கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 366 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘அனந்தத்தை வணங்கினாலும் ஏகனையே வணங்குகின்றோம். ஏகனை வணங்கினாலும் அனந்தத்தையே வணங்குகின்றோம்….’ 

அநுட்டான விதிகள் பலவும் அவனுக்கு அர்த்தமற்ற வையாகத் தோன்றின. ‘நமசிவாய’ எனப் பஞ்சாட்சரம் உச்சாடனஞ்செய்து சிவனைச் சிலர் வழிபட்டனர். ‘சரவணபவ’ என்ற சடாட்சர ஓதுதலில் நிறைவு கண்டார் கள் முருக பக்தர்கள். ‘நாராயணாய நமஹ’ என்ற அட் டாட்சர பஜனையில் மனம் ஒன்றினர் வேறு சிலர். ‘கணபதியே நம’ எனக்குட்டி, ‘கும்பியோ நம’ எனக் கும்பிடு தலைச் சிறந்த அநுட்டான முறையாக விநாயக பக்தர்கள் ஒழுகினார்கள். ‘உமாதேவ்ய நம’ எனச் சக்தி வழிபாட்டுக் காரர்களும், ‘வடுக வயிரவாய நம’ என வயிரவர் பக்தர் களும் தனித்தனி கோஷ்டிகளாக அமைந்தனர். இவர் களுள் யார் அநுஷ்டிக்கும் வழி மேலானது என்பதை அவனால் நிதானிக்க இயலவில்லை. 

‘இந்துக்கள் அஞ்ஞானிகள், மனம் போன போக்கிற் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஈசன் ஏகனே, அவனை அடையும் மார்க்கத்தைக் கண்டுபிடிப்பேன்’ என வைராக்கிய நோன்பு இயற்றி அவன் புறப்பட்டான். 

நாடு-நகர்-காடு-மலை-வனாந்திரம் எனப் பலப்பல தாண்டி அலைந்தபோதிலும் உண்மை மார்க்கம் புலப்படவில்லை. கால்கள் அலுத்தன; மனம் களைத்தது. 

“மனிதனுடைய செழுமையான கற்பனையிலே உதித்ததுதான் ஈசன். சர்வ வல்லமையுள்ள ஏகன் ஒருவன் இருப்பானேயாகில், தன் வல்லபங்களை நிலைநாட்ட முன் வரமாட்டானா?’ என ஐயங்கள் இடையிடையே தோன்ற அவனுடைய மனம் நிரீச்சுவரவாதத்தில் பற்று வைக்கலாயிற்று. 

அசதி மேலிட, ஆலமரம் ஒன்றின் கீழ் இளைப்பாற அமர்ந்தான். அதே ஆலமரத்தின் கீழ் மேனியெல்லாம் திருநீறு அப்பிய தபஸ்வி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். 

அவனுடைய விழிப்புலன் ஆலமரத்தை மேய்ந்தது. அது செழுங்கிளைகள் பரப்பிக் கொழுத்திருந்தது. சிறுசிறு பழங்கள் சினைத்துக் கிடந்தன. அவற்றைப் பார்த்ததும், 

‘ஈசன் விகிதாசாரப் படைப்பு முறையை அறியாதவன். கோணங்கி….’-சிந்தனை ஈசுவர நிந்தனை என்ற தடத்திற் சரியலாயிற்று. 

‘பட்’. ஆலம்பழமொன்று தபஸ்வியின் தலையிலே விழுந்தது. ‘ஆண்டவனின் கருணையே கருணை! அவன் எங்கும் நிறைந்தவன்; எல்லாம் வல்லவன் என்பது பொய் யாகுமோ? ஆலம்பழங்கள் தேங்காயளவு சொரிய ஆரம்பித்தால்….? எல்லாம் உன் லீலை…! என அவர் ஆண்டவனைத் துதிக்கலானார். 

உலகில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்?’ என அவன் தபஸ்வியை வம்புக்கு இழுத்தான். 

‘அனந்தம்….’ தபஸ்வியின் பதில். 

‘அந்த ஆனந்தத்துள் நீர் எதைச் சிறப்பாக வழிபடுகின்றீர்’. 

‘அனந்தத்துள் சிறப்பான ஒன்றா? அனந்தத்தை வணங்கினாலும், ஏகனையே வணங்குகின்றோம். ஏகனையே வணங்கினாலும், அனந்தத்தையே வணங்குகின்றோம்….’ 

‘ஆத்திகம் என்பது ஆதாரமற்ற போலி ஆசாரம். இல் லாத ஒன்றை இருப்பதாக நம்பிச் சுயத்தையும் பிறரையும் ஏமாற்றும் முயற்சி….அனந்தம் சமன் ஏகன்; ஏகம் சமன் அனந்தம் என்பன எந்த சாஸ்திர விதிக்கும் அமையாத கணக்குகள்! சொற்களை வைத்துத் தாய்ச்சிற்றம்பலம் ஆடு வதும், அந்த விளையாட்டே கடவுள் தரிசனம் என்று கூறுவதும் அறிவு சார்ந்தவையல்ல….” என வெகு எதார்த்தமாகப் பேசினான். 

‘அப்படியா? இந்த ஆலமரத்தின் கீழ் எத்தனை ஒளித்திட்டுக்கள் தென்படுகின்றன? எண்ணிப்பார்….’ 

‘நூற்றுக்கும் அதிகமாக இருக்கலாம்….’ குத்து மதிப்பாகக் கூறினான். 

‘உலகிலுள்ள அத்தனை மரங்களின் கீழும் ஒளிஜாலம் காட்டும் ஒளித்திட்டுகளின் எண்ணிக்கை….’ 

‘அனந்தம் எனச் சௌகரியத்திற்காக வைத்துக் கொள்ளலாம்….’ 

‘இத்திட்டுகள் என்ன?” 

‘சூரிய வெளிச்சம்….’ 

எத்தனை சூரியன்களிடமிருந்து பெறப்படும் வெளிச்சம்?‘ 

‘ஏக சூரியனிடமிருந்து….’ எனக் கூறத்தொடங்கியவன், சடுதியாக உதடுகளைக் கடித்துக்கொண்டு, ‘-ஏகனும், அந்தமும்! சுவாமி, எனக்குப் புதிய கணக்கின் உண்மை புரிகின்றதுஎன்று தபஸ்வியை வணங்கினான்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *