வந்திருந்த பிரஷர் எங்க போச்சு, எப்படி போச்சன்னே தெரியலை….!
ஒரு டாக்டர்ட்ட போகலை! ஒரு மருத்துவம் பார்க்கலை! நோய் மாயமா மறைஞ்சது எப்படீன்னு யாருக்கும் தெரியலை. !
கொஞ்சம் வியாபார புத்தி மட்டும் மண்டைல இருந்திருந்தா மருத்துவம்னு தலைப்புல இதையே யூ டியூபுல பதிவேற்றி ‘லைக்கும்’ சப்ஸ்கிரைபும் கூட்டி சம்பாதிருச்சிக்கலாம்.! ஆனா… நம்ம நோக்கம் சைடு பிசினஸோ, சம்பாதாதியமோ அல்ல… !
சமூக சேவை அதுதான் அதைப் பண்ணலை!.
சரி சரி…
நோய் எப்படிப் போச்சுன்னு சொல்றேன்.
கடவுளும் கொழந்தையும் நம்ம வறட்டு பந்தாவுல இருந்து நாம கீழ எறங்குனா கடவுள் பரம பதத்திலருந்தும், குழந்தை வெறுப்புகளிலிருந்தும் எறங்கி வந்துடும். சந்தோஷமா சிரிச்சு மகிழ்ந்தா அப்புறம் நோயாவது நொடியாவது.
வீட்டிலுள்ள குழந்தைகள்…பேரன் பேத்திகளோடு மனசுவிட்டு நெருங்கினா, விளையாடினா பிரஷரும் சுகரும் ஒடம்பவிட்டு ஓடியே யோயிடும்.
போனது அப்பிடித்தான். இதை தயவு செய்து ‘லைக்’ பண்ணுங்க. பக்கத்திலிருக்கிற (சாவு மணி) பெல் பட்டனை சட்டை பண்ணாதீங்க! கடவுள் அதை கழற்றி எரிஞ்சுட்டு உங்களைக் காப்பாத்துவார்.
வியாபார புத்தியை விட்டுத்தள்ளீட்டு நாலு பேருக்கு நல்லதை நெனைங்க! ஜெயம் நம்ம பக்கம்தான்!!