கதையாசிரியர் தொகுப்பு: ஞா.கலையரசி

2 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்க்கடி

 

  அன்று காலை நண்பனைப் பார்க்கச் சென்றவிடத்தில், நாயிடம் கடிபடுவோம் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை! அழைப்பு மணியை அழுத்தச் சென்ற இடத்திற்குக் கீழே நாய் படுத்திருந்ததை நான் கவனிக்கவில்லை. அழைப்பு மணி எங்கிருக்கிறது என்று மேலே தேடுவதிலேயே கவனமாயிருந்தவன், அதனை மிதித்து விட்டேன் போலும்! அடுத்த நிமிடம். ஆ! என்ற அலறலுடன் காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். கதவைத் திறந்து கொண்டு வந்த நண்பனும் பதறிப் போய் விட்டான். பின்னங்கால் சதையில் ஒரு கொத்து சதை


ஒரு பல்லின் கதை

 

  சிறு வயதில் விளையாடும்போது வாசல்படியில் தடுக்கி விழுந்ததால், என் முன் பல்லின் கீழ்புறம் சிறிது உடைந்துவிட்டது. நல்லவேளையாக, கன்னா பின்னாவென்று உடையாமல் சிறு செதிலாக உடைந்திருப்பதால், முகத்திற்கு விகாரமாயில்லை என அம்மாவிற்குத் திருப்தி. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, அப்பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பாகிக் கொண்டே வந்ததறிந்து, அம்மாவுக்குக் கவலை. ஏற்கெனவே அரியலூர் ரயில் விபத்தில் அடிபட்டது மாதிரி, மூக்கில்லாமல் நாக்கில்லாமல் பிறந்திருக்கும் பெண்ணின் முன்பல்லுக்கும் கேடு வந்ததென்றால், எந்த அம்மாவால் கவலைப்படாமல் இருக்கமுடியும்?

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: