மாய எண் 13

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 96,695 
 

இந்த புத்தகத்தில் வரும் அனைத்தும் கற்பனையே. இப்புத்தகத்தை படித்தபின்பு உங்களுக்கு ஏற்படும் எந்த அசம்பாவிதத்திற்க்கும், இந்த கதைக்கும், இப்புத்தகத்தை எழுதினவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதய நோயுள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள்,தயவு செய்து படிக்க வேண்டாம். தைரியத்துடன் தொடர்வோர் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு சம்பந்தமான தங்கள் வாழ்வில் நடந்த விசயங்களை நினைத்து பார்க்க வேண்டாம்.

இப்புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் பொழுது கவனத்தை வேறு எங்கேயும் சிதரவிட வேண்டாம். தவரும் பட்சத்தில் ஏற்படும் அமானுஷ்யமான அனுபவங்களை அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு நேரம் பொறுமையாக படித்து கொண்டிருந்த சங்கர்,

“என்னடா ஒரு புக்க படிக்க ஆரம்பிக்கும் போதே இவ்வளோ பில்டப் குடுக்குறீங்க?” சென்னைக்கு பஸ்ல போரமே.. நெட்டு கிடைக்குற வர மொபைல நொண்டிட்டு இருக்கலாம், அதுக்கப்ரம் போர் அடிக்குரப்ப படிக்களாம்னு ராஜேஷ்குமார் நாவல் வாங்குணதுக்கு அந்த கடைக்காரர் ப்ரீயா குடுத்த புத்தகம். கொஞ்ச பக்கம்தான் இருக்கு முதல்ல இத படிச்சிட்டு நாவலை படிக்க லாம்னு பார்த்தா..

என கூறியவாறு புக்கின் அட்டை படத்தை பார்கிறான். தலைப்பு மாய எண் 13 .. தொடர்ந்து படிக்கலாமா வேணாமா என யோசித்ததவன். அந்த புத்தகத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது புத்தகம் அடுத்த பக்கத்தை தானாக திருப்பியது. அவனை அறியாமல் வாசிக்க ஆரம்பித்தான்.

நம்பர் 13 ஐ உலக மக்கள் பெரும்பான்மையினர் ராசி இல்லாத நம்பராகவும், பேய் சம்பந்தபட்ட நம்பராகவும் மட்டுமே பார்க்கின்றனர். தமிழ்ல 13 ஆம் நம்பர் வீடுனு ஒரு பேய் படமே வந்திருக்கு. 13 நம்பர் வீட்டுல மட்டும் தான் பேய் இருக்கா.. கிடையாது பேய் எல்லா இடத்துலயும் இருக்குது. 13 ங்குற நம்பர பேய் ( ஆத்மா, தேவதூதர்) சம்பந்த பட்டவர்களோட கமுனிகேட் பண்ண யூஸ் பண்ணிக்குது. அதுதான் இந்த 13 நம்பருக்குள்ள ஒளிஞ்சிருக்குற ரகசியம்.

13 நம்பர் வீட்டுல இருக்குறவங்க கூட இறந்தவங்க ஆத்மா தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது தான். ஆமனுஷ்ய நிகழ்வுகள் நடக்குது. உண்மையிலேயே 13 ராசியான எண். அதை உணருரவங்களுக்கு கெட்டதில் இருந்து இறந்தவங்க யாரோ ஒருவர் அந்த 13 எண் மூலமா காப்பாத்துவாங்க.

காலையில் இருந்து இரவு வரை நாம ரெகுலரா பண்ற வேளையில, மொபைல் எண்களில், வண்டி நம்பர்களில், வால் போஸ்டர்களில், இரயில்வே டைமில், பேப்பரில், சம்பள கவரில், இப்படி எதோ ஒரு வகையில் இந்த 13 ஆம் நம்பர் நம்மல கடந்து போயிருக்கும். நாம கண்டுக்காம இருந்திருப்போம். ஆனா அந்த எண் மீண்டும் மீண்டும் உங்க கண் முன்னாடி வந்தா. அது உங்க பாதுகாவலர் உங்களுக்கு குடுக்குற ஏதோ ஒரு சமிக்கை.

எண் 1 என்பது நம்பிக்கை மற்றும் முன்முயற்சியைப் பற்றியது என்றாலும், எண் 3 என்பது உங்கள் ஆன்மீக திறனை உருவாக்குவதாகும்.

இரண்டு என்னும் ஒன்றாக கலக்கும்போது, ​​குறிப்பிட்ட விளைவுகளை ஈர்க்க உங்கள் எண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் விருப்பங்களை வெளிப்படுத்த உங்கள் சக்தி பற்றிய தகவல்களை இந்த எண்கள் கொண்டிருக்கின்றன.

உங்கள் அனுபவத்தில் மாய எண் 13 தோன்றுவதை நீங்கள் காணும்போது, ​​உங்கள் எண்ணங்களை உங்கள் வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்தும்போது உங்கள் பாதுகாவலர் தேவதூதர்களிடமிருந்து ஒரு நினைவூட்டலை உங்களுக்கு பயத்தின் மூலம் ஏற்படுத்துவார்.

உங்கள் எண்ணங்களை உங்கள் ஆசைகள் மற்றும் உங்கள் வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் எப்போதும் எதிர்பார்த்த நேர்மறையான விளைவுகளை நீங்கள் ஈர்ப்பீர்கள்.

மாய எண் 13 ஐ சமீபத்தில் பார்த்தீர்களா? தேவதூதர்கள் உங்களுக்கு என்ன செய்தி அனுப்புகிறார்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மாய எண் 13 ஐ நீங்கள் ஏன் தொடர்ந்து பார்க்கிறீர்கள் என யோசியுங்கள்.

வாழ்க்கை என்பது நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களின் பயணம். நீங்கள் எந்தப் போராட்டத்தையும் கடினமான நேரத்தையும் கடந்து வந்தாலும் அன்பும் தயவும் நிறைந்த வாழ்க்கையை வாழ தேவதூதர்கள் உங்களை ஊக்குவிக்கிறார்கள்.

மாய எண் 13 என்பது துரதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று பலர் நம்புவதால், இது உண்மையை விட்டு சற்று விலகியே இருக்கிறது. மாய எண் 13 என்பது வலிமை, ஆற்றல், உத்வேகம், ஆர்வம் மற்றும் உந்துதல் ஆகியவற்றின் அழகான கலவையாகும்.

மாய எண் 13 ஐ நீங்கள் தொடர்ந்து பார்த்தால், உங்கள் வாழ்க்கையை அன்புடனும் இரக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் பிரபஞ்சத்தில் அனுப்புவது உங்களிடம் திரும்பி வரும்.

உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் அன்பையும் இரக்கத்தையும் பரப்புகிறீர்கள் என்றால், அவை இன்னும் பலமடங்காக உங்களுக்கு திருப்பி அளிக்கும்.

நீங்கள் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் எங்கு கவனம் செலுத்துகிறீர்கள் என்பது உங்களுடையது.

உங்களுக்கு ஏற்படும் மோசமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு அல்லது ஒவ்வொரு நாளும் உங்களைச் சுற்றியுள்ள நேர்மறையான விஷயங்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்துவதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.

13 எண்ணின் பின்னால் மறைக்கப்பட்ட பொருள், எதிர்மறையான சிந்தனைகளை புறக்கணித்து நேர்மையான சிந்தனையில் கவனம் செலுத்துவதாகும். தேவதூதர்கள் உங்களுக்கு உணர்த்தும் செய்தி இது.

உங்கள் வாழ்க்கையை ஒரு அன்பான நிலையிலிருந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் அதற்கு இந்த 13 ஆம் நம்பர் உதவும்.

அதேபோல் நீங்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் துரோகமும் உங்களையே வந்து சேரும். அதுக்கும் இந்த மாய எண் உதவும். நல்லவர்களுக்கு அத்மாக்கள் நன்மையும்.. கெட்டவர்களுக்கு ஆத்மாக்கள் மூலம் தண்டனையும் கொடுக்க வல்லது இந்த மாய என் 13.

உங்களுக்கு 13 மாய எண்ணாக வேண்டுமா.. புனித எண்ணாக வேண்டுமா நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

மாய எண் 13 ன் கதை இங்கு முற்றும்..

உங்கள் வாழ்க்கையில் தொடரும்..

படித்து முடித்து சங்கரி மொபைல எடுக்கிறான். மணி 13( இரவு 1மணி ) என இரயில்வே நேரத்தை காட்டுகிறது. தேதி 13.12.2019 அவன் சீட் நம்பரை பார்கிறான். சீட் எண் 13.

Print Friendly, PDF & Email

அந்த மூன்றாவது பயணி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

பச்சை பங்களா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2023

ஜன்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023

1 thought on “மாய எண் 13

  1. இரயில்வே நேரம் 13 என்றால் பகல் 1மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *