குமார சம்பவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 30,720 
 

பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு

எப்போது ஈஷ்வரன் மன்மதனை எரிதது பஸ்மம் ஆக்கினாரோ அப்போதில் இருந்து பார்வதி மிகுந்த மனகிலேசம் உடையவளானாள். அவள் தன்னைத் தானே பழித்துக் கொண்டாள். ஈஷ்வரனை இன்னும் சிரத்தையாக ஆராதனை செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டாள். வனத்திற்கு சென்று கடும் தவம் இயற்ற நிச்சயித்தாள். இதனைக் கேள்வியுற்ற தாய் மேனாதேவி மனம் கலங்கினாள்.

“மகளே! கடுமையான தவம் நீ ஏன் மேற்கொள்ள வேண்டும்? உனது கோமள தேகத்திற்கு எளிது அன்று. இந்தப் பிரயத்தனம் வேண்டாம்” என்று கூறினாள்.

பள்ளத்தை நோக்கி விரைந்து பாயும் நீரை யாரால் தடுக்க இயலும்? இது போன்று பார்வதியின் முயற்சிக்குத் தடை போட இயலவில்லை. தன் பிதா இமவானின் அனுமதி பெற்று இமயமலையில் கௌரி சிகரம் என்ற இடத்தில் தவம்

செய்ய செல்கிறாள். ராஜகுல பெண்கள் அணியும் ஆடை, ஆபரணங்களைத் தவிர்த்து மரவுரி தரித்து தவம் மேற்கொண்டாள். அம்மையின் தவம் பற்றிக் கேள்வியுற்ற முனிவர்களும் அங்கு வந்தனர். தர்ம விஷயங்களுக்கு வயது ஒரு தடையில்லை அன்றோ?

பார்வதி கடும் கோடை காலத்தில் பஞ்சாக்னி நடுவில் நின்று தவம் புரிந்தாள். மழை காலத்தில் கற்களின் மேலே நின்றபடி இடி, மழை, மின்னலைப் பொருட்படுத்தாமல் தவம் இயற்றினாள். குளிர் காலத்தில் இரவில் நடு சாமத்தில் நீர்நிலைகளில் நின்றபடி அன்ன ஆகாரத்தை தவிர்த்து தவதுதினைக் கடைபிடித்தாள். முதலில் பழங்களை மட்டும் தனது உணவாகக் கொண்டிருந்தாள்.

பின் பழங்களைத் தவிர்த்து இலைகளை மட்டும் ஆகாரமாகக் கொண்டாள். அதன்பின் இலைகளையும் உண்பதை தவிர்த்து விட்டு மிக கடுமையான தவத்தினை அனுசரித்தாள். இதனாலேயே பார்வதிக்கு அபர்ணா என்ற பிரசித்தமான பெயர் ஏற்பட்டது.

பார்வதியின் கடுமையான தவத்தைக் கண்ட சிவன் அகமகிழ்ந்தார்.

ஆனாலும் பார்வதியை சோதனை செய்து பார்க்க விரும்பினார். அதனால் ஒரு பிரம்மசாரியைப் போன்று வேஷம் தரித்து பார்வதியின் ஆஷ்ரமத்திற்கு வருகை புரிந்தார்.

அவரை பார்வதி மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறாள். பிரம்மசாரி வேஷத்தில் உள்ள சிவன் பார்வதியிடம் அவள் தவம் செய்வதற்கான காரணம் யாது? என வினவுகிறார்.

“பார்வதி! உனது உயர்ந்த குணநலன் தவம் செய்பவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது. நான் நீ செய்கிற தவத்திற்கு உரிய காரணத்தை அறிய விரும்புகிறேன். ஏனென்றால் உயர்ந்த குலத்தில், உலகம் கண்டு அதிசயிக்கும் படியான அழகுடன், நீ ஜனனம் எடுத்திருக்கிறாய். ராஜகுமாரியான உனது செல்வ வளமும் அபாரமாக உள்ளது. புது யௌவனப் பருவத்திலும் இருக்கிறாய். இவ்விதம் மிக சிறப்புகளுடன் இருக்கும் நீ எதன் பொருட்டு கடினமான தவத்தினைக் கைக் கொண்டிருக்கிறாய்? சௌந்தர்யம், ஐஷ்வர்யம் யாவும் நிறைவாகவே உள்ளது.

இதைவிடச் சிறந்தது, நீ விரும்புவது யாதுள்ளது? உனக்கு நல்ல வரன் வேண்டும் என்பதற்காக தவம் என்றாலு அது வியர்த்தமே ஆகும். ஏனென்றால் மணமகனுக்குச் சொந்தமானவர்கள் உன்னைத் தேடிக் கொண்டு வருவார்கள். ரத்தினமானது யாரையும் தேடிக் கொண்டு செல்ல வேண்டாம், மாறாக ஐனங்கள் ரத்தினத்தை தேடிச் செல்வார்கள் அல்லவா?”

பிரம்மசாரியின் வசனங்களைக் கேட்டு பார்வதி பதில் ஒன்றும் கூறாமல் அமைதி காக்கிறாள். பார்வதியின் சகி பதில் உரைக்கிறாள். “இவள் பரமேஷ்வரனை விவாகம் செய்வதற்காக இந்த தவத்தினை மேற்கொண்டிருக்கிறாள்” என்று.

அதனைக் கேட்ட சிவன் மீண்டும் பார்வதியை சோதனை செய்ய விழைகிறார். அதனால் இவர் கூறுகிறார், “ஹே, கௌரி! நான் பரமேஷ்வரனை மிகவும் நன்றாக அறிவேன். அவர் எப்போதும் அமங்கலமான கார்யங்களில் விருப்புடையவர். மயான பூமியில் வாழ்பவர். சிதையின் பஸ்மத்தையே விரும்பி அணிவார். அவருக்குப் பட்டு வஸ்திரமாக விளங்குவது கஜ சர்மம் அல்லவா?

நாக ஸர்ப்பங்களே அவரது அணிகலன். வயது முதிர்ந்த ரிஷபமே அவரது வாகனம்.

இது போன்ற மணமகன் உனக்கு எதற்காக? அவருக்கு சௌந்தர்யம் என்பதே கிடையாதே! அவருக்கு தாய் யார்? தகப்பன் யார்? என்ன குலத்தைச் சார்ந்தவர் என்பதே யாருக்கும் தெரியாதே! அவர் திகம்பரர். ஐஷ்வர்யமற்ற, ஒரு அம்சமும் இல்லாத இவ்வகை மணமகனை அடைவதற்கு எதற்காக விரும்புகிறாய்? “

பிரமசாரி வேஷத்தில் வந்தவர் சிவனை இவ்வாறு பழித்து நிந்தனை செய்கிறார். பார்வதிக்குப் பிடிக்கவில்லை. கோபம் கொள்கிறாள், “உங்களுக்கு

ஈஷ்வரனது உண்மை ஸவரூபம் தெரியாது. நீங்கள் அதனை அறிய மாட்டீர்கள். அதனால் இவ்வாறு கூறுகிறீர்கள். சிவன் மயானத்தில் வசிப்பவரான்லும் திரிலோக சஞ்சாரி. அவரே எனக்குப் பிரியமான நாதன். இதுகுறித்த விஷயங்களை மேலும் நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. நான் இந்த இடத்தை விட்டு அகன்று செல்கிறேன். மகாபுருஷரின் நிந்தனையைக் கேட்க விரும்பவில்லை. என்று கூறியபடி அங்கிருந்து செல்ல விரும்பினாள்.

பார்வதியின் நிஷ்களங்கமான அன்பைப் பார்த்து சிவன் மகா ஆனந்தம் அடைந்தார். தன் ஸ்வய ரூபம் காட்டி அங்கிருந்து செல்ல முயன்ற பார்வதியின் கரம் பற்றி தடுத்து ஆட் கொண்டார். “ஹே, பார்வதி உன்னுடன் விளையாடினேன். உன் தவத்தை மெச்சுகிறேன். உன் மீது அதிகப் பிரேமை உடையவனானேன். “என்று கூறினார்.

பார்வதி மிக சந்தோஷம் அடைந்தாள் இது நாள் வரை செய்த தவத்தின் கடுமையை மறந்தாள். பார்வதியின் தவத்தின் பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி

அடைந்த தோழியும் மேற்கொண்டு நடக்க வேண்டிய விவாகப் பிரஸ்தாவங்களை பர்வத ராஜனிடம் வந்து கூற வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பம் செய்கிறாள்.

இத்துடன் குமார சம்பவம் மூன்றாம் பாகம் நிறைவடைந்தது.

– நான்காம் பாகம் தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *