சந்திரா இரவீந்திரன்

 

Chandra.Ravindranசந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

மின்னஞ்சல் முகவரி: chandra363@googlemail.com

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்றும் 1999ம் ஆண்டிலிருந்து இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப்பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன் தற்போது அச்சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்..

எழுத்துலக வாழ்வு

இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ்ஒலி ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை,’ஊடறு’ பெண்கள் இதழ் மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான ‘யுகம்மாறும்’ ‘கண்ணில் தெரியுது வானம்’ ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய “இரசிகமணி நினைவுக் குறுநாவல்” போட்டியில் இவரது “நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்” இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன், அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் “ஈழமுரசு” பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.

இவர் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் 1992ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “பாரிஸ் ஈழநாடு” பத்திரிகை நடாத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவரது “அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்” சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது.

இவரது பால்யம் சிறுகதை இதுவரை பெண்படைப்பாளிகளால் குழந்தைகளின் பாலியல் தொடர்பாக எழுதப்பட்ட கதைகளுள் மிகச்சிறந்த கதையாகக் குறிப்பிடப்படுகிறது[சான்று தேவை].

வெளிவந்த நூல்கள்

வெளி இணைப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *