கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

பேய் பேய்தான்

 

  கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாள். கழுவிச் சீவிய பப்பாளி நிறத்தில் தளதளவென்று இருந்தாள். சொந்த ஊர் மதுரை. பெண்களுக்கான ஹாஸ்டல் டி.நகர் மார்க்கபந்து மேன்ஷனில் அவளுடைய தோழி நீரஜாவுடன் கல்பனா தங்கியிருக்கிறாள். நீரஜா மத்திய அரசின் ஆர்க்கியாலாஜி டிபார்மென்டில் வேலை செய்கிறாள். வாழைக்காய் கெச்சல் போல இருந்தாள். சொந்தஊர் காரைக்குடி. இருவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக நட்புடன் கூடிய நல்ல


பழுப்பு நிறக் கவர்

 

  (இதற்கு முந்தைய ‘கோயில் விளையாட்டு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘யெல்லோ பேஜஸ்’ மூலமாக வெடினரி டாக்டர்களின் சிலரது தொலைபேசி எண்களைத் தேடியெடுத்துத் தொடர்பு கொள்ள முயன்றோம். அன்று தீபாவளி என்பதால் ஒருவரும் கிடைக்கவில்லை. கடைசியில் ‘ப்ளூ க்ராஸ்’ அமைப்பிற்கு தொடர்பு கொண்டோம். அவர்களோ “இன்று ஏற்கனவே நிறைய கேஸ்கள் இருக்கின்றன… நாளைக்கு வண்டியை அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டார்கள். பூனைக் குட்டிகளுக்கு ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால்? அதற்கு மேல் நினைத்துப்


கோயில் விளையாட்டு

 

  (இதற்கு முந்தைய ‘சொட்டைப் பூனை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அக்கா பூனை பால் குடிப்பதைப் பார்த்து தம்பியும் பால் குடிக்கலாயிற்று. மதியமாவது அம்மா பூனை வந்துவிடும் என்று பார்த்தால் வரவேயில்லை. போனது போனதுதான். அதுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அப்புறம் வரவேயில்லை. குட்டிகள் பசியெடுத்தால் நேராக சமையலறை வாசலுக்கு வந்து கத்தத் தொடங்கிவிடும். அன்று முதல் காலை தூங்கி எழுந்தவுடன், மதியம் ஒன்று முப்பது, இரவு எட்டு முப்பதுக்கு குட்டிகள் ‘டாண்’


சொட்டைப் பூனை

 

  (இதற்கு முந்தைய ‘சிலிர்ப்பு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). கண் விழித்துப் பார்த்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன். பலவிதப் பரிசோதனைகள் செய்த பிறகு, இருதயத்தில் வால்வு ஒன்றில் கோளாறு என்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் படிப்பு பாதியிலேயே நின்றது. ஒரு வருட காலத்திற்கு கட்டிலை விட்டு இறங்காத கட்டாய ஓய்வு. மருந்து, மாத்திரை, உப்பில்லாத சாப்பாடு, செய்யக் கூடியவை எவை எவை; செய்யக் கூடாதவை எவை எவை என்ற


கசப்பான காதல்கள்

 

  வர்ஷினி நிர்ச்சலனமாய் இருந்தாள். ஆயிரம் முறை சொன்னாலும் என்னை எதுவும் பாதிக்காது என்னும் விதமாய் இருந்தாள். அந்த நிர்ச்சலனத்தில் அடுத்தவர் பற்றிய அலட்சியம் தெரியவில்லை; தன்னைப் பற்றிய அக்கறை தெரிந்தது. எடுத்தெறியும் விதமான அகம்பாவம் தெரியவில்லை; என்னைக் குறித்து யோசித்துவிட்டேன் என்ற அமைதி தெரிந்தது. “நீங்க கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கக்கூடாதா? உங்க நன்மைக்காகவும்தான் இதைச் சொல்கிறேன்” என்று வழக்கறிஞர் சுதர்சன் சொன்னபோது அவரைச் சற்று இகழ்ச்சியுடன் பார்த்தாள் வர்ஷினி. “உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி