெரிசா அழுதாள்.
செல்வி!கண்ணைத் தொடைச்சுக்கோ !நீ எங்க குடும்பத்தில் ஒருத்தி !
சுபா உண்மையாகவே அவளைத் தேற்றினாள் .
மறு நாள் இரண்டு பேருமே மிகத் தெளிவாக இருந்தார்கள் .
பெயின் பிரிட்ஜ் தீவுக்கு கப்பல் போல பெர்ரியில் போனார்கள் .
அமெரிக்காவின் மிக அழகான நகரம் சியாட்டில் .சுற்றி மலைகள் ,தீவுகள் .மிகவும் ரசிக்கப் பட வேண்டிய எவர் கிரீன் ஸ்டேட் .
பெர்ரியின் மேல் டெக்கில் அழகான சூழ்நிலையில் அன்புக் காதலர்கள் செல்வியும் மாதுவும் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டு வந்தார்கள் .
மாது !நான் அப்பா அம்மாவிடம் பேசப் போறேன் .நான் பேசும் போது நீ கூட இருந்தால் உன்னை ஸ்கைப்பில் காண்பிப்பேன்
மாது சொன்னான் .’முதலில் நீ பேசு .அடுத்த படியா நான் வரேன் .அதற்க்கு முன்னாலே என் வீட்டிலேயும் பேசறேன் .
இந்தியா நேரம் காலை ஏழு இருக்கும் .
அம்மா!செல்வி பேசறேன் !
என்ன செல்வி !நீ கூப்பிடவே இல்லை.ரொம்ப பிசியாக இருக்கையா!
எப்படி இருக்கே செல்வி !இது அம்மா.
அம்மா !நான் நல்ல இருக்கேன்.நல்லாப் படிக்கிறேன்.
அம்மா!ஒரு பர்சனல் மாட்டர் !நீ தப்பா எடுத்துக்கலன்னா சொல்றேன் !
சொல்லு!
அம்மா!இங்கே எனக்கு ரொம்ப குளோஸ் பிரண்டு ஒருத்தன் !எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு அம்மா!
பதில் வரவில்லை.
அம்மா!பேசு அம்மா!
அம்மா பேசினாள் .’செல்வி! உன்னைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும் . இப்படிப் பையனைப் பத்தி எல்லாம் பேசறே! படிக்கத்தானே போனே!அது முடியறதுக்குள்ளே எதோ பையனப் பற்றிப் பேசறே !நான் உன்கிட்டே எதிர் பார்க்கலே!
சரி!அந்த ஊரு அமெரிக்கப் பையனா ?
இல்லேம்மா !நம்ப ஊரு தமிழ் பையன் !பெயர் மாதவன் .மும்பை ஊரு .!
அம்மா!பிளீஸ் !அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு .நீ ஒரு தரம் பாரு ஸ்கஇப் லே !
கொஞ்ச நேரம் பதில் இல்லை
பிறகு சரி! பார்க்கலாம் .நான் உன்னைக் கூப்பிடறேன் .ஜாக்கிரதையாக இரு.அளவுக்கு மீறி பழக்கம் வெச்சுக்காதே! உன்னை நம்பறேன்!
இரண்டு நாள் ஆயிற்று .அம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.
செல்விக்குப் பயம் வந்து விட்டது.
அடுத்த நாள் சுரேஷ் அங்கிள் செல்வியைக் கூப்பிட்டு வீகெண்ட் வீட்டுக்கு வரே இல்லே !உன் கிட்டே முக்கியமாப் பேசணும்..
செல்விக்கு உண்மையாகவே பயம் வந்து விட்டது.
சரி அங்கிள் !என்று சொல்லி போனை வைத்து விட்டாள் .
மாதவனைக் கூப்பிட்டாள்.
பெரிய விடுமுறை வருவதால் பிராஜக்டில் பிசியாக இருந்தான் .
அன்று இரவு . சுபா !நாளை சுரேஷ் அங்கிள் வீட்டுக்கு நீயும் வா .
உன்னைத்தான் நம்பி இருக்கேன்.எனக்கென்னமோ எதுவும் அவ்வளவு ஈசி இல்லேன்னு தோணுது.
அம்மா பேசவே இல்லை .
செல்வி !நீ ரொம்ப நல்ல பொண்ணு !எல்லாம் சரி ஆகும் .நான் உன் கூட இருக்கேன் .
அடுத்த நாள் பெல்வியு போனார்கள் .
சாப்பாட்டுக்குப் பிறகு
“செல்வி!அடுத்த வாரம் நீ பத்து நாள் இந்தியாவுக்குப் போறே .டிக்கெட் கன்பர்ம் ஆயாச்சு .உன் அம்மாவுக்கு உன்னைப் பார்க்கணுமாம் .அடுத்த இரண்டு மாதம் யுனிவர்சிடி லீவு தானே . செல்விக்குப் புரிய வில்லை .
என் அம்மாவிடம் பேசலாமா !எனக்கு லாப் ஒர்க் இருக்கு !பர்மிஷன் வாங்கணும் .இப்படி திடீர்னு வரச் சொன்னா எப்படி ?புரியலே!
அம்மாவிடம் பேசினாள் .
அம்மா !என்ன திடீர்னு கூப்பிடறீங்க ! நான் சொன்னது பிடிக்கலையா ?
அம்மா சொன்னாள்.
செல்வி!எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு!அதுவும் உனக்கு லீவு வருது .ஒரு பத்து நாளைக்கு வந்துட்டுப் போ !
உன் ப்ரொபசர் கிட்டே சொல்லிவிட்டு வா .லாப் ஒர்க் சேர்த்துப் பண்ணலாம் .நான் அவருக்கு எழுதறேன்.உன் படிப்புக்கு ஒண்ணும்
பிராப்ளம் வராது.நானும் பெரிய பல்கலைக் கழகத்திலே பொறுப்பா இருந்தவதான் கவலைப் படாமே வா செல்வி !
அம்மா வார்த்தையிலே அன்பு அதே சமயம் கண்டிப்பு இருந்தது.
இதற்க்கு மேல் பதில் சொல்ல முடிய வில்லை.
இரவு தூங்கு முன் சுபா!நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் .
எல்லாம் நல்ல படியா முடியுமா?
செல்வி! கவலைப்படாமே தூங்கு.!நான் எங்க அக்காவிடம் பேசறேன் .
அடுத்த நாள் காலை .மாதுவிடம் செல்வி பேசினாள்.
என்ன மாது!இங்கே என்னவெல்லாமோ நடக்குது !நீ என்னடான்னா பிராஜக்டே கட்டிக்கிட்டு அழறே! மாது நான் ஊருக்குப் போய் ஏதாகிலும் ஆச்சுன்னா என்னை நீ அப்புறம் பார்க்கவே முடியாது.
நீ இல்லேன்னா நான் அவ்வளவுதான் .
மாது பயந்து விட்டான்.
சரி!திங்கட் கிழமை என் பாஸ் கிட்டப் பேசி உன்னோட வரப் பார்கிறேன் .தைரியமாக இரு .நான் விட்டிட மாட்டேன் .
ஐ ஆம் ஆல்வேஸ் வித் யு டார்லிங் ! நீ என்னோட செல்வி !
செல்விக்கு கொஞ்சம் மனதிலே தெம்பு வந்தது .
மாது பாஸ் கிட்டப் பேசினான்.
பிராஜக்ட் ஆரம்பிச்சுட்ட பிறகு லீவு போடக் கூடாது .யுனிவெர்சிடி லீவு முடிவதற்குள் எல்லாம் முடிக்க வேண்டும் .தள்ளிப் போடக் கூடாது என்று பாஸ் கண்டிப்பாக சொல்லிட்டார் .
அம்மா அப்பாவிடம் பேசலாம் என்றால் அக்கா வீட்டில் விசேஷம் என்று சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் .
செவ்வாயும் கழிந்தது.
கடைசியில் சுபாவும் மாதுவும் அவனுடைய அண்ணியிடம் பேசினார்கள் .அண்ணி சொன்னாள் .
‘நான் பக்குவமா பேசறேன் .நாளைக்கு சென்னைக்குப் போறோம் .உங்க அக்கா வீட்டிலே பங்க்ஷன் .கவலைப்படாம இரு மாது .அப்புறம் கூப்பிடுங்க!.
வியாழனன்று இரவு மாது செல்வியின் இடத்திற்கு வந்தான்.நான் நாளை ஏர்போர்ட் வரமாட்டேன் .போயிட்டு வா.நீ வருவதற்குள் நான் சென்னையில் இருப்பேன்.கவலைப் படாமப் போ !நான் இருக்கேன்!
அழுகையை நிறுத்து .இந்தா லாலிபாப் !
செல்வி பெரிசா சிரிச்ச்சுட்டாள்!
ஒ !சுவீட் மாது !அவனைக் கட்டித் தழுவி அவன் கன்னத்தில் தன்முகத்தைப் பதித்தாள்!
அதே வேகத்தில் சுபாவையும் இறுக்கிக் கட்டித் தழுவினாள்.
அவளின் உண்மைக் காதல் வேகம் சுபாவிற்கு நன்கு புரிந்து விட்டது..
மாது!அது என்ன லாலிபாப் மேஜிக் !
அதுவா சுபா !இந்த பேபி லாலிபாப் கொடுத்தா எல்லாத்தையும் மறந்திடும் !
ஸோ சுவீட் !என் செல்வி குட்டி! என்றான்.
பாரு சுபா! நீயும் சிரிச்சிண்டு இருக்கே ! நான் என்ன பேபியா?
சுபாவுக்கும் சிரிப்பு வந்தது .ஆமாம் !எங்க வீட்டு செல்ல பேபி !
உங்க கல்யாணத்திற்கு நான் லாலிபாப் தான் கொடுக்கப் போறேன்.
என்ன சுபா!
ஒரு அழகுப் பெண் வெட்கப் பட்டால் அது எப்படி இருக்கும்!
அது ஒரு ஓவியனுக்கு ஆயிரம் கதைகள் சொல்லும்!
மாதவன் அந்த அழகில் மெய் மறந்து போனான்!
செல்வி கிளம்பி ஊருக்குப் போனாள்.பிராங்க்பர்ட் ஏர்போர்ட் டிரான்சிட்டில் விம்மி விம்மி அழுதாள்.கண் துடைக்கக் காதலன் இல்லை !
சென்னை வரும்போது இரவு பனிரெண்டு .வெளியில் வர ஒரு மணி ஆயிற்று.அண்ணன் அம்மாவுடன் வந்திருந்தான் .
அம்மாவைப் பார்த்து ஒரு வருடம் ஆகிறது .அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
செல்வி!நீ இன்னும் குழந்தை தான்.என்றாள் அம்மா!
அண்ணனுக்கு நலம் விசாரித்ததோடு அண்ணன் கார் எடுக்கப் போய்ட்டான் .
அம்மா!
பேசாம வா !நாளைப் பார்க்கலாம் .
இவர்கள் வரும்போது தான் டாக்டர் ஷண்முகநாதனும் வந்தார்.
என்னங்க!மணி ரெண்டு ஆகுது !இது வரை கிளிநிக்லேயா இருந்தீங்க !
ஆமாம்!நம்ப ஆடிட்டர் மதர் இன் லா கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டாங்க .
ஐசியு லே இருக்காங்க !அதுதான் இவ்வளவு நேரம் .
அப்பா!
நல்ல இருக்கியா அம்மா !போய் தூங்கு ! காலையிலே பேசலாம்
காலை ஐந்து மணி இருக்கும் .போன் வந்தது..
செல்வியின் அண்ணி எடுத்தாள்.
அவ தூங்கறா ! பரவாஇல்லை எழுப்பவா !
செல்வி ! உனக்கு யுஎஸ் கால் .சுபா என்ற பொண்ணு !
தேங்க்ஸ் அண்ணி! ஹலோ !சுபா சொல்லு! சுபா என் செல்லுலே கூப்பிடு .
செல்வி!
சொல்லு சுபா !
செல்வி!நீ அங்கே போனது நல்லதாப் போச்சு .இன்னைக்கி ராத்திரி ப்ளைட்லே மாது அங்கே வரான் .அவன் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை உங்க அப்பா கிளினிக் லே தான் அட்மிட் ஆயிருக்கா .
ஜாக்கிரதையாக நடந்துக்கோ !
செல்விக்கு விஷயம் புரிந்தது .ஆடிட்டர் வெங்கட் மனைவி ராஜேஸ்வரி மாதவனுடைய அக்கா.
ஒரு பக்கம் பயம் !ஒரு பக்கம் சந்தோஷம்! இனி அம்மாவை விட அப்பா அண்ணன்கள் தயவுதான் முக்கியம்.அப்புறம் அம்மா.
ஒரே தங்கச்சி !இரண்டு அண்ணன்களுமே செல்வியிடம் உயிர் !
அதிலும் பெரிய அண்ணன் அண்ணி ரொம்பப் பிரியம் !
மாடிலே நேரா அண்ணன் ரூமுக்குப் போனாள் .
அண்ணே!
அடே!செல்விக்குட்டி !வா !
கேள்விப்பட்டேன் .உனக்கு லவ் பண்ண எல்லாம் தெரியுமா!
செல்வி கண்களில் கண்ணீர் பார்த்த டாக்டர் கார்த்திக்
என்னம்மா அழறே!என்ன செய்யணும் அண்ணன் உனக்கு சொல்லு !
அதற்குள் அண்ணி அவள் கண்ணீரைத் துடைத்தாள்.
செல்வி முதலிருந்து நேற்று வரை சொன்னாள்.
அண்ணன் அண்ணி நீங்கதான் முடிச்சு வைக்கணும் .
கவலைப் படாதே !அப்போ மாப்பிளை நம்ப ஆடிட்டர் வீட்டுப் பையன்.
நான் பார்த்க்கிறேன் .நான் சொல்லும் போது மட்டும் அண்ணியோடு கிளினிக் வந்திடு .
காலையில் டாக்டர்கள் மூவரும் கிளினிக் போய்விட்டார்கள்.
அம்மா இன்னும் எதுவும் பேச வில்லை பூஜை அறையில் இருந்தார்கள்..செல்வி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்
அண்ணியின் செ.ல்லுக்கு வந்தது.போன் கால் !
அம்மா செல்வி! நாம கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம் .அண்ணன் வரச் சொன்னார் பூஜை அறையில் அம்மா இருந்ததால் நான் செல்வியோடு வெளியே போயிட்டு வரேன் என்று அண்ணி சொல்லிட்டு கிளம்பினார்கள் .
நேரா டாக்டர் கார்த்திக் ரூமுக்குள்ளே போனார்கள் .
செல்வி முகம் பயத்திலே இருந்தது.
கொஞ்சம் சிரியேன்!நீ இப்படி அழுது அண்ணனும் அண்ணியும் பார்த்ததே இல்லை.
செல்விக்குட்டி !அண்ணன் எதுக்கு இருக்கேன்! சிரி!
நீ நினைச்சபடி எல்லாம் நடக்கும் .ப்ராமிஸ் ! போதுமா !
அண்ணனை நிமிர்ந்து பார்த்து ஓடிபோய் கட்டி கொண்டு பெரியதாக அழ ஆரம்பித்துவிட்டாள்.அண்ணனுக்கும் அண்ணிக்கும் அவள் வேகத்தைப் பார்த்து அசந்து விட்டனர்.
விஷயம் ரொம்ப சீரியஸ் என்று அண்ணி சொனார்கள் .
கொஞ்சம் சிரி முதல்லே !அப்பத்தான் சொல்லுவேன் என்று அண்ணன் சொல்ல சரி என்று நிமிர்ந்தாள்.
அவங்க வீட்டிலே செல்வின்னா வேறு யாரோன்னு கவலைப் பட்டிருக்காங்க .அப்புறம் ஆடிட்டருக்கு நான் சொல்லி நீ நம்ப பொண்ணு என்று தெரிஞ்ச பிறகு எல்லோரும் சந்தோஷமா சரி ன்னு சொல்லிட்டாங்க!நம்ப அப்பாவும் சரி சொல்லிட்டாரு . மாதவன்
அம்மா ஐசீயு வில் இருந்து நாளை நார்மலா வராங்க இரண்டு நாளில் சரி ஆய்டுவாங்க .சாயங்காலம் வீட்லே அப்பா அம்மாவோடு பேசுவார்.
நாளைக்கு மாப்பிள்ளை மாதவன் வந்ததும் நானே நம்ப வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரேன் போதுமா ! இப்போ சிரிப்பையா!
சோர்ந்து போன முகம் சூரியனைப் போல மலர்ந்தது !
அண்ணே! அப்போ மாமியாரு !
கவலைப் படாதே! ரெண்டு மாமியாரையும் நாங்க பார்த்துக்கிறோம் .
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
மாதவனின் அக்கா ராஜேஸ்வரி உள்ளே வந்தாள்.
டாக்டர் !எங்கே எங்க வீட்டுப் பொண்ணு !
இதோ இருக்கா பாருங்க !என்று சொல்லி செல்வியைக் காண்பித்தார் .
ஒ மை காட்! என்ன அழகு ! அதுதான் என் தம்பி மயங்கி விழுந்திருக்கான் .அப்படியே செல்வியை இழுத்துக் கட்டிக் கொண்டாள்
செல்வியின் கண்களில் மறுபடியும் கண்ணீர் !
அக்கா!ரொம்ப தேங்க்ஸ் !உங்க அம்மா என்று இழுத்தாள்.
மை! டியர் கேர்ல் !கவலைப்படாதே !ஏற்கெனவே என் அம்மாவிடம் நான் சொல்லிட்டேன் .
இந்த உடம்பு சரியா இல்லாததற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
மாது சந்தோஷத்தில் நாங்க யாரும் குறுக்கிட மாட்டோம் .அவன் எப்ப வும் கரெக்டா எதையும் முடிவெடுத்துச் செய்பவன் .இப்போ உன்னை செலக்ட் பண்ணினதிலே இருந்து ஒ மை காட் ! எவ்வளவு அழகா அமைதியாக இருக்கே !
மறுபடியும் கட்டிக் கொண்டாள் .
டாக்டர் கார்த்திக்கும் அவர் மனைவியும் சந்தோஷத்தில் திளைத்தனர் .என்ன !டாக்டர் !உங்களுக்கு என் தம்பி திருப்தி தானே!
உங்க அப்பா சந்தோஷமாகச் சரி சொல்லிட்டார் . ஆண்டி கிட்டே நான் சாயங்காலம் வந்து பேசறேன் .
அக்கா !நான் உங்களை ஒரு தரம் ஹக் பண்ணிக்கலாமா !
தாராளமா !என்று சொல்லி ஹக் பண்ணிக் கொண்டார்கள் .
நாளைக்கு என் தம்பி வந்ததும் உன் மாமியாரிடம் நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன் .
ஆடிட்டர் வெங்கட்டும் ராஜேஸ்வரியும் மாலை டாக்டர் ஷண்முகநாதன் வீட்டுக்கு வந்து செல்வியின் அம்மாவிடம் பேசினார்கள் .மறு நாள் மாதவன் வந்த பிறகு முறையாக அவன் அம்மாவிடம் டாக்டர் குடும்பத்தினர் அனைவரும் பேசினார்கள் .
இருவருக்கும் பிஹெச் டி முக்கிய பரிட்ஷை முடிந்ததும் திருமணம் என்று உறுதி செய்தார்கள் .
ஊருக்குப் போகும் நாள் வந்தது .
அன்று மதியம் டாக்டர் வீட்டில் விருந்து வைத்தார்கள்.விருந்து நடந்து கொண்டிருந்தது.
டாக்டர் கார்த்திக்கும் அவர் மனைவியும் செல்வியிடம் ‘இன்னக்கி ஊருக்குப் போறே !இந்தா ஒரு சின்ன கிப்ட் என்று ஒரு சின்ன பாக்ஸ் கொடுத்தார்கள் .
செல்வி பிரித்துப் பார்த்தாள்.
உள்ளே பத்து வித லாலிபாப் இருந்தது .
செல்விக்கு ஒரே வெட்கம் ! என்ன அண்ணே !அண்ணி!நீங்களும் இப்படியா !
எல்லாம் அந்த மாதுவின் வேலைதான்.என்று சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் .
அண்ணி சொன்னார்கள் .’இது மாப்பிள்ளை சொல்லலை! காலையில் சுபா சொன்ன கதை!
எல்லோருக்கும் ஒரே சிரிப்பு !
அடுத்த ஆச்சர்யம் !
டாக்டர் கார்த்திக்’ தங்கச்சி ! இந்தா ஒங்க ப்ளைட் டிக்கெட் !
பிரித்துப் பார்த்தாள் .
என்ன அண்ணே!பர்ஸ்ட் கிளாஸ் போட்டிருக்கு!
அது ஒண்ணும் இல்லேம்மா !ரெண்டு பிளைட்லேயும் சாய்ந்து தூங்கினாமாப்பிள்ளை தோள் என்ன ஆறது !அவரும் தூங்கணுமே !
இது சுபா வேலை இல்லை !மாது வேலைதான் !என்று மாதுவிடம் ஓடினாள்.
டாக்டர் காப்பாத்துங்க ! என்று கார்த்திக் பின்னால் போய் மாது ஒளிந்து கொண்டான் .
சிரிப்பொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று .
இது ஒரு களங்கமில்லா அழகுப் பெண்ணின் காதல் கதை !
super sir
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. என்னுடைய மற்ற
கதைகளும் படியுங்கள்.
பி.சங்கரன்
நல்லதொரு கதை எந்தவித எதிர்ப்பும் வன்முறையும் இல்லாமல். அழகியதொரு காதல்
அன்பர் திரு.கார்த்தி,
காதலின் மென்மையும் ,அதன் மிருதுவான நெஞ்சத்தை வருடும் தன்மையையும் உணர்ந்து நான் எழுதிய கதை இது.
உங்களின் உளங்கலந்த பாராட்டுதல்கள் அதை அருமையாக உறுதிப் படுத்துகிறது. இதன் தொடரான “பேச நினைத்தேன் பேசுகிறேன்”
கதையையும் படியுங்கள்.
மிக்க நன்றி.
வார்த்தை கோர்வைகள் இன்னும் சற்று புரியும்படி அமைத்திருக்கலாம். மற்றபடி நீங்கள் என்னுடைய பிடித்தம். வாழ்த்துக்கள் தோழரே ..!
தங்கள் அன்பான கருத்துக்களுக்கும் தாங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் மிக்க நன்றி .எழுத முயற்சிக்கிறேன்.என்னுடைய மற்ற கதைகளையும் படியுங்கள்.தங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
வெரி மோவிங் story
Azhagiyya Kathai
மிகவும் அருமை. படிக்க படிக்க மனதில் இன்பம் பொங்கியது. இது போல் வாழ ஆசை.
என் கதையைப் படித்து ரசித்து எழுதியதற்கு மிக்க நன்றி!
உங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள் !
தங்கள் அன்பான எழுத்துக்களுக்கு மிக்க நன்றி
நண்பரே
அருமை…நண்பரே…
கதை படித்த அனைவரும் இந்த செல்வி போல வாழ வழி சொன்னது போல் இருந்தது.
அழகு நண்பரே !!!!!!!!!!
நீண்ட கவிதை போல ஒரு அழகான காதல் கதை. வாழ்த்துக்கள் சங்கரன் .
தங்கள் அன்பும் வாழ்த்துக்களும் என்னை இன்னும்
ஊக்குவித்து எழுதத் தூண்டுகிறது நன்றி .
பி.சங்கரன்