Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

322 கதைகள் கிடைத்துள்ளன.

சாஸ்திரம் சம்பிரதாயம்

 

 என்ன சார் இந்த சண்டே ஊர்வனாவா?பறப்பனவா? சத்தமாய் கேட்டார், வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர். சார் சத்தம் போடாதீங்க,வலது பக்கமா இருக்கறவங்க அசைவம் சாப்பிடாதவங்க சார், அது மட்டுமில்லை, சுத்தம், அப்படி இப்படின்னு சொல்றவங்க, அவங்க கேட்டாங்கன்னா, மனசு சங்கடப்படுவாங்க, சொன்னவுடன் என் மீது எகிறி விழுந்தார் அந்த நண்பர். சார் ஒரு தனி மனிதன் விரும்பறதை சாப்பிடறதுக்கு கூட பயப்பட வேண்டியிருக்கு. நாம சாப்பிடறது அவங்களுக்கு பிடிக்கலியின்னா வீட்டை காலி பண்ணிட்டு போக வேண்டியதுதானே. இவரின்


காலங்கள் ஓடிய பின்!

 

 பேருந்தை விட்டு இறங்கி பார்க்கிறேன், ஊர் அப்படியேதான் இருக்கிறது.அதே ஆலமரம், சற்று தள்ளி ஆரம்ப பள்ளிக்கூடம் நடந்துகொண்டிருப்பதற்கு சாட்சியாய் குழந்தைகள் சத்தம். வாத்தியார் சாமிநாதன் இருக்கிறாரா என்று தெரியவில்லை, நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போது இருந்தார்.அதற்கு பிறகு வழியில் பார்த்து வணக்கம் வைப்பேன், சிரித்துக்கொண்டே வணக்கம் வைப்பார். அதற்கு பின் வெளியூரில் தங்கி படிப்பு. விடுமுறையில் இந்த ஊர் வாசம். அப்படியே டிகிரி வரை முடித்து வந்திருக்கிறேன் மெல்ல நடக்க தொடங்கினேன், கடை வீதிகளில் அதே சத்தங்கள்.


கலை பித்தன்

 

 “இந்த படம் மட்டும் வெளியில வந்து ஓடிடுச்சுன்னா, முதல்ல இவளை வேலைய விட்டு நிக்க சொல்லிடுவேன்” சொல்லிக்கொண்டிருந்தார் மாமன் முருகேசன் கேட்டுக்கொண்டிருந்த முருகனுக்கு சலிப்பாக இருந்தது. பின்ன என்ன? இதோடு நாற்பதாவது தடவையாக சொல்கிறார். அங்கே இவரின் வைத்திய செலவுக்கு அக்கா யாரிடமெல்லாமோ கையேந்திக்கொண்டிருக்கிறாள். நகைய வச்சு கடன் வாங்கலாமென்றாலும் எதாவது இருந்தால்தானே. பெரிய கலை சேவை செய்கிறாராம். அக்காளை கட்டி கொடுக்கும்போதே இந்த அப்பன் விசாரிச்சிருக்கணும். ம்..அவரை சொல்லி என்ன பிரயோசனம், பொண்ணை கொடுக்கும்போது சொந்தமா


உபயோகமில்லாத தியாகம்

 

 மாமா ஏதாவது உயில் எழுதிட்டு போயிருக்கிறாரா? கேள்வியிலேயே தமக்கை விமலாவின் பேராசை வெளீப்பட்டதாக தேவகிக்கு தென்பட்டது.இதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள் தேவகி. சிறிது நேரம் தேவகியின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த விமலா அவள் பதில் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து தோளை குலுக்கி விட்டுக்கொண்டு உள்ளே சென்றாள். என்ன மனிதர்கள் இவர்கள்? கணவன் இறந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனை எதிர்பார்ப்புகள். இருக்கும்போதும் மாமாவிடம் எவ்வளவு கிடைக்கும் என்று சுற்றி வந்த கூட்டம்


அவசரப்படாதே!

 

 கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை. நாளொரு தினம் இவரை புகழ்ந்து பேசி தன் காரியத்தை சாதித்து கொள்பவர்களுக்குத்தான் இங்கு மரியாதை. என்ன உழைத்து என்ன பயன்? நன்றி இல்லாத முதலாளி. இன்று முப்பது பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த முதலாளி ஆரம்பத்தில் எப்படி இருந்தார். நானும், என்னோடு இன்னொருவரையும் வைத்துக்கொண்டுதான் இந்த கம்பெனியை ஆரம்பித்தார். அப்பொழுதெல்லாம், நீங்க இரண்டு


அன்பு மகளே!

 

 அன்புள்ள மகளே ! எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன். நான் வேலை செய்துகொண்டிருக்கும் சமையல் காண்ட்ராகடர் வீட்டில் உள்ள அவர் பேரன் உங்க மகளுக்கு இ.மெயில் கடிதம் எழுதுங்க, உடனே போயிடும் அப்படீன்னு சொன்னான். எனக்கு அதை பற்றி எல்லாம் தெரியாது. நீ சிரமம் பாராமல் இந்த கடிதத்தை படிப்பாய் என்று நம்புகிறேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா உன் அப்பாவை பற்றி ? இருக்கும் என்றுதான்


கதவு தட்டப்பட்டது!

 

 யாரது? பயத்துடன் கேட்டாள் மீனா. பதிலில்லை, இவளின் உடல் அப்படியே பயத்தில் குளிர்ந்து விட்டது.மீண்டும் கதவு தட்டப்பட்டது. இவளின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. தனியாக இருக்கிறாள். வீட்டில் ஒருவரும் இல்லை என்று தெரிந்து வந்திருக்கிறானா? யார் கதவை தட்டுவது, இந்த முறை கொஞ்சம் குரலை அதிகாரமாக வைத்து கேட்க முயற்சிக்கிறாள். பதிலில்லை. இப்பொழுது கொஞ்சம் தைரியம் வந்த்தது போல் இருந்தது. யாரோ விளையாடுகிறார்களா? அதுவும் இரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும் போலிருக்கிறதே. இந்த நேரத்தில் எவன்


வழி மாறிய சிந்தனை

 

 “வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன், பதிலை ஆங்கிலத்தில் சொல்லவே மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து சொல்ல யோசித்தான். மறூபடி அவள் அந்த கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, “இண்டர்வியூ”வுக்கு கூபிட்டிருக்காங்க, என்று தமிழிலிலேயே சொன்னான்.நீங்கள் இடது பக்கமாய் போய் வலது புறம் உள்ள அறையில் உட்காருங்கள். இதை ஆங்கிலத்தில்தான் சொன்னாள். அந்த மொழியை உச்சரித்த அழகை இரசித்தவன், “தேங்க்யூ” இதை ஆங்கிலத்தில் தைரியமாக சொல்லிவிட்டு


போர்

 

 எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க அவசியம் என்ன? இது எல்லாம் யாருடைய கைங்கர்யம், தெய்வங்களா நம் தலை மீது கை வைத்து நம்மை போர் புரிய ஆட்டுவிக்கிறார்கள்?. எப்பொழுது போர் அறிவிக்க போகிறார்கள்? பக்கத்தில் இருந்த ராணி சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்? கேட்டார் ராசா. இல்லை இந்த வெள்ளையர்களை பாருங்கள், அவர்களுக்கு அவர்களுடைய நிறத்தை பற்றி பெருமை, அதை நாம் மதிக்கவில்லை


“பீனிக்ஸ்” பறவை

 

 காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில் இருந்த பொழுது, முதன் முதலில் வாங்கிய கார், இந்த கார் இவனுடனே பதினைந்து வருடங்களாக இருந்தது. இருந்தது என்பதை விட அவனுடனே வாழ்ந்தது. இவன் எந்த ஊருக்கு வாடிக்கயாளரை பார்க்க கிளம்பினாலும், முந்தைய நாளில் அதனுடன் நண்பனுடன் பேசுவது போல பேசிக்கொள்வான். நாளைக்கு சென்னைக்கு கிளம்பறோம், இரயில்ல போலாம், உன் கூட வந்தா தான் போன