முதலைகள் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 1,800 
 
 

(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன

ஒரு முதலாளியிடம் ஒரு கட்சி தேர்தல் நன்கொடை கேட்டது. 

முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடையாக வழங்கினார்

சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி, நன்கொடை கேட்டது. 

அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடைவழங்கினார். 

“அப்பா! இப்போது வந்தவர்கள் பதவிக்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா?” 

“ஆம், மகனே!” 

“அப்படியானால் எதற்காக அவர்களுக்கு உதவினீர்கள்?” 

அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதவியைக் காட்டிச் சலுகை பெறலாம் அல்லவா?” 

” அதுசரி.. முதல் கட்சியினருக்கு உதவாமல் விடலாமே?” 

“தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே? 

“இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா?’ 

“இல்லை மகனே இல்லை….நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எது வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு கட்சிக்கு வழங்கினால்தான் ஆபத்துநாம் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழப் பழகவேண்டும் புரிகிறதா…….

புரிந்தது.

– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *